மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Diseases. Show all posts
Showing posts with label Diseases. Show all posts

10.9.20

தங்கத்திற்கும் கொரோனாவிற்கும் உள்ள தொடர்பு!!!!


தங்கத்திற்கும் கொரோனாவிற்கும் உள்ள தொடர்பு!!!!

🔔BREAKING NEWS*

*🔷🔶கோவையில் நகைப்பட்டறை தொழிலாளர்கள், நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் என  தங்கத்துடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா  தொற்று அதிகளவில் ஏற்பட்டு வருவதால்  தங்கம் மூலம் கொரோனா தொற்று பரவுகிறதா? என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.*

*🔷🔶கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.*

*🔷🔶ஊரடங்கு தளர்வுக்கு பின் பல்வேறு கம்பெனிகள், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுடன் பணிகளை துவங்கியது. நகைக்கடைகள், நகைப்பட்டறைகளை சேர்ந்தவர்களும் தங்களின் பணிகளை துவங்கினர்.*

*🔷🔶இந்நிலையில், நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.*

*🔷🔶இதில், கோவையில் செயல்பட்டும் வரும் தங்க நகைக்கடை ஒன்றில் 58 பேர், மற்றொரு கடையில் 48 பேர், துடியலூர் அருகே செயல்பட்டு வரும் நகை தயாரிப்பு நிறுவனத்தில் உரிமையாளர் உள்பட 25க்கும் அதிகமானவர்கள், செல்வபுரத்தில் தங்க நகைப்பட்டறைகளில் பணியாற்றி வந்த 120க்கும் மேற்பட்டவர்களுக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.*

*🔷🔶தொடர்ந்து தங்க நகைப்பட்டறைகள், நகைக் கடைகள் நிறைந்துள்ள செல்வபுரம், தெலுங்குவீதி, பெரியகடை வீதி, ராஜவீதி உள்பட பகுதிகளில் தினமும் 50 முதல் 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.*

*🔷🔶கோவையில் பிரபலமான நகைக்கடை உரிமையாளர் ஒருவர்  கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். சமீப காலமாக கோவையில் நகைக்கடைகள், நகைப்பட்டறைகளில் வேலை பார்ப்பவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு அதிகளவில் கொரோனா  பரவி வருகிறது.*

*🔷🔶இதனால் தங்க நகைகள் மூலம் கொரோனா பரவுகிறதோ என்ற சந்தேகம் சுகாதாரத்துறைக்கு எழுந்துள்ளது.  இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-*

*🔷🔶தங்கம் உள்ளிட்ட உலோகங்களில் 10 நாட்கள் வரை கொரோனா கிருமி உயிருடன் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.*

*🔷🔶இதனால் நகைக்கடைகள், பட்டறைகளில் நகையை அனைவரும் தொடுவதன் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவ வாய்ப்புள்ளது.*

*🔷🔶தவிர பட்டறைகளில் நெருக்கமான இடங்களில் அதிகளவிலானோர் பணிபுரிவதால் நோய்த்தொற்று ஏற்படும் இடங்களாக மாறியுள்ளன.*

*🔷🔶திருமணங்கள் உள்பட விசேஷங்களுக்கு நகைகள், துணிகள் எடுப்பதற்காக அருகிலுள்ள திருப்பூர், ஈரோடு உள்பட மாவட்டங்களில் இருந்தும் கோவைக்கு அதிகளவில் வருகின்றனர். இதன் முலம் அதிகளவு பரவும் வாய்ப்புள்ளது.*

*🔷🔶இதனை தவிர்க்க நகை, துணிக்கடைகள் உள்பட எந்த ஒரு பெரிய கடைகளாக இருந்தாலும் பொதுமக்களை அரை மணி நேரத்துக்கு மேல் இருக்க அனுமதிக்கக்கூடாது. பொது மக்களை கட்டாயம் கிருமி நாசினி மூலம் கைகளை தூய்மைப்படுத்திய பிறகே அனுமதிக்க வேண்டும்.*

*🔷🔶2 மணி நேரத்துக்கு ஒருமுறை கடை முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். முடிந்த வரையில் கடைகளில் அதிகளவில் ஆட்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.*

*🔷🔶பொதுமக்களும் அவசியமின்றி கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே செல்லலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.*
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.7.20

கொரோனா வைரஸை ஒழிக்க வீட்டு மருந்து!

கொரோனா வைரஸை ஒழிக்க வீட்டு மருந்து!

கோவை E S I  மருத்துவமனையில் 141/141 குணம் அடைந்து வீடு திரும்பினது எப்படி?

           *கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள்.

 இதுபோல்  ஒருநாளைக்கு  2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது.

நாட்டு மருந்து கடைகள் எல்லாம் மூடி இருக்கே,  கபசுரம் கிடைக்கலையே,? நிலவேம்பு கிடைக்கலையேன்னு யாரும் கவலைப்பட வேண்டாம்.!!!

 இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்க்ஷன் உருவாகும்.

 அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு அழிப்பது என மருத்துவ உலகம் விழி  பிதுங்கி நிற்கிறது.

அத்தகைய இந்த கொரோனா மாயாவி  போல் எத்தனை  புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும்  மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை.

மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக  சேர்த்தால் தான் முழுமையான  பலன் கிடைக்கும்....*

         *இஞ்சி, எலுமிச்சை, கருப்பு மிளகு எல்லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும்.

 மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது  இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்....*

 உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்...*

        *தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டியும் ஒரு  மருத்துவமனைக்கு சமானம்.இந்த அஞ்சறைப் பெட்டியை அஞ்சறைப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை  தீர்மானித்தவர் தமிழ் மக்களின் ஆதிமூல முதல் குரு, சித்தர்களின் தலைவர் அகத்தியர்!!!அப்படி அவர் தீர்மானித்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பரிய உணவை கைவிட்டதாலும் மேலும் எந்தெந்த பொருளை எதோடு  சேர்த்து உண்டால் என்ன பலன்? என்பது குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது...*

        *இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள்.

உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் எல்லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி  கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்....*

      *இந்த பதிவை நீங்க ஷேர் செய்யலாம் இல்லை காப்பி பேஸ்ட் செய்யலாம்.என்ன வேணாலும் பண்ணலாம். இந்த செய்தி அணைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறைந்த பட்சம் சென்னையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும். காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு....*

     *இந்த பதிவை எவ்ளோ facebook, வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் போஸ்ட் செய்ய முடியுமோ செய்யுங்கள்...*

     *இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த  அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அனைத்து உலக நாடுகளுக்கும் போய்  சேர்ந்தால் அதன்மூலம் 2, 3 வாரங்களில் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடலாம்....*

       வாழ்க வையகம் 💐 அனைவரும் வாழ்க வளமுடன் 💐💐
-----------------------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.7.20

காதில் நுழைந்த பூச்சியும் கொரோனாவும்!!!!




காதில் நுழைந்த பூச்சியும் கொரோனாவும்!!!!

ஒரு பெரிய நாட்டின் மன்னன் தனது நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான் .

ஒரு நாள் இரவு... தொலை தேசத்தில் ஒரு ராணுவப் பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது .

திடுக்கிட்டு எழுந்தான் .

காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள் 

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை

சில வீரர்களை அழைத்துக்கொண்டு தலைநகரத்திற்குத் திரும்பினான் மன்னன் .

ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் .

அவரும் எவ்வளவோ பாடுபட்டார் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன 

மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள். 

எதற்கும் பலன் இல்லை .

மன்னனின் காதில் உள்ள பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள் ,யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை .

மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததால்,அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை 

உணவு சாப்பிடுவது  குறைந்து மன்னன் தன் பொலிவு இழந்தான் .

ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன், இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல் காணப்பட்டான் 

எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான் .

தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதாக உணர்ந்தான் .

பதினான்கே வயதான அவனுடைய மூத்த மகனுக்கு அவசர கதியில் வாள்பயிற்சி, குதிரையேற்றம் எல்லாம் கற்பிக்கப்பட்டது .

இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன .

பட்டத்து ராணி அந்தத் துறவியைப் பார்க்க சென்று அவருடைய காலில் விழுந்து கதறினாள்.

தன் கணவனை எப்படியாவது  காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினாள் 

அரண்மனைக்கு வந்து சேர்ந்த துறவி மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார் .

பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார். 

