மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.11.18

Astrology: ஜோதிடம்: புதிர்: விவாகம் ஏன் ரத்தானது?


Astrology: ஜோதிடம்: புதிர்: விவாகம் ஏன் ரத்தானது?

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம். அவருக்கு நீண்ட நாள் தாமதித்து அவருடைய 36வது வயதில்தான் திருமணம் நடைபெற்றது. ஆனால் துரதிஷ்ட வசமாக திருமணமான சில மாதங்களிலேயே (ஒரு ஆண்டிற்குள்) திருமண வாழ்வு முடிவிற்கு வந்து விட்டது. ஆமாம். அவருடைய விவாகம் ரத்தில் முடிந்து விட்டது. மனைவியின் உடல் நிலை காரணம்.

இப்போது கேள்விக்கு வருகிறேன்:

திருமணம் ஏன் விவாகரத்தில் முடிந்தது? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!

சரியான விடை 2-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.11.18

உண்மையில் கெளரவர்கள் எத்தனை பேர்?


உண்மையில் கெளரவர்கள் எத்தனை பேர்?

பாண்டவர்கள் ஐவர் என்பது தெரியும் பாண்டவர்களின் அன்னையான குந்திதேவிக்கு சூரியன் அருளால் பிறந்தவர் கர்ணன் ஆக மொத்தம் ஆறு பேர்

கர்ணன் செஞ்சோற்று கடன் தீரவேண்டி கௌரவர்களுடன் இருந்து போரில் உயிர் விட்டான் அதன் பின்பு தான் பாண்டவர்களுக்கே கர்ணன் தங்களது மூத்த சகோதரன் என்று தெரிந்தது

அவருக்கு மட்டுமல்ல ஆசாரியர் துரோணருக்கு சீடனாக கிருபர் சிஷ்யனாக போரில் தங்களால் கொல்லபட்ட துரியோதணன் உட்பட நூறு கௌரவர்களுக்கும் அந்த வம்சத்தின் மூத்த அண்ணனாக இருந்து தர்மர் அந்திமகாரியங்களை செய்தார்.

ஆனால் கௌரவர்கள் நூறுபேரும் குருச்சேத்திர யுத்தத்தில்  மடித்த சில ஆண்டுகளில் இறந்து போன அவர்களின் தந்தையான திருதராஷ்டிரனுக்கு அந்திம க்ரியை செய்தது கௌரவர்களில் ஒருவன் என்பது தெரியுமா?

கௌரவர்கள் நூறுபேர் இறந்த பின் கௌரவரா என கேட்காதீர்கள் கௌரவர்கள் நூற்றொருவர் பின் அவர் ஏன் மற்ற கௌரவர்களுக்கு அந்திம காரியம் செய்யவில்லை என்றால் அதுவும் காரணமாகவே

திருதுராஷ்ட்ரனின் பட்ட மகிஷி காந்தாரியின் மகன்களுக்கு அவர்களது சந்திகளுடன் போரில் மரணமேற்பட்டதால் பாண்டுவின் மகன்களில் மூத்தவரான தர்மர் அந்திம காரியம் செய்தார். தன் தாயின் கர்ப்பத்தில் உதித்தவர் ஆகையால் கர்ணனுக்கும் செய்தார்

ஆனால் திருத்ராஷ்ரனுக்கு அந்திம காரியம் செய்தது  யுயுத்சு என்னும் கௌரவன்

யார் இந்த யுயுத்சு?  இவன் எப்படி கௌரவர்களில் ஒருவன் ஏன் இவன் த்ருத்ராஷ்டனுக்கு மட்டும் அந்திம க்ரியை செய்தான் என்கிறோம் என பார்ப்போம்

அதற்க்கு ஒரு சம்பவத்தை விளக்குகிறேன் உங்களுக்காக

குருசேத்ர யுத்தத்திற்காக தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை எனப் பாண்டவர்களின் நால்வகைப் படைகள் ஒருபுறம் நிற்க  எதிர்ப்புறம் கௌரவர்களின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து ஒன்றுக்கொன்று எதிரெதிராக நின்றிருந்தன.

இருபுறமும் மாபெரும் வீரர்கள் கூட்டம், கையில் வாளோடும் வேலோடும் வில், அம்பு கதை  முதலிய ஆயுதங்களோடும் போரிடத் தயாராய்த் துடிதுடிப்புடன் காத்திருந்தனர்

அதிவிரைவில் யுத்தம் தொடங்கப் போகிறது.

இடைபட்ட நேரத்தில்

அர்ச்சுனன் தன் தேர்த்தட்டில் சாரதியாக வீற்றிருந்த ஸ்ரீகிருஷ்ணனைப் பணிவோடு வணங்கி நேராக பார்த்து மெல்லிய குரலில் உரிமையுடன்  கேட்டான்:

‘‘கண்ணா! இதோ யுத்தம் தொடங்கப் போகிறது. எனக்கு உன்னிடமிருந்து தெளிவான பதில் தேவை.

கண்ணன் கேட்டான் என்ன கேள்விக்கு பதில் வேண்டும் மீண்டும் கீதையில் ஏதேனும் சந்தேகமா? என்றான்

அர்சுனன் :- அது இல்லை கண்ணா இந்த போரில் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் தானே உன் கொள்கை?

அதாவது தீயவர்களை அழித்து அடியவர்களைக் காப்பாற்றுவது! சரிதானே அப்படியானால் கௌரவர்கள் மொத்தபேரும் அழிவார்கள் அல்லவா?’’ என்றான்

கண்ணன்:- அர்ச்சுனா! நீ சொன்னதில் ஒரு பாதி சரி. ஒரு பாதி தவறு. தீயவர்களை அழிப்பேன். ஆனால், கௌரவர்கள் அத்தனை பேரும் அழிவார்கள் என்று சொல்ல முடியாது. கௌரவர்களில் நல்லவர் யாரேனும் இருக்கலாம் அல்லவா?’’ என்றான்

அர்சுனன் துனுக்குற்று்

‘‘கௌரவர்களில் நல்லவரா? பீஷ்மர், துரோணர் கிருபர் சல்லியன் போன்ற நல்லவர்களெல்லாம் கூட, கௌரவர்களோடு கூட்டு சேர்ந்ததால் அழியப் போகிறார்கள் என்கிறபோது கௌரவர்களில் யாரேனும் ஒரு நல்லவன் இருந்தாலும் அவன் கௌரவர்களுடன் இருப்பதால் அழிய வேண்டியவன் தானே? நூறு கௌரவர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள்தானே கண்ணா?’’ என்றான்

கண்ணன் கலகலவென நகைத்தான். ‘‘நூறு கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது சரியல்ல, அர்ச்சுனா! கௌரவர்களில் நூறுபேர் அழிக்கப்படுவார்கள் என்பதே சரி,’’ என்று புதிராக பதில் சொன்னான்.

‘‘நீ சொல்வது புரியவில்லை கண்ணா!’’ என்றான் அர்சுனன்

கண்ணன் சொன்னார் பொறுத்திரு. புரியும்!’’

இவர்கள் இப்படிப் உரையாடிக் கொண்டிருந்த போது

தர்மபுத்ரன் யுத்த களத்தின் மையப் பகுதிக்கு வந்து நின்றார்.

ஏதோ முக்கியமாக ஒன்றை அறிவிக்கும் நோக்கில் வந்திருக்கிறார் என்பதை அவர் நின்ற தோரணையே இருதரப்புக்கும் தெரிவித்தது.

இரு தரப்பு வீரர்களும் அமைதி காத்தனர்.

துரியோதனன் தர்மரையே் வெறித்துப் பார்த்தவாறு அவரது அறிவிப்பைக் கேட்கக் காத்திருந்தான்.

தர்மர் ஒரு அறிவிப்பை உரத்துச் சொல்லலானார்: "வீரர்களே விரைவில் தர்மயுத்தம் தொடங்கவிருக்கிறது இப்போது நம் இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.

எங்கள் அணியிலிருந்து யாரேனும் கௌரவர்களான துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம்.

துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர்களான எங்கள் அணிக்கு வருவதானாலும் வரலாம்"

வீரர்களே எந்த அணியில் தர்ம நெறி மிகுந்து இருக்கிறது என்று கண்டுணர்ந்து அதன் பொருட்டுத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விரும்பினால்  இது கடைசி சந்தர்ப்பம். என்றான்

மேலும்

அப்படி அணி மாறுகிறவர்கள் மேல் இரு தரப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கலாகாது.

அப்படி்அணி மாறியவர்கள் அவரவர்கள் சார்ந்த புதிய அணியின் தரப்பிலேயே்போரிடுவார்கள்.’’ என கம்பீரமாக அறிவித்து விட்டு
தர்மர் சற்று நேரம் அமைதியாய் காத்திருந்தார்.

அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் தர்மனின் அறிவிப்பைக் கேட்டு வியந்தார்கள்.

தர்மபுத்திரரின் அறிவிப்பு அவரது உயர்ந்த பண்பாட்டைப் இரு அணியினருக்கும் புலப்படுத்தியது

இந்தக் கடைசி சந்தர்ப்பத்தில் யாரேனும் கட்சி மாறுவார்களா என்ன? ( இன்றய அரசியல் சூழலை நிணையாதீர்கள்)

தர்மர் தமது மாபெரும் படையைப் பார்த்தார். யாரும் இருந்த இடத்தை விட்டு ஒரு துளி அசைவையும் காட்டவில்லை.

துரியோதனன் தரப்புப் படைவீரர்களைக் கேள்விக் குறியுடன் பார்த்தார் தர்மர்

என்ன ஆச்சரியம்! ஒரே ஒரு தேர் மட்டும் அதில் அமர்ந்திருந்த வீரனைத் தாங்கி கௌரவர் பக்கமிருந்து பாண்டவர் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியது!

‘‘யார் அது, நம் தரப்பிலிருந்து பாண்டவர் தரப்பிற்கு கட்சி மாறுவது?’’  துரியோதனன் உரத்த குரலில் கூச்சலிட்டான்.

அந்தத் தேரில் அமர்ந்திருந்த வீரனை நோக்கி அம்பெய்யவும் முற்பட்டான்.

பாண்டவர் அணிக்குச் செல்லும் வீரனை தொலைவிலிருந்தே உற்றுப் பார்த்தார் பிதாமகர் பீஷ்மர்.

கவசங்களால் உடல் மறைக்கப்பட்டு ஒரே மாதிரி உடை அணிந்த நிலையில் எல்லா வீரர்களும் ஏறக்குறைய ஒன்றுபோல்தான் அவர் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.

என்றாலும் அவன் யார் என்பதை பீஷ்மரின் கூரிய விழிகள் கண்டுகொண்டு விட்டன.

அந்த வீரனை நோக்கி துரியோதனன் வில்லை வளைத்தபோது

"துரியோதனா, சற்றுப் பொறு!’’ என்று குறுக்கிட்டார் பீஷ்மர்.

‘‘அவனைப் போகவிடு. தர்மபுத்ரன் கட்சி மாறுபவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கலாகாது என்றானே? அந்த வீரன் அவன் மனச்சாட்சிப்படி நடக்கிறான். நீ அவனை போகவிடு

நம் படை, அவன் ஒருவனை இழப்பதால் எந்த வகையிலும் வலிமை குறையப் போவதில்லை.

மேலும் நீ அவனை இப்போது கொல்வானேன்?

நம்மிலிருந்து வேறுபட்டுப் பாண்டவர் அணியில் சேர்ந்த வீரனை போர் தொடங்கியதும் நம் வீரர்களில் ஒருவனாலேயே கொல்லப்படுவான்!

அதுவே அவனுக்கான நமது தண்டனை!’’ என்றார்,

பீஷ்மர் சொன்னதைக் கேட்டு துரியோதனன், அம்பைத் தன் அம்பறாத் தூணியில் செருகிக் கொண்டான்.

எதிரணியைச் சார்ந்த பீஷ்மரின் பேச்சைக் கேட்டு கண்ணன் முகத்தில் சிறு புன்முறுவல் படர்ந்தது.

