மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
My email ID
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
3.3.21
விமானத் துறையில் கேள்விப்படாத விஷயங்கள்
21.12.20
உலகைப் புரட்டிப் போட்ட மார்கோனி!
உலகைப் புரட்டிப் போட்ட மார்கோனி!
அது வரை உலகம் கம்பி வழியாகத்தான் தகவல் தொடர்பு கொண்டிருந்தது, கம்பி இல்லா தகவல் தொடர்பு சாத்தியமில்லை என சொல்லிகொண்டிருந்தது.
முதன் முதலில் கம்பி இல்லா தொடர்பு சாத்தியம் என சொன்னவர் *பிரிட்டிஷ் இந்தியாவின் ஜெகதீஷ் சந்திரபோஸ்*, இப்பொழுது அவர் வாழ்ந்த டாக்கா வங்கதேசத்திற்கு சென்றுவிட்டது.
அவர் பல்துறை கில்லாடி, அப்பொழுதே இயற்பியல் துறையில் லண்டனில் பணியாற்றினார்.
தகவல் தொடர்பு கம்பி இல்லாமல் சாத்தியம் என சொல்லி சில கருவிகளையும் அமைத்தார், அவரின் ஆய்வு முடிவு ஆராய்ச்சி கட்டுரைகளாக ஐரோப்பாவிலும் வந்தன, கண்டுகொள்வார் யாருமில்லை.
இதனால் போஸ் தாவரங்களுக்கு உயிர் உண்டா இல்லையா எனும் ஆராய்ச்சிக்கு சென்றுவிட்டார்.
தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பது ஆராய்ந்தா சொல்ல வேண்டும்?
தமிழ் இலக்கியம் அதை ஓருயிர் என சொல்கின்றது, *பட்டு போகுதல் என்பதற்கு செத்து போகுதல்* என தமிழிலே அர்த்தம் உண்டு, பட்டினத்தார் கூட பட்டு போகும் உடல் என்பார்.
ஆனால் சந்திர போஸ் கடும் ஆய்வு செய்து செடி உண்ணும், வளரும் , காதல் செய்யும், இனபெருக்கம் செய்யும், முதுமை அடையும் என்றெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
உலகமும், அடடே... தாவரங்களுக்கும் உயிர் உண்டாம், இதோ இவர் நிரூபித்துவிட்டார் என கொண்டாடி கொண்டிருந்தது.
அவரின் கவனம் செடி கொடிகளில் இருக்க, *அந்த கம்பி இல்லா தகவல் தொடர்பு முறை இத்தாலியின் மார்கோனி கவனத்தை கவர்ந்தது, போஸை மனதிற்குள் வணங்கி ஏகலைவனாக உருவானார்.*
மின்காந்த அலைகளை எங்கும் எப்படியும் கடத்தலாம் என்பதுதான் போஸின் தியரி, அதனை ஆண்டனாக்கள் டிரான்ஸ்மீட்டர்கள் மூலம் செய்துகாட்டினார் மார்கோனி.
முதலில் 100 மீட்டர், 500 மீட்டர் என ஒலிகளை கம்பி இன்றி கடத்தினார், அதிசயம்தான் ஆனால் அன்றிருந்த சிஸ்டம் கம்பிகளை கொண்டே இயங்கியதால் இவரை தொடக்கத்தில் இத்தாலி உதாசீனபடுத்தியது.
மனிதர் இங்கிலாந்து பிரான்சு எல்லைக்கு சென்றார், ஆங்கில கால்வாயின் இக்கரையில் இருந்து அக்கரைக்கு குரலை கேட்க செய்தார்.
அதனை கவனித்த கப்பல் துறையினர் கப்பலில் அதனை பயன்படுத்த எண்ணினர், காரணம் கப்பல்களிடையே அல்லது கப்பல்களில் இருந்து கரைக்கு செய்திகடத்துவது அன்று சிரமமானது.