அன்று மாலை அரசனையும் அரசியையும் தனியாகச் சந்தித்துப் பேசினார் 

"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே!

நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது .

இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும் .

இன்றே என் சீடர்களை அனுப்பி அந்த மூலிகையை கொண்டு வர செய்கிறேன்,அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்." என்றார்.

அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லி,தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி 

அவர்களுக்குக் குதிரையேற்றம் தெரியுமாதலால் அவர்கள் பயணத்திற்குச் சிறந்த அரபிக் குதிரைகளைக் கொடுத்து அனுப்பினான் மன்னன் .

கூடவே, அவர்கள் பாதுகாப்பிற்காகச் சில வாளேந்திய வீரர்களையும் அனுப்பி வைத்தான் .

மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள். 

அது 'ராஜ மூலிகை' என்பதால் அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார் .

மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் ,பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது 

அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது .

மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி .

துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன். 

சில நாட்கள் அரண்மனையில் தங்கியிருந்தார் துறவி 

மன்னன்இப்போது நிம்மதியாகத் தூங்கினான் .

நன்றாக உண்டான்,பழைய பொலிவு திரும்பி விட்டது 

துறவி விடை பெற்றுக்கொண்டார் .

அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன் 

அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் ,துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான் 

""குருதேவா...!!! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...!!!''

மற்றொரு சீடனின் கேள்வி வேறு விதமாக இருந்தது .

"மூலிகையைவிட அந்தப் பூச்சி இன்னும் அற்புதமாகத் தோன்றுகிறது .

ஒரு மனிதனின் காதிற்குள் புகுந்து அத்தனை நாள் உயிருடன் இருந்து அவனைப் பாடாய்ப் படுத்தி வைத்தது என்றால் ,அது மிகவும் விசேஷமான பூச்சியாக இருக்க வேண்டும்.. 

அதைப் பற்றிச் சொல்லுங்களேன்  என்றான்

'துறவி புன்னகை பூத்தார் !

"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?

மன்னனின் செவிக்குள் .

அதுதான் இல்லை 

மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம் .

போன சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும் ,இல்லை வெளியே வந்திருக்கும் 

அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது .

அது மன்னனின் மனதில் அது  குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதிந்துவிட்டது 

எனவே அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான் 

"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே...???''

மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது அப்பனே....!!! 

பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக்  கொண்டிருந்தான் .

அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன் .

அந்த மூலிகை நம் ஊரில் சாதாரணமாக விளையும் திருநீற்று பச்சிலைதான் .

ஆனால் அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன் 

பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன் .

மன்னன் நம்பி விட்டான் 

அவன் நோயும் தீர்ந்தது.

சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.

இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன. 

காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டாலும், மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது

பூச்சி காதில் இல்லை ,மனதில் இருக்கிறது 

.''இது நகைச்சுவை அல்ல; 

இது வாழ்வியல் கருத்தை நச்சென்று சொல்லும்  விளக்கம் .

காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்ட மன்னன் போல

இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு,நம்மில் பலபேர் தவித்துக் கொண்டிருக்கிறோம்!

("கொரோனா, இல்லவே யில்லை", என்று சொல்லவில்லை. அது கொடுக்கும் தொல்லையை விட, 

"அதைப் பற்றி ஏற்படுத்தப்  பட்டிருக்கிற பயமே", அதிக தொல்லை கொடுக்கிது!

அவரவர்கள் " கொரோனா தொற்றை" -   "கொரோனாவை" அல்ல!  "தொற்றை"- கட்டுப்படுத்துவதிலேயே "போட்டி போட்டுக் கொண்டு" - பந்தயத்தில் ஓடுவது போல், ஓடிக்கொண் டிருக்கிறார்கள்! ஆச்சர்யமாக இருக் கிறது!

இத்தனைக்கும் - இது , "கொல்லும் நோய் அல்ல"! இதனால் பாதிக்கப் பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் சாதாரண சிகிச்சையில் குணம் அடைகிறார்கள். 15 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப் படுகிறது, மற்றவர்களுக்கு தான் பிளாஸ்மா தெரபி முதலியவை செய்யவேண்டி வரும்!", என்றெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது!

"தொற்றை கண்டுபிடிப்பதில் காட்டும் .முயற்சியை" விட

"எல்லோருக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சி", அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா?

Immunity to be increased - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

ஏழு கோடி பேருக்கு, பதினாலு கோடி மாஸ்க் கொடுப்பதை விட,

ஏழு கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளும் கப சுர சூரணமும் கொடுப்பது சிறந்தது!

மாஸ்க் கொடுப்து - நோய்க்கு பயப்படுவது - பயந்துகொண்டே இருக்க வேண்டியது தான்!

நோய் எதிர்ப்பு மருந்தைக் கொடுப்பது - நோயை (நம்மிடம்  வருவதற்கு) - அஞ்சும்படி செய்வது!

இதில் எது சரி? நாம் , கொரோனாவிற்கு அஞ்சிக் கொண்டே யிருப்பதா?

அல்லது

கொரோனாவை, நம்மிடம் வருவதற்கு, அஞ்சும்படி செய்வதா?
----------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.6.20

நீங்களும் நானும் சிறுநீரகக் கல்லும்!!!!!


நீங்களும் நானும் சிறுநீரகக் கல்லும்!!!!!

சிறுநீரகக்_கல்_ஏற்படுத்தும் #அறிகுறிகள் #தெரிந்து_கொள்வோம்❓

♦சிறுநீரகக் கல்

சிறுநீரகக் கல், சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர் குழாயில் உருவாகி நகரும் வரை எந்த அறிகுறியினையும் ஏற்படுத்தாது.

♦சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள்❓

* விலா எலும்பின் கீழ், பின்புறம், பக்கவாட்டில் வலி ஏற்படும்.
* இந்த வலி அடி வயிறு தொடைமடிப்பு வரை பரவும்.
* சிறுநீர் வெளியேறும் பொழுது வலி ஏற்படும்.
* சிவப்பு, ப்ரஷன் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.
* நாற்றமுடைய சிறுநீர் வெளியாகும்.
* வயிற்றுப் பிரட்டல், வாந்தி இருக்கும்.
* அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.
* ஜுரம் இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே மருத்துவரை அணுக வேண்டும்.

♦பொதுவில் சிறுநீரக கல் உருவாக பல காரணங்கள் உண்டு.
கால்ஷியம்,
ஆக்ஸலேட்,
யூரிக் ஆசிட்
போன்றவைகள் காரணமாகின்றன.

* பரம்பரை
* போதிய அளவு தண்ணீர் குடிக்காமை
* சிலவகை உணவு
* அதிக எடை
* செரிமான கோளாறுகள்
* சில வகை மருந்துகள் இவற்றால் சிறுநீரகக்கல் ஏற்படுகின்றது. ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் இவைகளால் சிறுநீரகக் கல் கண்டறியப்படுகின்றது. அளவுக் கேற்றபடி சிகிச்சை முறை கையாளப்படுகின்றது.

*சிறுநீரககல் வராமல் தடுக்க *
* தினம் 2 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.
* அசைவ உணவையும், உப்பையும் அளவோடு உண்ணுங்கள்.
#சிறுநீரக_கல்லை_வெளியேற்ற, #வீட்டிலேயே_மருந்து_உள்ளது❗❓

⭕ சிறுநீரக வீக்கம், கல் பிரச்னைக்கு❓
👉தேவையான பொருட்கள்❔❔
சிறியாநங்கை – 25 கிராம்
வெள்ளருகு – 15 கிராம்
ஆடுதின்னாபாளை – 25 கிராம்
அவுரி – 25 கிராம்
மஞ்சள் – 25 கிராம்
நீர்முள்ளி – 50 கிராம்
நெருஞ்சில் – 50 கிராம்
சாரணைவேர் – 50 கிராம்
சிறுபீளை – 50 கிராம்
ஆவாரம்பூ – 50 கிராம்
கீழாநெல்லி – 50 கிராம்
அருகம்புல் – 50 கிராம்

     ஆகியவற்றை ஒன்று கலந்து சூரணம் செய்துகொள்ளவும். மேற்படி சூரணத்தில் 2 கிராம் அளவு அதிகாலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர, சிறுநீரக வீக்கம், நீரடைப்பு, கல்லடைப்பு ஆகியன தீரும்.

     தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின் சீரான நிலையில் வரும். சிறுநீரில் புரதம் வெளியேறுவது தடுக்கப்படும்.

