மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label class room posts மனிதர்கள். Show all posts
Showing posts with label class room posts மனிதர்கள். Show all posts

14.12.22

*புளியோதரை புராணம்* Write up by சுஜாதா_



*புளியோதரை புராணம்*
_- சுஜாதா_

ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் “வச்சு வச்சு” சாப்பிட்டது புளி சாதத்தைத் தான்.! ஒரு வாரம் ஆனாலும் கெடாது.! அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில் நம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே! என்பது 100% உண்மை.!

எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.! உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் உள்ள உணவு புளியோதரை.. இதன்  நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்துவிடலாம்.. இதன் புராணம் மிகச் சுவையானது!

புளியோதரைக்கு மணமும் நிறமும் இரு கண்கள்.. முதலில் புளியோதரைக்கு வடிக்கும் சாதத்தின் பதம் மிக முக்கியம்.. அது புதுமணத் தம்பதியர்  போல பின்னிப் பிணைந்து குழைந்து இராமல்.. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிகள் போல சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே சாலச் சிறந்தது.. அடுத்து நிறம்.!

புளியோதரை ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச்சிறப்பு.! சாதத்தை வடித்து ஆறவிட்டு பயன்படுத்துதல் புளியோதரைக்கு சரியான சமையல் முறையாகும்.. அடுத்து எண்ணெய்.. நீங்கள் பில்கேட்ஸ் குடும்பமாக இருந்தாலும் எண்ணெய்க்கு பதிலாக நெய் எல்லாம் சேர்க்கக்கூடாது.. நல்லெண்ணெய் என்னும் ஏக பத்தினியை மட்டும்..

ஏற்றுக் கொள்வான் இந்த புளியோதரை என்னும் ராமச்சந்திர மூர்த்தி!அதிலும் செக்கில் ஆட்டிய புனிதவதி எண்ணெய் எனில் எந்தச் சீரும் வாங்காமல் சிறப்பாக இணைவான் இவன். அடுத்து புளி.. நேற்று முளைத்த புதுப்புளி கூடாது.!  பழம் புளியே புளிக் காய்ச்சல் செய்வதற்கு மிகச் சிறந்தது.. 

புதுப்புளியில் புளியோதரை புளிக்கு பிறந்த பூனையாகிவிடும்.! பழம் புளியில் தான் அது புலியாகும்! அடுத்து மிளகாய்.. நல்ல தரமான வதக்கும் போதே நெடியேறும்.. காரசார காய்ந்த மிளகாய் தான் பெரும் சிறப்பு,  அடுத்து இதற்கு மிகுந்த சுவை சேர்ப்பது நிலக்க டலைப் பருப்புகள்.! 

நிலக்கடலையும் புளியோதரையும் நல்ல நண்பர்கள்! நல்லெண்ணெய் கமகமக்க ஒரு வாய் அள்ளிச் சுவைக்கையில் வாயில் அரைபடும் புளியோதரையின் நிலக்கடலை பத்து பாதாம் பருப்புகளுக்குச் சமம்.! புளியோதரைக்கு மிகப் பொருத்தமான சாம்பார் எதுவெனில் துவரம் பருப்பு போட்ட மெல் இனிப்பில் சின்ன வெங்காயம்.. 

அல்லது சிவப்பு பூசணி சாம்பார் தான்! கத்திரிக் காய் சாம்பாரை விட எண்ணெய்/ புளிக் கத்திரிக்காய் வதக்கல் இன்னும் பிரமாதம்.. இஞ்சி, பருப்பு, புதினா, கடலை, நவதானியம், இப்படி தேங்காய் சேர்க்காது புளி சேர்த்து அரைக்கும் துவையல்கள் நீண்ட நாள் உபயோகத்திற்கு.. பொட்டுக் கடலை தேங்காய் வைத்து அரைக்கும் துவையல் இன்ஸ்டண்ட் சுவர்க்கம்.!

