-------------------------------------------------------------------------------------
Astrology: இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்!
ஒரே வரியில் ஜாகத்திற்குப் பலன் சொல்லிவிட்டு ஜாதகத்தை மூடி வைத்துவிடலாம். அப்படிப்பட்ட யோகத்துடன் கூடிய ஜாதகம் இது.
என்ன யோகம்?
மகாபாக்கிய யோகம்!
லக்கினத்தில், சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால், ஜாதகருக்கு அந்த யோகம் கிடைக்கும்!
அரசனுக்கு நிகரான யோகம். அவர் இசைக்கு அரசர். இசை ரசிகர்களுக் கெல்லாம் அரசர்! எண்ணற்ற மனிதர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்.
1977 ஆம் ஆண்டிற்கு முன்பு ஒரு ஐந்து வருட காலம் தமிழ்த் திரை உலகில் சற்றுத் தொய்வு விழுந்து, தமிழ் ரசிகர்களின் மனதில் எல்லாம் இந்திப் படங்களின் பாடல்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன.
(உதாரணம். Bobby, ஆராதனா, அந்தாஸ்(ஜ்), யாதோன் கி பாரத், ஷோலே போன்று பல படங்களைச் சொல்லலாம்)
அவர்களையெல்லாம், தன் துவக்கப்படங்கள் இரண்டின் மூலம், மீண்டும் தமிழ் திரை இசைப் பாடல்களைக் கேட்பதற்கு இழுத்துக் கொண்டு வந்தவர் இளையராஜா.
“மச்சானைப் பார்த்தீங்களா, மலை வாழைத் தோப்புக்குள்ளே” என்ற பாடலும், “கண்ணன் ஒரு கைக் குழந்தை, கண்கள் இரண்டும் பூங்கவிதை” என்ற பாடல்களைப் போல எத்தனை பாடல்கள்?
அவரைப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.
அவரது ஜாதகத்தை அலசுவோம்
++++++++++++++++++++++++++++++++++++++
அவருடைய ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் லக்கினத்தில் இருந்து மகா பாக்கிய யோகத்தைக் கொடுத்துள்ளார்கள். அத்துடன் மட்டுமா? ரிஷபலக்கினத்திற்கு யோககாரகரான சனீஷ்வரன் (9 & 10ஆம் இடத்திற்கு உரியவர்) லக்கினத்தில் இருக்கிறார். அவர் தர்மகர்ம அதிபதியும் ஆவார். கேட்க வேண்டுமா? அவரும் மற்றவர்களும் சேர்ந்து அவர் செய்த தொழிலில், அவரை எவரெஸ்ட் சிகரம் அளவிற்கு உச்சத்தில் கொண்டு போய் விட்டார்.
ரிஷப லக்கினத்திற்கு 3ஆம் இடமான வெற்றி ஸ்தான அதிபதி, சந்திரன் உச்சம் பெற்றதுடன், அவரும் சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்து, அவருடைய வெற்றிகளைப் பல மடங்காக்கிக் காட்டினார்.
தர்மகர்ம அதிபதி லக்கினத்தில் முதன்மைக் கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனுடன் அமர்ந்ததால், அவருக்கு ஆன்மீகத்திலும் தர்மத்திலும் அதீத ஈடுபாடு ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி ஆலயத்திற்கும் நிறைய தான தர்மங்களை ராஜா செய்திருக்கிறார். (அவரைப் பற்றிப் பக்கமாக எழுதலாம். எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் எழுதவில்லை!)
சுக்கிரனும் ராகுவும் சேர்ந்தால் கலைத் துறைதான். உடன் குருவும் சேர்ந்ததால், அவர் இசைக் கலைஞரானார்.
பூர்வபுண்ணிய அதிபதி புதன் (5th Lord) லக்கினத்தில் அமர்ந்ததால், அவருக்குப் பூர்வ புண்ணிய வாசனையாக கர்நாடக சங்கீதமும் வசப்பட்டது. பூர்வ ஜென்மத்தில் திருவாளர். பாலமுரளி கிருஷ்ணாவைப் போல, அவர் பெரிய கர்நாடக இசைக் கலைஞராக இருந்திருப்பாரோ என்னவோ -அது முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. மெல்லிசை, பாரம்பரிய கர்நாடக இசை, கிராமத்துத் தெம்மாங்கு இசை, மேற்கத்திய இசை, என்று இசையின் அத்தனை பரிமாணங்களும் அவருக்கு வசப்பட்டன!!! அவரது பூர்வ புண்ணியத்தால்தான் அவை எல்லாம் உள்ளங்கைக் கனியாக அவருக்குக் கிடைத்தன என்றால் அது மிகையல்ல!
நான்காம் வீட்டில் மாந்தி. சுகத்தைக் கெடுக்கக்கூடிய அமைப்பு. அவர் கடுமையான உழைப்பாளி. இயற்கையாகவே சுகங்களை நாடுபவர் அல்ல! அந்த வீட்டின் அதிபதி சூரியன் திரிகோணமேறியுள்ளார். அத்துடன் அந்த வீட்டிற்குப் பத்தில் உள்ளார்.. அதனால் அவர் இன்று செல்வந்தராக உள்ளார். ஆனால் எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும், அவர் எளிமையாக உள்ளார். தன்னுடைய தோற்றத்தைப் பற்றி, வசதி, வாய்ப்புக்களைப் பற்றிக் கவலைப் படாமல் எளிமையாக இருக்கிறார். எண்ணற்ற ரசிகர்கள் அவருக்குக் கிடைத்ததற்கு அந்த எளிமையும் ஒரு காரணம்! அந்த எளிமைக்கு மாந்தி ஒரு காரணம்!
இளம் பிராயத்தில் அவர் ஏன் சிரமப்பட்டார் என்ற கேள்வி பாக்கி நிற்கும். மனிதர் கால சர்ப்ப தோஷத்தில் பிறந்துள்ளார். அத்தனை கிரகங்களும் ராகு கேதுவிற்குள் மாட்டிக்கொண்டிருப்பதைக் கவனியுங்கள். 1943ல் பிறந்த அவர் 1976ஆம் ஆண்டு வரை சுமார் 33 ஆண்டுகள் பலவித கஷ்டங்களை அனுபவித்தார் என்றால், அது அந்த காலசர்ப்ப தோஷத்தினால்தான்! அந்த தோஷமே பின்பு அவருக்குப் பலத்த யோகத்தைக் கொடுத்தது. அதனால்தான் அந்த அமைப்பிற்குக் காலசர்ப்ப தோஷம் cum யோகம் என்று பெயர் அதை மனதில் கொள்க!
அன்புடன்
வாத்தியார்
20.09.2011
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தில் மேன்மை பெறுவதற்கு இதுபோன்ற ஜாதக அலசல்கள் முக்கியம். தொடர்ந்து பல ஜாதகங்களை அலசுவதற்கு எனக்கு விருப்பம்தான். ஆனால் இது ஏற்ற இடமல்ல. இது திறந்த வெளி இணையம். இங்கே எழுதுபவைகள் எல்லாம் உடனுக்குடன், சுடச்சுட, திருட்டுப்போய்க் கொண்டிருக்கிறன. ஆகவே மேல் நிலையப் பாடங்களை இங்கே நான் எழுதுவதில்லை. ஒரு அழகான இளம் பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமம் அது. ஆகவே எனது தனி இணைய தளத்தில் அவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இதுவரை அதில் 100 பாடங்களை எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவைகள் எல்லாம் பின்னால், புத்தகங்களாக வரவிருக்கிறது. அப்போது அனைவரும் படிக்கலாம். அதுவரை பொறுத்திருங்கள்.
