மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Our Heritage. Show all posts
Showing posts with label Our Heritage. Show all posts

21.2.19

நமக்குத் தெரியாத நம்முடைய ஞானம் (knowledge)


நமக்குத் தெரியாத நம்முடைய ஞானம் (knowledge)

*உண்மை இதுதான்*

ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது மடத்தனம் ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்

ஹா ஹா ஹா.......நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் .

*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், காிகாலனின் கல்லணை.  சிதம்பரம்  நடராஜா் கோவில் .ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்கும்படி வைத்து மனிதனின் நாடி நரம்புகள் மூச்சுக்காற்று உள்ளடக்கி தங்க ஒடுகள் ஊசிகள் பதித்தான்  இன்னும் இது
போன்ற எத்தனையோ கட்டிடகலை தொியாமல் கோவிலும் கட்ட முடியாது.=!

*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.

*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.

*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.

*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.

*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.

*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.

*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது

*Bachelor/ Master_of_Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.

*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chartered Accounts* தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.

*Anomaly Scan/ Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை, பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.

என்ன!  அதிசயமாக இருக்கிறதா...?

 இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் தமிழர்கள். எம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறிய பகிருங்கள்.

ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் வாசகம்   மந்திரம்   போதும்

இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் பிளட்டெஸ்ட்டிங் கிடையாது  லேப்டெக்னிஸ்யன் (LABtechnicient ) படிப்பு கிடையாது.

ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும்  விந்துவில்  மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக  இப்போது கண்டுபிடித்து  அதில்  பல அணுக்கள்  போராடி  அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று  உயிா் உண்டாகிறது என்று.

ஆனால்  நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன் திருமூலா் பெருமான்  அற்புதமாக  தன் ஞானத்தினால்  லட்சமாக உருவெடுத்து  ஆயிரம் ஆகி நுாறாகி  பத்தாகி  பிறகு  ஒன்றாகி  உள்ளே சென்று  உயிரெடுத்தது தான்  உயிா்என்றாா்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது  தமிழர் மரபும்
கலாச்சாரமும்  ஞானமும் - அதை நீங்கள் உணர வேண்டும!!!
-----------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.9.18

எதை நினைத்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்?


எதை நினைத்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்?

இந்தியா
ஒரே நாடு அல்ல
பல நாடுகளின்
கூட்டமைப்பு ..என்று

ஒரு சில பிரிவினைவாதிகளின்
குரல்
யாரும்
கண்டு கொள்ளாத போதும்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது !

ஒற்றை நாய்
குரைக்கும் போதே
விரட்டா விட்டால்
ஊரு நாய்களெல்லாம்
ஒன்று சேர்ந்து
ஊளையிடும்
அபாயம் நேரலாம் !

எனவே
தெளிவு படுத்தும் கடமை
தேச பக்தனின்
தோள்களில் !

மலையையும்
கடலையும்
காரணமாக்கிக்
காலம் படைத்த
*தீப கற்பம்* இது !

இந்த கற்பத்தில்தான்
உலகின் ஆன்மீகக் குழந்தை
அவதரித்தது !

ஆதியில்
இதனை
நாவலந் தீவென்றே
நானிலம் அறியும் !

துணைக் கண்டம்
என்று
புவியியலார்
புகழ்வதுண்டு !

தென்னாடுடைய சிவன்
இமயத்திலும்
இமவான் மகள்
குமரியிலும்
இடம் மாறி இருந்து
எல்லை வகுத்தனர் !

கயிலைப் பெருமான்
கல்யாணம் செய்தது
மதுரைப் பாண்டியன்
மகளை அல்லவா?

இதிகாசங்கள் இரண்டும்
பேசாத
இடங்களே இல்லை
இந்தியாவில் !

வடபுலத்து இராமன்
தென்கோடியில்
கட்டிய கோயில்
*இராமேஸ்வரம்* !

காந்தாரச் சகுனி முதல்
கடலோரப் பாண்டியன் வரை
பங்கெடுக்காதவர் யார்?
பாரதப் போரில் !

கங்கை நீரையும்
கயிலைக் கல்லையும்
கொண்டு வந்து தான்
பத்தினிக் கோட்டத்தைக்
கட்டி முடித்தான்
செங்குட்டுவன் !

ஆதி முதல்
தீர்த்த யாத்திரை
காசி - இராமேஸ்வரம்
என்பதாய்த் தானே
காணப்படுகிறது !

கயிலையில் புறப்பட்ட
அகத்தியருக்குத் தெரியும்
*பாரத எல்லை*
*நெல்லைக்கு அப்பால்*
*இல்லை* என்று !

அதனால்தான் பொதிகையைத் தாண்டி
போகவில்லை அவர் !

வடக்கே அவதரித்த
பரசுராமர்
அந்திமத்தில்
அமைதி கொண்டது
தென்னகத்துக் கேரளம் !

பாரதம் முழுவதையும்
பாதத்தால் அளந்த
கேரளத்துச் சங்கரர்
பீடம் ஏறியது
காஞ்சி நகர் !

கயிலை முனிவரே
மூலனாய் மாறி
மூவாயிரம் பாடலில்
திருமந்திரத்தைத்
திரட்டிக் கொடுத்தார் !

வடகயிலை
சுந்தரர்தான்
தென்னகத்தில்
தமிழ் வளர்த்தார் !

