மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.7.11

அங்கேயும் ஒரு சூப்பர் ஸ்டார்!

----------------------------------------------------------------------------------------
அங்கேயும் ஒரு சூப்பர் ஸ்டார்!

வாரமலர்

இலண்டன் மாநகரில் உள்ள இடங்களைப்பற்றி எழுதுவது ஒன்றும் புதுமையில்லை.ஏனெனில் பலரும் எற்கனவே எழுதிய செய்திதான் அது. அல்ல‌து 'இலண்டன் டூர்' என்று யார் வேண்டுமானாலும் கூகுள் ஆண்டவரைக் கேட்டால் எல்லா இடங்களையும் பற்றி அழகிய படங்களுடன் முழு விவரமும் கொடுப்பார். அதனால் அந்த முயற்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்.

ஆனால் கண்டதும் கேட்டதும் படித்ததும் ஆகிய செய்திகளைச் சொன்னால்சுவையாகவும் இருக்கும், பயனுள்ளதாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனவே என் ஆக்கத்தை அப்படி அமைத்துக் கொள்கிறேன்.

சென்னை மாந‌க‌ர் வாசிக‌ளுக்கு 'மாம்ப‌ல‌ம் ட‌ய‌ம்ஸ், அண்ணாநகர் ட‌யம்ஸ்'போன்ற இலவச வாரப் பத்திரிகைகள் அறிமுகமுண்டு.
நிறைய விளம்பரங்களும்,கொஞ்சம் உள்ளூர்,பேட்டை செய்திகளும் 
இருக்கும். இப்போது 'அண்ணாநகர் டயம்ஸி'ல் பிரபல எழுத்தாளர்
திருவாள‌ர் ரா.கி ரெங்க‌ராஜ‌ன் எழுதி வ‌ருகிறார் என்ப‌து உங்க‌‌ளுக்கு
ஓர் உப‌ரிச் செய்தி.

மேற்சொன்ன‌ இல‌வ‌சப் ப‌த்திரிகைக‌ள் போல‌வே இங்கே இல‌ண்ட‌ன் மாந‌க‌ரிலும் அந்த‌அந்த‌ப் ப‌குதிக்கான‌ ப‌த்திரிகைக‌ள் உண்டு. வியாழ‌ன்
தோறும் வீட்டில் இல‌வ‌ச‌மாக‌ வ‌ந்து விழுகின்ற‌து.அதுவே விலை
கொடுத்து வாங்கினால் அரைப்ப‌வுண்டு கொடுக்க‌ வேண்டும்.அதாவ‌து
ந‌ம்மூர் ரூ 38/= ஆகும்.

அந்த‌ப் ப‌த்திரிகையில் வ‌ந்த‌ சுவையான‌ சில‌ செய்திக‌ளை உங்க‌‌ள் முன் வைக்கிறேன்.

முத‌லில் என் க‌ண்ணையும் க‌ருத்தையும் க‌வ‌ர்ந்த‌து இந்த‌த் த‌லைப்புத்தான்:

"HAPPY ENDING FOR SUPERSTAR"

இந்த‌ச்செய்தி வ‌ந்த‌போது சூப்ப‌ர் ஸ்டார் சிங்க‌‌ப்பூரில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிவ‌ர‌ தேதி வெளியாகி இருந்த‌து.ச‌ரி ந‌ம்ம‌ ர‌ஜினி இங்கேயும் பிர‌ப‌ல‌மா என்று ஆர்வ‌த்துட‌ன் வாசித்தேன்.அந்த‌ செய்தியில் குறிப்பிட்ட‌து ஒரு குதிரை. அத‌ன் பெய‌ர் சூப்ப‌ர் ஸ்டார்! இங்குள்ள‌ ஒரு குதிரைப் ப‌ண்ணையில் குதிரைக‌ளுக்கு க‌ண்டுபிடிக்க‌ முடியாத‌ ஒரு தொற்று நோய் வ‌ந்து ப‌ல‌ குதிரைக‌ள் மாண்ட‌ன‌.உயிருட‌ன் இருந்த‌ குதிரைக‌ளை இங்குள்ள‌ மிருக‌ வ‌தைத் த‌டுப்புச் ச‌ங்க‌த்தின‌ர் மீட்டு, இட‌ம் மாற்றி அவைக‌ளுக்கு உண‌வும் சிகிச்சையும் அளித்து ந‌ல்ல‌ ஆரோக்கிய‌த்திற்குத் திருப்பிவிட்ட‌ன‌ர்.

அப்ப‌டி உயிர் பிழைத்த‌ குதிரைக‌ளில் சூப்ப‌ர் ஸ்டாரை மாற்றுத் திற‌னாளிக் குழ‌ந்தைக‌ளுக்கான‌ ப‌ள்ளியில் சேர்ப்பித்த‌ன‌ர். அங்கே சூப்ப‌ர் ஸ்டார் குழ‌ந்தைக‌ளின் நிலையைப் புரிந்து கொண்டு, அவ‌ர்க‌ளைத் த‌ன் மீது சும‌க்கும் போது த‌ள்ளிவிடாம‌ல் பாதுகாப்பாக‌ ந‌ட‌ந்து கொள்கிற‌தாம். அத‌னால் குழ‌ந்தைக‌ளுக்கு சூப்ப‌ர் ஸ்டார் மிக‌வும் பிடித்துப்போய் அந்த‌ப் ப‌ள்ளியின் 'பெட்' ஆகி விட்ட‌து. இப்போது அத‌ன் வாழ்க்கை ம‌கிழ்ச்சியுள்ளதாக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌வும் ஆகிவிட்ட‌து.அதைத்தா‌ன் சூப்ப‌ர் ஸ்டாருக்கு ஏற்ப‌ட்ட‌ ம‌கிழ்ச்சி'என்று விரிவான‌ செய்தி ஆக்கியிருந்த‌ன‌ர்.‌

எப்ப‌டியோ இர‌ண்டு சூப்ப‌ர் ஸ்டா‌ர்க‌ளும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌கிழ‌ச் செய்கிறார்க‌ள்.அந்த‌ ஒற்றுமை ஒன்று போதாதா?
 -------------------------------------------------------------------------------------------------
இரண்டாவதாக என் கவனத்தைக் கவர்ந்தது இர‌ண்டு சின்னத் திருட்டுக்கள்.

முதல் திருட்டு ஒரு சைக்கிள். அதனை தொலைத்த‌வருடைய வேண்டுகோள் நெஞ்சைத்தொட்டது.

"நான் அந்த சைக்கிளை வாங்கி இரண்டு நாள் தான் ஆகிறது.500 பவுண்டு செலவு செய்துள்ளேன்.மேல் உபகரணங்களுக்கு  மேலும் 100 பவுண்டு செலவு செய்துள்ளேன்.நான் ஒரு கட்டிட வேலை செய்யும் தொழிலாளி. என்னிடம் கார் இல்லை.நான் வேலைக்குச்செல்ல இந்த சைக்கிளையே நம்பியுள்ளேன்.அந்த சைக்கிள் நான் மிகவும் சிரப்பட்டு சேமித்த தொகையில் வாங்கியது. இனி சுலபமாகவும், சரியான நேரத்திற்கும் வேலைக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.அந்த 'பைக்'கில்தான் என் வாழ்க்கையே அடங்கியுள்ளது.

அந்த சைக்கிள் எனக்கு இன்னொரு காரணத்திற்காகவும் தேவைப்படுகிறது. நானும் என் மனைவியும் பிரிந்து வாழ்கிறோம். என் குழந்தைகள் என் மனைவியின் வீட்டில் உள்ளனர். நான் வாரக் கடைசியில் சென்று காணவும், அவர்களை வெளியில் அழைத்துச் சென்று ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கித்தரவும் பூங்காவிற்கு அழைத்துச் செல்லவும் அந்த சைக்கிள் எனக்கு மிகவும் தேவையாக உள்ளது. எனவே விளையாட்டுக்காக யாராவது எடுத்துச் சென்று இருந்தால் என் முகவரியில் கொண்டு வைத்துவிடக் கோருகிறேன். அப்படிச் செய்தால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்."

பெயர் முகவரியும் கொடுத்துள்ளார்.அவர் குழந்தைகள் பற்றி எழுதியுள்ளது மனதை மிகவும் தொட்டது. 

இன்னொரு திருட்டு கொஞ்சம் வேடிக்கை ஆனது.திருட்டுப்போன பொருள் 'சோளக்கொல்லை பொம்மை'!ஆம்! காக்காய், குருவி விரட்ட வைக்கும் பொம்மைதான். ஒரு தாயும் மகளும் தோட்டம் போட ஆசைப்பட்டனர். தாங்க‌ள் போட்ட விதைகளை பறவைகள் கொத்திவிடலாம் என்று எதிர்பார்த்து, தோட்டக்கலை அலுவலகத்தில் இருந்து 20 பவுண்டுக்கு ஒரு காகம் விரட்டும் பொம்மையை வாங்கிவந்து தோட்டத்தில் மாட்டி வைத்தனர்.ஒரு நாள் இரவு பொம்மையைக் காணவில்லை.அந்தத் தாயும் மகளும் அக்கம்பக்கம் எல்லாம்விசாரித்தனர். நாயைப் பிடித்துக்கொண்டு நடைப்பயணம் செய்யும் தாத்தா ஒருவர் ஒரு தடயம் சொன்னார்.

"உங்கள் பொம்மைக்கு நீலக் கலர் ஜீன்ஸ் அணிவித்து இருந்தீர்களா?"

"ஆமாம்!"

"ஒரு நீல‌க் க‌ல‌ர் ஜீன்ஸ் இங்கிருந்து மூன்று பேருந்து நிலைய‌ம் த‌ள்ளி ஒரு ம‌ர‌த்தில் தொங்கிக் கொண்டு இருக்கிற‌து."

"அப்ப‌டியா?ந‌ன்றி!"

தாயும் ம‌க‌ளும் விரைந்து சென்று பார்த்த‌ன‌ர். பொம்மையைத் திருடிய‌வ‌ர்க‌ள் குடி ஜோரில் பொம்மையை உதைத்து விளையாடி இருக்க‌லாம் என்று ஊகித்த‌ன‌ர். இந்த‌ செய்தியை காவ‌ல்துறைக்குத்தெரிவித்த‌ன‌ர்.ப‌த்திரிகைக்கும் கொடுத்த‌ன‌ர்.

