Devotional உண்டு என்று எங்கே இருக்க வேண்டும்?
பக்தி மலர்
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு - உயர்
செல்வமெல்லாம் அன்பென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு ஆ....
பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு
நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு
மனமே உனக்குபதேசம் இதே
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை ஆ...
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
வாழ்வை வெங்கமிழ் நீர் ஓட்டமென்றே இரு
வாழ்வை வெங்கமிழ் நீர் ஓட்டமென்றே இரு
நெஞ்சே உனக்குபதேசம் இதே
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு - உயர்
செல்வமெல்லாம் அன்பென்றிரு
_________________________
திரைப்படம்; பட்டினத்தார்
இயற்றியவர்: பட்டினத்தார்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962
-------------------------------
பாடலின் காணொளி
Our sincere thanks to the person who uploaded this video clipping
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
பக்தி மலர்
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு - உயர்
செல்வமெல்லாம் அன்பென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு ஆ....
பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு
நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு
மனமே உனக்குபதேசம் இதே
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை ஆ...
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
வாழ்வை வெங்கமிழ் நீர் ஓட்டமென்றே இரு
வாழ்வை வெங்கமிழ் நீர் ஓட்டமென்றே இரு
நெஞ்சே உனக்குபதேசம் இதே
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு - உயர்
செல்வமெல்லாம் அன்பென்றிரு
_________________________
திரைப்படம்; பட்டினத்தார்
இயற்றியவர்: பட்டினத்தார்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962
-------------------------------
பாடலின் காணொளி
Our sincere thanks to the person who uploaded this video clipping
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
பட்டினத்தாரின் அற்புதப் பாடலை மீண்டும் படிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி. காணொளி மிக மிக அருமை. கடவுள் என்ற பதம் வந்ததன் காரணம் குறித்து பட்டினத்தார் அளிக்கும் விளக்கம், அவஸ்தைப்படுகிற துன்பத்திற்கும், அனுபவிக்கிற இன்பத்திற்கும் உருவம் காட்ட முடியாதது போல் கடவுளை கண்முன் காட்ட இயலாது என்று கூறும் அற்புதக் கருத்து, கடலில் மிதக்கும் கல், கட்டை உவமையைக் கூறி, கர்மவினைக்கேற்ற படிதான் பலனும் இருக்கும் என்று சொல்வது, அதைத் தொடர்ந்த பாடல் என அனைத்தும் அருமை. திரு. தஞ்சை ராமையாதாஸ், புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. அகிலன் ஆகியோர் இணைந்து எழுதிய வசனங்களின் கூர்மையை என்னவென்பது!!!. பட்டினத்தாரின் பாடலை அதன் பாவம் குறையாமல் வெளிப்படுத்திய டி.எம்.எஸ்ஸின் குரலினிமையும் இசையமைப்பாளர் ஜி. ராமநாதனின் இசையும் காலத்தை வென்று நிற்கக் கூடியவை. மிக அருமையானதொரு பதிவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா.
ReplyDeleteஉண்டென்று எங்கே இருக்க வேண்டும்
ReplyDeleteஉண்மையின் உறைவிடம் அது வென்று
உண்மையாலே நீயதை அறிவாய் என்றும்
உன்னறிவை அன்பால் நிரப்பவேண்டும்.
இறக்கம் கொள்ள வேண்டும் அதிலே
இறைவன் இழையோடி இருக்கிறான் என்றே
இருட்டான மனதினில் இன்பொளி ஏற்றி
இறப்பில்லா பெரின்பமேவ வேண்டும்.
தயக்கம் விடவேண்டும் படைத்தவன் ஏதென்ற
மயக்கம் விட வேண்டும் காணும் யாவிலும்
இயக்கமாக இருக்கும் இறைவனன்றி இந்த
வியக்க செய்யும் உலகுண்டோ!
அறிவாய் மனமே அனுதினமும் நினைவாய்
வெளியாய் வளியாய் நீரும் நெருப்புமாய்
உருவாய் அருவாய் யாவிலும் கருவாய்
இருக்கும் திருவினை விளியாய்மனமே!
பட்டினத்தாரின் பாடல்களை முழுமையாகப் படித்ததில்லை
அவ்வப்போது வகுப்பறையிலே கேட்பதிலே கிடைக்கிறது பேரின்பம்
வாழ்க வளர்கத் திருத் தொண்டு.
சித்தரின் ஆசியதை செமிப்பிலே வைப்போம்
சிந்தைநிறை இறைவனின் கருணையாலே.
பக்திமலருக்கு நன்றிகள் ஐயா!
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteஇறைவனை நினைத்தாலே போதும்
எல்லாம் நன்மை.