கண்ணன் அர்ச்சுனனிடம் சொன்னான்: ‘‘பீஷ்மர் பெரும் வீரராக இருக்கலாம். ஆனால், முக்காலமும் உணர்ந்தவரல்லர்அல்ல." என்றான்

"ஏன் அப்படிச் சொல்கிறாய் கண்ணா?’’  என்றான் அர்சுனன்

பின்னே?

இதோ நம் அணியில் சேர வருகிறானே அவன் ஒருவன்தான் போர் முடிந்த பின்னும் உயிர் பிழைத்திருக்கப் போகும் ஒரே கௌரவ வீரன். அப்படியிருக்க அவன் கொல்லப்படுவான் என்கிறாரே பீஷ்மர்? அவன் சாதாரணப் படைவீரன் அல்ல. கௌரவர்களில் ஒருவன்!’’  என்றான் கண்ணன்

கண்ணா என்ன சொல்லுகிறாய் அந்த வீரன் "கௌரவர்கள் நூறுபேரில் ஒருவனா?’’ என்றான்

கண்ணன் கூறினான் அர்ச்சுனா! கௌரவர்கள் மொத்தம் நூற்றியோரு பேர்.

நம் அணியில் சேர வருபவன் நூற்றியோரு பேரில் ஒருவன்.’’

கண்ணா எனக்கு ‘‘வியப்பாக இருக்கிறதே! இதுவரை கௌரவர் நூறுபேர் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன்.’’ என்றான்

கண்ணனோ அர்சுனா

‘‘இந்த நூற்றியோராவது கௌரவனுக்கு கௌரவர்கள் உரிய கௌரவம் கொடுக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைப் பிறகு சொல்கிறேன்.

நம் அணிக்கு வரும் இவனை நீயும் அறிவாய். நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஒருமுறை பீமனை கொல்ல துரியோதனன் நீரில் நஞ்சு கலந்து கொடுக்க முற்பட்டானே, அப்போது அதை முன்கூட்டியே பீமனுக்குத் தெரிவித்து பீமன் உயிரைக் காத்தவன் இவன்தான்.

இவன் தர்மநெறியிலிருந்து ஒரு சிறிதும் மாறாமல் இருப்பவன்.

அவனைப்போல் தர்மத்தை விடாமல் அனுசரிப்பவர்களுக்கு என்றும் என் துணை உண்டு.

இவனது உயிரை இறுதிவரை நான் காப்பேன்.

இவன் உயிரை நான் காப்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதையும் இன்றைய போர் முடிந்த பிறகு சாவகாசமாகச் சொல்கிறேன்.

யுத்தம் தொடங்கவிருக்கிறது அர்ச்சுனா! நான் தேரைச் செலுத்தப் போகிறேன். நீ காண்டீபத்தை எடுத்துக்கொண்டு தயாராகு.’’
என்றபடியே

கண்ணன் தேர்க் குதிரைகளின் லகானைப் பற்றி அதைச் சொடுக்கத் தயாரானான்.

தங்கள் அணிக்கு வந்துசேர்ந்த கௌரவனைப் பற்றிய நினைப்பு அர்ச்சுனன் மனத்திலிருந்து முற்றிலும் விலகியது.

அவன் போரிடத் தயாரானான்... சூரியன் அஸ்தமனம் ஆனதும் முதல்நாள் போர் அவ்வளவில் முடிவடைந்தது.

மறுநாள் காலை போரில் மீண்டும் சந்திப்போம் என்று முழக்கமிட்டு, கௌரவர்களும், பாண்டவர்களும் அவரவர் பாசறைக்குத் திரும்பினார்கள்.

பாண்டவர் அணியில் புதிதாய்ச் சேர்ந்த கௌரவ வீரனைத் தன்னுடன் அணைத்து அழைத்துக் கொண்டு பாண்டவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான் ஸ்ரீகிருஷ்ணன்.

பஞ்ச பாண்டவர்கள் மட்டுமல்ல, அங்கே அவர்களது்மனைவி பாஞ்சாலியும் தாயார் குந்திதேவியும் கூட அமர்ந்திருந்தார்கள்.

யுத்தம் எத்தனை நாள் நீடிக்குமோ என்ற கவலை குந்தியின் மனத்தில் கவலைரேகை படர்ந்திருந்ததை அவள் முகம் கண்ணனுக்கு தெரிவித்தது.

தலைவிரி கோலமாக அமர்ந்திருந்த பாஞ்சாலியின் கண்கள் தன்னை அவமானபடுத்திய துச்சாதனன் மேலும் துரியோதனன் மேலும் கொண்ட தாளாத கோபத்தால் சிவப்பேறியிருந்தன.

‘‘கண்ணா! வா வா!’’ என்று கண்ணனைப் பரவசத்தோடு வரவேற்றாள் குந்திதேவி. பாஞ்சாலியும் கண்ணனை இன்முகம்  பொங்க அழைத்தாள்.

கண்ணனையே சரணடைந்து வாழ்ந்த பாண்டவர்கள் கண்ணனுக்கு ஆசனம் அளித்து அமர வைத்தார்கள்.

தன்னுடன் வந்த கௌரவ வீரனைப் பிரியமாகத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான் கண்ணன்

குந்தி, கண்ணன் அழைத்து வந்த இளைஞனை தீவிரமாக ஆராய்ந்தாள்.

வசீகரமான தோற்றம் நற்குணங்களையே கடைப்பிடிப்பதால் வந்த பொலிவு அவன் முகத்தை மேலும் அழகாக்கியிருந்தது.

கண்ணனே அழைத்து வந்திருப்பதால் மிக முக்கியமானவனாகத்தான் இருக்க வேண்டும். யார் இவன் தாயார் கண்களாலே கேள்வி கேட்டாள்.

"இவன் கௌரவர்களில் ஒருவன்!’’ இதைக் கண்ணன் சொல்லி முடிப்பதற்குள்

பாஞ்சாலியின் சிவந்த கண்கள் மேலும் கூடுதலாகச் சிவந்தன

கண்ணன் சொன்னதைக் கேட்டு அவள் அமைதியானாள்.

‘‘இவன் கௌரவர்களை விட்டு விலகி நம் அணிக்கு வந்துவிட்டான்.

உண்மைஈன தர்மம் எங்கிருக்கிறதோ அதை உணர்ந்து கட்சி மாற விரும்புகிறவர்கள் மாறலாம் என்ற தர்மனின் அறிவிப்பைக் கேட்டு இன்று காலை நம் கட்சிக்கு மாறிவிட்டான் இவன்!’’ என்றான் கண்ணன் அப்படியே புதியவனின் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தான்.

புதியவன் குந்திதேவியின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான்.

குந்தி அவனைப் பிரியமாய்ப் பார்த்து மனமார ஆசீர்வதித்தாள்.

பாஞ்சாலியின் விழிகளில் மகிழ்ச்சி தோன்றியது.

‘‘உன் பெயர் என்ன மகனே?’’ குந்தி ஆதரவுடன் கேட்டாள். 

அவன் கம்பீரமாக பதிலளித்தான். ‘‘தர்மநெறி பிறழாமல் வாழும் ஐந்து புதல்வர்களைப் பெற்ற பாக்கியசாலியான அன்னையே! என்னை யுயுத்சு என்று அழைப்பார்கள்!’’

யுயுத்சு! குந்தியின் மனம் அந்தப் பெயரைக் கேட்டதும் யோசனையில் ஆழ்ந்தது.

ஆம். காந்தாரி இவன் பெயரை ஒருமுறை குறிப்பிட்டு இவனைப் பற்றித் தன்னிடம் அங்கலாய்த்திருக்கிறாள்.

பல காலம் முன்னால் நடந்த சம்பவம் காந்தாரி அன்று இவனைக் குறித்து அங்கலாய்த்தது ஏன் என நினைவில்லை.

காந்தாரிக்கு இவனைப் பிடிக்கவில்லை என்ற உண்மை மட்டும் இன்றும் மனத்தில் தேங்கியிருக்கிறது.

அதுசரி. உண்மையில் யார் இவன்? அனைவர் கண்களும் அவனையே பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது

அர்ச்சுனன் குரல். ‘‘கண்ணா! இவன் கௌரவர்களில் ஒருவன் என்றாய். மற்ற கௌரவர்களால் இவன் உரிய மதிப்புடன் நடத்தப்படவில்லை என்றும் சொன்னாய். இப்போது சொல்.
இவன் சரிதம் என்ன?

காந்தாரி பெற்ற கௌரவர்களில் ஒருவன் தானா இவனும்?’’ என்றான்

கண்ணனோ இவன் கௌரவர்களில் ஒருவன், அதாவது, திருதராஷ்டிரரின் மகன். ஆனால், காந்தாரியின் பிள்ளை அல்ல!’’  என்றான்

குந்தி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

அவளுக்குக் காந்தாரி இவனை ஏன் வெறுத்தாள் என்பது புரியத் தொடங்கியது.

கண்ணன் மேலும் விளக்கலானான்: ‘‘காந்தாரி கர்ப்பவதியாய் இருந்தபோது அவள் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. அதனால், கண்ணில்லாத திருதராஷ்டிரருக்குப் பணிவிடை செய்ய அமர்த்தப்பட்டாள் சுகதா என்ற ஒரு பெண்.

அவளது பணிவிடையில் மகிழ்ந்த திருதராஷ்டிரரின் வற்புறுத்தலால் சற்று எல்லை மீறியதன் விளைவுதான் யுயுத்சு.
யுயுத்சு தங்கள் தந்தைக்குப் பிறந்தவன் என்றாலும் பணிப்பெண்ணின் மகன் என்பதால் இவன் பிற கௌரவர்களால் அலட்சியமாக நடத்தப்பட்டான்.

அதோடு விதுரனைப்போல் தர்ம நெறியிலேயே இவன் சிந்தனை சென்றதும்கூட, மற்ற கௌரவர்கள் இவனை வெறுக்கக் காரணமாயிற்று.

தர்மநெறியைப் போற்றும் இவன் அதர்ம அணியில் தொடர்ந்து இருக்க விரும்பாததால் நம் அணிக்கு வந்துவிட்டான்.’’  என்றார்

அதுசரி கண்ணா! எங்களைக் காப்பதுபோல இவன் உயிரையும் இறுதிவரை காப்பேன் என்றாயே? நீ அப்படிச் சொன்னதன் பின்னணி என்ன?’’ அர்ச்சுனன் கேட்டான்.

‘‘அர்ச்சுனா! போரில் யுயுத்சுவைத் தவிர எஞ்சியுள்ள அத்தனை கௌரவ சகோதரர்களும் அழிக்கப்படுவார்கள். போர் முடிந்து சிறிது காலத்திற்குப் பிறகு திருதராஷ்டிரனும் காலமாவான்.

மாமன்னன் திருதராஷ்டிரன் காலமாகும்போது, அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரே ஒரு பிள்ளையாவது மிஞ்ச வேண்டாமா? இதோ இந்த யுயுத்சு தான் திருதராஷ்டிரனுக்கு இறுதிக் கடன் செய்யப் போகிற அந்த ஒரே பிள்ளை!’’

இந்தச் செய்திகளைக் கேட்டு குந்தி ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள். ‘‘கௌரவ சகோதரர்கள் நூறுபேர் அல்ல, நூற்றியோரு பேர் என்று திடீரென்று வெளிப்பட்ட இந்த உண்மை எனக்கு வியப்பாக இருக்கிறது!’’ என்றாள் அவள்.

அவளை பாண்டவர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.

யுதிஷ்டிரர் யுயுத்சுவை இழுத்து அணைத்துக் கொள்ள, பிற பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவனைத் தட்டிக்கொடுத்தார்கள்.

கண்ணனின் தயவால் தர்மம் வென்றது.

பின்னொருநாள் த்ருத்ராஷ்ட்ரன் மறைந்த பின் யுயுத்சு தன் தகப்பனாருக்கான அந்திம கடனை கண்ணன் விருப்பப் படியே செய்தான்

நாமும் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூயோமாய் தொழுது நம் துயரம் தீர்போமாக!!
---------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.11.18

இருதய அடைப்பினை நீக்க வேண்டாம்..!


இருதய அடைப்பினை நீக்க வேண்டாம்..! 