"அற்பப் பொருள்தானே என்று அல‌ட்சிய‌ம் காட்ட‌ வேண்டாம்.இதை‌ நீங்க‌ள் க‌ண்‌டு பிடிக்காவிட்டால் யார் வேண்டுமானாலும் யார் வீட்டுக்குள்ளும் வ‌ந்து எதை வேண்டுமானாலும் தூக்கிச் செல்லாலாம் என்ற‌ துளிர் விட்டுவிடும் .என‌வே க‌வ‌ன‌த்துட‌ன் அந்த‌த் த‌றுத‌லைக‌ளைக்க‌ண்டு பிடித்து த‌ண்டிக்க‌ வேண்டுகிறேன்"‌ என்று புகார் கொடுத்துள்ளார்.ப‌த்திரிகை இத‌ற்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து பிர‌சுர‌ம் செய்துள்ள‌து.

எப்ப‌டி இருக்கிற‌து? ந‌ம்மூரில் இது ந‌ட‌க்குமா?
 ------------------------------------------------------------------------------------------------------
நம்மூரைப் போலவே பள்ளிகளில் இலவச உணவளிக்கும் திட்டம் இங்கு உள்ளது.எப்போதும் 25 சதவிகித குழந்தைகளும்,இளைஞர்களும் இந்த உணவினைப்பெற இருக்க வேண்டிய பொருளாதார அளவுகோல்களுக்கு மிக அருகாமையில் உள்ளனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.ஆனால் நாம் இந்த இலவசத்தைப் பெறத் த‌குதி உள்ளவர்தானா என்பதை பள்ளியில் வந்து நேரில் அறிந்து கொள்வதில் பெற்றோர், அல்லது  தனித்த தாய், தந்தைக்கு ஏதோ மனத்தடை இருப்பதை அரசு கவனித்து உள்ளது. எனவே இப்போது அந்த மன உறுத்தலைப் போக்கும் வண்ணம் ஒரு மாற்று ஏற்பாட்டை அரசு அறிவித்து உள்ளது. இந்தப் புதிய முறைப்படி, தங்கள் விசாரணையை பள்ளிக்கு நேரில் வந்து செய்து கொள்ள‌ வேண்டியது இல்லை.மாற்றாகத் தொலைபேசி மூலமோ அல்லது வலைதளம் மூலமோ தங்கள் பிள்ளைக்கு இலவச உணவு பள்ளியில் கிடைக்க ஏற்பாடு செய்துகொள்ளலாம். நேரில் வருவதால் ஏற்படும் 'அவமான'உணர்வைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

இதனை நம்மூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.

தொழுநோய் கண்டுபிடிப்புத் துறைக்கு யாரோ தலைமைச் செயலகத்தில் அமர்ந்து உள்ள அதிகாரி சுற்றறிக்கை அனுப்பினார்.அதாவது பள்ளிப் பிள்ளைகளுக்குத் தொழுநோய் உள்ளதா என்று சோதிக்க உத்தரவு ஆயிற்று.அதனை ஏற்று ஒரு பள்ளிக்கு வந்தனர் அக்குழுவினர். ஒரு சில பிள்ளைகளுக்கு தேமல் இருந்தது. அவர்கள் எல்லாம் தொழுநோய் வரச் சாத்தியமானவர்கள் என்று தீர்மானித்து அவர்களுக்கு மாத்திரை கொடுக்க ஏற்பாடாயிற்று. இந்த மாத்திரையை எல்லாப் பிள்ளைகளும் பார்க்க அந்தப் பிள்ளைகளுக்கு வாயில் போடப்பட்டு தண்ணீரும் ஊற்றப்பட்டது. என்ன எதிர் விளைவு என்று சொல்லவும் வேண்டுமா? அந்தப் பிள்ளைகள் பள்ளியில் தனிமைப் படுத்தப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாயினர்.

நுண் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது என்பது நம் சமூகத்தில் குறைவுதான்.
(இன்னும் வரும்)

வாழ்க வளமுடன்!

கே. முத்துராமகிருஷ்ணன்,லால்குடி
முகாம்:இலண்டன் மாநகர்

----------------------------------------------------------------------

28.7.11

How to sleep in comfort and security?

How to sleep in comfort and security?

Cheap sleep in case of emergency for anyone rich or poor!! No time wasted looking for a hotel Designed to be installed at train stations and airports, and central public places or cities where accommodation is fully booked.
In tropical climate countries the sleeper box can be installed outdoors in main streets..
The space includes bed, linen, ventilation system, alarm. LCD TV, WiFi , space for your laptop and rechargeable phone. Under your bed and floor there is a cupboard for your luggage.
Payment is made at terminals who will give clients an electronic key that can be purchased for 15 minutes or for as many hours as you need
Size: 2 m x 1,40m x 2,30m  to sleep in comfort and security.
Received through email. Thanks to the person who send it
----------------------------------------------------------------------------------------
தொல்லையில்லாமல் தூங்குவது எப்படி?

இந்த மின்னியல் உலகத்தில் எதற்குத்தான் வழியில்லை? தொல்லையில்லாமல் தூங்குவதற்கும் வழி செய்து விட்டார்கள்.

மின்னஞ்சலில் வந்தது. உறித்து உப்புப் போடாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------------

 1

 2

 3

 4

 5

 6

 7

 8

 9

 10

 11

 12
----------------------------------------------------------------------------------------
எப்படியிருக்கிறது சாமிகளா?
----------------------------------------------------------------------------------------
இறுதித் தேர்வு முடிந்து விட்டது. அடுத்து என்ன நடக்கும்?
ஸ்க்ரோல் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V

============================================================
வாழ்க வளமுடன்!

27.7.11

Astrology பொய்யிலே பிறந்தவரும் மெய்யிலே பிறந்தவரும்!

----------------------------------------------------------------------------------------
Astrology பொய்யிலே பிறந்தவரும் மெய்யிலே பிறந்தவரும்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதி, மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த நல்ல பாடல் ஒன்று   ‘ஆனந்தஜோதி’ என்னும் திரைப்படத்தில் வரும். ஆண்டு 1963.

அந்தப் பாடலின் பல்லவி இப்படித்துவங்கும்:

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே


அது நாயகி பாடும் வரிகள். பதிலுக்கு நாயகன் இப்படிப் பாடுவான்

பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே


இந்தப் பாடலை, சற்று மாற்றிப் பாடினால், அது சனீஷ்வரனுக்குப் பொருத்தமாக இருக்கும்.

மெய்யிலே பிறந்து மெய்யிலே வளர்ந்த மேன்மை கொண்ட பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டார் உண்மை தெரிந்து கொண்டார் இந்தப் பூமியோர் பெருமானே!


ஆமாம். சனீஷ்வரன் கர்மகாரகன். அவன் யாரையும் வீணாகத் துன்புறுத்துவதில்லை. அவரவர் கர்மவினைப் படியே பலன்களையே அவன் அளிப்பான். அதைப் புரிந்துகொண்டால், நாம் சலனமின்றி இருக்கலாம். சங்கடமின்றி வாழ்க்கையை ஒட்டலாம். (அட்லீஸ்ட் அவனுடைய தசா புத்திக் காலங்களில்!)
---------------------------------------------------------------------------------------------------------
சென்ற பாடத்தில் சந்திர மகா திசையில் குரு புத்திக்கான பலன்களைப் பார்த்தோம். திசை புத்தி வரிசைகளில் குருவிற்கு அடுத்ததாக வரிசையில் காத்துக்கொண்டிருப்பவர் சனி பகவான். இன்று சந்திர மகா திசையில் சனி புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.

அது நடைபெறும் காலம் 19 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டு 7 மாதங்கள்.

ஒருவர் சுபக்கிரகம். இன்னொருவர் தீய கிரகம். ஆகவே பலன்கள் நன்மையுடையதாக இருக்காது. இறைவழிபாடு ஒன்று மட்டுமே இந்தக் காலகட்டத்தைக் கடக்க உதவும்!

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

பாரப்பா சந்திரதிசை சனியன்புத்தி
    பகர்ந்தநாள் மாதமது பத்தொன்பதாகும்
நேரப்பா அதனுடைய பலத்தைச் சொல்வோம்
    நேரிழையாள் மரணமதாம் நெஞ்சுதனில் நோவாம்
காரப்பா கனகமது சிலவேயாகும்
    கள்ளரால் சோரர்பயம் துக்கமுண்டாம்
சாரப்பா சத்துருவால் இடஞ்சலுண்டாம்
    சஞ்சலங்க ளுண்டாம் தவமேபாழாம்!


பதிலுக்கு சனி மகாதிசை சந்திர புத்தியாவது நன்மை உடையதாக இருக்கும் என்று பார்த்தால் - இருக்காது. அதுவும் பல பிரச்சினைகளை உடையதாகவே இருக்கும். அது நடைபெறும் காலமும் 19 மாதங்களே அதாவது ஒரு ஆண்டு 7 மாதங்கள். இறைவழிபாடு ஒன்று மட்டுமே இந்தக் காலகட்டத்தைக் கடக்க உதவும்!

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

காணவே காரிதிசை சந்திரபுத்தி
    கனமில்லா மாதமது பத்தொன்பதாகும்
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
    தோகையருஞ் சண்டையதால் துன்பம்வருங்கேடு
பூணவே பூமிமுதல் பூணாரங்கள்
    புகன்றதொரு தனமுதல் சேதமாகும்
ஆணவே அலைச்சலது உண்டாகும்பாரு
    அளவில்லா பேயதுவுங்கூடிக்கொல்லும்


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
27.7.2011


=======================================================
வாழ்க வளமுடன்!

26.7.11

சாகாது கம்பனவன் பாட்டு - அது - தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு!

------------------------------------------------------------------
சாகாது கம்பனவன் பாட்டு - அது - தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு!

இலக்கியச் சோலை!

இன்றைய இலக்கியச் சோலையை அலங்கரிக்கின்றது கவியரசர் கண்ணதாசனின் பாட்டு.
காவடிச் சிந்தில் எழுதிய பாட்டு; மனதைப் புரட்டிவிடும் போட்டு!

என்னவொரு சந்தம், எதுகை, மோனை  துள்ள வைக்கும் பாட்டு
மனிதர் அச்த்தியிருக்கிறார். படித்து மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------

தலைப்பு: கம்ப சூத்திரம்
எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்

------------------------------------------------------------
பத்தாயிரம் கவிதை
முத்தாக அள்ளிவைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்
வித்தாக வில்லையென்று பாடு!

சீதை நடையழகும்
ஸ்ரீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப்
போட்டான் மதுக்குடத்தில் அள்ளி!

