...................................................................................................................
சீதைக்கு ராமன் சித்தப்பன்!
கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.23
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.78
மோகன்ராஜ்!
Dear Mr SP.VR. SUBBAIYA,
I am Mohan. I am a follower of your blog ( not continuously).I have a some doubts.
Doubt No:1
There are 12 rasis as per hindu mythology. As per that on average Indian population 0f 120 crore people in our country. Just average is around 10 crore people having a one of the rasis.My doubt is that. Will 10 crore of the people will have the same type of life or not.
Doubt No:2
Assume if two people of same sex is born at the same place (or hospital) on the same day Will they have a similar rasi, natchatram, and jathakam - is this right? if right will these two people will have all of their happenings in their life in common. I don't think it will happen like that Then what is the use of jathakam. Pls let me know .
Mohan.
அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அந்தக் காலத்தில், கிராமங்களில் இரவு நேரத்தில், கூத்து அல்லது கதாகாலட்சேபம் துவங்கி, விடிய விடிய நடக்கும். அதாவது இரவு ஒன்பது மணிக்குத் துவங்கி, அதிகாலை ஐந்து மணிவரை நடக்கும்.
அப்படி, ஒரு கிராமத்தில் ராமாயண காலட்சேபம் விடிய விடிய நடந்தது. அப்பா அம்மாவின் கட்டாயத்திற்காக, அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்குச் சென்ற ஒரு இளைஞன், கோவில் மண்டபத்தில் நடந்த காலட்சேபத்தை உட்கார்ந்து கேட்காமல், கோவிலின் எதிரில் இருந்த ஊருணிக்கரையில் படுத்து ஆனந்தமாகத் தூங்கிவிட்டான். காலையில் கூட்டம் கலைந்து ஊர்மக்களெல்லாம், பலத்த பேச்சுச் சத்தத்துடன் தத்தம் வீடுகளுக்குத் திரும்பியபோது, சத்தத்தில் எழுந்த அவனும், வீட்டிற்குத் திரும்பி விட்டான்.
வீட்டிற்கு வந்தவுடன், அவன் முகத்தில் இருந்த தெளிர்ச்சியைப் பார்த்த, அவனுடைய தந்தை, என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொண்டு, மெல்லப் பேச்சுக் கொடுத்தார்.
“ஏன்டா, சொற்பொழிவைக் கேட்டாயா?”
பதில் வந்தது. “ஆகா, கேட்டேன்”
“சீதைக்கு, ராமர் என்ன உறவு?” அவர் மீண்டும் கேட்க, இவன் சொன்னான் “அது தெரியாதா என்ன? சீதைக்கு ராமர் சித்தப்பா” என்றான்.
அதுபோலத்தான் இருக்கிறது உங்கள் கேள்விகள் இரண்டும். சுமார் 400 பாடங்கள் நடத்தியுள்ளேன். நீங்கள் அவற்றையெல்லாம் படித்திருந்தால், இப்படிக் கேட்பீர்களா? முதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் படியுங்கள்.
--------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.79
வேத நாராயணன்
பெங்களூர்
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
பாலரிஷ்டம் பற்றி விரிவாக தெரிவிக்கவும்
நன்றிகளுடன்
13.7.2010 அன்று பாலரிஷ்ட தோஷத்தைப் பற்றி விவரமாக எழுதியுள்ளேன்.
Link URL http://classroom2007.blogspot.com/2010/07/blog-post_13.html
பாடங்களை ஒழுங்காகப் படிக்காமல், பழைய பாடங்களிளேயே - நடத்திய பாடங்களிலேயே சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தால் என்ன செய்வது?
பழைய பாடத்தில் உள்ளது என்று சொன்னால், உடனே அதன் சுட்டியைத் தாருங்கள் என்ற கேள்வி வரும். சுட்டியைக் கொடுத்தாலும், லிங்க் யு.ஆர்.எல் வேலை செய்யவில்லை. நீங்கள் எனக்கு அதை, அப்படியே தர முடியுமா என்று கேட்டு அடுத்த மின்னஞ்சல் வரும். புதிதாக வருபவர்களில் பலர் பழைய பாடங்களை என்ன காரணத்தினாலோ படித்து அறிந்துகொள்வதில்லை.
அதனால், அதுபோன்ற உங்களுடைய அடுத்தடுத்த கேள்வியைத் தவிர்ப்பதற்காக, அந்தப் பாடத்தையே மீண்டும் ஒருமுறை (கீழே) கொடுத்துள்ளேன். இப்போதாவது படித்துத் தெளிவு பெறுங்கள்!
