மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.3.07

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 12

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 12
By SP.VR.SUBBIAH

நாஸ்டர்டாமஸின் தீர்க்கதரிசனங்கள் (தொடர்ச்சி)

ஒரு நாள் ப்ளோரன்ஸ் டி வில்லி எனும் செல்வந்தர்

வீட்டிற்கு விஷேச அழைப்பின் பெயரில் நாஸ்ட்ர
டாமஸ் விருந்திற்குச் சென்றிருந்தார்.

அன்றைய தினம் மாலையில் அந்த செல்வந்தர் வீட்டுத்
தோட்டத்தில் இருவரும் உலாவிக் கொண்டிருந்தனர்.

அங்கே அப்போது இரண்டு பன்றிக் குட்டிகள் விளையாடிக்
கொண்டிருந்தன.

அவற்றைச் சுட்டிக் காட்டிய , செல்வந்தர் நாஸ்ட்ரடாமஸிடம்
கேட்டார்.

"இந்தப் பன்றிக்குட்டிகளின் எதிர்காலத்தைப் பற்றி உங்களால்
ஏதாவது கூற முடியுமா?"

உடனே நாஸ்ட்ரடாமஸ் தயக்கமின்றிக் கூறினார்
" வெள்ளைப் பன்றிக்குட்டியை ஒரு நரி தின்றுவிடும். கருப்புப்
பன்றிக்குட்டியை இன்றிரவு நாம் தின்னப் போகிறோம்"

அதைப் பொய்யாக்க விரும்பிய செல்வந்தர், தன்னுடைய
வேலைக்காரர்களை ரகசியமாக அழைத்து, வெள்ளைப்
ப்ன்றிக்குட்டியைக் கொன்று இரவு உணவாக அதைச்
சமைக்கும்படி உத்தரவிட்டார்.

அன்று இரவு இருவரும் மேஜையில் அமர்ந்து உணவு
சாப்பிடும்பொழுது," நாஸ்ட்ரடாமஸ், இப்போது சொல்லுங்கள்
நாம், சாப்பிட்டுக்கொண்டிருப்பது,கருப்புப் பன்றியின்

இறைச்சியா அல்லது வெள்ளைப் பன்றியின்
இறைச்சியா?"

அதற்கு நாஸ்ட்ரடாமஸ் புன்னகையுடன் பதில் சொன்னார்,
“எனது வார்த்தைகள் தவறாது. மறுத்துச் சொல்வதும்
கிடையாது. நீங்கள் உங்கள் சமையல்காரரை அழைத்துத்
தெரிந்து கொள்ளுங்கள் - கருப்பா அல்லது வெள்ளையா என்று!"

உடனே அந்த வீட்டின் சமையல்காரர் அங்கே அழைத்து
வரப்பட்டார்ர். வந்தவர் சொன்னார்.

"என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் சொன்னபடியே
வெள்ளைப் பன்றியைத்தான் முதலில் வெட்டிச் சிறு சிறு
துண்டுகளாக்கி மேஜை மேல் வைத்துவிட்டு உள்ளே சென்று
சமையலுக்கு வேண்டிய சேர்மானப் பொருட்களை எடுத்துக்
கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் உங்கள் மகன்
வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்திருந்த நரி ஒன்று
இந்தப் பன்றிக் கறியின் வாசனையை மோப்பம் பிடித்துத்
கொண்டு உள்ளே வந்து அவற்றைக் குதறித்தின்ன

ஆரம்பித்து விட்டது. நரி வாய்வைத்துக் குதறியதை
உங்களுக்குச் சமைக்க வேண்டாம் என்று அதை
அப்படியே நரிக்குப் போட்டு விட்டுப் பிறகு, கருப்புப்
பன்றியைக் கொன்று துண்டுகளாக்கி உங்கள்
இருவருக்கும் உணவாகச் செய்தேன்"