அருமை
நன்றி
தெளிவுபடுத்தியது நன்றி
ReplyDeleteநான் உங்கள் வகுப்பறையில் என்ன saiyavendum மாணவர் சேர
ReplyDeleteஅய்யா காலை வணக்கம்
ReplyDelete// krishnababuvasudevan said...
ReplyDeleteநான் உங்கள் வகுப்பறையில் என்ன saiyavendum மாணவர் சேர//
என்ன செய்ய வேண்டும்? பழைய பாடங்களைப் படிக்க வேண்டும்.வலது ஓரத்தில் 510 பாடங்கள் உள்ளன அவற்றை ஒவ்வொன்றாகப் படியுங்கள்.
அவ்வளவுதான். நீங்கள் மாணவராகச் சேர்ந்தாகிவிட்டது.
திரு ஹாலாஸ்யம்ஜியும் திரு தனுசுவும் பக்காவான கவிஞர்களாகவே உருவெடுத்துவிட்டார்கள். பாராட்டுக்கள்.
ReplyDelete'இறக்கம் கொள்ள வேண்டும்'கொஞ்சம் புரியவில்லை ஹாலாஸ்யம்ஜி! உட்பொருள் விளக்கம் தேவை.
/////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteபட்டினத்தாரின் அற்புதப் பாடலை மீண்டும் படிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி. காணொளி மிக மிக அருமை. கடவுள் என்ற பதம் வந்ததன் காரணம் குறித்து பட்டினத்தார் அளிக்கும் விளக்கம், அவஸ்தைப்படுகிற துன்பத்திற்கும், அனுபவிக்கிற இன்பத்திற்கும் உருவம் காட்ட முடியாதது போல் கடவுளை கண்முன் காட்ட இயலாது என்று கூறும் அற்புதக் கருத்து, கடலில் மிதக்கும் கல், கட்டை உவமையைக் கூறி, கர்மவினைக்கேற்ற படிதான் பலனும் இருக்கும் என்று சொல்வது, அதைத் தொடர்ந்த பாடல் என அனைத்தும் அருமை. திரு. தஞ்சை ராமையாதாஸ், புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. அகிலன் ஆகியோர் இணைந்து எழுதிய வசனங்களின் கூர்மையை என்னவென்பது!!!. பட்டினத்தாரின் பாடலை அதன் பாவம் குறையாமல் வெளிப்படுத்திய டி.எம்.எஸ்ஸின் குரலினிமையும் இசையமைப்பாளர் ஜி. ராமநாதனின் இசையும் காலத்தை வென்று நிற்கக் கூடியவை. மிக அருமையானதொரு பதிவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா.///////
உங்களின் சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteஉண்டென்று எங்கே இருக்க வேண்டும்
உண்மையின் உறைவிடம் அது வென்று
உண்மையாலே நீயதை அறிவாய் என்றும்
உன்னறிவை அன்பால் நிரப்பவேண்டும்.
இறக்கம் கொள்ள வேண்டும் அதிலே
இறைவன் இழையோடி இருக்கிறான் என்றே
இருட்டான மனதினில் இன்பொளி ஏற்றி
இறப்பில்லா பெரின்பமேவ வேண்டும்.
தயக்கம் விடவேண்டும் படைத்தவன் ஏதென்ற
மயக்கம் விட வேண்டும் காணும் யாவிலும்
இயக்கமாக இருக்கும் இறைவனன்றி இந்த
வியக்க செய்யும் உலகுண்டோ!
அறிவாய் மனமே அனுதினமும் நினைவாய்
வெளியாய் வளியாய் நீரும் நெருப்புமாய்
உருவாய் அருவாய் யாவிலும் கருவாய்
இருக்கும் திருவினை விளியாய்மனமே!
பட்டினத்தாரின் பாடல்களை முழுமையாகப் படித்ததில்லை
அவ்வப்போது வகுப்பறையிலே கேட்பதிலே கிடைக்கிறது பேரின்பம்
வாழ்க வளர்க திருத் தொண்டு.
சித்தரின் ஆசியதை செமிப்பிலே வைப்போம்
சிந்தைநிறை இறைவனின் கருணையாலே.
பக்திமலருக்கு நன்றிகள் ஐயா!////
பட்டினத்தாரைப் பற்றி கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள நூலையும், சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா அவர்கள் எழுதியுள்ள நூலையும் படித்துப் பாருங்கள் ஆலாசியம்!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
இறைவனை நினைத்தாலே போதும்
எல்லாம் நன்மை.
அருமை
நன்றி////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger krishnababuvasudevan said..
ReplyDeleteதெளிவுபடுத்தியது நன்றி////
நல்லது. தெளிவு பெற்றமைக்கு நன்றி நண்பரே!
///Blogger krishnababuvasudevan said...
