மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.12.09

Where is God? எங்கேடா இருக்கிறார் கடவுள்?

..............................................................................................................

.....................................................................................................
Where is God? எங்கேடா இருக்கிறார் கடவுள்?

பத்து வயதுக் குழந்தை, தன் தந்தையிடம் பேச்சுக் கொடுத்தது.

"அப்பா....."

"என்னடா செல்லம்?"

"கடவுள் எங்கே இருக்கிறார் அப்பா?"

"ஏனடி செல்லம், கடவுளைத் தேடுகிறாய்?"

"கடவுளை ஒரு தடவையாவது பார்க்க வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது அப்பா!"

"நீ நன்றாகப் படிக்க வேண்டும். டீச்சர் கொடுக்கும் வீட்டுப் பாடங்களையெல்லாம் ஒழுங்காகச் செய்ய வேண்டும். அப்பா, அம்மா பேச்சைத் தட்டக்கூடாது. காலையிலும் மாலையிலும் தவறாமல் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்தால் நீ நல்ல பெண்ணாகிவிடுவாய். நல்ல பெண்ணாகி விட்டால் கடவுளே உன்னைப் பார்க்க வருவார்"

"சரி, இப்போது கடவுள் எங்கே இருக்கிறார் அப்பா?"

"கடவுள் சொர்க்கத்தில் இருக்கிறார்!"

"சொர்க்கம் எங்கே இருக்கிறது?"

அப்பா வானத்தை நோக்கி கைகளை உயர்த்திக் காட்டினார். குழந்தை விடவில்லை. தொடர்ந்து கேட்டது:

"சொர்க்கத்திற்கு எப்படிப் போக வேண்டும்? ஏரோப்பிளேனில் போக வேண்டுமா?"

"நாமாகப் போக முடியாது. கடவுள் அழைப்பு அனுப்புவார் அப்போதுதான் போக முடியும்" அப்பா ஒருவழியாகச் சமாளித்தார்.

குழந்தைவிடவில்லை. நச்சரிப்புத் தொடர்ந்தது.

"சொர்க்கத்தை யாரப்பா உருவாக்கினார்கள்? (who created heaven?)"

"கடவுள்தான் உருவாக்கினார்"

"சொர்க்கத்தை உருவாக்கும் முன்பு கடவுள் எங்கே அப்பா இருந்தார்?"

அப்பாவிற்கு அதிர்ச்சியாகிவிட்டது. அதோடு கோபமும் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

"அதையெல்லாம் பெரியவளானால் நீயே தெரிந்து கொள்வாய்! இப்போது போய் விளையாடு, போ! என்று அனுப்பிவைத்துவிட்டார்.

ஐந்து நிமிடம் அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று உணர்வு மேலிடப் பேச ஆரம்பித்தது.

"அப்பா நான் கண்டு பிடித்துவிட்டேன். நரகம் இருப்பதாகச் சொல்லுவீர்கள் அல்லவா? சொர்க்கத்தை உருவாக்கும் முன்பு கடவுள் அங்கேதான் இருந்திருக்க வேண்டும்."

அப்பா அசடு வழிய, வேறு வழி தெரியாமல் பதில் சொன்னார்.

"ஆமாம், அங்கேதான் இருந்திருப்பார்"

"நரகத்தை உருவாக்கியவர் யாரப்பா?"

"அதையும் கடவுள்தான் உருவாக்கினார்!"

"நரகத்தை உருவாக்கியது தவறில்லையா? ஏனப்பா கடவுள்கூட தவறுகளைச் செய்வாரா?"

"சில சமயம் செய்வார்" என்று சொல்லித் தன் குழந்தையை அனுப்பிவைத்த தந்தை தனக்குள் முணுமுனுத்துக் கொண்டார்" இந்தக் காலத்துப் பிள்ளைகளைச் சமாளிப்பது பெருங்கஷ்டம்”

இந்தக் காலம், அந்தக்காலம் என்று எதுவுமில்லை. குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான்!
=======================================================
சரி, சொல்ல வந்த செய்திக்கு வருவோம். சொர்க்கம், நரகம் எனும் அமைப்புக்கள் உள்ளனவா?

அதில் உண்மை இல்லை. மனிதன் தானாகக் கற்பனை செய்து கொண்டவை அவைகள்.

சொர்க்கம் நரகம் என்று எந்த அமைப்பும் இல்லை.

கடவுள் இருப்பது மட்டும் உண்மை!

