மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

18.11.19

ஆறுதல் கிடைக்க என்ன செய்யவேண்டும்?


ஆறுதல் கிடைக்க என்ன செய்யவேண்டும்?

நினைத்த நேரத்தில் கவி இயற்றிப் பாடும் வல்லமை படைத்தவர்களை "ஆசுகவி" என்பார்கள்.

தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.

இவரது பாடல்கள், படிக்கப் படிக்கத் திகட்டாத பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்டவை. 

அவற்றுள் இனிமையான ஒரு பாடலை இங்கே பார்ப்போமா?

"ஆறுதல் என்பது ஐந்து முறை வரும்படி பாடல் பாட முடியுமா, உம்மால்?"   காளமேகத்திடம் சவால் விட்டார் ஒருவர்.

புன்னகைத்த காளமேகம் உதட்டிலிருந்து அடுத்த நொடி வந்து விழுந்தன நான்கு வரிகள்!

"சங்கரர்க்கும் ஆறுதலை; சண்முகற்கும் ஆறுதலை;
ஐங்கரற்கு மாறுதலை ஆனதே - சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை; பித்தா! நின்பாதம்
பிடித்தோர்க்கும் ஆறுதலைப் பார்!"

பாடிவிட்டு வெற்றிக் களிப்போடு நகைத்தார் காளமேகம்.

"பாடல் சரி, ஆனால் பொருள் குழப்புகிறதே?  சண்முகனுக்கு ஆறுதலை சரி. மற்றவர்களுக்கு இப்பாடல் பொருந்தாதே?"

சவால் விட்டவரே தோல்வியை ஒப்புக்கொண்டு தலையைச் சொறிய, காளமேகம் கம்பீரத்தோடு சொன்னார்:

"சங்கரருக்கு ஆறு தலை - அதாவது தலையில் கங்கை ஆறு.
முருகனுக்கும் ஆறுதலை.
ஐங்கரனுக்கு-  அது ஆறுதலை இல்லை, மாறுதலை! யானை முகமாக மாறிய தலை.
சங்கைப் பிடித்த  திருமாலுக்கும் மாறுதலை. நரசிம்மாவதாரத்தில் சிங்கமாக மாறிய தலை.
பித்தனாகிய ஈசன் கால்களைப் பிடித்தோருக்கு இறுதியில் கிடைப்பது ஆறுதல்!
அவ்வளவு தான்! "

தமிழை வைத்து என்ன அழகாக வார்த்தை விளையாட்டு விளையாடியிருக்கிறார், பார்த்தீர்களா?

நன்றி பசுபதிநாதன் சேலம் அவர்கள்
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.11.19



நன்மையும் தீமையும் எப்படி வரும்?

பழமையான பாடல் ஓன்று...

இன்று உலகம் முழுவதும் தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது.
அது கணியன் பூங்குன்றனார் எழுதிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்...."
இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது.
பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது.....
முழு பாடலும்... அதன் பொருளும்....உங்களுக்காக!!!!

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

பொருள்
எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.


*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;*
*தீதும் நன்றும் பிறர்தர வாரா;*
*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....*
*சாதலும் புதுவது அன்றே;...*
*வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;*
*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*
*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*
*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...*
*ஆதலின் மாட்சியின்*
*பெயோரை வியத்தலும் இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*

– கணியன் பூங்குன்றனார்


பாடலின் வரிகளும், பொருளும்:

*"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...."

எல்லா ஊரும்
எனது ஊர்....
எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று
வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......

*"தீதும் நன்றும் பிறர் தர வாரா*...."
தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......எனும் உண்மையை,உணர்ந்தால்,
சக மனிதர்களிடம்,விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....

*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன...."*

துன்பமும் ஆறுதலும்கூட
மற்றவர் தருவதில்லை....
மனம் பக்குவப்பட்டால்,
அமைதிஅங்கேயேகிட்டும்...

*"சாதல் புதுமை யில்லை*.."

பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....
இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*
இறப்பு புதியதல்ல....அது
இயற்கையானது....
எல்லோருக்கும்*
*பொதுவானது....
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....
எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......

*"வாழ்தல்இனிதுஎன* *மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே....."*

இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்னாகும் என்று
எவர்க்கும் தெரியாது.....
இந்தவாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.....
அதனால்,இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......

*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்* ....."

இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது....
நாம் வாழ
மழையையும்
தருகிறது.....இயற்கை வழியில்அது,அது
அதன் பணியை செய்கிறது....

ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல,
வாழ்க்கையும்,சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்....
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...

*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்* *இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே*...."

இந்த தெளிவு
பெற்றால்.....,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்...
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.....
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு.....
அவற்றில் அவர்,அவர்கள்
பெரியவர்கள்...

*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*

எழுதியவர் ஊர்:
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் தாலுக்கா
மகிபாலன்பட்டி கிராமம்!!!

அவர் பிறந்த இடத்தில்
நம்மை ஒரு
பாழடைந்த பலகை மட்டுமே
நம்மை
வரவேற்கிறது.
வாழ்க
நமது தமிழ்த்தொண்டு.......!!!!!
-------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!!

7.10.19

பெரியவர்கள் சொன்னதை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்!!!!


பெரியவர்கள் சொன்னதை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்!!!!

பாட்டி அடிக்கடி சொல்லுவாள்!!!!

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

*என்ன அழகான வரிகள் இதை முதலில் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே* 

வணக்கம். நமச்சிவாய வாழ்க
----------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.2.18

நாம் உணராத நமது புத்திசாலித்தனம்!!!

நாம் உணராத நமது புத்திசாலித்தனம்!!!

வெளிநாட்டு வங்கியை அலற விட்ட இந்தியன், அவர் போன பின் பார்த்து சிரித்த அதிகாரிகள்..?

ஆணித்தனமாக நெத்தியடி அடித்த..இந்தியர்!!!

நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற பேங்கிற்குள்  நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த ஆபிசரிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும். தற்போது தான், இந்தியாவிற்கு
செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும்  சொன்னார்.*

*அதற்கு அந்த ஆபிசர் , உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள்  அதற்காக ஏதாவது
உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல,*

*இவரோ தனது புத்தம் புதிய  ஃபெராரி கார் சாவியை அந்த ஆபிசரிடம் கொடுத்தார். கூடவே லைசென்ஸ் போன்ற பேப்பர்களையும்  கொடுத்தார்..*

*ஆபிசரோ இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார். 250,000 டாலர்  மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை  நினைத்து வங்கியின்
தலைவரும் மற்ற அதிகாரிகளும் அவர் சென்ற பின்பு சிரித்தனர்..*

*இந்தியா  சென்று ,திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் இரண்டு வாரத்திற்கான வட்டியாக 5.41 டாலரையும் திருப்பிக்கொடுத்தார்.*

*அந்த ஆபிசர், சார், உங்களுடன்  பிசினஸ் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரே ஒரு விசயம்தான் எனக்கு இன்னும் புரியல,*

*உங்களைப் பத்தி நாங்க வெளிய கேட்டோம், நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது.*ஒரு பெரிய கோடீஸ்வரர் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்,*

அதற்கு அந்த இந்தியர்,*

*எனக்கு இங்கு கார் நிறுத்தும் பார்கிங் வசதி இல்லை. பிறகு நான் யோசித்தேன்..  எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை நிறுத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என்று..*

*அது  மட்டுமின்றி பல இடத்தில விசாரித்தும் பல டாலர்கள் கேட்டாங்க..ஆனால் இங்கு 5.41 டாலர் தான்
ஆச்சு..*இப்போ சொல்லுங்க நான் செய்தது சரிதானே..?*

அந்த வங்கிக்காரர்கள் அவரின் புத்திசாலித் தனத்தை நினைத்து அசந்து போய்விட்டார்கள்!!!!
--------------------------------------------------------------------
படித்து, வியந்ததை, உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.7.17

அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?


அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.
1
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
2
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
3
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
4
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
5
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
6
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
7
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
8
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
9
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
10
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.11.16

சார்லி சாப்ளினின் நெஞ்சைத் தொட்ட வாசகங்கள்!



சார்லி சாப்ளினின் நெஞ்சைத் தொட்ட வாசகங்கள்!

*Charlie Chaplin's* 125th birthday -

A Good Day to Recollect his 3 Heart Touching Statements:

(1) Nothing is Permanent in this World, not even our Troubles.
(2) I like Walking in the Rain, because  No Body can see my Tears.
(3) The Most Wasted  Day in Life is the Day in which we have not Laughed.

LIFE is to Enjoy with Whatever you have with You, Keep Smiling...!

If you feel STRESSED,Give yourself A Break.

Enjoy Some..Icecream/ Choclates/Candy/ Cake...
Why...?
B'Coz...
STRESSED
backwards spelling is
DESSERTS...!!
Enjoy...!

Very Beautiful lines
Pls Store it.
-----------------------------------
2
ONE Good FRIEND
is equal to ONE
Good Medicine...!
Likewise ONE Good
Group is equal to ONE
Full medical store...!!

Six Best Doctors
in the World....
1.Sunlight,
2.Rest,
3.Exercise,
4.Diet,
5.Self Confidence &
6.Friends.

Maintain them in all
stages of Life and
enjoy healthy life...!