--------------------------------------------
முதலில் குழந்தைப் பருவத்தில் தவறிப்போகும் ஜாதகர்களைப் பற்றிப் பார்ப்போம்:
அதற்கு பாலரிஷ்ட தோஷம் என்று பெயர்:
பிறந்த நாளில் இருந்து எட்டு வயதிற்குள் இறந்துவிடும் அமைப்பு அது! பாலரிஷ்ட தோஷம்!
ஜாதகத்தில் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் சந்திரன் இருந்து, அதன் மேல் தீயகிரகங்களின் (malefic planets) பார்வை விழுந்தால், அது இந்த தோஷத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் இந்தக் குறிப்பிட்டுள்ள மூன்று வீடுகளில் உள்ள சந்திரனின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை விழுந்தால், பாலரிஷ்ட தோஷம்
நிவர்த்தியாகிவிடும். உங்கள் மொழியில் சொன்னால் காணாமல் போய்விடும்.
ரிஷப லக்கினக் குழந்தைக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் அது பாலரிஷ்டம் போன்று தோற்றமளிக்கும். ஆனால் சந்திரன் இருக்கும் அந்த வீடு, சுபக்கிரகமான சுக்கிரன் வீடு, லக்கினாதிபதியும் அவரே! அதனால்
குழந்தை தப்பித்துவிடும். பாலரிஷ்டம் ஒன்றும் செய்யாது.
சிம்ம லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கு, ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால், அது பாபக் கிரகமான சனியின் வீடு. அந்த வீட்டின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை எதுவும் இல்லை என்றால், பாலரிஷ்ட தோஷம் தன் வேலையைக் காட்டிவிடும்.
---------------------------------------------------------------------------
குழந்தைகள், நீரில் தவறி விழுந்து அதாவது ஆறு, குளம் அல்லது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தவறி விழுந்து, இறந்து விடுவதுதான் இந்த வயதுச் சாவுகளில் அதிகமான சாவுகளாக இருக்கும். அல்லது கடுமையான
நோய் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிடும் குழந்தைகளும் இருக்கும்.
எது எப்படியானும், அது விதிக்கப்பட்டது. பெற்றோர்களால் ஒன்றும் செய்ய முடியாது - பரிதவிப்பதைத் தவிர.
அதற்கான நிலைப்பாடுகள் (அனைத்தும் பொது விதிகள்):
கண்டம் எனும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது அதற்குப் பொருள்:
1. சந்திரன் 8ஆம் வீடு, அல்லது 12ஆம் வீடு, அல்லது 6ஆம் வீடுகளில் இருந்து ராகுவின் பார்வையைப் பெற்றிருந்தால், சின்ன வயதில் கண்டம்.
2. லக்கினத்தில் தேய்பிறைச் சந்திரன் இருக்க, கேந்திரங்களில் அல்லது எட்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்.
3. 6ஆம் வீட்டில் அல்லது 8ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், மற்றும் சனி கூட்டாக இருக்க, சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்.
4. சூரியன், செவ்வாய், மற்றும் சனி ஆகிய கிரகங்கள் 5ஆம் வீட்டில் கூட்டாக இருந்தால்,குழந்தைக்குக் கண்டம்
5. லக்கினத்தில் சந்திரன் இருக்க, அதன் இருபுறமும், தீய கிரகங்கள் இருக்க (பாபகர்த்தாரி யோக அமைப்பு) சுபகிரகங்களின் பார்வை எதுவும் லக்கினத்தின் மேல் இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்
6. ஜாதகத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருந்து, ஜாதகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில் சுபக்கிரகங்களான குரு அல்லது சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டிருந்தால் குழந்தைக்குக் கண்டம்
7. லக்கினத்தில் சந்திரனும், சனியும் இருக்க, எட்டில் செவ்வாய் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்
8. லக்கினம் மற்றும் லக்கினத்தில் இருந்து 6, 7 , 8 ஆகிய நான்கு வீடுகளிலும் தீய கிரகங்கள் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்.
9. ஜாதகத்தில் சந்திரனும், சனியும் கைகோர்த்துக்கொண்டு ஒன்றாக இருக்க, 12ல் சூரியனும், 4ல் செவ்வாயும் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்
10. ஏழாம் வீட்டில் சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்து, சுபக்கிரகங்களின் பார்வையை அவர்கள் பெறவில்லை என்றால், குழந்தைக்குக் கண்டம்
--------------------------------------------------------------------
முக்கியமானவற்றை மட்டுமே கூறியுள்ளேன். இன்னும் நூறுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. அத்தனையையும் எடுத்து எழுதினால் ஓவர் டோசாகிவிடும். ஒரு தூக்க மாத்திரைக்குப் பதிலாக ஐம்பது தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டால் என்ன ஆகுமோ அது ஆகிவிடும். ஆகவே பாலரிஷ்ட தோஷத்திற்கான அமைப்பை இத்துடன் நிறைவு செய்கிறேன்.
