=================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21
தசா புக்திகள்
(இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு
முன் பதிவையும் படிக்க வேண்டும்!)
தசாபுத்தி என்றால் என்ன?
ஒவ்வொரு கிரகத்திற்கும் தசாபுக்திகள் (Own Periods)
உண்டு. ஒவ்வொரு கிரகமும் அதனுடைய தசாபுக்தி
நடக்கும்போதுதான் பலனைக் கொடுக்கும்.
(Awarding the benefits to the native of the horoscope)
என்று முன் பதிவில் எழுதியிருந்தேன்.
தசா புக்திகளைபபற்றி ம்ட்டும் இப்போது
பார்ப்போம். ஒவ்வொரு த்சாவிற்கும் (Major Periods)
புக்திக்கும் (Sub-periods) உள்ள பலன்களை அடுத்த
பதிவில் பார்ப்போம்.
எல்லோரும் 27 நட்சத்திரங்களுக்குள் ஒன்றில்தான்
பிறந்திருப்போம்.
ஒவ்வொருவருக்கும் தான் பிறந்த நட்சத்திரம் எது?
அதன் அதிபதி(Owner) யார்? என்பது தெரிந்திருக்க
வேண்டும். .
(கற்றுக் கொள்வதற்கும், நினைவில் வைத்துக்
கொள்வதற்கும் ஒரு குறுக்கு வழி இருக்கிறது
அதைத்தான் இப்போது சொல்லித்தரப் போகிறேன்)
27 நட்சத்திரங்களில் முதலில் உள்ள ஒன்பது
நட்சத்திரங்களை மட்டும் வரிசையாக எழுதுங்கள்.
எழுதிய பிறகு அடுத்துள்ள 18ல் 9 நட்சத்திரத்தில்
முதலில் எழுதிய ஒன்பது நட்சத்திரங்களுக்கு
பக்கத்திலேயே எழுதிக் கொண்டு வந்து அதற்கு
அடுதத ஒன்பதையும் அதே வரிசையில் தொடர்ந்து
கீழ்க் கணட மாதிரி எழுதிக் கொள்ளூங்கள்.
என்ன எழுதிக் கொண்டீர்களா?
எழுதியது இப்படித்தான் இருக்கும்
அதோடு முதல் வரிசையில் உள்ள நட்சத்திரங்களுக்கு
அதிபதி கேது என்று துவங்கி, ஒவ்வொரு வரிசையிலும்
உள்ள நட்சத்திரங்களுக்கும் அதிபதி யார் யாரென்று
அதே அட்டவணையில் குறிப்பிட்டுள்ளேன்.
=============================================
Table showing the 27 Stars and their owners
=======================================================
Tables showing the Major Periods (தசா) and Sub-Periods (புக்தி)
===================================================
இது மிக மிக முக்கியமான பாடம். ஆக்வே சோமபலை
விடுத்து இதை மனனம் செய்து மனதில் ஏற்றிவைப்பது
அவசியம்! (உங்களுக்கு சோம்பல் இருக்காது
என்று தெரியும். இருந்தாலும் அந்த டில்லிவாலாவிற்காக
இதை எழுதுகிறேன்:-))
இந்த அட்டவனையின் உபயோகம் என்னவென்றால்
ஒருவர் தன்னுடைய பிறந்த நட்சத்திரத்தைச் சொல்லி
யவுடன், அவருடைய நட்சத்திரத்திற்கு அதிபதி யாரோ
அந்த அதிபதியின் தசாதான் அந்த ஜாதகரின் துவக்கதசா.
அதைத் தொடர்ந்து இந்த அட்டவணையில்
குறிப்பிட்டுள்ள படியே அடுத்தடுத்த தசாக்களும்
அவருக்கு வரும்.
அனைவருக்கும் இது அறுதியானது. நிச்சய்மானது!
இதில் மாற்றம் ஏதும் 100% இருக்காது. இதன்படியேதான்
தசாக்கள் வரும். அந்தந்த தசாக்களின் படியேதான் பலன்களும்
(நல்லதோ அல்லது தீயதோ) கிடைக்கும் அல்லது நடக்கும்!
---------------------------------------------------------------------------------
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு துவக்க தசா
சந்திரனுடைய தசாதான். அதுபோல மகம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்குக் கேது தசாதான் துவக்க தசா!