If you see the Moon...
You see the Beauty of
God.....!
If you see the Sun...!
You see the power of
God....
And....
If you see the Mirror,
You see the Best
Creation of GOD...!

So,
Believe in YOURSELF.
We all are Tourists & God is our Travel Agent
Who has already fixed
all our Routes, Reservations
& Destinations
So....
Trust him & Enjoy the
"Trip" called LIFE...!!

Our Aim in Life
should be....


*9 8 7 6 5 4 3 2 1 0*

🔹9-Glass Drinking Water.
🔹8-Hrs Sound Sleep.
🔹7-Wonders Tour With Family.
🔹6-Days Work A Week.
🔹5-Digit Income.
🔹4-Wheeler.
🔹3-Bedroom Flat Or House.
🔹2-Best Friends.
🔹1-Sweetheart.
🔹0-Tension...!

Life will never
come Again.!!
Live Today..!
Share to all People who
are Important to You..!!
----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.7.16

பிறந்த வீடு என்னும் சொர்க்கம்!

பிறந்த வீடு என்னும் சொர்க்கம்!

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!

அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!! இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்...அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!! வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!
தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!! ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!! விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..!!

அங்கே.. தங்கைபெண்களை...புதுத்துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தாள்..!! அவளை பார்த்ததும்.. " என்னாச்சுக்கா..?" என்றாள்..!!

"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!! அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!! அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!" என்றார்..!!

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!

எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!

எங்கிருந்தோ குரல்.."அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத.. !!" பாட்டியின் குரல் தான் அது..!!

எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!! ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. " என்னாச்சுடி என் ராசாத்தி.." பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்.. !!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் "அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!

உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்..!!

அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!

தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள். "அழாதே அக்கா, மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

அன்று இரவு...அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!! ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!
நாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது..!!

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!! ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!

அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம்..!!

நேசியுங்கள்_பெண்களை.
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.7.16

அப்போது இருந்தது ஒரு காலம்!!!!


அப்போது இருந்தது ஒரு காலம்!!!!

💥ஒரு காலம் இருந்தது.

💥மனிதாபிமானத்தையும் மனச்சாட்சியையும் எம்மில் பெரும்பான்மையினர் நேசித்த ஒரு காலம் இருந்தது.

💥கடவுளுக்கு பணிந்த காலம்.
💥சத்தியத்தை மதித்த காலம்.
💥நம்பிக்கையை காப்பாற்றிய காலம்.
💥வாக்குறுதிகளை பறக்கவிடாத காலம்.
💥அகிம்சைக்கு அடிபணிந்த காலம்.
💥பெண்களை போற்றிய காலம்.
💥நீதியை நிலைநாட்டிய காலம்.
💥நியாயத்தை துணிந்து கேட்ட காலம்.
💥பணத்துக்கு மதிப்பிருந்த காலம்.
💥பாசத்துக்கு கட்டுப்பட்ட காலம்.
💥நாடகக்கலை வளர்ந்த காலம்.
💥நடிப்புக்கு இலக்கணமிருந்த காலம்.
💥பயபக்தி என்ற சொல்லையே வணங்கிய காலம்.
💥சுவாமிமாரை கடவுள்களாய் பார்த்த காலம்.
💥வானொலிப் பாடல்களில் சுகித்திருந்த காலம்.
💥பழஞ்சோற்று உருண்டையை ருசித்த காலம்.
💥பனம்பாயில் படுத்துறங்கிய காலம்.
💥ஆறுகளில் எப்போதும் நீர் இருந்த காலம்.
💥முழுநிலவை சனங்கள் ரசித்த காலம்.
💥பத்திரிகைகைள் உண்மைகளை மட்டுமே சொன்ன காலம்.
💥கட்சிகள் மக்களுக்காய் உழைத்த காலம்.
💥கோயில்கள் சேவை செய்த காலம்.
💥மழை தவறாமல் பொழிந்த காலம்.
💥மலிவு விலையில் எல்லாம் கிடைத்த காலம்.
💥ஊழல் என்ற சொல் அறியாத காலம்.
💥தண்ணீர் விற்கப்படாத காலம்.
💥வயல்களில் கட்டிடங்கள் எழுப்பப்படாத காலம்.
💥கடிதங்கள் மட்டுமே இருந்த காலம்.
💥மீதிப் பணத்திற்கு மிட்டாய்களைத் தராத காலம்.
💥ஆபாசங்களை நம்பியிராத நடிகைகளின் காலம்.
💥பாடகிகள் நிலைத்து நின்று பாடிய காலம்.
💥மருந்தில் பழுக்காத மாம்பழங்கள் கிடைத்த காலம்.
💥நகைக்கடன் கடைகள் அதிகமிராத காலம்.
💥இராப் பிச்சைக்காரர்கள் வீடுதேடி வந்த காலம்.
💥விபத்துக்கள் அரிதாக இருந்த காலம்.
💥வீட்டு வாசல்களில் குடிதண்ணீர் வைத்திருந்த காலம்.
💥எல்லோரையும் கள்வர்களாய் பார்க்காத காலம்.
💥மருந்துக் கடைகள் குறைவாய் இருந்த காலம்.
💥புற்றுநோய் அதிகம் உயிரெடுக்காத காலம்.
💥உடலுழைப்பு அதிகமாய் இருந்த காலம்.
💥மின்வெட்டு பற்றி யாருமறியாத காலம்.
💥வண்ணத்துப் பூச்சிகளை இலகுவாய் பிடித்த காலம்.
💥வழுக்கல் இளநீரை மிகமலிவாய் குடித்த காலம்.
💥சிட்டுக்குருவிகள் முத்தத்துக்கு வந்த காலம்.
💥வாகன நெரிசல் இல்லாத காலம்.
💥இலவசங்கள் ஏதும் தரப்படாத காலம்.
💥அர்த்தமுள்ள பாடல்கள் எழுதப்பட்ட காலம்.
💥வார்த்தைகள் விளங்கும் சங்கீதம் வாழ்ந்த காலம்.
💥கலப்பில்லாத அழகுத் தமிழ் பேசிய காலம்.
💥வேப்பமரங்களும்,குயில்களும் நிறைந்திருந்த காலம்.
💥எல்லோருக்கும் நேரமிருந்த காலம்.
💥ஊர்கூடி தேர் இழுத்த காலம்.
💥இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத ஒரு காலமிருந்தது.
ஒரு காலமிருந்தது.
💥அது நாங்களெல்லோரும்  அன்பில் திளைத்திருந்த காலம்.
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.3.16

பசுவின் பால் சைவமா, அசைவமா?


பசுவின் பால் சைவமா, அசைவமா?

1
பசுவின் பால் சைவமா, அசைவமா?

மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால், பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது. அதன் ரத்தம் தானே பாலாக
மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள். ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச்
சாப்பிட்டால் தான் அது அசைவம். பால் அப்படியல்ல. பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும்.

ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும். பசுவுக்கு நான்கு மடு இருக்கும். இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும்.
மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும். பசும்பால் மனிதனுக்கு சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது. அது புனிதமானதும்
கூட. பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. அது புனிதமானது என்பதால் தான், "பாலும் தெளிதேனும் பாகும்  பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்", என்று விநாயகருக்கு வாக்களிக்கிறாள் ஒளவைப்பாட்டி.
--------------------------------------------------------
2
அரோகரா' என்றால் என்ன?

'அரோஹரா' அல்லது 'அரோகரா' என்பது 'அர ஹரோ ஹரா' என்ற
சொற்களின் சுறுக்கம். இதற்கான பொருள்,

'இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக' ... என்பதாகும்.

முன்பு, சைவர்கள் (சைவ சமயத்தினர்) இதனைச் சொல்வது வழக்கமாக இருந்தது.

திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்
போது, அவரைச் சுமந்துகொண்டு வந்தவர்கள் 'ஏலே லோ ஏலே லோ'
என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர். இதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட
பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, 'அர ஹரோ ஹரா'என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு 'அர ஹரோ ஹரா'
என்று சொல்வது  வழக்கமாயிற்று.

காலப்போக்கில் சைவர்கள் இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது.
ஆனால், கௌமாரர்கள் (முருகனடியார்கள்), 'வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா' ... என்றுச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு இணைந்துவிட்டன! பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா'
என்று சொல்வது, 'வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி, 
நற்கதியை அருள்வாயாக' 
என்று உரிமையோடு முறையிடுவதாகும்.

முருகனே முழுமுதல் இறைவன் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்கள் இனி, 'வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா' ... என்று உற்சாகமாகச்
சொல்வோமே!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9.3.16

ஆனந்தமாய் வாழ்வது எப்படி?

ஆனந்தமாய் வாழ்வது எப்படி?

ஒரு சிங்கமோ, புலியோ இன்னொரு சிங்கத்தையோ, புலியையோ பார்த்து...."சே.....நீ எவ்வளவு வேகமா துரத்தி எப்படி லாவகமா அந்த மானை வேட்டையாடினே.  உன் வீரமும், ஆற்றலும் மெச்சுதற்குரியது. நீ மேலும் மேலும் நிறைய மான்களை வேட்டையாடி, விரைவில் சதம் அடிக்க உனக்கு என் மனம் திறந்த பாராட்டுக்கள்" என பாராட்டுவதில்லை.  