மருத்துவர் பி.எம்.ஹெக்டே , வயது 80 #மருத்துவத்துறையை_தோலுரிக்கிறார்.

கர்நாடக மாநிலம், உடுப்பியை சேர்ந்த திரு.பெல்ல மோனப்ப ஹெக்டே, இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு இருதய மருத்துவர்  (Cardiologist) , இந்திய அரசின் பத்பவிபூஷன் விருது பெற்றவர். மருத்துவர் தவிர அவர் சிறந்த கல்வியாளரும்
மருந்தியல்  ஆராய்ச்சியாளருமாவார்.

இவர் , கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த கருந்தரங்கில் பேசியபோது கூறியதே கீழுள்ள காணொளி. 
அதாவது 2017 முதல் , மருத்துவ உலகிலும் மற்றும்
மருத்துவமனையே கதி என கிடந்த சாமான்ய மனிதருக்கும்
பெரும்  அதிர்வலைகளை கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கும் விஷயமாக பரவி வருகிறது.

அதாவது , அவர் கூறுவது என்னவென்றால், "  இருதயத்தில் அடைப்பு இருந்தால் தயவு செய்து அதனை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம். Blocks அகற்றுகிறோம் என்கிற  பெயரில் stent உதவியுடன் ஆஞ்சியோபிளாஸ்டி மூலமும் பைபாஸ் மூலமும் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம்" என  போட்டு உடைத்துள்ளார்.

மேலும் அவர் கூறுவதாவது, இயற்கையாக இருதயத்தில் ஒரு அடைப்பு உண்டாகுமாயின், நரம்பு தனக்குத்தானே வேற ஒரு பாதையை கண்டுபிடித்து ரத்த ஓட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்கிறதாம்..இறைவன் நமக்கு கொடுத்த வரம் அது என்கிறார். ஆக்ஸிஜன் குறைந்த அளவு உள்ளிழுக்கப்படுவது இருதயத்திற்கு நன்மையை தான் தரும் என கூறும் அவர். அதிகாலையில் வெற்று வயிற்றுடன் செய்ய வேண்டிய ஒரு உடற்பயிற்சியையும் கற்றுத்தருகிறார். அது தினசரி நாம்  அனைவரும் எளிதாக செய்யக்கூடிய பிராணாயாமமத்தை ஒத்ததே.

இவர் தாமாக இதை கூறவில்லை என்றும் science  translational Medicine எனும் உலகப்பிரபலமடைந்த மருத்துவ மாத இதழில் 2011ல்  வெளியான ஒரு கட்டுரையை  அடிப்படையாக வைத்து, ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஜெர்மன் உள்ளிட்ட நான்கு பல்கலைக்கழக மருத்துவக்குழுக்களை கொண்டு Placebo Effect (volume 3- Page 70) எனப்படும் , ஜெர்மன் மருத்துவர் ஒருவரின் கூற்றை மையமாக வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியின் விளைவினை தாம் விளக்குவதாக கூறினார்.

அதாவது குறிப்பிட்ட ஒரு 30 இருதய நோயாளிகளுக்கு  Severe Painkiller எனப்படும் சக்திவாய்ந்த வலிநிவாரணியான Morphine ஐ கொடுத்து, உங்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று கூறப்பட்டதாம். உடனடியாக அவர்களது வலிகள் குறைந்து,  நிதான செயல்பாட்டிற்கு வந்த இருதயத்தின்  துடிப்பை கவனித்த அவர்களுக்கு ஆச்சரியம் பிளாசிபோ எபக்ட் வேலை செய்துள்ளது. ஆனால் மொர்பின் என அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்து சாதாரண விட்டமின் மாத்திரைகளாம். இன்னொரு செட் நோயாளிகளுக்கு வெறும் சலைனை ( உப்புநீர் ) கொடுத்து மோர்பின் என கூறியுள்ளார், அவர்களும் குணமடைந்துள்ளார்கள்.

இருதய அடைப்பை நீக்குவதை விட அதை அப்படியே விட்டுவிடுவது இருதயத்தின் ஆயுளை நீடிக்கும். ஆஞ்சியோ செய்வது  இருமடங்கு மீண்டும் இதயவலியை கொண்டாக்கும் என்றும் பைபாஸ் செய்வது நான்குமடங்கு வாதம் அடிக்க வழிவகுக்கும்  என்றும்...இருதய செயலிழப்பு , திடீர் மரணித்திற்கு வழிவகுக்கும் என்று கூறி...இருதய அடைப்பு நீக்குதல், ஆஞ்சியோ,பைபாஸ்,  ஸ்டன்ட் வைப்பது என அத்தனையும் வியாபார நோக்குடன் செய்யப்படும் கயவாணித்தனம் என்கிறார்.

மேலும் திரு.ஹெக்டே ,சென்னை ஸ்டான்லியில் இருந்த சமயத்தில், சுப்ரமணிய சாமி தம்மிடம், இருதய அடைப்பு நீக்கத்திற்காக வந்த்தாகவும் அதற்கு  டாக்டர், அதல்லாம் தேவையில்லை போங்க...என்று கூறியவுடன் சு.சாமி கோபமடைந்து டாக்டரை திட்டியதாகவும் கூறி சிரிக்கிறார் பி.எம்.ஹெக்டே.

Placebo Effect : மனிதன் நோயுற்றவுடன் மருந்து என்று எதை கொடுத்தாலும் அதன் மீது நம்பிக்கை வைத்து 
பயபக்தியுடன் பத்தியத்துடன் உண்கிறான். அந்த மருந்து வேலை செய்வதை விட அவனது மூளை, தமது வலிக்கான மருந்து 
கிடைத்துவிட்டது என நினைத்து சமாதானமடைந்து, டென்சனை குறைத்து நிவாரணத்தை பரப்ப தொடங்குகிறது. எனவே 
உடலில் நோய் குணமாக , மருந்தைவிட நம்பிக்கையே கைகொடுக்கிறது.

[10/18, 11:26 PM] misssilecharan19: உண்மையான  செய்தி. இந்த செய்தி இந்து ஆங்கில நாளிதழில் வந்துள்ளது.
------------------------------------
மேலும் படிக்க: https://en.wikipedia.org/wiki/Belle_Monappa_Hegde
https://www.thehindu.com/society/Matters-of-the-heart/article17139237.ece
------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.11.18

வாட்ஸ் ஆப்பில் அழகிய தமிழ்


வாட்ஸ் ஆப்பில் அழகிய தமிழ்

கைவலிக்க இனி தமிழில் டைப் செய்ய வேண்டாம்

தமிழ் எழுதத் தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம்

தமிழ் டைப்பிங் கஷ்டம் என்பது இனி இல்லை

ஆச்சரியம், அருமை. எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் வார்த்தைகள்.

நீங்கள் பேசினாலே தமிழில் அதுவாகவே டைப் ஆகிறது

வழி

play Store செல்லவும்
Gboard app என டைப் செய்து download செய்யவும்
உடனடியாக வாட்ஸ் ஆப் போகவும்
வழக்கம்போல இருக்கும் கீபோர்டு சற்றே வித்தியாசமாக தெரியும்
தமிழ் கீ போர்டை செலக்ட் செய்யவும்

கீபோர்ட் மேலே வலதுபுறம் பச்சை கலர் மைக் இருக்கும் அதில் பேசக்கூடாது
அந்த பச்சைக் கலர் மைக்குக்கு கீழே கருப்பு கலரில் சின்ன மைக் இருக்கும்
ஜஸ்ட் அதை பிரஸ் செய்துவிட்டு கையை எடுத்துவிடலாம்
speak now என வரும்

நீங்கள் பேசினால் உடனே தமிழில் டைப் ஆகும்

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்

தூய தமிழில் பேச வேண்டும்

செய்தி வாசிப்பாளர்களை போல தெளிவாக பேசினால் வார்த்தை மாறாமல், பிழை இல்லாமல் அச்சு அசலாக நீங்கள் டைப் செய்தது போலவே வரும்

முயற்சி செய்து பாருங்கள்

குறிப்பு

ஆன்ட்ராய்டு மொபைலில் மட்டுமே வேலை செய்யும் என நினைக்கிறேன்

Input language ல் தமிழ் செலக்ட் செய்ய வேண்டும் அதில் gboard ஐ செலக்ட் செய்ய வேண்டும்

நீண்ட பதிவு போல இருக்கும்  ஆனால் செய்து பார்த்தால் இரண்டே நிமிடம்தான்

இனி ஆங்கிலத்தில் வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்புவதைத் தவிருங்கள்

ஏற்கனவே இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் இவ்வளவு எழுத்துப்பிழை இல்லாமல் நான் இதுவரை கண்டதில்லை

நன்றி
----------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.11.18

கஜ புயலின் தாக்கமும் சேவாலயாவின் ஆக்கமும் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍


கஜ புயலின் தாக்கமும் சேவாலயாவின் ஆக்கமும்
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍================================================
நமது வகுப்பறையின் மூத்த மாணவர் ஒருவரின் வேண்டுகோளை அப்படியே பிரசுரித்துள்ளேன். அதனைப் படித்து உங்களால்
முடிந்த உதவிகளை அவருக்கும், அவர் சார்ந்திருக்கும் சேவாலயா நிறுவனத்திற்கும் நல்க வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
======================================
திரு KMRK அவர்களின் கடிதம் தொடர்கிறது:

சேவாலயா 30 ஆண்டுகளாக இயங்கிவரும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.அதனைத் துவங்கி  நன்கு வழிநடத்திவரும் திரு முரளிதரன் அவர்களை 30 ஆண்டுகளாக அறிவேன்.10 அனாதை/ஏழைச் சிறுவர்களுடன் துவங்கிய சேவாலயா, இன்று 2100 பிள்ளைகள் படிக்கும் மேல்நிலைப்பள்ளி,
200 ஆண்,பெண் அனாதை/ஏழைப் பிள்ளைகளுக்கான விடுதி,
80 முதியவர்க‌ள் வசிக்கும் இலவச முதியோர் இல்லம், 12 படுக்கைகள் உள்ள‌ மருத்துவமனை,80 கிரமங்களுக்குச் சென்று வைத்தியம் செய்யும் மூன்று நடமாடும் மருத்துவ வேன்கள்,பல்வேறு இடங்களில் கைத்தொழில் பயிற்சி அளிக்கும் சமுதாயக்கல்லூரிகள், 80 மடி வற்றிய‌ பசுமாடுகள்  உள்ள கோசாலா,இயற்கை வேளாண்மை,பேரிடர் மேலாண்மை....
இப்படிப் பல சேவைகள் செய்து வரும் ஓர்
அனுபவமிக்கத்  தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.

சுனாமி, சென்னை வெள்ளம், ஒக்கி புயல், வார்தா புயல், இப்போது கஜாபுயல் ஆகிய நேரங்களில் விறைந்து சென்று உடனடித் தேவைகளும், நீண்ட நாள் நிவாரணமும் அளித்துள்ளோம்.

தஞ்சாவூரில் நான் 38 ஆண்டுகள் வசித்தேன். அங்கிருந்த
என் வீட்டை விற்று கடன்கள் அடைத்தது போக , 8000 சதுர அடி
பிளாட் வாங்கிப்போட்டேன்.அதில் பாதியை இரண்டாண்டுகளுக்கு முன்பாக சேவலயாவிற்கு தானமாகக் கொடுத்துவிட்டேன்.அந்த இடத்தில் சேவாலயா ஒரு 20 பேருக்கான முதியோரில்லம் துவங்கி கடந்த மூன்று மாதமாக நடத்தி வருகிறது.(சேவாலயாவின் காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு இலவச முதியோர் இல்லம்.) காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் எனது மறைந்த தந்தையார். சுதந்திரப்போராட்ட வீரர்.

 கட்டிடம் பாதியளவில் நிற்கிறது.(படத்தில் காண்க)


ஆகவே சேவாலயாவின் கிளை இப்போது தஞ்சாவூரில் இயங்கி வருகிறது.

கஜ புயல் வந்து தாக்கியவுடனேயே உணவுத் தேவை இருக்கும் என்று யூகித்து மூன்று நாட்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்களைத் தயாரித்து வினியோகித்தோம்.