அவரைத் தனிமைப் படுத்தி எந்தவொரு அம்சமாகவும் பார்ப்பது கடினம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் அவர். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவர் அவர்!

earth, space, time, light, என்று எல்லா வடிவமாகவும் இருப்பவர் அவர்.

அதைத்தான் அருணகிரியார் இப்படிச் சொன்னார்:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
- அருணகிரி நாதர்
----------------------------------------------------------
உருவம் உடையவனாகவும்,
உருவம் இல்லாதவனாகவும்,
உள்ளவனாகவும்,
இல்லாதவனாகவும்,
மாற்றங்களுள்ளதாகவும்,
மலராகவும்,
ஒலியாகவும்,
ஒளியாகவும்,
கருப்பையின் கருவாகவும்,
அனைத்து ஜீவராசிகளின்
இயக்கத்திற்குரிய உயிராகவும்,
அடையும் நிலையாகவும்,
விதிக்கப்பட்டதாகவும்,
ஆசானாகவும்,
வந்து
அருள் செய்து
என்னை
ஆட்கொள்வாய்
குமரக் கடவுளே!
...........................................................
இறைவன் ஒருவன்தான். நாம் அவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம். அருணகிரியார் குமரக்கடவுளின் வடிவமாக இறைவனை வணங்கினார். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாவுக்கரசர் போன்ற சிவபக்தர்கள் இறைவனைச் சிவ வடிவமாக வணங்கினார்கள்.

அதுபோல உங்களுக்குப் பிடித்த வடிவில் இறைவனை, எப்படி வேண்டுமென்றாலும் நீங்கள் வணங்கலாம்.

அல்லது இடக்காகக் கேள்விகள் கேட்டு வணங்காமல் இருந்தாலும் இருக்கலாம்.

அது உங்கள் சாய்ஸ்!

இறைவன் கருணை வடிவானவர். தன்னை வணங்குபவனுக்கும் அவர் அருள் செய்வார். வணங்காதவனுக்கும் அவர் அருள் செய்வார்.

இல்லை என்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?

அதனால்தான் அவரை எல்லாம் வல்ல இறைவன் (almighty) என்கிறோம். இல்லையென்றால் அவர் வெறும் mightyயாகத்தான் இருப்பார்!

அதிகம் படித்தவன்தான் இந்த விஷயத்தில் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவான்

பாமரன் தெளிவாக இருப்பான். அவனைக் கேட்டால், அவன் தீர்க்கமாகச் சொல்ல்வான்:

”கடவுள் எங்கும் இருக்கிறார். தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார்”

அந்தத் தெளிவு நமக்கு வர வேண்டும்!

வருமா?

யாருக்குத் தெரியும்? அது அவனவன் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்தது!

பணத் தேடலில் சிலரது வாழ்க்கையும், கூடலில் சிலரது வாழ்க்கையும் (என்ன கூடல் என்று இங்கே எழுத முடியாது. தெரிந்தவர்களுக்கு மட்டும் அது புரியட்டும்) எதற்கெடுத்தாலும் உரக்கக் குரல் கொடுப்பதில் சிலரது வாழ்க்கையும், சரக்கடிப்பதில் சிலரது வாழ்க்கையும் முடிந்துவிடும் வாய்ப்பு இருப்பதால், ’அனைவரும் ஒருநாள் இறைவனை உணர்வார்கள்; அவன் தாள் பணிவார்கள்’ என்று எதிர்பார்க்க முடியாது.

அந்த நிலைப்பாட்டைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிச் சொன்னார்:

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி

(உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

(உள்ளம் என்பது)

தண்ணீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

(உள்ளம் என்பது)
-----------------------------------------
நட்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

17.12.09

வந்தவழி: 1. ஜோதிடமும் நானும்!

................................................................................................................
வந்தவழி: 1. ஜோதிடமும் நானும்!

இளம் வயதில் நானும் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தவன்தான். அது அறியாமை நிறைந்த காலம். அலங்கார மேடைப் பேச்சுக்களைக் கேட்டு மயங்கிய காலம்.

“தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கநாதனையும்
பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ” என்று மேடையில் முழங்குவார்கள்.
சஞ்சிகைகளில் எழுதுவார்கள்.