மதுரையில் சித்திரான்னங்களுக்கு பேர் போன சவுராஷ்டிரா சமூக நண்பர்களுடன் பழகிய போது அவர்கள் வீட்டில் செய்யும் புளியோதரைக்கு கருப்பு கொண்டைக் கடலை சுண்டலை தந்தார்கள்.. அசுவாரஸ்யாமாக சாப்பிட்டால் சுவை ஆஹா.. அள்ளியது..! கூடவே இஞ்சி மிளகாய் சட்னி வேறு!

முருங்கை, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் தன்மையால் அக்காய்களைக் கொண்டு வைக்கும் சாம்பார்கள் நல்ல புளியோதரை சாப்பிடும் உன்னத உணர்வை கெடுத்துவிடும்.. என் அம்மா இதற்கு மாங்காய் போட்டு சாம்பார் வைப்பார்.. இது புள்ளத்தாச்சி பெண்களுக்கு பிடிக்கும்டா தம்பி என்பார்!

அம்மாவுடன் வீட்டில் அடிக்கடி வந்து  பேசும் சில கர்ப்பிணி அக்காக்களின் ரகசியம் அப்போது தான் தெரிந்தது.! ஆயிரம் தான் புளியோதரை வீட்டில் செய்தாலும் பெருமாள் கோவில் புளியோதரையின் தரமே வேறு.. ஒரு பெண் புகுந்த வீட்டில் இருந்து தன் தாய்வீட்டிற்கு 1 மாதம் விடுமுறையில் வந்தது போல..

புளியோதரையின் தாய்வீடு பெருமாள் கோவில்.! அங்கு வந்து விட்டாலே அதற்கு ஒரு தனிக் கு (ரு)சி வந்துவிடும்.! திருப்பதி,  மயிலை, திருவட்டார் முதலிய பெருமாள் கோவில் புளியோதரைகளுக்கு நான் ஹேமநாத பாகவதர் பாண்டிய நாட்டிற்கு அடிமை என எழுதித் தந்தது போல எழுதித் தரச் சொன்னால்..

கொஞ்சமும் தயங்காமல் மனதார எழுதித் தருவேன். என் பாட்டியின் ஸ்டைல் சிறிது சுண்டை வத்தல் நன்கு வதக்கி அதை இடித்துத் தூவுவது.! பெருமாளே வந்து கையேந்தும் பக்குவத்தில் மிகப் பிரமாதமாகச் செய்வார் புளியோதரையை புண்ணியச் சோறு என்பார்! கல்யாண சமையல் சாதம் என்ற மாயாபஜார் படப் பாடல் வரிகளில்..

 “புளியோதரையில் சோறு மிகப் பொருத்தமாய் சாம்பாரு” போல அருமையான புளியோதரை கிடைத்துவிட்டால் நாம் எல்லாருமே கடோத்கஜன்கள் தானே!!!

✍️
எழுத்தாளர் சுஜாதா
-----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.10.22

Lesson 67 Bhudha Aditya Yoga

Star Lessons

Lesson no 67

Date 27-9-2022

New Lessons

பாடம் எண் 67 

யோகங்கள்

புத ஆதித்ய யோகம்

புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். இந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!

-------------------------------

பலன்:

ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.

சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும்.

This yoga will give lots of talent, success, honour and fame in society.

-------------------------------

எல்லோருக்கும் கொடுக்குமா? 

கொடுக்காது. 

ஏன் கொடுக்காது? 

சூரிய வட்டத்தில், சூரியனுக்கு மிக அருகில், தொடர்ந்து சூரியனைக் கும்மியடிக்கும் கிரகம் புதன். ஆகவே பலருடைய ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கும். 

Mercury is the first planet in the Solar System and is very close to the Sun. It cannot be more than one sign away from the Sun in the rasi chart. This yoga, therefore, appears in a lot of charts, but not all the charts can have the benefits of this yoga. 

யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும். 

ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது. அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது. அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர் கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது. 