காரைக்கால் அம்மையும்
கரசேவை அப்பரும்
வடகயிலை சென்று
தென்தமிழில் பாடினர் !

கேரளத்துச் சேரலன்
கவிதைத் தொகுதியை
வெளியிட்ட இடம்
வடகயிலை என்பது
வருணன் தரும் செய்தி !

மெய்கண்டாருக்குச்
சித்தாந்தம் சொன்னவர்
வடகயிலை பரஞ்சோதி
என்பதே வரலாறு !

காசி மடத்தைக்
கட்டி ஆண்டவர்
கன்னித் தமிழ் நாட்டுக்
குமரகுருபரர் !

ஆண்டாள் மாலை
அழகு செய்யாமல்
திருப்பதியில்
திருவிழா ஏது ?

விவேகானந்தரின்
வேதாந்த அறிவு
அமெரிக்காவை
ஆட்டிப் படைத்தது
சேதுபதியின்
செலவில்தானே !

வடக்கே பிறந்து
தெற்கே புகுந்து
புதுவை மண்ணை
புனிமாக்கினார்
அரவிந்தர் !

ஆந்திராவின்
அற்புதமானார்
தமிழகம் தந்த
இராகவேந்தர் !

ஒருங்குடன் ஆண்ட
பரதன் பெயரால்
*பாரதம்* என்பதே
பழம் பெயராகும் !

இந்திய எல்லையை
எடுத்துக் காட்டும்
சங்க இலக்கியச்
சான்றுகள் பற்பல !

இட்டப் பொட்டும்
கட்டிய புடவையும்
*இந்தியப் பெண்* என
எடுத்துக் காட்டும் !

இந்தியா முழுவதும்
எல்லா வீட்டிலும்
யாராவது ஒருவருக்கு
வடமொழிப் பெயராய் !

*பாரத தேசம்*
*பழம் பெரும் தேசமாம்*
பாரதி புலவனும்
பாடி மகிழ்ந்தான் !

வடக்கே இருக்கும்
திரிவேணி சங்கமம்
தெற்கே வந்தால்
முக்கூடலாகும் !

எடுத்துக் காட்டுகளை
அடுக்கத் தொடங்கினால்
முடிவாய்ச் சொல்ல
முந்நூறு நாட்கள்
முழுமையாய்த் தேவை !

பெரிய தேசத்தில்
வேறுபாடுகள்
இருப்பதே இயற்கை !
*வேறுபாடுகளைக்*
*கூறுபடுத்தி*
*பிரிவினைப் பேசும்*
*பித்தர்கள் எத்தர்களாய்!*
விரல்களின் அளவு
வெவ்வேறாயினும்
*உள்ளங்கை*
*ஒன்றுதான்* என்பதை
உணர மறுக்கும்
குருடர்களுக்கு
விளக்கினாலும் விளங்காது !

*சோழநாடு*
*சேரநாடு*
*பாண்டியநாடு*
*கொங்குநாடு*
*நடுநாடு*
*ஆப்ப நாடு*
என்றெல்லாம்
பிரிந்து கிடந்த
தமிழ்நாடு
ஒரே மாநிலமாய்
உருப்பெற்றதற்குத்
தமிழ் மொழியே
அடிப்படை !

பல மாநிலங்களையும்
சேர்த்து
*பாரத நாடென*
பறை சாற்றுவதற்கு
ஆன்மீகப் பண்பாடே
அடிப்படை !

அழகான மாலையில்
பல பூக்கள் இருப்பதால்
அது
மாலையே இல்லை
தனித்தனிப் பூக்கள் தான்
என்று
அடம்பிடிப்போரிடம்
அகப்பட்டு விடாதீர் !

*பிரிவினை நோய்*
*பிடித்துக் கொள்ளும்* !!!

நாம் இந்தியர் என்பதில்
பெருமிதம் கொள்வோம்!
இணைந்தே இன்னும் பல
சாதனைகள் புரிவோம்!
வாழ்க பாரதம்!
வளர்க தமிழ்!
வந்தே மாதரம்!
ஜெய்ஹிந்த்!

நன்றி: 🚩🚩வாஞ்சிநாதன் ஹிந்து
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.1.18

பாரதப்போர் எப்படி முடிந்தது?

பாரதப்போர் எப்படி முடிந்தது?

குருஷேத்திரம்..

பதினேழாம் நாள் போர் முடிந்த இரவு..

தனது பாசறைகளைப் பார்வையிட்டவாறே, நாளைய நிகழ்வுகளைப் பற்றி பேசிக்கொண்டே வந்த தருமனும், பீமனும், சற்று தொலைவில் தெரிந்த கிருஷ்ணரின் கூடாரத்தில் விளக்கெரிவது கண்டு வியப்புற்றனர். எப்போதும், எல்லோருக்கும் முன்பு, அடுத்த கட்ட போர்நிகழ்வுகளை ஆலோசிக்கும் கிருஷ்ணர், இன்று இதுவரை இதுபற்றி எதுவும் பேசவில்லை என்பதும் ஒருபுறம் கலக்கமாகவே இருந்தது தருமனுக்கு.

உள்ளே வரலாமா ? உத்தரவு கேட்டபின் உள்நுழைந்தனர் இருவரும்.

வாருங்கள்.. என்ற கிருஷ்ணரின் குரலில் என்றும் இருக்கும் உற்சாகம் சற்றுக் குறைந்திருப்பது தெரிந்தது தருமனுக்கு.