அண்ணனொடு தம்பியர்கள்
நாலாகி ஐந்தாகி
ஆறேழு ஆனவிதம் கூறி - எனை
ஆளுகிறான் மூளைதனில் ஏறி!

தென்னிலங்கைச் சோலையிலே
சீதை அனுமனிடம்
சொன்னதொரு வாசகத்தைப் பார்த்து - நான்
துள்ளிவிட்டேன் மெனியெல்லாம் வேர்த்து!

கள்ளிருக்கும் கூந்தலினாள்
உள்ளிருப்பாள் என்று சொல்லி
பள்ளமிடும் ராகவனின் அம்பு - அது
பாட்டல்ல உண்மையென்று நம்பு!

காலமெனும் ஆழியிலும்
காற்றுமழை ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு - அது
தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு!

கம்பனெனும் மாநதியில்
கால்நதிபோல் ஆவதென
நம்புகிறேன் பாட்டெழுதும் நானே - அந்த
நாயகன்தான் என்ன நினைப்பானோ?
------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

25.7.11

Astrology உலகம் பிறந்தது யாருக்காக?

-------------------------------------------------------------------------------------------
Astrology உலகம் பிறந்தது யாருக்காக?

வில்லியம் ஷேக்ஸ்பியர் (1564 - 1616), ஜான் கீட்ஸ் (1795 - 1821) சாமுவேல் ஜான்சன் (1709 - 1784) லார்ட் பைரன் (1788 - 1824) வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (1770 - 1850) ஜான் மில்டன் (1608 - 1674)  என்று எண்ணெற்ற  ஆங்கிலக் கவிராயர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வராத சிந்தனை நம் கவியரசர்  கண்ணதாசனுக்கு வந்தது. அவர்கள் ஆங்கில மொழியில் எழுதியதால் அவர்களும் உலகப் புகழ் பெற்றார்கள். அவர்களுடைய கவிதைகளும், பாடல்களும் உலகப் புகழ்பெற்றன.

ஆனால் கவியரசர் ஒரு பிரதேச மொழியில் எழுதியதால், அவருடைய பாடல்கள், சிந்தனைகள் உலக மக்களைச் சென்றடையவில்லை.

ஆனாலும் நம்மைப் பெருமைப் படுத்தியுள்ளன. நம்மை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றன. அதுபோதும்  நமக்கு!!!

    “உலகம் பிறந்தது எனக்காக
       ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக
       அன்னை மடியைவிரித்தாள் எனக்காக”


என்று அற்புதமாக, ஒரு மனித மனநிலையின் உச்சகட்ட
வெளிப்பாட்டை எடுத்துக்கூரும் விதமாகக் கவியரசர் எழுதினார்.
படம் பாசம் (1961) இதைவிட வேறு என்ன நிலை வேண்டும்?
‘உலகம் பிறந்தது எனக்காக’ என்னும்  ஒரு வரியில் எல்லாம் அடங்கிவிட்டது.  இந்த சிந்தனை அவருக்கு மட்டுமே உரித்தானது.
வேறு எந்தக் கவிஞனுக்கும் வந்ததாகத் தெரியவில்லை!

அத்தோடு விட்டாரா? சரணத்திலும் கலக்கலாக எழுதியிருப்பார்.

    தவழும் நிலவாம் தங்கரதம்
       தாரகை பதித்த மணிமகுடம்
    குயில்கள் பாடும் கலைக்கூடம்
       கொண்டது எனது அரசாங்கம்


இப்படியொரு மனநிலைமை நமக்கு ஏற்படுமா? கற்பனையில் அல்ல - நிஜத்தில் ஏற்படுமா?

ஏற்படும்! அதற்கான தசாபுத்தி நடைபெறும் காலங்களில் அப்படி ஏற்படும். அதைப் பற்றிய பாடம்தான்  இன்றையப் பாடம். படித்து மகிழுங்கள். மனதிலும் வைத்துக்கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------------------------------
சென்ற பாடத்தில் சந்திர மகா திசையில் ராகு புத்திக்கான பலன்களைப் பார்த்தோம். திசை புத்தி வரிசைகளில்  ராகுவிற்கு அடுத்ததாக
வரிசையில் காத்துக்கொண்டிருப்பவர் குரு பகவான். இன்று
சந்திர மகா திசையில் குரு/வியாழ புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.

அது நடைபெறும் காலம் 16 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டு 4 மாதங்கள்.

இருவருமே சுபக்கிரகங்கள். மிகவும் நன்மையான பலன்கள் நடைபெறும் காலம். மகிழ்ச்சி மேலோங்கி நிற்கும். பிறகென்ன? “உலகம் பிறந்தது எனக்காக ” என்று மகிழ்ச்சியோடு அக்காலத்தை எதிர்கொள்ளுங்கள்

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம்  தரவில்லை!

தேறவே சந்திரதிசை வியாழபுத்தி
    தீங்கில்லா மாதமது பதினாறாகும்
கூறவேயிருந்த அதன்பலன் தன்னைக்கேளு
    குணமுடைய மாதர்களும் சோபனமேயுண்டாம்
சேரவே செட்டுடனே லாபமுண்டாம்
    சென்னெல்முதல் விளைவாகுஞ் செல்வம் சேரும்
வீரவே வியாதியது நிவர்த்தியாகும்
    வீரான மணியமுடன் வினையகலும்பாரே!


அடுத்து வியாழ திசையில் சந்திர புத்திக்கான பலன்கள் (அதுவும் 16 மாத காலமே) புத்திநாதன் சந்திரன்  சுபக்கிரகம். போட்டி போட்டுக்கொண்டு குருவிற்கு இணையானதொரு பலன்களை அவரும் வாரி வழங்குவார்.

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம்  தரவில்லை!

காணவே வியாழதிசை சந்திரபுத்தி
    கனமுள்ள மாதமது பதினாறாகும்
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
    சுகமுடைய கலியாணம் சோபனங்களுண்டாம்
பேணவே சிவிகைமுத்து வெண்குடையுமுண்டாம்
    பெரிதான ராசாவால் பெருஞ்செல்வமுண்டாம்
பூணவேதாய்தந்தை மனைவியுடன் புத்திரன்
    புகழுடன் வாழ்ந்திருப்பான் பூலோகந்தன்னில்!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
25.7.2011

=================================================



வாழ்க வளமுடன்!

24.7.11

காளைமாட்டைப் பார்த்துக் கிறங்கிய மனிதரின் கதை!

 சாகித்திய அகாடெமி விருதுபெற்றுச் சிறந்த 
எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன்
------------------------------------------------------------------------------------
காளைமாட்டைப் பார்த்துக் கிறங்கிய மனிதரின் கதை!

வாரமலர்

1997 - 98ஆம் ஆண்டு ஜூனியர் போஸ்ட் இதழில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கட்டுரையில், சிறுகதை என்பத‌ன் இலக்கணத்தைக் குறிப்பிட்டு எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. ஒருமுறை அல்ல இரண்டு முறை வெளிநாட்டு அறிஞர்களின் கருத்தாக ஒவ்வொரு முறையும் 12க்கு குறையாத குறிப்புக்களைக் கொடுத்து இருந்தார். அவையெல்லாமும் இப்போது நினைவில் நிற்கவில்லை என்றாலும், ஒரு கருத்துமட்டும் ஆழமாக மனதில் பதிந்து உள்ளது.

"ஒரு நல்ல சிறுகதையின் கருவோ, ந‌டையோ, ஒருசில‌ சொற்களோ, சொற்றொடர்களோ வாசகனின் மனதில் நீங்காமல் பதிந்து விடுமானால் அது ஒரு நல்ல சிறுகதை எனலாம். தலைப்போ, அல்லது கதை முழுதுமோ வார்த்தைக்கு வார்த்தை நினைவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று அவருக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் சுஜாதா கூறியிருந்தார்.

த‌ஞ்சை,லால்குடியில் இருக்கும் போது கிடைக்காத‌ ஓய்வும், ப‌ர‌ப‌ர‌ப்பு இல்லாத‌ சூழ‌லும் இல‌ண்ட‌னில் என‌க்குக் கிடைப்ப‌தால், அவ‌ச‌ர‌ம், அவ‌ச‌ர‌மாக‌ மேய்ச்ச‌ல் நில‌த்தில் புல்லை  மேய்ந்த‌‌ ப‌சுமாடு, மாலையில் கொட்டிலில் வ‌ந்து அம‌ர்ந்து அசைபோடுவ‌து போல‌ ப‌டித்த‌ ப‌ழைய‌ செய்திக‌ளையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.

அம‌ர‌ர் சுஜாதா கூறிய‌து போல நான்  ப‌டித்த‌ சிறுகதைகளில் ஏதாவது சிலதையாவது என்னால் நினைவு கூற‌ முடிகிற‌தா என்று எண்ணிப் பா‌ர்த்தேன்.

ச‌மீப‌கால‌மாக‌ வெகுஜ‌ன‌ப் ப‌த்திரிகைக‌ளில் சிறுக‌தை ஒருப‌க்க‌ம், அரைப்ப‌க்க‌ம் என்று குறுகிப் போய்விட்ட‌தால் ஒன்றும் சொல்லிக் கொள்வ‌தைப்போல‌ இல்லை. மேலும் வெகுஜ‌ன‌ப் ப‌த்திரிகைக‌ள் எல்லாமும்  பேசும்ப‌ட‌ம், பொம்மை, சினிமா எக்ஸ்பிர‌ஸ் போன்ற‌ சினிமா ப‌த்திரிகைக‌ளாக‌ மாறிவிட்ட சூழ‌லில், வார‌ப் ப‌த்திரிகைக‌ள் ப‌டிக்கும் ப‌ழ‌க்க‌த்தை விட்டு விட்டேன். என் வ‌ய‌தும் ஒரு கார‌ண‌ம். ஆன்மீக‌ப் ப‌த்திரிகை ப‌டிப்ப‌தில் ஆர்வ‌ம் திரும்பிவிட்ட‌து. போகிற‌ கால‌த்துக்கு புண்ணிய‌ம் தேடும்‌ ச‌மாச்சார‌ம்.

இல‌க்கிய‌ப்ப‌ணி ஆற்றுவ‌தாக‌ த‌ங்க‌ள் முதுகைத் தாங்க‌ளே த‌ட்டிக் கொள்ளும் சிறு ப‌த்திரிகைக‌ள் ப‌ல வ‌ந்தாலும், அவ‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும்  நீள‌மான‌ சொற்றொட‌ர்க‌ளும், புரிய‌க் கூடவே கூடாது என்று நேர்ந்து கொண்ட‌து போல‌ எழுதும் அவ‌ர்க‌ள் ந‌டையும் திகைக்க‌ வைக்கின்ற‌‌ன‌.