அசந்துபோன செல்வந்தர் நாஸ்ட்ரடாமஸிடம், அவரைச்
சோதனைகுட்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டதுடன்,
பெரும் வெகுமதிகளையும் கொடுத்து அவரை அனுப்பினார்
-------------------------------------------------------
நாஸ்டர்டாமஸ் இரவில்தான் எதிர்காலத்தில் நடக்க
விருப்பவைகளைக் கணித்து எழுதினார். ஆனால் மதத்
தலைவர்களுக்குப் போக்குக் காட்டவும், சிறை தண்டனை
யிலிருந்து தப்பவும் எகிப்திய நூல் ஒன்றின் ஆதாரத்தைக்
கொண்டு எழுதுவதாகச் சொல்லி வந்தார்.

பிரான்ஸில் ஒரு சிற்பி செய்த கன்னிமேரியின் சிலையைப்
பார்த்து, நாஸ்டர்டாமஸ் அது கன்னி மேரியின் சிலை

இல்லை. பேயின் சிலை என்றார். அது சிற்ப சாஸ்திரப்படி
இல்லையென்பதற்காகவே அப்படிச் சொன்னார்.

அரசாங்கம் அவரை நாத்திகன் என்று சொல்லிக் கைது
செய்ய உத்தரவிட்டது. அவர் அதிலிருந்து தப்பி

ஊரைவிட்டே ஓடினார். ஆறு ஆண்டுகாலம் நாடோடி
யாகப் பல ஊர்களில் சுற்றித் திரிந்துவிட்டுப் பின்
மறுபடியும் பிரான்ஸிற்கு வந்தார்.

1555 ஆம் ஆண்டுதான் தன்னுடைய முதல் நூலை எழுதி
முடித்தார்.நாஸ்டர்டாமஸின் நூல்கள் லத்தீன் பேச்சு

மொழியில் கவிதை நடையில் அமைந்திருந்தன.
பாட்டிற்கு எட்டு வரிகள் வீதம் தலா நூறு
பாடல்களைக் கொண்ட பத்து தொகுதிகளாக
அவைகள் அமைந்திருந்தன.

அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் யாராவது ஆரூடம்
சொன்னால் அவரை சூன்ய மந்திரவாதி என்று பட்டம் சூட்டி
உயிரோடு எரிக்கவே கிளம்பி விடுவார்கள். அதோடு அரசால்
மோசடி ஆசாமி என்று கைது செய்யப்படும் சூழ்நிலையும்
நிலவியது. அதனால்தான் அவர் பல எதிர்கால நிகழ்வுகளை
கணிப்புக்களை ச்ங்கேதக் குறிப்பாக எழுதிவைத்தார்.

அது விமானப் போக்குவரத்து தோன்றாத காலம். ஆனால்
நாஸ்டர்டாமஸ், வரப்போகும் விமானப் போக்குவரத்து,
இரண்டாவது உலகப்போர், ஹிட்லர், கென்னடியின் மரணம்
அதயதுல்லா கோமெனியின் அரசியல் எழுச்சி என்று பல
விந்தையான கணிப்புக்களைத் த்னது தீர்க்க தரிசனத்தால்
460 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவைத்துவிட்டுப்போனார்
அது நிதர்சனமான உண்மை என்பதை அவருடைய நூல்கள்
சொல்லிக்கொண்டிருக்கின்றன.

அவருடைய கையெழுத்துப் பிரதி இன்றும் பிரஞ்சு அருங்
காட்சியகத்தில் உள்ளது.