ஏனெனில் திறமையாய் வேட்டையாடுவது என்பது அதன் இயல்பு.  அது இயற்கை. அவ்வளவுதான்.  இதில் பாராட்டுவதற்கு ஏதுமில்லை.  

பூவலகில் எல்லா உயிர்களும் ஒன்றுக்கொன்று ஒத்துதவி வாழ்கின்றன.

டிஸ்கவரி சேனலில் ஒரு காட்சி.

நதியோரம் ஓங்கி உயரமாய் வளர்ந்திருந்த ஒரு மரத்திலுள்ள குரங்குகள் அந்த மரத்தின் பழங்களை சாப்பிடுகின்றன.  சில பழங்களை அவை முகர்ந்து பார்த்துவிட்டு நதியில் வீசிவிடுகின்றன.  

அதற்காகவே காத்துக்கிடக்கும் மீன் கூட்டம் ஒன்று அந்தப் பழங்களை உணவாகக் கொள்கின்றன.

பின்பு சமவெளியில் நதியின் ஓட்டத்தோடு நீண்ட நெடுந்தூரம் பயணித்து வேறோரு இடத்தை அடைகின்றன.  அங்கு கழிவுகளை வெளியேற்றுகின்றன.  
கழிவுகளோடு சேர்ந்து வெளியேறும் அம்மரத்தின் விதைகள் கரையொதுங்கி புதிய நிலத்தில் முளைக்கத்தொடங்குகின்றன.  அந்த மரத்தின் சந்ததி நிலைபெறுகிறது.

இதில் யார் யாரைப் பாராட்டுவது?   இந்த மரத்தின் சந்ததியை நிலைபெறச் செய்யும் பணியை நாம் செய்கிறோம் என அந்தக் குரங்களுக்கோ, மீன்களுக்கோ அல்லது அந்த ஆற்றிற்கோ தெரியுமா?

இது இருப்பு சக்தியின் திருவிளையாடல்.  அதன் பேரறிவு மயமான திட்டம். குரங்கு, மரம், மீன், ஆறு என அனைத்துமே வெறும் கருவிகளே.

இவை எதுவும் அந்த மரத்தைத் தான் நட்டதாக பெருமை பேசிக்கொள்வதில்லை. ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துதவி வாழ்கின்றன.

மனிதனும் அது போலத்தான்.  இந்த பூமியில் அவன் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து செல்லும் ஜீவன்.  தனியாக ஆகாயத்திலிருந்து குதித்துவிட்டவனல்ல. அவனும் பிற ஜீவன்களோடும், சக மனிதர்களோடும் ஒத்துதவி வாழ்பவன்.

இது புரியாமல் ஒருவரையொருவர் பொய்யாய்ப் புகழ்ந்து தள்ளி, அகங்காரத்திற்குப் பெருந்தீனியிட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.

புகழ் என்ற ஒன்று கிடையவே கிடையாது.  அது கற்பனையானது.  அது ஒரு மாயை.  அது ஒரு போதை.  அது ஒரு மனநோய்.

துன்பப்படும் ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அத்துன்பத்திலிருந்து வெளிவந்தவர் மிகவும் தளர்வாக உணர்கிறார்.  அந்தத் தளர்வு நிலையை தனக்குக் கொடுத்துதவியவர் மீது அவர் ஆன்மாவிலிருந்து நன்றியுணர்வு பெருகுகிறது. உயிரிலிருந்து வாழ்த்துகிறார். இது ஆறாவது அறிவின் காரணமாய் எழுந்த நன்றியுணர்வு.  அதன் வெளிப்பாடு.  இதுவே உயர் புகழ். இதில் அகங்காரத்திற்கு இடமில்லை. மற்றெல்லாம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கபட வேடங்களே. அவை தந்திரமான உள் நோக்கங்களைக் கொண்டவை.  மிகுந்த ஆபத்தானவை.  அகங்காரத்தை வளர்ப்பவை.  மனித குலத்தின் சாபக்கேடுகள்.

ஆகவே புகழ்வதும், புகழ்ச்சிக்கு அடிமையாவதும் மனிதனை பல்வேறு துன்பங்களுக்குள் அழைத்துச் செல்பவை என உணர்ந்து, இங்கு நாம் அனைவரும் ஒத்துதவி வாழ்வதே வாழ்க்கை எனப் புரிந்து, இறைநிலையில் பேரறிவு மயமான திட்டத்தில் நாம் அனைவரும் சாதாரணக் கருவிகளே எனத்தெளிந்து, அகங்காரம் தொலைத்து ஆனந்தமாய் வாழ்வோம்.

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் சொன்னது
-------------------------------------------------


8.3.16

மாற்றம் யாரிடமிருந்து ஏற்பட வேண்டும்?


மாற்றம் யாரிடமிருந்து ஏற்பட வேண்டும்?

மாதா அமிர்தானந்தமயி அவர்கள் சொற்பொழிவாற்றும் போது கூறிய
குட்டிக் கதை..!!

** மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும். **

ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது. அவர் தன் மனைவியிடம் கூறினார் "நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய்" எனக் கூறினார்.

ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன். நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி.  மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான். நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன். வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். நாம் செய்யும் தவறை மற்றவர்கள் செய்தால் நமக்கு அதிர்ச்சியாகிறது. மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும்.
--------------------------------------------------
2
விலைவாசி எப்படி ஏறுகிறது தெரியுமா?

டீச்சர்: பசங்களா! நாளைக்கு க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம்... எல்லாரும் ஆளுக்கு 50 ரூபாய் கொண்டாங்க... சரியா?

டீச்சர் : (மனதுக்குள்ள) 20 ரூபா ஃபோட்டோவுக்கு 50 ரூபா வாங்கினா 60 பசங்களுக்கு 30 ரூ வீதம் 1800... இந்த மாதம் புதுப் புடவை தான்...

பையன்:(வீட்டுக்கு வந்தவுடன்) அம்மா நாளைக்கு ஸ்கூல்ல
ஃபோட்டோக்கு 100 ரூ வேணும்...

அம்மா: ஃபோட்டோக்கு 100 ரூபாயா? கொள்ளையடிக்கிறாங்க....
சரி, சரி அழாதே... அப்பா வரட்டும்... கேக்கறேன்.

அப்பா வந்ததும்: என்னங்க... நம்ம பையன் ஸ்கூல்ல க்ரூப்
ஃபோட்டோக்கு 200 ரூபாய் கொண்டு வரச் சொல்லிருக்காங்களாம்... இல்லாட்டி உள்ளயே விட மாட்டாங்களாம்...

அப்பா: க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாயா? பகல் கொள்ளை... என்ன செய்யிறது?... சட்டைப் பையில இருக்கு எடுத்துக்க....
----------------------------------------------
விலைவாசி எப்படி ஏறுதுன்னு புரியுதா? ..
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.3.16

பிரச்சினைகளை அஞ்சி ஓடவைப்பது எப்படி?


பிரச்சினைகளை அஞ்சி ஓடவைப்பது எப்படி?

சுமைதாங்கி மரம்

ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர
வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.

போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை
தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு
மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி
கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர்
வேலைகளை ஆரம்பித்தார்.

சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை
தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. "என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி
இல்லையே"  என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்படத்
தயாரானார்.

வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி
எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார்.
போகும்  வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிக்கொண்டு  போனார் முதலாளி.

தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணீர் எடுத்துக்
கொண்டு வா" என்று முதலாளி சொன்னார். "வீட்டுக்குள் வாங்க
முதலாளி" என்று  அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும்
அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின்
மீது சிறிது நேரம் கை  வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார்.
தன் மனைவியை  பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில்
நடந்த எந்த பிரச்சனையையும்  நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த
வித கவலையும் இல்லாமல்  குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.

வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி
உன்னால் இருக்க முடிந்தது" என்றார்.

"அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு
நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும்
இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போகக்கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான்
அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில்
நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை
எடுத்துக் கொண்டு போவேன் .ஆனால் என்ன ஆச்சரியம் என்றால்
நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள்
அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்". தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.

நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள்.
பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்..

படித்ததில் பிடித்தது.
அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.2.16

ஒவ்வொரு மனிதனும் அதிகமாக நேசிக்கக்கூடியது எது?

ஒவ்வொரு மனிதனும் அதிகமாக நேசிக்கக்கூடியது எது?

அர்த்தமுள்ள இந்து மதம் பதிவு ஒன்றில் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது!

தெய்வத்தை அணுகும் முறை

உலகத்திலேயே மனிதன் அதிகமாக நேசிக்கக் கூடியது அமைதியும், நிம்மதியுமே.

பணம் வரலாம்; போகலாம். பல தாரங்களை மணந்து கொள்ளலாம்; வீடு வாங்கலாம்; விற்கலாம்; நிலம் வாங்கலாம்; சொத்தைப் பெருக்கலாம்; எல்லாம் இருந்தும் கூட நிம்மதி இல்லை என்றால் அவன் வாழ்ந்து என்ன பயன்?