The Sun and Mercury should be placed well in a chart and also should not themselves be badhakas for the chart

---------------------------------------------------------------------

சிம்மம் (சூரியனின் ஆட்சி வீடு)

மேஷம் (சூரியனின் உச்ச வீடு)

மிதுனம் (புதனின் ஆட்சி வீடு)

கன்னி (புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடு)

ஆகிய 4 வீடுகளில் இந்த யோகம் அமைந்திருந்தால் அது பலனளிக்கும்!

மற்ற வீடுகளில்/ராசிகளில் இந்த யோகம் கலவையான (mixed result) பலனைக் கொடுக்கும். அதாவது தண்ணீர் ஊற்றிய பால்

------------------------------------------------------------------------

மேஷ லக்கினக்காரர்களுக்குப் புதன் 3 மற்றும் 6ஆம் வீட்டிற்கு அதிபதி. அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் சொல்லும்படியாகப் பலனளிக்காது 

ரிஷப, சிம்ம, துலா மற்றும் மகர லக்கினக்காரர்களுக்கு, இந்த யோகம் இருந்தால் பலன் கிடைக்கும். தனுசு லக்கினக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும்------------------------------------------------------------------------

புதன் சூரியனுடன் 6 பாகைக்குள் சேர்ந்திருந்தால் அஸ்தமனமாகிவிடும். அப்போது இந்த யோகம் கிடைக்காது. அதுபோல புதன் வக்கிரகதியில் இருந்தாலும் இந்த யோகம் இல்லை! 

சிலர் புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்பார்கள். அவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கப் பிரார்த்திப்போம்! 

அன்புடன்

வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.7.22

கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு பற்றி ஒரு பார்வை.- பகுதி 2





கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு பற்றி ஒரு பார்வை.- பகுதி 2

சுப்புடு இந்த பெயர் அவருடைய வாழ்நாட்களில் இணைந்து பயணித்த கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு சிம்ம சொப்பனம்.தலைநகர் டில்லியை வாழ்விடமாக கொண்டிருந்த சுப்புடு அவர்கள் வருடந்தோறும் டிசம்பர் மாத சங்கீத சீசன் சமயம் சென்னை வாசி.இவரின் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத ஜாம்பவன்கள் மகாராஜபுரம் சந்தனம்,காருக்குறிச்சி அருணாச்சலம் போன்றவர்கள் சுப்புடு வந்தால் கச்சேரி செய்ய மறுத்தார்கள்.

சென்னை மியூசிக் அகாடமி வாசலில் சுப்புடு நுழைய தடை என போர்டு வைத்தனர்.

சமரசம் இல்லா விமர்சகரான சுப்புடு அவர்கள் முறையான சங்கீதம் கர்றவர் இல்லை.புகழ் பெற்ற கர்நாடக பாடகி T. K. பட்டம்மாளின்  தம்பி. சிறு வயதில் அக்கா வீட்டில் சாதகம் செய்யும் போது மேல் ஸ்தாயியில் குரல் பிசுறு தட்டும் போது 'பட்டு மேலேயே நின்னுட்டுயே இறக்கி விடனுமா?'என்பாராம்.

பலரின் விரோதத்தை சம்பாதித்த சுப்புடு அவர்கள் விமர்சன உலகின் முடி சூடா மன்னனாக வலம் வந்தவர்.

இவரின் மூத்த சகோதரர் டில்லி செயலகத்தில் செயலாளர் பணி செய்தவர்.அவர் ஒரு பேட்டியில் 'சுப்புடு வின் குடும்பம் என்றே நாங்கள் அறியப்பட்டோம்,அதில் தான் எங்களுக்கு பெருமை 'என்றார்.
அப்துல் கலாம் ஜனாதிபதி யாக இருந்த போது மிகவும் உடல் நலம் குன்றிய சுப்புடு அவர்களை மாலை நேரம் பார்க்க சென்றார்.சுப்புட்டுவிடம் "உங்களுக்கு நான் என்ன செய்யட்டும்"என்று கேட்டார்கள்.சுப்புடு அவர்கள் 'நான் இறந்த உடன் உங்கள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள மஞ்சள் ரோஜா மலர்களை என் மேல் வைக்க செய்யுங்கள் " என்றார்.