ச‌மீப‌த்தில் ப‌டித்த‌து வாத்தியாரின் 'செட்டிநாட்டு ம‌ண் வாச‌னைக்க‌தைக‌ள்' 3 தொகுப்புக்க‌ளிலும் உள்ள‌ க‌தை‌க‌ள் 60ம் - கையில் இப்போது புத்த‌க‌ம் இல்லாவிடினும் 20 க‌தைக‌ளின் க‌ருவை என்னால் நினைவு ப‌டுத்திக் கொள்ள‌ முடிகிற‌து. அந்த‌ வ‌கையில் சுஜாதாவின் இல‌க்க‌ண‌ப்ப‌டி அவை ந‌ல்ல‌ சிறுக‌தைக‌ள் என்று சொல்ல‌லாம்.'ஆனால் அவை அனைத்தும் ச‌மீப‌மாக‌ப் ப‌டித்த‌வை. என‌வே நினைவில் உள்ள‌ன‌' என்ற‌ வாத‌ம் சில‌ர் முன் வைக்க‌லாம் என்ப‌தால் வாத்தியாரின் க‌தைக‌ளை இங்கு கூறுவ‌தை த‌விர்க்கிறேன்.

முத‌லில் என்னைக் க‌வ‌ர்ந்து ம‌ன‌தில் ப‌திந்த‌ க‌தை, க‌ரிச‌ல் ம‌ண் த‌ந்த‌, பாட்டாளி வ‌ர்க்க‌த்திலிருந்து முளைத்து வ‌ந்த‌ எழுத்தாள‌ர் கி.ராஜ‌நாராய‌ண‌ன் அவ‌ர்க‌ளுடைய‌து.

இதோ அந்த‌க்க‌தைச் சுருக்க‌ம்:

க‌ரிச‌ல்காட்டு கிரா‌ம‌ம் ஒன்றில் நாய‌க்க‌ர் ஒருவ‌ர் வா‌ழ்ந்து வ‌ருகிறார்.அந்த‌ ஊரில்  கோவில் காளை ஒன்று உண்டு. மினுமினுப்பான‌ க‌ரிய‌ தோலுட‌ன் த‌ன் உய‌ர்ந்த‌ திமிலுட‌ன் அது க‌ம்பீர‌மாக‌ ந‌ட‌ந்து‌ செல்வ‌தே ராஜ‌ க‌ம்பிர‌மாக‌ இருக்கும்.அந்த‌ வ‌ட்டார‌த்தில் இருக்கும் எல்லாக் க‌ன்றுக‌ளுக்கும் அந்த‌க் காளையே த‌ந்தை. ம‌க்க‌ளுக்கெல்லாம் அந்த‌ காளையிட‌ம் ப‌ய‌ம் க‌ல‌ந்த‌ ப‌க்தி. யாரும் அதை எதிர்த்துச் செல்ல‌ மாட்டார்க‌ள் அது வ‌ந்தால் வில‌கி வ‌ழிவிட்டு ஒதுங்கிக் கொள்வா‌ர்க‌ள்.

அதன் உரிமையாளரான நாய‌க்க‌ருக்கு அந்த‌க் காளையின் மீது அபார‌மான‌ பிரிய‌ம். காளை க‌ட‌ந்து செல்லும் போதெல்லாம் வாய் விட்டு அத‌னை வ‌ர்ணிப்பார்.

"அதோட‌ ந‌டைய‌ப் பாருடா, என்ன‌ ராஜ‌‌‌ க‌ம்பீர‌ம்! அத‌னுடைய‌ திமிலைப்பாரு, என்ன‌ உச‌ர‌ம‌ப்பா! தோலுல‌ என்ன‌ மினுமினுப்பு! ஆஹா என்ன‌ ஒரு அற்புத‌மான‌ ப‌டைப்புடா!" இதுபோல‌ வாய்விட்டுப் புக‌ழ்வார்.கேட்டுக் கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் புன்ன‌கையோடு க‌ட‌ந்து செல்வார்க‌ள். ம‌ன‌திற்குள் "என்ன‌ இந்த‌ நாய‌க்க‌ர், காளை மேல‌ பைத்திய‌மா இருக்காரே" என்று நினைத்துக் கொள்வார்க‌ள்.

இப்ப‌டி இருக்கும் போது, ஓர் இர‌வு  இருட்டில் காளை ப‌டுத்துள்ள‌து தெரியாம‌ல் நாய‌க்க‌ர் அத‌ன் மீது த‌டுக்கி விழுந்து விடுகிறார்.விருட்டென‌ எழுந்த‌ காளை நாய‌க்க‌ரை அல‌ட்சிய‌மாக‌க் கொம்பால் தூக்கி வீசி விடுகிற‌து . முட்புத‌ரில் போய் விழுந்த‌ நாய‌க்க‌ரை ஊர்ம‌க்க‌ள் வீட்டுக்குத் தூக்கி வ‌ந்து  ஆசுவாச‌ப் ப‌டுத்துகிறார்க‌ள். அவ‌ர் கொஞ்ச‌ம் ச‌ம‌நிலைக்கு வ‌ந்த‌வுட‌ன் ஒருவ‌ன் கேட்கிறான்:

"இப்ப‌ம் என்ன‌ சொல்லுதீரு?"

சிர‌ம‌த்துட‌ன் எழுந்து அம‌ர்ந்து நாய‌க்க‌ர் சொல்கிறார்:

"அட‌டா!அதுக்கு என்ன‌ வ‌லிமய‌டா! நான் ஒரு 150 ப‌வுண்டு இருப்ப‌ன்ன‌ல்லோ? என்னையே தூசு மாதிரி தூக்கி எறிஞ்சுடுச்சே!"

அடிவாங்கியும் இப்ப‌டி அதைப் புக‌ழ்கிறாரே என்று ம‌க்க‌ள் உள்ளுக்குள் சிரிக்கிறார்க‌ள்.அப்போது கூட்ட‌த்தில் இருந்து ஒருவ‌ன் கூவுகிறான்:

"நாய‌க்க‌ருக்கு தான் ஒரு ப‌சுமாடாப் பொற‌க்க‌லையேன்னு இருக்கு!"

இத்தோடு க‌தை முடியும். அந்த‌க் க‌டைசி சொற்றொட‌ரை புரிந்து கொண்டால், ம‌ன‌திலும் உத‌ட்டிலும் சிரிப்போடு நிறைவு தோன்றும்.

இர‌ண்டாவ‌து க‌தை அம‌ர‌ர் கு.ப‌ ராஜ‌கோபால‌ன் எழுதிய‌து. கு ப‌ ர‌ 'ம‌ணிக்கொடி'க் கால‌ எழுத்தாள‌ர். ம‌னோத‌த்துவ‌த்தைப் பிர‌யோக‌ம் செய்து எழுதிய‌வ‌ர். க‌ண் பார்வை இல்லாத‌வ‌ர்.

அவ‌ருடைய‌ ஒரு க‌தை ஒன்று நினைவுக்கு வ‌ருகிற‌து. அத‌ன் சுருக்க‌ம்:

புதும‌ண‌த் த‌ம்ப‌திய‌ர் ஓர் ஒண்டுக் குடித்த‌ன‌ வீட்டில் குடியிருக்கிறார்க‌ள். எதிர் 'போர்ஷ‌'னில் ஒரு இள‌ம் வித‌வை குடியிருக்கிறாள்.இவ‌ர்க‌ள் இருவ‌ரும் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌து அவ‌ளுக்கு ம‌ன‌தில் பொறாமைத் தீயை வ‌ள‌ர்கிற‌து. புதும‌ணத் த‌ம்ப‌தியின‌ரின் போர்ஷ‌ன் வாச‌ல் க‌த‌வையே எப்போதும் நோட்ட‌ம் விட்டுக் கொண்டு அம‌ர்ந்திருப்பாள் கைம்பெண்.

உள்ளே க‌ட்டில் ச‌த்த‌ம், வ‌ளைய‌ல் ச‌த்த‌ம், முன‌க‌ல் ச‌த்த‌ம் எல்லாம் கைம்பெண்ணைப் பாடாய் ப‌டுத்தும்.இவ‌ர்க‌ளை 'அந்த‌' ச‌ம‌ய‌த்தில் ஒருத‌ர‌மாவ‌து  பிரிக்க‌ வேண்டும் என்று க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக்கொள்கிறாள்.

அப்ப‌டி ஒரு ச‌ந்தர்ப்ப‌ம் வாய்க்கிற‌து. இர‌வு சீக்கிர‌மாக‌ த‌ம்ப‌திய‌ர் க‌ட்டிலில் ப‌டுத்துவிட்ட‌தையும், ஊதுப‌த்தி ம‌ண‌த்தையும் வைத்து அவ‌ர்க‌ள் தாம்ப‌த்திய‌த்தின் எந்த‌ நிலையில் உள்ளார்க‌ள் என்று இங்கிருந்தே அனுமானித்துக் கொள்கிறாள் கைம்பெண். அப்போது அந்த‌ புது மாப்பிள்ளையின் ந‌ண்ப‌ன் ஒருவ‌ன் அவ‌னைத் தேடி வ‌ருகிறான். அவ‌னிட‌ம் "அந்தப் போர்ஷ‌ன்தான் க‌த‌வை ப‌ல‌மாக‌த் த‌ட்டுங்கள்" என்று சொல்லிக் கொடுக்கிறாள். அவ‌னும் யோசிக்காம‌ல் த‌ட்டுகிறான். அந்த‌த் த‌ம்ப‌தியின‌ர் வாரிசுருட்டி எழுவ‌தையும், அவ‌ச‌ர‌மாக‌ ஆடை அணிவ‌தையும் , விள‌க்குப் போடுவ‌தையும்,அந்த‌ வெளிச்ச‌த்தில் அந்த‌ப் புதுப்பெண் க‌லைந்த‌ ஆடைக‌ளுட‌ன் ச‌மை‌ய‌ல் அறைக்குள் ஓடுவ‌தைப் பார்த்து ஆன‌ந்த‌ப்ப‌டுகிறாள் கைம்பெண்.

அன்று இர‌வு கைம்பெண் ந‌ன்றாக‌‌ நிம்ம‌தியாக‌த் தூங்கினாள்.