நாளைய போர் நிகழ்வு பற்றி கேட்டுச் செல்லலாம் என வந்தோம் கிருஷ்ணா.. என்றான் தருமன்.

நாளை பதினெட்டாம் நாள் போர். இதுவே குருஷேத்திரத்தில் இறுதிநாளாக இருக்கும் என எண்ணுகிறேன் நான்.. என இழுத்தார் கிருஷ்ணர்.

இறுதிநாள்தான். ஐயமே இல்லை. துரியோதனனுக்கும், அவனது மொத்தப் படைக்கும் நாளை இறுதிநாள். பாஞ்சாலியின் சபதம் நிறைவேறப்போகும் நாள்.. பல் கடித்தான் பீமன்.

நாளை நம் படைக்கு யார் தலைமை தாங்கப் போகிறீர்கள் ? கேட்ட கிருஷ்ணரை, வியப்புடன் பார்த்தான் தருமன்.

யாரா ? அதை நீயல்லவா முடிவு செய்து சொல்லவேண்டும்.. என்றான் தருமன்.

அர்ஜுனனின் பங்கு இப்போரில் கர்ணனைக் கொன்றதோடு முடிந்துவிட்டது.  நகுலனும், சகாதேவனும் நாளைய போருக்கு சரிவர மாட்டார்கள். அண்ணன் தருமர் செல்லுமளவிற்கு அத்தனை அவசியமும் இல்லை. எனவே, துரியோதனனை அழிக்க, நானே தலைமை ஏற்கலாம் என நினைக்கிறேன் கிருஷ்ணா.. என்றான் பீமன்.

தாராளமாக. அதில் தவறேதுமில்லை. அதற்குமுன், நகுலனும், சகாதேவனும் நாளை தலைமையேற்க வேண்டாம் என்பதற்கான காரணம் வேண்டுமே ?.. கேட்டார் கிருஷ்ணர்.

விஷயமறியாதவன் போல் பேசுகிறாயே கண்ணா.. நாளை துரியோதனப் படைக்கு தலைமையேற்பது சல்லியர் என்பது தெரியாதா உனக்கு ? நகுலனும், சகாதேவனும், அவரது மருமகன்களாயிற்றே. அவர்களுடைய கையால் அவர் அழியவேண்டாம் என்பதால்தான், நான் செல்கிறேன் என்கிறேன்.. என்றான் பீமன்.

ஏன் ? உனக்கும் மாமன் முறைதானே சல்லியர் ?.. கேட்டார் கிருஷ்ணர்.

இருக்கலாம். எதிரிப்படையில் நிற்கும் எவரையும் நான் உறவாகக் கொள்வதில்லை. அதுவுமின்றி, பீஷ்மர், கர்ணன், துரோணர் போன்ற பெருவீரர்களை எல்லாம் வென்றழித்த நமக்கு, சல்லியர் எம்மாத்திரம் ? எனவேதான், அண்ணன் தருமருக்கு அவ்வாய்ப்பினை தராமல், நானே தலைமை ஏற்க நினைக்கிறேன். போர் தொடங்கிய சில நாழிகைகளிலேயே, சல்லியரை அப்புறப்படுத்திவிட்டு, துரியோதனனைத் தொட எண்ணம். அவனைக் கொல்வது மட்டுமே என் இலட்சியம் என்பதை நீயுமறிவாய் கண்ணா.. என்றான் பீமன் வேகமாக.

அப்படியா ? உன் வீரத்தின் மீது நம்பிக்கை வைப்பது உனக்கு நல்லது. அதே சமயம், எதிரியின் வீரத்தை குறைத்து மதிப்பிடுவது உனக்கு நல்லதல்ல பீமா.. என்றார் கிருஷ்ணர்.

புரியவில்லை கண்ணா.. சல்லியர் அத்தனை பலசாலியா ?.. வேண்டுமென்றே இகழ்ச்சியாகக் கேட்ட பீமனை, புன்சிரிப்போடு பார்த்தார் கிருஷ்ணர்.

நீயும், அர்ஷூனனும் ஒன்றாக எதிர்த்தால் கூட, சல்லியரை வெல்வது கடினமே பீமா.. என்ற கிருஷ்ணரின் வார்த்தைகள் கேட்டு கோபமுற்றான் பீமன்.

என்ன பிதற்றுகிறாய் கண்ணா.. நேற்று வரை தேரோட்டியாய் களத்தில் வலம் வந்தவர், இன்று தளபதியானவுடன், பிறந்துவிடுமா வீரம் ?.. கேட்ட பீமனை நோக்கிய கிருஷ்ணர்,

கர்ணனுக்குத் தேரோட்டியாவதற்கு முன், சல்லியன் பங்கு கொண்ட போரில், அவரை எதிர்த்த எவராவது உயிர்தப்பி இருக்கிறார்களா பீமா ?.. என்று கேட்டார்.

தருமன் யோசித்தான். ஆம்.. சல்லியனை எதிர்த்த எவரும் உயிரோடில்லை. எதிர்த்தவர்கள் அத்தனை முக்கிய நபர்கள் இல்லை என்பதால் , இதை கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் அப்போதுதான் புரிந்தது தருமனுக்கு.

ஏதோ விஷயம் உள்ளது. இல்லையெனில், கிருஷ்ணர் இத்தனை பீடிகை போடமாட்டார் என்பதும் புரிந்தது.

