மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.1.16

கடவுள் யாரையும் கைவிடுவதில்லை!


கடவுள் யாரையும் கைவிடுவதில்லை!

🌼கடவுள் யாரையும் கைவிடுவதில்லை🌼

🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…

🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது  என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று
முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.

🌼அப்போது…கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”

🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.

🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலுக்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போதில் இருந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான்
கவனித்து வந்தேன்.

🌼 அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது.

🌼ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.

🌼இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட
வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.

🌼“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.

🌼ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது.

🌼அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.

🌼ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.

🌼“இத்தனை ஆண்டு காலத்தில் மூங்கில் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த
வேர்களும் நன்கு உறுதியாக மாறியது.

🌼பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

🌼எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை
அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” என்று சாந்தமாக பதிலளித்தார்.

🌼மேலும் கடவுள் என்னிடம்,

🌼“உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய்,

🌼நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில்
விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன்.

🌼மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.

🌼ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.

🌼“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

🌼இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”

🌼நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”

🌼“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

🌼“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.
“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.

🌼“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான்.

🌼“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.

🌼நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன்.

🌼மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.

🌼ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.

🌼கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை🌼

                              🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.1.16

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

மாணவக் கண்மணிகளுக்கும், வகுப்பறைக்கு வந்து போகும் நல்
உள்ளங்களுக்கும், சக பதிவுலக பதிவர்களுக்கும் வாத்தியாரின்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.1.16

விடாது விதி!


விடாது விதி!

நாட்டின் முதல் குடிமகனாக இருந்தால் என்ன? கடைசிக் குடிமகனாக இருந்தால் என்ன? விதி விடாது! விதி எல்லோர்க்கும் ஒன்றுதான். விதியின் முன் எல்லோரும் சமம்தான்.

சென்றவாரம் அடியவன் விதியின் கையில் வசமாக சிக்கிக்கொண்டேன். விதி என்னைத் தள்ளிக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்துவிட்டது. 5-1-2016 செவ்வாய்க்கிழமையன்று எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. 3 மருத்துவர்கள், 4 பணிப்பெண்கள் சேர்ந்து செய்துவைத்தார்கள்.

என்ன சிகிச்சை?

வேறேன்ன சிறுநீரகத்தில் இருந்த 24எம்.எம். அளவுள்ள கல்லை (Kidney Stone) நீக்கும் சிகிச்சைதான். நான் தலைமை மருத்துவரிடம் வேண்டிக்கொண்டேன். எனக்கு வலியில்லாமல் சிகிச்சையைச் செய்ய வேண்டினேன். முழுமையான மயக்க மருந்தைக் கொடுத்துவிட்டார்கள். சுமார் 4 மணி நேரத்திற்கு என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. அறையில் கண் விழித்தபோதுதான் எனக்கு நினைவு வந்தது,



உடலைச் சுற்றி பல குழாய்கள், உடலில் ட்ரிப்ஸ் மூலம் மருந்து செல்வதற்கான குழாய் (இடது கையில்) சிறுநீர் வெளியேறுவதற்கான குழாய் - அடி வயிற்றில், முதுகில் ஓட்டை போட்ட இடத்தில் இரத்தம் வடிவதற்காக ஒரு குழாய் என்று பல குழாய்கள். 3 நாட்கள் கடும் அவஸதை. ஆனால் அது தெரியாத அளவிற்கு மருந்துகள் உட்செலுத்தப்பட்டன,

மொத்தம் 5 நாட்களுக்குப் பிறகு, முழுமையாக சிகிச்சை முடிந்த பிறகு, என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். 4 நாட்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்போது நான் நலமாக உள்ளேன். வழக்கம்போல மன வலிமை
யோடும் உள்ளேன்.

ஆகவே மாணவக் கண்மணிகள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். பாடங்கள் பொங்கல் நாள் முதல் தொடரும்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!