வகுப்பறையின் வார மலர். ஒவ்வொரு ஞாயிறன்றும் வெளியாகும். ஆக்கங்கள் உங்களுடையது. படித்து ரசித்தவர்கள், தங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடலாம். பங்கு கொள்ள விரும்புபவர்கள் தங்கள் ஆக்கங்களை அனுப்பிவைக்கலாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நமது வகுப்பறை மாணவர் ஆலாசியம் அவர்களின்
எழில் மிகு தோற்றம்.
இன்றைய ஞாயிறு மலரில்
அவருடைய ஆக்கம் வெளியாகியுள்ளது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ Over to his posting
--------------------------------------------------------------------------------------நெஞ்சில் பதிந்த நிகழ்வுகள்!
ஆக்கம்: ஆலாசியம், சிங்கப்பூர்
அறிஞர் சி.என்.அண்ணாத்துரை!
-----------------------------------------------------------------------------------------
சுருங்கச் சொல்கிறேன். ஒருமுறை அண்ணா அவர்கள் முதல்வராக இருக்கும் போது, அதே சட்டசபையில் புதுக்கோட்டை (தொண்டைநாடு) மன்னர் பரம்பரையில் வந்தவர் இளங்கோ (இளையராஜா) தொண்டைமான் அவர்கள் சட்டசபை உறுப்பினராக இருந்தார்கள், ஒருநாள் சட்டமன்றக் கூட்டம் நடந்து முடிந்தவுடன் எதிர்வரிசையில் அமர்ந்திருக்கும் ராஜா தொண்டைமானை நோக்கி முதலமைச்சர் அண்ணா வந்து நீங்கள் போகும் போது என் அறைக்கு கொஞ்சம் வந்துவிட்டுச் செல்லுங்கள் என்றாராம்.
அதைப் போலவே, திரு தொண்டைமான் அவர்கள் அண்ணாவின் அறைக்கு சென்றிருக்கிறார், வந்தவரை அமரவைத்து, அண்ணா அவர்கள் கூறினாராம், ஐயா, தாங்கள் வருத்தப் பட்டுக் கொள்ளக் கூடாது, தரா தரத்தை புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் எல்லாம் இன்று ஜனநாயகத்தின் சௌகரியத்தில் இப்போது உறுப்பினர்களாக வந்துவிட்டார்கள். அதனால் தாங்கள் மனம் வருந்தவேண்டாம், மேலும் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாராம்.
சரி நடந்தது தான் என்ன?, அன்று சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது பேரறிஞர் அண்ணா அவர்களும் இருக்கும் போது, ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு புது சட்டமன்ற உறுப்பினர் எதிர்வரிசையில் அமர்ந்திருந்த ராஜா தொண்டைமானை மரியாதைக் குறைவாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டாராம்.
ஒருவார்த்தை என்ன, ஓராயிரம் வார்த்தை என்ன அவமரியாதை, அவமரியாதைத் தானே! அப்படி பேசியதையும், அதைக் கேட்டு முகம்வாடிய உறுப்பினர் திரு. தொண்டைமானையும் கவனித்த முதலமைச்சர் அண்ணா அவர்கள் தான் இப்படி வருத்தம் தெரிவித்து இருக்கிறார். சபையிலே கண்டித்து இருக்கலாம், ஆனால் அண்ணா அதை செய்யவில்லை. அது மேலும் அசிங்கப் படுத்துவதாகவோ அமையலாம் அல்லது சிலருக்கு அறிவுரை சொல்லாமல் இருப்பதே சிறந்தது என்று தமிழ் கூறுவது போல்! அந்த உறுப்பினர் தகுதியற்றவர் என்று கூட எண்ணி இருக்கலாம் . அதனாலே அவரை தனது அறைக்கு வரச் சொல்லி தான் முதலமைச்சர் என்ற கர்வம் இல்லாமல் இந்தக் பெருமிதத்தை செய்திருக்கிறார்.
அதனால் தான் இவர் பேரறிஞர்! ஆம், அதனாலே அவர் பேரறிஞர்!!.
---------------------------------------------------------------------------------
2. நல்ல காரியங்களுக்கு கொள்கை குறுக்கிடாது!