மார்கோனியின் ரேடியோ முதலில் அதற்குத்தான் பயன்பட்டது, ஒருமுறை மூழ்கபோகும் கப்பலில் இருந்து காப்பாற்றுங்கள் என அலறல் கேட்க, மீட்பு கப்பல் விரைந்து வந்து காப்பாற்றிற்று.
அதிலிருந்தே *மார்கோனியின் கண்டுபிடிப்பின் அவசியம் உலகிற்கு தெரிந்தது*, இத்தாலி மார்கோனியினை அங்கீகரித்து அழைத்தது.
பின் அவசர கால தொடர்பாக அது பயன்பட்டது, போர் காலங்கள், பேரிடர் காலங்களில் எல்லாம் இந்தமுறை கைகொடுத்தது.
பின்பு தகவல் ஊடகமாக மாறியது, ரேடியோ அலைகளால் இயங்கும் அந்த நுட்பம் ரேடியோ என்றானது.
போரில் தகவல் தொடர்பே முக்கியம், அதுவரை ரேடியோ என்பது ஒரு முனை மட்டுமே அதாவது இன்றும் நாம் கேட்கும் ரேடியோ, அவர்கள் பேசுவது நமக்கு கேட்குமே அன்றி நாம் பேசுவது அவர்களுக்கு கேட்காது.
இதில் சில மாறுதல்களை செய்து *ஓவர் ஓவர்*😀 என சொல்லும் குறைந்த தூர இருமுனை கொண்ட வாக்கி டாக்கி சிஸ்டம் வந்தது. போர்முனையில் பின்பு அதுதான் வெற்றியினை நிர்ணயித்தது.
அந்த ஆராய்ச்சிகள் எங்கெல்லாமோ சென்று இன்றிருக்கும் வைபை( Wi-Fi) வரை வந்து நிற்கின்றது.
*இதற்கெல்லாம் வித்திட்டவர் நிச்சயம் ஜெகதீஸ் சந்திரபோஸ்*, ஆனால் நீர்பாய்ச்சி அறுவடை செய்தவர் மார்கோனி.
மார்கோனியின் ரேடியோ உலகை புரட்டி போட்டது, செயற்கை கோள் டிவி வரும் வரை ரேடியோவே உலகை கட்டிபோட்டு இருந்தது, 1990க்கு பின்பே ரேடியோக்களின் வீச்சு குறைந்தது.
எனினும் 2000க்கு பின் அது FM எனும் பண்பலை ரேடியோவாக எழுந்துவிட்டது.
இன்றும் வேலை செய்யும் அலுப்பு தெரியாமல் இருக்க, தனிமை தவிர்க்க அது ஐடி தொழிலோ , பயணமோ, கார் ஓட்டும் தொழிலோ, உணவக தொழிலோ எது என்றாலும் ரேடியோ இல்லா நிலை இல்லை.
சில தொழில்கள் ரேடியோ இன்றி இயங்காது என்றாயிற்று
ரேடியோ நிலையம் இந்தியாவில் ஆகாசவாணி என்றாயிற்று , பின் தமிழில் வானொலி என அழைக்கபட்டாலும் சென்னையில் அது ஆகாசவாணி என்றே அரசு பெயரில். ஆகாஷவாணியினை வானொலி என மாற்று என கொடிபிடித்தவர்கள்தான் பின்பு தொலைகாட்சி என வைக்காமல் டிவி என வைத்து கொண்டார்கள் அதுவும் சன் டிவி.
இது தமிழக அரசியலின் இன்னொரு முகம், போகட்டும்.
இன்று மார்கோனியின் பிறந்த நாள், மாபெரும் கண்டுபிடிப்பினை கொடுத்து உலகினை திருப்பிவிட்டு, அந்த கண்டுபிடிப்பு பிற்காலத்தில் ஏகபட்ட விஷயங்களை சாத்தியபடுத்த அடிப்படையான விஞஞானி பிறந்த நாள்.
இன்று அவனின் கண்டுபிடிப்பு மருத்துவம் முதல், விண்வெளி, ராணுவம், ஊடகம் என பல விஷயங்களில் மானிட குலத்திற்கு வழிகாட்டுகின்றது
அந்த மார்கோனியும் அவன் சிந்தனையினை தூண்டிவிட்ட சந்திரபோசும் மறக்க முடியாதவர்கள்.