அன்று இரவு அவரின் மரண செய்தி ஜனாதிபதி மாளிகைக்கு தெரிவிக்க பட்டதும்.மஞ்சள் ரோஜாக்களை அனுப்பி வைத்தார் மறைந்த கலாம் அய்யா.
சுப்புடு அவர்கள் எப்போதும் சொல்வது"இசையை விமர்சிக்க மட்டுமே உரிமை உண்டு, இசைத்தவனின் தனி மனிதத்தை விமர்சிப்பது நம் மன நோய்"
ஆம் படைப்பை விமர்சிக்க மட்டுமே உரிமை உண்டு. படைத்தவனை விமர்சிப்பது நாம் அறிவிலிகள் என்பதன் ஒப்புதல் வாக்குமூலம்.
---------------------------------------
Post 2

31/03/2022, 17:40 - +91 94866 93630: நெஞ்சம் மறப்பதில்லை(1963) 

நவம்பர் மாதம் டில்லியில் 9 வயது சிறுமி ஷாந்தா தேவி தனது பூர்வ ஜென்மத்தை ஞாபகம் வைத்திருப்பதாகவும் . தான் மதுராவில் வசித்ததாகவும் ,தனது கணவன் யார் என்றும் , தனக்கு ஒரு குழந்தை இருந்தாதகவும் கூறினார் . இதை நம்பவில்லை என்றாலும்,  இது உண்மையா இருக்க கூடுமோ என்று மதுரா சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ….

ஆம் …. ஷாந்தா தேவி கூறியது யாவும் நிஜமே !!! அந்த கணவனும் உயிரோடு இருந்தார் அவரிடம் விசாரித்த போது அனைத்துமே உண்மை என்று நிரூபணமானது .

இந்த செய்தியை கதைக்களமாக கொண்டு இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய திரைப்படமே “நெஞ்சம் மறப்பதில்லை”

 “பூர்வ ஜென்மத்தில் சேர முடியாமல் இறக்கின்ற காதலர்கள் ..மறு ஜென்மத்தில் சேர்ந்தார்களா ?

தமிழ் சினிமா வரலாற்றில் வழக்கமான கதை களத்தில் இருந்து சற்றே மாறுபட்ட “திகில்”களம் என்றே சொல்ல வேண்டும். 

Black & White காலத்திலேயே பூர்வ ஜென்மம் / மறு ஜென்ம நிகழ்வின் வேறுபாடுகளை மிக தத்ருபமாக அமைத்திருக்கும் Art Direction .

இன்னமும் அனைவருக்கும் “நெஞ்சம் மறப்பதில்லை” பாட்டை தனிமையில் கேட்க்கும்போது ஒரு அமானுஷ்ய உணர்வே வரக்கூடும் .

இத்திரைப்படத்தில் Special Effects அபாரமாக அமைந்திருக்கும் . இந்த effectsக்கு சொந்தகாரர் வேற யாருமில்லை நம்ம வெள்ளியங்கிரி Uncle : “மீசை” முருகேசன் தான் . இவரது விசேஷமே சின்ன சின்ன junk வைத்து Effects அமைப்பது தான் .

இந்த திரைப்படத்தில் வில்லனாக கலக்கி இருப்பவர் M.N.நம்பியார் அவர்கள். பூர்வ ஜென்மத்தில் ஜமீன்தாராக வும் , Climax Twist-ல் வயோதிரகாகவும் பயமுறுத்தி இருப்பார் .

எத்தனையோ தமிழ் சினிமாக்கள் Re-Incarnation-ஐ மைய்யமாக வைத்து வந்துள்ளது எனினும் இந்த சினிமா அவற்றுக்கெல்லாம் முன்னோடி தான் …

இத்திரைப்டம் பார்த்த பிறகு கொஞ்ச நேரம் அனைவரின் காதிலும் கீழ் கொடுக்கப் பட்ட பாடல் கேட்டு கொண்டே இருக்கும் ..


சேதுராமன் லக்ஷ்மணன்.

--------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!