ஒரு நாத்திகர், பெற்ற அன்னையை மட்டுமே தெய்வமாக வணங்குபவர், அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர், மருதமலை முருகன் திருக்கோவில் திருப்பணி நிதிவசூல் செய்து கொண்டிருந்த நேரம், நமது தெய்வத்திரு கிருபானந்த வாரியார் அவர்கள் இன்னும் சிலரும் சென்று முதலைச்சரைப் பார்த்து நன்கொடை வாங்கச்சென்றிருக்கிறார்கள். உதவியாளர் வந்து உங்களை ஐயா உள்ளே அழைக்கிறார் என்றிருக்கிறார்.
வாரியார் சுவாமிகளும் கூட வந்த மற்றவர்களும் உள்ளே சென்றவுடன் அமரச் செய்து குசேலம், பரஸ்பரம் நடந்து இருக்கிறது. அப்போது முதலமைச்சரே நான் என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார். சென்றவர்களுக்குள் சிறு தயக்கம் இருந்திருக்கிறது, அதிலும் வாரியார் ஸ்வாமிகள்... இது சாத்தியமா? என்ற யோசனையிலே சென்றிருக்கிறார்.
முதலமைச்சர் கேட்டவுடன் அந்த முருகனே சிரிப்பது போல் கள்ளம் கபடம் இல்லாத வழக்கமான செந்தாமரை மொட்டு விரித்தாற் போல் குழந்தைத் தனமான தெய்வீக அழகியச் சிரிப்புடன் வந்த விஷயத்தை ஸ்வாமிகள் கூற கேட்டவுடன், வலது கை கொடுப்பதை இடது கை அறியாது புண்ணியம் செய்யவேண்டும் என்பதைப் போல சிறிதும் தாமதம் இல்லாமல், நிரம்ப சந்தோசம், ஒரு நல்ல காரியத்திற்காக வந்திருக்கிறீர்கள் என்று உடனே தனது மேசையில் இருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து ரூபாய் 10 , 000 .00 -க்கான காசோலையை எழுதிக் கொடுத்தாராம்.
நல்லக் காரியம் இதில் என் நம்பிக்கைக்கு அவசியம் இல்லை என்று சொல்லி இன்னும் வேறு உதவிகள் வேண்டுமென்றாலும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றாராம்.
உடனே, நமது இலக்கியப் பழம், தமிழ் ஞானப் பழம், தெய்வத்திரு கிருபானந்த சாமிகள், நீங்கள் பொன்மனச்செம்மல், முருகன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு என்று வாழ்த்திவிட்டு வந்தாராம்.
அந்தப் பொன்மனசெம்மல் எம்.ஜி. இராமச்சந்திரனை பற்றி வாரியார் சாமிகளே பல நேரங்களில் மொழிந்தச் செய்தி!.
கொண்ட கொள்கை வேறு, சமூகத்தில் உயர்ந்தவர்கள் செய்யும் நல்லகாரியத்திற்கு, செய்யும் உதவி வேறு என்றும்; வீடு தேடி வந்த, அதுவும் ஒரு நல்லக் காரியத்திற்காக வந்தவர்களிடம் நடந்து காட்டிய பண்பு!!! அவர்தான் என்று மக்களின் மனதில் நீங்காது நிற்பவர் இந்த உயரியப் பண்பை கற்றுத் தந்த நீவீர் என்றும் நமது வாத்தியாரே!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3. யாரையா நீங்கள் எல்லாம்?
வெள்ளைத்தாமரை பெற்ற கார்வண்ணப் பொன்வண்டு, இன்று அவரின் 49 - ஆவது பிறந்த நாள். ஆம், 1961 ஆகஸ்ட் 4 -ஆம் தேதி ஹோனளுலுவில் பிறந்து, இந்தோனேசியக் கிராமத்திலே வளர்ந்து, சிறுவயதிலே பெற்ற தந்தையைப் பிரிந்து பாட்டியின் வளர்ப்பிலே வளர்ந்து, அமெரிக்காவிலே கல்வி பயின்று,
வெள்ளைத்தாய் பெற்ற கறுப்புக் குழந்தை வரலாற்றில் ஒரு அதிசயம் அரங்கேற காரணமான கதாநாயகன் அமெரிக்காவின் தலைமகன் ஒபாமா!
"இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்னருங் கொடுமனக்கூனி தோன்றினாள்"
என்றார் கம்பர் அப்படிப் பட்ட கொடுமையை ஒட்டு மொத்தமாக உருட்டி திரட்டி இன்று உலகை பத்து தலைக் கொண்டு இராவணனாய் அலைக்கழிக்கும் தீவிர வாத்தை ஒழிக்க வந்த நவீன அனுமன்,சொல்லிலும் செயலிலும் வல்லவர், என்பதை நான் சொல்லாமல் இந்த உலகம் உலகம் அறியும்.
அவர் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறிய விஷயம் என்னை ஒருகணம் அசரவைத்தது.
சுமார் ரூபாய் 23 கொடிகள் செலவில் முன்னாள் அமெரிக்க அதிபர் திரு, திருமதி கிளிண்டன் அவர்களின் மகள் செல்சியின் திருமணம் இனிதே நடைபெற்றது. ஆனால், அதிபர் ஒபாமா அழைக்கப் படவில்லை. திருமதி கிளிண்டன் அதிபர் ஒபாமாவின் வெளியுறவுத்துறை அமைச்சரும் கூட இருந்தும் அழைப்பில்லை.
நல்லவேளை இந்த நிகழ்வு வேறெங்கும் இல்லை, பத்திரிக்கைகளின் விருந்தாக... ஆளாளுக்கு உரித்து, திரித்து, பிரித்து மேய்ந்திருப்பார்கள்.
சரி விசயத்திற்கு வருவோம், அப்படி இருக்க ஒபாமா அவர்கள் அளித்தப் பேட்டியில், எனக்கு அழைப்பில்லை காரணம் கிளிண்டன் தம்பதிகள் அவர்களின் மகள் செல்சியின் திருமணத்தை அவருக்கும் அவரின் வருங்கால கணவருக்குமாக அர்ப்பணிக்க எண்ணியிருப்பார்கள் அதனால் என்னை அழைக்க வில்லை என்று சொல்லியதுதான், ஒருகணம் என்னை தூக்கி வாரி போட்டது... என்னே அவரது உயர்ந்த பார்வை, சிந்தனை, பெருந்தன்மை அதிலும் தன்னுடைய மதிப்பு, கெளரவம் இவைகளுக்கு அப்பாற் பட்ட சிந்தனை. இதை, இதை, இதைத் தான் நாம் மேலை நாட்டவர்களிடம் இருந்து விலகாமல் நம்மோடு ஒட்டிக் கொள்ளவேண்டும்.
“அது அவர்களுடைய மகளின் திருமணம் அப்படியே நடக்கவேண்டும், அதில், கதாநாயகியும்,கதாநாயகனும்; மகளும், மருமகனுமே அங்கு நாம் சென்றால் அது அந்த இளசுகளின் திருமண சந்தோசம் முழுவதும் அவர்களுக்கு அர்ப்பணம் ஆகாமல் போய்விடும், அதனால் அழைக்காததே சரி " என்பதாகவே அவரின் மொழி அமைந்திருந்தது.”
இந்த உயர்ந்த குணாளன் வாழ்க பல்லாண்டு...அதனால் தான் அவர் அமெரிக்காவின் அதிபர்!
"மாபெரும் சபைதனில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும்"
எங்கே கற்றார்கள், இவர்கள் இந்த உயரியப் பண்புகளை ?
"வெள்ளத்தனையது மலர் நீட்டம்"
சிறந்தப் பண்புகள் கொண்டோரின் புகழ் மிகுந்த வாழ்வுக்கு,
வானம் கூட எல்லை இல்லை. அவர்கள் உயர்வு அதையும் தாண்டி போகும் என்பது தான் உண்மை !
நன்றி !
அன்புடன்,
ஆலாசியம் கோவிந்தசாமி,
ஆகஸ்ட் 8 , 2010 .
சிங்கப்பூர்.
-------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வணக்கம் ஆசிரியரே.,
ReplyDeleteஉணர்ச்சி பெருக்கால் வந்த சுருதி பேதம்
அதை தவிர்த்தமைக்கு நன்றி.
எண்ணியது மட்டுமே பதிவேறியது... மிக்க நன்றி.