⭕ சிறு நீரக கல் குறைக்க❓❗
இஞ்சி – நெல்லிக்காய் ஜூஸ்
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும்.
நெல்லிக்காய், இஞ்சியுடன்
அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.பிறகு, இதில்
இரண்டு டீஸ்பூன் சர்க்கரை,
ஒரு டீஸ்பூன் தேன்,
ஒரு சிட்டிகை உப்பு,
கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர்
சேர்த்து அரைக்கவும்.
இதை வடிகட்டி, தேவைப்பட்டால்
குளிரவைத்துப் பரிமாறவும்.
இந்த ஜூஸை
தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும். இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால்,
சிறுநீரகக் கல் கரையும்.

⭕ சிறுநீரக கல் கறைய
👉தேவையான பொருட்கள்❓
கருஞ்சீரகம்.
தேன்.

👉செய்முறை❔
கருஞ்சீரகத்தை நன்கு இடித்து தூளாக்கி, தேனை சோ்த்து அதனுடன் வெந்நீர் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் கறைந்து சிறுநீர் அடைப்பு குறையும்.

⭕ சிறு நீரக கல் கரைய வேறு முறை❓
வெள்ளரி விதை 5 கிராம்,
நெருஞ்சில் முள் 5 கிராம்,
கொள்ளு (காணம்) 5 கிராம்,
இவைகளை இடித்து 500 மில்லி நீரில் போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு தினம் காலை, மாலை வெறும் வயிற்றில் குடித்து வர கல் கரையும்.

⭕ சிறுநீர் கழிக்கும்போது கடுக்கிறதா..❓

உடனே நீங்க எளிய வழி❗
வெள்ளை முள்ளங்கியும் வெல்லமும் போதும்❗நீண்ட நேரப்பயணம், கடுமையான அலைச்சல், கண் விழிப்பு, உடலில் அதிகச் சூடு இவற்றால் சிறுநீர் கழிக்கையில் கடுக்கும்.

அடிவயிற்றில், சிறுநீர்ப் பாதையில் கடுத்துக் கொண்டேயிருக்கும்.
அவ்வாறு, இருக்கும்போது வெள்ளை முள்ளங்கியை நன்றாக அலசி, சிறுசிறு துண்டுகளாக்கி, வெல்லத்தோடு அத்துண்டுகளையும் சேர்த்து பச்சையாக மென்று சாப்பிட வேண்டும். சுவையாகவும் இருக்கும்.

சிறிதாக இருந்தால் ஒரு முள்ளங்கி, பெரியதாக இருந்தால் அரை முள்ளங்கி சாப்பிட்டால் போதும்.
காலை, மாலை இருவேளை சாப்பிட்டால், சாப்பிட்ட ½ மணி நேரத்தில் கடுப்பு அகலும்.

மற்றபடி ஆங்கில மருந்துகளைச் சாப்பிட்டு பக்கவிளைவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
வெள்ளரிப் பிஞ்சு கிடைத்தால் மதிய நேரத்தில் வெள்ளரிப் பிஞ்சை மோரில் அல்லது தயிரில் கலந்து சாப்பிடுவது சிறு நீர்ப்பாதையை நலமாக வைக்கும்;
சிறு நீர்க் கோளாறு வராமல் காக்கும்.
வாரம் இருமுறை வாழைத் தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் சிறுநீரகக் கல் நீங்கும்;
கொழுப்பு குறையும் எடுத்ததற்கெல்லாம் மாத்திரை சாப்பிட்டாதீர்கள்.

💚 #கை_வைத்தியங்கள்❓❓❓

⭐ சிறுபீளை இலைச்சாற்றை 30 மி.லி. காலை, மாலை அருந்தலாம்.
⭐ கைப்பிடி அளவு நெருஞ்சில் காய், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை இரண்டையும் இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
⭐அரை ஸ்பூன் சீரகப் பொடியை இளநீரில் கலந்து உண்ணலாம்.
⭐வெள்ளரி விதை, சோம்பு, இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அவற்றை அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.
⭐யானை நெருஞ்சில் இலைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, சர்க்கரை கலந்து உண்ணலாம்.
⭐அரைக் கைப்பிடி அளவு எலுமிச்சை, துளசியை எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
⭐ஒரு பங்கு கொள்ளுடன் 10 பங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி நீரை வடித்துக் குடிக்கலாம்.
ஓமம், மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் சேர்த்துப் பிசைந்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.
⭐மாவிலங்கபட்டைப் பொடி அரை ஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
⭐அருகம்புல் கைப்பிடி அளவுடன், 10 மிளகு எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து அருந்தலாம்.
கால் டம்ளர் முள்ளங்கிச் சாறில் அரை ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நீரில் கலந்து பருகலாம்.
⭐ஒரு கிராம் முருங்கை வேர்ப்பட்டைப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
⭐மாதுளம் விதைப்பொடி அரை ஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து உண்ணலாம்.
⭐ஒரு ஸ்பூன் துளசி இலைச் சாறில் தேன் கலந்து உண்ணலாம்.
⭐அரைக் கைப்பிடி நன்னாரி வேரில் நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து அதில் கால் ஸ்பூன் கடுக்காய்த் தூள் சேர்த்து உண்ணலாம்.
⭐கால் ஸ்பூன் வெந்தயப் பொடியில் பன்னீர் சேர்த்து அருந்தலாம்.
⭐சுரைக்கொடியை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
⭐ரோஜாப்பூ இதழ், நீர்முள்ளி அரைக்கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
⏩ தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
⏩ கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும்.
⏩ பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.
⏩ ரணகள்ளி,இலை தினம் ஒன்று தின்றால் சிறுநீரக கல் அடைப்பு வராது
⏩அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
⏩வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி., அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.
⏩வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
⏩வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து.
⏩பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
⏩புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
⏩கோவைகாய்த்தண்டுச் சாறை தினமும் காலை ஒரு அவுன்ஸ் வெறும் வயிற்றில் குடித்து வர சிருநீரக கல் கரையும்....
⏩ 40 கிராம்  தொட்டாசிணுங்கி வேரை சிதைத்து இருநூற்றம்பது  மில்லி  நீரிலிட்டு  நூறு மில்லியாக  சண்ட காய்ச்சி  வடிகட்டி  பதினைந்து மில்லி  அளவாக நாள்தோறும்  மூன்று வேளை  குடித்து வர  சிறுநீரக கல் கரையும் .
⏩ பொங்கல் அன்று வீட்டு நிலையில் வைக்கும் கூரைப்பூ ( கண்ணுபீலைபூ) செடியை வேருடன் பிடுங்கி புது மண் சட்டியில் அப்படியே வேகவைத்து அந்த தண்ணீரை மட்டும் மூன்று வேளை  குடித்தவுடன் வலி குறையும் , சில நாட்களில் நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது சில துளி ரத்தத்தோடு கல் வெளியேறுவதை நீங்கள் உணர்வீர்கள் .
⏩ தினசரி காலை வெறும்வயிற்றில்
பீன்ஸ் காயை250 கிராம் எடுத்து விதை நீக்கி 3/4 லிட்டர் நீர் விட்டு நன்குஅவித்து மிக்சியில்அடித்து அப்படியே குடித்துவிட்டு மேலும்
நீர்அருந்தி வர சிறுநீரக கல் கரையும்.

⭕ சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்❓❗
▶காரட், பாகற்காய், இளநீர்◀
இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன.
 இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது.
 கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

▶வாழைப்பழம், எலுமிச்சை◀
இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன.
இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

▶அன்னாச்சி பழம்◀
இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன.
இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்:
கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை.

▶நார்ச்சத்து உள்ள உணவுகள்.◀
 பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன.
 பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
கற்கள் வருவதையும் தடுக்கும்.

▶உப்பு
உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------
படித்துத் தெரிந்து கொண்டது.
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.3.20

சீனாவின் நோய்களுக்கான காரணம்!


சீனாவின் நோய்களுக்கான காரணம்!