பின்னர் மளிகைப்பொருட்கள்,டார்பாலின், அரிசி, டார்ச் லைட், மெழுகு வர்த்தி,போர்வை, போன்ற அத்தியாவசியப் பொருட்களை விலை கொடுத்து வாங்கி சீராகப்பிரித்து புயல் சேதம் அதிகம் இருந்த வேதாரண்யம், தலைஞாயிறு,, கோடியக்காடு பகுதிகளுக்கு வேனில் எடுத்துச் சென்று வினியோகித்தோம்.

அனுபவம் காரணமாக வழியில் கும்பல் வழிமறித்துப் பிடுங்கும் என்பதை யூகித்து காலை 3.30 மணிக்கே கிளம்பி வேதாரண்யததை
6 மணிக்குச்சென்று அடைந்தோம்.சுமார் 300 குடும்பங்களுக்குப் பொருட்களாக வினியோகித்தோம்.

கஜ புயலின் அழிவின் தாக்கம்  அளவிடமுடியாதது. எனவே எவ்வளவு உதவி கிடைத்தாலும் அதனைப்பெற்று ஏழை எளிய மக்களுக்குக் கொண்டு செல்லத் தயாராக உள்ளோம்.

உதவிக்கரம் அளியுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என் மின் அஞ்சல் முகவரி.:kmrk1949@gmail.com  தொலை பேசி 90475 16699

தொடர்பு கொண்டால் நன்கொடை அனுப்பவேண்டிய வங்கிக்கணக்கு எண் அனுப்புகிறேன். உங்கள் நன்கொடைக்கு வருமானவரி விலக்கு 80G பிரிவின் படி உண்டு.எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் அனுப்புங்கள். நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!அதுவுமற்றவ்ர் வாய்ச்சொல் அருளீர்! ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!

மிக்க நன்றி!
K.முத்துராம கிருஷ்ணன்  (KMRK)
=======================================================


=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Astrology: ஜோதிடம்: 23-11-2018 புதிருக்கான விடை!!!



Astrology: ஜோதிடம்: 23-11-2018 புதிருக்கான விடை!!!

கேட்கப்பெற்ற கேள்வி ஒரே கேள்விதான்.
ஜாதகருக்கு ஏன் எப்போதும் வரவைவிட  செலவே அதிகமாக உள்ளது?

பதில்
2ம் வீட்டுக்காரர் புதன் 12ல் அமர்ந்துள்ளார்.
அதாவது பண வரவிற்கான வீட்டுக்காரர் 12ம் வீடான விரைய வீட்டில் அமர்ந்துள்ளார். வரவைவிட  எப்போதும் அதிகமான செலவுகளுக்கு அதுவே முக்கியமான காரணம்!
தனகாரகன் குரு பகவான், ராகுவின் பிடியில் உள்ளார் என்பதைப் போன்ற வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியமானகாரணம்
2ம் வீட்டதிபதி 12ல் அமர்ந்ததுதான்

இந்தவாரம் 11 அன்பர்கள் நன்றாகப் பதில் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னைய பாராட்டுக்கள்! அவர்களின்
பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

அடுத்த வெள்ளிக்கிழமை வேறு ஒரு புதிருடன் மீண்டும் சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
=========================================
1
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
23-11-2018 இன்று தரப்பட்டுள்ள ஜாதகம் ரிஷப லக்ன ஜாதகம். லக்னத்தில் சுக்கிரன், சூரியன், குரு, ராகு ஆகியோர் உள்ளனர்.
தன ஸ்தானாதிபதி புதன் விரய ஸ்தானத்தில் உள்ளார். லாபஸ்தானாதிபதி குரு சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் ஆகியுள்ளார்.
லக்னம் ராகுவின் பிடியில் உள்ளது.ஆகவே வரவைவிட செலவு அதிகமாக ஜாதகருக்கு உள்ளது.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Friday, November 23, 2018 2:02:00 PM
-----------------------------------------------------
2
Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா வணக்கம்!
கொடுக்கப் பட்டுள்ள அன்பரின் ஜாதகத்தின் அம்சங்கள்
ரிஷப லக்னம். பகை கிரகங்கள் சூரியனும் குருவும் ராகுவுடன் இணந்து லக்கினத்தில் அமர்ந்ததால் லக்கினமும் லக்கினாதிபதி
சுக்கிரனும் கெட்டுள்ளது. குரு 8ம் பதி லக்கினத்தில் கேடு விளைவிக்கும் அமைப்பு.
வருமானத்தைக் குறிக்கும் 2ம் பதி புதன் 12 வது வீடான விரய ஸ்தானத்தில்.
எவ்வளவு வருமானம் வந்தாலும் விரயமாகிக் கொண்டு இருக்கும் அமைப்பு.
9ம் பதி சனி யோகாதிபதியாகி 10ல் அமர்ந்தாலும் தனது 3ம் பார்வையால் 12மிடமான விரய ஸ்தானத்தை பார்த்து
பலப்படுத்துகிறது.விரையாதிபதி செவ்வாயின் பார்வையால் யோகாதிபதி சனியும் 10மிடமும்,லாப ஸ்தானமான 11மிடமும்
கெட்டுள்ளது.
குருவின் பார்வையால் 9மிட பலத்தால் பணம் வந்தாலும் 12மிடம் அதிக பலம் பெற்றுள்ளதால் எப்போதும் பற்றாக்குறையே மிஞ்சும்.
அன்புடன்
-பொன்னுசாமி.
Friday, November 23, 2018 2:09:00 PM
---------------------------------------------------------
3
Blogger J Murugan said...
தனாதிபதி+பூர்வபுண்யாதிபதி ஆகிய புதன் விரயம் சென்றது மற்றும் அந்த புதன் மீது பாதகாதிபதியின் பார்வை.
பாக்கியாதிபதி அஷ்டமாதிபதி குரு சாரம் பெற்றது.
பொதுவான தனகாரகன் இராகுவின் பிடியில் இருப்பதும்
ஆகிய இவை அனைத்தும் சேர்ந்து வரவுக்கு மிஞ்சிய செலவுகளைத் தந்தது.
Friday, November 23, 2018 2:17:00 PM
---------------------------------------------------------
4
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir, Above person born on29/05/1965 time 6.30am 2nd lord mercury in 12th house and Jupiter is in Graha yutti and combustion with sun hence he spend more money than earning
Friday, November 23, 2018 3:17:00 PM
--------------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 29 மே 1965 அன்று காலை 6 மணி 32 நிமிடஙகளுக்குப் பிறந்தவர்.
லக்கின‌த்திற்குப் பன்னிரண்டாம் இடத்தில், விரயத்தில், தன‌ ஸ்தானதிபதி புதன் மறைந்தது.தனகாரகன் குரு லக்கினத்திற்கு
8க்கும் உரியவர்,அவர் லக்கினத்தில்
ராகு, கேது, சூரியனால் பாதிக்கப்பட்டவர். சூரியனால் குரு அஸ்தங்கதம்.
இக்காரணங்கள் விரயத்தைக் கொடுத்தது.
Friday, November 23, 2018 8:31:00 PM
-----------------------------------------------------
6
Blogger Sanjai said...
2 க்கு உடைய தனஸ்தானாதிபதி (புதன்) 12 ல் (மறைவு ஸ்தானத்தில்). ஆகவே வரவுக்கு மீறிய செலவு.
Friday, November 23, 2018 9:37:00 PM
--------------------------------------------------------
7
Blogger sfpl fab said...
Answar for quiz 23.11.2018
Dob for the horoscope person on 29.05.1965 time 6.10am
1-Second lard in 12th house
2.Second lard in enemy house
3.Saturn saw second lard
4.Saturn saw moon (punarpu thosam)
Above all reasons for economically problem for him
Saturday, November 24, 2018 12:17:00 PM
--------------------------------------------------------------
8
Blogger adithan said...
வணக்கம் ஐயா,லக்னத்தில் சூரியன் மட்டுமே சுபர்.சுக்ரன் லக்னாதிபதி என்பதால் சமம்.குரு,ராகு மற்றும் மாந்தி பாப
கிரகங்கள்.சுபரான 2ம் அதிபதி,12ல் லக்ன பாபரான சந்திரனுடன் சேர்ந்து மறைவு.அடுத்து வருமானம் வரும் 10 ம் இடத்தில்
பாக்யாதிபதியும் யோககாரனும் ஆன சனி ஆட்சி.அதே சனி அம்சத்தில் நீசம்.வருமானமே அதிகம் வர வாய்பில்லை.4ம் இடத்தில்
அமர்ந்த சுபாரான செவ்வாய்க்கும் அதே சனியின் பார்வையால்,4ம் இடத்தின் சுகங்களை அனுபவிக்க முடியவில்லை.வருமானம்
வரும் 10ம் இடமும் சேமிக்கும் இரண்டாம் இடமும்,சுகங்களை அனுபவிக்கும் நாலாமிடமும் கெட்டதே காரணம்.ஸ்திர லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி அம்சத்தில் கெட்டது நன்மையே ஆனாலும்,நன்மைகளை அனுபவிக்க பாதகாதிபதி தசா வரை காத்திருக்க வேண்டும்.நன்றி
Saturday, November 24, 2018 12:50:00 PM
----------------------------------------------------------
9
Blogger P. CHANDRASEKARA AZAD said...
Dear sir
THE FOLLOWING REASONS FOR VARAVU ETTANA AND SELAVU PATHU ANA
1. 2nd house Head Mercury - Lagna thirku 12im veetil - viraya sthanam
2. Dhana Karagan and 11th House House Head Jupiter has spoiled or collapsed by Mandhi and Rahu successfuly.
3. Ascendant lord Venus also spoiled and collapsed by Rahu and Maandhi
thanks & regards
P.CHANDRASEKARA AZAD
Saturday, November 24, 2018 7:42:00 PM
---------------------------------------------------------------
10
Blogger Kannan L R said...
ஐயா வணக்கம்
லக்னாதிபதி சுக்கிரன்ஆட்சி, ராகு மாந்திகூட்டு
நவாம்சத்தில் சுக்கிரன் பகை மற்றும் மாந்தி வீட்டில்...
2ஆம் வீட்டு அதிபதி 12 ல் விரையத்தில் .....
மற்றும் சனி
பார்வை
11ஆம் வீட்டு அதிபதி மாந்தி, ராகு உடன் கூட்டு...
நன்றி
கண்ணன்
Saturday, November 24, 2018 8:01:00 PM
------------------------------------------------------------
11
Blogger Chandrasekaran Suryanarayana said...
ஜாதகர் 29 மே மாதம், 1965 காலை 6.05 மணிக்கு சனி கிழமை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்
1. லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்தில், குரு (8ம் வீட்டு அதிபதி) ராகு , 6ம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் கூட்டணி. கேதுவின்
7ம் பார்வை லக்கினத்தின் மீது.
2. 2ம் வீட்டு அதிபதி புதன் 12ல் இருந்தால் பணம் தங்காது . 11ற்கு உரிய குரு லக்கினத்தில் ராகு கேது பிடியில் . பைப்பும்
அடைபட்டிருக்கிறது.
3. 2 & 11 கெட்டால் பணம் எப்படி வரும்? செல்வம் எப்படி சேரும். ஆகவேதான் கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை.
4. பத்தாம் வீட்டுக்காரன் சனி (39 பரல்) அந்த வீட்டில். கடுமையாக உழைக்க கூடியவர். அரசாங்க உத்தியோகத்தில் இருக்க

கூடியவர்.
5. முக்கியவில்லன்களான 6ஆம் வீட்டுக்காரன் சுக்கிரனும் , எட்டாம் அதிபதி குருவும் லக்கினத்தில் சென்று அடிதடி சண்டையில்
ஈடு பட்டிருக்கிறார்கள்.
6. சுபக்கிரகங்கள் 3ல் ஒன்றுகூட தப்பிக்காமல் கெட்டுப் போயிருக்கின்றன. சுபக்கிரகங்கள் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கை ஒளிமயமாகஇருக்கும்
7. சனியின் 7ம் பார்வையில் 7ம் வீட்டு அதிபதி செவ்வாய் 4ம் வீட்டில் , 7ல் கேது இருந்தால் மனைவி வியாதியில் இருக்க கூடியவர்
அதனால் தான் செலவு அதிகம்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Sunday, November 25, 2018 2:29:00 AM
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.11.18

Astrology: Quiz: ஜோதிடம். புதிர்: வரவு எட்டணா; செலவு பத்தணா!!!!


