
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கவியரசரின் தமிழ் இலக்கணம்!இந்தத் தொடர் பதிவில் இதற்குமுன் வந்த பதிவின் சுட்டி
இங்கே உள்ளது.அதைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
"காரிகை கற்றுக் கவி பாடுவதிலும்பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே!"என்று ஒரு தமிழ் அறிஞர் தமிழ் இலக்கணத்தின் சிறப்பையும், அதைக் கற்றுத் தேர்வதிலுள்ள சிரமத்தையும் பற்றிக் கூறும்போது சொல்வார்.
'யாப்பருங்கலக் காரிகை' என்பது கவிதைக்குரிய இலக்கணத்தை சொல்லும் நூல்
எதுகை, மோனை, சீர் என்று கவிதைக்குரிய எல்லா வரம்புகளையும் அந்த நூல் உள்ளடக்கியது.
அந்த நூலைப் படித்துத் தேர்ச்சி பெற்றுக் கவி பாடுவதை விடக் கோயிலில் பேரிகை கொட்டிப் பிழைப்பு நடத்தலாம் என்றார் அந்தத் தமிழ் அறிஞர்.
கவிதைகளில் எதுகை (Rhyme) முக்கியம், எதுகைதான் ஒரு கவிதைக்கும், பாடலுக்கும் இனிமை தருவது.
ஒவ்வொரு அடியின் ஆரம்பத்திலும் எதுகை இருப்பதுதான் கவிதையின் சிறப்பு.
சொல்லின் இரண்டாவது எழுத்து ஒரே மாதிரி வருவது எதுகை.
முருகனே என்ற சொல் முதல் அடியின் முதற்சொல்லாக உள்ளது என்றால் மருகனே என்ற சொல் அடுத்த வரியின் முதற்சொல்லாக வந்தால் எதுகை பாட்டில் வந்து அமர்ந்து கொண்டு விடும்.
பாட்டைப் பாருங்கள்:
"முருகனே செந்தில் முதல்வனே மாயோன்மருகனே ஈசன் மகனே ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்நம்பியே கைதொழுவேன் நான்."முருகனே, மருகனே என்று 'ரு' எழுத்து உள்ள சொற்கள் அடுத்தடுத்த வரிகளில் வருகின்றன.
அதேபோல தம்பியே, நம்பியே என்று 'ம்' எழுத்து உள்ள சொற்கள் அடுத்தடுத்த வரிகளில் வருகின்றன.
நாம் எழுதினால் வார்த்தைகளைத் தேடிப் போட்டு எழுத வேண்டிய சிக்கல் உண்டு.
ஆனால் கடவுள் கொடுத்த வரத்தால், கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதியபோது, சொற்கள் வரிசையில் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தன. கை கொடுத்தன.
அவரும் எல்லாப் பாடல்களையும் சிறப்பாக எழுதினார்.
அதனால்தான் அவரைக் கவியரசர் என்கின்றோம்.
எல்லோரும் எதுகையை முதல் சொல்லில் வைப்பார்கள். கவியரசர் அதற்கு விதிவிலக்காகத் தன் பாடல்களில் கடைசி சொல்லில் எதுகையை வைப்பார்.
பாடலைப் பாடுபவருக்கு அது கை கொடுப்பதோடு பாடலில் ஒரு இனிமையும் தூக்கலாக வந்து விடும்.
"கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்லகல்லும், முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல!"சொல்லச் சொல்ல, மெல்ல மெல்ல, என்று எதுகைகள் எங்கே வருகின்றன பார்த்தீர்களா?
மேலும் சில பாடல்களில் இருந்து வரிகள்.
"கண்ணன் வருவான் கதை சொல்லுவான்வண்ணமலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்""கடவுள் ஒருநாள் உலகைக்காணத் தனியே வந்தாராம்கண்ணில்கண்ட மனிதரையெல்லாம் நலமா என்றாராம்""ஆறு மனமே ஆறு ஆண்டவன் கட்டளை ஆறு"கையளவு உள்ளம் வைத்தான்கடலளவு ஆசை வைத்தான்""மாம்பழத்து வண்டுவாசமலர்ச் செண்டுயார்வரவைக் கண்டுவாடியது இன்று!""தேவியர் இருவர் முருகனுக்குதிருமால் அழகன் மருகனுக்கு"நி¢லவுக்குப் போவோம்இடமொன்று பார்ப்போம்மாளிகை அமைப்போம்மாலையும் முடிப்போம்மஞ்சத்தில் இருப்போம்உலகத்தை மறப்போம்"(மாலையும் முடிப்போம் என்றால் திருமணம் செய்து கொள்வோம்)"அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லைஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லைஇரவுக்குப் பகலிடம் கோபமில்லைஏழையின் காதலில் பாபமில்லை""மலரும் கொடியும் பெண்னென்பார்மதியும் நதியும் பெண்னென்பார்."
இப்படி எண்ணற்ற பாடல்கள் உள்ளன. எழுதிக் கொண்டே போகலாம்.
இதில் ஒன்று கவனித்தீர்களா" பாடலில் மோனை அனாசயமாக வந்திருக்கும். மோனை என்பது வரிகளில் உள்ள முதற் சொல்லின் முதல் எழுத்து ஒரே மாதிரி வருவது
க' விற்குக் க'
அ' விற்கு அ'
ம' விற்கு ம'
கவியரசரின் பாடலில் எப்படி எதுகையும் மோனையும் சிறப்பாக இருக்கும் என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்டவே இந்தப் பதிவை எழுதினேன்.
பதிவின் நீளம் கருதியும், உங்களின் நேரம், மற்றும் பொறுமை கருதியும் இந்தப் பதிவை இத்துடன் நிறைவு செய்கிறேன்
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
(தொடரும்)
நட்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!