சீனாவில் மட்டும் குறிப்பிட்ட நோய்கள் ஏன் பரவுகின்றன, அக்காலத்தில் இருந்தே ஆசியாவின் நோயாளி என அந்நாடு ஏன் சொல்லபட்டது எனபதற்கான காரணங்கள் சில உண்டு அவற்றில் முக்கியமானது பசு

சீனர்கள் உணவியலிலும் வாழ்வியலிலும் பசு மாட்டுக்கு முக்கியத்துவம் கிடையாது. பாலோ நெய்யோ தயிரோ அவர்கள் அறியாதவை

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பன்றி, கோழி, வாத்து, நண்டு இன்னும் பல நடப்பன ஊர்வன பறப்பன, மாடுகள் மிக குறைவு, அதன் பயன்பாடும் பாலும் மிக மிக அரிதானவை, 4 பசு கொடுத்தாலும் வெட்டி சூப் வைப்பார்களே தவிர பால் கறக்கவோ தயிர் கடையவோ தெரியாது

அவர்கள் உணவே வேறு, எலும்புக்கு வலுவூட்டுமோ தவிர வேறு ஒன்றும் செய்யாது. மாமிச சூப் சில கீரைகள், மீன்கள் மற்றும் கிடைப்பவை எல்லாம் எனும் ஒருமாதிரி சூப் சாப்பாடு அது

அதில் பாதியோ மீதியோ கூட வெந்திருக்காது, மசாலா என்பதோ தேங்காய் என்பதோ சேராது

இதே உணவு பாரம்பரியமே சீனா, ஜப்பான் , கொரியா, ஹாங்காங் என பல அந்த இனமக்கள் வாழும் நாட்டில் உண்டு.

பன்றியும் நண்டும் வாத்தும்  ஆற்று மீனுமே பிரதானம் , கோழி கூட இப்பொழுது வந்ததே

ஆம் உலகம் அறுதியிட்டு சொல்கின்றது பசுமாடு புழங்கும் இடங்களிலும், மாட்டுசாணம் பூசப்படும் இடங்களிலும் தொற்றுநோய் வாய்ப்புகள் குறைவு

நெய் பிரதான நோய் எதிர்ப்பு உணவு இதைத்தான் "நெய் இல்லா உண்டிபாழ்" என சொன்னது தமிழகம்

வடக்கே சப்பாத்தியில் நெய் ஊற்றாமல் உண்ணக்கூடாது என்பது தத்துவம்

மேற்காசியாவில் நெய்பயன்பாடு இல்லை எனினும் தயிரும் வெண்ணையும் பிரதான உணவுகள்

ஒருமனிதன் வெண்ணெய் உண்பது நல்லது என்பது மருத்துவ உலகம் சொல்லும் உண்மை, இந்துக்கள் கண்ணன் முதல் ஆஞ்சநேயர் வரை வெண்ணைய் படைத்து வைத்து உண்ணும் தத்துவம் இதுதான்

மேற்கத்தியவர்கள் காலை உணவில் கட்டாயம் சிலதுண்டு வெண்ணெய் அல்லது பாலாடை இருக்கும்

ஆம் பசுவும் அது கொடுக்கும் பொருளும் சாதாரணம் அல்ல, அவை நோய் முதல் பல விஷயங்களை விரட்டி ஆரோக்கியம் கொடுக்கும்

அதை அணு அணுவாக உணர்ந்த தேசமிது, அதனால்தான் பால் தயிர் நெய் என அதன் பயன்பாடு ஆலயம் முதல் எல்லா இடத்திலும் அதிகம், மருந்தில்லா நோய்களும் பரவாது

அக்காலத்தில் வீட்டுமுற்றத்தில் சாணம் தெளிக்கும் தத்துவமே கிருமி நாசினி என்பதாகும், சாணத்தில் ஹோமியமும் கலந்திருந்தது

பால் அருந்துவது இந்து பண்பாடு, பிறப்பு முதல் இறப்பு வரை பாலே பிரதானம். பாலும் பழமும் என்பதெல்லாம் இந்திய அடையாளத்தில் ஒன்று

அதை கடைசிவரை மாற்றமுடியாமல் வெள்ளையன் பாலில் டீ அல்லது காபி தயாரித்து தன் வியாபாரத்தை நடத்தினான் , பாலில் டீ கலக்கும் காபி கலக்கும் பாணி இந்தியாவிலே பிரதானம்

சும்மா சங்கி, ஹோமியம், சாணம் என சொல்பவன் சொல்லிகொண்டிருப்பான்,

ஆனால் சீனாவில் மட்டும் ஏன் வித வித நோய் உருவாகின்றது என்பதற்கும், சீன இனங்கள் ஏன் அடிக்கடி சிக்குகின்றது என்பதற்கும் உலகம் கண்ட விஷயங்களில் ஒன்று அவர்களிடம் பசுமாட்டு வளர்ப்பும் பால் பொருட்கள் உபயோகமும் அதிகம் இல்லை என்பதே..

பசுவினை அர்த்தமில்லாமல் இத்தேசம் கொண்டாடவில்லை, கோமாதா என கொண்டாடி கண்ணன் அருகில் நிறுத்தியதிலும், அவன் வெண்ணெய் தின்றான் எனச் சொன்னதிலும் அர்த்தமில்லாமல் இல்லை.

கண்ணன் மாடுமேய்ப்பவனாக வந்ததிலும் தத்துவம் இல்லமால் இல்லை..

சிவனுக்கு வாகனமாக காளையினை வைத்ததிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை

வழிபாடு முதல் வீடுவரை நெய்யும் தயிரும் பாலும் புழங்க சொன்னதிலும், ஒருபிடி சாணத்தை பிள்ளையாராக வாசலில் வைக்க சொன்னதிலும் விஞ்ஞானமும் ஆரோக்கியமும் இல்லாமல் இல்லை

அன்றே மிகப் பெரும் உணவு பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு முறையினை பசுவில் இருப்பதைச் சொல்லி அதை தெய்வநிலைக்கு வைத்திருந்த இந்துபாரம்பரியம் ஆச்சரியமும் அதிசயமான அறிவும் கொண்டதாகும்...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...
---------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.11.19

நமக்கென்று உள்ள மருந்துகள்!!!!


நமக்கென்று உள்ள மருந்துகள்!!!!

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!
----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.11.19

மருந்து செலவை நினைத்து இனி கவலை வேண்டாம்*


மருந்து செலவை நினைத்து இனி கவலை வேண்டாம்*

மத்திய அரசு மக்கள் மருந்தகத்தில் (www.makkalmarundhagam.com)
 * 30% முதல் 90% வரை விலை குறைவாக கிடைக்கிறது..
*Pradhan mantri bhartiya Jan aushadhi Kendra* என்ற பெயரில் இந்தத் திட்டத்தை *மத்திய அரசு* எடுத்துவந்த உள்ளது. எனவே நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மற்றும் நமது வாட்ஸ்அப் குரூப், பேஸ்புக் போன்ற
சமூக வலைதளங்களிலும் இதை ஷேர் செய்தால் பலருக்கு பெரும்

நன்மையாக அமையும். நிறையப்பேர் உயிர்காக்கும்  மருந்து வாங்கி சாப்பிட வசதி இல்லாமல்  தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு  இந்த செய்தி  சென்றடைந்தால் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தது போல்
இருக்கும்.

சென்னையில் மக்கள் மருந்தகம்  உள்ள முகவரிகள்:-

மாங்காடு:-
 மக்கள் மருந்தகம் ,     RC மருத்துவ வளாகத்தில்
No 76, குன்றத்தூர் மெயின் ரோடு
 மாங்காடு , சென்னை-122.
Mobile 9150202721

நங்கநல்லூர்:-
மக்கள் மருந்தகம்
No 1/55, குபேர முனுசாமி தெரு, உள்ளகரம், நங்கநல்லூர், சென்னை-56
Mobile 6369844016.

K.K.நகர்:-
மக்கள் மருந்தகம்
No 20, 1 வது தெரு, 1 வது செக்ட்டார்,
கே.கே நகர்,சென்னை-78
Mobile 9025384722.

மந்தைவெளி:-
மக்கள் மருந்தகம்,
No 9/3, மாரி செட்டி தெரு ,
மந்தைவெளி ,சென்னை-28
Mobile 9884441067.

அரும்பாக்கம் :-
மக்கள் மருந்தகம் ,
16, லட்சுமி  அம்மாள் தெரு, அய்யாவு காலனி, அரும்பாக்கம், சென்னை-106.
Mobile 90257 03291, 94448 14818.

புரசைவாக்கம் :-
மக்கள் மருந்தகம்,
No 111, வெள்ளாள தெரு ,
புரசைவாக்கம் ,சென்னை-84.
Mobile 99620 159999.

கெருகம்பாக்கம் :-
மக்கள் மருந்தகம்
1, குன்றத்தூர் மெயின் ரோடு, பெரியபனணிச்செரி , சென்னை-128.
Mobile 9884000959,7358425577.

