மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.7.11

புது மனைவிக்குப் பூ வாங்கிக் கொடுத்த கதை!

---------------------------------------------------------------------------------
புது மனைவிக்குப் பூ வாங்கிக் கொடுத்த கதை!

மல்லிகைப் பூ கிலோ 250 ரூபாய்க்கு விற்கிறது. முகூர்த்த நாட்களில் 500 ரூபாய் வரை எகிறிவிடும். ஒரு முழம் மல்லிகைப் பூ 10 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை ஏறி இறங்கும்.

திருமணம் ஆன புதிதில் நாயகன் ஒருவன், தினமும் தன் அலுவல்கள்
முடிந்து வீடு திரும்புபோது, தவறாமலும்,  மறக்காமலும் 5 முழம் மல்லிக்கைபூவை வாங்கிக்கொண்டு வருவான். செலவு தொகையை
நீங்களே கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள். ஒரு முழம் பூ வீட்டில்
உள்ள சுவாமி படங்களுக்கு (மொத்தம் 10 படங்கள்). அந்த ஒரு
முழத்தைத் துண்டு துண்டாக வெட்டி அவைகளுக்கு வைத்து விடுவான்.

தனியாக உள்ள 4 முழம் பூ, புது மனைவியின் நீண்ட கருங்கூந்தலை அலங்கரிக்கும். இவனே அவள்  தலைமுடியில் சூட்டிவிட்டு அழகு
பார்ப்பான். அவள் வீட்டிற்குள் அங்கும் இங்கும் மான்போல துள்ளி
நடந்து  செல்லும் கொள்ளை அழகிலும், தலையில் அங்கும் இங்குமாக ஊஞ்சலாடும்  மல்லிகைச் சரத்தின் ஆட்டத்திலும்  மனம் கிறங்கிப்
போவான்.

இந்தக் கூத்து நடு இரவு வரை நீடிக்கும். (எப்படி நீடிக்கும் என்று கேட்பவர்கள், பதிவை விட்டு விலகவும்)

பிறகு அசதியில் உறங்கிப் போவான்.

காலையில் காட்சி மாறியிருக்கும். மங்கை நல்லாள் எழுந்து மஞ்சள்
பூசிக் குளித்து, தேவதை போல தன்னை  அலங்கரித்துக் கொண்டு
வந்து நமது நாயகனுக்குக் காப்பி கொடுப்பாள். அவன் அதற்குள்
எழுந்து பல் துலக்கி இருப்பான். பல் துலக்காமல் காப்பியா? என்று
கேட்கும் மேதாவிகளுக்காக இந்த வரி.

சரி கதைக்கு வருகிறேன். இரவு படுக்கையில் கசங்கி உதிர்ந்தது போக
மீதிச் சரம் மட்டுமே இப்போது அவள்  கூந்தலில் இருக்கும். நோயில்
அடிபட்ட பீர்க்கங்காய் போல இருக்கும். பார்ப்பதற்குச் சுவையாக
இருக்காது.

முதல் நாளே அதைக் கண்ணுற்ற நாயகன், காலையில்  வைத்துக்
கொள்ள வென்று தனியாக ஊட்டி ரோஜாப் பூங்கொத்து ஒன்றையும்
வாங்கிக் கொண்டு வரத்துவங்கினான்..

அவளும் தன் கணவனின் அன்பை நினைத்து பல சமயங்களில் உருகிப் போயிருக்கிறாள்

உனக்கென நான்: எனக்கென நீ என்று வாழ்க்கை சொர்க்கமாக இருந்தது

எல்லாம் சுமூகமாகப் போய்க் கொண்டிருந்தால் கதையை எப்படி நகர்த்துவது?

ஆகவே விதிப்படி ஒரு திருப்பம் ஏற்பட்டது.

என்ன திருப்பம்?

ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
மோகம் முப்பது நாள் - ஆசை அறுபது நாள் என்பதுதான் விதி

அதன்படியே அவன் வாழ்விலும் நடந்தது.

அவனுக்கு ஈர்ப்பு குறைந்தது. அதாவது மல்லிகைச் சரத்துடன் தன்
மனைவி வலம் வருவதைப் பார்த்து ரசிக்கும்  ஈர்ப்பு குறைந்தது.

பூவிற்காக தினமும் நூறு ரூபாய் செலவு செய்வது தேவைதானா
என்று மனம் யோசிக்க ஆரம்பித்தது. கிரிமினல்  வேஸ்ட் என்று
உள்மனம் போட்டுக் கொடுத்தது.

அடுத்த நாளே நிறுத்திவிட்டான். சாமி படங்களுக்கு வாங்கிவந்த ஒரு முழத்தையும் சேர்த்து நிறுத்திவிட்டான். வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் செம்பருத்தி மலர்களை, பழையபடி சாமி படங்களுக்கு வைத்துக்
கொள்வது என்றும் தீர்மானத்தான்.

வந்தவுடன் மனைவி கேட்டாள்:

“என்னங்க பூ வாங்க மறந்து விட்டீர்களா?”