----------------------------------------------------------------------------------------
த்சா சரி, புக்தி என்றால் என்ன?
ஒரு கிரகத்தின் தசாவின் உட்பிரிவுதான் புக்தி!
உதாரணத்திற்கு ராகு தசாவின் காலம் 18 வருடங்கள்
அந்த 18 வருடங்களுமே ராகுவின் முழுக்கட்டுப்பாட்டில்
இருந்தால் என்னா ஆகும்? மனிதனை வாட்டிப் பிழிந்து
விடாதா?
அத்னால் அந்த ராகுவின் தசாவே 9 பிரிவுகளாகப் பிரிக்கப்
பெற்று ஒரு ஒழுங்கு முறையில் மற்ற கிரகங்களூக்கும்
உட்பிரிவாக வழங்கப் பெற்றிருக்கிறது
உட்பிரிவையும் அதற்குரிய மாதங்கள், நாட்களையும்
அட்டவனையில் கொடுத்துள்ளேன்.பார்க்க வேண்டுகிறேன்
சனி தசா 19 வருடம், ராகு தசா 18 வருடம், கேது த்சா
7 வருடம் மனிதனகப் பிறந்தவன் இந்த் தீய கிரகங்களின்
தசைகளில் ஒன்றிலாவது நுழைந்து, அடிபட்டு வெளியே
வந்துதான் ஆகவேண்டும்.
ராகு தசை உள்ளவனுக்கு கேது தசை வாரது. ஆனால்
அவனுடைய ஒவ்வொரு தசையிலுமே கேது புக்தி
நிச்சயம் வரும்
அதுபோல சூரிய தசையில் பிறந்தவனுக்கு சுக்கிர தசை
வராது. ஆனால் அவனுடைய ஒவ்வொரு தசையிலும்
சுக்கிர புக்தி கண்டிப்பாக வரும்.
எல்லாருக்குமே நன்மைகளும் தீமைகளும், தசைகளும்
புக்திகளும் பாகுபாடின்றி சம்மாகவே வழ்ங்கப்பட்டுள்ளன
என்பதற்கு இந்த தசா பலன்களே ஒரு ந்ல்ல உதாரணம்
ஒரேயடியாக அடிபடாமல், நடுவில் அடிபட்ட இடங்களுக்கு
ஒத்தடம் கொடுத்துக் கொள்ளவும், உடம்பைத்தேற்றிக் கொண்டு
மீண்டும் அடிவாங்கவும் வசதியாக வருபவைதான் மற்ற
புக்திகள். ராகு தசை கேது புக்தியில் அடிவாங்கியவன்
ராகுதசை சுக்கிரபுக்தியில் உடம்பைத் தேற்றிக் கொள்வான்
அதற்கடுத்துவரும் ராகு தசை சூரிய புக்தி மறுபடியும்
சுழற்றி அடிக்க ஆரம்பித்துவிடும். ராகுவுடன் சூரியனும்
சேர்ந்து கொண்டு சாத்தும்! :-))).
பிறகு அடுத்து வரும் ராகு சந்திர தசையில் அப்பாடா என்று
மூச்சு விடுவான். நிம்மதியாக் இரண்டு வேளை உணவாவது
வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவான். மறுபடியும் ராகு தசை
செவ்வாய் புக்தி அவனை ஓட் ஓட் விரட்டும்
அவனுடைய துன்பங்களுக்கு ஒரு முடிவு ஏற்பட்டு ,அதற்கு
அடுத்த தசையான் குரு த்சையில் அவன் காலெடி எடுத்து
வைப்பான் . அன்றிலிருந்து விடிவுகாலம் ஆரம்பிக்கும்
இதுபோல நல்ல தசையிலும் நல்லது இரண்டு மடங்காக
நடக்கும். குரு தசையில் புதன் புக்தி, குரு தசையில் சுக்கிர
புக்தி, குரு தசையில் சந்திர புக்தியெல்லாம் நன்மைகளை
வாரி வழ்ங்கிவிட்டுப் போய்விடும்
ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளில் போய்க்
கொண்டிருந்த்வன் ஹோண்டா சிட்டி ஏ.ஸி காரில்
போக ஆரம்பித்து விடுவான். கும்பகோணத்தில்
ஓட்டு வீட்டில் குடியிருந்தவன், மும்பை நாரிமன்
பாயிண்ட் பகுதியில் சொந்த பிளாட்டிற்கு குடி
போய்விடுவான்.