ஹாலாஸ்யம் நல்ல பத்திரிகையாளராக பரிமளிக்க வாய்ப்பு உள்ளது.
ReplyDelete3 நிகழ்வுகளையும் தெளிவாக அழுத்தமாகக் கூறியதற்காக வாழ்த்துக்கள்.
தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தால் இன்னும் சிற்ப்பாக
இருந்திருக்கும்
நன்றி , மிக அருமையான நடை அதுவும் எனக்கு பிடித்த தலைவர் பொன்மனசெம்மல் அவர்களின் அனுபவம். தலைப்பு பாட்டின் அர்த்தத்தின் பிரதிபலிப்பு தான் இந்த மூன்று பெரும்.
ReplyDeleteபுதுக்கோட்டை மன்னர் குடும்பத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இளைய ராஜா விஜயரகுநாதத் தொண்டைமானை எல்லோரும் 'சின்னத்துரை' என்றும், இவருக்கு அடுத்த பெரியவரை 'நடுத்துரை' என்றும் அழைப்பார்கள். மூத்தவர்தான் ராஜா ராஜகோபால தொண்டைமான். இவர் தனது சமஸ்தானத்தை டில்லி சென்று வல்லபாய் படேல் முன்னிலையில் இந்திய குடியரசோடு இணைத்துவிட்டு இனி நான் புதுக்கோட்டை எல்லைக்குள் நுழைய மாட்டேன் என்ற வைராக்கியத்தோடு திருச்சியில் ராஜா காலனி என வழங்கும் புதுக்கோட்டை தோட்ட இல்லத்திலேயே கடைசிவரை வாழ்ந்தார். நண்பர் ஆலாசியம் சின்னதுரை பற்றிய ஒரு சுவையான நிகழ்ச்சியைக் கூறியதற்கு நன்றி. சின்னதுரையிடம் தோற்ற தி.மு.க. வேட்பாளர் தியாகராஜ காடுவெட்டியார் என்பவரும் இவருடைய உறவினர் தான். அவரும் மிகச் சிறந்த பண்பாளர், கால்பந்து ஆட்டத்தில் மிகச் சிறந்தவர். அப்போது பாராளுமன்றத் தொகுதிக்கு எதிர்கட்சி சார்பில் போட்டியிட்டவர் சி.பி.எம்.கட்சியின் உமாநாத். இவரை புதுக்கோட்டை கிராமங்களுக்குள் அனுமதிக்க மக்கள் மறுத்துத் திருப்பி அனுப்பினர். ஒரு இடத்தில் அவருக்கு அடிபட்டு தலையில் காயம்கூட ஏற்பட்டது. ஆனால் சின்னதுரைக்கோ போகுமிடங்களிலெல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து ராஜ மரியாதையோடு வரவேற்ற நிகழ்ச்சி பசுமையாக என் நெஞ்சில் நிற்கிறது. நன்றி திரு ஆலாசியம். பழைய நினைவுகளை புதுப்பித்தமைக்காக!
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றிகள் கிருஷ்ணன் சார்.
ReplyDeleteஅதைப் போலவே என்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.
அது சுய புராணாம் ஆகாது வாசிப்பவர்களை அடைசி வரி வரை வாசிக்க செய்ய வேண்டும்...
ஆசிரியருக்கும், தங்களுக்கும், வகுப்பறை கண் வாசம் செய் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.
////Alasiam G said...
ReplyDeleteவணக்கம் ஆசிரியரே.,
உணர்ச்சி பெருக்கால் வந்த சுருதி பேதம்
அதை தவிர்த்தமைக்கு நன்றி.
எண்ணியது மட்டுமே பதிவேறியது... மிக்க நன்றி.//////
மற்ற மூன்றின் நடுவே அது நெருடலாக இருந்தது. அதனால்தான் அதை விட்டுவிட்டேன்! புரிந்து கொண்டமைக்கு நன்றி ஆலாசியம்!
///kmr.krishnan said...
ReplyDeleteஹாலாஸ்யம் நல்ல பத்திரிகையாளராக பரிமளிக்க வாய்ப்பு உள்ளது.
3 நிகழ்வுகளையும் தெளிவாக அழுத்தமாகக் கூறியதற்காக வாழ்த்துக்கள்.
தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தால் இன்னும் சிற்ப்பாக
இருந்திருக்கும்////
நீங்கள் ஒன்றை எழுதி அனுப்புங்கள் கிருஷ்ணன் சார்!
///CUMAR said...
ReplyDeleteநன்றி , மிக அருமையான நடை அதுவும் எனக்கு பிடித்த தலைவர் பொன்மனசெம்மல் அவர்களின் அனுபவம். தலைப்பு பாட்டின் அர்த்தத்தின் பிரதிபலிப்பு தான் இந்த மூன்று பெரும்.////
நன்றி நண்பரே!
/////Thanjavooraan said...
ReplyDeleteபுதுக்கோட்டை மன்னர் குடும்பத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இளைய ராஜா விஜயரகுநாதத் தொண்டைமானை எல்லோரும் 'சின்னத்துரை' என்றும், இவருக்கு அடுத்த பெரியவரை 'நடுத்துரை' என்றும் அழைப்பார்கள். மூத்தவர்தான் ராஜா ராஜகோபால தொண்டைமான். இவர் தனது சமஸ்தானத்தை டில்லி சென்று வல்லபாய் படேல் முன்னிலையில் இந்திய குடியரசோடு இணைத்துவிட்டு இனி நான் புதுக்கோட்டை எல்லைக்குள் நுழைய மாட்டேன் என்ற வைராக்கியத்தோடு திருச்சியில் ராஜா காலனி என வழங்கும் புதுக்கோட்டை தோட்ட இல்லத்திலேயே கடைசிவரை வாழ்ந்தார். நண்பர் ஆலாசியம் சின்னதுரை பற்றிய ஒரு சுவையான நிகழ்ச்சியைக் கூறியதற்கு நன்றி. சின்னதுரையிடம் தோற்ற தி.மு.க. வேட்பாளர் தியாகராஜ காடுவெட்டியார் என்பவரும் இவருடைய உறவினர் தான். அவரும் மிகச் சிறந்த பண்பாளர், கால்பந்து ஆட்டத்தில் மிகச் சிறந்தவர். அப்போது பாராளுமன்றத் தொகுதிக்கு எதிர்கட்சி சார்பில் போட்டியிட்டவர் சி.பி.எம்.கட்சியின் உமாநாத். இவரை புதுக்கோட்டை கிராமங்களுக்குள் அனுமதிக்க மக்கள் மறுத்துத் திருப்பி அனுப்பினர். ஒரு இடத்தில் அவருக்கு அடிபட்டு தலையில் காயம்கூட ஏற்பட்டது. ஆனால் சின்னதுரைக்கோ போகுமிடங்களிலெல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து ராஜ மரியாதையோடு வரவேற்ற நிகழ்ச்சி பசுமையாக என் நெஞ்சில் நிற்கிறது. நன்றி திரு ஆலாசியம். பழைய நினைவுகளை புதுப்பித்தமைக்காக!/////
புதுக்கோட்டையில், இன்றைக்கும் பிரம்மாண்டமான வளாகத்தில் இருக்கும் அரண்மனை அவர்கள் வாழ்ந்த பெருமையைச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. நன்றி அய்யா!
////Alasiam G said...
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றிகள் கிருஷ்ணன் சார்.
அதைப் போலவே என்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.
அது சுய புராணாம் ஆகாது வாசிப்பவர்களை அடைசி வரி வரை வாசிக்க செய்ய வேண்டும்...
ஆசிரியருக்கும், தங்களுக்கும், வகுப்பறை கண் வாசம் செய் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்./////
நல்லது. நன்றி ஆலாசியம்! சுயபுராணமாக இருந்தாலும் சுவாரசியமாக இருந்தால் வெளிடப்படும்!:-))))
இன்னொரு முக்கியமான, எங்கள் மன்னரின் பெருமையையும் இந்த நேரத்திலே உங்களின் அனுமதியோடும், பெருமையோடும் சொல்லிக் கொள்கிறேன். இந்திய சமஸ்தானங்கள் ஒருங்கிணைப்பின் போது அரண்மனை சொத்து, கஜானா இவைகளை சுத்தமாக துடைத்து எடுத்துக் கொண்டு போகாதவர்களில் இவர்களே இந்தியாவின் முதன்மையானவரும் முன்னிலைவகுப்பவரும் ஆகும். சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது, திருமதி சாருபாலா தொண்டைமான் அவர்களுமே மிகத்துளியமாக தங்களது சொத்து விவரங்களை கொடுத்திருந்தார்கள் என்பதும் உண்மை. நன்றி.
