----------------------------------------------------------------------------------------
வெள்ளைக் காகத்தின் வேலை என்ன?
பக்தி மலர்
அந்தக் கூட்டம் ஜோனாதனின் பெற்றோர்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக இருந்தது.ஆம்! தன் மகனை குழுவிலிருந்து விலக்கப் போகிறார்கள் என்றால் எந்தத் தாய் தந்தைக்குத்தான் கவலை தோன்றாது?
இத்தனைக்கும் ஜோனாதனின் நடவடிக்கைகளைப் பற்றிப் புகார் வந்த போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் அவனுடன் பலமுறை பேசித்தான் பார்த்தார்கள் அவனுடைய பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை.
ஜோனாதன் செய்த தவறுதான் என்ன?
அந்தக் குழுவில் உள்ள பலரும் சொன்ன புகார்களைப் பட்டியலிட்டுப் பார்க்காலாம்.
ஜோனாதான் உணவு எடுப்பதில் அக்கறை காட்டாமல் பறப்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறானாம்.
"நம்முடைய ஜாதிப் பறவைகள் பறப்பதைவிட அதிக உயரம் இவன் பறக்க முயற்சி செய்கிறான்"
"இவன் செய்யும் சாகசச் செயல்களால் மற்ற இளைஞர்களான பறவைகளும் இவனைப்போலவே செய்ய ஆவல் கொள்கின்றன”
"பக்கவாட்டில் பறந்து பார்கிறான்.நல்ல உயரத்திற்குப் போய் விட்டு அங்கிருந்து இறக்கைகளை மடக்கிக்கொண்டு விழுந்து பார்க்கிறான்”
"'டைவ்' அடிக்க பார்க்கிறான்”
"பறப்பதில் இதுவரை நாம் செய்யாதவற்றையெல்லாம் இவன் செய்கிறான்”
"நம்முடைய வேலையான மீன் பிடித்து உண்பதை இவன் பெரும்பாலும் புறக்கணிக்கிறான்."
புகார்கள் முடிவில்லாமல் கூறப்பட்டன.
ஜோனாதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
இந்த இடத்தில் நான் முக்கியமான ஒன்றை உங்களுக்குச் சொல்லி விட வேண்டும்.
ஜோனாதன் மனிதன் அல்ல. அவனுடைய முழுப்பெயர் "ஜோனாதன் லிவிங்ஸ்டன் சீகல்" ஜோ ஒரு கடற்பறவை.கடற்காக்கை என்று சொல்லலாம்.
கடற் காக்கைகளை நமது வேதாரண்யம் போன்ற கடற்கரைகளில் காணலாம்.
அவைகள் வெள்ளை நிறத்தில் நம் கறுப்புக் காக்கைகளைப் போலவே 'காகா'என்றே கறையும்.
'சீ கல்' பெரிய இறக்கைகள் பெற்று இருந்தாலும், கடல் அலைகள் எழும்பும் உயரத்தை தாண்டிப் பறக்க மாட்டா.
நம் ஹீரோ ஜோ அந்த இனப் பறவைகளில் சற்றே வித்தியாசமான பிறவி.
"ஜோ! நான் சொல்வதைக்கேள். நாம் பறப்பதற்காகப் பிறக்கவில்லை. மீன் பிடித்து உண்ணவே பிறந்துள்ளோம்." இது தலைவர் சீ கல் கூறியது.
"பணிவுடன் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் தலைவர் பெரியவரே! உங்களுடைய கருத்து மிகவும் பழமையான கருத்து. நாம் மீன் பிடித்து உண்பதே பறப்பதற்காகத்தான். நமக்கு இயற்கை அளித்துள்ள கொடை பறப்பதற்கான இறக்கைகள்.அவற்றை நாம் செவ்வனே பயன்படுத்தி மேலும் சிறப்பாகப் பறக்க வேண்டும் என்பதே என் கொள்கை." என்றான் ஜோனாதன்!
"அப்படியானால் நம் குழுவின் கட்டுப்பாட்டை மீறி செயல் பட்டுக் கொண்டே தான் இருப்பாயா?"
"நான் தேடிச் சோறு தினம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, கூடிக் கிழப்பருவம் எய்தி,பின் கூற்றுக்கு இரையாகிப் போகும் வேடிக்கையான பிறவி அல்ல.எனக்குப் பறக்க சுதந்திரம் உள்ளது. எனவே மேலும் முயன்று பறப்பேன். பறப்பதில் உச்ச நிலையை அடைவேன்"
"இந்தக் கலகக்காரனை, நம் இனத் துரோகியை அடித்து விரட்டுங்கள்."
கட்டளையிட்டார் தலைவர். கட்டளை நிறைவேற்றப்பட்டது.
ஜோவின் தாய் கதறி அழுதாள். "மகனே இப்போதே சரியாக உணவு எடுக்காமல் எலும்பும் தோலுமாக உள்ளாய்.வேண்டாமடா இந்த ஆராய்ச்சியெல்லாம். பெரியவர்கள் சொல்லைக் கேளடா."
ஜோ மனம் மாறவில்லை. தன் இலட்சியமே பெரிதென சொந்த பந்தங்களை யெல்லாம் விட்டுப் பிரிந்து, பறந்து சென்றான்.
தனிமையில் தன் பறக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள மேலும் மேலும் முயற்சியில் ஈடுபட்டான்.
பருந்தும் ,வல்லூறும், கருடனும் பறக்கும் உயரத்தை எட்ட முடியுமா என்று எண்ணினான். 'உயர உயரப் பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா?' என்று தன் இனத்தார் கேட்டது காதில் ஒலித்தது.'ஏன் குருவி பருந்தாகக் கூடாது?' என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.