வரலாற்றினை புரட்டுங்கள். ஒவ்வொரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பும் அவர்கள் காலத்தில் புறக்கணிக்கபட்டிருக்கின்றன.
அணுவினை பிளக்கலாம் என ஒரு விஞ்ஞானி சொன்னபொழுது இதனால் என்ன பிரயோசனம் என கேட்டிருக்கின்றார்கள், அவனுக்கு பின் வந்தோரே அதை சாத்தியபடுத்தி இன்று அது மாபெரும் சக்தியாயிற்று.
நியூட்டனின் புவி ஈர்ப்பு விசை எதற்கு என்று கூட கேட்டிருக்கின்றார்கள், இன்று ராக்கெட்டுகள் எழும்பும் பொழுதுதான் அதன் அவசியம் புரிகின்றது.
பாரடே மின்சாரம் கண்டறிந்தபொழுது அதை வைத்து என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை, தேவை இல்லா விஷயம் என்றிருகின்றார்கள்,
இன்று அது அல்லாது உலகம் இல்லை.
ஒரு ஆராய்ச்சி அது செய்யபடும் காலத்தில் தேவை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதில் சொல்லபடும் ஒரு மிக சிறிய விஷயம் கூட பின்னாளில் மாபெரும் மாற்றத்தை கொடுக்கும்.
கலிலியோ காலமுதல் நியூட்டன், பாரடே, மார்கோனி என பல விஞஞானிகள் காலம் வரை விஞ்ஞான உலகம் சொல்லும் தத்துவம் இதுவே.
சந்திர போசும், மார்கோனியும் அன்று செய்த விஷயங்களைத்தான் இன்று மானிட சமூகம் பயன்படுத்திகொண்டிருக்கின்றது.
ரேடியோ அலைகள் பலன்கள் நிறைய இருந்தாலும் வானொலி மாபெரும் ஊடகம், ஒவ்வொருவரும் அதனால் பயன்பெற்றுகொண்டே இருப்போம்.
அந்த நன்றியில் மார்கோனிக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்தலாம், அதே நேரம் அந்த போஸும் நினைக்கபட வேண்டியவர்.
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================
31.7.19
முடிவிற்கு வருகிறது நமது முக்கியமான பிரச்சினை!
முடிவிற்கு வருகிறது நமது முக்கியமான பிரச்சினை!
முடிவுக்கு வருகிறது, அமெரிக்காவின் GPS.
வந்துவிட்டது, இந்தியாவின் IRNSS
( Indian Regional Navigation Satellite System)
இனி யாரும் தப்பிக்க முடியாது
அமெரிக்காவிற்குச் சொந்தமானது, GPS
( Global Positioning System)
ரஷ்யாவிற்குச் சொந்தமானது, GLONASS
( Global Navigation Satellite System)
சீனாவிற்கு சொந்தமானது, BDS ( BeiDou Navigation Satellite System)
ஐரோப்பாவிற்கு சொந்தமானது, GNSS ( GALILEO, Global Navigation Satellite System)
இது வரை இந்தியாவிற்கென்று சொந்தமான நேவிகேஷன் சிஸ்டம் இல்லாமல் இருந்தது.
அமெரிக்காவை நம்பியே இந்தியா இருந்து வந்தது.
அந்த நேவிகேஷன் சிஷ்டத்திற்கு மொத்தம் ஒன்பது செயற்கை கோள்கள் தேவை!!
விண்ணில் ஏழும், standby ஆக மண்ணில்(பூமியில் ) இரண்டும் தேவை.
இந்தியாவின் IRNSS ( Indian Regional Navigation Satellite System) கடந்த 2016 ஆண்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வந்தது!!