காயல் பட்டிணத்தில் பட்கோட்டிக் கொண்டிருந்தவன்
கோயம்புத்தூரில் ஐம்பது லாரிகளுக்குச் சொந்தக்
காரனாகிவிடுவான்.
இது போன்று பள்ளத்தில் விழுந்து கிடப்பதும்
அல்லது மேட்டில் (ஊட்டியில்) தோட்டம் துறவுகள்
வாங்குவது போன்ற மாற்றங்களேல்லாம் தசா
புக்திகளின் மாற்றங்களால்தான்
சனியை விட ராகு கடுமையான் கிரகம்
(Merciless Planet) என்பார்கள். ஆனாலும் ஜாதகத்தில்
ராகு உச்சமாகவோ அல்லது லக்கின அதிபதியுடன்
அதுவும் அது அதனுடைய நட்புக்கிரகமாக இருந்து
நல்ல நிலையில் இருந்தாலோ எதிர்மாறாக
மிகவும் அற்புதமான நல்ல பலன்களைக் கொடுக்கும்.
இது போன்ற விதிவிலக்குகளும் உண்டு
சிவாஜி கணேசன் அவர்களுக்கு அந்த மாதியான்
அற்புதமான பலனை ராகுதான் தந்தது.
அவருடைய முதல் படமான பராசக்தியில் துவங்கி
தொடர்ந்து வீயட்நாம் வீடு என்னும் படம் வரை
சுமார் 18 ஆண்டுகள் அவர் நடித்த படங்கள்
அனைத்தும் சிறப்பாக அமைந்து சக்கைபோடு
போட்டு அவருக்கு அழியாப் புகழ் சேரக் காரணமாக
இருந்தது அவருடைய ஜாதகப்ப்டி இந்த ராகுதான்.
அதனுடைய தசை நடந்த காலகட்டத்தில் அவ்வாறு
நடந்தது.
பராசக்தி - 1952ம் வருடம்
வீயட்நாம் வீடு - 1970ம் வருடம்
இந்த இடைப்பட்ட 18 வருட காலத்தில் வெளிவந்த
அவருடைய படங்கள் அனனத்துமே அவருக்குப்
பெரும் புகழையும், செல்வத்தையும் வாரிக் கொடுத்தன!ஒரு தசா நாதன் ஜாதகத்தில் வலுவாக இருக்கும்போது
அவனுடைய தசையில் எல்லாமே வெற்றியாக இருக்கும்
புத்தி நாதர்களின் குறுக்கீட்டையும் முறியடுத்து அந்த
வெற்றியை அவன் கொடுப்பான். அதற்கு திரு.சிவாஜி
அவர்களின் ஜாதக்மே உதாரணம். ஆனால் அதற்குப் பிற்கு
வந்த த்சைகளில் அவர் பெரும் வெற்றி எதையும்
பெற்வில்லை. அரசியலில் நுழைந்தும் அவரால் சோபிக்க
முடியவில்லை
அதேபோல் ஒரு தீய கிரகத்தின் தசை நடக்கும்போது
ஜாதகனுடைய ஜாதகத்தில் புக்தி நாதருடைய கிரகங்கள்
வலுவாக இல்லாவிட்டால், அந்த தசை மொத்தமும்
ஜாதகனை அடித்துத் துவைத்துப் பிழிந்து காயப்போட்டு
விட்டுப் போய்விடும்.
ஒரு பெரிய மல்ட்டி மில்லியனர், ஒரு தசையில்
அவருடைய செல்வம் பத்து மடங்காகப் பெருகியது.
ஆனால் அடுத்த தசையின் துவக்கத்திலேயே அந்த
தசைக்குரிய கிரகம் அவருக்கு வாத நோயை
உண்டாக்கி படுத்த படுக்கையாக வீட்டில் உட்கார
வைத்துவிட்டது! (யாரென்று சொல்லவில்லை.
முடிந்த்வர்கள் ஊகம் செய்து கொள்ளுங்கள்)
எந்த தசையாக அல்லது புத்தியாக இருந்தாலும் சரி
நல்லது கெட்டது மாறி மாறி வரும் அமைப்புத்தான்
நல்லது. அதுதான் நம்க்கு வேண்டும்!