ReplyDelete\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ஒரு நாத்திகர், பெற்ற அன்னையை மட்டுமே தெய்வமாகவணங்குபவர்.////////////
ReplyDeleteபுரட்சித் தலைவர் நாத்திகர் என்பது இன்றுதான் எனக்குத் தெரியும்.புது செய்தி..அறியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.அறியக் கொடுத்த ஆலாசியம் சாருக்கு நன்றி..
\\\\\\\\\\\\\\\\\\\\ஒபாமா அவர்கள் அளித்தப் பேட்டியில், எனக்கு அழைப்பில்லை காரணம் கிளிண்டன் தம்பதிகள் அவர்களின் மகள் செல்சியின் திருமணத்தை அவருக்கும் அவரின் வருங்கால கணவருக்குமாக அர்ப்பணிக்க எண்ணியிருப்பார்கள் அதனால் என்னை அழைக்க வில்லை என்று சொல்லியதுதான்.////////////
ஒருவேளை ஒபாமா சென்றிருந்தால் மணமகனை விட முக்கியத்துவம் ஒபாமாவுக்கு என்றாகி விட்டிருக்கும் என்பது உண்மைதான்.அது மட்டுமே காரணமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை..வெளியில் சொல்லமுடியாத காரணங்கள் எவ்வளவோஇருக்கலாம்.
உண்மையில் என்ன காரணமோ அவர்களிருவருக்கும்தான் வெளிச்சம்..
நம்மூர் ஆட்கள் கல்யாண மேடையில் மைக் கிடைத்தால் பிடித்துக்கொண்டு நாங்கள் அதைச் செய்தோம்..இதைச் செய்தோம் என்று விழா மேடையை அரசியல் மேடையாக்குவது என்பது
போன்ற விஷயங்கள் அங்கிருக்காது என்று நினைக்கிறேன்..வெளிநாட்டு பெரிய தலைகளின் திருமண விழாக்களிலே கலந்து கொண்ட அனுபவம் இல்லை..வகுப்பில் யாருக்காவது இருந்தால் அறியத்தரலாம்..
மூன்றும் மூன்று முத்துக்கள் போன்று இருந்தது. ஓபாமா தேர்தலில் தன்னை தொற்கடித்ததை திருமதி கிளிண்டன் இன்னும் மறக்கவில்லை போலும்.
ReplyDeleteவணக்கம் ஐயா
ReplyDeleteஇந்த பதிவில் காணப்படும் மூன்று பெரிய தலையும் ஆரம்ப காலங்களில் வாழ்க்கை என்றால் என்ன? அதனின் இயற்கை தன்மை எப்படி இருக்கும் மேலும் ஆரம்பம் முதல்
கஷ்ட நஷ்டங்களை தனது சொந்த வாழ்க்கையில் அனுபவித்து வாழ்ந்தவர்கள் . ஒரு சிறு வேதனை என்றால் அது அடுத்தவரின் மனதை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதனை உணர்வுபூர்வமாக கண்டவர்கள் இன்னும் சொல்ல போனால் அவர்களுக்கு இயற்கையிலே கிடைத்த மிகப்பெரிய பெருந்தன்மையான குணநலன்கள் என்றால் அது மிகையாகாது .
Thanks Alasiam for your wonderful post.
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteவகுப்பறையின் வார மலர் -பகுதி 3-ன் மூலமாக
அன்னை இந்திரா காந்தி,பெருந்தலைவர் காமராஜர்,
அறிஞர் அண்ணா- மற்றும் பொன்மனசெம்மல்
எம்.ஜி. இராமச்சந்திரன் ,வாரியார் சாமிகள்
ஆகியோரின் படங்களை, நீண்ட நாட்களுக்குப் பிறகு
பார்க்கும் வாய்ப்புடன்,முன்னாள் தமிழக முதல்வர்களின்
பெருந்தன்மையையும்,செயல்களை எப்படிக் கையாளவேண்டும் என்ற
முறையையும் காண முடிந்தது.