Astrology: Quiz: ஜோதிடம். புதிர்: வரவு எட்டணா; செலவு பத்தணா!!!!

கொடுத்துள்ள ஜாதகத்தை பொறுமையாக அலசி கேட்டுள்ள ஒரு  கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் சொன்னால் போதும். பதில் சுருக்கமாக இருக்க வேண்டும்

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம். அன்பருக்கு எப்போதுமே வரவிற்கு மேல் செலவாகின்றது.
அதாவது வருமானத்திற்கு மேல் அதிகமாக செலவு ஆகிறது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

உங்கள் பதிலை பின்னூட்டத்தில் (மட்டும்) எழுதுங்கள்!!!!

அனைவரும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவகாசம்! சரியான பதில் 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!!!

கேள்விக்கு உரிய ஜாதகம்:



அன்புடன்
வாத்தியார்
========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.11.18

சுக்லாம் பரதரம் ஆச்சா?'


சுக்லாம் பரதரம் ஆச்சா?' 

மகா பெரியவரின் நகைச்சுவை

காஞ்சிமகாப் பெரியவர் தம் சீடர் ஒருவரைப்  பார்த்து, ''சந்தியா வந்தனம் ஆச்சா? சுக்லாம் பரதரம் ஆச்சா?'' என்று கேட்டார்.

சீடரும், 'ஆச்சு' என்று தலையசைத்தார்.

அதற்கு  மகா பெரியவர், 'சுக்லாம் பரதரம் சொன்னாயான்னு நான் கேட்கலை... ஆச்சான்னு தான் கேட்டேன்” என்றார்.

சீடர் ஒன்றும் புரியாமல் குழம்பினார்.

மகா பெரியவர் சீடரிடம், “சுக்லாம் பரதரம் சொல்லு பார்ப்போம்” என்றார்.

“சுக்லாம் பரதரம் விஷ்ணும்  சசிவர்ணம்
சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப சாந்தயே” என்று சீடர் சொன்னார்.

மகா பெரியவர், “இதற்கு அர்த்தம்  தெரியுமோ?” என்று கேட்டார்.

“தெரியும்” என்று பதிலளித்த சீடர், ''வெள்ளை உள்ளம், யானையின் கருப்பு நிறம், நான்கு கரங்கள், பிரகாசமான முகம், எல்லாரையும் நினைக்கச் செய்யும் உருவம் ஆகியவற்றைக் கொண்ட விநாயகரை நினைத்தால் எல்லா தடைகளும் கவலைகளும்
நீங்கும்,'' என்றார்.

“இதற்கு வேறொரு அர்த்தமும் இருக்கு... அது உனக்குத் தெரியுமோ? என்று சொல்லி  சிரித்தார்.

“சுக்லம்' என்றால் 'வெள்ளை'... அதாவது பால்;

'விஷ்ணும்' என்றால் 'கருப்பு' அதாவது 'டிக்காஷன்';

'சசிவர்ணம்' என்றால்  கருப்பும், வெள்ளையும் கலந்தது...

அதாவது காபி;

'சதுர்புஜம்' என்றால் நான்கு கை. அதாவது மாமியோட இரு கைகளால் காபியைக்  கொடுக்க, மாமாவின் இரு கைகள் அதைப்
பெற்றுக் கொள்ளும்.

'த்யாயேத்' என்றால் 'நினைத்தல்'. அதாவது இப்படி காபி கொடுப்பதை மனதில் நினைப்பது.

பிரசன்ன வதனம்' என்றால் 'மலர்ந்த முகம்' அதாவது காபியை மனதில் நினைத்ததும், மாமாவின்  முகம் மலர்ந்து விடும்.

'சர்வ விக்னோப சாந்தயே' என்றால் 'எல்லா கவலையும் நீங்குதல்'. அதாவது காபி குடித்தால் கவலை நீங்கி  மனம் சாந்தமாகி விடும்.

'சுக்லாம் பரதரம் ஆச்சா?' என்பதில் 'காபி குடிச்சாச்சா' என்பதும் அடங்கியிருக்கிறது என்று தெரிந்து கொண்ட சீடர்கள் தங்களை
மறந்து சிரித்தனர்.
-----------------------------------------------------
படித்து ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.11.18

தன் வினை தன்னைச் சுடாமல் விடாது!

தன் வினை தன்னைச் சுடாமல் விடாது!

சிந்து நாட்டு மன்னனுக்கு ஒரே மகன். பெயர் ஜயத்ரதன். அவன் வளர வளர, தீய குணங்களும் அவனிடம் வளர்ந்தன. பிறருக்குத் துன்பம் இழைப்பதைப் பெரும் மகிழ்ச்சியாகக் கருதினான்.

சிந்து மன்னன் விருத்த க்ஷத்திரன் தன் மகன் செய்யும் கொடுமைகளை அறிவான். ஆயினும் ஒரே மகன் என்ற பாசத்தால் அவனைக் கண்டிக்கவில்லை.

திருமணம் செய்து வைத்தால் அவன் கொடுங்குணம் மாறலாம் என்று எண்ணிய தந்தை, அவனுக்கு துரியோதனன் தங்கை துச்செள்ளையைத் திருமணம் செய்து வைத்தான்.

தந்தையின் எதிர் பார்ப்பு வீணானது. திருமணத்துக்குப்பின் ஜயத்ரதன் கொடுமை எல்லை கடந்து போயிற்று.

"இத்தகைய கொடியவனுக்குக் கேடு நேருமே! யாரிடமாவது சிக்கித் தலை அறுப்புண்டு சாகக் கூடுமே! இனி இவனைத் திருத்தவும் இயலாது. இவன் சாகாமல் காக்கவும் வேண்டும். இதற்கு என்ன வழி?' என்று ஆய்ந்தான். "தவம் செய்து இறைவனிடம் வரம் பெற்று ஒரே மகனைக் காப்போம்' என முடிவு செய்தான்.

காட்டின் நடுவே "சியமந்தம்' என்ற குளம் இருந்தது. அதன் கரையெங்கும் மரங்கள் வானூற ஓங்கி வளர்ந்திருந்தன. வெயில் நுழைய முடியாத சோலையாக அது இருந்தது. தவம் செய்வதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று அதனைத் தேர்ந்தெடுத்தான்.

"என் மகனைக் கொன்று அவன் தலையை நிலத்தில் இடுபவனின் தலை நொறுங்க வேண்டும்' என்று இறைவனிடம் கேட்க வேண்டிய வரத்தையும் தீர்மானித்துக் கொண்டான்.

பல ஆண்டுகள் தவம் செய்தான்; வரமும் பெற்று விட்டான். தவத்தை முடிக்க வேண்டிய தருணம். அந்த சமயத்தில் எதிர் பாராத நிகழ்ச்சி நடந்தது. பாரதப் போரில் அபிமன்யுவை ஜயத்ரதன் வஞ்சனை செய்து கொன்று விட்டான்.

இதை அறிந்த அபிமன்யுவின் தந்தை அர்ஜுனன், "ஜயத்ரதனைக் கொன்றே தீருவேன்' என்று சபதம் பூண்டான். கண்ணன் உதவியால் மறுநாள் மாலை அர்ஜுனன் ஓர் அம்பால் ஜயத்ரதனின் தலையை வெட்டிக் கொன்றான்.

உடனே கண்ணன், ""அர்ஜுனா! அந்தத் தலையை நிலத்தில் பட விடாதே! மேலும் மேலும் அம்பு தொடுத்து சியமந்தகத் தடாகத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் இவன் தந்தையின் கையில் விழச் செய்'' என்றான்.

கண்ணன் சொன்ன படியே அர்ஜுனன் செய்தான். ஜயத்ரதனின் தலை, தவம் செய்து கொண்டிருந்த அவன் தந்தையின் கையில் விழுந்தது. எதிர்பாராது விழுந்தமையால் துணுக்குற்ற தந்தை, தன் மகன் தலையைக் கீழே போட்டான்.

அவன் பெற்ற வரம் பலித்து விட்டது. "என் மகன் தலையை நிலத்தில் இட்டவன் தலை நொறுங்க வேண்டும்' என்பது தானே அவன் பெற்ற வரம்!

இப்போது நிலத்தில் இட்டவன் அவன் தானே! அக்கணமே அவன் தலை நொறுங்கி உயிரிழந்தான். திருந்தாத தீயவனைக் காக்க எண்ணியவன் அத்தீயவனோடு தானும் மாண்டான்.

தீயவர் யாராயினும் திருந்த முயலுதல் வேண்டும். திருந்த இயலாதவன் தீமைக்குத் தக்க தண்டனை தரவேண்டும். அந்தத் தண்டனை பிறர் தந்தால், "தன் வினை தன்னை சுடாது விடுமோ?' என்று ஆறுதல் பெற வேண்டும்.

ஓம் நமோ நாராயணாய நமஹ

ஓம் நாராயணாய போற்றி
----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.11.18

பிறவி மேதையைப் பற்றி சில செய்திகள்!!!


பிறவி மேதையைப் பற்றி சில செய்திகள்!!!

கணித மேதை சகுந்தலா தேவி 👀 பிறந்தநாள்..! 💐

அந்தக் குட்டிப் பெண்ணின் பெயர் தேவி. அவள் அப்பா வித்தியாசமானவர். அவரின் முன்னோர்கள் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள். அவரோ, சர்க்கஸ் பக்கம் போனார். எண்ணற்ற வித்தைகள், பலவித மேஜிக்குகள் என அசத்தினார். அப்பாவைப் பார்த்து அந்தச் சுட்டிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

''அப்பா, எனக்கும் ஏதாச்சும் சொல்லித்தா!' என்றாள். அட்டைகளில் மேஜிக் சொல்லித் தந்தார் அப்பா. கொஞ்ச நேரம்தான், எல்லா அட்டைகளையும் மனப்பாடமாக ஒப்பித்தாள் தேவி. அப்போது அவள் வயது 3.

'இனி சர்க்கஸ் வேண்டாம்’ என முடிவு செய்த அப்பா, மகளைப் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவளின் அதிவேகக் கணக்குப் போடும் ஆற்றலைக் காட்டினார். ''சின்னப் பெண்ணுக்கு இவ்வளவு அறிவா? கூப்பிடு செக் பண்ணிடலாம்'' எனப் பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தன.

வீட்டின் வறுமையைப் போக்க, ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்து, பின் அதுவே வாழ்க்கை ஆகிப்போனது. அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு. இப்போது தேவிக்கு வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா?

916748676920039158098660927585380162483106680144308622407126516427934657040867096593279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305620821016129132845564805780158806771 என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்க மூலத்தைக் கேட்டார்கள்.

கணினி 13,000 கட்டளைகளுக்குப் பிறகு, ஒரு நிமிடத்தில் பதிலைச் சொல்லத் தயாரானபோது, 546372891 என 10 நொடிகள் முன்னமே தேவி சொல்லி விட்டார். அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் நீண்ட கரவொலி எழுப்பினர்.

லண்டன் மாநகரில் 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என இரு எண்களைப் பெருக்கச் சொன்னார்கள். 28 நொடிகளில் விடையைச் சொல்லி, கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார். அவர்தான் சகுந்தலா தேவி.

தான் பள்ளிக்கல்வி பெறாவிட்டாலும் சுட்டிகளுக்காக கணிதத்தை எளிமையாகக் கதை வடிவில் சொல்லும் வகையில் பல நூல்களை எழுதினார். ''கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு, பிறந்த நாள், விளையாட்டு என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது. அதை சுட்டிகளுக்கு சொல்லித் தர வேண்டும். கணிதத்தைக் கதை போலச் சொல்லித் தர வேண்டும்'' என்றார் சகுந்தலா தேவி. இன்று (05/11/18) அவரது பிறந்தநாள்..!