“ஏரோட்டம் இன்றி மக்கள்
ஏங்கித் தவிக்கையிலே
தேரோட்டம் உனக்கேன் தியாகராஜா?” என்று திருவாரூர் தியாகராஜப் பெருமானின் தேரைப் பழுது பார்த்து மீண்டும் வெள்ளோட்டமிடப் பக்தர்கள் பெரும் பணம் திரட்டியபோது கேட்டார்கள்.

நியாயந்தானே? என்று நினைத்த காலம் உண்டு!

என் பெற்றோர்களும், உறவினர்களும் தீவிர இறை பக்தர்கள். அவர்களுடைய பக்தியும், பிரார்த்தனையும் வீண் போகவில்லை. நானும் தடம் மாறிப் போகவில்லை. அவர்களுடன், பழநி, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல ஆலயங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். பல சமயங்களில் மறுப்பின்றி முடிக்காணிக்கை செலுத்தியுமிருக்கிறேன்.

அந்தக் காலக் கட்டத்திலும் 50% இறை நம்பிக்கை இருந்தது. 50% இல்லாமல் இருந்தது.

பிறகு காலச்சுழல், என்னை அடித்துத் துவைத்துக் காயப்போட்டு, இறைவனை
உணரவைத்தது.

ஆமாம், இறைவனை உணரவைத்தது. யாரும் அவனை உணர்ந்துதான் அறிந்து கொள்ள முடியும். நேரில் பார்த்தவர்கள் எவரும் இல்லை.

God is to be felt, since he is not an object to see!

அருணகிரி நாதரும், குமரகுருபரரும் நேரில் பார்த்ததாக வரலாறுகள் உண்டு. வீடியோ சான்றுகள் இல்லை. சான்று இல்லாத எதையுமே இன்றைய இளைஞர்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஆகவே அதைப் பற்றி இங்கே விவரமாக எழுதவிலை!

வாரியார் சுவாமிகளின் உரைகளும், கவியரசரின் பாடல்களும், நூல்களும் மனதை நெறிப்படுத்தின. தொடர்ந்து ஓஷோ, தயானந்த சரஸ்வதி அவர்களின் உரைகளும் நூல்களும் என்னைத் துல்லியமாக நெறிப்படுத்தின.
உங்கள் மொழியில் சொன்னால் என்னைப் fine tuning செய்தன!
+++++++++++++++++++++++++++++++++++++++++++
அதே போல என் தந்தையாரும், அவருடைய நண்பர் ஆசான் என்னும் அற்புத மலையாள ஜோதிடரும் எனக்கு ஜோதிடத்தில் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தினார்கள். அவர்களுடைய உரையாடல்களையும், நடப்பையும் பார்த்து எனக்கு ஜோதிடத்தில் ஒரு ஆர்வம் உண்டாயிற்று.

இதில் ஏதோ இருக்கிறது. என்ன வென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஜோதிட நூல்களை வாங்கித் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க ஜோதிடம் என்னைப் பிரமிக்க வைத்தது. அது 30 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அது பற்றி

என்னுடைய பழைய பதிவுகளில் விவரமாக எழுதியுள்ளேன்.

ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம்.

இறையருளால், எனக்கு வேறு நல்ல தொழில் அமைந்துள்ளது. ஆகவே ஜோதிடத்தைத் தொழிலாகக் கொள்ளவில்லை. ஜோதிடத்தை வைத்து இன்றுவரை ஒரு ரூபாய் கூட (பைசாவிற்கு மதிப்பில்லை, ஆகவே ரூபாயில் சொல்லியிருக்கிறேன்) நான் சம்பாதித்ததில்லை. உங்கள் மொழியில் சொன்னால் கல்லாக் கட்டியதில்லை.

நான் அறிந்த ஜோதிடம் பிறருக்குப் பயன் பட வேண்டும். அடுத்த தலைமுறை யினரைச் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில்தான் பதிவில் மூன்று ஆண்டு காலமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்

துவக்க காலத்தில் 100 எண்ணிக்கைக்கும் குறைவான வாசகர்களே வந்தார்கள். அது இன்று அசுர வளர்ச்சி பெற்றுத் தினமும் சுமார் 2,000 வாசகர்கள் எனும் எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

அது என் எழுத்திற்குக் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை.
அது இறையருள்! அவ்வளவுதான்!

It is very simple; It is God's grace!

கவியரசர் சொல்வார்:
இறைவன் இரண்டு இடத்தில் சிரிப்பானாம்.
1. இதை நான் செய்தேன் என்று சாதனையாளன் ஒருவன் சொல்லும்போது!
2. உன் உயிரை நான்தான் காப்பாற்றினேன் என்று மருத்துவர் ஒருவர் சொல்லும்போது!