கிருஷ்ணா.. பீமன் தான் செய்த சபதத்தை முடிக்கவேண்டும் என்ற வெறியில் அறியாமல் பேசுகிறான். அவனை மன்னித்தருளி, என்னவென்று தெளிவாய் எடுத்துரைக்கக் கூடாதா ?.. வணங்கியபடியே கேட்டான் தருமன்.

தருமா.. நாளை கௌரவர் படைக்குத் தளபதியாகப் பொறுப்பேற்று வரப்போகும் சல்லியரை எவராலும் வெல்லவே முடியாது என்பதே உண்மை. அவர்முன் கோபத்தோடு எவர் போரிட்டாலும், எதிரியின் ஆற்றல், ஆயிரம் மடங்காகப் பெருகி, அவரையே அடையும் என்பது அவர் கொண்டிருக்கும் வரம். எனவே, அவரை எதிர்த்து எவர் போரிடினும், அவனது ஆற்றலும் அவரையே அடையுமே தவிர, எதிர்த்து நிற்பவர் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை. அதனால்தான், என்ன செய்வதென்று இன்னமும் முடிவெடுக்காமல் இருக்கிறேன்... என்றார் கிருஷ்ணர்.

இப்படி ஓர் வரமா ? சல்லியரிடமா ? இது துரியோதனனுக்குத் தெரியுமா ? எதிர்த்து நிற்கும் எவருமே தப்பமுடியாவிடில், வெல்வதெப்படி ?.. உறைந்துபோய் நின்றான் பீமன்.

கிருஷ்ணா.. உனையன்றி வேறெதுவும் எங்களைக் காத்தருளாது என்பதை முழுமையாய் அறிந்தவன் நான். இத்தனை இன்னல்களைக் கடக்க எங்களோடு துணைநின்று, பேருதவி பலபுரிந்த நீ, இப்போதும் எமைக் காக்கத் தவறமாட்டாய் என்பதையும் அறிவேன். பாண்டவர் படை முழுவதுமே உன்னையே சரணாகதி அடைந்திருக்கிறது என்பதை மனதில் நிறுத்தி, என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் உத்தரவிடு கிருஷ்ணா.. என்று கைகள் குவித்து, கருணை மிகுந்த கண்களோடு, யாசிக்கும் தருமனைக் கண்டவுடன், சட்டெனத் தோன்றியது ஓர் முடிவு கிருஷ்ணருக்கு.

எதிரியின் வலிமை அதிகம் என்றறிந்தும் பயப்படாமலும், கோப்படாமலும், ஆத்திரப்படாமலும், பீமன் போல் அவசரப்படாமலும், அடுத்து என்னவென்பதை நிதானமாய் யோசித்து, தன்னை யாசித்து நிற்கும் தருமனே நாளை சல்லியரை எதிர்க்கத் தகுதியானவன் என்பது புரிந்தது கிருஷ்ணருக்கு. பீமனை நோக்கித் திரும்பினார்.

பீமா.. நாளை களத்தில் உன்முன் கௌரவர் படைக்குத் தலைமைதாங்கி நிற்கும் சல்லியரைக் கண்டால், என்ன தோன்றும் உனக்கு ?.. கேட்டார் கிருஷ்ணர்.

எதிரில் நிற்பவர் எவராயினும் எதிரியே எனக்கு களத்தில். உறவுகளைப் பற்றி கவலைகொள்ளாமல், களத்தில் வந்த கடமையை நிறைவேற்றவேண்டும் என்பதுதான் அர்ஜூனனுக்கே நீ செய்த உபதேசம் கண்ணா.. என்றான் பீமன்.

மறுக்கவில்லை. ஆனால், அன்றோடு குருஷேத்திரப் போர் முடிந்துவிட்டதா பீமா ?.. கேட்ட கிருஷ்ணருக்கு பதிலளிக்க இயலாமல் தடுமாறினான் பீமன்.

ஆனால், அதுதான், அந்த நிகழ்வுதான் நம்மை வெற்றியை நோக்கித் திருப்பியது. இல்லையேல், பீஷ்மரையும், துரோணரையும் அர்ஜூனனால் எதிர்கொண்டிருக்க இயலாது.. என்றான் பீமன்.

ஆம்.. போரில் வெற்றியை நோக்கிப் பயணிக்க, கடமையே முக்கியம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், நாளைய போர், வெற்றியை அடையப்போகும் விஷயம் என்பதைவிட, போரை முடிக்கப்போகும் விஷயம் என்று கொள்வதே சிறந்தது.
இரத்த உறவுமுறை கொண்ட உங்களால், ஏதோ ஒரு காரணத்தால், இத்தனை பெரிய யுத்தம் துவங்கப்பட்டது. இதில், கௌரவர், பாண்டவர் என்ற உங்கள் இருவரின் ஆற்றலும், திறமையும், வரங்களும், வீரமும், துணையும், சூழ்ச்சிகளும், இராஜதந்திரங்களும் என இவை எல்லாமே போரை நடத்திச் செல்ல பயன்பட்டனவையே தவிர, போரை முடித்துவைக்க அல்ல.
உங்கள் ஆயுதங்களோ, பழியுணர்ச்சியோ, கோபமோ, பகையோ, ஆத்திரமோ, வருத்தமோ இப்போரை முடிக்கவே விடாது. உறுவுகளுக்கிடையே நடைபெறும் இப்போரை மட்டுமல்ல.. எப்போரையுமே முடிக்க இயலாது. . என்ற கிருஷ்ணரை, குழப்பமாய்ப் பார்த்தான் பீமன்.