ஜோதிடத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், இங்கே இதுவரை எழுதப்பெற்றுள்ள 480 பாடங்களைப் படித்தால் போதும். அதுவே அதிகம்! அடைப்படையான விஷயங்களை இங்கே தொடர்ந்து எழுத உள்ளேன். அவற்றைத் தொடர்ந்து அனைவரும் படிக்கலாம்!
வாழ்க வளமுடன்!
Astrology: இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்!
ஒரே வரியில் ஜாகத்திற்குப் பலன் சொல்லிவிட்டு ஜாதகத்தை மூடி வைத்துவிடலாம். அப்படிப்பட்ட யோகத்துடன் கூடிய ஜாதகம் இது.
என்ன யோகம்?
மகாபாக்கிய யோகம்!
லக்கினத்தில், சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால், ஜாதகருக்கு அந்த யோகம் கிடைக்கும்!
அரசனுக்கு நிகரான யோகம். அவர் இசைக்கு அரசர். இசை ரசிகர்களுக் கெல்லாம் அரசர்! எண்ணற்ற மனிதர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்.
1977 ஆம் ஆண்டிற்கு முன்பு ஒரு ஐந்து வருட காலம் தமிழ்த் திரை உலகில் சற்றுத் தொய்வு விழுந்து, தமிழ் ரசிகர்களின் மனதில் எல்லாம் இந்திப் படங்களின் பாடல்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன.
(உதாரணம். Bobby, ஆராதனா, அந்தாஸ்(ஜ்), யாதோன் கி பாரத், ஷோலே போன்று பல படங்களைச் சொல்லலாம்)
அவர்களையெல்லாம், தன் துவக்கப்படங்கள் இரண்டின் மூலம், மீண்டும் தமிழ் திரை இசைப் பாடல்களைக் கேட்பதற்கு இழுத்துக் கொண்டு வந்தவர் இளையராஜா.
“மச்சானைப் பார்த்தீங்களா, மலை வாழைத் தோப்புக்குள்ளே” என்ற பாடலும், “கண்ணன் ஒரு கைக் குழந்தை, கண்கள் இரண்டும் பூங்கவிதை” என்ற பாடல்களைப் போல எத்தனை பாடல்கள்?
அவரைப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.
அவரது ஜாதகத்தை அலசுவோம்
++++++++++++++++++++++++++++++++++++++
அவருடைய ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் லக்கினத்தில் இருந்து மகா பாக்கிய யோகத்தைக் கொடுத்துள்ளார்கள். அத்துடன் மட்டுமா? ரிஷபலக்கினத்திற்கு யோககாரகரான சனீஷ்வரன் (9 & 10ஆம் இடத்திற்கு உரியவர்) லக்கினத்தில் இருக்கிறார். அவர் தர்மகர்ம அதிபதியும் ஆவார். கேட்க வேண்டுமா? அவரும் மற்றவர்களும் சேர்ந்து அவர் செய்த தொழிலில், அவரை எவரெஸ்ட் சிகரம் அளவிற்கு உச்சத்தில் கொண்டு போய் விட்டார்.
ரிஷப லக்கினத்திற்கு 3ஆம் இடமான வெற்றி ஸ்தான அதிபதி, சந்திரன் உச்சம் பெற்றதுடன், அவரும் சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்து, அவருடைய வெற்றிகளைப் பல மடங்காக்கிக் காட்டினார்.
தர்மகர்ம அதிபதி லக்கினத்தில் முதன்மைக் கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனுடன் அமர்ந்ததால், அவருக்கு ஆன்மீகத்திலும் தர்மத்திலும் அதீத ஈடுபாடு ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி ஆலயத்திற்கும் நிறைய தான தர்மங்களை ராஜா செய்திருக்கிறார். (அவரைப் பற்றிப் பக்கமாக எழுதலாம். எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் எழுதவில்லை!)
சுக்கிரனும் ராகுவும் சேர்ந்தால் கலைத் துறைதான். உடன் குருவும் சேர்ந்ததால், அவர் இசைக் கலைஞரானார்.
பூர்வபுண்ணிய அதிபதி புதன் (5th Lord) லக்கினத்தில் அமர்ந்ததால், அவருக்குப் பூர்வ புண்ணிய வாசனையாக கர்நாடக சங்கீதமும் வசப்பட்டது. பூர்வ ஜென்மத்தில் திருவாளர். பாலமுரளி கிருஷ்ணாவைப் போல, அவர் பெரிய கர்நாடக இசைக் கலைஞராக இருந்திருப்பாரோ என்னவோ -அது முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. மெல்லிசை, பாரம்பரிய கர்நாடக இசை, கிராமத்துத் தெம்மாங்கு இசை, மேற்கத்திய இசை, என்று இசையின் அத்தனை பரிமாணங்களும் அவருக்கு வசப்பட்டன!!! அவரது பூர்வ புண்ணியத்தால்தான் அவை எல்லாம் உள்ளங்கைக் கனியாக அவருக்குக் கிடைத்தன என்றால் அது மிகையல்ல!
நான்காம் வீட்டில் மாந்தி. சுகத்தைக் கெடுக்கக்கூடிய அமைப்பு. அவர் கடுமையான உழைப்பாளி. இயற்கையாகவே சுகங்களை நாடுபவர் அல்ல! அந்த வீட்டின் அதிபதி சூரியன் திரிகோணமேறியுள்ளார். அத்துடன் அந்த வீட்டிற்குப் பத்தில் உள்ளார்.. அதனால் அவர் இன்று செல்வந்தராக உள்ளார். ஆனால் எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும், அவர் எளிமையாக உள்ளார். தன்னுடைய தோற்றத்தைப் பற்றி, வசதி, வாய்ப்புக்களைப் பற்றிக் கவலைப் படாமல் எளிமையாக இருக்கிறார். எண்ணற்ற ரசிகர்கள் அவருக்குக் கிடைத்ததற்கு அந்த எளிமையும் ஒரு காரணம்! அந்த எளிமைக்கு மாந்தி ஒரு காரணம்!
இளம் பிராயத்தில் அவர் ஏன் சிரமப்பட்டார் என்ற கேள்வி பாக்கி நிற்கும். மனிதர் கால சர்ப்ப தோஷத்தில் பிறந்துள்ளார். அத்தனை கிரகங்களும் ராகு கேதுவிற்குள் மாட்டிக்கொண்டிருப்பதைக் கவனியுங்கள். 1943ல் பிறந்த அவர் 1976ஆம் ஆண்டு வரை சுமார் 33 ஆண்டுகள் பலவித கஷ்டங்களை அனுபவித்தார் என்றால், அது அந்த காலசர்ப்ப தோஷத்தினால்தான்! அந்த தோஷமே பின்பு அவருக்குப் பலத்த யோகத்தைக் கொடுத்தது. அதனால்தான் அந்த அமைப்பிற்குக் காலசர்ப்ப தோஷம் cum யோகம் என்று பெயர் அதை மனதில் கொள்க!
அன்புடன்
வாத்தியார்
20.09.2011
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தில் மேன்மை பெறுவதற்கு இதுபோன்ற ஜாதக அலசல்கள் முக்கியம். தொடர்ந்து பல ஜாதகங்களை அலசுவதற்கு எனக்கு விருப்பம்தான். ஆனால் இது ஏற்ற இடமல்ல. இது திறந்த வெளி இணையம். இங்கே எழுதுபவைகள் எல்லாம் உடனுக்குடன், சுடச்சுட, திருட்டுப்போய்க் கொண்டிருக்கிறன. ஆகவே மேல் நிலையப் பாடங்களை இங்கே நான் எழுதுவதில்லை. ஒரு அழகான இளம் பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமம் அது. ஆகவே எனது தனி இணைய தளத்தில் அவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இதுவரை அதில் 100 பாடங்களை எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவைகள் எல்லாம் பின்னால், புத்தகங்களாக வரவிருக்கிறது. அப்போது அனைவரும் படிக்கலாம். அதுவரை பொறுத்திருங்கள்.