சேலையூர்:-
மக்கள் மருந்தகம்,
No 52/2 ,A1 ஸ்கூல் ரோடு,
சேலையூர் சென்னை-73.
Mobile 63815 65336.

பூந்தமல்லி:-
மக்கள் மருந்தகம்,
 No 4/149,ஆஞ்சநேயர் கோவில் தெரு,
 பூந்தமல்லி, சென்னை-56.
Mobile 9884076205

இந்த மருந்து கடைகள் பற்றி சில குறிப்புகள்:

* வெளி கடைகளில் சுமார் ரூபாய் 1000 க்கு வாங்கும் மருந்து இங்கு சுமார் 300 ரூபாய்க்குள் கிடைக்கும்.
*விலை குறைவு என்றவுடன் நமக்கு தரத்தைப் பற்றி கேள்வி எழும்பும்.
Nable test போன்ற பரிசோதனைக்கு உட்பட்டு தான் மருந்து வருகிறது.
*தயாரிப்பு நிறுவனம் பெயரில்லாமல் ஜெனரிக் பெயரில் மருந்துகள் கிடைக்கும்.
*ஜெனரிக் என்றால் என்ன என்று நமக்கு சந்தேகம் எழும்பும்.
 ஜெனரிக் என்பது மருந்தின் கலவையின் பெயராகும். உதாரணமாக Dolo 650, crocin 650, calpol 650 போன்ற பல தயாரிப்பு நிறுவனங்கள் பெயர் உள்ளது இவர்கள் அனைவரும் பாராசிட்டமால் (paracetamol) 650 என்ற மருந்தை தான்
தயார் செய்கிறார்கள். ஒவ்வொரு கம்பெனியின் பேக்கிங், விலையும் வித்தியாசப்படும் ஆனால் மருந்து கலவை அதேதான்.
பெரும்பாலான மருத்துவர்களும் மருந்துகளின் கலவை பெயர் எழுதாமல்  தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை தான் எழுதுவார்கள். இங்கு paracetamol 650 என்ற கலவையின் பெயரில் மருந்து கிடைக்கும்.

*Dolo 650 crocin 650 போன்றவை 15 மாத்திரை சுமார் 30 ரூபாய் இருக்கும். அதுவே மக்கள் மருந்தகத்தில் paracetamol 650 ரூபாய் 9 க்கு கிடைக்கும்.

*இதுபோன்று அனைத்து மருந்துகளும் விலை குறைவாக கிடைக்கும்.
இங்கு மருந்து 30% முதல் 90% குறைவான விலையில் கிடைக்கும் இது ஒரு மத்திய அரசாங்க நிறுவனம் Rs.300  மிதிப்புள்ள மருந்து Rs.79ருபாய் மட்டுமே அனைவரும் பயன் பெறுங்கள் மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்#

மக்கள் மருந்தகம்
இங்கு தரமான ஆங்கில மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கும்.
(எ.கா) மற்ற மெடிக்கல்களில் ரூ.1000க்கு வாங்கும் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் ரூ.300 மட்டுமே  வரும்.
சர்க்கரை,இரத்தஅழுத்ததம்,இருதயம்,கொழுப்பு, அலர்ஜி,போன்ற நோய்களுக்கு அதிக அளவில் மருந்துகள் உள்ளன.

மக்களை அழிக்கும் பொருட்கள் ( மதுபானம்)மலிவான விலையில் கிடைக்கின்றது.ஆனால்  உயிரை காக்கும் மருந்துகள் விலை அதிகமாக உள்ளது. இதை மாற்றவே  மக்கள் மருந்தகங்கள்.
அனைவருக்கும் பயன்படுமாறு இப்பதிவை உங்கள் மற்ற நண்பர்களுக்கும் SHARE செய்யுமாரும் கேட்டுக்கொள்கிறோம் 🙏

Now we opened our GENERIC SHOP IN Chennai -
 சென்னை மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு  JAN AUSHADHI MEDICAL STORE Generic medical shop துவங்கியுள்ளது.அனைத்து வகையான ஆங்கில மருந்துகளும்
மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும்.
உதாரணமாக:
இருதய நோயளிகளுக்கு: மாதம்:ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு நம் மத்திய அரசு மருந்தகத்தில் ரூ.150 மட்டுமே ஆகும் ..
மிகவும் முக்கியம்..... அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக 👩⚕👩⚕ டாக்டர்கள் மருந்து
சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக
விலை மாத்திரைகளையே(அது குறைவாக கிடைக்கும் என்ற போதும்)
அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.......
(1) "1MG Health app for India "என்பதை உங்கள் 📱மொபைலில் டவுன்லோடு செய்யவும்.
(2) மருந்து பெயரை தேடவும்.......
(3) பயன்படுத்தும் மருந்து தேடவும். (உதாரணம்..லிரிகா 75 மில்லி கிராம்)(பிபிசர் கம்பெனி).....
(4) கம்பெனி பெயர்,மருந்து பெயர்,விலை,கலந்துள்ள வேதிப் பொருள்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.
(5) Substitute என்பதை க்ளீக் செய்யவும்....
(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்..... (உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59
ரூபாய்க்கு தருகிறது.
ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே.......
Ex.
1.GLYCOMET GP 1.-10 மாத்திரை விலை Rs.7
2.GLYCOMET GP 1.-10 மாத்திரை விலை Rs.12
3.GEMER 2.  -10 மாத்திரை விலை Rs.12
4.ATORVA 10.  -10 மாத்திரை விலை Rs.6
5.ATORVA 20.  -10 மாத்திரை விலை Rs.10
6.GLYCINORM M80- 15 மாத்திரை விலை Rs.32
7.GULCORED FORT -10 மாத்திரை விலை Rs.11
8.PAN D.  -10 மாத்திரை விலை Rs.19
9.SHELVAL-10 மாத்திரை விலை Rs. 4
10.ATORLIP F-15 மாத்திரை விலை Rs.30
    அன்புக்கு விலை இல்லை.......மற்ற குருப்பில் பதிவிடவும்....... மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்..

*இனைய முகவரி
(www.makkalmarundhagam.com)
-------------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.10.19

நம் சேமிப்பை இழக்காமல் சிகிச்சை பெற சிறந்த இடம்!!!!!


நம் சேமிப்பை இழக்காமல் சிகிச்சை பெற சிறந்த இடம்!!!!!

அன்பு நண்பர்களே...!!!

நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்...

4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த ஒரு அன்பரின் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபல கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 

மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை, 8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர். 

மிரண்டுப் போன நண்பனின் மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில்...

அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.

"மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில், தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்", எனக்கூறினார். 

உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர். 

உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து, அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச்சொல்கின்றனர்.( ஒரு 40000 to 60000 ஆகலாம்). 

டாக்டர் ஃபீஸ் இல்லை. சரியாகி வீடு திரும்பும்வரை அட்மிஷன் தருகிறார்கள். உணவு,மருந்து மாத்திரைகள் நாமே வாங்கிக் கொள்ளவேண்டும்.

நண்பர்களே, ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு அசிரத்தையாக இருக்காதீர்கள். 

உலகத்தரம் வாய்ந்த, இராணுவக் கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது. 

இதயம்,நரம்பு, மூளை போன்ற மிகச்செலவுப் பிடிக்கும் வியாதிகளுக்கு மிக மிகச் சிறப்பான , செலவு மிக மிகக் குறைவாக ஆகும் மருத்துவமனை. அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

ரேஷன் அட்டை, ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள். 

நகை நட்டை விற்று, வீடு தோட்டம் விற்று, நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல் சிறந்தச் சிகிச்சையைப் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

Trivandrum Medical College Hospital
Casualty Enquiry Number
0471 - 2528300

Important Telephone Numbers...
Superintendent 2442234
RMO 2528246
Casualty 2528300
Blood Bank 2528230
Cath Lab (ICCU) 2528499
CT Scan 2528232
Nursing Superintendent 2528231
Mortuary 2528236
Security officer 2528398
Paying counter 2528461
Anasthaesiaology 2528233
Anatomy 2528371
Applied Nutririon 2528391
Biochemistry 2528399
Cardiology 2528267
Cardiothoracic surgery 2528293
Community Medicine 2528379
Dematology and Venerology 2528213
Forensic Medicine 2528373
Gasroentrology 2528241
Gastro Entrology Surgical 2528295
General Medicine 2528234
General Surgery 2528325
Infectious diseases 2528296
Micro Biology 2528372
Nephrology 2528268
Neurology 2528260
Neuro Surgery 2528224
Gynaecology 2528365
Orthopaedics 2528242
ENT 2528277
Paediatrics 2528331
Paediatric surgery 2528312
Pathology 2528376
Peed Cell 2528369
Pharmacology 2528379
Physical Medicine and Rehabilitation 2528237
Physiology 2528377
Plastic and Reconstructive surgery 2528299
Psychatry 2528222
Radio diagnosis 2528211
Radio therapy 2528232
Respiratory medicine 2448484
Urology 2528282

பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்...

