மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.4.21

எது உங்கள் கையில்?



எது உங்கள் கையில்?

பசியை கொடுத்தவனே உணவையும் கொடுப்பான் வலியை கொடுத்தவனே மீள வழியை கொடுப்பான். 

தேடல் மட்டுமே உன் கையில்.

இன்றைய சிந்தனை 
.................................................................

"தேடல் இல்லா வாழ்க்கை...!"
..........................................................

உலகின் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. சிறு குழந்தையாக இருக்கும் போது துவங்கும் ஓட்டம் மனிதனின் இறுதி மூச்சுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது...

*"தேடல் இல்லா வாழ்க்கை, கடலினில் விடப்பட்ட காகிதக் கப்பலை போல திசையறியாது மூழ்கிப் போகும்"*_

படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் அனைவரின்  கனவும் வாழ்க்கையில் ஒரு பெரிய நிலையை அடைவதே!, 

அதற்கான தகுதியை நம் கல்விமுறை கற்றுக் கொடுக்கிறதா....? என்றால் அங்கு பெரும் கேள்விக் குறிதான் நம் முன் நிற்கும்...

கல்லூரி என்னும் சிறு கூட்டிலிருந்து வேலை தேடிவரும் அனைவரின் கனவும் கையில் நல்ல வேலை, பை நிறைய ஊதியம், மகிழ்ச்சியான வாழ்க்கை இது மட்டும் தான்...

பெரும்பாலானோர் கற்றுகொள்ள விரும்பவில்லை. கற்றதை விற்கவே விரும்புகின்றனர். அப்படியே நாம் விற்க விரும்பினாலும், இங்கு யாரும் அதை வாங்க விரும்புவதில்லை...

வேலை தேடி நகரம் என்னும் பெருங்கடலுக்குள் நுழைந்து முத்தெடுக்க அனைவருக்கும் ஆசைதான்..

அது எந்த அளவு அனைவருக்கும் சாத்தியம் என்று தெரியவில்லை, பெரும்பாலானோருக்கு அது பலமுறை தோல்வியைதான் பரிசளித்திருக்கிறது...

கிராமங்களில் இருந்து வருவோரின் நிலைமை அதைவிட அபாயகரமாக இருக்கும்.. இரண்டு உலகங்கள்,  அறிமுகமில்லா உலகம், அறிமுகமில்லா மனிதர்கள், எனக் காணும் அனைத்தும் இங்கு புதிதாகதான் இருக்கும்...

*"இருபது வருடங்கள் கற்ற கல்வி சொல்லி கொடுக்காத பாடத்தை, ஒரு வருட தேடல் கற்று கொடுத்து விடும்...!*_

முதலில் நமக்கு எது தேவை என்று தெரிந்து கொள்ள வேண்டும், வாழ்க்கையில் வெற்றிபெற கல்வி, அனுபவம் இரண்டு மட்டும் போதாது. அடுத்தது என்ன என்ன என்ற தேடல் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கற்பதற்கு எந்த எல்லையும் கிடையாது...

உங்கள் தடைகளை உடைத்தெறிந்து புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி புதிதாக கற்க முடியவில்லையெனில், தேர்ந்தெடுத்த துறையில் உங்களுக்கு நிகர் எவரும் இல்லையென்று சாதித்துக் காட்டவேண்டும். 

தேடல் உள்ளவரை மட்டுமே இந்த வாழ்க்கையின் பல அழகிய தருணங்களை நம்மால் உணர முடியும். அந்த தேடல் மாறிக்கொண்டே  இருக்கும். தேடல் ஒன்றே நிரந்தரம்...

*ஆம் நண்பர்களே...!*

⚫ *தேடுங்கள்...! தேடுங்கள்...!! உங்கள் எல்லை எதுவென்று தெரியும் வரை ஓடுங்கள். வெற்றி உங்களை தழுவும் வரை தேடிக்கொண்டே இருங்கள். வெற்றி வெகு தூரமில்லை.விடியும் பொழுது வெற்றியுடன் விடியட்டும்...!*
---------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.4.21

நகைச்சுவை நடிகரும் ஓவியருமான பாண்டு!!!