ஜோதிடத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், இங்கே இதுவரை எழுதப்பெற்றுள்ள 480 பாடங்களைப் படித்தால் போதும். அதுவே அதிகம்! அடைப்படையான விஷயங்களை இங்கே தொடர்ந்து எழுத உள்ளேன். அவற்றைத் தொடர்ந்து அனைவரும் படிக்கலாம்!
வாழ்க வளமுடன்!
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஅலசல் அருமை... கேதுவையும், செவ்வாயையும் பற்றி ஒரு வரி சொல்லாமற் விட்டு விட்டீர்கள். ஒன்பதில் கேது தகப்பனை காலி செய்து விட்டது... அதோடு நாத்திக எண்ணத்தோடு இருந்து.... வளர்ந்த நாளில் சுய ஞானத்தில் ஆன்மீகத் தேடலில் இருக்கிறார் என்றும் கொள்ளலாம். அதோடு தந்தை வழி சொத்துக்கள் யாவும் கிடைக்காமலும் போயிருக்கும். சுயமாக உழைத்து பெரும் பொருள் ஈட்டும் அமைப்பு... ஏழிற்கு உரியவன் பதினொன்றில்... நல்ல அமைப்பு... அவனே பன்னிரெண்டிற்கும் உரியவன் அவன் அந்த வீட்டிற்கு பன்னிரெண்டில் இருக்கிறான் அவனின் பார்வை இரண்டாம் வீட்டில் (குடும்ப ஸ்தானத்தில்) விழுகிறது... யுவனின் அம்மா அவரின் இரண்டாவது மனைவி என்று கேள்விப்பட்டேன்.. (தவறாக இருந்தால் மன்னிக்கணும்).
நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.
ஐயா....
ReplyDeleteதட்டச்சு பிழை... சூரியன் உட்சம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். திருத்தம் செய்துவிடவும். நன்றி.
வாத்தியார் ஐயா வணக்கம்.
ReplyDeleteஆமாம் ஐயா!
தாங்கள் கூறுவது நூற்றிற்கு இறனூறு சதமானம் சரி ஐயா!
ஜோதிடக்கலை பொய் என்பவர்களுக்கான பாடம் இன்று வகுப்பறையில் நடைபெற்றுக்கொண்டு உள்ளது.
என்ன ஒரு அற்புதமான ஜாதகம் illaiyaa ஐயா.
வணக்கம் ஐயா,
ReplyDeleteபதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை "ஜகநாத ஹோரா"வில் பதிந்தேன் இளையராஜா அவர்களின் அஷ்டவர்க்கம் பரல்களை தெரிந்து கொள்ளும் ஆவலுடன். அப்பொழுது மாந்தி மூன்றாம் வீட்டில் (GL இருப்பது கடக ராசி) என மென்பொருள் காட்டுகிறதே ஏன் அப்படி?
"புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே, விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்" என்ற வரிகளை இளையராஜாவே பாடுவதாக திரையில் காண்பித்தார்கள். என்ன ஒரு பொருத்தம்.
ஜாதக அலசல்கள் பயனுள்ளவையாக உள்ளன. ஆனால் இணைய தளம் அதற்கு பொருத்தமில்லைதான். நீங்கள் காந்தி ஜாதக அலசல் தேர்வு வைத்த பொழுது மாணவர் சிலர் இணையத்தில் பதில் தேடியதாக கூறியது நினைவிற்கு வருகிறது.
எளிமையாக விளக்கியதற்கு நன்றி ஐயா.
மாணவி தேமொழி
அருமையான் அலசல் ஐயா!சந்திரன் உச்சம் என்பதாலேயே அதுவும் கலைகளுக்கு உரிய சுக்கிரன் வீட்டில் என்பதாலும், அவர் மாபெரும் கலைஞர்
ReplyDeleteஆனார் என்றும் சொல்லலாம்.
அவரின் எளிமைக்குக் காரணமாக நான்காம் இடத்து மாந்தி இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே படித்தால் நீங்களும் அதையே எழுதியிருக்கிறீர்கள். எனக்கும் நான்கில்தான் மாந்தி இருக்கிறது. நீங்கள் எழுதிய பலன் முழுக்கப் பொருந்துகிறது.
ReplyDeleteரிஷப லக்கினத்திற்கு 3ஆம் இடமான வெற்றி ஸ்தான அதிபதி, சந்திரன் உச்சம் பெற்றதுடன்,// மேலும் இலக்கின / மூன்றாம் அதிபதிகள் பரிவர்த்தனை. மேலும் விபரீத ராஜயோகமும் indha ஜாதகத்தில் இருக்கிறது. குரு உச்சம்.
அய்யா சூரியன் சனி சந்திரன் சேர்க்கை லக்கினத்தில் என்ன பலன் மேலும் ஒரு சந்தேகம் ராகுவை தலையாக கொன்டு கேதுவை முடிவாக கொன்டால் மட்டுமே (இடையில் கிரகங்கள சிக்கிக்கொன்ட நிலையில்)கால சர்ப்ப தோசம் என்ரு படித்து இருக்கிரேன் கேளவி தவராக இருந்தால் மன்னிக்கவும்
ReplyDelete/////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
அலசல் அருமை... கேதுவையும், செவ்வாயையும் பற்றி ஒரு வரி சொல்லாமற் விட்டு விட்டீர்கள். ஒன்பதில் கேது தகப்பனை காலி செய்து விட்டது... அதோடு நாத்திக எண்ணத்தோடு இருந்து.... வளர்ந்த நாளில் சுய ஞானத்தில் ஆன்மீகத் தேடலில் இருக்கிறார் என்றும் கொள்ளலாம். அதோடு தந்தை வழி சொத்துக்கள் யாவும் கிடைக்காமலும் போயிருக்கும். சுயமாக உழைத்து பெரும் பொருள் ஈட்டும் அமைப்பு... ஏழிற்கு உரியவன் பதினொன்றில்... நல்ல அமைப்பு... அவனே பன்னிரெண்டிற்கும் உரியவன் அவன் அந்த வீட்டிற்கு பன்னிரெண்டில் இருக்கிறான் அவனின் பார்வை இரண்டாம் வீட்டில் (குடும்ப ஸ்தானத்தில்) விழுகிறது... யுவனின் அம்மா அவரின் இரண்டாவது மனைவி என்று கேள்விப்பட்டேன்.. (தவறாக இருந்தால் மன்னிக்கணும்).
நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.//////
ஒன்பதில் கேது இருப்பதால், நீங்கள் சொல்வது சரி. ஆனால் அவருடைய சொந்த வாழ்க்கை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. ஆகவே அதைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை.
////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteஐயா....
தட்டச்சு பிழை... சூரியன் உட்சம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். திருத்தம் செய்துவிடவும். நன்றி./////
திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!
////Blogger kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கம்.
ஆமாம் ஐயா!
தாங்கள் கூறுவது நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் சரி ஐயா!
ஜோதிடக்கலை பொய் என்பவர்களுக்கான பாடம் இன்று வகுப்பறையில் நடைபெற்றுக்கொண்டு உள்ளது.