இறையருள் இன்றி எதுவும் நடக்காது. அதைத்தான் அவனன்றி ஓர் அனுவும் அசையாது என்பார்கள்!
-----------------------------------------------------------------------------------
இன்றையப் பாடம்:

1.
மனிதனின் வாழ்க்கையில் முதல் பத்துவருடங்கள் சந்திரனின் ஆதிக்கம்:
ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகனுக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாயன்பும்,அரவணைப்பும் அவனுக்குக் கிடைக்கும். குழந்தைப் பருவத்தில் இது முக்கியம்!
.....................................................

2
பத்து முதல் இருபது வயதுவரை புதனின் ஆதிக்கம்:
புதன் நன்றாக இருக்கும் ஜாதகன்தான், முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையப் பெறும் காலம் இது
....................................................

3
இருபது முதல் முப்பது வயது வரை சுக்கிரனின் ஆதிக்கம்
காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவள் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். எதிலும் அழகைக் காணும் காலம். காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு அது கூடி வரும். தேடி வரும்!
.....................................................

4
முப்பது முதல் நாற்பதுவயது வரை செவ்வாயின் ஆதிக்கம்:
முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்தி, வேலை அல்லது தொழிலில் உயர்ச்சி பெறும் காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் செவ்வாய் வாழ்க்கையில் உயர்வதற்கு உதவி செய்வான்.
-------------------------------------

5
நாற்பது வயதுவரை சூரியனின் ஆதிக்கம்:
பெயரும், புகழும் பெறுவதற்கு உரிய காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் சூரியன் அவற்றைக் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து சேர்ப்பார்.
................................................................
++++++++++++++++++++++++++++++++
இதற்குப் பிறகுதான் - அதாவது 50 வயதிற்குப் பிறகுதான் மனிதன் பெட்டியைத் தூக்கும் காலம். என்ன பெட்டி என்று கேட்காதீர்கள். உணருகிறவர்கள் உணர்ந்து கொள்ளுங்கள். உணராதவர்களுக்குக் காலம் உணர்த்தட்டும்

6.
50 to 60 வயது வரை சனியின் ஆதிக்கம்:
தன் கணக்கைக் கூட்டிக் கழித்து லாப நஷ்டங்களை, ஐந்தொகையை (balance sheetஐ) மனிதன் பார்க்கும் காலம். பிள்ளைகளின் கல்விக்கடன், மகளின் திருமணச் செலவு, மனைவின் நச்சரிப்பால் வாங்கிய வீட்டுக் கடன் (housing loan) வாகனக் கடன் (car loan) சிலருக்கு இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவைக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும், கவலையிலுமே கழியும்!
-----------------------------------------------

7.
60 to 70 5 வயது வரை ராகுவின் ஆதிக்கம்:
ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்கள் இருக்கும் காலம். தான் இதுவரை பாடுப்பட்ட மனைவி, மக்கள், உற்றார் உறவினர் என்று பலரும் கண்டு
கொள்ளாமல் இருக்கிறார்களே, நமக்கு உரிய மதிப்பும், மரியாதையும் இல்லையே - பலரும் உதாசீனப்படுத்துகிறார்களே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று அலுப்புத் தட்டக்கூடியகாலம். அதோடு பல்விதமான உடல் உபாதைகள் (மூட்டு வலிகள் போன்றவை) நோய்கள் வந்து நட்புக் கொள்ளும் காலம். பலமான ஆறாம் வீடும், பலமான ராகுவும் அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பி விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள்
...................................................................

8
70ற்குப் பிறகு கேதுவின் ஆதிக்கம்:
மனிதன் ஞானம் பெறும் காலம். இந்த ஞானத்தைப் பற்றிப் பத்துப் பக்கங்கள் எழுதலாம். இப்போது நேரமில்லை. பின்னால் தனிக்க் கட்டுரையாக அதை எழுதுகிறேன்!

கவியரசர் கண்ணதாசன் அதை 4 வரிகளில் அற்புதமாக எழுதியுள்ளார். அதை மட்டும் இங்கே கொடுக்கிறேன்

“வீடுவரை உரவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ!”
...................................................................
எண்ணிக்கையில் எட்டுதான் வந்துள்ளது. ஒன்று விடுபட்டுள்ளது.
அது குரு பகவான்.
அவர் உதவி தவிர்க்க முடியாதது. அவருக்கு எந்தக் கணக்கும் கிடையாது. அவர் நம்பர் ஒன் சுபக்ககிரகம் பிறப்பு முதல் இறப்புவரை அவர் வருவார். எந்த சூழ்நிலையிலும் தாக்குப் பிடிக்கும் தன்மையை அவர் ஜாதகனுக்குக் கொடுப்பார்!