சேர்க்கின்ற சொத்து நிம்மதிக்காக.
கட்டுகிற மனைவி நிம்மதிக்காகவே.
தேடுகின்ற வீடும், நிலமும் நிம்மதிக்காக.
எப்போது அவன் நிம்மதியை நாடுகிறானோ, அப்போது அவனுக்கு அவஸ்தை வந்து சேருகிறது.

ஆரம்பத்தில் மனிதன் விரும்பியோ விரும்பாமலோ பல சிக்கல்களைத் தானே உண்டாக்கிக் கொள்கிறான்.
தானே கிணறு வெட்டுகிறான்; அதில் தானே விழுகிறான்.
தானே தொழில் தொடங்குகிறான்; தவியாய்த் தவிக்கிறான்.
தானே காதலிக்கிறான்; அதற்காக உருகுகிறான்.
தானே ஒரு பெண்ணை விரும்பிக் கல்யாணம் செய்து கொள்கிறான்; பிறகு இது பெண்ணா?, பேயா? என்று துடியாய்த் துடிக்கிறான்.
எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் மனித வாழ்க்கை துன்பகரமாகவே காட்சியளிக்கிறது.

ஆகவேதான், மனிதன் ஏதாவது ஒரு புகலிடத்தை நாடுகிறான்.
தனக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று தேடுகிறான்.
மனிதர்களோ அவதூறு பேசுகிறார்கள்; கேலி செய்கிறார்கள்.
ஆகவே, அவன் தெய்வத்தைச் சரணடைகிறான்.

அந்தத் தெய்வம் அவன் குறையைக் கேட் கிறதோ இல்லையோ, காட்சியிலேயே நிம்மதியைத் தருகிறது.
இந்தத் தெய்வ பக்தியில் மிக முக்கியமானது அணுகும் முறை.
எல்லோரையும் போல கோவிலுக்குப் போனோம்; ஒரு தேங்காய் உடைத்தோம்; இரண்டு பழங்களை வாங்கிச் சென்றோம் என்பதில் லாபமில்லை.
கோவிலில் பாடப்படும் `கோரஸ்’ அல்லது கோஷ்டி கானத்தில் பெரும் பயனடைவதில்லை.

ஏழை ஒருவன் வள்ளல் வீட்டுப் படிக்கட்டுகளில் நம்பிக்கையோடு ஏறுவது போல், இறைவனை அணுக வேண்டும்.
இறைவனை ஒரு உன்னதமான இடத்தில் வைத்து, அடிமையைப் போல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவனைத் தோழனாகவே பாவிக்கலாம்.
தனியறையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு தெய்வப் பிரதிமையின் முன்னால் குறைகளைச் சொல்லி அழுவதில் பயனிருக்கிறது.

எங்கள் கிராமங்களில் ஒரு காரியம் நடக்குமா நடக்காதா என்பதற்குப் பூக்கட்டி வைத்துப் பார்ப்பார்கள். வெற்றிலைப் பாக்கு வைத்துக் கேட்பார்கள்.

சாமி அனுமதித்தால் மட்டுமே அந்தக் காரியத்தைச் செய்வார்கள்.

எல்லாவற்றிற்குமே தெய்வத்தை நம்பி, அதன் மூலம் அவர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

`திருவுளம்’ கேட்பது என்பது கிராமங்களில் இருக்கும் ஒருமுறை. `நான் மேற்கொண்ட காரியம் நடக்கும் என்றால் பல்லி சொல்ல வேண்டும்’ என்று
வேண்டிக் கொள்வார்கள்.கோவிலின் ஏதாவது ஒரு பகுதியில் பல்லி சொன்னால், இறைவனின் திருவுளம் இரங்கி விட்டதென மகிழ்வார்கள். அது
சொல்லவில்லை என்றால், அந்தக் காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்.

மனிதனின் மிகவும் குறைந்த பட்சத் தேவை நிம்மதி. அதைத் தெய்வத்திடம் இருந்து பெற்றுக் கொள்பவனுக்குப் பெயர் தான் இந்து.

தெய்வத்தை அணுகுவதில் திறமையுள்ளவர்கள் தங்கள் காரியங்களைக் கண் முன்னாலேயே சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
`முருகா முருகா’ என்று எல்லோரும்தான் கூவுகிறோம்; சிலருக்கு மட்டும் தொட்டதெல்லாம் பலிக்கிறதே, ஏன்?
அவர்கள் தெய்வத்தை அணுகத் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்பதே, அதன் பொருள்.

கொல்கத்தா காளி கோவிலைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள்.
ஒரு ஏழை உழைப்பாளி. அந்தக் கோவில் வாசலில் போய்ப் படுத்துக் கொள்வானாம். காலையில் கண் விழிக்கும் போது சந்நிதானத்தில் தான் கண்
விழிப்பானாம். காளிதேவியிடம் வேண்டிக் கொண்டுதான் தொழிலுக்குப் புறப்படுவானாம். எப்படியும் அன்றைக்குப் பத்து ரூபாய் சம்பாதித்து
விடுவானாம். என்றைக்கு அவன் ஞாபக மறதியாகச் சந்நிதானத்தைப் பார்த்துக் கண் விழிக்காமல் தெருவைப் பார்த்து விழிக்கிறானோ, அன்றைக்கு
அவன் வாழ்க்கையில் சிரமம் ஏற்படுமாம்.

இதை எப்படிச் சொல்கிறார்கள் என்றால், `இன்றைக்கு இவனுக்கு லாபமில்லாத நாள் என்று தெரிந்து, ஈஸ்வரியே அவனை வேறு பக்கம்
விழிக்க வைக்கிறாள்’ என்கிறார்கள். இதுதான் உண்மை என்று நான் நம்புகிறேன். எனக்கும் இதில் ஒரு அனுபவம் உண்டு.

நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் என் கவிதா ஹோட்டல், தேவர் திருமண மண்டபத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு கேரளத்து நண்பர் என்னைப்
பார்க்க வந்தார். வந்தவர் ஒரு சிறிய குருவாயூரப்பன் புகைப்படத்தைக் கொடுத்து விட்டுப் போனார்.

அதை நான் என் சட்டைப் பையிலே வைத்திருந்தேன்.
காலையில் சட்டை மாற்றும்போது எதை வைக்க மறந்தாலும், அந்தப் படத்தை வைக்க மறக்கமாட்டேன்.
அது `பெதடின்’ பழக்கத்தை விட்டு விட்ட நேரம். உடம்பிலே சில எதிரொலிகள் ஏற்பட்டு அடங்கிவிட்டன.
குருவாயூரப்பன் படம் வந்ததில் இருந்து உடம்பு மிக நன்றாக இருந்தது.
காலை குளித்துப் பலகாரம் சாப்பிட்டு விட்டு `இன்சுலின்’ போட்டுக் கொண்டால், மதியம் வரையிலே சுறுசுறுப்பாக இருக்கும்.
மதியம் நல்ல கீரையோடு சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் படுத்தால், மாத்திரை இல்லாமலே தூக்கம் வரும்.
சாயங்காலம் எழுந்து குளித்தால், உலகமே புதிதாகத் தோன்றும். உடனே மண்டபத்துக்கு வந்து மாலைப் பத்திரிகைகள் அனைத்தும் படித்து
முடிப்பேன். ஏதாவது எழுதுவேன். உடம்பு அவ்வளவு நன்றாக இருந்தது.

அப்போது எனக்கு மலேசியாவில் இருந்து அழைப்பு வந்தது. `உடம்பு தான் நன்றாக இருக்கிறதே, போய் வரலாம்’ என்று முடிவு கட்டினேன்.
புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நான் நீர் சாப்பிடும் கண்ணாடித் தம்பளர் விழுந்து உடைந்தது. என்னுடைய கைக்கடிகாரம் கழன்று விழுந்தது. `என்ன
துர்ச்சகுணங்களோ’ என்று எண்ணியபடி விட்டு விட்டேன்.

மறுநாள் காலை பத்தரை மணிக்கு விமானம். காலை இட்லி கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன்.
`அதிகமாகச் சாப்பிட்டு விட்டோம்’ என்று நானே எண்ணிக் கொண்டு, `இன்சுலின்’ மருந்தை வழக்கத்துக்கு விரோதமாக அதிகம் போட்டுக் கொண்டு
விட்டேன். சற்று மயக்கமாக இருந்தது.

விமான தளத்துக்குப் போகும் போது பையைத் தடவிப் பார்த்தேன். குருவாயூரப்பன் படத்தைக் காணவில்லை. பழைய சட்டையில் தேடிப் பார்க்கச் சொன்னேன். அதிலும் இல்லை.

விமான நிலையத்துக்கு வந்த போது ஆட்களையே அடையாளம் தெரியாத நிலை ஏற்பட்டு விட்டது. என் குழந்தைகள், பேரன், பேத்திகளெல்லாம்
விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள். யாரோடு பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதே எனக்குப் புரியவில்லை. என்னோடு கனரா பாங்க்

நண்பர்களும் விமானத்தில் வந்தார்கள்.விமானத்தில் இனிப்பு வாங்கிச் சாப்பிட்டேன்; குடித்துப் பார்த்தேன்; மயக்கம் மயக்கம் தான்.

இது நடந்தது 1975 செப்டம்பர் 28ஆம் தேதி.