இன்னும் இர‌ண்டு க‌தைக‌ள் நினைவுக்கு வ‌ருகின்ற‌ன‌. பதிவின் நீள‌ம் க‌ருதி இங்கே நிறுத்திக் கொள்கிறேன். அவ‌ற்றையும் சொல்லுங்க‌ள் என்று யாராவ‌து ஒருவ‌ர் கேட்டாலும் ச‌ர‌க்கை அவிழ்த்து விடுகிறேன், அடுத்த‌ப‌திவில்!

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!

கே. முத்துராம‌கிருஷ்ண‌ன்,லால்குடி.
முகாம்:இல‌ண்ட‌ன் மாந‌க‌ர‌ம்.

----------------------------------------------
கி.ராஜராயணன் பற்றிய மேலதிகத்தகவல்களுக்குக் கீழே கொடுத்துள்ள சுட்டியை அழுத்திப்பார்க்கவும்

வாழ்க வளமுடன்!

22.7.11

சேவையின் சிறப்பிற்கு எல்லை இல்லை!

---------------------------------------------------------------------------------------
சேவையின் சிறப்பிற்கு எல்லை இல்லை!

காலையில் கதவைத்திறந்த மாணிக்கவாசகம் முதலியார் அய்யாவுக்கு இப்படி ஒரு காட்சி காத்திருக்கிறது என்பதே  தெரியாது.வீட்டுத் தலைவாசலுக்கு எதிப்புறம் கசாப்புக்கடை புதிதாக முளைத்து இருந்தது.இரண்டு நாட்களுக்கு
முன்னரே ஒரு மரத்தின் அகலமான அடிப்பகுதியை மாட்டு வண்டியில் கொண்டு வந்து அங்கே உருட்டிவிட்டுப் போனதைப் பார்த்திருந்தார். அப்போது அது மண்டையில் உறைக்கவில்லை.இரத்தமும் சதையுமாக ஓர் ஆடு
தோல் உரிக்கப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளதையும், மற்றொரு ஆடு கழுத்து அறுபடத் தயாராக நிற்பதையும்  வாசலில் நின்று பார்த்தார்.

" உங்கள் கழுத்தை யாராவது இப்படி அறுத்தால் தேவலையே!" என்று முணுமுணுத்தது அவர் உதடு.

"சைவ‌முதலி, சைவமுதலி என்று இதுநாள் வரையும் பீற்றிக் கொண்டோமே. நாம் அசைவம் சாப்பிடாமல் மட்டும்  இருந்தால் போதுமா? இந்தக் கொலை பாதகத்தைத் தடுக்க வேண்டாமா? அதுவும் தின‌ச‌ரி இந்த‌க் கொலையை
க‌ண்ணுக்கு நேராக‌ வேறு பார்க்க‌வேண்டுமா?என் வீட்டுவாச‌ல்தான் கிடைத்த‌தா?" ம‌ன‌ம் கிட‌ந்து அடித்துக்  கொண்ட‌து முத‌லியாருக்கு. என்ன‌ செய்வ‌து என்றுதான் புரிய‌வில்லை.

அப்போதுதான் அடுத்த‌ வீட்டு ரா‌க‌வேந்திர‌ ராவ் த‌லையை நீட்டி காம்ப‌வுண்ட் சுவ‌ர் அருகில் வ‌ந்து நின்று  'முத‌லியார்' என்று விளித்தார்.அருகில் சென்ற‌ முத‌லியாரிட‌ம், "என்ன‌ க‌ர்ம‌ம் சுவாமி இது!? யார‌வ‌ன் ?

யாரைக்கேட்டுண்டு க‌சாப்புக் க‌டையை இங்கே போட்டான்? நீர் 'அப்ஜெக்ஷ‌ன்' செய்ய‌லையா‌?" என்றார்.

"என்னை பெர்மிஷ‌ன் கேட்டாதானே நான் அப்ஜெக்ஷ‌ன் ப‌ண்ண‌?அவ‌னா கொண்டு போட்டிருக்கான் திடீர்னு  காலைல‌ க‌த‌வைத் திற‌ந்தா‌ இப்ப‌டி ஒரு க‌ண்றாவி? என்னை என்ன‌ ப‌ண்ண‌ச் சொல்கிறீர்?"

"நாலு பேரைக் கூட்டிண்டுபோய் அவ‌னைக் கேளுமேன்!"

"ச‌ரி! நீரும் ஒரு ஆளா வ‌ரீரா?" என்று முத‌லியார் கேட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தால் ராவ் ஜூட் விட்டாயிற்று.

அப்போதுத‌ன் அந்த‌ இளைஞ‌ர் முத‌லியார் விட்டு வாயிலைக் க‌ட‌ந்து சென்றார். நெற்றி நிறைய‌ திருநீறு! தூய‌  வெள்ளை வேஷ்டி, மேலே உத்த‌ரீய‌ம்! கையில் பூக்குட‌லை,அது நிறை‌ய‌ வ‌ண்ண‌ வ‌ண்ண‌ பூக்க‌ள்.மைதா‌ன‌த்திற்கு
எதிர் வீட்டில் சிறிய‌ ஆசிர‌ம‌ம் போல‌ அமைத்து குருமார்க‌ளின் ப‌ட‌ங்க‌ளுக்கு காலை மாலையிலும் எளிய‌  வ‌ழிபாடு செய்து கொண்டு, மாலை நேர‌த்தில் ஒரு ம‌ருந்த‌க‌ம் ந‌ட‌த்திக் கொண்டு, த‌ன் ஜீவ‌ன‌த்திற்காக‌ அலுவ‌ல‌க‌
வேலைக்குச்  சென்று கொண்டு, ம‌னைவி ம‌க்க‌ளுட‌ன் வாழ்ந்தாலும் துற‌வியைப்போல‌ ஒரு தோற்ற‌ம் அளித்துக் கொண்டு..அந்த‌ இளைஞ‌ர் ச‌ற்று வித்தியாச‌மான‌வ‌ர்தான். அந்த‌ப் ப‌குதியில் உள்ள‌ ஏழை எளிய‌வ‌ர்க‌ளுக்கு அவ‌ர் "ஒரு ரூபாய் டாக்ட‌ர்!"

இப்போது முத‌லியாரும் அவ‌ரை அந்த‌ப் பெய‌ராலேயே கூப்பிட்டார்!

"ஒரு ரூபாய் டாக்ட‌ர் சார்! பா‌ருங்க‌ள் இந்த‌ அநியாய‌த்தை..!" என்று க‌சாப்புக் க‌டையை சுட்டிக்காட்டினார்.

இளைஞ‌ர் க‌சா‌ப்புக் க‌டையை அணுகி "என்ன‌ப்பா இது? ம‌க்க‌ள் வாழும் ப‌குதியில் க‌சாப்புக்க‌டையை போட்டு  இருக்கியே!? வேறு ஒதுக்குபுற‌மா போட்டுக்கோயேன்!" என்றார்.

க‌சாப்புக்க‌டை பாய் க‌த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு ஆட்டிக் கொண்டே உறுமினான்: "யோவ் அய்ய‌ரே!  உன் வேலையைப் பாத்துட்டு போய்யா!"

"முத‌லியார்வாள்! இர‌ண்‌டு நாள் பொறுத்துக் கொள்ளுங்க‌ள்.க‌ட்டாய‌ம் இந்த‌க் க‌டையைத் தூக்க‌வைப்போம்.எதுவும் ச‌ண்டைக்குப்போய் விடாதீர்க‌ள். முறையா போய் காரிய‌த்தை முடிப்போம். சாதார‌ண‌மா பேசின‌த்துக்கே க‌த்தியை  ஆட்டிப் பேச‌றான்.கோப‌தாப‌த்தோட‌ பேசினா எல்லாத்தையும் திசை திருப்பி  விட்டு விடுவான்! என‌வே கொஞ்ச‌ம் அமைதியா இருங்கோ. நான் இதே காரிய‌மா எப்ப‌டி செய்ய‌ணுமோ அப்ப‌டி செய்வேன். பொறுமைதான் முக்கிய‌ம் ச‌ரியா?" என்றான் ஒத்த‌ரூபா டாக்ட‌ர். 'ச‌ரி' என்றார் முத‌லியார்.

நேராக‌ப்போய் சானிட‌ரி இன்ஸ்பெக்ட‌ரை ச‌ந்திதான் ஒரு ரூபா‌ய்.விஷ‌ய‌த்தை ஆர‌ம்பிக்குமுன்ன‌ரே "அந்த‌  க‌சாப்புதானேசார்! அவ‌ங்‌க‌ளுக்கெல்லாம் ஒரு பைனான்சிய‌ர் இருக்கான் சார்! அந்த‌ ஆள் எம் எல் ஏக்கு  கையாள். எம் எல் ஏ அவ‌ர்க‌ள் க‌ம்யூனிடி சார்! நான் சாதார‌ண‌ அர‌சு ஊழிய‌ன்! என்னால் ஒன்றும் செய்ய‌  முடியாது சார்" என்றார் சானிட‌ரி.

"வெளிப்ப‌டையா சொன்ன‌துக்கு ந‌ன்றி!" என்றான் ஒரு ரூபாய். சா‌னிட‌ரியிட‌ம் கொஞ்ச‌ம் பேசி அந்த‌  பைனான்சிய‌ரின் பெய‌ர் விலாச‌த்தைத் தெரிந்து கொண்டான்.

பைனான்சிய‌ரைத் தேடிப்போனான்.அது ஒரு சைக்கிள் ரிப்பேர் க‌டை. அத‌ன் பின்னே இஸ்லாமிய‌ர்க‌ளுக்கான‌  குடியிருப்பு, தைக்கால்.இவ‌ன் போன‌ச‌ம‌ய‌ம்  அந்த‌ ஆள் க‌டையில் இல்லை.க‌டைவாச‌லில் எப்போதுவ‌ருவார்  என்றெல்லாம்  விசாரித்துக் கொண்டு இருந்த‌ ச‌ம‌ய‌ம் தைக்காலில் இருந்து ஒரு வ‌ய‌தான‌ இஸ்லாமிய‌ மூதாட்டி  வெளிப்ப‌ட்டு இவ‌ன் பேசிக்கொண்டு இருந்த‌தையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தாள்.

"அடேய்!மொம்ம‌து! சாமிக்கு ஒரு நாக்காலிய‌ப் போடுடா! நிக்க‌ வெச்சிப் பேச‌றியே சைத்தான்! போய் நிஜாமை  கூட்டியாடா! டூரிங் டாக்கீஸு வ‌சூலுக்குப் போயிருப்பான்!" என்று மூதாட்டி குர‌ல் கொடுத்தாள்.