கஷ்டப்பட்டுப் புன்னையை வரவழைத்துக் கொண்டு பதில் சொன்னான்.

“எப்படீடி மறக்கும் ராஜாத்தி?”

‘பின் ஏங்க வாங்கி வரவில்லை?”

“நீயே ஒரு பூ! உனக்கெதுக்குப் பூ? அதாவது பூவிற்கே பூவெதற்கு?”

“இந்தக் கதையெல்லாம் வேண்டாம்! உண்மையான காரணம் என்ன
என்பதைச் சொல்லுங்கள்!”

“செலவு கணக்கைப் பார்க்கும்போதுதான் உணர்ந்தேன்.  நான் பூ
வாங்கும் பூக்கடைக்காரன், என்னைப் போன்ற  இளைஞர்களை ஏமாற்றுகிறான். நீ வாசலில் செல்லும் பூக்காரியிடம் தினமும்
பத்து ரூபாய்க்குப் பூ வாங்கிவைத்துக்கொள்”

“அந்தப் பணத்தையும் நீங்களே மிச்சம் பிடித்து ஊரில் இருக்கும்
உங்கள் அம்மாவிற்கு அனுப்பி வையுங்கள். அவர்களாவது சந்தோஷப்படட்டும்!”

”அடி போடீ, புரியாதவளே! செலவை எப்போதும் உருப்படியாகச்
செய்ய வேண்டும். உனக்கு மாதம் ஒரு காட்டன்  புடவை வாங்கித்
தருகிறேன். 400 அல்லது 500 செலவானாலும் ஒரு நிறைவு இருக்கும்.
பூ வைப்  போல சேலை அடுத்த நாள் வாடிக் குப்பைக்குப் போகாது”
என்று  சொல்ல வாயெடுத்தவன், சட்டென்று தன் பேச்சை மாற்றி
இப்படிச் சொன்னான்.

“உனக்கு மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன். என்ன
செலவு வேண்டுமென்றாலும் உன் நோக்கப்படி  செய்துகொள். அல்லது
அப்படியே சேர்த்து வை. வருடக்கடைசியில் கூடப் பணம் போட்டு
உனக்கு ஏதாவது நகை நட்டு வாங்கித் தருகிறேன்.”

“ இது சரியான் டீல்” என்று சொல்லி மகிழ்ந்தவள். அவன் பேச்சில்
தான் ஏமாறப் போகிறோம் என்பதை  அப்போது உணரவில்லை.

ஒரு ஆண்டு சென்றது.

ஒரு நாள் அரக்கப் பரக்க வந்தவன், “உன்னிடம் எவ்வளவு பணம்
உள்ளது?” என்று கேட்டான்.

“நீங்கள் கொடுத்தது மற்றும் என் அப்பா இங்கே வந்திருந்தபோது
கொடுத்தது - இரண்டையும் சேர்த்து மொத்தம்  முப்பதாயிரம் ரூபாய் இருக்கிறது”

  “எத்தனை நாளைக்கு இந்தப் பழைய மோட்டார் சைக்கிளிலேயே
என் ராஜாத்தியைக் கூட்டிக் கொண்டு ஊர்  சுற்றுவது என்று பல்சர்
மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கப் போகிறேன். வங்கியில்
லோன் தருவான். ஆனாலும் மார்ஜின் அமவுன்ட் கட்ட வேண்டும்.
அந்தப் பணத்தைக் கொடு” என்று சொன்னவன், அவளைப் பேச விடாமல் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, வந்த வேகத்திலேயே திரும்பிப் போய்விட்டான்.

அவளுக்கு வருத்தம்தான். இருந்தாலும் அவள் மனதில் ஒரு சந்தோஷக் காட்சி!

பறக்கும் பல்சர் மோட்டார் சைக்கிளில் தன் கணவனைக் கட்டிப் பிடித்தவாறு தான் பயணிக்கும் காட்சி அவள்  மனதில் படமாக ஓடத் துவங்கியது!

அதுதான் பெண் உள்ளம்!
-------------------------------------------------------------------------
கதை எப்படியிருக்கிறது கண்மணிகளா?

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

11 comments:

  1. "பூ" வாங்குவதும்வைத்துக்கொள்வதும்
    ப்ப்பூ இவ்வளவு தானா வாழ்க்கை என

    அறிந்து கொள்ள மட்டுமல்ல
    அத்துடன் இந்த தத்துவத்திற்காகவும்

    உதிர்ந்து விடுவோம் என அறிந்தும்
    உறுதியாக கட்டிய நாரில் சிரிக்கும் பூ

    உள்ளபடியே வாழ்க்கை எனும் கட்டில்
    உளம் மகிழ சிரிக்கவேண்டும் என

    ஆனால்
    வாழ்க்கை அன்பு கட்டில் என மறந்து
    வாழ்க்கையே கட்டிலில் என மகிழ்ந்து

    இவர்கள் அவர்களை குறை சொல்லி
    அவர்கள் இவர்களை குறை சொல்லி

    வாழ்க்கையை வாழத் தெரியாத
    கோழைகளாக நீதி மன்றம் செல்லும்

    இளைய தலைகளுக்கு
    இன்று அமைந்த கதை சுவையானது

    வழக்கம் போல் இன்றும்
    வகுப்பறை பதிவிற்கேற்றால் போல்

    சிந்தனைக்கு ஒரு குறள் தந்து
    சிறப்பான வணக்கமும் வாழ்த்துக்களும்


    மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் பலர்காணும் "பூ" ஒக்கும் என்று