தற்போதைய அமெரிக்காவின் அதிபர் ஒபாமா அவர்கள்
திறமையாக அளித்தப் பெருந்தன்மையுடைய
பேட்டியினையும் தெரிந்துக்கொள்ள முடிந்தது.
நீங்காத நினைவுகள் பகுதியினை அளித்த ஆலாசியம் அவர்களுக்கும்,
வாத்தியார் அவர்களுக்கும் மிக்க நன்றி.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010 08 08
அருமையான பதிவு, மிகவும் நனறி.
ReplyDeleteசார் வணக்கம்,
ReplyDeleteரொம்ப சந்தோஷமாயிருக்கிறது காரணம் 7 நாளும் வகுப்பு இன்றைய பதிவு நன்றாகயிருந்தது.நம்பகிருஷ்ணன் சகோதரர் ரொம்ப பாவம்.அவ்ருக்கு ஒரே பெஞ்ச்ல்ல வேலை செய்தது ரொம்ப மன்க்குறை. அவ்ர் எழத மாட்டார். ரொம்ப நன்றி சார்
சுந்தரி
/////Alasiam G said...
ReplyDeleteஇன்னொரு முக்கியமான, எங்கள் மன்னரின் பெருமையையும் இந்த நேரத்திலே உங்களின் அனுமதியோடும், பெருமையோடும் சொல்லிக் கொள்கிறேன். இந்திய சமஸ்தானங்கள் ஒருங்கிணைப்பின் போது அரண்மனை சொத்து, கஜானா இவைகளை சுத்தமாக துடைத்து எடுத்துக் கொண்டு போகாதவர்களில் இவர்களே இந்தியாவின் முதன்மையானவரும் முன்னிலைவகுப்பவரும் ஆகும். சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது, திருமதி சாருபாலா தொண்டைமான் அவர்களுமே மிகத்துளியமாக தங்களது சொத்து விவரங்களை கொடுத்திருந்தார்கள் என்பதும் உண்மை. நன்றி.//////
அதுதான் மேன்மக்களின் தன்மை ஆலாசியம். இல்லாவிட்டால், அவர்கள் எப்படி மேன்மக்களாக இருக்க முடியும்? மக்களின் மனதில்தான் எப்படி இருக்க முடியும்?
/////minorwall said...
ReplyDelete\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ஒரு நாத்திகர், பெற்ற அன்னையை மட்டுமே தெய்வமாகவணங்குபவர்.////////////
புரட்சித் தலைவர் நாத்திகர் என்பது இன்றுதான் எனக்குத் தெரியும்.புது செய்தி..அறியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.அறியக் கொடுத்த ஆலாசியம் சாருக்கு நன்றி..
\\\\\\\\\\\\\\\\\\\\
தனிக் கட்சியைத் துவங்கும் வரை நாத்திகராகத்தான் காட்சியளித்தார். பிறகு ஆதீத இறை பக்தரானார். கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். இதை அனைவரும் அறிவார்கள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒபாமா அவர்கள் அளித்தப் பேட்டியில், எனக்கு அழைப்பில்லை காரணம் கிளிண்டன் தம்பதிகள் அவர்களின் மகள் செல்சியின் திருமணத்தை அவருக்கும் அவரின் வருங்கால கணவருக்குமாக அர்ப்பணிக்க எண்ணியிருப்பார்கள் அதனால் என்னை அழைக்க வில்லை என்று சொல்லியதுதான்.////////////
ஒருவேளை ஒபாமா சென்றிருந்தால் மணமகனை விட முக்கியத்துவம் ஒபாமாவுக்கு என்றாகி விட்டிருக்கும் என்பது உண்மைதான்.அது மட்டுமே காரணமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை..வெளியில் சொல்லமுடியாத காரணங்கள் எவ்வளவோஇருக்கலாம்.
உண்மையில் என்ன காரணமோ அவர்களிருவருக்கும்தான் வெளிச்சம்..
