++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ப்ளெண்டிங் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?
கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.14
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.43
பெயர்: மணிவண்ணன்
பிறந்த ஊர்: ராசிபுரம்
வசிக்கும் ஊர்: ஹைதராபாத்
வயது: 29
என் கேள்விகள்:
கேள்வி 1. ஒரே அமைப்பு நல்ல யோகமாகவும் அதே நேரத்தில் அவயோகமாகவும் அமைந்தால் என்ன பலன்? உதாரணமாக, 9 -ஆம்
அதிபதி சனியும் 10 -ஆம் அதிபதி குருவும் சேர்ந்து 4 -ஆம் வீட்டில்
இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆனால் சனியும் குருவும் சேர்ந்து
4 -ஆம் வீட்டில் இருப்பது குரு சண்டாள யோகம்.
என்ன குழப்புகிறீர்கள்? குருவும், ராகுவும் ஒரே ராசியில் ஒன்றாக இருப்பதல்லவா குரு சண்டாள யோகம்!
இருவரும் ஒன்று சேரும்போது, ராகுவின் தன்மைகளும் குருவின் தன்மைகளும் ஒன்றாகக் கலந்துவிடும். உங்கள் மொழியில் சொன்னால் ஒன்றாக Blend ஆகிவிடும். ப்ளெண்டிங் (கலக்கல்) என்றால் என்னவென்று தெரியுமல்லவா?
சரக்கடிப்பவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். மாற்றி அடிக்க மாட்டார்கள்
அதைப்பற்றிக் கவியரசர் கண்ணதாசன் கூட ஒரு பாடல் எழுதிவைத்துள்ளார். அன்னைத் தமிழுக்கு அவப்பெயர் வரக்கூடாது என்று, அந்த மாகவிஞன் அதை ஆங்கிலத்தில் எழுதிவைத்துள்ளார்
பாடலைப் பாருங்கள்:
குருவும், ராகுவும் ஒரே ராசியில் ஒன்று சேரும்போது அதற்குப் பெயர் குரு சண்டாள யோகம். இது அவயோகம்.அது குருவுடன் கலந்து ஜாதகன் வாழ்க்கையின் போக்கை அடிக்கடி மாற்றிவிடும். ஜாதகனின் நற்சிந்தனை மற்றும் நல்ல குணங்களை மாற்றி அவனைத் தீய செயல்களைச் செயத்தூண்டும். நடைமுறைகளுக்கு எதிரான செயல்களை அவன் செய்ய நேரிடும். சிலரை நல்ல செயல்களையும் செய்ய வைக்கும். அது ஜாதகனின் ஆதிபத்தியத்தில் குரு எந்த வீட்டிற்கு உரியவர் என்பதைவைத்து மாறுபடும். ஜாதகத்தில் குரு 6, 8, 12ஆம் வீடுகளுக்கு உரியவர் என்றால் தீய செயல்கள். கேந்திர கோணங்களுக்கு அதிபதி என்றால் நற்செயல்கள். இந்த இருவருடன் சேரும் அல்லது இந்த இருவரின் சேர்க்கையைப் பார்க்கும் சுப அல்லது தீய கிரகங்களாலும் பலன்கள் மாறுபடும்.
அப்படிக் கொள்ள முடியாது. இரண்டு ப்ளஸ் பாயிண்ட்ஸ் இருந்தால்
இரண்டு மைனஸ் பாயிண்ட்ஸ்களும் இருக்கும் என்று கொள்ள
வேண்டும். இரண்டு வீடுகள் கெட்டிருந்தால், வேறு இரண்டு வீடுகள்
நன்றாக இருக்கும். நஷ்டங்களூம் இருக்கும். நஷ்ட ஈடுகளும் இருக்கும். அனைவரும் சமம். அனைத்துப் பிறப்புக்களும் சமம். அதனால்தான் அனைவருக்கும் அந்த 337 பரல்கள்
நல்ல கேள்வி!