உலகின் அதிவேக மனிதக் கணினியை அன்போடு நினைவுகூர்வோம்.🙏🏼
-------------------------------------------------------------------------
படித்து வியந்தது!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.11.18

கஜா புயலுக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது?


கஜா புயலுக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது?

புயலுக்கு பெயர் வைத்தவர்கள் யார்?

புயல்களும் அதன் பெயர்களும் !

 புயல் என்றவுடன் அனைவர் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே கேள்வி அந்த புயலின் பெயர் என்ன? என்பது தான், ஏனென்றால்
புயலின் தாக்கமும், வீரியமும் அந்த அளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றன. புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க
தொடங்கினார்கள்? எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்? யார் முதலில் பெயர் வைத்தது? இதுவரை
தமிழகத்தை தாக்கிய புயல்கள் எத்தனை? இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இன்று நாம் பார்க்கலாம்.

*புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்?*

வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு
செயல்படுவதற்காகவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் புயல்களுக்கு பெயர் வைக்க தொடங்கினார்கள்.

மேலும் ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம், எந்தெந்த புயல்கள் எந்த
திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

*யார் முதலில் பெயர் வைத்தது?*

இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும்
வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர்.

ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978-களில் இருந்து ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

 பின்பு வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையானது புதுடெல்லியில் உள்ள உலக
வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையமானது 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.

*எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்?*

வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையத்தில் 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டது.

 இதில் ஒவ்வொரு நாடும் தலா 8 பெயர்களை வழங்கியுள்ளது. இதில் இந்திய வழங்கியுள்ள 8 பெயர்களான அக்னி, ஆகாஷ், பிஜ்லி,
ஜல், லெஹர், மேக், சாஹர், வாயு. இவை அனைத்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவை ஆகும்.

*இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் !*

✅ 2005 டிசம்பர் - பானூஸ்
✅ 2008 நவம்பர் - நிஷா
✅ 2010 நவம்பர் - ஜல்
✅ 2011 டிசம்பர் - தானே
✅ 2012 அக்டோபர் - நீலம்
✅ 2013 டிசம்பர் - மடி புயல்
✅ 2015 டிசம்பர் - நாடா
✅ 2016 டிசம்பர் - வர்தா
✅ 2017 நவம்பர் - ஒகி
✅ 2018 நவம்பர் - கஜா

*கஜா புயல் :-*

தமிழகத்தை சமீபத்தில் புரட்டிப் போட்ட புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை இந்த புயலுக்கு பெயர்
வைத்துள்ளது.
----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.11.18

Astrology: 16-11-2018 புதிருக்கான விடை!!!


Astrology: 16-11-2018 புதிருக்கான விடை!!!

கேள்விக்கான பதில்:

ஜாதகர் 15 ஜூலை 1903 அன்று காலை 7 மணிக்குப் பிறந்தவர்.
இது பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் ஜாதகம்.

ஏழாம் இடத்தில் சனீஷ்வரன். களத்திர தோஷம் (அவர் எட்டாம் இடத்திற்கும் அதிபதி அதை மனதில் வையுங்கள்!
இரண்டாம் இடத்திற்கு உரிய சூரியன் 12ல் மறைவு. என்வே குடும்பம் அமையவில்லை.
யோககாரகனான செவ்வாய் ராகு மாந்தியால் பாதிப்பு அடைந்துள்ளார்.
ஆகவே திருமணம் கைகூட வில்லை. முக்கியமான காரணங்களை மட்டும் கூறியுள்ளேன்

மொத்தம் 11 அன்பர்கள் சரியான விடையைச் சொல்லி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள்

மீண்டும் ஒரு புதிருடன் 23-11-2018 அன்று சந்திபோம்

அன்புடன்
வாத்தியார்
===============================
1
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir,the above horoscopes corresponds to King Maker Respected Thiru.Kamaraj Former CM, Born on 15.07.1903 time 7.00am Cancer lagna Lagnalord in 8th house 7th house lord in saturn in seventh kalathira dosa and second house lord in twelfth house with twelfth house lord mercury makes no family and children for him
Friday, November 16, 2018 7:25:00 AM
-------------------------------------------------------------
2
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 15 ஜூலை 1903 அன்று காலை 7 மணி அளவில் பிறந்தவர். பெருந்தலைவர் காமராஜர் ஜாதகம்.
1. லக்கினம் நவாம்சம் இரண்டிலுமே 7ம் இடத்தில் சனி.(என்னுடைய மென்பொருள் நவாம்ச லக்கினத்தினை விருச்சிகம்
எனக்காட்டுகிறது.)
7ம் இடத்துக்காரன் ஏழிலேயே அமர்வது ஒரு களத்திர தோஷமாகும்.
2. 7ம் இடத்துக்காரனான சனீஸ்வரன் வக்கிரம் அடைந்துள்ளார்.
3.லக்கினாதிபதி சந்திரன் 8ல் மறைந்து இரண்டுபக்கமும் சனி ,கேது, வக்கிர குருவால் சூழப்பட்டுள்ளார்.
4. இரணடாம் இடத்திற்கு உரிய சூரியன் 12ல் மறைவு. என்வே குடும்பம் அமையவில்லை.
5.திருமணத்திற்குப் பார்க்க வேண்டிய மற்றொரு இடமான 3ல் செவ்வாய் ராகு மாந்தி. அந்த இடத்திகுரிய புதன் லக்கினத்திற்கு
12ல் மறைவு.
6 யோககாரகனான்ச் செவ்வாய் ராகு மாந்தியால் பாதிப்பு.
7.களத்திரகார்கனான் சுக்கிரன் மற்றும் லக்கினம் சூரியன், செவ்வாய், ராகு மாந்தியால் சூழப்பட்டுள்ளன.
8 பாவாதி பலம் அட்டவணையில் 7ம் இடம் கடைசி ரேங்க் 12 வது ரேங்க் வாங்கியுள்ளது.
Friday, November 16, 2018 9:18:00 AM
------------------------------------------------------------
3
Blogger Mahi said...
வலுவான குருவுடன் கேது இணைந்து சனி பார்வை ஆன்மீகத்தில் ஈடுபாட்டை உண்டாக்கும்.
7 & 8 அதிபன் சனி ஆட்சி
2ம் அதிபதி சூரியன் விரையஸ்தானத்தில் வர்கோத்தமம்
Friday, November 16, 2018 9:26:00 AM
--------------------------------------------------------------------
4
Blogger Kannan L R said...
ஐயா வணக்கம்
**கடக லக்னம், லக்கினாதிபதி சந்திரன் 8ல் மறைவு
**லக்கினத்திற்கு7ஆம் இடத்தில் சனி
**குடும்பஸ்தானம் 2ஆம் அதிபதி, 12ல் மறைவு
**காரகர் சுக்கிரன் பகை வீட்டில் மேலும்
*நவாம்சத்தில் சுக்கிரன் பகை வீட்டில் உள்ளார்.
நன்றி
கண்ணன்
Friday, November 16, 2018 1:05:00 PM
------------------------------------------------------------
5
Blogger sfpl fab said...
Answar for quiz:-15-07.1903,
Our former C.M.K. Kamaraj Heroscope
Un marriage casues:
1.Kadaga lagnam not given family life,Service minded,
2. Satrn in 7th house
3.Second house owner in 12
Friday, November 16, 2018 2:57:00 PM
-------------------------------------------------------------
6
Blogger sundari said...
2nd house sun is sitting in 12th house with mercury that is mercury own house cancer lagana dire enemy strong
saturn in 7th house lagana lord moon in 8th house that too papakathiri lagana lord moon is not supagragam because 8th house 6th house guru sitting in 9th house with kethu he did not get marriage mahadasa jupiter dasa was running babyhood next saturn not good next mercury not good next kethu noot good next sukuran that time he got old age what to do this all fate guru and lagana got sani vision sir
Friday, November 16, 2018 6:17:00 PM
---------------------------------------------------------
7
//////Blogger Ramanathan said...
The following could be the reasons for denial of Marraige
Saturn(7th and 8th lord) aspecting Lagna
Lagna Lord (Moon) in 8th house and positioned in between Ketu and Saturn
8th house(Saturn) is in its 12th house from 8th house
Lord of 2nd house(sun in conjunction with 12th house lord) in 12th house and same place in navamsa(varthagomam)
HoweverVenus(11th house lord) in 2nd house would have ensured wealth to sustain
Saturday, November 17, 2018 9:56:00 AM
--------------------------------------------------------------
8
Blogger ponnusamy gowda said...
அய்யா வணக்கம்!
ஜாதகத்திற்கு சொந்தமான அன்பர் கர்மவீரர் காமராஜர் அய்யா அவர்கள்.
கடக லக்கினக்காரர். லக்கினாதிபதி சந்திரன் 8 மிடத்தில்.6,8,12 இடங்கள் லக்கினாதிபதிக்கு உகந்த இடமல்ல. 7 ம் அதிபதி சனி
பகவான் ஆட்சி வக்கிரத்துடன் அமர்ந்து லக்கினத்தை பார்த்து திருமனத்தை கெடுத்து விட்டார். சனி பகவான் சந்திரனுக்குரிய
திருவோணம் நட்சத்திரத்தில் அமர்ந்து புனர்பூ தோஷம்பெற்றதும் திருமண தடை செய்யும் அமைப்பு.
புத்திரகாரகன் செவ்வாய் 3ல் அமர்ந்து 6ம் பதி குருவின் பார்வை பெறுவதால் புத்திர பாக்கியம் இல்லை. 7ல் திக் பலம் பெற்ற சனி
பகவான் 9 மிட பாக்கியஸ்தானத்தையும் 4 மிட சுக ஸ்தானத்தையும் பார்வை செய்து கெடுத்து விட்டார்.
குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் 12ல் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்தது குடும்ப வாழ்வுக்கு வழி கொடுக்கவில்லை.
-பொன்னுசாமி.
Saturday, November 17, 2018 3:14:00 PM
------------------------------------------------------------------
9
Blogger Saravanan Annamalai said...
acharyajee,
regarding the quiz. Lagnathypathy chandra is in 8th place (maraivusthanam).2nd house lord is in 12th place. Sun (2nd house lord ) is the karagara for family. He is hidden (12th place). jupiter (karagara for children) is also in the 12th place in the enemy raasi (mithuna). Sani has in its vision the lagna from 7th house. Eventhough sukra has in its sight the lagnathypathy moon, it could not result in marriage as 2nd lord is hidden in 12th house.
---A.Saravanan, Pondicherry.
Saturday, November 17, 2018 8:19:00 PM
----------------------------------------------------------------
10
Blogger venkatesh r said...
Astrology: quiz: மணமாலைக்கு என்ன வழி?
கடக லக்கினம், கும்ப ராசி ஜாதகர்.
அவருக்கு திருமணம் பாக்கியம் கிடைக்காதற்கான காரணங்கள்:
1. லக்கினாதிபதி சந்திரன் 8மிடத்தில் மறைந்து கத்திரியின் பிடியில் அம்ர்ந்து வலுவிழ்ந்தது.
2. குடும்பாதிபதி சூரியன் 12ல் அதன் அதிபதி புதனுடன் அமர்ந்து வலுவிழந்தது.
3. 7 மிடத்தில் அதன் அதிபதி சனி அமர்ந்தாலும், அவரே அட்டமாதிபதியுமான காரணத்தினால் அது ஒரு நல்ல அமர்வு அல்ல.
4. களத்திரகாரகன் சுக்கிரன் 2ல் சிம்ம ராசியில் சத்ரு ஸ்தானத்தில். லக்கினாதிபதியின் பார்வை பெற்றாலும், உதவவில்லை.
5. யோக காரகன் செவ்வாய் க்ன்னியில் ராகுவுடன் கூட்டு.
6. ஜாதகரின் கோச்சாரத்தில் 26 வயது வரை சனி தசை, பிறகு 12ம் அதிபதி புதன் த்சை, பிறகு வந்த கேது தசை முடிவத்ற்குள் 50
வயதை அடைந்து விட்டார். திருமண வயதில் வந்த 71/2 சனி பாடாய் படித்தியிருக்கும்.
மேற்கண்ட காரணங்களால், ஜாதகருக்கு திருமண பந்தம் கை கூடவில்லை.
வாத்தியாரின் மேலான அலசலுக்கு காத்திருக்கும்,
இரா. வெங்கடேஷ்.
Saturday, November 17, 2018 8:36:00 PM
-------------------------------------------------------------
11
Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியாரிற்கு
அன்பு வணக்கம்.
1. லக்னாதிபதி சந்திரன் 6ம் வீட்டில் மறைவு. ஃ அவரிற்கு சக்தியில்லை. லக்கினத்திற்கு வக்ர குருவின் 5ம் பார்வை உண்டு
2. 7ம் அதிபதி சனி ஆட்சி ஆனால் சனி வக்ரம்
3. களத்திரக்காரன் சுக்கிரன் 12ம் வீட்டில் மறைவு. ஃ அவரிற்கு சக்தியில்லை
4. குடும்ப ஸ்தானத்திற்குரிய சூரியன் 12ல் மறைவு.
மேலே சொன்ன காரணங்களினாலே கல்யாணம் நடக்கவில்லை.
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Sunday, November 18, 2018 1:50:00 AM
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.11.18

Astrology: quiz: மணமாலைக்கு என்ன வழி?