ஏழாவதாக வெற்றிகரமாக ஏவப்பட்ட IRNSS-1G மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இன்னும் மூன்று முதல், ஆறு மாதங்களில், அமெரிக்காவின் GPSக்கு விடை கொடுத்து விட்டு நம்முடைய IRNSS வசதி, பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல், தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது அமெரிக்க போன்ற நாடுகள், தங்களது தொழில் நுட்பம் மூலம், இந்தியா போன்ற வளரும் நாடுகளை இன்னும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றன
சுருக்கமாகச் சொல்லப் போனால், அமெரிக்காவின் GPS அமைப்பிற்கு இந்தியாவின் அனைத்து மூலை முடுக்குகளும் தெரியும்.
GOOGLE MAP போன்றவை இதன் மூலம் இயங்குகின்றன என்றால் தெரிந்து கொள்ளலாம், நம் நாடு எந்த அளவிற்கு அமெரிக்காவின் தொழில்நுட்பப் பிடியில் இருக்கிறது என்று!!!
இதனை அறிந்த, சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு என்று தனியாக Beidou என்ற ஒன்றை உருவாக்கி, தங்கள் நாட்டு ரகசியத்தை பாதுகாத்துக் கொண்டுள்ளன.
அப்போதைய பிரதமர், மன்மோகனிடம் இந்தத் தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் சொல்லி, அனுமதி கேட்டபோது, அவர் சிலரின் தலையீடுகள் காரணமாகக் காலந் தாழ்த்தி வந்ததாகவும், கூறப்படுகிறது.
பாஜக அரசு அமைந்ததும், மோடி உடனடியாக அமெரிக்காவின் பிடியில் இருந்து இந்தியாவை விலக்க எண்ணி, அதனை தற்போது நிகழ்த்திக் காட்டி விட்டார் என்றும், நமது நாட்டைச் சேர்ந்த IRNSS செயல்பாட்டிற்கு வந்ததும், முழுவதும் இந்தியா தன்னிறைவு அடையும் என்றும், அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தும், அந்நிய நிறுவனங்களை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து, இந்தியத் தயாரிப்புகளை அதிகரிக்க, இப்போதே திட்டம் தீட்டி செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்றும், விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்
இனி யாராவது குற்றச் செயல்களில் ஈடுபட்டால், யார் என அடையாளம் காண, அமெரிக்காவை தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் இல்லை!!
இனி நாமே நேரடியாக களத்தில் இறங்கி, குற்றச் செயல்களை கண்டறிந்து, உடனடியாக தண்டனை வழங்கலாம்.
பயங்கரவாதிகள் ஊடுருவலைக் கண்டறிய மற்றும் பல ராணுவ ரீதியிலான பயன்பாட்டிற்கும், IRNSS உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
✨🌿இனி இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான், இந்தியா இருக்கும் என்று பலரும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
WhatsApp முதல் Facebook என அனைத்து சமூக வலைத்தளங்களும், தற்போது GPS உதவியுடன் இயங்குவதும், விரைவில் இவை நமது நாட்டின் IRNSS கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்திய அரசுக்கு பல கோடி ருபாய் வருவாயும் கிடைக்கும்.✨!!
வாழ்க பாரதம் 🇮🇳
-------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
21.3.18
ஸ்மார்ட்போன்களின் எதிர்காலம்!
ஸ்மார்ட்போன்களின் எதிர்காலம்!
பேஜர்போல ஒருநாள் ஸ்மார்ட்போன்களும் காணாமல் போகும்... அதன்பின்?*
ஸ்மார்ட்போன் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்க முடிகிறதா?
20 ஆண்டுகளுக்கு முன்புவரை அப்படித்தானே இருந்தோம் என்ற பதில் செல்லாது.
டெக்னாலஜிக்கு பழகிய பின், மொத்த உலகமும் ஸ்மார்ட்போனை வைத்து இயங்கத் தொடங்கிய பின், இப்போது ஸ்மார்ட்போன் மறைந்தால் என்னவாகும்? அப்படியெல்லாம் ஆகாது. வழியே இல்லை என்பவர்களுக்கு... நிச்சயம் ஆகும்.