மலேசியாவில் நான் போய்க் கோலாலம்பூரில் இறங்கி அங்கிருந்து
250 மைல் தூரத்திலுள்ள சித்தியவான் என்ற ஊருக்குப் போய்விட்டேன்.
அந்தச் சித்தியவான் நகரில் எனக்கு ஒரு அற்புதமான நண்பர் உண்டு. அவர் சிவகங்கைப் பகுதியைச் சேர்ந்தவர். கிருஷ்ணன் என்று பெயர்.
கோலாலம்பூர் கூட்டங்களுக்குத் தப்பி, ஓய்வுக்காக நான் அங்கே சென்றேன்.

அங்கிருந்து மூன்றாவது மைலில் ஒரு கடற்கரை உண்டு. அதன் கரையில் ஒரு சிற்றூர் உண்டு. அதன் பெயர் `லுமுட்’. அங்கே ஒரு தென்னந்தோப்பில்
அழகான ஒரு காட்டேஜில் நான் தங்கி இருந்தேன். சரியாக மூன்றாவது நாள் அங்கிருந்து நான் சித்தியவான் நகருக்கு வந்தபோது,

தமிழர்களெல்லாம் சென்னை வானொலியைச் சிரமப்பட்டுத் திருப்பிக் கொண்டிருந்தார்கள்.

நான் கிருஷ்ணன் வீட்டுப் படியேறிப் போகும் சமயம், அங்கிருந்த கிருஷ்ணனின் குமாரர், `ஐயா, காமராஜ் இறந்து விட்டார்’ என்றார்.
மறுநாள் மதியம், சென்னையில் இருந்து எனக்கு டிரங்க் கால் வந்தது, `அதே அக்டோபர் இரண்டாம் தேதியில் என் உடன் பிறந்த சகோதரியும்
இறந்து விட்டதாக!’

நான் சென்னை வரமுடியவில்லை. மலேசியப் பயணத்தை ஒரு நாள்கூட ரசிக்க முடியவில்லை. ஒரே ரத்தக் கொதிப்பு; சர்க்கரைக் குறைவு; மயக்கம்;
மயக்கம்; மயக்கம்!

இந்த நிலையிலும், `நான் இந்தோனேஷியாவுக்கு வந்தேயாக வேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள். பினாங்கில் புறப்படும் விமானம் இருபது
நிமிஷத்தில் சுமத்திரா தீவுக்குப் போய் விடுகிறது.

நான் அங்கிருந்து கோலாலம்பூர் திரும்பியதும், சென்னையில் இருந்து டிரங்க்கால் வந்தது. என் சகோதரரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக.
உடனே நான் தங்கியிருந்த பசிபிக் ஹோட்டல் டிராவல் ஏஜெண்டிடம் டிக்கெட்டைக் கொடுத்து ஏர் இந்தியாவில் உறுதி செய்யச் சொன்னேன். அவர்
உறுதி செய்து விட்டார். ஆனால், என்னிடம் டிக்கெட்டைக் கொடுக்கவில்லை.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை எட்டரை மணிக்கு விமானம். டிராவல் ஏஜெண்ட் வரவில்லை.

என்னை அழைத்துப் போயிருந்த துணை பப்ளிக் பிராஸிக்யூட்டர் நண்பர் சம்பந்தமூர்த்தி, விமான நிலையத்திலேயே டாலர் கட்டி எனக்கு டிக்கெட்
வாங்கிக் கொடுத்தார்.

எத்தனை துயரங்கள்! எத்தனை சோதனைகள்!

`இவற்றுக்கெல்லாம் நாம் ஏன் காரணமாக இருக்க வேண்டும்?’ என்று தானே, குருவாயூரப்பன் காணாமல் போனான்! விதி தவறாக இருக்குமானால்,
தெய்வம் கண்ணை மூடிக் கொள்ளும். அதற்காக அழுது பயனில்லை.

தெய்வத்தை அணுகும் முறையில் இருந்தே பல விஷயங்களை நாம் முன் கூட்டித் தெரிந்து கொள்ளலாம்.

தெய்வ நம்பிக்கை உள்ளவனுக்கு சகுனத் தடை ஏற்பட்டால், அதைத் தெய்வத்தின் கட்டளை என்றும், நமது கர்மா என்றும் கொள்ள
வேண்டும்.தடைதான் ஏற்படுமே தவிர, பெரும் கொடுமைகள் நிகழமாட்டா.

மலேஷியாவில் இருந்து திரும்பிய பிறகும் என் உடல்நிலை சரியாக இல்லை. உடம்பு இளைத்துக் கொண்டே வந்தது. முப்பது பவுண்டு இளைத்து
விட்டேன். இப்போது பார்க்கும் டாக்டர்கள் எல்லாம், இதுதான் சரியான எடை என்கிறார்கள். இதுவும் நான் விரும்பி நடந்ததல்ல.

பகவான் சில காலங்களில் சில காரியம் நடக்கும் என்று நிர்ணயிக்கிறான்; நம்முடைய பிரக்ஞை இல்லாமலே அவை நடந்து விடுகின்றன.
தெய்வத்தை அணுகினால் பலன்கிடைக்கும் என்பதற்காகக் கண்ட கோவிலுக்கெல்லாம் ஓடிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.
ஒரு தெய்வத்தை உளமாரப் பற்ற வேண்டும். பெரும்பாலும் சக்தி வணக்கம் உதவி செய்யக் கூடியது. புவனேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி,
அகிலாண்டேஸ்வரி, கற்பகாம்பாள், மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி எல்லாமே சக்தியின் பிம்பங்களாக இருப்பதால், சக்தி உபாசனை பலன் தரும்.

ஆண் தெய்வங்களில் அவரவர் விருப்பப்படி சிவ தத்துவத்தையோ, விஷ்ணு தத்துவத்தையோ ஏற்றுக் கொள்ளலாம்.
இரவில் படுக்கப் போகும் போது தூங்குவதற்கு முன் கடைசியாகச் சொல்லும் வார்த்தை, தெய்வத்தின் பெயராக இருக்க வேண்டும்.
அதன் பிறகும் யாருடனாவது பேச வேண்டி வந்தால் மீண்டும் தெய்வத்தின் பெயரைச் சொல்லி விட்டுத் தூங்க வேண்டும்.

சின்னப்பாத் தேவர் யாரைக் கண்டாலும், `வணக்கம் முருகா’ என்பார்.
எம்.ஜி.ஆர். யாரைக் கண்டாலும், `வணக்கம் ஆண்டவனே’ என்பார்.
ஐயப்ப பக்தர்கள், `சாமி சரணம்’ என்பார்கள்.

தெய்வத்தை நாம் நடு வீட்டில் நிற்க வைத்தால், அது உள் வீட்டிலேயே வந்து உட்கார்ந்து கொள்ளும்.

நன்றி கெட்டவன் மனிதன்; நன்றியுள்ளது தெய்வம்.

படித்ததில் பிடித்தது!
எனக்கு நண்பர் ஒருவர் அனுப்பியது.

அன்புடன், 
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.1.16

வெற்றியைத் தடுக்கும் வில்லன்கள்


வெற்றியைத் தடுக்கும் வில்லன்கள்
--------------------------------
நேற்று வெளியான புதிர்போட்டிக்கான முடிவுகள் நாளை வெளிவரும்.
பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஒரு நாள் அதிகமான 
அவகாசம் கொடுக்கப்பெறுகிறது!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------
🌺🌺🌺வெற்றியை தடுக்கும்-ஐந்து வில்லன்கள்.

🌺ஆட்டிட்யூட்! இப்போதெல்லாம் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம். பையன் நல்ல திறமைசாலிதான் ஆனா ஆட்டிட்யூட் சரியில்லையே!
என்கிறார்கள்.

🌺அதென்ன ஆட்டிட்யூட்? தமிழில் இதனை மனப்பாங்கு என்கிறார்கள். அவ்வப்போது நம்மைச் சுற்றி நிகழ்கிற விஷயங்களை நமது மனம் எப்படி
எதிர்கொள்கிறது, எப்படி எதிர்வினை (ரியாக்ட்) செய்கிறது… இவற்றின் தொகுப்பைத்தான் ஆட்டிட்யூட் (Attitude) என்கிறோம்.

🌺சுமாரான திறமை கொண்டவர்கள்கூட, தங்களது மனப்போக்கைப் பொருத்தமானவகையில் அமைத்துக்கொண்டால் மிகப் பெரிய அளவு
முன்னேறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதேசமயம், இதற்கு நேர் எதிராக, பிரமாதமான திறமைசாலிகள் நல்ல ஆட்டிட்யூட் இல்லாமல்
தடுமாறுவதும் உண்டு.

🌺இந்த ஆட்டிட்யூட்டை எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொள்வது? நல்ல ஆ்ட்டிட்யூட் வளர்த்துக்கொள்வது அத்தனை சிரமமில்லை. ஆனால்,
நீங்கள் அப்படி முன்னேறிவிட முடியாதபடி தடுக்கக்கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள்.

🌺 நாம் இந்த ஐந்து பேரையும் புரிந்துகொண்டு முறியடிக்கப் பழகிவிட்டால், அதன்பிறகு அவர்கள் என்ன செய்தாலும்.
நாம்தான் ஜெயிப்போம்!

அந்த 5 வில்லன்கள்:

ஊக்கமின்மை,
மாற்றம்,
பிரச்னைகள்,
பயம் மற்றும்
தோல்வி.