அப்படியெனில், நாளை இப்போர் முடிந்துவிடாதா ? பாஞ்சாலியின் சபதமும், நான் கொடுத்த சத்தியமும் நிறைவேறாதா ? நான் கொண்ட பழியணர்ச்சி தீராதா ?.. கோபமாய்க் கேட்டான் பீமன்.

பழியுணர்ச்சி என்பது உள்ளவரை எப்போரும் என்றுமே முடியாது பீமா. அது இருக்கட்டும்.. என்றவர், தருமனின் பக்கம் திரும்பினார்.

தருமா, ஒருவேளை நாளை சல்லியரின் எதிரில் நீ நிறுத்தப்பட்டால், என்ன செய்வாய் ?.. கேட்டார் கிருஷ்ணர்.

கௌரவர் படைக்குத் தலைமைதாங்கி வரினும், சல்லியர் எனது மாமன்.. என்னிலும் பெரியவர்.. வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்.. அவரை வணங்குவேன்.. அவரை வெல்ல, அவரின் ஆசி கேட்டு நிற்பேன். கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு போரிடுவேன்.. என்றான் தருமன்.

எதிரியிடம் சரணாகதியா ? இது நமக்குக் கேவலம் அண்ணா.. கொதித்தான் பீமன்.

தருமா.. சற்று முன்பு என்னிடம் சரணாகதி என்றாயே.. என் உத்தரவு கேட்டு நின்றாயே.. என் உத்தரவு இதுதான். நாளை சல்லியரை எதிர்க்கப் போவது நீதான். அதேசமயம், சல்லியரை மனதால் சரணாகதி அடைய உன்னால் இயலுமா ? களத்தில் எதிரிமேல் கருணை கொண்ட விழிடளோடு களமாட இயலுமா ? எதிரியின் அஸ்திரங்களுக்கு பதிலாக எய்யும் உனது அஸ்திரங்களை, சிறிது கூட கோபப்படாமல், சிரித்தபடியே எய்ய முடியுமா ? சுருக்கமாய்க் கேட்கிறேன்.. என்னைக் கண்டால் உன் மனதில் தோன்றும், அன்பும், கருணையும், சல்லியரைக் களத்தில் காணும்போது வெளிப்படுத்த இயலுமா ?.. கேட்ட கிருஷ்ணரின் ஒவ்வொரு வார்த்தைகளையும், மனதிற்குள் ஆழமாய் அசைபோட்டான் தருமன்.

சல்லியரின் முன் கோபத்தோடு போரிடும் எவரின் ஆற்றலும், ஆயிரம் மடங்காய்ப் பெருகி, சல்லியனை அடையும் என்பதால், கோபமே படாமல், கருணையோடு களமாடச் சொல்கிறான் கிருஷ்ணன். எதிரியின் வலிமையைக் கூட்டாமல், பகையுணர்ச்சியைக் கூட்டாமல், கருணையையும் அன்பையும் கூட்டி, செயலிழக்கச் செய்யச் சொல்கிறான் கிருல்ணன் என்பது தெளிவாகப் புரிந்தது.

முடியும் கிருஷ்ணா.. என்னால் முடியும். உன்னிடம் அடைவது போலவே, சல்லியரிடமும் என்னால் சனணாகதி அடைய இயலும் கிருஷ்ணா.. உறுதியாகச் சொன்னான் தருமன்.

இது சாத்தியமே இல்லை அண்ணா.. பீமன் இடைமறித்தான்.

சாத்தியம். இது சாத்தியம். தூணிலும், துரும்பிலும், பரந்தாமன் என்றபின், எதிரே நிற்கும் எதிரியிலும் பரந்தாமன். சல்லியரில் என்னால் கிருஷ்ணனனைக் காண இயலும். அதனால், இது சாத்தியம்.. என்றான் தருமன்.

நல்லது தருமா. குருஷேத்திரப் போர் நாளை நிச்சயம் முடிந்துவிடும். இதை முடிக்கப்போவது, பாண்டவரின் வீரமோ, கிருஷ்ணனனின் துணையோ அல்ல. இப்போரினை முடிக்கப்போவது உறவுகளுக்கிடையேயான அன்பு. அது வெளிப்பட வாய்ப்பின்றி தனை மறைத்தே நிற்கும். தனது இருப்பினை அது வெளிப்படுத்த ஆரம்பித்தவுடன், எதிர்த்து நிற்கும் எப்பகையும், எப்போரும் முடிந்துவிடும்.

மண்ணாசையால், பொன்னாசையால், அதிகார போதையால், அகம்பாவத்தால் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு போரும், காலம் காலமாய் தொடர, கர்ணன் போன்ற துணையும், பீஷ்மர் , துரோணர் போன்ற வீரமும், சகுனி போன்ற சூழ்ச்சியும், என் போன்ற தந்திரங்களும் துணைக்கு இருக்கலாம். ஆனால், அப்போரினை முடிவுக்கு கொண்டுவர, பெரும் சக்தியான சல்லியருக்கு எதிராக நீ காட்டப்போகும் அன்பு ஒன்றாலேயே முடியும்..