*பேஜர், ஃபேக்ஸ்போல விரைவில் ஸ்மார்ட்போனும் காணாமல் போகும்.*
அப்போது மனிதர்களின் வாழ்க்கைமுறையே மாறிப்போயிருக்கும்.
*எலன் மஸ்க்...* அமெரிக்காவின் முக்கியமான தொழிலதிபர். எலக்ட்ரிக் வாகனங்கள் தொடங்கி விண்வெளிக்கு ராக்கெட் விடுவதுவரை அவரது ஐடியாக்கள் எல்லாமே வேற லெவல்தான். அந்த எலன் மஸ்க் நியூராலிங்க் ( Neuralink) என்றொரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிறுவனம், மனிதர்களின் மூளை நேரிடையாக இயந்திரங்களோடு தொடர்புகொள்ள உதவும் சிஸ்டத்தைத் தயாரிக்கப்போகிறது.
இப்போதைக்கு ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் அல்டிமேட் திட்டம், மனித மூளையை இயந்திரத்தோடு நேரிடையாக இணைப்பது.
*இதனால் ஸ்மார்ட்போன் காணாமல் போய்விடுமா?*
ஸ்மார்ட்போனில் என்னென்னவெல்லாம் இருக்கின்றன எனப் பார்ப்போம்.
அது லேப்டாப், கணினி ஆகியவற்றின் சிறிய வடிவம்தான். கேமரா, ஜிபிஎஸ், ஆகியவற்றின் தொகுப்புதான். கம்ப்யூட்டரில் செய்ய முடியாத எதையும் நம்மால் ஸ்மார்ட்போனால் செய்துவிட முடியாது.
அளவில் சிறியது என்பதும், எளிதில் எடுத்துச் செல்லலாம் என்பதுதான் ஸ்மார்ட்போனின் பலங்கள். ஆக, கணினி செய்யும் வேலைகளைச் செய்ய வேறு ஓர் எளிமையான வழி வந்தால், ஸ்மார்ட்போனுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்பதுதான் யதார்த்தம். அந்த எளிமையான வழியைத் தேடித்தான் எலன் மஸ்க் ஓடுகிறார். எலன் மஸ்க் மட்டுமில்லை. மார்க் சக்கர்பெர்கில் இருந்து அனைத்து டெக் ஜாம்பவன்களும் அந்த மாரத்தானை எப்போதோ ஆரம்பித்துவிட்டார்கள்.
ஸ்மார்ட்போனின் டச் வழி நாம் தரும் கட்டளைகளை ஒலி வழி தரும் டெக்னாலஜிதான் அடுத்த அட்டாக். இப்போதே சாம்சங் பிக்ஸ்பி, ஆப்பிள் சிரி எல்லாம் இருக்கின்றன. இருந்தாலும், அவற்றை பயன்படுத்துபவர்கள் குறைவு. இது அதிகரிக்கும்போது ஸ்மார்ட்போனின் வடிவமே மாறும். அது வேறு ஒரு பெயருடன் வேறு ஒரு பரிமாணத்துடன் களம் இறங்கும். அமேசானின் எக்கோ, கூகுள் அசிஸ்டன்ட் எல்லாம் அதற்கான முன்னோட்டங்கள் தான்.
ஒலியை விட இன்னொரு விஷயம்தான் ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய எதிரியாக வளரக்கூடும். அது...
*ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி.* மைக்ரோசாப்ட், கூகுள், ஃபேஸ்புக் என எல்லோரும் இந்த ஆராய்ச்சிகளை ஆரம்பித்துவிட்டார்கள்.
ஸ்மார்ட்போனின் திரை வழியே நாம் என்னென்னவெல்லாம் பார்க்கிறோமோ, அவையெல்லாம் 3டி வடிவில் நேரிடையாக நம் கண்களுக்குத் தெரியும்.
ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி சல்லிசான விலையில் கிடைக்கும் நாள்தான் முக்கியமான நாள். அது நடந்துவிட்டால், ஸ்மார்ட்போன் மட்டுமல்ல. திரை இருக்கும் அனைத்துப் பொருள்களும் தனது மதிப்பை இழக்கும். தொலைக்காட்சியில் தொடங்கி அனைத்து ஸ்க்ரீன் புராடக்ட்ஸும் இதில் அடக்கம். எந்தப் பொழுதுபோக்கு சாதனமும் உங்கள் பாக்கெட்டை ஆக்ரமிக்காது. அவை நம்மைச் சுற்றி, நிஜ உலகோடு இரண்டறக் கலந்து நிற்கும்.
இதை இப்படியும் சொல்லலாம். ஸ்மார்ட்போன்கள் காணாமல் போகும் அல்லது நாமே ஒரு ஸ்மார்ட்போனாக மாறக்கூடும்.
ஸ்மார்ட்போன்கள் காணாமல் போனால் அது மனித குலத்தின் முக்கியமான அத்தியாயம்.
ஏனெனில், அது இயந்திரங்களை மனிதர்கள் சுமந்து சென்ற காலத்தின் முடிவாக இருக்கும். மனிதர்களோடு இயந்திரங்கள் ஒன்றாக கலக்கத் தொடங்கும் காலத்தின் ஆரம்பமாக இருக்கும்.
*ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்* உதவியால் இயந்திரங்கள் சிந்திக்கத் தொடங்கிவிடும். அதே காரணத்தால் மனிதர்கள் சிந்திப்பதைக் குறைத்துவிடுவார்கள். அதன்பின், மனிதர்கள் வெறும் மனிதர்களாக மட்டுமே இருக்க மாட்டார்கள்.
யோசித்தால் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால். இது நிச்சயம் நடக்கும். இவையெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளிலோ அல்லது 20 ஆண்டுகளிலோ நடந்துவிடும் என்பதுதான் கூடுதல் பயமாக இருக்கிறது.
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
2.9.16
Technology: தொழில்நுட்பம் படுத்தப் போகின்ற பாடு!
Technology: தொழில்நுட்பம் படுத்தப் போகின்ற பாடு!
25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இதுவரை சோறு போடுது...ஆனால் நிலைமை இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது முட்டாள்தனம், நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்!
1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்சத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்லை..!
வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்லை.
பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்ங்கறது தான் அந்த நண்பரோட ( நான் ஒத்துக்கொண்ட) வாதம்....!
தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??
எதனால ? ஏன் இப்படின்னு கேட்டா?
டெக்னிகலா சொல்லனும்னா
Artificial Intelligence. சிம்ப்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும்
இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!
உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக் கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?
'Ubar'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!
இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?
அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்: உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...!
இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே, IPC Sectionஓட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!
IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு. ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு
தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!
அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..!
அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ?
ஆடிட்டர்கள், டாக்டர்கள்ள இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பார்த்துக்கும்.
'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!
ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்ப துறைல 15 வருஷமா இருக்கறதால நான் 100% நம்புகிற ஒரு விஷயத்தை சொல்றேன் கேட்டுக்கோங்க...!
2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில
நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.
அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..உங்க செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானா ஒரு கார் வந்து நிற்கும்.
நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும்.
பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.
Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும். எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15
வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.
இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க...இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..குறிப்பா சீனா & இந்தியா.ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??
சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?
முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.
அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்மஅடி வாங்கும்.
ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும்.
சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு
பொருள்கள் தயாராகும்.
விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள்.
நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.
காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.
'Moodies'ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல
உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.
இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம்
வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.
Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி.
அதனால்..மக்களே...! இன்னைக்கு பரபரப்பா இருக்குற 80-90% தொழில்கள் காணாம போய்டும்..புதுசா தொழில்கள் வரும்..ஆனா
வேலையில்லா திண்டாட்டம் கூடிகிட்டே போகும். மொத்தத்துல, ஜாக்கிரதையா இருந்தால்தான் பிழைப்பு ஓடும்
அப்புறம் என்ன? புரிஞ்சு நடத்துக்குங்க..சொல்லிட்டேன்...!
படித்ததில் பிடித்தது!
நன்றி:
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!