கர்ப்பச்செல் இருப்பு என்றால் என்ன?
ஒரு குழந்தை திருவோண நட்சத்திரம் நான்காம்
பாதத்தில் பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம்
முதல் மூன்று பாதம் அந்தக் குழந்தைக்கு, அதன் தாயின்
கர்ப்பப்பையிலே கழித்துவிட்டபடியால் அந்தக் கழிவிற்குரிய
தசாபலன் கணக்கில் வராது. பிறந்தவுடன் மீதமுள்ள
நட்சத்திர தசா பலன்களதான் அந்தக் குழந்தையின்
பிறப்புக் கணக்கில் வரும்
திருவோண நட்சத்திரத்தின் அதிபதியான் சந்திரனுக்குரிய
பத்து வருட சந்திரதசைதான் அந்தக் குழந்தையின் துவக்க
தசை.
அதில் கர்ப்பதில் இருந்த பகுதிக்கான் பகுதியைக் கழித்து
விட்டால் ( 10 வருடம் கழித்தல் 4ல் 3 பங்கு = 10.00 - 7.5 = 2.5 வருடம்)
அதாவது 2 வருடம் 6 மாதம் தான் அந்த்க் குழந்தையின் இருப்பு
தசை . அதுதான் கர்ப்பச்செல் இருப்பு எனப்படும்
இது போன்று ஒவ்வொரு பிறப்பிற்கும் கணக்கிடப் ப்ட்டு
ஜாதகத்தில் குறிக்கப்பட்டிருக்கும்
-------------------------------------------------------------------------------------
சரி, பிறப்பிலிருந்து நம்து நடப்பு திசையை எப்படிக் கணக்கிடுவது?
சுலபமான வழி கண்ணியில் கணித்து விடலாம்
சூப்பராக இருக்கும்!
அதற்கான் விவரங்களை என் முன் பதிவில் கொடுத்துள்ளேன்
இருந்தாலும் இன்னுமொருமுறை தருகிறேன்
அந்த இணையதள முகவரி இதுதான்
அதில் உங்களூடைய Birth Details ஐக் கொடுத்து விட்டால் போதும்
உங்களூடைய ஜாதகம், கெர்ப்பச்செல் இருப்பு, Major Period & Sub - Periods
எல்லாம் ஒரே வினாடியில் கிடைத்துவிடும். பிரிண்ட் எடுத்து
சட்டைப் பையில் வைத்துக் கொள்ளுங்கள். இனி அடிக்கடி
அது உங்களுக்குத் தேவைப்படும்
------------------------------------------------------------------------------
கணினியை விட்டுத் தள்ளுங்கள். நமக்கு அது
தெரிந்திருக்க வேண்டாமா?
உதாரணத்தைற்க்காக ஒன்றை எழுதிக் காட்டியுள்ளேன்
ஒருவர் 10.02.1975 அன்று மாலை 4 மணிக்குப் பிறந்திருக்கிறார்
அவருடைய நட்சத்திரம் திருவோணம். கர்ப்பசசெல் இருப்பு
3 வருடம் 8 மாத்ங்கள் 2 நாட்கள்
அவருடைய நடப்பு தசைக் கணக்கு
1975 - 02 - 10 பிறந்ததேதி
0003- 08 - 02 கெர்ப்பச்செல் இருப்பு
-------------------
1978- 10. 12 சந்திர தசை முடிந்த நாள்
000 7 - 00 - 00 செவ்வாய் தசை
------------------------
1985 -10. 12 செவ்வாய் தசை முடிந்த நாள்
0018 - 00- 00 ராகு தசை
--------------------
2003 - 10 -12 ராகு தசை முடிந்த நாள்
0002- 01 -18 நாட்கள் குரு தசை குரு புக்தியில்
------------------------
2005 -12 - 00 குரு தசை குரு புக்தி முடிந்த நாள்
0002- 06 -12 நாட்கள் கு தசையில் சனி புக்தி
-------------------------------
2008 - 06 -12 குரு தசையில் சனி புக்தி முடியும் நாள்
0002 - 03- 06 குரு தசை புதன் புக்தி காலம்
இந்தக் கால் கட்டத்தில் வேலையில் மாற்றம்
ஏற்படும், முன்னேறறம் ஏற்படும்
குருவும், புதனும் சேரும்போது உயர்வான
மாற்றங்களை ஏற்படுத்துவார்கள்
12.10.2003 ல் இருந்தே அதாவது ராகு தசை முடிந்த
நாளில் இருந்தே அவருக்கு நல்ல காலம் என்றாலும்
உயர்வான காலம் என்பது 12.06.2008ல் இருந்துதான்
இதைக் கண்டு பிடிப்பதற்குத்தான் இத்தனை பாடு
அதற்கு உதவுவதுதான் புக்திகள் (Sub Periods)
என்ன புரியும்படியாக உங்களுக்கு விளக்கிச்
சொல்லியிருக்கிறேனா?