என்ற கிருஷ்ணரின் வார்த்தைகளில் இருந்த உண்மை என்னவென்பது, மறுநாள் போர் முடிந்தபின்தான் பீமனுக்கும் புரிந்தது.

உங்களுக்கும் புரியும்.. எல்லோருக்கும் புரியவேண்டும்..மகாபாரதம் வெறும் இதிகாசமோ, வீரகாவியமோ அல்ல.
ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் போராட்டம். இறுதியில், அன்பால் மட்டுமே வெல்ல முடியும் என்பது எல்லோருக்கும் புரியவேண்டும்.

பாரதம்.. மதத்தின் அடையாளமல்ல..மனிதனின் அடையாளம்.
--------------------------------------------------------------
படித்தேன்.பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.5.17

ராஜராஜ சோழனின் பெருந்தன்மை!


ராஜராஜ சோழனின் பெருந்தன்மை!

ராஜ ராஜ சோழன் அரியணை ஏறிய காலம். இவர் மகள்களில்  மூத்தவள் (மாதேவடிகள்) புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டு மதம் மாற முடிவெடுத்த சமயம்.

காலை அரசவையில் மகள் வந்து நின்று தான் புத்த பிஷுனியாக மாறப் போவதாக உறைக்க அரசன் மறுப்பேதும் கூறாது ஒத்துக்கொண்டு அனுப்பினார்

சில காலஞ்சென்று அரசன் தன் மகளைக் காண இளவரசர் ராஜேந்திரனுடன் நாகையிலிருந்த சூடாமணி விகாரம் செல்கிறார். பிஷூக்கள் அரசரை வெளியில் வந்து வரவேற்று, மகளைக் காண்பதாக இருந்தால்  புத்தரின் சந்நிதானத்தில்தான் காண வேண்டுமென்றும் அரச அம்சங்களின்றிப் பார்க்க வேண்டுமென்றும் விதிகளின் அடிப்படையில் அனுமதித்தனர்

மறுக்காமல், அரசன் இதைக் கடைப்பிடித்து உள்ளே சென்று கண்டபோது முதல் முறையாக உறைந்து போனார். பாலுட்டி சீராட்டி வளர்ந்தவள் அன்று தலை வழித்து சிறு காதனி கூட இன்றி அரசரை சந்தித்தாள். புத்தரின் பாதத்தில், நான் நிம்மதியாக இருக்கிறேனென்று கூறிவிட்டு சென்றவிட்டாள்

வருந்திய முகத்துடனும் சிந்தனை பரவி காணப்பட்டவரைப் பார்த்து ராஜேந்திரன், "தந்தையே சொல்லுங்கள் தகர்த்து விடவா இந்த விகாரத்தை!" என்று வினவ தந்திரத்தில் வல்லவர் விடையளித்தார்:

    "மகனே இதைத் தகர்த்தால் நமக்கு நஷ்டமே, லாபமில்லை அதை விடுத்து..நமது சைவ விழாக்களையும் வழிபாடுகளையும் விரிவு படுத்துவோம்...அன்றி புத்த மதத்தை எதிர்த்தால் மக்கள் அதிக அளவில் மதம் மாற நாமே வித்திடுவதாகும், மேலும் "சீ விஜய"(Singapore) சாம்ராஜ்ய வர்த்தகம் பாதிக்கப்படும், ஆக இவர்களத் தொடாமல் நம்மை வளர்த்து இவர்களப் புறந்தள்ள வேனுமென்றார்

இதன் பிறகு வளர்ந்ததுதான் நாம் இன்று கானும் பெரிய கோவில். காலப்போக்கில் புத்த மதமும் மறைந்தது

இந்த நிகழ்வை தற்கால நம் சமூக நிலைக்கு உவமையாக எடுத்துக்கொள்ளுங்கள். கலப்பு மணங்கள் செய்பவர்களுக்கு, குறிப்பாக வேற்று மதங்களில் திர்மணம் செய்து கொள்பவர்கள் - அவர்கள் சுயத்தை இழக்க  நேரிடும் (அரச அம்சங்களைச் சோழன் மகள் களைந்தது போல) என்ற தெளிவில்லை.

ஆகவே கலப்பு மணங்களை எதிர்க்காதீர்கள். காலப் போக்கில் மாறியவர்களே உணர்வார்கள் என்று விட்டுவிடுங்கள்!

படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.5.17

மீராவைக் கொண்டாடும் அவர்கள் ஏன் ஆண்டாளைக் கொண்டாடுவதில்லை?


மீராவைக் கொண்டாடும் அவர்கள் ஏன் ஆண்டாளைக் கொண்டாடுவதில்லை?

மீரட் புரட்சி நடக்கும் முன்பே வேலூர் புரட்சியை  நிகழத்தியர்கள் நாங்கள்..நீங்கள் மீரட் புரட்சியையே முதல் இந்திய சுதந்திர போராக பதிந்து கொண்டீர்கள்.

ஆங்கிலேயரை  வெற்றிக்கொண்ட வேலுநாச்சியாரை தந்தவர்கள் நாங்கள்..நீங்கள் தோற்ற ஜான்சிராணியே வீரத்தின் அடையாளமாக கொண்டாடினீர்கள்..

வங்கத்தேசத்திற்கு முன்பே மொழிப்போரை நிகழ்த்தி மொழிக்காக அதிக உயிர் தியாகம் செய்தவர்கள் நாங்கள்.