நானும் ஜோதிடர் வேலைக்குச் செல்லப் போவதில்லை. இதைப் படிக்கும் நீங்களும் ஜோதிடர் வேலைக்குச் செல்லப்போவதில்லை. ஆகவே இது போதும்.
இல்லை நாங்கள் முழு விதிகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம் என்பவர்கள், பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற புராண ஜோதிட நூல்களை வாங்கிப் படிக்கலாம்.
------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.80
நந்தினி நடராஜன்
கோயம்புத்தூர்
வணக்கம் ஐயா,
ஆண் ஜாதகம் தான் வலிமையானது புத்திர பேறுக்கு என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் இது உண்மையா அய்யா?
உதாரணத்திற்கு ஒரு ஆணின் ஜாதகத்தில் இரண்டு குழந்தையும் பெண் என்று உள்ளது .ஆனால் அவனுடய மனைவின் ஜாதகத்தில் ஆண் ஒன்று பெண் ஒன்று என்று உள்ளது. ஒரு ஜோதிடர் கூறிஉள்ளார் இரண்டும் பெண் தான் பிறக்கும் என்று ஏன் என்றால் ஆண் ஜாதகம் தான் வலிமையானது என்று சொன்னார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை அய்யா. தாங்கள் ஜாதகத்திற்கு பெண் ஆண் என்று பேதமில்லை என்று கூறி உள்ளீர்கள் .
குழந்தை பிறப்பு என்பது கூட்டு முயற்சி என்று கூறி உள்ளீர்கள் . பிறகு எப்படி ஆண் ஜாதகம் தான் வலிமையானது என்று சொல்ல முடியும் ?
அப்படி வைத்து கொண்டாலும் எதை வைத்து ஆண் ஜாதகம் வலிமையானது புத்திர பேறுக்கு என்று சொல்ல முடியும் ? உதாரணத்திற்கு 10 ஆண்களுடைய ஜாதகத்தில் பெண் குழந்தை என்று உள்ளது என்றால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்காது என்று சொல்ல முடியுமா? அப்போது பெண்ணின் ஜாதகமே தேவை இல்லை என்று ஆகிவிடும் இல்லையா ?நான் ஜோதிடதைக் கேலி செய்வதாக நினைக்க வேண்டம் அய்யா ... எனக்கு இந்த 5 வீட்டை பற்றி நிறைய சந்தேகம் உள்ளது. தயவு செய்து சொல்லுங்கள் ...எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும் ..
நந்தினி நடராஜன்
கோயம்புத்தூர்
சில ஜோதிடர்கள் கூறுவதற்கு நான் எப்படி விளக்கம் சொல்ல முடியும்? சொன்னவர்களையே நீங்கள் கேட்பதுதான் முறை!. ஐந்தாம் வீட்டைப் பற்றியும், குழந்தைப் பேறுக்கான அமைப்பைப் பற்றியும் நான் நிறைய எழுதியுள்ளேன். அவற்றை எல்லாம் படிக்க வேண்டுகிறேன்
--------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.81
விசு ஐயர்
வணக்கம் அய்யா . .
3 கிரகங்கள் ஒரு வீட்டில் இருந்தால் . .அது கிரக யுத்தம். அதுவும் 12ம் இடத்தில் என்றால் பலன் கிட்டாது என பதில் கண்டேன் அப்படியானால் சூரியன் சுக்கிரன் புதன் என எல்லோரும் கூட்டணி அமைத்துக் கொண்டு பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்து இருந்தால் அது அப்படித்தான் இருக்குமா?
“அது அப்படித்தான் இருக்குமா?” என்று நீங்கள் கேட்க, வடிவேல் பாணியில் “அது அப்படித்தான் இருக்குமா?” என்று நானும் திருப்பிக் கேட்க வேண்டியதுதான்.
லக்கினம் என்ன என்பது முக்கியமில்லையா? என்ன லக்கினம் என்பதை நீங்கள் ஏன் சொல்லவில்லை? கேள்வியை
கேள்வியாகக் கேட்க வேண்டாமா?
அது அப்படித்தான் இருக்குமா? என்றால் என்னத்தைச் சொல்வது? பலன் கிட்டாது என்று நீங்களே குறிப்பை எழுதியுள்ளதால், அது அப்படித்தான் இருக்கும் என்று நானும் பதில் சொல்லி விடலாமா?
++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!