க‌டைப்பைய‌ன் ஒரு நாற்காலியை போட்டுவிட்டு  சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

ப‌த்து நிமிட‌த்தில் நிஜாம் என்ற‌ பைனான்சிய‌ரும், க‌டைப்பைய‌னும் திரும்பினார்க‌ள்.

நிஜாமின் தோற்ற‌மே யாருக்கும் ப‌ய‌ம் கொடுக்கும். ஆஜானுபாஹு! சிவ‌ந்த‌ க‌ண்க‌ள்.கைலியின் மேல் க‌ட்டிய‌  ப‌ச்சை பெல்ட் ம‌ஸ்லின் ஜுப்பா!

வ‌ந்த‌வுட‌னேயே,"என்னா?" என்றான் நிஜாம்.

ஒருரூபாய் க‌சாப்புக்க‌டையைப் ப‌ற்றிச் சொன்னான்.

"அது உங்க‌ சொந்த‌ இட‌மா?"

"இல்லை"

"உங்க‌ வீட்டுக்கு எதிர்ல‌ இருக்கா க‌டை?"

"இல்லை"

"அப்ப‌ நீங்க‌ ஏன் த‌லையிட‌றீங்க‌?"

"எந்த‌ வீட்டுக்கு எதிர்ல‌ இருக்கோ அந்த‌ வீட்டுக்கார‌ர் சார்பாக‌ வ‌ந்துள்ளேன். மேலும் எங்க‌‌ள் ஆஸ்ர‌ம‌த்திற்கு  அருகிலும் இந்த‌க் க‌சாப்புக்க‌டை அமைந்துள்ள‌து.மாலைநேர‌த்தில் ஆஸ்ர‌ம‌த்திற்கு ம‌ருந்துக்காக‌ ம‌க்க‌ள் கூடும்
இட‌ம் அது. இந்த‌க்க‌டையால் சுகாதார‌‌க் கேடு ஏற்ப‌டும் என்று நினைக்கிறேன்...."

"ச‌ரிதாங்க‌!உங்க‌ நியா‌ய‌ம் உங்க‌ளுக்கு... எங்க‌‌ நியாய‌ம் எங்க‌ளுக்கு...க‌டையை எடுக்க‌ முடியாது. ஆன‌தைப்  பார்த்துக்கொள்ளுங்க‌...."

"நிஜாம்" என்று ஒரு இடிக்குர‌ல் கேட்ட‌து. திரும்பிப் பார்த்தால் அந்த‌ மூதாட்டி நின்று கொண்டிருந்தார்க‌ள்.

"யாரிட‌ம் பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று தெரியுமா? டாக‌ட‌ர் ஐயா யார் தெரியுமா? நீயெல்லாம் காசைத்  துற‌த்திக் கொண்டு வ‌சூலுக்கு மாலை பூரா ‌சுத்த‌ற‌ நேர‌த்தில‌ ஐயா தான் இந்த‌ எட்டுப்ப‌ட்டி கிராம‌த்துக்கும் ம‌ருந்து
கொடுக்கிறார்க‌ள். இந்த‌த் தைக்கால்ல‌ இருக்கிற‌ நாங்க‌ எல்லாம் காய்ச்ச‌ல் க‌ருப்புன்னா குழ‌ந்தையைத்  தூக்கிக்கிட்டு சாமிக்கிட்டாதான் ஓடுதோம். நீயா நின்னு பாக்க‌ற‌? த‌ன் குழ‌ந்தையா நினைச்சி ஊர் குழ‌ந்தைக‌ளை  வைத்திய‌ம் பாக்கும் சாமியையா எதுத்துப் பேச‌றே‌? அவ‌ங்க‌ சொல்ற‌தைச் செஞ்சு கொடு.ஆமா!" என்றாள் மூதாட்டி.

நிஜாம் பெட்டிப் பாம்பாய் அட‌ங்கிப் போனான். "நீங்க‌ போங்க‌ சார்! ரா‌வுக்கெல்லாம் க‌டையிருக்காது.எடுக்க‌ச்  சொல்லிட‌றேன்" என்றான்.

"பெரிய‌ம்மா‌ உன‌க்கு என்ன‌ உற‌வு?" என்றார் ஒரு ரூபாய். "என்‌ பாட்டி சார்!வாப்பாவைப் பெத்த‌வ‌ங்க‌‌" என்றான் நிஜாம்.

சொன்ன‌தைப் போல‌வே ம‌றுநாள் காலை அங்கே க‌சாப்புக்க‌டை இல்லை.

ச‌ட்ட‌ம், நியாய‌ம், த‌ர்ம‌ம் எல்லாமும் ஓர் எல்லையுட‌ன் நின்றுவிடும். அன்புட‌ன் செய்யும் சேவைக்கு என்ன‌ ச‌க்தி  என்ப‌தை ஒருரூபா‌ய் புரிந்துகொண்ட‌ நிக‌ழ்ச்சி இது! அன்பும் ந‌ல்லெண்ண‌மும்தான் உல‌கை வெல்லும் ச‌ற்று  தாம‌த‌ம் ஆனாலும்..!

பிகு: இந்த‌ உண்மை நிக‌ழ்ச்சியில் வ‌ரும் ஒரு ரூபாய் டாக்‌ட‌ர் அடியேன்தான்

கே. முத்துராம‌கிருஷ்ண‌ன், லால்குடி.
முகாம்: இல‌ண்ட‌ன் மாந‌க‌ர்


வாழ்க வளமுடன்!

21.7.11

முதலில் யாருக்குச் சிறந்தவராக நீங்கள் இருக்க வேண்டும்?

---------------------------------------------------------------------------------------
முதலில் யாருக்குச் சிறந்தவராக நீங்கள் இருக்க வேண்டும்?

மூன்று தையற்காரர்கள் இருந்தார்கள். தொழிலில் நன்றாகத் தேர்ச்சியடைந்த பின் முன்னேற்றத்தைத் தேடி மூவரும்  ஒரு பெரிய நகரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். மூவரும் நகரின் பிரதான சாலையில் தகுந்த இடத்தை வாடகைக்குப் பிடித்து, தங்கள் தொழிலைத் தனித்தனியாகச் செய்யத் துவங்கினார்கள்.

அடுத்த நாள் காலை, முதலாமவன், தன் கடை வாசலில் கீழ்க்கண்டவாறு அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தான்:

  “நகரின் மிகச்சிறந்த தையற்காரர் இங்கே இருக்கிறார்”

அதேபோல இரண்டாவது ஆசாமியும் தன் கடை வாசலில் இப்படி ஒரு அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தான்.

   “உலகின் மிகச் சிறந்த தையற்காரர் இங்கே இருக்கிறார்”

இரண்டையும் கண்ணுற்ற மூன்றாமவன், திகைத்துப்போனான். அதே
போல தன் கடை வாயிலும் ஒரு அறிவிப்புப்  பலகை ஒன்றை வைக்க விரும்பினான். அத்துடன் தன்னுடைய கடைப்பலகை அவை
இரண்டையும் விட மேன்மை உடையதாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினான். பலமாக யோசனை செய்து, அடுத்த நாள் இப்படி ஒரு  அறிவிப்புப் பலகையை வைத்தான்.

“இந்தத் தெருவின் மிகச் சிறந்த தையற்காரர் இங்கே கடை வைத்திருக் கிறார். ஒருமுறை தைத்துப் பாருங்கள்”

யாரிடம் கூட்டம் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

மூன்றாவது ஆசாமியிடம்தான் கூட்டம் சேர்ந்தது!

உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் என்ன செய்யப்
போகிறீர்கள் என்பதுதான் அதி முக்கியமானது.  அதுதான் 
அதிகமான வரவேற்பைப் பெறும் அதை மனதில் வையுங்கள்.
------------------------------------------------------------------------------------------------------
இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. மொழிமாற்றம் மட்டும் அடியேனுடைய கைவண்ணம்

அன்புடன்
வாத்தியார்
21.7.2011


வாழ்க வளமுடன்!

20.7.11

Astrology பராசக்தி முதல் வீயட்நாம் வீடுவரை ராகு அள்ளிக் கொடுத்த வெற்றிகள்

------------------------------------------------------------------------------------------
Astrology பராசக்தி முதல் வீயட்நாம் வீடுவரை ராகு அள்ளிக் கொடுத்த வெற்றிகள்
       ராகுவைப்போல கொடுப்பாருமில்லை, ராகுவைப் போல கெடுப்பாருமில்லை என்பார்கள். எனக்குத்தெரிந்தவரை 90 சதவிகித ஜாதகர்களை ராகு தன்னுடைய மகாதிசைகளிலும் அல்லது வேறு கிரகங்களின் திசைகளில் வரும் தன்னுடைய புத்திக்காலங்களில் படுத்தி எடுத்திருக்கிறார்.

      விதிவிலக்காக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரின் ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்த ராகு அற்புதமாகப் பல நன்மைகளைச் செய்தான். பெயர், பணம், புகழ் என்று அவருக்கு அனைத்தையும் வாரி வழங்கினான். திரையுலகில் அவரைச் ஜொலிக்க வைத்தான். மின்ன வைத்தான். 1952ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டுவரை அவருக்கு ராகு மகாதிசை நடைபெற்ற 18 ஆண்டு காலமும் அவரின் வாழ்க்கையில் ஒரு பொற்காலமாகும்.

      1952ஆம் ஆண்டில் வெளியான அவருடைய முதல் படமான பராசக்தி திரைப்படத்தில் இருந்து, 1970ஆம் ஆண்டு வெளியான வீயட்நாம் வீடு வரை அவர் நடித்து வெளியான ஏராளமான படங்கள் வெற்றியைக் குவித்தன. அத்துடன் அவருக்கு லட்சக்கான ரசிகர்களையும் பெற்றுத்தந்தன!

     அந்த கால கட்டத்தில் அவர் எத்தனை வெற்றிப் படங்களைத் தந்திருக்கிறார் என்று பட்டியல் இட்டுள்ளேன் பாருங்கள். வண்ண எழுத்தில் உள்ளவைகள் அதீத வெற்றி பெற்ற படங்கள்!