உங்களுக்காக தசாபுத்திப்பலன்களை ஒரு மாமுனி எழுதிய பாடல்களில் இருந்து எடுத்துக்கொடுத்துள்ளேன்.
இரண்டுமே எளிய தமிழில் புரியும்படி இருக்கும். ரவிதிசை ராகு புத்தியில் “நலமில்லா வியாதியது பீடிப்பாகும்” என்று பலன் சொல்லியவர், செவ்வாய் தசை ராகு புத்தியில் “சுரதோஷம் வாத பீடை” என்று பலன் சொல்லியுள்ளார். வியாதிகளில்தான் நூறுவகைகள் இருக்கின்றனவே. அதில் இரண்டுவந்தால், இதில் உங்களுக்குப் போரடிக்காமல் இருப்பதற்காக வேறு இரண்டு வியாதில்கள் வரும். ஒன்றில் மூட்டு வலி என்றால், அடுத்ததில்
சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் வரும். காய்ச்சல் என்றால் என்னவென்று தெரியுமல்லவா - Fever
“ஆமென்ற ரவிதிசையில் ராகு புத்தி
”பகையான சேய் திசை ராகுபுத்தி
Money on speculative transaction என்பார்கள். ஷேர் மார்க்கெட் என்றில்லை. சீட்டாட்டம், குதிரை ரேஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் பெட்டிங் என்று அனைத்துவிதமான வருமானத்திற்கும் ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, பதினொன்றாம் வீடு, அதன் அதிபதி, மற்றும் குருபகவான் ஆகியோரின் கூட்டணி நல்ல பலனைத்தரும்.
ஆனால் ஒன்று அது உழைப்பில்லாமல் வரும் பணமாகும். உழைக்காமல் வரும் பணம் கடைசியில் உபத்திரவத்தைத் தரும் அதை மனதில் வையுங்கள்.
------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.44
B.N.Sivakumar
சிவகுமார்
தங்கள் பெண்ணின் திருமணத்திற்கு, மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் போது, பெண் வீட்டார் பல விஷயங்களையும் பார்ப்பார்கள். அதைப் பட்டியல் இட்டுள்ளேன். பாருங்கள்
அதுபோல ஜாதகத்தில் திருமணத்திற்குப் பலவிதிமுறைகள் உள்ளன? நீங்கள் ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவது ஏன்? மற்ற விஷயங்களையும் பாருங்கள். பழைய பாடங்களில் அது விவரமாக உள்ளது.
சரி உங்கள் ஜதகத்திற்கு வருவோம். நீங்கள் பூச நட்சத்திரம் (கடக ராசி) சிம்ம லக்கினம் லக்கினாதிபதி சூரியன், ஏழாம் அதிபதி சூரியன், இரண்டாம் அதிபதி புதன், விரையாதிபதி சந்திரன் ஆகிய நால்வரும் ஒன்றாக 12ஆம் வீட்டில் இருக்கிறார்கள்.
அத்துடன் உங்களுக்கு இதுவரை நடந்த தசைகளையும் தசா நாதகர்களையும் பாருங்கள்:
பிறப்பில் இருப்பு: சனி தசை 7வருடம் ஒரு மாதம் 26 நாட்கள். (சனி 12ல்)
அடுத்துவந்த புதன் தசை 17 ஆண்டுகள் (அவரும் 12ல்)
அதற்கு அடுத்து வந்த கேது தசை 7 ஆண்டுகள்
ஆக மொத்தம் 31 ஆண்டுகள் இருட்டிற்குள்ளேயே உங்களைக் கிரகங்கள் அமுக்கி வைத்திருந்திருக்கின்றன.
இப்போது உங்களுக்கு சுக்கிரதசை சுயபுத்தி நடக்கிறது. வெளிச்சத்திற்கு வந்து விட்டீர்கள்
அவன் களத்திரகாரகன். அவன் உங்கள் ஜாதகத்தில் கேந்திரத்தில் (10ஆம் இடத்தில்) யோககாரகன் செவ்வாயுடன் ஒன்றாக இருக்கிறான். இருவரும் சேர்ந்து உங்களுக்கு மணம் செய்துவைப்பார்கள்.