நகைச்சுவை நடிகரும் ஓவியருமான பாண்டு!!!

அதிமுககொடி இரட்டை இலை உருவான விதம்*

 *பாண்டு இவர் சினிமா நடிகர்மட்டுமல்ல,சிறந்த ஓவியரும் கூட.*

*தமிழ்நாட்டில் ஓவியத் துறையில் phd பட்டம் பெற்ற முதல் நபர் இவர்தான்.*

*தமிழக அரசின் சுற்றுலாத் துறை* *சின்னத்தை வரைந்து கொடுத்தவர்* *இவர் தான்.*

*நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும்தான் நினைவுக்கு வரும்.*

*அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான்.*

 *இது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தனது அனுபவங்களைப் பற்றி அவர் நினைவு கூர்ந்த அதிமுக தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார்  எம்.ஜி.ஆர்.(MGR)   கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா... என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அதிமுக என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார். அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.*

*அப்போதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர்.*

*இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே.*

 *சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார்.*

*அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போதும் கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார்.*

*அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர்.*

*தமிழகம் முழுவதும் நான் வடிவமைத்த கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும் வேளைகளில் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றார் அவர்.*
=======================================
Pandu is a Born: (February 19, 1947) Tamil film actor who has appeared in many comedy roles. His brother Idichapuli Selvaraj had also previously appeared in films as a comedian.Native Place Komarapalayam

Career
After finishing his schooling, Pandu entered the College of Arts and Crafts in Chennai and nurtured an interest in creative art. Pandu made his acting debut in Karaiyellam Shenbagapoo joining his brother Idichapuli Selvaraj who had appeared in several films a comedian. He played a supporting role in Agathiyan's Kadhal Kottai portraying Ramasamy who accompanies Ajith Kumar in Rajasthan.

In 2013, he starred in Vellachi, which featured his son Pintu Pandu in a leading role. He designed Tamil Nadu Tourism Logo Umbrella and got prize and appreciation. He designed the Two Leaves Party Logo under the instruction and supervision of AIADMK founder leader MGR

Away from films, in 1975 he started a brass and aluminium business in Chennai called Prapanj Unlimited. He runs it as a family business, with son Prabhu Panju in charge. In 2014, he held an art exhibition alongside another son Panju Pandu.
------------------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.4.21

நரிப்பயிறைத் தெரியுமா?


நரிப்பயிறைத் தெரியுமா?

நெஞ்சில் உள்ள சளியை அகற்றி கபத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ள நரிப்பயிறு பற்றிய பதிவு

 நரிப்பயிறு என்று பெயர் கேட்டதுமே நிறைய பேருக்கு எப்படி இருக்கும் என்ற ஆவலும் இதென்ன புதுசா ஒரு பயிறு என்று கேட்பவர்களுக்கும் நாம் அடிக்கடி இதனை சாப்பிட்டு உள்ளோம் என்று தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்.

கடைகளில் விற்பனை 
செய்யப்படும் பாம்பே மிக்சரில் 
பச்சைநிறத்தில் பச்சைப்பயறு போல அளவில் சிறியதாக இருக்கும் 
பயிறுதான் நரிப்பயிறு . 

இதனை ஹிந்தியில் மட்கி என்பார்கள்.

நரிப்பயறு ஏன் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது?

நரிப்பயறு என்பது வறட்சியை தாங்கி வளரும் செடி அதேசமயம் இந்த செடிக்கு பூச்சிக்கொல்லிகள் தெளித்து வளர்க்க வேண்டாம். 

இந்த செடிக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்புச் சக்தி நிறையவே உண்டு.

ஆகவே இயற்கையான முறையில் வளர்ந்த இந்த நரிப்பயிறு உடலுக்கு மிகவும் நல்லது.

நரிப்பயறில் நார்ச்சத்து , புரதம் , கால்சியம் , பாஸ்பரஸ் , மக்னீசியம் , இரும்புச்சத்து என உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

1 கப் நரிப்பயறு 282 கலோரி மதிப்பு உடையது. 