பின்னூட்டத்தில் ஒருவரி எழுதுங்கள்!----------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன்
இந்தப்பாடத்தின் தொடர்ச்சி அடுத்த பதிவிலும் உண்டு!
=================================================
Practical Test
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஜாதகத்தைக்
கீழே கொடுத்துள்ளேன்
பிறந்த நாள்: 28 .01.1917
காலை மணி 6.30
இடம் கண்டி
இருப்பு : புதன் தசையில் 12 வருடம் 2 மாதம் 7 நாட்கள்
30.06.1977 ல் அவர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆனார்!
-----------------------------------------------------------------------
கேள்வி: எந்த தசை/புக்தியில் அவர் முதல் அமைச்சர் ஆனார்?
=========================================================
(தொடரும்)

ஐயா!
ReplyDeleteஇந்தத் தொடர் மிகவும் சுவாரசியமாகப் போகிறது! எளிதில் எங்களுக்கும் புரியும் வண்ணம் எழுதி வருகிறீர்கள்.
மிக்க நன்றி!
///நாமக்கல் சிபி அவர்கள் சொல்லியது: இந்தத் தொடர் மிகவும் சுவாரசியமாகப் போகிறது! எளிதில் எங்களுக்கும் புரியும் வண்ணம் எழுதி வருகிறீர்கள்.///
ReplyDeleteஇரண்டுமே எனக்கு முக்கியமான விஷ்யங்கள்.
1. சுவாரசியம்
2. எளிமையான நடை
அவ்விரண்டுமே ஒழுங்காக இருக்கிறது என்று முதன் முறையாக
காலாய்ப்பு எதுவுமின்றி என் பதிவில் பின்னூட்டம் இட்ட் சிபியார் வாழக!
வளர்க!
wowww very interesting!waitin for more...:)
ReplyDelete//காலாய்ப்பு எதுவுமின்றி என் பதிவில் பின்னூட்டம் இட்ட் சிபியார்//
ReplyDeleteஞாபகப் படுத்தீட்டீங்களா?
சரிதான்!
:))
எனக்கு அதிபதி "குரு".
ReplyDeleteசுலபமாக உள்ளது,உங்கள் பாடம்.
MGR become chief minister in Mars Desa
ReplyDeleteand if someone will teach me how to type in tamil in comments and is there any site which teaches this thank you, and vathiyar iyya your lessons are superb
எம்.ஜி.ஆர் ராகு தசா கேது புத்தியில் முதலமைச்சராக ஆனார்.
ReplyDeleteபுதன் தசையில் 12 2 7
ReplyDeleteகேது தசை 7
சுக்கர தசை 20
சூரிய தசை 6
சந்திர தசை 10
செவ்வாய் தசை 7
------------------------------
ஜாதகருக்கு 62 வயது வரை செவ்வாய் தசை MGR தன் 60வது வயதில் முதலமைச்சர் ஆனார். எனவெ செவ்வாய் தசையில் முதலமைச்சர் ஆனார்.
வாத்தியார் அவர்களெ நான் சொன்னது சரியா.
குருவே,
ReplyDeleteநமது அபிமானத்திற்குரிய தலைவர் "குரு" தசையில் முதல் அமைச்சர் ஆனார் என்று நினைக்கின்றேன்.
ராஜா
whoami:
Please, use the following link to give your comments in tamil
http://www.suratha.com/unicode.htm
://///வடுவூர் குமார் said...
ReplyDeleteஎனக்கு அதிபதி "குரு".
சுலபமாக உள்ளது,உங்கள் பாடம்.////
நன்றி குமார்!
///// anamika said..
ReplyDeletewowww very interesting!waitin for more...:)////
சுவாரசியமாக இருக்கிறது என்று
சொன்னதற்கு நன்றி சகோதரி!