'வேகமாகப்பறக்கும் பறவைகள் எப்படி இறக்கைகளைப் பயன்படுத்துகின்றன, பறந்து கொண்டே பூவில் தன் உடலை நிலை நிறுத்தி தேன் உறுஞ்சும் சிட்டு எப்படி தன் சிறகுகளை படபடக்கிறது, ஒரிரு அசைவுகளைமட்டும் செய்து விட்டு கருடன் எப்படி நீண்டநேரம் காற்றில் வழுக்கிச்செல்கிறது' என்றெலாம் ஆய்வு செய்தான். எல்லாவற்றையும் தானும் செய்து பார்த்து பறப்பதில் ஒரு நிபுணன் ஆனான் நம் கதாநாயகன் ஜோ!
அந்தசமயத்தில் ஒளி பொருந்திய பொன்மய வண்ணத்தில் இரண்டு பறவைகள் வானில் இருந்து ஜோவிடம் வந்தன.
"ஜோனாதன் லிவிங்ஸ்டன்! உன்னுடைய சாதனைகளைக் கண்டு மெச்சினோம். மேலும் உனக்குக் கற்பிக்கவே நாங்கள் வந்துள்ளோம்." என்றனர்.
ஜோ அந்த அதிசயப் பறவைகளின் தோற்றத்தைக் கண்டு வியந்தான்.
ஜோ: "நீங்கள் என்ன சொக்க வாசிகளா? சொர்க்கம் என்று ஒன்று உள்ளதா?"
புதிய பறவைகள்:"சொர்க்கம் என்பது ஒரு பூமியோ,இடமோ அல்ல. நீ இப்போது அடைய இருக்கும் , முயற்சி செய்து கொண்டிருக்கும் பணியில் நிறைவு எய்திவிட்டால் அதுவே சொர்க்கம்."
அந்த அதிசயப் பறவைகள் ஜோவிற்கு பல பறக்கும் வித்தைகளைக் கற்பித்தன.
ஜோவும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டான். இனி பறக்கும் வித்தையில் ஜோவுக்குத் தெரிய வேண்டியது ஒன்றும் இல்லை என்ற நிலை வந்த போது அந்த அற்புதப் பறவைகள் காற்றில் கரைந்தது போலக் காணாமல் போயின.
பாடம் சொல்லிக்கொடுக்கும் போது, 'அன்பு' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கப் பணித்து இருந்தனர் அந்த அதிசயப் பறவைகள். ஜோவுக்கு அன்பு என்ற மந்திரம் மனதில் ஆழப்பதிந்துபோய், தன் இனத்தாரின் மீது அனபு பெருகியது. தன் மக்கள் வாழும் பகுதிக்குசென்றான். தனக்கு ஒரு சீடன் கிடைப்பான என்று காத்து இருந்தான்.
ஒருநாள் அப்படிஓர் இளைஞன் கிடைத்தான். தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அந்த சீடனுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு
ஜோனாதன் மேல் நோக்கிப் பறக்கத் துவங்கினான். மேலும் மேலே, மேலே மேலே, மேலே...... விண்ணை எட்டும் வரை பறந்து மறைந்தான்.
Qoutes:
========
I want to fly where no seagull has flown before. I want to know what there is to know about life!
--------
Father, Mother: Son, this may not be the best life, but it's all we know. Jonathan: There's got to be more to life than fighting for fish heads!
------------------------------------------------------------------------
[the Elder banishes Jonathan from the flock]
The Elder: You are henceforth and forever outcast!
----------------------------------------------------------------
Jonathan: Listen, everybody! There's no limit to how high we can fly! We can dive for fish and never have to live on garbage again!

Chang: Heaven isn't a place; heaven is perfection.
-------
Chang: Perfect speed isn't moving fast at all; perfect speed is being there.
-----------
Chang: To fly as fast as thought to anywhere that is now - you begin by knowing that you have already arrived...
----
Chang: I am a perfect expression of freedom, here and now.
----------
Jonathan: You have the freedom to be yourself, your true self, here and now - and nothing can stand in your way!
---------
Jonathan: I only wish to share what I've learned - the very simple fact that it is right for a gull to fly!
------------
Jonathan: The only true law is that which sets us free.
========================================================================
இது RICHARD BACH என்பவர் எழுதிய Jonathan Livingstone Seagull (1970களில் வெளிவந்து பிரபலமான)தத்துவ நாவலைத் தழுவி எழுதியது.
கூகுள் ஆண்டவரைக்கேட்டால் முழுநாவலும் படிக்கக் கிடைக்கும். இந்திய, இந்து, பெளத்த மதக் கொள்கைகள் மேற்கே பரவியதன் தாக்கமாக
இந்த நாவல் வெளி வந்துள்ளது.
ஜீவாத்ம பரமாத்ம தத்துவத்தை விளக்க நம் வேத உபநிடதங்களில் மரத்தின் மேல் உணவெடுக்காமல் மேல் நோக்கியே அமர்ந்திருக்கும் பறவையும், கீழ்க்கிளைகளில் உணவைக் கொத்திக் கொன்டு இருக்கும் பறவையும் பேசப்பட்டுள்ளன.கீழ்க்கிளையில் உணவெடுக்கும் பறவை சலித்துப் போய் மேற்கிளையில் உள்ள பறவையிடம் மெள்ள மெள்ள சென்று அடையுமாம்.
வாழ்க வளமுடன்!
ஆக்கம்:
வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
============================================================