#உடல்நலக்குறைவால்_அவதிப்படுவோருக்கு உதவக்கூடும்...

#Address:
Trivandrum Medical College, Medical College PO, Thiruvananthapuram,
Kerala State. India PIN - 695 011
----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.6.18

நீங்களும் உங்கள் கையில் புரளும் பணமும்!


நீங்களும் உங்கள் கையில் புரளும் பணமும்!

*பணம்..*

1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம்.

ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்?

அப்படியாக  பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.

 "காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1,  TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.

இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான  கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள்.

பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.

3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், 

அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.

இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள்.

ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........?

4. இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டிரிய்க்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்த படுகின்றன.

5. பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம்
( bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன.

அவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா?

6. பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம்.
பரவும் அபாயத்தை மறக்கிறோம்.

மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான்.

அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள்.

ஆனால் நாம்.....................?

இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும்.

இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம்.

ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.

நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.

எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.

அன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்

கரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.

இந்த குறுந்தகவலை குறைந்த பட்சம்  நம் நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்வோம்.

சற்றே சிந்திப்போம் நம் சந்ததியினரை காப்போம்........!
       
நன்றி.               
இப்படிக்கு:-       
*வங்கி காசாளர்..*
-------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.4.18

வேப்பம் பூ என்னும் அரிய மருந்து!


வேப்பம் பூ என்னும் அரிய மருந்து!

வேப்பம் பூ என்னும் அரிய மருந்து!

பங்குனி_அதிசயம்..!!

பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு...சாமி.. இருக்கு.

வியாதியே இல்லாத ஒரு வரம் கிடைச்சா எப்படி இருக்கும்...?  நடக்கிறதை பேசுங்கள் சார்... வெட்டியாகப் பேச நேரமில்லை ... யூஸ்புல்லா இருந்தா கேட்கலாம்... என்பீர்கள் ... சரிதான்..

பரம ஏழையிடம் போய் கேட்டுப் பாருங்கள்... பணத்தோட அருமை தெரியும்...
பணத்த என்ன பண்றதுன்னே தெரியாத பணக்காரன்கிட்ட கேட்டுப் பாருங்கள்... ஆரோக்கியத்தோட விலை தெரியும்... னு ஒரு பேச்சு வழக்கு உண்டு... ரொம்பவும் எதார்த்தமான உண்மை ....

ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் அதே நேரத்தில் தேவையான பணத்தையும் சம்பாதிக்க தெரிந்தவர்களே வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள்... என்பதை வியாதியால் உடல் கெட்டுப் போன பிறகே பெரும்பாலோர் உணர்வு பூர்வமாக புரிந்து கொண்டு , அதற்குப் பிறகு தேட ஆரம்பிப்பது தெரிந்த கதை...

எல்லாம் சரி... விஷயத்துக்கு வாங்க... சார்... என்கிற  உங்கள் ஆதங்கம் புரிகிறது எனக்கு..

ஆரோக்கியத்துக்கான வழிகள் ..என்று நம்ம பெரியவங்க சொல்லி வச்சுட்டு போயிருக்கறதுல , குறிப்பா இந்த பங்குனி மாதத்து அதிசயத்தை சொல்லத்தான் வந்தேன்...

வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை... ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்... மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்...

இந்த வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம்.. வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும்.. இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை   சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்..

 பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்!
நகரங்களில் இருப்பவர்கள், தமிழ் மருந்துக் கடைகளில் வேப்பம் பூ கிடைக்கும். வாங்கிக் கொள்ளலாம்!

இந்த வேப்பம்பூ ,  ஒரிஜினல் மலைத்தேன்  , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால்  போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான்  இதன் விஷேஷமே..

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன்.. என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் ஓடிப்போகும்தானே..?

கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி...என்பதெல்லாம் தாண்டி "சுகரு "க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி... நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..

இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்... பங்குனியில் ரொம்ப அதிகம் ..

எப்படி சாப்பிடலாம் ..? ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி ... வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவையென்றால் ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு... தட்ஸ் ஆல்..

இல்லையென்றால் பச்சடி, ரசம் , அவியல்னு ஆயிரம் மெனு "நெட்"டுல இருக்கிறது. படித்துப் பாருங்கள்! எப்படியாவது உட்கொள்ளுங்கள் சாமிகளா!.

நம் பெரியவர்கள் இதை நாம சாப்பிட வேண்டும் .. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..

இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம்  பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்க நண்பர்களே!

சொடுக்கு போடற தூரத்துல சுகாதாரம் ...என்ன ..சரிதானே?
-------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.4.18

ஏலக்காய்களின் மகத்துவம்


ஏலக்காய்களின் மகத்துவம்

ஏலக்காய் (Cardamom )..!

பலர் சூயிங்கம் சாப்பிடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.

நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும்.

வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.

சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும்,

கண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும்.

4 ஏலக்காய், ஒரு கைப்பிடி நாவல் இலை சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும்.

ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய்.

சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென்,
கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

மின்னஞ்சலில் வந்ததை உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.8.17

கேன்சர் நோய்க்கு (புற்று நோய்க்கு) ஒரு சிறந்த மருந்து!


கேன்சர் நோய்க்கு (புற்று நோய்க்கு)  ஒரு சிறந்த மருந்து!

புற்று நோய் (கேன்சர்) ஒரு கொடுமையான நோய் என்பதில் சந்தேகமில்லை. அது வந்த பிறகு அல்லல் படுவதைவிட அதை வராமல் தடுப்பதுதான் புத்திசாலித்தனம்.

யாருக்கு, எப்போது அது வரும் என்று சொல்ல முடியாது!!! அதுதான் கொடுமை!!!

அதற்கு என்ன செய்வது?

புற்று நோய்க்கு (கேன்சர்) ஒரு அற்புதமான மருத்துவத்தை ஒரு அன்பர் கூறுகிறார். காணொளியாக உள்ளது. அனைவரும் அவசியம் பாருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------


===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.2.17

இறைவன் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலை!


இறைவன் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலை!

ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 6,000

மாற்று இதயம் பொறுத்த - ரூ 11/2 கோடி

செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்

ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொறுத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )

செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்

ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்

செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம்

கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000

எலும்புக்கு பதிலாக plate வைக்க -ரூ 50,000

கிட்னி க்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000

இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000

ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000

இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000

மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.

கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள்.

கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் அவற்றால் இயற்கை உறுப்புகள் போன்று நமக்கு உதவ முடியாது.

நம் மேல் அளவில்லா அன்பு வைத்த இறைவனுக்கே புகழனைத்தும்....அவருக்கே நன்றி சொல்வோம். அவரைத் தினமும் வணங்குவோம்!
-----------------------------------
படித்ததில் அதிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.1.17

நல்ல குடிநீர் என்பது எது?


நல்ல குடிநீர் என்பது எது?

நல்லகுடி நீர் என்பதற்கும், சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்...அவசியமான பதிவு.
அவசியம் படியுங்கள்.

குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.

நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு சாதனங்களை வைத்திருக்கிறோம்.

இந்த R.O சாதனத்தில் மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.

அதை உதறி தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.

நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.

ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.

கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!.

அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய தாதுப் பொருட்கள் ஆகும்.

நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது.

ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத் தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.

தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...ஆனால் கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச் சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்.

யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம் செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.

தண்ணீரில் இருக்கும் அந்தத் தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.

தண்ணீரை R.O செய்து குடித்தால் மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது.

சரி...

மினரல் பாட்டில் வாட்டர் -ஐ பயன்படுத்தலாமா?

மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.

மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும். இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது.