Yes, he will give standing power to the native to face/handle any situation!

சரி, ஜாதகத்தில் அவர் கேட்டிருந்தால், கஷ்டம்தான். வாழ்க்கை போராட்டம்தான்.

யாராவது ஜாதகனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும் அல்லது அவன் ஜாதகத்தில் உள்ள மற்ற நல்ல அமைப்புக்கள் தாங்கிப் பிடிக்கும்! ஏனென்றால் அனைவருக்கும் பிறக்கும்போது கிடைக்கும் மொத்தத் தொகை 337தான்.
அதை மனதில் வையுங்கள்

இது எந்தப் புத்தகத்தில் உள்ளது என்று யாரும் கேட்காதீர்கள். என் தந்தையின் ஜோதிட நண்பர் ஒருவர் சொன்னது. என் மனதில் உள்ள Hard Discல் இருந்து copy and paste உங்களுக்குக் கொடுத்துள்ளேன்:-)))

அன்புடன்
வாத்தியார்

.......................................................

பயந்து விடாதீர்கள். வாத்தியாரின் படம்தான் 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பெற்றது. அழகனிடம் (பழநி அப்பனிடம்) அழகைக் (முடியைக்) காணிக்கையாக்கி விட்டுத் திரும்பியவுடன் எடுத்த படம்
---------------------------------------------------------------------
கவியரசர் ஆன்மீகத்திற்கு முழுதாகத் திரும்பியவுடன் அசத்தலாக எழுதிய பல
பாடல்களில் மூன்று பாடல்களை நீங்கள் அறியக் கீழே தந்துள்ளேன்:
1
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
படம் - பாலும் பழமும்
பாடியவர் - பி. சுசீலா

2
வெள்ளிமலை மன்னவா! வேதம் நீ அல்லவா!
முன்னோர்க்கும் முன்னவா! மூண்ட கதை சொல்லவா!

(வெள்ளிமலை)

அஞ்செழுத்தும் எங்கள் நெஞ்செழுத்தல்லவா!
ஐம்புலனும் எங்கள் அடைக்கல மல்லவா?
அஞ்சுமென் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா!
அபாயம் நீங்கவரும் சிவாயமல்லவா!

(வெள்ளிமலை)

வானுலகம் விழுவதென்ன வானவர்தாம் அழுவதென்ன!
சேனை அசுரர் குல ஜெயக்கொடிதான் சொல்வதென்ன!
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு!
அபயக்கரம் நீட்டு! உன அருள் வடிவைக் காட்டு!

(வெள்ளிமலை)

படம் - கந்தன் கருணை - வருடம் 1967
இந்தப் பாடல் ஒரு மேதைக்கு இன்னொரு மேதை எழுதிக் கொடுத்த பாடல்!
ஆமாம்! இயக்குனர் திரு.ஏ.பி. நாகராஜன் அவர்களுக்கு கவியரசர் எழுதிக் கொடுத்த சிறந்த பாடல்களில் ஒன்று!

இந்தப் பாடல் திருமதி எஸ்.வரலெட்சுமி அவர்கள் தன்னுடைய கணீர்க் குரலால்,
உணர்வுபூர்வமாகப் பாடிகவியரசரின் வரிகளாலும் படத்தில் இடம் பெற்ற காட்சி அமைப்புக்களாலும், தமிழ் நாட்டையே ஒரு
கலக்குக் கலக்கிய பாடல் என்றால் அது மிகையல்ல!
++++++++++++++++++++++++++++++++++++
3
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை

வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்

அன்பே என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு

உள்ளம் என்னும் கோயிலைக் கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன்
கண்ணில் வரும் பாதையை காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில் போகச் சொன்னான்

கண்கள் அவனைக் காண்க
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க


இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்!

படம் - சாந்தி நிலையம்
பாடியவர் - பி சுசீலா குழுவினர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

16.12.09

Lessons on yogas: Chhatra Yoga : குடை யோகம்

.....................................................................................................................

.....................................................................................................................
Lessons on yogas:  குடை யோகம்

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


================================================