நீள அகலங்களை உங்கள் விருப்பப்படி பார்த்துக்கொண்டிருக்காமல், கிடைக்கிற ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளூங்கள்.
பழநியப்பனை மனமுருகத் தினமும் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் கைகொடுப்பான்.
சொந்த ஜாதகங்களுக்கு இந்தப் பகுதியில் இடமில்லை என்றாலும், உங்கள் வயது கருதி இடமளித்தேன்
திருமணம் நிச்சயமானவுடன் பத்திரிக்கை அனுப்புங்கள். வந்து கலந்து கொள்கிறேன்!
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.45
சம்பத்குமார்
கோயம்புத்தூர்
அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. இலங்கைத் தமிழர்களுக்குத்
தனி ஈழம் கிடைக்க வேண்டும் என்பதில் அனைத்துத் தமிழர்களுக்கும்
ஒரே மாதிரி எண்ணம் உள்ளது. ஆனால் அது எப்போது கிடைக்கும்?
எப்படிக் கிடைக்கும் என்பதுதான் இன்றுவரை புதிராக உள்ளது.
கிடைக்க வாழ்த்துவோம். இறைவனைப் பிரார்த்திப்போம்.
ஜாதகப்படி ஏதாவது சொல்லலாம் என்றால், அந்த நாட்டின் ஜாதகம் என்வசம் இல்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.46
M.பாரதிதாசன்.
“வேலையே கிடைக்கவில்லை. சும்மா இருக்கிறேன்” என்று சொன்னால் வருத்தப்படலாம். ஆனால் நீங்கள் வேலையில் இருக்கிறீர்கள். அது பிடிக்காமல் இருக்கலாம் அல்லது நிரந்தர ஊழியர்கள் லிஸ்ட்டில் பெயரில்லாத வேலையாக இருக்கலாம்.
அதற்கு ஏன் கவலைப் படுகிறீர்கள்?
கொத்தனார், சித்தாள், மரவேலை செய்பவர், மூட்டை தூக்கும் ஹமாலி வேலை செய்பவர், வயல்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள் என்று இந்திய ஜனத்தொகையில் சுமார் 25% பேர்கள் அன்றாடம்
கிடைக்கும் வேலையை உற்சாகமாகச் செய்பவர்கள்தான். மாதத்தில் 20 நாட்கள் வேலை கிடைத்தாலே பெரிய விஷயம். தினமும் இரண்டு வேளை உணவு கிடைப்பதே தெய்வச் செயல். அவர்கள் கவலைப் பட்டு வீட்டில் படுத்தால் என்ன ஆகும்?
முதலில் உங்களின் வருத்ததை விட்டொழியுங்கள்!
நிலையான வேலை என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள். ஒரு வேலையில் சேர்ந்து, கடைசிவரை (அதாவது ஓய்வு பெறும்வரை) அதே வேலையில் இருப்பதைக் குறிப்பிடுகிறீர்களா? அப்படியிருந்தால் போரடிக்காதா?
அதில் த்ரில் இருக்குமா?
வேலையில் இரண்டுவிதம் இருக்கிறது. creative work. Non creative work
எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள், சிற்பிகள், ஓவியர்கள், போன்றவர்கள் எல்லாம் க்ரியேடிவ் சைடில் வருவார்கள் (ஆக்கமான வேலைகள்)
பேருந்து ஓட்டுனர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழிற்சாலைகளில் மெஷின் இயக்கிகள், லோட் மேன்கள், வயல்களில், பொதுப்பணித்துரைகளில் கூலி வேலை செய்பவர்கள் எல்லாம் Non creative work என்ற கணக்கில் வருவார்கள்.
உங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொண்டு, ஆக்கமான வேலைக்கு முயற்சி செய்யுங்கள். பின்னாளில் பணத்துடன் பிரபலமும் ஆகிவிடுவீர்கள்.