நீங்கள் வங்க தேசத்தினருக்காகவே தாய்மொழி தினத்தை நினைவு கூறுகின்றீர்கள்..

வடக்கே ஒருத்தி (மீரா) வடமொழியில் கடவுளை கணவனாக அடைய பாடி கடைசி வரை காத்திருந்தபோது..

தெற்கே ஒருத்தி தமிழில் திருப்பாவை பாடி சூடி தந்த சுடர்கொடியாய் (ஜோதியாக மாறி மரணம் இல்லாத பெருவாழ்வு பெற்ற  ஆண்டாள்) அதே கடவுளை கணவனாக அடைந்தாள்..

நீங்கள் வடமொழியை  தேவபாசை என்றும்  உலகில் முதலில் தோன்றிய மூத்த  மொழியாம் தமிழ்மொழியை  நீசபாசை என்றீர்கள்..

நாங்கள் அவ்வையார், வள்ளுவர், கம்பன், வள்ளலார்,  பாரதியை என பலரை  தந்தோம்.. நீங்கள் தாகூரை மட்டும் கொண்டாடினீர்கள்..

நாங்கள் கணவனுக்கு கற்பை நீருபிக்க வேண்டி  தீயில் மூழ்கி வந்த உங்கள் சீதையையும் வணங்குகிறோம்..(நீங்கள் கற்புடன் அனுப்பிய இராவணனை அரக்கனான கதைகட்டி புராணத்தை மாற்றி காட்டுறீங்க)

 கணவனுக்காக மரணத்திற்கான  நீதி வேண்டி பாண்டிய அரசனை எதிர்த்து தனியாக போராடி வென்ற கற்பு தெய்வமே எங்கள் கண்ணகி தாய்  மதுரை நகரை தீயிட்டு எரித்த கற்புகரசி  கண்ணகியை நீங்கள் யாரென்றே இன்னும் அறிவதில்லை..

உங்களது ரிஷிகளை பற்றி எங்களுக்கு கற்பிக்கிறீர்கள்..

எங்களது சித்தர்களை பற்றி நீங்கள் கற்பதில்லை..

நாங்கள் குப்தர்களை பற்றி படிக்கும் அளவுக்கு நீங்கள் சோழப்பேரரசை சேர, பாண்டியர்  பற்றி நீங்கள் அறிவதில்லை..

கலிங்கம் வென்ற அசோகரை நாங்கள் புகழ்கிறோம்..

கல்லணை கட்டிய கரிகால் சோழனை நீங்கள் பேசுவதில்லை..

இராமகிருஷ்ணரும், சீரடி சாய் பாபாவும் எங்கள் தமிழ் நாட்டில்  வழிபாட்டு கடவுளாக விளங்குவது உங்களுக்கு தெரியுமா?

கருணை இல்லாத ஆட்சி கடிந்து ஒழிக! என  ஆங்கிலேயர் ஆட்சியில் முழங்கியவர்  அனைத்து உயிர்களும் ஒருமைப்பாடு உணர்வுடன்  எல்லா உயிர்களும் இன்புற்று  வாழ வேண்டிவர்  ஜீவகாருண்ய ஒழுக்கம்  கடைபிடித்து மரணம் இல்லாத  பெரும் வாழ்வு பெற்ற மகான் இராமலிங்க அடிகள் என்கிற   வள்ளலார் பற்றி வட (மட) நாட்டு மக்களுக்கு  தெரியுமா?

தமிழக முதல்வராக விளங்கி ஓமந்தூரார் பதவி துறந்து எளிமையாக  வடலூர் சென்று கடைசி காலம் வரை திரு இராமலிங்க அடிகளார் அவர்கள் திருப்பணி செய்து வாழ்ந்தது போல் முதல்வர் அங்கே யாராவது   உண்டா?

தமக்கு வந்த வாய்ப்பை விவேகானந்தருக்கு விட்டுகொடுத்து உலகறியச் செய்தவர் இராமநாதபுர சேதுபதி மன்னர் அவரை நீங்கள்  அறிந்துகொள்ள நினைத்தது உண்டா?.

நேதாஜி படைகட்டியபோது தமிழர்களிடத்தில் அதிக அளவு ஆதரவை திரட்டி தந்தவர் வள்ளலார் வழிவந்த எங்கள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்பதை நீங்க எத்தனை பேர் அறிவீர்

தமிழகத்தின் தெருக்கள் தோறும், வீடுகள் தோறும் நேதாஜிகளும், காந்திகளும், அம்பேத்கர்களும் உண்டு.

எத்தனை வீர பாண்டிய கட்டபெம்மண் வ.உ.சிக்கள்,புதுமை பாரதிகள், ஈ.வே.ரா பெரியார்கள், இராஜதந்திர  இராஜாஜிகள், காமராசர்கள், பசும்பொன் தேவர்கள், கக்கன்கள், அறிஞர் அண்ணாகள், கலாம்கள் உங்களிடத்தில் உண்டு..?