என்ன ஒரு அற்புதமான ஜாதகம் illaiyaa ஐயா.//////
அவரும் அற்புதமான மனிதர். அவருடைய ஜாதகமும் அற்புதமானதுதான். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை!
/////Blogger மாணவி தேமொழி said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை "ஜகநாத ஹோரா"வில் பதிந்தேன் இளையராஜா அவர்களின் அஷ்டவர்க்கம் பரல்களை தெரிந்து கொள்ளும் ஆவலுடன். அப்பொழுது மாந்தி மூன்றாம் வீட்டில் (GL இருப்பது கடக ராசி) என மென்பொருள் காட்டுகிறதே ஏன் அப்படி?
"புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே, விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்" என்ற வரிகளை இளையராஜாவே பாடுவதாக திரையில் காண்பித்தார்கள். என்ன ஒரு பொருத்தம்.
ஜாதக அலசல்கள் பயனுள்ளவையாக உள்ளன. ஆனால் இணைய தளம் அதற்கு பொருத்தமில்லைதான். நீங்கள் காந்தி ஜாதக அலசல் தேர்வு வைத்த பொழுது மாணவர் சிலர் இணையத்தில் பதில் தேடியதாக கூறியது நினைவிற்கு வருகிறது.
எளிமையாக விளக்கியதற்கு நன்றி ஐயா.
மாணவி தேமொழி//////
வாக்கியம், திருக்கணிதக்குழப்பம்போல, "ஜகநாத ஹோரா" குழப்பமும் ஒன்று. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. 4ல் தான் மாந்தி அதில் குழப்பம் வேண்டாம்! மூன்றில் மாந்தி இருந்திருந்தால், அவர் இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. அதை மனதில் வையுங்கள்!
Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅருமையான் அலசல் ஐயா!சந்திரன் உச்சம் என்பதாலேயே அதுவும் கலைகளுக்கு உரிய சுக்கிரன் வீட்டில் என்பதாலும், அவர் மாபெரும் கலைஞர் ஆனார் என்றும் சொல்லலாம்./////
உண்மைதான். நன்றி கிருஷ்ணன் சார்!
Blogger Uma said...
ReplyDeleteஅவரின் எளிமைக்குக் காரணமாக நான்காம் இடத்து மாந்தி இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே படித்தால் நீங்களும் அதையே எழுதியிருக்கிறீர்கள். எனக்கும் நான்கில்தான் மாந்தி இருக்கிறது. நீங்கள் எழுதிய பலன் முழுக்கப் பொருந்துகிறது.
ரிஷப லக்கினத்திற்கு 3ஆம் இடமான வெற்றி ஸ்தான அதிபதி, சந்திரன் உச்சம் பெற்றதுடன்,// மேலும் இலக்கின / மூன்றாம் அதிபதிகள் பரிவர்த்தனை. மேலும் விபரீத ராஜயோகமும் indha ஜாதகத்தில் இருக்கிறது. குரு உச்சம்./////
எல்லாம் சரி.விபரீத ராஜயோகத்தைத் தவிர! நன்றி சகோதரி!
////Blogger rajakala said...
ReplyDeleteஅய்யா சூரியன் சனி சந்திரன் சேர்க்கை லக்கினத்தில் என்ன பலன் மேலும் ஒரு சந்தேகம் ராகுவை தலையாகக் கொண்டு கேதுவை முடிவாக கொன்டால் மட்டுமே (இடையில் கிரகங்கள சிக்கிக்கொன்ட நிலையில்)கால சர்ப்ப தோசம் என்று படித்து இருக்கிறேன் கேளவி தவறாக இருந்தால் மன்னிக்கவும்/////
லக்கினத்தில் சந்திரன் மட்டும் இருந்தால் நல்ல, அழகான தோற்றத்தைக் கொடுப்பார். சனி சேர்ந்தால், எளிமையான சிம்ப்பிளான தோற்றத்தை
மட்டும்தான் கொடுப்பார். ராகு,கேது இரண்டில் எது முன்னணியில் இருந்தாலும் கா.ச.தோஷம்தான். பழைய பாடங்களைப் படியுங்கள்
ஆறாம் அதிபதி சுக்கிரனும், எட்டாம் அதிபதி குருவும் சேர்ந்து மூன்றில் இருப்பது விபரீத ராஜயோகம் இல்லையா?
ReplyDeleteஐயா!
ReplyDeleteஒரு பெரியவர் ( என்னுடைய சிறிய வயதில்) 15 வருடத்திற்கு முன்னர் சொல்ல கேட்டது ஐயா.
இளையராஜா அவர்கள் சிறிய வயதில் வயலில் மாடு மேய்த்து கொண்டு இருக்கும் பொழுது அவ்வழியாக
சென்ற ( சாஸ்திரம், சம்பிறாதயம் தெரிந்த) சந்நியாசி கூறினாராம் இளையராஜாவை பார்த்து பிற்காலத்தில் பேரும்
புகலோடும் வாழ்வாய் என்று. அன்னாரின் வாக்கும் பலித்து விட்டது இல்லையா ஐயா.
இளைய ராஜாவின் ஜாதகத்தை கண்ணில் எடுத்து ( தொட்டு வணங்க சொல்லுது ) வைத்துகொள்ள தோன்றுகின்றது.
ஜாதகம் இன்டர்நெட் மூலம் வருவதால் " லேப் டாப்", பை தான் எடுத்து வைத்து கொள்ள முடிகின்றது கண்களில். ;-)))
Vanakkam Ayya,
ReplyDeleteMy elder and younger bros too have Kalasarpa yogams in their Horosopes,they work really very hard but get fewer good results only B'coz of this yogam...But i guess Slow and steady wins the race(i suppose that everyone should comfort themselves with this!!!)Coz this is "Life"
சைஞானி இளையராஜாவின் ஜாதக அலசல் மிக சிறந்த பாடம்,
ReplyDeleteகாலசர்ப்ப தோசம் cum யோகம் இசைஞானி இளையராஜாவின் ஜாதகம் ஒரு எடுத்துக்கட்டு,
நன்றி
'இளையராஜாவுக்கு இணையாக எவனாலும் முடியாது' என்று ஒருமுறை கமலஹாசன் ஒருமையில் பேசி இளையராஜாவைப் புகழ்ந்திருந்தார்..
ReplyDelete'அன்னக்கிளியே உன்னைத்தேடுது' பாடலின் துவக்கத்தில்
'ஆஹ்ஹா.ஆஆஹ்ஹா ஹா..ஹா..ஹ் .ஹா..'
என்கிற ரீதியில் போகும்..
அந்தப் பகுதியை மட்டும் எடிட் செய்து AAC format கன்வெர்ட் பண்ணி என் தற்போதைய ரிங்டோனாக வைத்திருக்கிறேன்..
விரகதாபம் இழைந்தோடும் அந்தக்குரலை வடித்த சிற்பி இசைஞானியின் இசையைத்தான் கமல் தன் விருமாண்டி படத்தில் கொணர்ந்திருந்தார்..
படத்தில்ஒவ்வொரு பாடலும் மனதில் அந்தந்த சம்பவத்திற்கேற்ப மனதின் உணர்ச்சிவேகத்தைத் தட்டியெழுப்பும்..
எத்தனை எத்தனையோ பாடல்கள்..தனி வலைப்பூவே துவங்கி ஒவ்வொருநாளும் பக்கம்பக்கமாக எழுதலாம்..
உண்மையில் வேறெவராலும்
ரி-பிளேஸ் பண்ணமுடியாத ஒரு கலைஞன்..