உங்கள் ஜாதகத்திற்கு வருவோம். உங்கள் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி புதன் லாபாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து இரண்டில் உள்ளார். தொழில்காரகன் சனி உச்சமாகி பதினொன்றில் உள்ளார். ஆகவே உங்களுக்கு நல்ல வேலை
கிடைக்கும். தற்சமயம் அஷ்டமாதிபதி சந்திரனின் தசை நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் கிடைக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

Whisky with water
Brandy with soda
Rum with cola
Gin with lemon
Men with women
குருவும், ராகுவும் ஒரே ராசியில் ஒன்று சேரும்போது அதற்குப் பெயர் குரு சண்டாள யோகம். இது அவயோகம்.அது குருவுடன் கலந்து ஜாதகன் வாழ்க்கையின் போக்கை அடிக்கடி மாற்றிவிடும். ஜாதகனின் நற்சிந்தனை மற்றும் நல்ல குணங்களை மாற்றி அவனைத் தீய செயல்களைச் செயத்தூண்டும். நடைமுறைகளுக்கு எதிரான செயல்களை அவன் செய்ய நேரிடும். சிலரை நல்ல செயல்களையும் செய்ய வைக்கும். அது ஜாதகனின் ஆதிபத்தியத்தில் குரு எந்த வீட்டிற்கு உரியவர் என்பதைவைத்து மாறுபடும். ஜாதகத்தில் குரு 6, 8, 12ஆம் வீடுகளுக்கு உரியவர் என்றால் தீய செயல்கள். கேந்திர கோணங்களுக்கு அதிபதி என்றால் நற்செயல்கள். இந்த இருவருடன் சேரும் அல்லது இந்த இருவரின் சேர்க்கையைப் பார்க்கும் சுப அல்லது தீய கிரகங்களாலும் பலன்கள் மாறுபடும்.
கேள்வி 2 . அனைவருக்கும் 337 பரல்கள் தான். அப்ப ஒரு தோஷம் இருந்தால் கண்டிப்பாக ஒரு யோகமோ அல்லது ஒரு யோகம் இருந்தால் கண்டிப்பாக ஒரு தோஷமோ இருக்கும் என்று வைத்துக் கொள்ளலாமா?
அப்படிக் கொள்ள முடியாது. இரண்டு ப்ளஸ் பாயிண்ட்ஸ் இருந்தால்
இரண்டு மைனஸ் பாயிண்ட்ஸ்களும் இருக்கும் என்று கொள்ள
வேண்டும். இரண்டு வீடுகள் கெட்டிருந்தால், வேறு இரண்டு வீடுகள்
நன்றாக இருக்கும். நஷ்டங்களூம் இருக்கும். நஷ்ட ஈடுகளும் இருக்கும். அனைவரும் சமம். அனைத்துப் பிறப்புக்களும் சமம். அதனால்தான் அனைவருக்கும் அந்த 337 பரல்கள்
கேள்வி 3 . ஒரே கிரகத்தின் புத்தி வெவ்வேறு தசையில் வெவ்வேறு பலன்களைத் தருமா? உதாரணமாக, சூரியதசை ராகு புத்தி, செவ்வாய்
தசை ராகு புத்தி.
தசை ராகு புத்தி.
நல்ல கேள்வி!
இரண்டிலுமே தீய பலன்கள்தான். ஆனால் வெவ்வேறாக இருக்கும். உங்கள் மொழியில் சொன்னால், சூரிய தசை ராகு புத்தியில் 2 விக்கெட்டுக்கள் விழுந்தால், செவ்வாய் தசை ராகு புத்தியில் வேறு இரண்டு விக்கெட்டுக்கள் விழுகும்.
உங்களுக்காக தசாபுத்திப்பலன்களை ஒரு மாமுனி எழுதிய பாடல்களில் இருந்து எடுத்துக்கொடுத்துள்ளேன்.