ஒரு நல்ல வாத்தியாருக்கு அதுதானே அடையாளம்!
பாடங்களைச் சுவையாகச் சொல்லித்தர வேண்டாமா?
//// whoami said...
ReplyDeleteMGR become chief minister in Mars Desa
and if someone will teach me how to type in tamil in comments and
is there any site which teaches this thank you, and
vathiyar iyya your lessons are superb///
இணையத்தில் Ekalappai Version 2 இலவசமாகக் கிடைக்கிறது
Windows XP இல் அருமையாக இயங்கும், Word Pad, Excel, Power Point
Gmail என்று எதில் வேண்டுமென்றாலும் தமிழில் தட்டச்சலாம்!
Key Board Problem எதுவும் இருக்காது
அம்மா என்று தட்டச்ச amma என்று தங்கிலீஷிலேயே
தட்டலாம்
பாரதி என்று அடிக்க paarathi என்று தட்டினால் போதும்!
முயன்று பாருங்கள்
/////அமர பாரதி said...
ReplyDeleteஎம்.ஜி.ஆர் ராகு தசா கேது புத்தியில் முதலமைச்சராக ஆனார்.////
தவறு!
இன்னொரு நண்பர் சரியான விடையைச் சொல்லி இருக்கிறார்
அது அடுத்து உள்ளது!
//////whoami said...
ReplyDeleteபுதன் தசையில் 12 2 7
கேது தசை 7
சுக்கர தசை 20
சூரிய தசை 6
சந்திர தசை 10
செவ்வாய் தசை 7
------------------------------
ஜாதகருக்கு 62 வயது வரை செவ்வாய் தசை MGR தன் 60வது வயதில் முதலமைச்சர் ஆனார். எனவெ செவ்வாய் தசையில் முதலமைச்சர் ஆனார்.
வாத்தியார் அவர்களே நான் சொன்னது சரியா.?/////
சரியான விடை நண்பரே!
இன்னும் துல்லியமாகச் சொன்னால் செவ்வாய் தசை சுக்கிரனுடைய புக்தி
Major Dasa - Mars / Sub - Period - Venus
என்ன காரணம் தெரியுமா?
அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்
அனைவரும் படிப்பார்கள்!
//சனி தசா 19 வருடம், ராகு தசா 18 வருடம், கேது த்சா
ReplyDelete7 வருடம் மனிதனகப் பிறந்தவன் இந்த் தீய கிரகங்களின்
தசைகளில் ஒன்றிலாவது நுழைந்து, அடிபட்டு வெளியே
வந்துதான் ஆகவேண்டும்//
எல்லோருகும் இத்தனை ஆண்டுகள் பொதுவானதா ...
பொதுவானது எனில் கொடுத்த அட்டவணையில் பக்கம் 3 ல் ரேவதி நட்ஷத்திரதிற்கு கேது 11 27 என்றால் என்ன பொருள் ... என்ன விகிதாசார அடிப்படையில் புக்தி பிரிக்க படுகிறது ... சிறிது சந்தேகம் உள்ளது ...
///Prasram Said: பக்கம் 3 ல் ரேவதி நட்ஷத்திரதிற்கு கேது 11 27 என்றால் என்ன பொருள் ... என்ன விகிதாசார அடிப்படையில் புக்தி பிரிக்க படுகிறது ... சிறிது சந்தேகம் உள்ளது ...///
ReplyDelete11.27 என்பது 11 மாதங்கள் 27 நாட்கள். அது அதன் மேலேயே குறிப்பிடப்பட்டுள்ளது
புதனில் கேது என்பது
புதன் (17 வருடம் x கேது 7 வருடம் = 119 = முதல் 2 டிஜிட் மாத்ங்கள் அடுத்த டிஜிட் x 3 நாட்கள்)11.மாதங்கள் + 27 நாட்கள்
இதுதான் அடிப்படை இதே அடிப்படையில்தான் அனைத்து கிரகங்அKளின் தசைகளுக்கும் உட்பிரிவிகளுக்கும் கணக்கிடப் பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது!