முதல் படத்துப் பாடலிலிருந்து துவங்கி ஃபீல்டை விட்டு ஒதுங்கியிருக்கும் சமீபகாலத்து படத்து இசையமைப்பிலும் உணர்வை தொட்டு சிலிர்க்கவைத்து மீட்டும் அவரது காவியத்துவம் நிறைந்த
படைப்பில் கொஞ்சம்கூட மாற்றமில்லை....
எந்தந்த கிரகங்கள் காரணமாக இருந்தாலும் அவையனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றி..
/////Blogger Uma said...
ReplyDeleteஆறாம் அதிபதி சுக்கிரனும், எட்டாம் அதிபதி குருவும் சேர்ந்து மூன்றில் இருப்பது விபரீத ராஜயோகம் இல்லையா?//////
ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்
ஆனால் அவர் ஜாதகத்தில் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு கிரகங்களுமே சுபக் கிரகங்கள். ஆகையால் விபரீதத்தை உண்டாக்காமல் நேரடியாகவே
யோகத்தைக் கொடுக்கும் வல்லமை பெற்றவர்கள் அவர்கள்! சுக்கிரன் லக்கினாதிபதி, குரு 11ஆம் வீட்டிற்கும் உரியவர் (லாபாதிபதி) லக்கினாதிபதியும், லாபாதிபதியும் ஒன்று சேர்ந்தால் அடித்து ஆட மாட்டார்களா என்ன? டபுள் செஞ்சுரிதான்!
/////Blogger kannan said...
ReplyDeleteஐயா!
ஒரு பெரியவர் ( என்னுடைய சிறிய வயதில்) 15 வருடத்திற்கு முன்னர் சொல்ல கேட்டது ஐயா.
இளையராஜா அவர்கள் சிறிய வயதில் வயலில் மாடு மேய்த்து கொண்டு இருக்கும் பொழுது அவ்வழியாக
சென்ற ( சாஸ்திரம், சம்பிரதாயம் தெரிந்த) சந்நியாசி கூறினாராம் இளையராஜாவை பார்த்து பிற்காலத்தில் பேரும்
புகழோடும் வாழ்வாய் என்று. அன்னாரின் வாக்கும் பலித்து விட்டது இல்லையா ஐயா.
இளைய ராஜாவின் ஜாதகத்தைக் கண்ணில் எடுத்து ( தொட்டு வணங்க சொல்லுது ) வைத்துகொள்ளத் தோன்றுகின்றது.
ஜாதகம் இன்டர்நெட் மூலம் வருவதால் " லேப் டாப்", பைத் தான் எடுத்து வைத்து கொள்ள முடிகின்றது கண்களில். ;-)))///////
ஆகா, மிகவும் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறீர்களே கண்ணன். முருகன் அருள் முன்னிற்கட்டும்!
/////Blogger R.Srishobana said...
ReplyDeleteVanakkam Ayya,
My elder and younger bros too have Kalasarpa yogams in their Horosopes,they work really very hard but get fewer good results only
B'coz of this yogam...But i guess Slow and steady wins the race(i suppose that everyone should comfort themselves with this!!!)Coz this is
"Life"/////
நல்லது. நன்றி சகோதரி!
//Blogger RMURUGARAJAN said...
ReplyDeleteஇசைஞானி இளையராஜாவின் ஜாதக அலசல் மிக சிறந்த பாடம், காலசர்ப்ப தோசம் cum யோகம் இசைஞானி இளையராஜாவின் ஜாதகம் ஒரு எடுத்துக்காட்டு, நன்றி/////
உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger minorwall said...
ReplyDelete'இளையராஜாவுக்கு இணையாக எவனாலும் முடியாது' என்று ஒருமுறை கமலஹாசன் ஒருமையில் பேசி இளையராஜாவைப்
புகழ்ந்திருந்தார்..
'அன்னக்கிளியே உன்னைத்தேடுது' பாடலின் துவக்கத்தில் 'ஆஹ்ஹா.ஆஆஹ்ஹா ஹா..ஹா..ஹ் .ஹா..'
என்கிற ரீதியில் போகும்.. அந்தப் பகுதியை மட்டும் எடிட் செய்து AAC format கன்வெர்ட் பண்ணி என் தற்போதைய ரிங்டோனாக
வைத்திருக்கிறேன்.. விரகதாபம் இழைந்தோடும் அந்தக்குரலை வடித்த சிற்பி இசைஞானியின் இசையைத்தான் கமல் தன் விருமாண்டி
படத்தில் கொணர்ந்திருந்தார்.. படத்தில்ஒவ்வொரு பாடலும் மனதில் அந்தந்த சம்பவத்திற்கேற்ப மனதின் உணர்ச்சிவேகத்தைத்
தட்டியெழுப்பும்.. எத்தனை எத்தனையோ பாடல்கள்..தனி வலைப்பூவே துவங்கி ஒவ்வொருநாளும் பக்கம்பக்கமாக எழுதலாம்..
உண்மையில் வேறெவராலும் ரி-பிளேஸ் பண்ணமுடியாத ஒரு கலைஞன்..
முதல் படத்துப் பாடலிலிருந்து துவங்கி ஃபீல்டை விட்டு ஒதுங்கியிருக்கும் சமீபகாலத்து படத்து இசையமைப்பிலும் உணர்வை தொட்டு
சிலிர்க்கவைத்து மீட்டும் அவரது காவியத்துவம் நிறைந்த படைப்பில் கொஞ்சம்கூட மாற்றமில்லை....
எந்தந்த கிரகங்கள் காரணமாக இருந்தாலும் அவையனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றி../////
பின்னூட்டத்தின் மூலம் வாத்தியாரின் மனதை டச்சிங்..டச்சிங் பண்ணீட்டிங்க மைனர். உண்மைதான் அவருக்கு ஈடான இசைக்கலைஞன்
இன்றையத் தேதிக்கு யாருமில்லை. புல்லாங்குழல், வயலின், சாக்சஃபோன், ஆர்மோனியப் பெட்டி, கிட்டார் என்று எந்த இசைக் கருவியைக்
கொடுத்தாலும் தேவையான மனித மன உணர்வுகளை அதில் வெளிப்படுத்தக்கூடிய இசை அரசன் அவர். ஜென்ஸி என்ற அற்புதமான
பாடகியை அறிமுகப் படுத்திய மேதை அவர். அவருடைய மேன்மைக்கு, “தம் தன தம் தன தாளம் வரும்” என்ற ஒரு பாடல் போதும் மைனர்.
அவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற திருப்தி நமக்கு இருக்கிறது மைனர். அது ஒன்றே போதும்!
///ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
ReplyDeleteதுஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்///
விபரீத ராஜ யோகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அதில் தாங்கள் மேலே குறிப்பிட்டதும் ஒன்று. இதை நான் சொல்லவில்லை. முந்தைய பாடத்தில் தாங்கள் சொன்னதுதான். http://classroom2007.blogspot.com/2010/05/blog-post_10.html. இங்கு சென்று பார்த்தால் நான் சொல்வது விளங்கும். வாத்தியாருக்கே இந்த குழப்பம் என்றால் மாணவர்கள் நிலை?
ஒன்பதில் கேது தகப்பனை காலி செய்து விட்டது...அதோடு தந்தை வழி சொத்துக்கள் யாவும் கிடைக்காமலும் போயிருக்கும்????
ReplyDeleteAppadiyaa???
////SP.VR. SUBBAIYA said...
ReplyDeleteஅவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற திருப்தி நமக்கு இருக்கிறது மைனர். அது ஒன்றே போதும்!////
இந்த வரிகளை எழுத நினைத்து விட்டுவிட்டேன்..நீங்கள் பூர்த்தி செய்திருக்கிறீர்கள்..