Astrology: quiz: மணமாலைக்கு என்ன வழி?

கீழே ஒரு அன்பரின் ஜாதகம் உள்ளது. அவருக்குத் திருமணம் நடைபெறவில்லை. கடைசிவரை திருமணம் நடைபெறவில்லை.

திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் என்றும் வைத்துக்கொள்ளலாம். அதற்கு ஜாதகப்படி என்ன காரணம்? எழுதுங்கள்.

அனைவரும் பங்கு கொண்டால் நன்றாக இருக்கும்  இரண்டு நாட்கள் அவகாசம்! சரியான பதில் 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!!!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்!



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.11.18

கவியரசரின் பாடல்கள் கற்றுத்தந்தவை!!!!


கவியரசரின் பாடல்கள் கற்றுத்தந்தவை!!!!

திரைப் பாடல்களில் வாழ்க்கைக் கலையைக் கற்றுத் தந்த கவியரசர்....

காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலினின் மேலே*

எவ்வளவு நாகரிகமான , நாசுக்கான , மென்மையான வரிகள் ...

இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா இந்த காலத்தில் என்று மலைக்க வைக்கும் வார்த்தைகள் ...

அந்த வரிகள் மென்மையாக இருந்தும் பார்க்கும் பார்வையில் ஒருவர் கொச்சை படுத்தி இருக்கலாம் ...

காம கணைகளை கண்கள் மூலம்  அள்ளி வீசி இருக்கலாம் ...

ஆனால் நம்மவர் கண்ணதாசன் வரிகளுக்கு அமரத்துவம் வாங்கி கொடுத்தார் ...

அதை சொல்லும் விதம் , அதில் அடங்கியுள்ள பெருமை , ஆண்மை என்ற கர்வம் அதே சமயத்தில் பெண்மையை மதிக்கும் பார்வை

, அவள் அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறாள் என்று கண்களில் தேக்கும் ஏக்கம் எல்லாமே அரை நொடியில் ...

*அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே*

நானும் உனக்கு  சற்றும் இளைத்தவள் அல்ல ...

நீயோ எனக்கு உன் பரிசை பரந்து விரிந்து இருக்கும் இந்த கட்டிலின் மேலே தந்தாய் ...

அதற்கு நான் உயிர் கொடுத்தேன் உடல் கொடுத்தேன் , பேசும் சக்தி கொடுத்தேன் , பரிசு ஒரு சின்ன தொட்டிலுக்குள் அடங்கி
விட்டது என்று எண்ணாதே ...

அந்த பரிசுக்கு விலை ஏதும் இல்லை என்கிறாள் துணைவி ...

நாணம் ஒரு புறம் பெருமை ஒரு புறம் அதே உணர்ச்சிகளில் அந்த பரிசை பார்க்கிறாள் ...

அந்த பரிசும் அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்கிறது ...

பெண்மையை மதிக்கும் ஒருவனுக்கும் ஆண்மையை ஆதரிக்கும் ஒரு பெண்ணுக்கும் பரிசாக வந்ததை எண்ணி பெருமை படுகிறது

முழு பாடலை அலச வேண்டிய அவசியம் இல்லை ... இந்த இரண்டு வரிகள் போதும் ...

எங்கிருந்தோ என் நினைவுகளை தொந்தரவு செய்ததைப்போல் சில பாடல் வரிகள் காற்றில் இருக்கும் அசுத்தத்துடன் பறந்து
வந்தன ...

கல்யாணம் தான் பண்ணிக்கிட்டு     .... பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு .

கைகள் என்னை கேட்காமல் ஓடிச்சென்று என் இரு காதுகளையும் பொத்திக்கொண்டன ...

கண்கள்,  தான் சேர்த்து வைத்த உப்பு நீரை கீழே கொட்டிக்கொண்டிருந்தன   ...

வாய் மட்டும் ... அந்த நாளும் வந்திடாதா என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தன ....😰😰
----------------------------------------------------------------------
2
அந்த காலத்திலேயே கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசனத்தோடு internet and online shopping பத்தி ஒரு பாட்டு எழுதி இருக்கார்.

தேடினேன் வந்தது - Google search

நாடினேன் தந்தது - Amazon / online shops

வாசலில் நின்றது - UBER / SWIGGY / ZOMOTO

வாழ வா என்றது - Matrimony dot com🌹
--------------------------------------------------------------------
படித்து பரவசப்பட்டது!
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.11.18

வெள்ள நீரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகள்!!!!


வெள்ள நீரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகள்!!!!

ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தை அடக்க தமிழகத்தில் அணைகள் கட்டலைன்னு பொங்குறவங்களுக்கு தெரியுமா?
அதற்கான நில அமைப்பு தமிழ்நாட்ல இல்லையென்று!!!!

மற்ற மாநிலங்களில் இருப்பது போல தமிழகம் மலை பிரதேசம் இல்லை சமவெளி பகுதின்னு கூட தெரியாத அறிவிளிகளா? இவர்கள்

செய்தியை சரியாக சொல்லுவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது அந்த செய்தி சாமான்யனுக்கும் புரியும் அளவில் இருக்கவேண்டும் அண்மைக்காலத்தில் பெரும்பாலானோரை பேச வைக்கும் விஷயம். காவிரி ஆறும் அது தொடர்பாக ஆண்டுக்கணக்கில் நடந்த சட்டப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பும்..

காவிரி மேலாண்மை ஆணையம், அது செயல்படப்போகிற விதங்களையெல்லாம் விட்டுவிடுவோம். அதைவிட முக்கியமானது கர்நாடக அணைகள், காவிரி ஆறு, மேட்டூர் அணை, டிஎம்சி போன்றவை தொடர்பான விஷயங்கள் பற்றி ஒரு பாமரனுக்கு எளிதான புரிதல் முயற்சியை செய்வோம்.

தமிழகத்தில் திருச்சி கல்லணையில் காவிரி, கொள்ளிடம் என பிரிந்துபோய் இருவேறு இடங்களில் கடலில் கலக்கிறது. அதே காவிரிதான், கர்நாடகாவில் வெவ்வேறு இடங்களில் உற்பத்தியாகி பின்னர்தான் முழுமையான காவிரியாக உருவெடுக்கிறது

கர்நாடகம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டால் அதை தமிழகம் வாங்கி வைத்து தேக்குகிற ஒரே இடம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைதான். இந்த மேட்டூருக்கு எப்படி தண்ணீர் வருகிறது என்று பார்ப்போம்.

மேட்டூருக்கு கர்நாடகாவிலிருந்து காவிரி நீர், இரண்டு அணைகளிலிருந்துதான் நேரடியாக கிடைக்கிறது.. ஒன்று கேரளா- கர்நாடக எல்லையில் உள்ள கபினி அணை.. அங்கு திறக்கப்பட்டால் கபினி ஆறாக வந்து, 150 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து திருமுக்கூடலு நர்சிபூர் என்ற கோவில் நகரத்தில் காவிரியுடன் கலந்துவிடுகிறது. பின்னர் அப்படியே ஒகேனெக்கலுக்கும் வந்து சேரும்..

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் தரும் பிரதான இன்னொரு அணை மைசூருவிலிருக்கும் கிருஷ்ணராஜசாகர் என்ற கேஆர்எஸ்.. இங்கு திறக்கப்படும் தண்ணீர் காவிரியாக வந்து திருமுக்கூடலு நர்சிபூரில் கபினி தண்ணீரை ஸ்வீகரித்துக்கொண்டு முழுமையான காவிரியாக வலுப்பெற்று ஒகேனெக்கலுக்கு வரும்.

காவிரி என்றால் ஹேமாவதி, ஹாரங்கி என்று மேலும் இரண்டு அணைகள் பெயர் அடிபடுமே அவைகள் எங்கே? இந்த இரு அணைகளும் நிரம்பி அவற்றிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர்தான் கிருஷ்ணராஜசாகருக்கு வந்து சேரும்.

கபினியிலிருந்து நேராகவும் ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் தண்ணீர் கேஆர்எஸ் மூலமாகவும் தமிழகத்திற்கு காவிரியில் கிடைக்கிறது..

காவிரியின் நான்கு அணைகளை திறக்காமல் கர்நாடகம் எவ்வளவு தண்ணீர் தேக்கிவைக்க முடியும்? கபினி அணை 15.67 டிஎம்சி.. ஹேமாவதி 35.76 டிஎம்சி ஹேரங்கி அணை 8.07 டிஎம்சி. கிருஷ்ண ராஜசாகர் அணை 45.05. என மொத்தம் 105.55 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்கலாம்.

தமிழகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள மேட்டூர் அணையின் கொள்ளளவு 93.4 டிஎம்சி என்பதை இங்கே நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும்..

ஆமாம் டிஎம்சி..டிஎம்சி என்கிறார்களே அப்படியானால் அது எவ்வளவு தண்ணீர் என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது Thousand Million Cubic feet.. அதைத்தான் சுருக்கி டிஎம்சி என்கிறார்கள். தெளிவாக புரியும்படி சொன்னால் 100 கோடி கன அடி நீர்..

ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2830 கோடி லிட்டர் அதாவது ஒரு டிஎம்சி தண்ணீரை அம்மா பாட்டிலில் அடைத்து வைத்து விற்றால் 28 ஆயிரத்து 300 கோடி ரூபாயை தேத்தலாம். நமது டாஸ்மாக்கின் ஒரு வருட கலெக்ஷன்.

இதே ஒரு டிஎம்சி தண்ணீரை பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றால் 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை தேற்றிவிடுவான். ஒரு டிஎம்சியை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம். இவ்வளவு தண்ணீரை 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் அடிக்க சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும். இப்போது புரிகிறதா ஒரு டிஎம்சி தண்ணீர் என்றால் எவ்வளவு என்று?

அடுத்து அணைகளின் கொள்ளளவை பார்ப்போம்.. ‘’ஒரே நாளில் ஐந்தடி உயர்ந்தது.. பத்து அடி உயர்ந்தது.. 80 அடியை தாண்டியது 100 அடியை தொடப்போகிறது.. என்றெல்லாம் டிவி சேனல்களில் பிரேக்கிங் நியூசை அடிப்பார்கள். ஆழ்ந்து யோசித்தால் இந்த அடி கணக்கால் ஒரு புண்ணாக்கு பிரயோஜனமும் கிடையாது..

கர்நாடகத்தின் கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த உயரம் 124 அடி. தண்ணீர் கொள்ளளவு 45.05 டிஎம்சி. மேட்டூர் அணையின் உயரமோ 120 அடி. ஆனால் கொள்ளளவு 93.4 டிஎம்சி.. அதாவது மேட்டூரில் இரண்டு கேஆர்எஸ்சை வைத்துவிடலாம்.. மேட்டூரைப்போலவே 120 அடி உயரம் கொண்டது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை. ஆனால் இதன் கொள்ளளவு 32.8 டிஎம்சி.. மூன்று பவானி சாசர்களை மேட்டூரில் வைக்கலாம்..