🌺இப்போது, சினிமாவில் வருவதுபோல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எதிர்த்து நிற்போம், அவர்களை ஜெயிக்கக் கூடிய ஆயுதங்கள்

என்னென்ன என்று பார்ப்போம்.

🌺💪1. ஊக்கமின்மை:
*நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்காதீர்கள், ஆழ்ந்து யோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய
வைத்துக்கொள்ளுங்கள்.
*சரியான நபர்களோடு பழகுங்கள். நீங்கள் செய்கிற எதுவும் உருப்படாது என்று சொல்கிறவர்களோடு எந்நேரமும் வளையவந்தால், உங்களைப்
பற்றி உங்களுக்கே அவநம்பிக்கைதான் தோன்றும்.
*நெகட்டிவ் வார்த்தைகளைத் தவிர்த்துவிடுங்கள், உங்களுக்கே தெரியாமல் அவை ஏற்படுத்தும் அதிர்வுகள் உங்களைச் சோர்வாக்கும்,
முன்னேற்றத்தைப் பாதிக்கும்.

🌺💪2. மாற்றம்:
* நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் அதைப் புரிந்துகொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள்.
* மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனத்தில் வையுங்கள்.
* அதேசமயம், சில விஷயங்களை எப்போதும் மாற்றிக்கொள்ளக்கூடாது. அந்தக் கொள்கைகளில் உறுதியாக இருங்கள்.

🌺💪3. பிரச்னைகள்:
*பிரச்னைகள் நிகழ்ந்தே தீரும், தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்று முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள், ஒன்று
அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்துவையுங்கள்.
*பல சமயங்களில், நாம் பிரச்னை என்று நினைப்பது மேலோட்டமான ஒரு விஷயம், நிஜப் பிரச்னை ஆழத்தில் ஒளிந்திருக்கும். அதைக்
கண்டுபிடியுங்கள்.
*அத்தனைப் பிரச்னைகளுக்குள்ளும் ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்திருக்கிறத, தேடிப் பிடித்து பயன்படுத்துங்கள்.

🌺💪4. பயம்:
* பயம் இல்லாததுபோல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக்கொள்கிறவன் கோழை அல்ல, வீரன்.
அவனால்தான் அந்தப் பயத்தை வெல்லமுடியும்.
*உங்கள் பயத்தின் தொடக்கப் புள்ளி எது என்று யோசியுங்கள், அங்கே அடியுங்கள்.
* நேற்று, நாளை ஆகியவற்றைவிட இன்றுதான் மிக முக்கியம், அதை மறக்காமல் இருந்தால் எந்தப் பயமும் உங்களை எதுவும் செய்யாது.

🌺💪5. தோல்வி:
* சறுக்கல்கள் வரும்போது, மாத்தி யோசியுங்கள். இந்தத் தோல்வியும் ஒரு வெற்றியாக இருக்கலாம்.
*உங்கள் மொழியையே மாற்றுங்கள். ச்சே இப்படி நடந்திருக்கலாம். என்பதைவிட அடுத்தமுறை இப்படிச் செய்வேன் என்பது பெட்டர்.
* சில விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்தமுடியும், மற்ற பல நம் கையில் இல்லை. அவற்றை மாற்ற நினைத்துப் பிரயோஜனம் இல்லை, நம்மால்
முடிந்ததைமட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்

வாழ்த்துக்கள்..💐💐💐💐 🌺🌺
================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.1.16

அவசியம் படியுங்கள் உங்களுக்கு பயன் தரலாம்.

அவசியம் படியுங்கள்  உங்களுக்கு பயன் தரலாம்.

அர்த்த_சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்.

ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன்
ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .

வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும்
போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும்
போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய
மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.

அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.

ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு
செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.

கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி
உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும்
பயனற்றது.

காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி
இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,

எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு,
நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.

பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம்
போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை
உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும்,
காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு
தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே
உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி
இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன்
எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.

ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும்
வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி,  தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய
வேண்டும்.

யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.
வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு
இடத்திற்க்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

சிங்கத்திலன் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.

அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற
வித்தைகள் வீணாகும்.

வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை
இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும்
துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில்
பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல்
நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.

மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.

பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின்
நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது

பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.

கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.

பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி
பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி
எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு
ஒருவரை எடை போடக்கூடாது.

வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை
விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

கல்வி கற்கும் மாணவன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க
வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம்,
அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

ஆயிரம் புதிய புத்தகம் கம்ப்யூட்டர் கற்று கொடுக்கலாம் . வாழ்க்கையை பழைய

புத்தகம் தான் கற்று கொடுக்கும் .
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.12.15

வள்ளுவரின் சாபம்!

திருவள்ளுவர்
வள்ளுவரின் சாபம்!

மன்றம் கூடியது

சில நிமிடங்களில் ஊர் மன்றம் கூடி விட்டது! ஏன்?

வள்ளுவர் வந்திருக்கிறாராம்!

வள்ளுவர் வந்திருக்கிறாராம்!

செய்தி அதிக வேகத்தில் பரவவே, பறக்கவே அனைவரும் ஊர் மன்றமான ஆலமரத்தடியில் கூடி விட்டனர். ஆலமரத்தைச் சுற்றியுள்ள மேடையில் அமர்ந்திருப்பவர் நிஜமாகவே வள்ளுவர் தான்!

அவரை வணங்கினர்; தொழுதனர்; கை கட்டி, வாய் மூடி உற்றுப் பார்த்து தங்களின் தரிசன பாக்கியத்தை நினைத்து மகிழ்ந்தனர்.

இன்று முழித்த வேளை நல்ல வேளை!

மெதுவாக ஊர்ப் பெரியவர் ஒருவர் எழுந்தார். ‘பெரிசு’ ஏதாவது பொருள் பொதிந்த ஒன்றைத் தான் கேட்கும்! அனைவரும் ‘பெரிசையும்’ அதற்கு வள்ளுவர் என்ன சொல்லப் போகிறார் என்பதையும் ஆவலுடன் எதிர் நோக்கினர்.

அப்போது கூட்டமாகக் கூடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்து பிச்சை எடுக்கும் வறியவன் ஒருவனும் ஓரமாக வந்து நின்றான்.

பத்துக் கேள்விகள்

பெரியவர் கேட்டார்: “வள்ளுவரே! வணக்கம். உங்கள் அருளை நாடி நிற்கிறோம். அருள் அல்லாதது யாது?

வள்ளுவர் அவரைக் கனிவுடன் நோக்கினார். பின்னர் கூறினார்:-
1
“அருள் அல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்             (குறள் 254)

ஒரு கேள்வி; அதற்கு அற்புதமாக இரண்டு விஷயங்களைப் பதிலாகப் பெற முடிந்தது. ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பதே அருள்; அந்த மாமிசத்தை வாங்கித் தின்னுவதே பொருள் அற்றது.

ஊர் மக்கள் சைவ உணவை மட்டும் உண்ணத் தீர்மானித்து விட்டனர்.

ஒரு கேள்வி கேட்டு பதிலும் வந்ததால் அடுத்தவர் மெல்ல எழுந்தார்.

“வாய்மை எனப்படுவது யாது?”

2
“வாய்மை எனப்பதுவது யாதெனின் …..யாதெனின்?!
“யாதொன்றும் தீமை இலாத சொலல்”   (குறள் 291)

ஆஹா! எளிமையான சுருக்கமான சூத்திரமாக இருக்கிறதே! பிற உயிருக்குத் தீமை பயக்காத சொற்களைச் சொல்லுவதே வாய்மை!

மூன்றாமவர் எழுந்தார்:-“ அறவினை யாது?”

3

“அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்”            (குறள் 321)

தான் முதலில் சொன்னதை மீண்டும் வலியுறுத்தி வள்ளுவர் கூறியதை அனைவரும் பக்தியுடன் மனதில் குறித்துக் கொண்டனர். பிற உயிரைக் கொல்லாமல் இருப்பதே அறவினை. அப்படிக் கொல்வோருக்கு அறமற்ற பிற தீவினைகள் சேரும்.

கூட்டத்தில் அஹிம்சையைப் பின்பற்றுபவருக்கு ஒரே சந்தோஷம். மனதிற்குள் உருகினார்.

இன்னொருவர் கேட்டார்:- “நல் ஆறு யாது?”

நல்ல வழி எது என்றா கேட்கிறீர்கள்?

வள்ளுவர் கூறினார்:-

4
“ நல் ஆறு எனப்படுவது யாதெனின்  யாதொன்றும் 
கொல்லாமை சூழும் நெறி”    (குறள் 324)

அட, அதே கருத்து! திருப்பித் திருப்பி வலியுறுத்துகிறாரே! சொல் சிக்கனம் உடைய வள்ளுவர் ஆழ்ந்த கருத்தை வலியுறுத்தி, எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே நல் ஆறு என்கிறாரே!

கையிலுள்ள பணம் சுருங்கக் கூடாது; குறையக் கூடாது என்ற கவலையில் இருந்தவர் கேட்டார்:-
செல்வத்திற்கு அஃகாமை யாது?