ஜென்சி பற்றி 'எனக்கு மிகவும் பிடித்த குரல்' என்று ஏற்கனவே எனது ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்..
அவரையும் நினைவு படுத்தியதற்கு நன்றி..
அன்புள்ள அய்யா,
ReplyDeleteஅமாவாசை திதி, தேய்பிறை சந்திரன் மற்றும் லக்கினத்தில் சனி இருந்தும் இளையராஜா அவர்களால் வெற்றி பெறமுடிந்தது. எந்த கிரக அமைப்பால் அவரால் இந்த வெற்றியை பெற முடிந்தது?
அய்யா,
ReplyDeleteவகுப்பரையில் வர வர நிரைய மாற்றங்கள் தெரிகின்றது சுவாமி. ஹோலிக்கிராஷ், சத்திரம் பேருந்து நிலையம், கன்டோன்மெண்ட் என்று பாடங்களில் உதா. தெரிக்கின்றது. இங்கே மலை மேலே சிக்னல் சரிவர கிடைப்பதில்லை என்பதால், சில பல வேலைகலுக்கிடையே படிக்கமட்டுமே நேரம் கிடைப்பதனால் கமன்டுவதில்லை.
இன்றய இசைஞானி இளையராஜாவின் புன்னகை படம் அருமை. அவர் க்லோசப் கஷ்டமர்னு நினைக்கிறேன். அவரின் ஜதகமென்று வெரோரிடத்தில் கண்ட ஞபகம்,
//மச்சானைப் பார்த்தீங்களா, மலை வாழைத் தோப்புக்குள்ளே” என்ற பாடலும், “கண்ணன் ஒரு கைக் குழந்தை, கண்கள் இரண்டும் பூங்கவிதை” என்ற பாடல்களைப் போல எத்தனை பாடல்கள்?// நல்ல தகவள்.
சந்திரன் மூலதிரிகோனத்தில், //அந்த வீட்டின் அதிபதி சூரியன் திரிகோணமேறியுள்ளார்.// சூரியன் மேசத்திலல்லவா, சிம்மத்தில் அல்லவா மூலதிரிகோணம், உச்சம் அய்யா...
//எனது தனி இணைய தளத்தில் அவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்// ஆகா, அப்பொழுது அங்கே படம் காட்டுகின்றிர்கள் என்று சொல்லுங்கள் :)
சரி சரி டிக்கெட்டு என்ன விலை சுவாமி.
In one of the horoscope of thula lagna i find ketu is in third house and rahu in ninth house. all other planets are in between ninth house to third one. ie.third to ninth no planet. but she suffered from health disorders had three operations from childhood days though her life is financially ok.
ReplyDeleteis it kalasarpa dosa?
i mentioned it as kalasarpa dosa but the astrologers where they had given horoscope never said this as dosha. kindly clarify sir
இசை என்னும் காட்டுக்கு
ReplyDeleteஇவர் தான் ராஜா..
எந்த "மான்"னும் ராஜாவாக
எப்பவுமே முடியாது..
அந்த "மான்" சென்று
ஆஸ்கார் வாங்கினாலும்
"எங்க ஊரு ராசா" என்ற விருதுக்கு
எப்படி இவங்க விருது தரமுடியும்?
திருவாசகத்திற்கு இசையமைத்து
திரும்பி பார்க்க வைத்த பெருமையும்
பாவலர் என்ற சொல்லுக்கு
பெருமை சேர்த்த பாங்கும்..
ராக்கம்மா கையை தட்டினாலும் கரகாட்டக்காரன் கரகமாடினாலும்
அம்மன் கோவில் கிழக்காலேயில்
சின்னக் கவுண்டர் தீர்ப்பு வந்தாலும்
ராசய்யாவில் மகளை பாடவைத்த
ராஜா அல்லவா.. எங்கள் ராசய்யா..
எவரும் அழகான இளம் பெண்னை
எப்போதுமே திறந்தவெளியில்(?)
குளிப்பதனை எப்போதுமே
குறைத்துச் சொல்வர்..
அந்த வகுப்பிலேயே
அதனை புதுப்பித்துக் கொள்கிறோம்
அப்படியே படித்துக்கொண்டிருக்கிறோம்
அப்பறம் சொல்லுங்க..
வழக்கம் போல் வரும் கவிஞரின்
வரிகளை செவிகளுக்குது தந்தபடி
வென்றிடுவேன்
நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும்
நாதத்தால் வென்றிடுவேன்
..
சண்முகப்பிரியன் எனும் தைரியமா
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
..
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன்
படம்.அகத்தியர் பாடுபவர் சீர்காழியார்
ஒரு இசை ஞனியின் ஜாதகத்தில் 7ல் 23 பரலை மட்டும் விட்டுவைதுல்லான். குடும்ப வாழ்வும் கெட்டதுபோலும். அய்யா சூரியன் இருப்பு விவரம் சரிதானா?
ReplyDelete//அதோடு தந்தை வழி சொத்துக்கள் யாவும் கிடைக்காமலும் போயிருக்கும்.// கோபி சார், என்ன எதிற்பார்கின்றீர்கள், சுக்கிரன் க்ரூப் டிஷ்கர்ஷன் சேய்துக்கொன்டிருக்கிறானென்ரா?
:)ஒன்னுமே புரியல சகோதரி. இன்னொரு ப்லேட் சாப்டுட்டு வந்து படிக்கனும்.
//என்ன ஒரு அற்புதமான ஜாதகம் illaiyaa ஐயா.// ஆமாஇல்ல இத சொல்லமரந்துட்டனே.
மைனர்-வாழ், சமிபத்துல டீவில ஜப்பானில், கல்யாணராமன் படம் பார்த்தேன், அதுலகூட ஆஹா வந்துருச்சினு ஒரு பாடல் வரும்.. இது உங்க கமன்டலுக்கு அடிஷன்.
பாட்டாலே புத்தி சொன்னா என்ற
ReplyDeleteபாடலும் அவரின் இனிய குரலை
ஜெனனி ஜனனி என தொடங்கி
ஜெயிக்க வைத்த பாங்கும் இன்னொரு
பின்னோட்டம் போட வைத்தது
பிறகென்ன அப்படியே..இந்த தகவலும்
அவரின் ஜாதக்கத்தைப்போல
அய்யரின் ஜாதகமும் ரிஷப லக்கினம்
கலைத்துறையின்
கரையில் நின்றபடி...
Please let me know when are you publishing the book? Awaiting for the information
ReplyDeleteRegards
Sridhar
@மாணவி தேமொழி அவர்களுக்கு,
ReplyDeleteஜகன்னாத் ஹோரா சாப்ட்வேரில் மாந்தி நான்காம் வீட்டில் தான் வருகிறது. மக நட்சத்திரம் இரண்டாம் பாதம். May be it is version difference. Download latest version, probably you will get it right.
@ஆசிரியருக்கு,
sir, can we take here,lagna lord sukra breaking kalasarpa yoga as he is considered to be benefic for this native.
Blogger ananth said...
ReplyDelete///ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்///
விபரீத ராஜ யோகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அதில் தாங்கள் மேலே குறிப்பிட்டதும் ஒன்று. இதை நான்
சொல்லவில்லை. முந்தைய பாடத்தில் தாங்கள் சொன்னதுதான். http://classroom2007.blogspot.com/2010/05/blog-post_10.html. இங்கு சென்று
பார்த்தால் நான் சொல்வது விளங்கும். வாத்தியாருக்கே இந்த குழப்பம் என்றால் மாணவர்கள் நிலை?//////
யானைக்கும் அடி சறுக்கும் என்னும்போது, பூனைக்கு அடி சறுக்காதா?