சில விதயங்கள் ஆலோசனையாக:
ReplyDelete1.நான் குறிப்பிட்டவாறு பதிவுகளைப் பட்டியலிடும் Set Up ல் தேதிகளின் Ascending முறையை எண்ணிப் பார்த்தீர்களா? என்னைப் போன்ற, 100 பக்கங்களை ஒட்டு மொத்தமாக எடுத்து/தரவிறக்கி படிக்கும் பிரகிருதிகளுக்கு உபயோகமாக இருக்கும்.தீவிர யோசனைக்கு ஆட்படுத்தவும்.(Think Seriously)
2.தசா,புத்தி,அந்தரங்களுக்கு(அதற்கு மேலும் sub-classification இருக்கிறது என நினைக்கிறேன்) கண்டுபிடிக்க நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி ஏதோ ஒரு ஜாவா கன்சோல் பிரச்னையினால ஒழுங்காகத் தெரியவில்லை.தீர்வு உரலின் முகவரியை தட்டச்சுவது அல்லது வேறு பயன்படும் உரல் முகவரி தருவது.(Pl give the URL by typing after checking whether this works OR give some other software URL).
3.ஜாதகம் கணிக்கும் போது ஏற்படும் கணக்குப் பிழைகளைச் சரிவரக் கண்டுபிடிப்பது எப்படி? உதாரணமாக என்னிடம் ஆலோசித்த இரு நண்பர்களுக்கான பிரசினைகளைச் சொல்கிறேன்.
-ஒருவருக்கு பிறந்த தேதி 27.01.1971,காலை 5.10,பரமக்குடியில்.
அவரின் ஜாதக கணிப்பு(உள்ளூடர் சோதிடர்) அவருக்கு சந்திர திசை இருப்பு 7 வருடங்கள் 8 மாதங்கள் என்கிறது.நான் கணினியில் கணித்த ஜாதகம் 7 வருடம் 5 மாதங்கள் என்கிறது.
இந்த 3 மாதங்கள் வித்தியாசம் எதனால் ஏற்படுகிறது?
நடப்பு நிலைகளை வைத்துப் பார்க்கும்போது அவருக்கு உள்ளூர் சோதிடர் கணித்த ஜாதகமே சரி எனத் தோன்றுகிறது.(தற்போது குரு திசையில் சனி புத்தி நடக்கும் அவருக்கு-சனி 5'ல்(மேஷம்) நீச்சம்-அது ஜுன் 2008 வரை இருக்கிறது,உள்ளூர் கணிப்பு ஜாதகப்படி.சரியான துன்பங்கள் தான் பட்டுக் கொண்டிருக்கிறார் இந்த ஜாதக அன்பர்.)ஆனால் கணினியில் கணித்த ஜாதகப்படி சனி புத்தி மார்ச் 2008 லேயே முடிந்திருக்க வேண்டும்.
நான் உள்ளூர் ஜாதகப் படியே,ஜூனுக்குப் பிறகு வரும் புதன் புத்தி நன்றாக இருக்கும் எனச் சொல்லி(புதன் லக்னாதிபதி) அமைதிப்படுத்தியிருக்கிறேன்.
இந்த விதமான வேறுபாடுகள் ஏன் கணினிக் கணிப்பில் நிகழ்கின்றன?
-இன்னொரு நண்பரின் ஜாதக கணிப்பில் அவருக்கு திருவோணம் நட்சத்திரம் ஜன்ம நட்சத்திரமாக கணிக்கப்பட்டிருக்கிறது.பிறந்தது 10.07.1971 அன்று இரவு 10.38.
ஆனால் கணினி வழி கணிக்கும் போது அவருக்கு அவிட்ட நட்சத்திரம் வருகிறது.
இதனால் தசாபுத்திப் பலன்களில் குழப்பம் நேருமே?
ஏன் இந்தக் குழப்பங்கள்?எப்படி இவற்றிற்குத் தீர்வு சொல்வது?
இவருக்கு எப்படி பலன் சொல்வது?