நம்மூர் ஆட்கள் கல்யாண மேடையில் மைக் கிடைத்தால் பிடித்துக்கொண்டு நாங்கள் அதைச் செய்தோம்..இதைச் செய்தோம் என்று விழா மேடையை அரசியல் மேடையாக்குவது என்பது
போன்ற விஷயங்கள் அங்கிருக்காது என்று நினைக்கிறேன்..வெளிநாட்டு பெரிய தலைகளின் திருமண விழாக்களிலே கலந்து கொண்ட அனுபவம் இல்லை..வகுப்பில் யாருக்காவது இருந்தால் அறியத்தரலாம்../////
வெள்நாட்டுத் தலைவர்களின் விழாக்கள் எனும்போது, எனக்கு அந்த அனுபவம் எல்லாம் இல்லை மைனர்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////ananth said...
ReplyDeleteமூன்றும் மூன்று முத்துக்கள் போன்று இருந்தது. ஓபாமா தேர்தலில் தன்னைத் தோற்கடித்ததை திருமதி கிளிண்டன் இன்னும் மறக்கவில்லை போலும்./////
இருக்கலாம்:-)))))
/////kannan said...
ReplyDeleteவணக்கம் ஐயா
இந்த பதிவில் காணப்படும் மூன்று பெரிய தலையும் ஆரம்ப காலங்களில் வாழ்க்கை என்றால் என்ன? அதனின் இயற்கை தன்மை எப்படி இருக்கும் மேலும் ஆரம்பம் முதல் கஷ்ட நஷ்டங்களை தனது சொந்த வாழ்க்கையில் அனுபவித்து வாழ்ந்தவர்கள் . ஒரு சிறு வேதனை என்றால் அது அடுத்தவரின் மனதை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதனை உணர்வுபூர்வமாக கண்டவர்கள் இன்னும் சொல்ல போனால் அவர்களுக்கு இயற்கையிலே கிடைத்த மிகப்பெரிய பெருந்தன்மையான குணநலன்கள் என்றால் அது மிகையாகாது///////
உண்மைதான். நன்றி கண்ணன்!
////PAL said...
ReplyDeleteThanks Alasiam for your wonderful post./////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
வகுப்பறையின் வார மலர் -பகுதி 3-ன் மூலமாக
அன்னை இந்திரா காந்தி,பெருந்தலைவர் காமராஜர்,
அறிஞர் அண்ணா- மற்றும் பொன்மனசெம்மல்
எம்.ஜி. இராமச்சந்திரன் ,வாரியார் சாமிகள்
ஆகியோரின் படங்களை, நீண்ட நாட்களுக்குப் பிறகு
பார்க்கும் வாய்ப்புடன்,முன்னாள் தமிழக முதல்வர்களின்
பெருந்தன்மையையும்,செயல்களை எப்படிக் கையாளவேண்டும் என்ற
முறையையும் காண முடிந்தது.
தற்போதைய அமெரிக்காவின் அதிபர் ஒபாமா அவர்கள்
திறமையாக அளித்தப் பெருந்தன்மையுடைய
பேட்டியினையும் தெரிந்துக்கொள்ள முடிந்தது.
நீங்காத நினைவுகள் பகுதியினை அளித்த ஆலாசியம் அவர்களுக்கும்,
வாத்தியார் அவர்களுக்கும் மிக்க நன்றி.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
நல்லது நன்றி தட்சணாமூர்த்தி!
////vprasanakumar said...
ReplyDeleteஅருமையான பதிவு, மிகவும் நனறி.////
நல்லது. நன்றி நண்பரே!
////sundari said...
ReplyDeleteசார் வணக்கம்,
ரொம்ப சந்தோஷமாயிருக்கிறது காரணம் 7 நாளும் வகுப்பு இன்றைய பதிவு நன்றாகயிருந்தது.நம்பகிருஷ்ணன் சகோதரர் ரொம்ப பாவம்.அவ்ருக்கு ஒரே பெஞ்ச்ல்ல வேலை செய்தது ரொம்ப மனக்குறை. அவர் எழத மாட்டார். ரொம்ப நன்றி சார்
சுந்தரி//////
அவர் எழுதமாட்டாரா? இல்லை, வாத்தியாரின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து எழுதுவார்! பொறுத்திருங்கள் சகோதரி!
அற்புதமான புகைபடங்கள்
ReplyDeleteநன்றி
////INDIA 2121 said...
ReplyDeleteஅற்புதமான புகைபடங்கள்
நன்றி/////
கூகுள் ஆண்டவர் உபயம்!