///Blogger KOMATHI JOBS said...
ReplyDeleteஒன்பதில் கேது தகப்பனை காலி செய்து விட்டது...அதோடு தந்தை வழி சொத்துக்கள் யாவும் கிடைக்காமலும் போயிருக்கும்????
Appadiyaa???/////
மகாபாக்கியம் இருக்கும்போது வேறு என்ன வேண்டும்?
/////Blogger minorwall said...
ReplyDelete////SP.VR. SUBBAIYA said...
அவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற திருப்தி நமக்கு இருக்கிறது மைனர். அது ஒன்றே போதும்!////
இந்த வரிகளை எழுத நினைத்து விட்டுவிட்டேன்..நீங்கள் பூர்த்தி செய்திருக்கிறீர்கள்..
ஜென்சி பற்றி 'எனக்கு மிகவும் பிடித்த குரல்' என்று ஏற்கனவே எனது ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்..
அவரையும் நினைவு படுத்தியதற்கு நன்றி..//////
ஜென்சியின் பாடல்களை வைத்து கட்டுரை ஒன்றை எழுதுங்கள் மைனர்! நீங்கள் எழுதாவிட்டால் நான் எழுதுகிறேன். இருந்தாலும்
உங்களுக்குத்தான் முதல் வாய்ப்பு!
/////Blogger Raja said...
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
அமாவாசை திதி, தேய்பிறை சந்திரன் மற்றும் லக்கினத்தில் சனி இருந்தும் இளையராஜா அவர்களால் வெற்றி பெறமுடிந்தது. எந்த கிரக
அமைப்பால் அவரால் இந்த வெற்றியை பெற முடிந்தது?////////
பதிவில் அதைக் குறிப்பிட்டு எழுதியுள்ளேனே ராசா!
Blogger தன்டாயுதம் said...
ReplyDeleteஅய்யா,
வகுப்பறையில் வர வர நிறைய மாற்றங்கள் தெரிகின்றது சுவாமி. ஹோலிக்கிராஷ், சத்திரம் பேருந்து நிலையம், கன்டோன்மெண்ட் என்று
பாடங்களில் உதா. தெரிக்கின்றது. இங்கே மலை மேலே சிக்னல் சரிவர கிடைப்பதில்லை என்பதால், சில பல வேலைகலுக்கிடையே படிக்கமட்டுமே நேரம் கிடைப்பதனால் கமன்டு வதில்லை.
இன்றய இசைஞானி இளையராஜாவின் புன்னகை படம் அருமை. அவர் க்லோசப் கஷ்டமர்னு நினைக்கிறேன். அவரின் ஜதகமென்று
வெரோரிடத்தில் கண்ட ஞாபகம்,
//மச்சானைப் பார்த்தீங்களா, மலை வாழைத் தோப்புக்குள்ளே” என்ற பாடலும், “கண்ணன் ஒரு கைக் குழந்தை, கண்கள் இரண்டும்
பூங்கவிதை” என்ற பாடல்களைப் போல எத்தனை பாடல்கள்?// நல்ல தகவல்.
சந்திரன் மூலதிரிகோனத்தில், //அந்த வீட்டின் அதிபதி சூரியன் திரிகோணமேறியுள்ளார்.// சூரியன் மேசத்திலல்லவா, சிம்மத்தில் அல்லவா மூலதிரிகோணம், உச்சம் அய்யா...
//எனது தனி இணைய தளத்தில் அவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்// ஆகா, அப்பொழுது அங்கே படம் காட்டுகின்றிர்கள் என்று
சொல்லுங்கள் :) சரி சரி டிக்கெட்டு என்ன விலை சுவாமி.///////
டிக்கெட் விலை கிடக்கட்டும். திரிகோண மலைக்கு வருவதற்கு என்ன வழி?
//////Blogger thirukalyanam said...
ReplyDeleteIn one of the horoscope of thula lagna i find ketu is in third house and rahu in ninth house. all other planets are in between ninth house to third one. ie.third to ninth no planet. but she suffered from health disorders had three operations from childhood days though her life is
financially ok. is it kalasarpa dosa?
i mentioned it as kalasarpa dosa but the astrologers where they had given horoscope never said this as dosha. kindly clarify sir//////
லக்கினம் வெளியே இருந்தாலும், ஏழு கிரகங்கள் ராகு & கேதுவிற்குள் மாட்டிக் கொண்டிருந்தால் (all the planets hemmed between Rahu &
Ketu) அது கால சர்ப்ப தோஷம்தான்!
Blogger iyer said...
ReplyDeleteஇசை என்னும் காட்டுக்கு
இவர் தான் ராஜா..
எந்த "மான்"னும் ராஜாவாக
எப்பவுமே முடியாது..///////
எதற்கு மற்றவர்களைக் குறிப்பிட்டு வம்பிழுக்க வேண்டும்? S.M. சுப்பையா நாயுடு, ராஜேஷ்வர ராவ், ஜி.ராமநாதன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்று பல இசை மேதைகள் கொடி பிடித்ததை மறக்கமுடியுமா?
“பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - யாவருக்கும்
பொது செல்வமன்றோ”
என்ற பாடலை இன்று கேட்டாலும் காற்றில் தவழ முடிகிறதே சுவாமி!
//////Blogger தன்டாயுதம் said...
ReplyDeleteஒரு இசை ஞனியின் ஜாதகத்தில் 7ல் 23 பரலை மட்டும் விட்டுவைதுள்ளான். குடும்ப வாழ்வு கெட்டதுபோலும். அய்யா சூரியன் இருப்பு விவரம் சரிதானா?/////
குடும்ப வாழ்வு ஒன்றும் கெட்டதாகத் தெரியவில்லை. மகாபாக்கிய யோகம் உள்ளவருக்குக் குடும்ப வாழ்வு எப்ப்டிக்கெடும்? மனைவி, மக்களுடன் அவர் நன்றாகத்தான் உள்ளார். தண்டாயுதம் என்று எழுதுங்கள். தமிழ்கடவுளின் பெயரை வைத்துக்கொண்டு பெயரில் எழுத்துப்
பிழை வரலாமா?
///Blogger iyer said...
ReplyDeleteபாட்டாலே புத்தி சொன்னா என்ற
பாடலும் அவரின் இனிய குரலை
ஜெனனி ஜனனி என தொடங்கி
ஜெயிக்க வைத்த பாங்கும் இன்னொரு
பின்னோட்டம் போட வைத்தது
பிறகென்ன அப்படியே..இந்த தகவலும்
அவரின் ஜாதக்கத்தைப்போல
அய்யரின் ஜாதகமும் ரிஷப லக்கினம்
கலைத்துறையின்
கரையில் நின்றபடி...//////
லக்கினத்தைச் சொன்னீர்கள். லக்கினாதிபதி எங்கே? அவர் கரை சேர்ந்துவிட்டாரா?
/////Blogger Sridhar Subramaniam said...
ReplyDeletePlease let me know when are you publishing the book? Awaiting for the information
Regards
Sridhar/////
பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நடப்பு ஆண்டு இறுதிக்குள் புத்தகங்கள் வெளியாகும். உங்களின் ஆர்வத்திற்கு நன்றி. முறையான
அறிவிப்பு வெளிவரும்வரை பொறுத்திருங்கள்!
//////Blogger sriganeshh said...
ReplyDelete@மாணவி தேமொழி அவர்களுக்கு,
ஜகன்னாத் ஹோரா சாப்ட்வேரில் மாந்தி நான்காம் வீட்டில் தான் வருகிறது. மக நட்சத்திரம் இரண்டாம் பாதம். May be it is version difference. Download latest version, probably you will get it right.