எனவே நல்ல தண்ணீரை ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை செய்து அதை பாட்டிலில் அடைத்துப்
பணம் கொடுத்து வாங்கி குடிக்கிறோம்.

எனவே தயவு செய்து பாட்டிலில் அடைக்கப் பட்ட மினரல் வாட்டர் என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைதான் என்ன?...

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.
ஆர்.ஓ R.O செய்யக் கூடாது.
பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.

வேறு எப்படித்தான் தண்ணீரை சுத்தப் படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.

அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச் சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே.

யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க் கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.

குழாயில் வரும் தண்ணீரை எப்படிக் குடிப்பது?...

தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது.தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.
சாக்கடை நீர் கலந்து வருகிறது என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.
எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.

உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர் கெட்டு விட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டிலில்
மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்கிறது.

அப்பொழுதுதானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டிலில் தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் R.O பிளான்ட் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.

உண்மையிலேயே குழாய் தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது.

இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,

தண்ணீர் கெட்டிருக்கிறது என்று ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மன திருப்திக்காக சில காரியங்களை செய்யலாம். நான் கூறுவது போல உங்கள் தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில் இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.

மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.

நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் ஆர்.ஓ எனும் குப்பை மிஷினை வாங்கி வைத்து இருக்கிறீர்களே நாற்பதாயிரம்
ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானை கிடைக்கும். தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.

ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இயற்கையான ஒரு Water Filter வாட்டர் பில்டரை யாரும் பயன்படுத்துவதே இல்லை.

எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும்,
பிராண சக்தி அதிகரிக்கும்.

வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால்  தண்ணீரை வடி கட்டினால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து
நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல் வெள்ளைத் துணியில் வடி கட்டிய நீரில் குளிப்பாட்டி குணப் படுத்தி இருக்கிறார்கள்.

எனவே தேவைப் பட்டால் இந்த முறையில் தண்ணீரைச் சுத்தப் படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம்

செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது.

அதில் உள்ள கெட்டப் பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது.

எனவே செம்பு என்ற தாமிர உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன் படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கும்.

பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு இருப்பார்கள் என்பதை அறவீர்களா?.

அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால் அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.

செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப் படுத்த முடியும்.

எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்?.

இதுவும் இல்லாமல் பூமியில் உள்ள மண்ணில் உள்ள அடுக்குக்கு எத்தகைய தண்ணீரையும் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

அதே போல் மண்ணை சுட்டு கேன்டில் முறையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.அதுவும் இயற்கையான எளிதான முறைதான்.அதில் மூன்று கேன்டில் உள்ள வாட்டர் பில்டர் அனைத்து குடும்பத்துக்கும் உகந்தது.

வடிந்த தண்ணீரை மண் பானையில் ஊற்றி மகிழ்வுடன் அருந்துங்கள்.

என் அருமை மக்களே!... நோய் தீர்க்கும் குடி தண்ணீரை உதாசீனம் செய்யாதீர்கள்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க்காதே எனும் முன்னோர் வாக்கை நம்புங்கள
R.O எனும் அமெரிக்க என்சைம் அரக்கனை தூக்கி எறியுங்கள்.

கழுத்தில் டை கட்டி விட்டு வந்தால் உடனே நம்பி மோசம் போகாதீர்கள்.

நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

படித்தேன்.பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.12.16

வெதுவெதுப்பான குடிநீரின் அற்புதமான உபயோகங்கள்!


வெதுவெதுப்பான குடிநீரின் அற்புதமான உபயோகங்கள்!

அவசியம் படியுங்கள்

மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. கிடைத்த பகுதியை அப்படியே கொடுத்துள்ளேன். தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
*BENEFITS OF WARM WATER 👉👉👉*

*A group of Japanese Doctors* confirmed that warm water is 💯 % effective in resolving some health problems👇, including:

Headache, migraine,  high blood pressure, low blood pressure,  pain of joints, sudden increasing and decreasing of heartbeat, Epilepsy, increasing level of cholesterol, cough, bodily discomfort,  golu pain, asthma, hooping cough, blockage of veins, diseases related to uterus & urine, stomach problems, poor appetite, also all related diseases to the eyes, ear & throat.

*HOW TO USE WARM WATER 👉👉*

Get up early in the morning and drink approximately 4 glasses of warm water when the stomach is empty. *Do not eat anything 45 minutes thereafter.*

You may not be able to make 4 glasses at the beginning, but slowly you will.✍

The warm water therapy will resolve the health issues within reasonable periods:👇

👉 Diabetes in 30 days
👉 Blood pressure in 30 days
👉 Stomach related issues in 10 days
👉 All types of cancer in 9 months
👉 Blockage of veins in 6 months
👉 Lack of hunger (Poor appetite) in 10 days
👉 Uterus and related diseases in 10 days
👉 Nose, Ear & Throat problems in 10 days.
👉 Women's menstrual  problems in 15 days,
👉 Heart diseases in 30 days
👉 Headache/Migraine in 3 days
👉 Low blood pressure in 30 days.
👉 Cholesterol in 4 months
👉 Epilepsy and paralysis continously in 9 months
👉 Asthma in 4 months.

*COLD WATER IS BAD FOR YOU:*

🌻In the past, people used to say that if cold water does not affect you at young age, it will harm you at old age👇

*👉 Cold water closes  4 veins of the ♥ heart and causes heart attack 💔;* Cold drinks are main reason for Heart Attack.
👉 Cold  water💦 creates problems in liver; makes fat stuck with liver. Most of the people waiting for the transplant of liver are victims of cold water drinking.
👉Cold water affects internal walls of stomach.
👉Cold water affects stomach and big intestines and results in cancer.

*👉Please, don't keep this to yourself, share with all your loved ones.*
------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.11.16

Health Tips: அனைத்து நோய்களுக்கும் மாதுளை மருந்து!!

Health Tips: அனைத்து நோய்களுக்கும் மாதுளை மருந்து!!

எல்லா சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து! சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.

புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும். 3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.

வியர்வையால் உடல் துர்நாற்றம் வீசுகிறதா? மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.

ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும். சிலருக்கு திறக்கவே முடியாத அளவுக்கு கண் பொங்கிவிடும்.. இமைகளும் உதிர்ந்து விடும்.இதற்கு ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கிற தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.

சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு! மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

பருக்களை மறைய வைப்பதில் மாதுளைக்கு நிகர் மாதுளையேதான். மாதுளம்பழத்தை உதிர்த்து ப்ரீசரில் வைத்துவிடுங்கள். பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் நன்றாக விறைத்துப்போய் உடைக்க சுலபமாக இருக்கும். இதை பவுடராக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் இந்த பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

கடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு, இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக்கு குளிர்ச்சியையும் தரும்.

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது.

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும்குணமாக்குகிறது.

உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால்தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். அனைத்து நோய்களுக்கும் மாதுளை மருந்து!!

===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.9.16

Health care: ஒரு வேளை மருந்தில் ஓடிப் போகும் மஞ்சள் காமாலை நோய்!


Health care: ஒரு வேளை மருந்தில் ஓடிப் போகும் மஞ்சள் காமாலை நோய்!

ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.
***********************
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை ஒருவர் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.

உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ இது அவசியம் பயன் படும்.

சென்ற ஆண்டு நண்பரின் மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காண தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.

ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.

அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தார்.

ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது. ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான். சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.

எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.

அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர் சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.

மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால்,சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன். கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.

மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி  ,கீழாநெல்லி  இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.இரண்டுநாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.

அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார். பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.

அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன். மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன். அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது. மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.

நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.

எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை  மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும்  விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.

நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும் இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி     விடுகின்றனர்.பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை வழக்கமான உணவு உண்ணலாம்.

பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர் வேண்டும் எனக்கேட்டான்.பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம். பையன் முகத்தில் ஒருத் தெளிவு. மருந்  துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.

அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.

எனக்கு ஆச்சர்யம் இன்றுவரை  தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.

மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.

பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஓரே   வே ளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.