கல்விக்கான தங்கள் சொத்துகள் அனைத்தும் வழங்கிய கல்வி வள்ளல்கள் பச்சையப்பா முதலியார், தியாகராயர், செங்கல்வராயர்,அழகப்பர்  இப்படி பட்டியல் பெரியது

உலகம் போற்றி கொண்டாடும் எங்கள் சிற்பம் மற்றும் நாட்டிய கலைகள்

 தமிழ் மகள் முறத்தில் புலி அடித்து விரட்டிய வீரம் எங்கள் வீரம்

 ஆராய்ச்சி மணி கட்டி பசுவுக்கு நீதி அளித்த  மனுநீதி சோழன் தந்த  நீதி
எங்கள் நீதி

முல்லை கொடிக்கு தேரையும், புறாவிற்காக தான் தொடையையும்  தந்த மன்னர்கள் கொடை எங்கள் கொடை (அரிசி பானையில் இருந்தும் அள்ளி கொண்டு சென்றது இல்லை)

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்கள் நாங்கள்..ஆம்.. நாங்கள் தமிழர்கள்.*.
---------------------------------------------------------
படித்ததில் அதிர்ந்தது.உங்களுடன் பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.8.16

வேப்பங்குச்சியும், நமது பாரம்பரியமும்!


வேப்பங்குச்சியும், நமது பாரம்பரியமும்!

அந்தக் காலத்தில் காலையில் பற்களைத் துலக்குவதற்கு வீடுகளில், உமிக் கரியையும், உப்பையும் கலந்து சம்படங்களில் அல்லது சில வீடுகளில் பெரிய தேங்காய் சிரட்டைகளில் வைத்திருப்பார்கள். அதைத்தான் பெரியவர்களும் உபயோகிப்பார்கள். வீடுகளில் உள்ள குழந்தைகளும் உபயோகிக்க வேண்டும். பற்களும் நன்றாக இருந்தன. கிராமத்து வீடுகளில் வேப்பங்குச்சிகளால் பற்களைத் துலக்கிவார்கள்.

இப்போது கால மாற்றம் மற்றும் நாகரீகத்தால் எல்லாம் மாறிவிட்டது. நெல் உமிக்கரி பற்பொடியெல்லாம் எந்த வீட்டிலும் இல்லை. வேப்பங்குச்சிகளும் இல்லை.எல்லாருடைய வீடுகளிலும் பற்பசைதான் (Tooth Paste) . விதம்விதமான பற்பசைகள், 4 பேர்கள் உள்ள குடும்பத்திற்கு மாதம் நூறு ரூபாய்களுக்கு பற்பசை வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா? என்று தொலைக் காட்சி விளம்பரங்களில் கேட்கத் துவங்கியிருக்கிறார்கள்!

அனால் வெளி நாட்டுக்காரர்கள் அதன் மகத்துவத்தை உணர்ந்து வேப்பங்குச்சிகளை உபயோகிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

அங்கே வேப்பங்குச்சிகள் விற்கும் விலையைப் பார்த்தால் நமக்கு மயக்கம் வந்து விடும்.

பத்து வேப்பங்குச்சிகளின் விலை 10 டாலர்
அதாவது 680 ரூபாய் இங்கே பேஸ்டையும் அங்கே வேப்பங்குச்சியையும் விற்கிறார்கள் பல் நாட்டு விற்பனையாளர்கள்.கீழே உள்ள படங்களைப் பாருங்கள் உங்களுக்கே தெரியவரும். நமது பாரம்பரியம் இப்போதாவது உங்களுக்குப் புரிந்தால் சரிதான்!!!!




அன்புடன்
வாத்தியார்
==============================================
வேப்பமரத்தின் மற்ற மருத்துவ உபயோகங்கள்

1. Neem, a tree native to India, is a vital ingredient in Ayurveda. Regarded as a 'one tree pharmacy', the Neem tree has several medicinal uses and forms an integral part of home remedies for the hair and skin.

2. Neem leaf has antifungal and antibacterial properties, making it effective in treating dandruff.

3. It also relieves dryness and itching, strengthens hair and promotes hair growth.

4. Traditionally, neem paste has been used to condition the hair and scalp.

5. It also soothes irritation, prevents dryness and flaking.

6. Neem is mentioned in most Ayurvedic formulations for the treatment of skin disorders because of its detoxifying properties.

7. The growth of acne-causing bacteria such as propionibacterium acnes (P. acnes) and staphylococcus epidermidis is also inhibited by neem.

8. The role of neem in acne is further supported by studies which have shown that it exhibits anti-inflammatory activity by suppressing P. acnes-induced reactive oxygen species (ROS) and the pro-inflammatory cytokines TNF-a and IL-8.

9. Neem oil and neem leaves are excellent skin care ingredients. The oil relieves dry skin and soothes itchiness, redness and irritation.

10. It also improves general skin health and immunity, combating bacterial infections such as acne, boils and ulcers.

11. Its antimicrobial properties help heal wounds without causing any infections or septic conditions.

12. For acne, neem tackles bacteria from the root and prevents the recurrence of pimples and blemishes.

13. It is especially beneficial for skin disorders like eczema and minor skin infections. Neem leaves also eliminate acne-causing bacteria.

14. It is also a gastro protective element and effective in healing ulcers.

15. It contains high level of antioxidants that help protect skin from environmental damage and from aging.

16. Neem oil contains fatty acid and vitamin E that gets absorbed easily into the skin, it helps rejuvenate skin cells and restore elasticity.

17. It helps maintain a glowing skin and balance skin tone.

18. The high fatty-acid content in neem oil helps prevent and treat scars from acne.

19. Neem leaves are also excellent exfoliants; it tightens pores and removes impurities when used as a mask.

20. It is an excellent healer of skin fungal infections.

(Data courtesy: Chandrika Mahendra, Senior Research Scientist, R & D, The Himalaya Drug)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!