மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.12

Mini Story: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்?

Mini Story: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்?

இளம் தம்ப்திகள் ஒரு பழைய வீட்டிற்குக் குடிபோனார்கள். அது மாடி வீடு.

பக்கத்து வீட்டு பெண்மணி, அந்த அதிகாலை நேரத்தில், துணிகளைத் துவைத்து முடித்து, கொடிக் கம்பியில் காயப் போட்டுக்கொண்டிருந்தாள்.

அதைத் தன் வீட்டு ஜன்னல் கண்ணாடி வழியே பார்த்த இளம் மனைவி தன் கணவனிடம் சொன்னாள்: “பக்கத்து வீட்டுப் பெண் சரியாகவே துவைக்க வில்லை. அங்கங்கே  அழுக்கு அப்படியே நிற்கிறது. ஒரு வேளை சோப்பை மாற்றினால், துணிகள் பளிச்சிடலாம்"

அதைத் தன் மனைவியின் வற்புறுத்தலுக்காகப் பார்த்த கணவன், அமைதியாக இருந்தான். ஒன்றும் சொல்லவில்லை.

அது தொடர்ந்தது. அடுத்தடுத்த இரண்டு நாட்களும், ஜன்னல் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்துவிட்டு அவ்வாறே குறை சொன்னாள்.

ஒரு மாதம் ஓடி விட்டது.

அன்று காலையில், ஜன்னல் வழியே அடுத்த வீட்டு மொட்டை மாடியில் காயப் போட்டிருக்கும் துணைகளைப் பார்த்து அசந்து விட்டாள் நம் நாயகி. அவைகள் சுத்தமாகவும்,  பளிச்சென்றும் இருந்தன!

ஆச்சரியம் மேலிட, தன் கணவனிடம் சொன்னாள்: “இந்த அதிசயத்தைப் பாருங்கள். இப்போதுதான் அடுத்த வீட்டுக்காரி, சரியாகத் துவைத்து இருக்கிறாள். அவளுக்கு யார்  சொல்லிக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை!? ”

அவளுடைய் அன்புக் கணவன் அமைதியாகச் சொன்னான்: “இன்று அதிகாலையில் எழுந்து, நமது வீட்டு ஜன்னலை நான் நன்றாக துடைத்திருக்கிறேன். collins Liquid  போட்டுத் துடைத்திருக்கிறேன்.”

மனைவி வாயடைத்துப்போய் விட்டாள். அவளால் மேற் கொண்டு ஒன்றும் பேச முடியவில்லை.

அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு, நமது பக்கம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் மட்டும் அடியவனுடைய கைவண்ணம்!

அன்புடன்
வாத்தியார்
 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.12.12

வாசல் எத்தனை வாசல(டா) !

வாசல் எத்தனை வாசல(டா) !

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்

ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலைவாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில்வாசல்
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல்
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மனவாசல்

வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல்
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப்புகழ் வாசல்

சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ்வாசல்
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும்வாசல்

இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும்வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒருவாசல்

மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர்வாசல்
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும்வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்

ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலைவாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில்வாசல்
(ஆறுமுகன் ... ).

   
பாடியவர்கள்: சூலமங்கலம்' சகோதரிகள்

பழைய படம். படத்தில் சகோதரிகளுடன் சேர்ந்து வயலின் வாசிப்பவர் யாரென்று தெரிகிறதா?


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

27.12.12

கவிதைச் சோலை: காடு வெளையட்டும் பொண்ணே! காலமிருக்குது பின்னே!

கவிதைச் சோலை: காடு வெளையட்டும் பொண்ணே! காலமிருக்குது பின்னே!

இன்றைய கவிதைகள் பகுதியை பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-----------------------------------------------------------------------------
காடு வெளையட்டும் பொண்ணே!

நாயகி:
சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக்கரையை ஒசத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
சம்பாப்பயிரைப் பறிச்சு நட்டுத்
தகுந்தமுறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு - வரப்பு
உள்ளே மறைஞ்சிருக்கு - அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் - நமக்குக்
கையுங்காலும் தானே மிச்சம்?


நாயகன்:
இப்போ
காடு வெளையட்டும் பொண்ணே - நமக்குக்
காலமிருக்குது பின்னே
மண்ணைப் பொளந்து சொரங்கம் வெச்சு
பொன்னை எடுக்கக் கனிகள் வெட்டி
மதிலுவச்சு மாளிகை கட்டி
கடலில்மூழ்கி முத்தை யெடுக்கும்
வழிகாட்டி மரமான
தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் - ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம்!

நாயகி:
அட
காடு வெளௌஞ்சென்ன மச்சான் - நமக்குக்
கையுங்காலும் தானே மிச்சம்?


நாயகன்:
இப்போ
காடு வெளையட்டும் பொண்ணே - நமக்குக்
காலமிருக்குது பின்னே

நாயகி:
மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே - பசி
வந்திடக் காரணமென்ன மச்சான்?

நாயகன்:
அவன்
தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி!

நாயகி:
பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு - இனிப்
பண்ணவேண்டியது என்ன மச்சான்?

நாயகன்:
தினம்
கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி

நாயகி:
வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ?

நாயகன்:
இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது - சேரிக்கும்
இன்பம் திரும்புமடி!

நாயகி:
நல்லவர் ஒன்றாய் இணைந்து விட்டால் - மீதம்
உள்ளவரின் நிலை என்ன மச்சான்?

நாயகன்:
நாளை வருவதை எண்ணி எண்ணி - அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி!

நாயகி:
அட
காடு வெளௌஞ்சென்ன மச்சான் - நமக்குக்
கையுங்காலும் தானே மிச்சம்?


நாயகன்:
நானே போடப்போறேன் சட்டம் - பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்!
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்!

 - கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்




(இந்தப் பாடலை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதலில் தான் வேலைபார்த்த ‘ஜனசத்தி’ என்னும் பொதுவுடமைக் கட்சியின் நாளிதழில் எழுதியிருந்தார். திரையுலகிற்கு வந்தபிறகு சிறிது மாற்றம் செய்து புரட்சித் தலைவரின் ‘நாடோடி மன்னன்’ திரைப்பட்த்திற்கு எழுதிக்கொடுத்தார். ஆண்டு 1958 படத்தில் இப்பாடலை திரு.T.M.செள்ந்தரராஜனும், நடிகை திருமதி. பானுமதியும் பாடியிருப்பார்கள்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச் சேர்க்கை:

அறிவிப்பு:

நேற்று நான் எழுதிய பதிவிற்கு, நிறைய மின்னஞ்சல்கள்  வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் படித்துவிட்டு,  உங்களில் அதிகமான பேர்கள் சொல்லியுள்ள கருத்தின்படி நடக்கலாம் என்றுள்ளேன். நீங்கள்தான் (மாணவக் கண்மணிகள்) எனக்கு முக்கியம். நல்லதொரு அறிவிப்பை இன்னும் 4 தினங்களில் பதிவில் வெளியிடுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++====
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!