நம்து தமிழ்மணப் பதிவர்கள் சிலர் பாரீஸில் இருக்கிறார்கள்
அவர்கள் பிரஞ்சு அருங்காட்சியகத்திற்குச் சென்று அதைப்
பார்த்துவிட்டு வந்து நமக்கு அதைப் பற்றிய செய்திகளைச்
சொன்னால் நாம் அவர்களுக்கு, நம இருகரம் கூப்பி ந்மது
ந்ன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்!
---------------------------------------
Nostradamus பற்றிய முழு விவரங்களுக்கான
இணைய தளம்:
----------------------------------
நாஸ்டர்டாமஸின் மொத்த புத்தகத்தின் வரிகளையும்
பார்ப்பதற்கான இணைய தளம் இங்கே உள்ளது:
-------------------------------------------------
பாடல் எண் 74 - இந்திரா காந்தியைக் குறிப்பது!
பாடல் எண் 75 - ராஜிவ் காந்தியைக் குறிப்பது!
இவற்றைக்காண்பதற்கான சுட்டி:
-----------------------------------------------






-------------------------------------------

படிப்பதற்கான புத்தகங்கள்:



-----------------------------------------
(தொடரும்)

7 comments:

  1. //பாடல் எண் 74 - இந்திரா காந்தியைக் குறிப்பது!
    பாடல் எண் 75 - ராஜிவ் காந்தியைக் குறிப்பது
    //

    எப்படி சார்...
    பாடல் எண் 74 & 75 - இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி யை குறிக்கிறது எப்படி கண்டுபிடிச்சாங்க?

    அது சரி, சார்! இந்தியாவுக்கு எப்ப நல்ல தலைவர் "தோன்றுவார்" னு ஏதும் சொல்லிருக்காரா?

    ReplyDelete
  2. Nostradamus- இவரைப்பற்றி அறியத்தந்தற்கு நன்றி ஐயா.
    இவர் சொன்னது நமது ஜோதிடத்தின் இன்னொரு முகமா?

    ReplyDelete
  3. //தென்றல் அவர்கள் சொல்லியது: எப்படி சார்...
    பாடல் எண் 74 & 75 - இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி யை குறிக்கிறது எப்படி கண்டுபிடிச்சாங்க? //

    அதுதான் இத்துறையில் ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்கள் செய்துகொண்டிருக்கும் வேலை!
    //அது சரி, சார்! இந்தியாவுக்கு எப்ப நல்ல தலைவர் "தோன்றுவார்" னு ஏதும் சொல்லிருக்காரா?//

    ஒரு பெரிய ஸ்காலர் வருவார் என்று எழுதி வைத்துள்ளார். யார்? எப்பொழுது வருவார்? என்று
    அதே ஆராய்ச்சியாளர்கள்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  4. //வடுவூர் குமார் said...
    Nostradamus- இவரைப்பற்றி அறியத்தந்தற்கு நன்றி ஐயா.
    இவர் சொன்னது நமது ஜோதிடத்தின் இன்னொரு முகமா?//

    ஆமாம் இது ஜோதிடத்தின் இன்னொரு பிரிவு! எந்தவித அடிப்படை
    ஆதாரமுமின்றி கணித்துச் சொல்வது

    ReplyDelete
  5. இன்னிக்கு நான் ஒண்ணும் பேச முடியல. காரணம் வியப்பு...

    சென்ஷி

    ReplyDelete
  6. சுப்பையா சார்,
    இந்த நாஸ்ட்ராடமஸின் பாடல்கள் மட்டும் தான் இணையத்தில் கிடைக்கிறதா? அதற்கான simple உரை ஏதும் கிடைக்குமா?

    ReplyDelete
  7. விளக்கத்திற்கு நன்றி, சார்!

    //ஒரு பெரிய ஸ்காலர் வருவார் என்று எழுதி வைத்துள்ளார். யார்? எப்பொழுது வருவார்? என்று
    அதே ஆராய்ச்சியாளர்கள்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்!
    //

    மன்மோகன் சிங் ஒரு பெரிய ஸ்காலர் தானே..! சோனியா மாதிரி "சூப்பர் PM" கிட்ட மாட்டினா, எவ்வளவு பெரிய ஸ்காலரும் பூஜ்யம் தானு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை தானே..?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com