@ஆசிரியருக்கு,
sir, can we take here,lagna lord sukra breaking kalasarpa yoga as he is considered to be benefic for this native.//////
கால சர்ப்பதோஷத்தை அதன் உள்ளே மாட்டிக்கொண்டிருப்பவர்கள் எவரும் உடைக்க முடியாது. அதன் (கா.ச.தோ) காலம் முடிந்த பிறகுதான் நல்லது நடக்கத்துவங்கும்.
///எதற்கு மற்றவர்களைக் குறிப்பிட்டு வம்பிழுக்க வேண்டும்? S.M. சுப்பையா நாயுடு, ராஜேஷ்வர ராவ், ஜி.ராமநாதன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்று பல இசை மேதைகள் கொடி பிடித்ததை மறக்கமுடியுமா?///
ReplyDeleteவம்பிற்கு இழுப்பதாக சொல்லி
வம்பில் மாட்டிவிடுவதா..?
இசை சிங்கங்கள் நீங்கள் குறிப்பிட்டது
இந்த காட்டில் சிங்கம் மட்டுமே "ராசா"
சிங்கம் காட்டுக்கு ராசா தானே அந்த
சிங்கங்கள் வாழ்ந்த காட்டில் எப்படி
மானோ.. அல்லது அது போன்ற
மற்றவிலங்குகளோ ராசாவாக முடியும்
அதைத்தானே அந்தத பின்ஊட்டத்தில்
அய்யர் குறிப்பிட்டு இருந்தார்..
சரி.. சரி..
சரியாக சிந்திக்க இப்படி தந்த பதில்
நித்தியம் சொல்லவே
சத்தியமாகவே இருக்கிறது..
///////தன்டாயுதம் said... மைனர்வாள், சமிபத்துல டீவில ஜப்பானில், கல்யாணராமன் படம் பார்த்தேன், அதுலகூட ஆஹா வந்துருச்சினு ஒரு பாடல் வரும்.. இது உங்க கமன்டலுக்கு அடிஷன்./////////
ReplyDeleteவிதிவிலக்குகளான பாடல்கள் எப்போதுமே உண்டு..அதாவது எனக்குப் பிடிக்காத வகைப் பாடல்கள் என்று..அந்த வகையில் இந்தப்பாடலும் கூட..எனக்குப் பிடிக்காத ஒரு வேடத்தில் ஒரு கோணங்கி கேரக்டெரில் பல்லை துருத்திக்கொண்டு கமல் அந்தப் படத்தின் பாடலில் வந்தது காரணம்..பாடலும் பிடிக்காது..மனதிற்கினிமையான காட்சியமைப்புகள் பாடல்கள் என்று பிடித்தவைகளை மட்டுமே தரம்பிரித்து இருப்பில் கொள்ளும் பழக்கம்..நல்லது..நன்றி..
/// SP.VR. SUBBAIYA said...
ReplyDeleteஜென்சியின் பாடல்களை வைத்து கட்டுரை ஒன்றை எழுதுங்கள் மைனர்! நீங்கள் எழுதாவிட்டால் நான் எழுதுகிறேன். இருந்தாலும்
உங்களுக்குத்தான் முதல் வாய்ப்பு!\\\\\\\
வாய்ப்பளித்தமைக்கு நன்றி வாத்தியாரே..
முயற்சி செய்கிறேன்..
மீண்டும் நன்றி..
////Blogger iyer said...
ReplyDelete///எதற்கு மற்றவர்களைக் குறிப்பிட்டு வம்பிழுக்க வேண்டும்? S.M. சுப்பையா நாயுடு, ராஜேஷ்வர ராவ், ஜி.ராமநாதன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்று பல இசை மேதைகள் கொடி பிடித்ததை மறக்கமுடியுமா?///
வம்பிற்கு இழுப்பதாக சொல்லி
வம்பில் மாட்டிவிடுவதா..?
இசை சிங்கங்கள் நீங்கள் குறிப்பிட்டது
இந்த காட்டில் சிங்கம் மட்டுமே "ராசா"
சிங்கம் காட்டுக்கு ராசா தானே அந்த
சிங்கங்கள் வாழ்ந்த காட்டில் எப்படி
மானோ.. அல்லது அது போன்ற
மற்றவிலங்குகளோ ராசாவாக முடியும்
அதைத்தானே அந்தத பின்ஊட்டத்தில்
அய்யர் குறிப்பிட்டு இருந்தார்..
சரி.. சரி..
சரியாக சிந்திக்க இப்படி தந்த பதில்/////
நல்லது. காட்டில் ஒரு சிங்கம் மட்டும்தான் இருக்குமா? அதையும் சிந்தியுங்கள் விசுவநாதன்!
Blogger minorwall said...
ReplyDelete///////தன்டாயுதம் said... மைனர்வாள், சமிபத்துல டீவில ஜப்பானில், கல்யாணராமன் படம் பார்த்தேன், அதுலகூட ஆஹா வந்துருச்சினு ஒரு பாடல் வரும்.. இது உங்க கமன்டலுக்கு அடிஷன்./////////
விதிவிலக்குகளான பாடல்கள் எப்போதுமே உண்டு..அதாவது எனக்குப் பிடிக்காத வகைப் பாடல்கள் என்று..அந்த வகையில் இந்தப்பாடலும் கூட..எனக்குப் பிடிக்காத ஒரு வேடத்தில் ஒரு கோணங்கி கேரக்டெரில் பல்லை துருத்திக்கொண்டு கமல் அந்தப் படத்தின் பாடலில் வந்தது காரணம்..பாடலும் பிடிக்காது..மனதிற்கினிமையான காட்சியமைப்புகள் பாடல்கள் என்று பிடித்தவைகளை மட்டுமே தரம்பிரித்து இருப்பில் கொள்ளும் பழக்கம்..நல்லது..நன்றி..//////
ஆமாம். அதுதான் உண்மை மைனர்.
////Blogger minorwall said...
ReplyDelete/// SP.VR. SUBBAIYA said...
ஜென்சியின் பாடல்களை வைத்து கட்டுரை ஒன்றை எழுதுங்கள் மைனர்! நீங்கள் எழுதாவிட்டால் நான் எழுதுகிறேன். இருந்தாலும்
உங்களுக்குத்தான் முதல் வாய்ப்பு!\\\\\\\
வாய்ப்பளித்தமைக்கு நன்றி வாத்தியாரே..
முயற்சி செய்கிறேன்..
மீண்டும் நன்றி..////
நல்லது செய்யுங்கள் மைனர்!
ஐயா,
ReplyDeleteசரிவர படிக்காமல் சந்தேகம் கேட்டு வகுப்பில் குழப்பம் ஏற்படுத்திவிட்டேன் மன்னிக்கவும்.
"sriganeshh" அவர்கள் கருத்தையும், உங்கள் பதிலையும் படித்தபின் மீண்டும் ஜகநாத ஹோரவையும், உங்கள் பாடம்: "அவன்தான் ஒரிஜினல் வில்லன்!" (http://classroom2007.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF) மீண்டும் ஒருமுறை பார்த்தேன். நீங்கள் அருமையான படம் போட்டு மாந்தி இருக்குமிடம் "Md" என குறிப்பிடபட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளீர்கள். நான்தான் "GL" மாந்தியை குறிக்கிறது (Guliga = GL)என தவறாக எண்ணி குழப்பிவிட்டேன்.
உங்களுக்கும் "sriganeshh" அவர்களுக்கும் நன்றி.
மாணவி தேமொழி