வள்ளுவர் சிரித்தார்:-
5
“அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் 
வெஃகாமை வேண்டும் பிறன் கைப் பொருள்”   (குறள் 178)

பிறர் கைப்பொருளைக் கவரக் கூடாது என்று இருத்தலே தன் கைப்பொருள் சுருங்காமல் இருக்கும் வழி!

மோசமான அரசியல்வாதிகள் எல்லாம் அங்கு தலையைக் குனிந்து கொண்டனர்.

நண்பர்கள் இருவர் எழுந்தனர்: ஒருவர் கேட்டார்:-
“நட்பிற்குச் சிறந்த நிலை யாது?”

பதில் உடனே வந்தது:
6
“நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் 
கொட்பின்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை”   (குற:ள் 789)

நட்பிற்கு வீற்றிருக்கை – சிறந்த நிலை – மாறுபாடின்றி முடிந்த போதெல்லாம் உதவி செய்து தாங்கிக் கொண்டிருப்பதே ஆகும்.

அடுத்த நண்பர் பளிச்சென்று உடனே கேட்டார்:-
“ பழைமை எனப்படுவது யாது?”
7
“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”    (குறள் 801)

பழகிய நட்பு, அதாவது பழைமை எனப்படுவது யாதெனில் பழகிய நண்பர் உரிமையாய் செய்யும் எந்தச் செயலையும் அவமதிக்காது ஏற்றுக் கொள்வதேயாகும்.

நண்பர்கள் இருவரும் மகிழ்ந்தனர்.

அடுத்தவர் எழுந்தார்: “பேதைமை என்பது யாது?”

“பேதைமை அதாவது அறியாமை யாது என்று தானே கேட்கிறீர்கள்?

8
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்    (குறள் 831)

அறியாமை என்று சொல்லப்படுவது யாதென்றால், தனக்குக் கேடு விளைவிப்பனவற்றைக் கைக்கொண்டு நன்மை தருபனவற்றைக் கை நழுவி விடச் செய்வதாகும்!

இன்னொருவர் எழுந்தார்:-
“ வெண்மை எனப்படுவது யாது?”

9
“வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம் யாம் என்னும் செருக்கு” (குறள் 844)

வெண்மை அதாவது புல்லறிவு – கீழான அறிவு எதுவெனில் யாம் நிறைந்த அறிவு உடையோம் என்று தம்மைத் தாமே மதித்துக் கொண்டிருக்கும் செருக்கு-  அகம்பாவம் - தான்!

கூட்டத்தினர் அகம் மிக மகிழ்ந்தனர். எத்தனை ‘யாதெனின்?’ கேள்விகள். அத்தனைக்கும் உடனுக்குடன் பதில்!

வள்ளுவர் எட்டிப் பார்த்தார். ஓரத்தில் இருந்த பிச்சைக்காரன் முண்டியடித்துக் கொண்டு முன்னே வந்தான்.

வள்ளுவர் அவனுக்கு வழி விடுமாறு சைகை காட்டவே அனைவரும் ஒதுங்கினர்.

அவன் முன்னே வந்தான்.

“ஐயா! வணக்கம். இன்மையின் இன்னாதது யாது?”

தான் எடுக்கும் இந்த பிச்சையை விடக் கொடியது ஏதாவது இருக்கிறதா?

மனம் கலங்கி இருக்கும் அவனைப் பார்த்த வள்ளுவர் எழுந்தார். அனைவரும் எழுந்தனர்.

இன்மையின் இன்னாதது யாதெனின்..

அனைவரும் வள்ளுவரையே கவனித்தனர்.

இன்மையின் இன்னாதது யாதெனின்..யாதெனின்..

வள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி என்று கூட ஒன்று உண்டா, என்ன?

யாதெனின்;

என்ன, வள்ளுவர் தடுமாறுகிறார். உடனுக்குடன் பதில் அளித்த வள்ளுவரா, யோசிக்கிறார், தடுமாறுகிறார், பதிலுக்காகத் தவிக்கிறார்.

கூட்டம் வியந்தது; பிரமித்தது.

தன் நிலையை அடைந்த வள்ளுவர் கூறினார்:-

10
“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது”    (குறள் 1041)

வறுமையை விடக் கொடியது என்னவென்றால்,..   என்னவென்றால் .. வறுமையைப் போலக் கொடியது வறுமையே தான்!

வள்ளுவரும் கலங்கி நின்றதைப் பார்த்த மன்றமே கலங்கியது.

பிச்சைக்காரன் கண்ணைத் துடைத்துக் கொண்டான்.

வள்ளுவரின் சாபம்

வள்ளுவர் சற்று உரத்த குரலில் கூறினார்:-

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் 
பரந்து கெடுக உலகியற்றியான்” (குறள் 1062)

பிச்சை எடுத்தும் உயிர் வாழுமாறு சிலரைப் படைத்திருந்தால் அந்த உலகை இயற்றியவன் அதே போல பிச்சை எடுத்து அலைந்து திரியட்டும்!

பிச்சைக்காரனின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டார் வள்ளுவர். அனைவரும் அவர் மேலே நடக்க வழியை விட்டனர்.

வள்ளுவரின் சாபத்தைக் கேட்ட இறைவன் சிரித்தான். ‘அடடா, என்ன கருணை நெஞ்சம், தெய்வப் புலவருக்கு!’

அருகிலிருந்த அன்னையைப் பார்த்துக் கண் சிமிட்டினான். மதுரையில் பொற்றாமரை ஏறிய ‘பொய்யில் புலவன்’ சாபம் கொடுத்து விட்டான், தேவியே! அதை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டாமா?”

தேவியும் சிரித்தாள்.

“வைகை தான் பெருக்கோடுகிறது. வந்தியோ அழைக்கிறாள். பிட்டுக்காவது மண் சுமந்து உங்கள் திருவிளையாடலைத் தொடங்குங்களேன்!”

பத்தே பத்து -  ‘யாதெனின்’ குறள்கள்!

பத்து, நூறு, ஆயிரம் அறிஞர்களும் நூல்களும் சேர்ந்தாலும் விளக்க முடியாத அரிய கருத்துக்கள்,

இல்லையா?

குறள் வாழ்க! தமிழ் வாழ்க!! குறள் நெறி வாழ்வோர் எவரானாலும் எங்கிருந்தாலும் வாழ்க!

Source:
நமக்கு அறியத்தந்தது நமது வகுப்பறை மாணவர் பொன்னுசாமி
அவருக்குக் கிடைத்தது: https://groups.google.com/forum/#!forum/agathiyam
-----------------------------------------------------
என்ன படித்து மகிழ்ந்தீர்களா?
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.12.15

முன்னேற்றத்திற்கு எது முக்கியம் - அதிர்ஷ்டமா - உழைப்பா?

முன்னேற்றத்திற்கு எது முக்கியம் - அதிர்ஷ்டமா - உழைப்பா?

அதிர்ஷ்டத்தை காட்டிலும் உழைப்பே முன்னேற்றமடைய செய்யும்.!

அன்று சலூன் கடை ஒன்றின் உரிமையாளர்.ஓனர், இன்று 209 சலூன் கார்களின் உரிமையாளர்!

பார்பர் டு பில்லினியர்’ - இது என்ன அடுத்த ரஜினி படத்தின் ஒரு வரிக் கதையா? இது கதையல்ல... நிஜம். ஆம்! பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் பாபு, சிகை அலங்காரக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, 42-வது வயதில், உலகின் விலை உயர்ந்த கார்களில் ஒன்றான ரோல்ஸ்ராய்ஸ் காரின் உரிமையாளர் ஆனவர். பெங்களூருவில் இன்னர் ஃபேசஸ் ஹேர் சலூன் மற்றும் ரமேஷ் டூர்ஸ் & டிராவல்ஸ் ஆகிய  நிறுவனங்களை நடத்திவருகிறார்.

என்ன சொல்கிறார் அவர்? தொடர்ந்து படியுங்கள்:

"எனக்கு ஏழு வயது இருக்கும்போது, என் அப்பா இறந்துவிட்டார். அவர் நடத்திவந்த சலூனை என் சித்தப்பா நடத்த ஆரம்பித்தார். அதற்காக தினமும் எங்களுக்கு ஐந்து ரூபாய் கொடுத்துவந்தார். வீட்டில் நான், தம்பி, தங்கை, அம்மா, பாட்டி ஆகிய ஐந்து பேர். அம்மா வீட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தார். படிப்பு, சாப்பாடு என தேவைகள் கழுத்தை நெறிக்கவே, என்னுடைய 12 வயதில், பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர, நானும் சின்னச் சின்ன வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். 10-ம் வகுப்புக்கு மேல் தொடர்ந்து முழு நேரமாகப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அதனால், படிப்பை பகுதி நேரம் ஆக்கிக்கொண்டு, முழு நேரமாக சலூனை எடுத்து நடத்த ஆரம்பித்தேன். ப்ளஸ் டூ முடித்த பிறகு, பகுதி நேரமாக டிப்ளமோ சேர்ந்தேன். ஆனால், வேலைப் பளு காரணமாக அதைப் பாதியிலேயே கைவிட நேர்ந்தது.