இரண்டுமே எளிய தமிழில் புரியும்படி இருக்கும். ரவிதிசை ராகு புத்தியில் “நலமில்லா வியாதியது பீடிப்பாகும்” என்று பலன் சொல்லியவர், செவ்வாய் தசை ராகு புத்தியில் “சுரதோஷம் வாத பீடை” என்று பலன் சொல்லியுள்ளார். வியாதிகளில்தான் நூறுவகைகள் இருக்கின்றனவே. அதில் இரண்டுவந்தால், இதில் உங்களுக்குப் போரடிக்காமல் இருப்பதற்காக வேறு இரண்டு வியாதில்கள் வரும். ஒன்றில் மூட்டு வலி என்றால், அடுத்ததில்
சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் வரும். காய்ச்சல் என்றால் என்னவென்று தெரியுமல்லவா - Fever
1. சூரிய தசை ராகு புத்திக்கான பாடல்:
“ஆமென்ற ரவிதிசையில் ராகு புத்தி
ஆகாத மாதம் பத்து நாள் மூவெட்டாகும்
போமென்ற அதன் பலனைப் புகழக்கேளு
பொன்னோடு பெண்ணதுவும் நாசமாகும்
நாமென்ற சத்துருவால் சண்டையுண்டாம்
நலமில்லா வியாதியது பீடிப்பாகும்
தாமென்ற மனைவியரைப் பிரித்து வைக்கும்
தகமை இல்லாத நாளென்று தணித்து நில்லே!”
2. செவ்வாய் தசை ராகு புத்திக்கான பாடல்:
”பகையான சேய் திசை ராகுபுத்தி
பாங்கில்லா நாளதுவும் வருஷம் ஒன்று
துகையில்லாத நாளதுவும் பதினெட்டாகும்
துன்பங்கள் சுரதோஷம் வாத பீடை
வகையில்லா சத்துருவும் அக்கினியுண்டாம்
வளங்கொடியாள் விரோதமது வகையுடனே காட்டும்
நகையுடனே பூஷணங்கள் நலமில்லாசிலவாம்
நன்மையில்லா நிலைவிட்டு நடப்பான் காணே!”
கேள்வி 4 . ஷேர் மார்க்கெட் எந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் வரும்?
Money on speculative transaction என்பார்கள். ஷேர் மார்க்கெட் என்றில்லை. சீட்டாட்டம், குதிரை ரேஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் பெட்டிங் என்று அனைத்துவிதமான வருமானத்திற்கும் ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, பதினொன்றாம் வீடு, அதன் அதிபதி, மற்றும் குருபகவான் ஆகியோரின் கூட்டணி நல்ல பலனைத்தரும்.
ஆனால் ஒன்று அது உழைப்பில்லாமல் வரும் பணமாகும். உழைக்காமல் வரும் பணம் கடைசியில் உபத்திரவத்தைத் தரும் அதை மனதில் வையுங்கள்.
------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.44
B.N.Sivakumar
சிவகுமார்
Dear Sir,
“ராசிச் சக்கரத்தில் ஏழாம் அதிபதி 12ல் போய் (அதாவது விரைய ஸ்தானத்தில்) உட்கார்ந்திருந்தால், முதல் திருமணம் பெரும்பாலும் ஊற்றிக்கொண்டுவிடும்.”
The above said thing which I got from your blog. Please clear my my doubt in my horoscope lagna: simmam Rasi: katagam star: poosam 3rd patham 7th lord sani associated with sun, mercury and moon in the 12place, Ragu in 2nd and Kethu in 8th, guru, sukran and chevvai in 10th. please clear me will my marriage will face trouble according to ur blog note. my dob is 17-07-1977, time: 9.30 am place of birth Kallakuruchi.