இயலுமெனில் பதிலை மின்மடலுக்கும் அனுப்ப வேண்டுகிறேன்.
en.madal@yahoo.com
வாக்கியப் பஞ்சாங்கம் = வருடத்திற்கு 12 மாதங்கள் x 30 நாட்கள் = 360 நாட்கள்
ReplyDeleteதிருக்கணிதப் பஞ்சாங்கம் = வருடத்திற்கு 365,25 நாட்கள்
திருக்கணிதத்தை உபயோகிப்பவர்கள் அதையே உபயோகிக்க வேண்டும்
எல்லா கணினி மென் பொருளும் திருக்கணித அடிப்படையில்தான் இருக்கும்
வாக்கியப்பஞ்சாங்கத்தை உபயொகிப்பவர்கள் மாதங்களையே கழித்துக் கொண்டு வருவார்கள்
அவர்களின் கணக்குப்படி அது சரியாக இருக்கும்
இரண்டையும் கலந்து பார்த்தால் நீங்கள் சொல்லும் குழப்பம் ஏற்படும்
திருக்கணிதத்தையே பயன்படுத்துங்கள்
நன்றி ஐயா.
ReplyDeleteதிருக்கணிதமே பயன்படுத்தலாம் எனில் எனது மேற்குறிப்பிட்ட இரண்டாவது எடுத்துக்காட்டின் படி,வாக்கிய பஞ்சாங்க தசாபுத்தியே சரியானதாக இருக்கிறது.
திருக்கணிதப்படி அமைந்த தசாபுத்தி சரியெனில் அவருக்கு நல்ல நேரம் மூன்று மாதத்திற்கு முன்பே வந்திருக்க வேண்டும் அல்லவா?(புதன் லக்னாதிபதி-புதன் புத்தி ஆரம்பம் ஜூன் 2008 வாக்கிய பஞ்சாங்கப்படி,மார்ச் 2008 திருக்கணிதப்படி.ஆனால் அவருக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இழந்த வேலை(சனி புத்தியில்) கிடைத்தபாடில்லை அமெரிக்காவில்.கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.(சனி மேஷத்தில் நீச்சம்)...சுவாரசியமான ஒரு ஆய்வு நோக்கிலேயே இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.
இரண்டாவதாக,1971 க்கான திருக்கணித பஞ்சாங்கம் உங்களிடம் இருக்கிறதா? இருப்பின் 10.07.1971,இரவு 10.38 க்கான நடசத்திரம் அறிய ஆவல்.(மேற்குறிப்பிட்ட இரண்டாவது கேஸ்)
wow.....its simply superb .............
ReplyDeleteCouldn't believe in aside. Is it my imagination!!!
ReplyDeleteWow - A very nice blogspot - i have missed it for years. thank God atleast i hav found it now
ReplyDeleteI m yet to install a tamil transl iterator in my computer. So please bear with me. I am new student to your astrology classes.Appreciate your work.
ReplyDeleteI have a clarification in your Part 21 of astrology with respect to calculation of iruppu thasai.
ஒருவர் 10.02.1975 அன்று மாலை 4 மணிக்குப் பிறந்திருக்கிறார் அவருடைய நட்சத்திரம் திருவோணம். கர்ப்பசசெல் இருப்பு 3 வருடம் 8 மாத்ங்கள் 2 நாட்கள் அவருடைய நடப்பு தசைக் கணக்கு
1975 - 02 - 10 பிறந்ததேதி
0003- 08 - 02 கெர்ப்பச்செல் இருப்பு
-------------------
1978- 10. 12 சந்திர தசை முடிந்த நாள்
000 7 - 00 - 00 செவ்வாய் தசை
------------------------
1985 -10. 12 செவ்வாய் தசை முடிந்த நாள்
0018 - 00- 00 ராகு தசை
--------------------
2003 - 10 -12 ராகு தசை முடிந்த நாள்
0002- 01 -18 நாட்கள் குரு தசை குரு புக்தியில்
------------------------
2005 -12 - 00 குரு தசை குரு புக்தி முடிந்த நாள்
0002- 06 -12 நாட்கள் கு தசையில் சனி புக்தி
-------------------------------
2008 - 06 -12 குரு தசையில் சனி புக்தி முடியும் நாள்
0002 - 03- 06 குரு தசை புதன் புக்தி காலம்
In the above explanation - I can understand till the line "2003 - 10 -12 ராகு தசை முடிந்த நாள்" After that I can't understand.
My question is 2003-10-12 is the date when ragu thasa was over. After that you have mentioned 2 years 1 month and 18 days for guru thasa, guru bukthi. But in the chart I can see as 2 4 0 against guru thasa guru bukthi - which means 2 years and 4 months right.. in that case குரு தசை குரு புக்தி முடிந்த நாள் should be 2005-12-12 right.
Similarly I cant understand the next lines of explanation
comparing to the chart you have shared