    ReplyDelete
  2. வணக்கம் வாத்தியார் ஐயா,

    மாணவர்களது வேண்டுகோளுக்கு இணங்க இப் பூ கதையை உடனடியாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி..

    கதை - அருமை..
    நிதர்சனமான உண்மை..

    வாழ்த்துக்கள் ஐயா..

    ReplyDelete
  3. வணக்கம் வாத்தியார் ஐயா,

    அப்படியே கிருஷ்ணன் சார் சொன்ன,

    //சுஜாதா மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் //

    சொல்லிவிடுங்களேன்.


    நன்றி.


    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  4. //// “எத்தனை நாளைக்கு இந்தப் பழைய மோட்டார் சைக்கிளிலேயே
    என் ராஜாத்தியைக் கூட்டிக் கொண்டு ஊர் சுற்றுவது என்று பல்சர்
    மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கப் போகிறேன். வங்கியில்
    லோன் தருவான். ஆனாலும் மார்ஜின் அமவுன்ட் கட்ட வேண்டும்.
    அந்தப் பணத்தைக் கொடு” என்று சொன்னவன், அவளைப் பேச விடாமல்
    அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, வந்த வேகத்திலேயே திரும்பிப் போய்விட்டான்.///////

    இது தான் கொடுக்குற மாதிரி கொடுத்து எடுக்கிறது மாதிரி பிடுங்குறது போல...

    கதை அருமை சார்.

    ReplyDelete
  5. கதை பூப் போல மென்மையும் மணமுமாக இருக்கிறது.பல்சர் மோட்டார் சைக்கிள் வாங்கியவன் பெண்டாட்டியை பின்னால் அமர்த்திக் கொண்டு செல்லாமல் புதிய'நண்பி'யுடன் வலம் வந்தான்;அப்படி அவள் ஏமாந்தாள்
    என்று கதையைக் கொண்டு சென்றால் அது அழுகை சீரியல் போல ஆகிவிடும். எப்போதும் 'பாஸிடிவ் நோட்'டில் முடிக்கும் ஆசிரியரிடம் அப்படியெல்லாம் எதிர் பார்ப்பது ரொம்ப தப்பு.

    கேஎம்ஆர் கே
    முகாம்:இலண்டன் மாநகரம்

    ReplyDelete
  6. நாயுடு சார்,

    //இவர்கள் அவர்களை குறை சொல்லி
    அவர்கள் இவர்களை குறை சொல்லி//
    இப்படி இல்லாவிட்டால், வாழ்க்கை வாத்தியார் சொன்னார்ப்போல் கசங்கி உதிர்ந்த மீதிச்சரம் மல்லிகைப் பூ போலிருக்கும். ஆனாலும் கதையில் இதற்கு வெரு பொருள் எனக்கு படுகின்ற‌து.

    /(மொத்தம் 10 படங்கள்)/ ரசித்தேன்.

    //கதை எப்படியிருக்கிறது கண்மணிகளா?// நல்ல எச்சரிக்கை, புதுமண‌ப் பெண்களுக்கு...

    ஏ கல்யாணம் செய்துக் கொல்ல‌‌ இருக்கும் கண்மணிகளா, எங்க சார் கதைய கொஞ்சம் நல்லா கேட்டுக்கோங்க

    ReplyDelete
  7. அன்புடன் வணக்கம்
    கதை மிக அருமை... சில தம்பதிகளில் அதையும் தாண்டி ஓடுகிறது. அங்கே மோகம் இல்லை உண்மையான அன்பு இருக்கிறது**
    *** புது பல்சர் பைக்கில் கணவனை கட்டி பிடித்து வலம் வரும் காட்சி .**.
    ஏ கல்யாணம் செய்துக் கொள்ள..(கொல்ல) இருக்கும் கண்மணிகளா, எங்க சார் கதைய கொஞ்சம் நல்லா கேட்டுக்கோங்க**
    புத்தகம் ஆர்டர் கொடுத்துள்ளேன் .. வாங்கி கணக்கு எண் கொடுததால் இங்கே பணம் கட்டி விடலாம்.
    நன்றி வாத்தியார் அய்யா.

    ReplyDelete
  8. //கதை மிக அருமை... சில தம்பதிகளில் அதையும் தாண்டி ஓடுகிறது.//

    super kathai

    ReplyDelete
  9. i like it yar....... niz story

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com