Thanks & Regards
B.N.Sivakumar
தங்கள் பெண்ணின் திருமணத்திற்கு, மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் போது, பெண் வீட்டார் பல விஷயங்களையும் பார்ப்பார்கள். அதைப் பட்டியல் இட்டுள்ளேன். பாருங்கள்
1.பையனின் தோற்றம்,
2.வயது (32 தாண்டிய பையன் என்றால் ஜூட் விட்டு விடுவார்கள்)
3.படிப்பு, (இன்றைய மார்கெட் நிலவரம். பொறியாளர் மாப்பிள்ளை)
4.வேலை செய்யும் இடம், (Multinational Companyயில் வேலை)
5.வாங்கும் ஊதியம், (மாதம் ஐம்பதாயிரத்திற்குக் குறையக்கூடாது)
6.அவனுடைய ஜாதகம் (சுத்த ஜாதகமாக இருப்பது நல்லது)
7.பெற்றவர்களின் நிலைமை (உடன் இருக்கிறார்களா? தள்ளி இருக்கிறார்களா?)
8. குடும்ப நிலைமை (கல்யாணமாகாத நாத்தினார்கள் இருக்கிறார்களா?)
9. செல்வ நிலைமை. (குடும்பத்தினருக்கு, வண்டி, வாகனம் சொந்த வீடு நிலம் நீச்சு இருக்கிறதா? அல்லது அன்றாடம் காய்ச்சிகளா? மாப்பிள்ளையின் வருமானத்தில் குடும்பம் நடத்துபவர்களா?)
அதுபோல ஜாதகத்தில் திருமணத்திற்குப் பலவிதிமுறைகள் உள்ளன? நீங்கள் ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவது ஏன்? மற்ற விஷயங்களையும் பாருங்கள். பழைய பாடங்களில் அது விவரமாக உள்ளது.
சரி உங்கள் ஜதகத்திற்கு வருவோம். நீங்கள் பூச நட்சத்திரம் (கடக ராசி) சிம்ம லக்கினம் லக்கினாதிபதி சூரியன், ஏழாம் அதிபதி சூரியன், இரண்டாம் அதிபதி புதன், விரையாதிபதி சந்திரன் ஆகிய நால்வரும் ஒன்றாக 12ஆம் வீட்டில் இருக்கிறார்கள்.
அத்துடன் உங்களுக்கு இதுவரை நடந்த தசைகளையும் தசா நாதகர்களையும் பாருங்கள்:
பிறப்பில் இருப்பு: சனி தசை 7வருடம் ஒரு மாதம் 26 நாட்கள். (சனி 12ல்)
அடுத்துவந்த புதன் தசை 17 ஆண்டுகள் (அவரும் 12ல்)
அதற்கு அடுத்து வந்த கேது தசை 7 ஆண்டுகள்
ஆக மொத்தம் 31 ஆண்டுகள் இருட்டிற்குள்ளேயே உங்களைக் கிரகங்கள் அமுக்கி வைத்திருந்திருக்கின்றன.
இப்போது உங்களுக்கு சுக்கிரதசை சுயபுத்தி நடக்கிறது. வெளிச்சத்திற்கு வந்து விட்டீர்கள்
அவன் களத்திரகாரகன். அவன் உங்கள் ஜாதகத்தில் கேந்திரத்தில் (10ஆம் இடத்தில்) யோககாரகன் செவ்வாயுடன் ஒன்றாக இருக்கிறான். இருவரும் சேர்ந்து உங்களுக்கு மணம் செய்துவைப்பார்கள்.
நீள அகலங்களை உங்கள் விருப்பப்படி பார்த்துக்கொண்டிருக்காமல், கிடைக்கிற ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளூங்கள்.
பழநியப்பனை மனமுருகத் தினமும் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் கைகொடுப்பான்.
சொந்த ஜாதகங்களுக்கு இந்தப் பகுதியில் இடமில்லை என்றாலும், உங்கள் வயது கருதி இடமளித்தேன்
திருமணம் நிச்சயமானவுடன் பத்திரிக்கை அனுப்புங்கள். வந்து கலந்து கொள்கிறேன்!