ReplyDeleteநான் உங்கள் வகுப்பறையில் என்ன saiyavendum மாணவர் சேர////
You can join in the classroom by using 'Join this site with Google connect of option at the top of my blog - Members (3340) First read all the lessons posted in the blog since last 5 years (Total 570 Lessons). All are free! See the side bar for details
Vaaththiyar
////Blogger Gnanam Sekar said...
ReplyDeleteஅய்யா காலை வணக்கம்/////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
பட்டினத்தார் பாடல் அருமை. அதற்கு கவிதையில் பின்னூட்டம் எழுதிய அன்பர்களின் கருத்துக்களும் அருமை. பட்டினத்தார் பாடல்களை 'ப்ரொஜக்ட் மதுரை' எனும் வலைத்தளத்தில் முழுமையாகப் படிக்கலாம்.
ReplyDelete////Blogger Thanjavooraan said...
ReplyDeleteபட்டினத்தார் பாடல் அருமை. அதற்கு கவிதையில் பின்னூட்டம் எழுதிய அன்பர்களின் கருத்துக்களும் அருமை. பட்டினத்தார் பாடல்களை 'ப்ரொஜக்ட் மதுரை' எனும் வலைத்தளத்தில் முழுமையாகப் படிக்கலாம்.////
உங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், மேலதிகத் தகவலுக்கும் நன்றி கோபாலன் சார்!
"உண்டு" என்று இரு..
ReplyDeleteஆமாம்..
இல்லை என்பது எதிலும் இல்லை
எல்லை என்பது எங்கும் இல்லை
இல்லை என்பது இருக்குமானால்
இருப்பு கொடுத்தது "உண்டு" தானே..
பட்டினத்தடிகளின் பாடலும் காணொளியும் அருமை ஐயா!
ReplyDeleteதிருவேகம்பமாலையில் 42 பாடல்களும் முத்தானவை என்றாலும் இந்த 5,6,7
பாடல்கள் நம் ஆன்மீகக் கடமையை நன்கு விளக்குகின்றன.
நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே ! 5
பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே ! 6
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 7
////Blogger அய்யர் said...
ReplyDelete"உண்டு" என்று இரு..
ஆமாம்..
இல்லை என்பது எதிலும் இல்லை
எல்லை என்பது எங்கும் இல்லை
இல்லை என்பது இருக்குமானால்
இருப்பு கொடுத்தது "உண்டு" தானே..////
வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவில் முத்தை வைத்தவன்
என்பாரே கவியரசர் கண்ணதாசன்
அவன் எப்ப்டி இல்லாமல் போவான்?
இல்லை என்று சொல்வது அறியாமையே!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபட்டினத்தடிகளின் பாடலும் காணொளியும் அருமை ஐயா!
திருவேகம்பமாலையில் 42 பாடல்களும் முத்தானவை என்றாலும் இந்த 5,6,7
பாடல்கள் நம் ஆன்மீகக் கடமையை நன்கு விளக்குகின்றன.
நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே ! 5
பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே ! 6
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 7//////
கச்சியேகம்பனைப் பற்றிய அரிய பாடல்களில் சிலவற்றை எடுத்துக் கொடுத்த மேன்மைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
பாராட்டிற்கு நன்றிகள் கிருஷ்ணன் சார்...
ReplyDeleteஉண்மையில் அது எழுத்துப் பிழை தான்!!
இன்னும் ஒரு எழுத்துப் பிழையும் "பேரின்பமேவ வேண்டும்"
என்றும் இருக்க வேண்டும். திருமிகு கோபாலன் ஐயா அவர்களின் ஆற்றுப் படுத்தலுக்கும் நன்றிகள்.
////பட்டினத்தாரைப் பற்றி கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள நூலையும், சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா அவர்கள் எழுதியுள்ள நூலையும் படித்துப் பாருங்கள் ஆலாசியம்!///
ReplyDeleteநன்றிகள் ஐயா!
நான் இங்கு நூலகங்களில் தேடித் பார்க்கிறேன்...
இல்லை என்றால் ஊருக்கு வரும் போது தான் வாங்கவேண்டும்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி மனம் ஒருமைப்படும் வரையில் இறைவன் தன் தொழில்களில் ஒன்றாகிய மறைப்பாற்றலால் மனிதனை தன் வயப்படுத்தி வைத்துள்ளான். அந்தக்கரணங்களில் ஒன்றாகிய அகங்காரம் ஆன்மாவை சூழ்ந்திருக்கும் உலகியல் மாசு. இம்மாசு நீங்க இறைவன் நமக்கு துணை புரிந்தால் இத்தகைய அற்புதமான பாடல்களின்
ReplyDeleteஉண்மை நிலை அறிந்து இறைவனை நமக்குள்ளே கண்டு பரவசம் அடையலாம். இதுவரை நான் புறவுலகில் அடந்ததெல்லாம்
மாயை என்னும் உணர்வு பெற அவனை வணங்குவோம்.