அளவான வருமானம் தரும் தொழிலாகத்தான் சலூன் இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த இளைஞனுக்கும் ஏற்படும் கார் ஆசை எனக்கும் வந்தது. என் தாத்தா கடன் மூலம் ஒரு மாருதி ஆம்னி வாங்கிக் கொடுத்தார். கொஞ்ச நாட்களிலேயே காருக்கான தவணை செலுத்த முடியாமல் திணறினேன். அப்போது, என் அம்மா வீட்டு வேலை செய்துகொண்டிருந்த வீட்டு முதலாளி நந்தினி அக்கா, காரை வாடகைக்கு விடலாம் என யோசனை சொல்லி, அவர் வேலை செய்த நிறுவனத்திலேயே கான்ட்ராக்ட்டும் வாங்கிக்கொடுத்தார்.

அந்த நிறுவனம் வளர வளர, நானும் வளர்ந்தேன். 1994-ல் ஒரு காருடன் இந்தத் தொழிலில் நுழைந்தேன். 1996-ல் எனக்குத் திருமணம் ஆனபோது, ஆறு கார்கள் ஆகியிருந்தன. இப்போது நான் 209 கார்களின் உரிமையாளன்.

மற்ற நிறுவனங்கள்போல நாமும் காரை வாடகைக்கு விடுகிறோம்; ஏதாவது வித்தியாசமாகச் செய்யலாமே என யோசித்து, யாரும் வாடகைக்குவிடாத கார்களாக விட நினைத்தேன். 2004-ல் புதிய பென்ஸ் காரை வாங்கி வாடகைக்கு விட்டேன். அதுவரை இங்கு, புதிய பென்ஸ் காரை யாரும் வாடகைக்கு விட்டது இல்லை. நல்ல வரவேற்பு கிடைக்கவே, 2009-ல் பிஎம்டபிள்யூ, ஆடி கார்களையும்  வாங்கினேன்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை வாடகைக்கு விடலாம் என்கிற எண்ணம்2011-ல் ஏற்பட்டது. நான் ரோல்ஸ்ராய்ஸ் வாங்கும்போது, பெங்களூருவில் ஐந்து பேரிடம் மட்டுமே அந்த கார் இருந்தது. என் வளர்ச்சி வெறும் அதிர்ஷ்டம் என நான் நம்பவில்லை. கடின உழைப்பு இல்லை என்றால், எந்த அதிர்ஷ்டம் அடித்தாலும் ஒரு உபயோகமும் இல்லை” என்று சொல்லும் ரமேஷ்பாபு, இன்னும் சலூன் கடையையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.
நம்பிக்கை மனிதர்!

தகவல்: நன்றி:  விகடன்.காம்
-----------------------------------------------
மேலதிகத் தகவல்:
Determination, hard work and some help turned a hairstylist into an entrepreneur

   By  P C Vinoj Kumar
   Bangalore
07 Dec 2015
Posted 09-Mar-2013
Vol 4 Issue 10
He could well be the richest barber in the country. But G Ramesh Babu charges only Rs.75 for a haircut. He has his salon at the famous Bowring Institute on St. Mark’s Road in Bangalore, one of the oldest clubs in the city.

The 42-year-old hairstylist attends to around eight customers a day, working in two shifts of 2-3 hours each, morning and evening. But what he does in between the two shifts is the stuff fairy tales are made of.
Ramesh Babu owns a fleet of 68 luxury cars
The man who wields the scissors at Bowring sits at a different office during rest of the day as CEO of a large car rental company that owns a fleet of luxury cars, including a dazzling Rs.3.3 crore Rolls Royce, and a range of Mercs, BMWs, Volkswagens, and Innovas.

His company, Ramesh Tours and Travels Private Limited, owns a total of 127 cars and has on its rolls around 120 employees. Most of them are drivers who draw a monthly pay of not less than Rs.14000, with additional overtime incentives.

“We are one of the top companies in the country in this field,” says Ramesh, who lost his father when he was just 7 years old, and later braved poverty and hunger to reach this position.

His rise to success is marked by hard work, a burning desire to succeed, and the favour shown by a few good-hearted men and women.

(Learn more about the success mantras of Champions. Sarath Kumar, top international motorcycle racer, and the first Indian to secure a podium finish at an international motorsports event, was a child laborer once. To Read his story Click Here)

He says, “We had a hair salon at Brigadier Road. The shop was called ‘Modern Hair Dressers’ and it was started in 1928 by my grandfather. My father was running the shop till his death. I was 7 then and I had two other younger siblings.

“The responsibility of bringing us up fell on my mother, who started working as a housemaid to support the family. For many years, we survived on one meal a day. I became so used to it that even today I don’t have my breakfast.”

In spite of the situation at home, Ramesh studied well and was among the top three rankers in class. He was a sportsman too. He played football in school and represented Karnataka in the junior nationals in 1500 metres athletic event.

At 13, he took up a part-time job as a newspaper delivery boy and earned Rs.60 per month. His mother took up small tailoring jobs and made some extra money. But that hardly changed the situation for the family.

He recalls an incident that happened when he was in class five. At that time, the family’s hair salon was being run by his uncle – father’s brother – who used to pay them about Rs.5 daily as their share of the income.
Bollywood actors and top industrialists travel in his cars when they are in Bangalore
“I was in class 5 and we were instructed to use fountain pens for the first time at school. Until then we were using pencils for writing. I went to our shop and told the person working there - an employee who had been appointed by my father – that I needed a pen.

He gave Rs.3.50 and I bought a Pilot pen with the money. In the evening, when I went to the shop my uncle was furious. He snatched the pen from me and said I don’t need such expensive pens and gave me a cheaper pen instead. That incident fuelled my ambition to succeed in life,” says Ramesh, who has the fortune of putting his own children in top schools.

He has two daughters and a son. The eldest daughter is studying in class ten at a well-known residential school in Kothagiri and he spends around Rs.1.5 lakh on her education per annum.

An important decision he took early in life was to learn the barbering skills of his father. He took charge of the family’s hair salon in 1990 and renamed it ‘Inner Space’. He became a hit with youngsters who started making a beeline to his shop and there were days when he had worked up to 3 am to cater to waiting customers.

Though he was not able to complete his PUC (Pre University Course), he managed to obtain a diploma in electronics later.

For couple of years, he worked as a marketing executive for a private company. But the turning point in his life came after he purchased a Maruti Omni in 1995 on a  loan. Based on the advice of a well-wisher, he decided to rent out his car.

His first client was Intel, which had a small office in Bangalore then. His business grew as Intel expanded its operations.

“Intel had just four employees when we started working with them. But they grew fast. We looked after their transport needs till 2000 by which time they had around 250 employees and 25 of our cars were on duty for them,” he recalls.
Ramesh always looks back on the path he has travelled
Meanwhile, Ramesh’s client list continued to grow. He entered the luxury car segment in 2004 when he bought his first Mercedes Benz. He now owns a fleet of 68 luxury cars. Bollywood actors, celebrities, and top industrialists travel in his cars when they are in Bangalore.

In 1997, he had opened a hair salon at Bowring Institute. Though he has closed the other shop due to lack of parking space and other issues that cropped up with Bangalore’s exponential growth in the last couple of decades, Ramesh has no such plans for the one at Bowring.

Ask him why he needs to continue cutting hair, and he shoots back, “Why not? How can I forget the job that has made me what I am?”

Nor has he forgotten those who helped him in his hard days. He makes special mention of two people: Ms. Nandini Ashok and Mr. Philip Louise.

Take a bow, Nandini and Philip. You have helped a worthy man! 

=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.11.15

இனி இது உங்கள் கையில்!


இனி இது உங்கள் கையில்!

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...

👉நேரம்
👉இறப்பு
👉வாடிக்கையாளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...

👉நகை
👉பணம்
👉சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...

👉புத்தி
👉கல்வி
👉நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...

👉உண்மை
👉கடமை
👉இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...

👉வில்லிலிருந்து அம்பு
👉வாயிலிருந்து சொல்
👉உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...

👉தாய்
👉தந்தை
👉இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது...

👉சொத்து
👉ஸ்திரி
👉உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...

👉தாய்
👉தந்தை
👉குரு

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை..

மது நாட்டுக்கு  வீட்டுக்கு கேடு, புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்று மக்களின் மீது அன்பை பொழியும் அரசு அவற்றை விற்கவும் செய்யும் அதை நீதிமன்றம் தட்டி கேட்காது.

குடிமக்கள் நன்கு குடித்துவிட்டு வண்டிகளை ஓட்டுவதாலும் வண்டிகளுக்கு குறுக்கே வந்து விழுவதாலும் விபத்துகள் நடக்கின்றன. குடித்தவர்களால் அவர்களுடன் வாழ்பவர்கள் படும் கஷ்டங்கள் சங்கடங்கள் சொல்லி மாளாது. இதை நீதிமன்றம் தட்டி கேட்காது.

ஹெல்மட் அணிவதால் மட்டுமே மக்கள் கஷ்டபடுவது போல் நீதிமன்றம் இதை மட்டும் கட்டாயப்படுத்தும்.

மக்கள் மீது அககறை காட்டும் நீதிமன்றமே உன்னால் டாஸ்க் மார்கை மூட ஆனையிட முடியுமா?

இக்கருத்தை வரவேற்போர் இப்பதிவை குறைந்தது 5 பேர்களிடமாவது பகிரவும்

அவ்வாறு செய்தால் விரைவில் தங்களுக்கு டாஸ்க் மார்கை மூட நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தி கிடைக்கும்

சும்மா கடவுள் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்

இனி உங்கள் கையில்

அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!