Paraasakthi  1952
Panam  1952
Poongodhai   1953
Thirumbi Paar   1953
Anbu  1953
Kangal  1953
Manidhanum Mirugamum 1953
Manohara  1954
Illara Jyothi  1954
Andha Naal First songless Tamil film. 1954
Kalyanam Panniyum Brammachari   1954
Thulivisham   1954
Koondukkili Only film co-starred with M. G. Ramachandran 1954
Thooku Thooki  1954
Edhir Paradhathu  1954
Kaveri  1955
Mudhal Thedhi 1955
Ulagam Palavidham 1955 
Mangayar Thilakam 1955
Kodeeswaran  1955
Kalvanin Kadhali  1955
Naan Petra Selvam  1956
Nalla Veedu  1956
Naane Raja  1956
Tenali Raman  1956
Pennin Perumai 1956
Raja Rani 1956
Amara Deepam  1956
Vaazhviley Oru Naal' 1956
Rangoon Radha  1956
Makkalai Petra Magarasi  1957
Vanangamudi 1957
Pudhaiyal  1957
Manamagan Thevai 1957
Thangamalai Ragasiyam 1957
Rani Lalithangi  1957
Ambikapathy  1957
Baagyavathi 1957
Uthama Puthiran First Dual Role 1957
Padhi Bhakti  1957
Sampoorna Ramayanam  1957
Bommai Kalyanam 1957
Annaiyin Aanai  1957
Sarangadhara 1957
Sabaash Meena  1957
Kaathavaraayan 1958
Thanga Padumai  1958
Naan Sollum Ragasiyam  1958
Thaayaippola Pillai Nooliappola Selai 1958
Veerapandiya Kattabomman Acting award at AfroAsian film festival 1958
Maragadham 1959
Aval Yaar  1959
Baga Pirivinai  1959
Irumbu Thirai  1960
Kuravanji  1960
Dheivapiravi  1960
Raja Bakthi  1960
Padikkadha Medhai  1960
Kuzhandhaigal Kanda Kudiyarasu  1960
Paavai Vilakku 1960
Pava Mannippu  1961
Punar Jenmam 1961
Pasamalar  1961
Ellam Unakkaga 1961
Sri Valli  1961
Maruthanaattu Veeran  1961
Palum Pazhamum 1961
Kappal Ottiya Thamizhan  1961
Paarthaal Pasi Theerum 1962
Nichaya Thaamboolam  1962
Valar Pirai 1962
Padithaal Mattum Podhuma  1962
Bale Pandiya First movie in three roles 1962
Vadivukku Valaikaappu 1962
Senthamarai  1962
Bandhapaasam 1962 
Aalayamani  1962
Chittoor Rani Padmini  1963
Arivaali  1963
Iruvar Ullam  1963
Naan Vanangum Dheivam 1963
Kulamagal Raadhai  1963
Paar Magale Paar 1963
Kungumam 1963
Ratha Thilagam 1963
Kalyaniyin Kanavan 1963
Annai Illam  1963
Karnan Role from Mahabharata 1964
Pachai Vilakku 1964 
Aandavan Kattalai 1964
Kai Kodutha Dheivam  1964
Pudhiya Paravai 1964

Muradan Muthu 1964
Navarathri 100th film  Portrayed 9 different roles 1964
Pazhani  1965
Anbu Karangal  1965
Santhi  1965
Thiruvilaiyadal Biggest hit of Tamil history at its time 1965
Neelavanam 1965 
Motor Sundaram Pillai  1966
Mahakavi Kalidas  1966
Thaaye Unakkaga  1966
Saraswathi Sabatham 1966
Selvam 1966
Kandhan Karunai  1967
Nenjirukkum Varai 1967
Pesum Dheivam 1967
Thangai  1967
Paaladai 1967
Thiruvarutchelvar 1967
Iru Malargal 1967
Ooty Varai Uravu 1967
Thirumal Perumai  1968

Harichandra 1968
Galatta Kalyanam 1968
En Thambi  1968

Thillana Mohanambal 1968
Enga Oor Raja 1968
Lakshmi kalyanam 1968
Uyarndha Manidhan 1968

Anbalippu  1969
Thanga Surangam 1969
Kaaval Dheivam 1969
Gurudhatchanai 1969
Anjal Petti 520 1969
Nirai Kudam 1969
Dheiva Magan ( Triple roles ) 1969
Thirudan  1969
Sivandha Mann First Tamil film to be shooted in Foreign Locations 1969
Enga Mama  1970
Ethiroli 1970

Vilaiyaattu Pillai 1970
Vietnam Veedu 1970
 
--------------------------------------------------------------------------------------------------
       முன் பாடங்களில், சந்திர மகா திசையில் அதன் சுயபுத்தி நடைபெறும் பத்து மாத காலத்திற்கான பலன்களையும், அதற்கு அடுத்து சந்திர மகா திசையில் செவ்வாயின் புத்திக்கான பலன்களையும் பார்த்தோம். இன்று சந்திர மகா திசையில் ராகு புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.

      அது நடைபெறும் காலம் 18 மாதங்கள் (அதாவது ஒன்றரை ஆண்டுகள்)

       ராகு தீய கிரகம் தன்னுடைய புத்தியில் நன்மையான பலன்களை அளிக்க மாட்டார். ஜாதகனைப் பாடாய்ப் படுத்தி விடுவார்.

      பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

பாரப்பா சந்திரதிசை ராகுபுத்தி
    பகையான நாளதுவும் மாதம்பதினெட்டாகும்
ஆரப்பா அதனுடைய பலத்தைக்கேளு
    அடங்காத சத்துருவால் தனநஷ்டமாகும்
வீரப்பா வியாதியது பீடிப்பாகும்
    விதியளவும் புத்திமதி நாசம்பண்ணும்
காரப்பா களருடனே காலிசாவாம்
    கனகமது சிலவாகும் கண்டுதேறே!


       அடுத்து ராகு திசையில் சந்திர புத்திக்கான பலன்கள் (அதுவும் 18 மாத காலமே) சந்திரன் சுபக்கிரகம் என்றாலும் தசா நாதனை மீறீ அல்லது கடாசிவிட்டு அவர் நன்மையான பலன்களைத் தர முடியாது. அது நடைபெறும் 18 மாத காலமும் தீமையானதாகவே இருக்கும். பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

காலியென்ற ராகுதிசை சந்திரபுத்தி
    கனமில்லா மாதமது ஈரொன்பதாகும்
வேலியென்ற அதன்பலனை விளம்பக்கேளு
    விதமில்லா மனைவிதன்னால் பொருளுஞ்சேதம்
வாலியென்ற குரங்கதுபோல் மாண்டுபோவான்
    வகையான தேசம்விட்டு அலைவான்பாரு
மாலியென்ற மனைவியால் சுகபோகமில்லை
    மக்கள்முதல் மாடுடன் கேடாங்கேளே1


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
20.7.2011

==============================================
வாழ்க வளமுடன்!

19.7.11

Astrology இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?

------------------------------------------------------------------------------------------
Astrology இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?

                 மெல்லிசை மன்னர்கள் திரு எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆகிய இருவரும் இசையமைத்து  1961ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாக்யலக்ஷ்மி’ என்ற திரைப்படத்தில், திருமதி. பி. சுசீலா அவர்கள் தன்னுடைய  கிறங்க வைக்கும் குரலால் பாடிய பாடல் ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான பாடல் அது.   பாடலை இயற்றியவர் கவியரசர் கண்ணதாசன். அசத்தலான வரிகள் நிறைந்திருக்கும்  பாடல் அது  (சொல்லவா வேண்டும்?)

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
    காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி


என்று பாடலின் பல்லவி இருக்கும். பல்லவியைவிட சரணத்தில் வரிகள் தூக்கலாக இருக்கும். நாயகி மனக்  குறையுடன் பாடுவாள்:

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
    இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?

---------------------------------------------------------------------------------------
நான் அதை மாற்றிச் சொல்வேன்

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
    என்றுமே இன்பம் சமமாய்க் கொண்டால் என்பதை அறிவாயா தோழி?


                உண்மை. எதையும் சமமாகப் பாவிப்பவர்களைத் துன்பம் அணுகாது. எல்லா மகாதிசைகளும் (Major Periods)

                 எல்லா புத்திகளும் (Sub Periods) அவர்களுக்கு ஒன்றாகத்தான் இருக்கும்
-------------------------------------------------------------------------------------------------
               முன் பாடத்தில், சந்திர மகா திசையில் அதன் சுயபுத்தி நடைபெறும் பத்து மாத காலத்திற்கான பலன்களைப்  பார்த்தோம். அதற்கு அடுத்து சந்திர மகா திசையில் செவ்வாயின் புத்தி. ஏழு மாத காலம் அது நடைபெறும். செவ்வாய் சந்திரனுக்கு நட்புக்கிரகம் என்றாலும் தன்னுடைய புத்தியில் நன்மையான பலன்களை அளிக்க மாட்டார். ஜாதகனைப் பாடாய்ப் படுத்தி விடுவார்.

             பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம்  தரவில்லை!

தானென்ற சந்திரதிசை செவ்வாய்புத்தி
   தன்மையில்லா நாளதுவும் மாதம் ஏழு
வானென்ற அதன்பலனைச் சொல்லக்கேளு
   வாதமுடன் கிரந்திபித்தம் வாய்வுரோகம்
ஏனென்ற கள்ளரால் கோபமுண்டாம்
   எளிதான் ஏந்திழையால் துக்கமுண்டாம்
கோனென்ற கோதையரும் சகோதரத்தால்
   கொடுமைகளு முண்டாகும் கூர்ந்துபாரே!


            இதற்கு நேர்மாறாக செவ்வாய் மகா திசையில், சந்திரன் தன்னுடைய புத்திக்காலத்தில் (அதுவும் ஏழு மாதங்கள்தான்) நன்மையான பலன்களை வாரிவழங்குவார். நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களே!

            பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம்  தரவில்லை!

பூணுவான் செவ்வாய்திசையில் சந்திரபுத்தி
    புகழான நாளதுவும் மாதம்யேழு
ஆணுவான் அதன்பலனை அன்பாய்க்கேளு
    ஆயிழையா ளருகிந்து செல்வபதியாவான்
கோணுவான் கொடியோர்கள் வணக்கஞ்செய்வார்
    கொற்றவனே குவலயத்தில் பேர்விளங்கும்
ஊணுவான் தோகையரும் புத்திரருமுண்டாம்
    உத்ததொரு குலதெய்வம் உறுதிகாணே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
19.7.2011

========================================

வாழ்க வளமுடன்!

18.7.11

Astrology மனிதனுக்கு அவசியமாக வேண்டிய இரண்டு என்ன?

-----------------------------------------------------------------------------------------
 Astrology மனிதனுக்கு அவசியமாக வேண்டிய இரண்டு என்ன?

தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், சனிபுத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்த்தோம். அடுத்து  அதே சூரிய மகாதிசையில்  புதன்புத்தி, கேதுபுத்தி மற்றும் சுக்கிரபுத்தி
ஆகிய புத்திகள்  உள்ளன. அவற்றால் கிடைக்கும் பலன்களை முன்னதாகவே நடத்தப்பெற்ற பாடங்களில் பார்த்துவிட்டோம். ஆகவே சூரிய திசை நிறைவு பெறுகிறது. அடுத்து உள்ளது சந்திர மகாதிசை. அதன் மொத்த காலம் 10  ஆண்டுகள். அதைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.

சந்திரன் சுபக்கிரகம். மனதுக்குக் காரகன் (authority for mind) தன்னுடைய திசை காலத்தில் சந்திரன் ஜாதகனுக்கு  மன மகிழ்ச்சியைக் கொடுப்பான். நிம்மதியைக் கொடுப்பான். வாழ்க்கையில் மனிதனுக்கு அவசியமாக வேண்டியது  அது இரண்டும்தானே! எந்த அளவு கொடுப்பான் என்பது ஜாதகத்தில் சந்திரனுடைய நிலைமை, சேர்க்கை, மற்றும்  வலிமையைப் பொறுத்து மாறுபடும்.

மொத்த திசை காலமான பத்து ஆண்டுகளுக்கும் அப்படி நடைபெறுமா என்றால், இருக்காது. அதன் மகாதிசையில்  உள்ளே நிலையும் பாப கிரகங்களான, தீய கிரகங்களான, சனி, ராகு ,கேது ஆகிய கிரகங்களின்
புத்தி காலங்களில் அவற்றின் கையே ஓங்கியிருக்கும். அவைகள்
மகாதிசை நாதனான சந்திரனை ஓரங்கட்டிவிட்டு,  தங்களின்
கைவரிசையைக் காட்டுவார்கள். அதை மனதில் கொள்க!
---------------------------------------------------------------
சந்திர திசையில் முதலில் அதன் சுயபுத்தி நடைபெறும். அதன் காலம் பத்து மாதங்கள். அதன் பலனுக்கான  பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

சொல்லவே சந்திரதிசை வருஷம் பத்தில்
   சுகமுடைய சந்திரபுத்தி மாதம்பத்து
நில்லவேயதனுடைய பலனைச் சொல்வோம்
   நிகரில்லா மன்னருடன் மகிழ்ச்சியாகும்
சொல்லவே சுயம்வரங்கள் நாட்டிவைத்து
   சுகமான கல்யாணம் ஆகும்பாரு
வெல்லவோ சத்துருவை ஜெயிக்கலாகும்
    வேணபடி நிதிசேரும் விபரந்தானே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
18.7.2011

---------------------------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

17.7.11

எல்லாநாட்டுப் பெண்களும் ஒரே மாதிரிதானா?

------------------------------------------------------------------------------------------
 எல்லாநாட்டுப் பெண்களும் ஒரே மாதிரிதானா?

வாரமலர்

சென்ற பதிவில் என் விமானப் பயண அனுபவத்தை எழுதியிருந்தேன். இப்போது இலண்டனில் என் அனுபவங்களை சிறுகச் சிறுக எழுதத் துணிகிறேன்.

'ஜெட்லாக்' என்னும் நேர மாறுதலால் ஏற்படும் மயக்கம் எனக்கு 4 நாட்கள் இருந்தது.மேலும் குளிர் தாங்காமல் கபமும் வைத்துக் கொண்ட‌து. இத்தனைக்கும் இது இங்கு கோடைகாலம்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே அதிக வெய்யில் அடித்து ஓய்ந்து, இப்போது நமது ஊட்டியைப் போன்ற வெப்பநிலை.தண்ணீர் மாற்றம், தூக்க நேரத்தில் தடுமாற்றம் , விமானப் பயணத்தில் நீண்டநேரம் குறுகிய இடத்தில் அமர்ந்து வந்தது எல்லாமும் சேர்ந்து சிறிது உடல் நலக்குறைவு.5ஆம் நாளில் சாதாரண நிலையை அடைந்தேன். உடனே வெளியில் அழைத்துச் செல்ல மாப்பிள்ளை எத்தனித்தார்.

'முதலில் கோவிலுக்குச்செல்வோம்' என்றார்.என் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் பல வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுத்த ஸ்ரீராஜராஜேஸ்வ‌ரி அம்மன் ஆலயம் அழைத்துச்சென்றார்.
ஸ்டோன்லே  என்ற இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. இங்கிலாந்து
நாட்டில் 150க்கும் மேற்ப‌ட்ட இந்து ஆலயங்கள் உள்ளன. இலண்டன்
மாநகரில் மட்டும் 40  இந்துக் கோவில்கள் உள்ளன.ஸ்ரீராஜராஜேஸ்வரி
அம்மன் ஆலயத்தில் பிரதான மூலவர் அம்மன் தான். விநாயகர், முருகன், அண்ணாமலையார், மதுரை மீனாட்சி அம்மன்,பெருமாள், பள்ளிகொண்ட பெருமாள் அரங்க‌நாதர், நவக்கிரஹங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன.குறைவில்லாமல் பால் அபிஷேகம் நடந்தது.4 குருக்கள் உள்ளனராம்.அதில் மூவர் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளார்.மன நிறைவுடன் வீடு திரும்பினோம்.

தினமும் காலையில் பெயர்த்தியை நர்சரி பள்ளியில் கொண்டு சேர்க்கும் பணியை விரும்பி ஏற்றோம்.நான் ஒருபக்கமும், என் மனைவியார் ஒருபக்கமும் பெயர்த்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டு பள்ளி நோக்கிச் செல்லும் போது பெயர்த்தி சொல்லும் கதைகள், ஆனந்த அநுபவம்.இதற்காகத்தானே ஆசைப்பட்டு இலண்டன் வந்தோம். 'ஸ்கைப்'பிலும், தொலைபேசியிலும் பார்த்துக்கொண்டு, பேசிக்கொண்டு இருந்த பெயர்த்தியினை நேரில் கண்டு பழக, பேச வாய்ப்பளித்த ஆண்டவனுக்கு நன்றி!

பள்ளியில் இருந்து அப்படியே ஒரு நடைப்பயணம் மேற்கொள்வோம்.ஆரோக்கிய நடைப்பயணம்! மருத்துவர் ஆலோசனை அல்லவா?தவறாமல் கடைப்பிடிக்க வேண்டாமா?

சீரான நடை வழிப்பாதைகள்.எதிரில் வரும் நபர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினால் தவறாமல் நன்றி சொல்லும் பாங்கு.தினசரி சந்திக்கும் நபர்கள் மிகுந்த நட்புணர்வுடன் 'ஹலோ, ஹாய்' சொல்லுவது. நம்முடன் சேர்ந்து தினசரி வரும் நபர் ஒரு நாள் வராவிட்டாலும் அவ‌ர்களைப் பற்றிய விசாரிப்பு.நற்பண்புகள் என்றால் அவர்களிடம் இருந்து கற்க வேண்டும்.

ஒரு விஷயத்தில் எல்லா நாட்டுப் பெண்களும் ஒரே மாதிரிதான். வெள்ளைப் பெண்களும் நமது தமிழக நங்கையரும் ஒன்று போலத்தான்.

நாங்கள் தினமும் காலையில் செல்லும் நர்சரிக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை அழைத்து வரும் இளம் தாய்மார்கள் பலர் உண்டு. எல்லோரும் ஒன்று போல குழந்தை பிறந்த பின்னர் உடலை சீரக வைத்து இருப்பதில் கவனம் செலுத்தாமல் விட்டு ஊதிய உடலுடன் உள்ளனர்.'ஒபீசிடி' உள்ள பெண்களையே  அதிகம் காணக் கிடைக்கிறது.

ஒருவேளை ஏதாவது கல்லூரி பல்கலைப் ப‌க்கம் சென்றால் மெல்லிடை நங்கையரை சந்திக்கலாம் என்று எண்ணுகிறேன்.(அதற்காக அழைத்துச் செல்லக் கேட்டால் என் வயதுக்கு என்னை ஒரு மாதிரி பார்க்க மாட்டார்களா?ஆகவே மூச்!)

மஹாத்மா காந்திஜியை 'அரை நிர்வாணப் பக்கிரி' என்று வின்ஸ்டன்
சர்ச்சில் அழைத்தார்.இங்கு வந்து பார்த்தபின்னர்தான் தெரிகிறது,   
இங்கு உள்ள ஆண் பெண் எல்லோரும் முக்கால் நிர்வாணமாக 
இருப்பது. விளையாடும் போது அணியும் குட்டி டவுசர், மேலே ஒரு 
முண்டா பனியன் மட்டும்  அணிந்து பூங்காவிலும் 'பப்' என்னும் குடிக்குமிடங்களிலும் ஆண் பெண் அனைவரும் நடமாடுகிறார்கள்.
இது கோடைகாலமாதலால் அப்படியாம்!சரி!ஏதோ நம்மால் முடிந்தது அரைக்கண்ணால் பார்த்துவிட்டு பார்க்காதது போல போய்க்
கொண்டே இருக்க வேண்டியதுதான்.நமக்கேன் இந்த வம்பெல்லாம்
சிவ சிவ!

(அனுபவம் தொடரும்)
இலண்டன் மாநகரத்தில் இருந்து
கே.முத்துராமகிருஷ்ணன்,லால்குடி

----------------------------------------------------------------------------------
Sunday Jokes. Please take them as jokes

1
What Is FACEBOOK ?
Its A Place Where Boy Posts Joke, Gets No Response...
And If Girl Posts The Same Joke, She Gets 150 Likes, 300 Comments & 60 Friends Requests..
-----------------------------------------
2
Two CA's getting married.
During marriage ceremony, wife vomits
Husband asks the reason?
Wife - Capital gain arising out of previous partnership
----------------------------------------
3
Angry husband is not satisfied with his wife & sends an sms to his Mother
in law. "Your product is not matching my requirements.*

*Smart Mother in law replys - Warranty expired, manufacturer not responsible
after seal is broken.*
-----------------------------------------
4
A guy who was married to one of the twin sisters was asked "You are
married to one of the twin sisters how do you recognize your wife."
The guy answered, "You are right I don't"
-----------------------------------------
Wishing you a happy week end
With affection and love
Vaaththiyaar


வாழ்க வளமுடன்!