விழுப்புரம் நகரிலிருந்து பாண்டிச் செல்லும் வழியில் 16கிமீ தூரம் கெங்கராயம்பாளையம் உள்ளது.
==========================================================
2
 *எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் எந்தத் தகப்பனும்* *தன் மகனுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை* *இவ்வளவு தெளிவா சொன்னதில்ல...!!!*
*.*
*.*
*பரீட்சையில் நீ எழுதும் ஒவ்வொரு தவறான பதிலும்,* *உன் எதிர்கால வாழ்க்கையில் நடக்கப்போகும் தேனிலவை சுவிட்சர்லாந்திலிருந்து சைதாப்பேட்டைக்கு மாற்றும்...!!!*
===========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.8.16

உடல் நலம்: நீரழிவு நோயும் அரிசி உணவும்!


உடல் நலம்: நீரழிவு நோயும் அரிசி உணவும்!

அரிசி தமிழர் உணவுகளின் தவிர்க்கமுடியாத முக்கிய உணவு. உடல் பருமனோ, நீரிழிவோ வந்துவிட்டால் மருத்துவர்கள், டயட்டீசியன்கள் முதலில் நம் உணவில் குறைக்கச் சொல்வது அரிசியால் செய்யப் படும் உணவுகளைத்தான்! குறிப்பாக, அரிசிச் சோறு!

பசுமைப் புரட்சிக்கு முன்பான நெட்டை ரக அரிசிகள், இன்றைக்குப் பெரும்பாலும் வழக்கொழிந்து போய் குறுகிய கால குட்டை அரிசி ரகங்களே
பெரும்பாலும் நமக்கு உண்ணக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பரிசோதனைக் கூடங்களில் தயாராகும் இந்த ரகங்களைத் தான் நாம் அன்றாடப் பயன் பாட்டுக்குப் பயன்படுத்துகிறோம்.

பெரும்பாலும் நவீன கால அரிசிகள் பாலீஷ் செய்யப் படுவதால் அதில் முழுவதுமாக நார்ச்சத்து இல்லாமல் போகிறது. கூடவே சிறிதளவு இருக்கக்கூடிய மற்ற சத்துகளும் துடைத்தெறியப் பட்டு ஒரு மாவுச்சத்து நிரம்பிய (கார்போஹைட்ரேட்) வெடிகுண்டாகத்தான் அது நமக்கு உணவாக வந்து சேர்கிறது.

சரி, அதனால் என்ன பிரச்னை?

கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து நிரம்பிய இந்த அரிசி சார்ந்த உணவை இட்லி, பிரியாணி, தோசை, பனியாரம், தயிர்சாதம், சாம்பார்சாதம், இடியாப்பம் என்று நாம் பல பெயரிட்டு அழைத்து மூன்று வேளையும் வயிறு நிரம்பச் சாப்பிடுகிறோம். பெரிய உடல் உழைப்பு இன்றி இவ்வாறு தொடர்ந்து அதிக கார்போ ஹைட்ரேட் உணவை நாம் உண்ணும்போது, இந்த மாவுச் சத்தால் உடலில் அபரிமிதமாக ஏறக்கூடிய ரத்த சர்க்கரை அளவால், கணையத்திற்கு அதிக வேலை தரப்பட்டு நாளடைவில் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸுக்குத் தள்ளப்பட்டு நீரிழிவு குறைபாட்டுக்கு ஆளாகிறோம்.

ஆசிய மக்களின் உணவில் பெரும்பங்கு வகிக்கும் இந்த அரிசி உணவில் அதிகப்படியாக இருக்கும் மாவுச்சத்தைப் பாதியாகக் குறைக்கும் வழிகளை தேடிய ஆராய்ச்சியாளர்கள் இப்போது அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்கள் ஆய்வுப்படி,  அரிசி யில் கிடைக்கக்கூடிய கலோரி களை பாதியாகக் குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.

அரிசியை சமைக்கும் முறை:

முதலில், அரிசியை பலமுறை நீர்விட்டுக் கழுவவேண்டும்.

அதன்பின்னர் அதை குக்கரில் சமைக்கக்கூடாது.

வாயகன்ற பாத்திரத்தில் நீர் விட்டுக் கொதிக்கவைத்து, அதில் அரிசியைப் போட்டு, கூடவே ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி வேகவைத்து, சாதம் தேவையான அளவு வெந்ததும், பின்னர் முழுவதுமாக கஞ்சியை வடித்து எடுத்து, அந்த சாதம் சூடு ஆறிய பிறகு ரெப்ரிஜிரேட் டரில் வைத்துவிட வேண்டும்.

சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இந்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி உண்ணும்போது அதன் கலோரி அளவுகள் பாதியாகக் குறைந்திருக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள்!

இன்றைக்கு இதை வெளிநாட்டினர் ஆராய்ச்சி செய்தாலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு நம் வீட்டில் இப்படித்தான் அரிசிச் சோறு சமைத்தார்கள். அதை உண்டு, பல இடங்களுக்கு நடந்து, ஓடி ஆடி வேலை செய்து, சைக்கிள் மிதித்து ஆரோக்கியமாக இருந்தார்கள். சாதம் வடித்து எடுத்த பின்பு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விடும் வழக்கமும் இருந்தது.

இப்படி சமைக்கவும், குட்டை ரக அரிசிகளைவிட நெட்டை ரக அரிசிகள்.. குறிப்பாக, பாரம்பரிய அரிசி ரகங்களே ஏற்றவை. இந்த நெட்டை ரக அரிசி வகைகளில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று பாஸ்மதி.

ஆக, குட்டை ரக அரிசிகளை தவிர்த்து, பாரம்பரிய அரிசி, கைக்குத்தல் அரிசி, பாஸ்மதி, கேரளா சிகப்பு மட்ட ரக அரிசி போன்ற வகைகள் வாங்கி, பலமுறை நீர் விட்டுக் கழுவி, அதைக் குக்கரில் வடிக்காமல், பாத்திரத்தில் வேகவைத்து, கஞ்சி வடித்து உண்பதும், சாதத்தின் அளவைக் குறைவாவும், கிழங்கில்லாத காய்கறி மற்றும் தினம் ஒரு கீரையை அதிகம் சேர்த்து உண்பதும் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகம் பாதிக்காமல் நீரிழிவினைத் தள்ளிப் போடும்.

‘நல்ல சாப்பாடு & 11’ இதழில் ஷங்கர் ஜி (பேலியோ குரூப்) எழுதிய கட்டுரை..!~அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.6.16

புற்று நோயை விரட்ட ஒரு அற்புதமான மருந்து!


புற்று நோயை விரட்ட ஒரு அற்புதமான மருந்து!     
-------------------------
*இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது. கண்டிப்பாக நீங்களும் படியுங்கள். ஆனந்தம் உங்களையும் தொற்றிக் கொள்வது உறுதி.*

*மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் ,  தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன்  பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால்  முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.*

*எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.*

*கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய்  ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு  வகையான பூஞ்சை காளான் நோயாகும்.*

*சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது.*

*அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை  பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை.*

*இதன் பின் தான் இதற்கான மருந்து  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது,*

*அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு  வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார்.  இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.*

வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்.
பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும்
பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி
நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து
உப்பாக்கினால் உனக்கு நிகர் வைத்தியன்
பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !                                                              
       *– அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17*

கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான்  என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார்

இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.

நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம்.

அதன் பின் இந்த உப்பை நன்றாக  பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று  கேட்டார்,நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம்.

*அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார்.*

*இல்லை  என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை
எடுத்துக்கொடுத்தோம்.*

*இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate
(NaHCO3) )  தான் என்றார்.*

*நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம்*
*உடனடியாக  அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறினார்.*
*அதுமட்டுமல்ல, இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்புசத்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துவதற்கு,*
*இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள்  என்றார் அவர்.*

*அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.*

*2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி  (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார்.*

*இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/*

*பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில்  வெளியிட்டுள்ளார்.  இதுவரை கேன்சர் தொடர்பான  ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன  கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.*

*ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கூட்டம்  இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை  சென்றடைந்துள்ளது.*

*மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர்  நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி  குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.*

*வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.*

*இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது  ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து  என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில்  தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில்  நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில்  இருந்து காலை 1  ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும்.*
*முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை  கருதி சில நேரங்களில்அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1 நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும்  கொடுக்கலாம் என்கிறார்.*

*இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.*

*நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.*

*எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம்.*

*வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...! நன்றி...!! நன்றி...!!!*

*நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.*

*இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறோம்.*

*இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம்.*

*கட்செவி : சித்த மருத்துவம்*
===================================
படித்ததில் மிகவும் பிடித்தது. அதை உங்களூக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!