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.45
சம்பத்குமார்
கோயம்புத்தூர்
Dear sir
Its common questions for tamil people. When sri lankan tamil people get TAMIL ELLEM Based on his astro.I am waiting for your valuable feedback
Your student
அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. இலங்கைத் தமிழர்களுக்குத்
தனி ஈழம் கிடைக்க வேண்டும் என்பதில் அனைத்துத் தமிழர்களுக்கும்
ஒரே மாதிரி எண்ணம் உள்ளது. ஆனால் அது எப்போது கிடைக்கும்?
எப்படிக் கிடைக்கும் என்பதுதான் இன்றுவரை புதிராக உள்ளது.
கிடைக்க வாழ்த்துவோம். இறைவனைப் பிரார்த்திப்போம்.
ஜாதகப்படி ஏதாவது சொல்லலாம் என்றால், அந்த நாட்டின் ஜாதகம் என்வசம் இல்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.46
M.பாரதிதாசன்.
அய்யா, இத்துடன் என்னுடைய ஜாதகம் அனுப்பி உள்ளேன்.
நிலையான வேலை இல்லை, என்னுடைய வேலையை பற்றி
தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பத்தாம் அச்திபதி புதன் வக்ரம்,
அதனால் நிலையான வேலை அமையாது என்று கூறுகிறார்கள்

தயவு செய்து விளக்கம் தரவும்.
நான் ஏற்கனவே இந்த விபரம் பற்றி தங்களிடம் கேட்டு இருக்கிறேன்,
தாங்கள், தங்கள் வேலை பளு காரணமாக, ஒரு இரண்டு மாதம் காத்து இருக்குமாறு கூறினீர்கள். அதனால்தான் தற்போது மறுபடியும்
அனுப்பி உள்ளேன்.

தயவு செய்து விளக்கம் தரவும். ப்ளீஸ்....
“வேலையே கிடைக்கவில்லை. சும்மா இருக்கிறேன்” என்று சொன்னால் வருத்தப்படலாம். ஆனால் நீங்கள் வேலையில் இருக்கிறீர்கள். அது பிடிக்காமல் இருக்கலாம் அல்லது நிரந்தர ஊழியர்கள் லிஸ்ட்டில் பெயரில்லாத வேலையாக இருக்கலாம்.
அதற்கு ஏன் கவலைப் படுகிறீர்கள்?
கொத்தனார், சித்தாள், மரவேலை செய்பவர், மூட்டை தூக்கும் ஹமாலி வேலை செய்பவர், வயல்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள் என்று இந்திய ஜனத்தொகையில் சுமார் 25% பேர்கள் அன்றாடம்
கிடைக்கும் வேலையை உற்சாகமாகச் செய்பவர்கள்தான். மாதத்தில் 20 நாட்கள் வேலை கிடைத்தாலே பெரிய விஷயம். தினமும் இரண்டு வேளை உணவு கிடைப்பதே தெய்வச் செயல். அவர்கள் கவலைப் பட்டு வீட்டில் படுத்தால் என்ன ஆகும்?
முதலில் உங்களின் வருத்ததை விட்டொழியுங்கள்!
நிலையான வேலை என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள். ஒரு வேலையில் சேர்ந்து, கடைசிவரை (அதாவது ஓய்வு பெறும்வரை) அதே வேலையில் இருப்பதைக் குறிப்பிடுகிறீர்களா? அப்படியிருந்தால் போரடிக்காதா?
அதில் த்ரில் இருக்குமா?
உதாரணத்திற்கு உங்களுக்கு இரயில்வேயில் வேலை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். Guard வேலை முதல் பத்துவருடம் Goods Trainல் வேலை. அடுத்த பத்துவருடம் Passenger Trainல் வேலை. அடுத்த 8ஆண்டுகள் Express Trainல் வேலை அடுத்த 8ஆண்டுகள் Sperfast Trainல் வேலை. 24 வயதில் சேருகிறீர்கள். 36 ஆண்டுகள் சர்வீஸ். 60 வயதில் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளூங்கள். அது நிரந்தமான வேலைதான். சுவாரசியமான வேலையா?