கொழுப்பு அறவே இல்லாத ஒரு பயறு. 40.8 கிராம் அளவுக்கு தான் கார்போஹைட்ரேட் உள்ளது.

இதனை முளைக்க வைத்து உண்ணும் போது மிகவும் நல்லது.

நரிப்பயறை முளைக்க வைத்து சாலட்டாக அல்லது பருப்பு மசியல் போல அல்லது பயறு துவையல் என பல்வேறு விதமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நரிப்பயிறு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

சர்க்கரை நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சோறு ஒரு சிறிய கப் உடன் நரிப்பயிறு மசியல் என உண்ணும் போது வயிறு நிரம்பி விடும்.

அதேசமயம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

நரிப்பயிறு இப்போது சர்வசாதாரணமாக பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் மளிகை கடைகளிலும் 
நாட்டு மருந்து கடைகளிலும்,
கிராமப்புற பகுதிகளிலும் கிடைக்கிறது.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நரிப்பயிறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நரிப்பயிறு சர்க்கரை நோயை மட்டும் அல்ல இதயக்கோளாறுகளையும் வரவிடாது.

நெஞ்சில் படிந்துள்ள அதிகப்படியான சளிக் கட்டை 
நீக்கி கபத்தைக் குறைக்கும் அற்புதமான உணவு:*நரிப்பயிறு கஞ்சி:*

*தேவையான பொருட்கள்:*

*நரிப் பயிறு - 150 கிராம்,*
*பால் - 150 மி.லி*
*கற்கண்டு - தேவையான அளவு*

*செய்முறை:*

*முதலில் நரிப்பயிற்றை வறுத்து உடைத்துக் கொள்ளவும்.*

*ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.*

*அதில் வறுத்து உடைத்துள்ள நரிப்பயிறை போட்டு நன்றாக கொதிக்க வைத்து  காய்ச்சவும்.*

*நன்கு காய்ச்சியவுடன் அதில் பால் மற்றும் கற்கண்டை நன்கு தூளாக்கி  இரண்டையும் நன்கு கலக்கி  ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.*

*பயன்கள்:*

*இந்தக் கஞ்சியை நெஞ்சில் அதிக கபம்(சளி) உடையவர்கள்  தொடர்ந்து குடித்து வந்தால் நெஞ்சில் உள்ள சளியை அகற்றி கபத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ள உன்னதமான கஞ்சி.*

நெஞ்சில் உள்ள சளிக்கட்டு குறைய:

*வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.*

சுவை மிக்க இனிப்பு நரிப்பயிறு உருண்டை:

நரிப்பயிற லேசா வறுத்து, நல்லா தூளா அறைத்து கொள்ளவும். இதுகூட  நன்கு அறைத்து தூளாக்கப்பட்ட பொட்டுக்கடலை மாவை சேர்த்து கொள்ளவும்

நாட்டு சர்க்கரை எனப்படும் கரும்புச் சக்கரைல பாகு காய்ச்சி(சிறிது ஏலக்காய் சேர்த்து) எடுத்து கொள்ளவும்.

நரிப்பயிறு,பொட்டுக்கடல மாவு கலவையில் அந்த சர்க்கரைப் பாகை சுடச்சுட கொஞ்சகொஞ்சமா ஊத்திக்கிட்டே, ஒரு கரண்டியால் கலந்து கொண்டே இருக்கவும். 
மாவும் பாகும் உருண்ட புடிக்கற பதத்துக்கு நல்லா கலந்ததுக்கப்புறம்
கையில தேங்கா எண்ணயத் தொட்டு கொண்டு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க ஆரம்பிக்கவும்.

அவ்வளவுதாங்க சுவையான இனிப்பு நரிப்பயிறு உருண்டைகள்  தயாராகி விட்டது.

இது எவ்வளோ ருசியா இருக்குமுன்னு சாப்பிட்டவுங்களுக்கு மட்டும்தான் தெரியும்

இந்த நரிப்பயிறு இனிப்பு உருண்டைகளை 2 மாதம் வரைக்கும் வச்சு சாப்பிடலாம்,கெட்டு போகாத தன்மை உடையது.

நரிப்பயிறு படம் மேலே!👇👇💚♥️
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!