நம்ம திருவண்ணாமலை சாத்தனூர் அணை 119 அடி உயரம். ஆனா கொள்ளளவு வெறும் 7.3 டிஎம்சி.

நிலைமை இப்படியிருக்க, இத்தனை அடி தண்ணீர் ஏறியது, அத்தனை அடி ஏறுகிறது என்று அதையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பத்தில் முழு அர்த்தம் உள்ளதா?

நமது மேட்டூர் அணைக்கே வருவோம். அதில் 50 அடிக்கு தண்ணீர் இருந்தால் 18 டிஎம்சி.. 75 அடியை தொட்டால் 37 டிஎம்சி.. 100 அடி..100 அடி என்று சொல்வார்களே அதைத்தொட்டாலே 60 டிஎம்சி தான் நீர் இருக்கும்.. ஆனால் அடுத்த 20 அடியை தொட 33 டிஎம்சி தண்ணீர் வேண்டும். அதாவது மேட்டூர் அணை 100 லிருந்து முழுமையான 120 அடிக்கு போக, ஒரு பவானி சாகர் அணை அளவுக்கு தண்ணீர் தேவை.

அப்படியென்றால் முல்லைப்பெரியாறு வைகை, கிருஷ்ணகிரி போன்ற அணைகளில் இத்தனை அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது..உயர்ந்துகொண்டே இருக்கிறது என்று அடிக்கணக்கை மட்டும் வைத்து தகவலைச்சொன்னால் அங்கே பரபரப்பை தவிர என்ன இருக்கப்போகிறது. என்னதான் புரிந்துவிடப்போகிறது?

அணை தொடர்பான செய்தி என்றால் பாமரர்களுக்கு விளங்குகிற மாதிரி எளிமையாக இருக்கவேண்டும். எவ்வளவு நீர் வருகிறது, எவ்வளவு நீர் திறந்துவிடப்படுகிறது என்பதோடு, அணையின் கொள்ளளவில் எவ்வளவு நீர்,  எத்தனை சதவீதம் நீர் இருக்கிறது என்று சொன்னால் சுபலத்தில் புரிந்துவிடும்..

இன்று காலை (ஜூலை 16) பத்து மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை தொட்டுவிட்டது. நீர் இருப்பு 50 டிஎம்சி மொத்த கொள்ளளவில் இது 53 சதவீதம்.. அதாவது மேட்டூர் அணை பாதிதான் நிரம்பியுள்ளது..

‘’120 அடியில் 90 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர் மட்டம்’’ என்றால் அது பரபரப்பு.. 90 அடியை தொட்டாலும் அணை பாதிதான் நிரம்பியுள்ளது என்பது பரபரப்பில்லாத உண்மை.. அவ்வளவே.
----------------------------------------
படித்துத் தெளிந்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.11.18

உண்மையான பரிகாரம் (Remedy) எது?


உண்மையான பரிகாரம் (Remedy) எது?

எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம் ஒன்னும் பிரயோஜனம் இல்லை.
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே” –ன்று பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது.

அவர்களுக்கு மட்டுமல்ல பரிகாரம் என்றால் உண்மையில் என்ன என்று தெரி(புரி)யாதவர்களுக்காகவும் தான் இந்தக் கதை! படிப்பதோடு நின்றுவிடாமல் இது உணர்த்தும் நீதியை மறக்காமல் பின்பற்றி பலனடைவோமாக.

ஒரு பரிகாரத் தலத்தில் பரிகாரம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் அறியாமல் செய்த தவறுக்கு சகல வல்லமை படைத்த மன்னன் செய்த பிராயச்சித்தம் என்ன?

ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது.

அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.

அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து “ஐயோ அம்மா” என்ற குரல் கேட்டது.

ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே -  யாரையோ தவறுதலாக கொன்றுவிட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான்.

அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.

“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே” என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்கவேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.

வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.

கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.

“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்.

மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, “என்னை மன்னித்துவிடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு இது. போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணிவிட்டேன்.”

தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாகவில்லை என்று யூகித்துக்கொண்டான்.

அடுத்தநொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அருகே நின்றுகொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.

தட்டுக்கள் வைக்கப்பட்டபிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான். பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.

“மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகிவிட்டேன். நான் தண்டிக்கப்படவேண்டியவன். பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டுவிடுகிறேன். நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் (பரிகாரம்) இது தான். இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.

அவற்றை எடுத்துக்கொண்டு என்னை மன்னியுங்கள். அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக்கொள்ளுங்கள்..” என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.

உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.

அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகுவெட்டி பேச ஆரம்பித்தான். “ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே?

நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரி தானே? நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்..?”

“ஐயோ அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப்போகிறான் போலிருக்கிறதே…” எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.

விறகுவெட்டி தொடர்ந்தான் “நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை. அவர் அளிக்கும் பொன்பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம்வருந்தவேண்டும் என்று விரும்பினேன்.

அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார். அது ஒன்றே எனக்கு போதும்.

மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும். நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.

அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக்கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும். மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.

ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந்தன்மையா, இப்படி ஒரு ஞானமா என்று வியந்துபோனார்கள் அனைவரும்.

அந்த மன்னன் தான் நாம்.

நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை.

அந்த விறகுவெட்டி தான் இறைவன்.

திருப்பைஞ்ஞீலியில் பரிகாரம் செய்ய காத்திருக்கும் மக்கள்

இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று. இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.

ஒரு பரிகாரத்தை எதற்கு செய்கிறோம் என்றே தெரியாமல் அதை இன்று பலர் செய்வது தான் வேடிக்கை. பரிகாரம் என்பது ஒரு உபாயம் அவ்வளவே. அதுவே இறுதியானது அல்ல.

நாம் செய்யும் பரிகாரங்களை எல்லாம் இறைவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் அவனுக்கில்லை. ஆனால், நாம் என்ன நினைத்து பாவமன்னிப்பு கேட்கிறோம், அதற்கு ஈடாக என்ன பிராயச்சித்தம் செய்கிறோம் என்பது இங்கே மிகவும் முக்கியம்.

நீங்கள் எந்திரத்தனமாக செய்யும் எந்த பரிகாரமும் பலன் தரவே தராது.

நீங்கள் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் சரி எத்தனை லட்சங்களுக்கு திருப்பணிகள் செய்தாலும் சரி

செய்த பாவத்திற்கு மனம்திருந்தி கண்ணீர்விட்டு மன்னிப்பு கேட்டாலொழிய உங்களுக்கு பாவமன்னிப்பு (பரிகாரம்) என்பது கிடையாது.

அடுத்த முறை என்ன பரிகாரம் செய்தாலும், நாம் செய்த குற்றத்திற்கு (பாவத்திற்கு) பிராயச்சித்தமாகத் தான் இதை செய்கிறோம் என்று உணர்ந்து கடந்தகால / முன்ஜென்ம தவறுக்கு வருந்தி  கண்ணீர் விட்டு பாவமன்னிப்பு கேட்கும் ஒருவர் எந்த மனநிலையில் இருப்பாரோ அதே மனநிலையில்தான்  ஒருவர் பரிகாரம் செய்யவேண்டும்.

மேற்கூறிய மன்னன் அந்த விறகுவெட்டி முன்பு தன்னை ஒப்படைத்த மனநிலையில் இருந்து பரிகாரம் செய்து பாருங்கள் உடனடி பலன் நிச்சயம்!. திருச்சிற்றம்பலம்.
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.11.18

ஆசியாவிலேயே பெரிய அன்னதானக் கூடம்


ஆசியாவிலேயே பெரிய அன்னதானக் கூடம்

திருமலையில் நித்ய அன்னதானம் மிகச்சிறப்பாக கோடானு கோடி பக்தர்களுக்கு வயிறார சாப்பாடு போடப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏனெனில் முன் பந்தியில் குறைந்த அளவே மக்கள் அமர்ந்து சாப்பிடும் அளவில் மண்டபம் அமைந்து இருந்தது.

நம் கருணைக்கடல் திருவேங்கடவன் மெய் சிலிர்க்கும் ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார்.

ஒருநாள் மதியம் 2.00 மணி அளவில் திருமலை E.O அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார் .

அங்கிருந்த உதவி செயலாட்சி தலைவரிடம் அய்யா ஒரு வேண்டுகோள், இங்கு ஸ்ரீனிவாசனை தரிசனம் செய்த பக்தர்கள் அன்னதான கூடத்தில் நீண்ட நேரம் காத்து இருக்கிறார்களே கொஞ்சம் பெரிய மண்டபம் இருந்தால் இன்னும் நிறைய பேர் சாப்பிட முடியும் அல்லவா என்று கூறினார்.

அதற்கு அவர் நீங்கள் வரிசையில் நின்று சாப்பிட முடிந்தால் சாப்பிடலாம் இல்லை என்றால் செல்லுங்கள் என்று சற்று கோபத்துடன் கூறினார்.

ஐயையோ ! நான் எனக்காக சொல்லவில்லை ஸ்ரீனிவாசனின் பக்தர்களுக்காகத்தான் கூறினேன் என்றார். அப்படி என்றால் நீங்களே ஒரு மண்டபம் கட்டி கொடுங்கள் அதில் நீங்கள் சொன்னபடி சாப்பாடு போடலாம் என்றார்.

உடனே அந்த பக்தர் சரி புதிய அன்னதான கூடம் கட்டுவதற்கு என்ன செலவு ஆகும் என்றார்.

அந்த அதிகாரி மிகுந்த கோபத்துடன் ஓஹோ அப்படியா ஒரு 25 கோடி கொடுங்கள் பெருசா மண்டபம் கட்டி உங்கள் பெயரிலேயே சாப்பாடு போடலாம் போய் வேலைய பாருங்க சார் என்றார்.

உடனே அந்த பக்தர் தான் வைத்திருந்த கைப் பையில் இருந்த காசோலை புத்தகத்தை எடுத்து 25 கோடிக்கு ஒரே காசோலையாக திருமலை தேவஸ்தானத்தின் பெயரில் எழுதி அந்த அதிகாரியிடம் கொடுத்தார்.

ஆனால் அந்த உதவி செயலாட்சி தலைவர் வாயடைத்து போய் மிகுந்த அதிர்சியுடன் வேர்த்து விருவிருக்க விரைந்து  சென்று செயலாட்சி தலைவரை அழைத்து வந்து நடந்தவற்றை கூறினார்.அவரும் ஆடிப்போனார்.

பின்னர் தாங்கள் யார் என்று மிகுந்த மரியாதையுடன் அவரை அமர வைத்து கேட்டார்.அவர் அய்யா நான் ஆரம்ப காலத்தில் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டபட்ட குடும்பம் . அப்படி இருந்தும் எழுமலை ஆண்டவன் மீது மிகுந்த பாசத்துடன் பக்தியும் வைத்து இருந்தேன் . திருமலைக்கு ஒவ்வொரு முறையும் நடந்தே வருவேன் தர்ம தரிசனத்தில்  எவ்வளவு நேரம் ஆனாலும் என் அப்பன் ஏழுமலையானை பொறுமையுடன்தரிசனம் செய்து, எனக்கு ஒருவழி காட்டி நேர்மையுடன் நான் வாழ ஒரு தொழில் வேண்டும் அதில் உனக்கு லாபத்தில் சரி பாதி உன்னிடம் சேர்க்கிறேன் தந்தையே என்று வேண்டி பின்னர் இலவச சாப்பாடு வரிசையில் நின்று என் வயிறார நான் சாப்பிட்டு செல்வேன்.

பின்னர் நடைபாதை வழியாக மலையிறங்கி வீட்டிற்கு செல்வேன்.நாட்கள் செல்ல செல்ல பின்னர் என் தொழில் வளர்ச்சி அடைந்து இன்று மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தாலும் இது எல்லாம் என் அப்பன் எழுமலையான் சொத்து.

இன்று வரை நான் தனியாகவே ஒவ்வொரு முறையும் நடந்தே மலைக்கு வந்து தர்மதரிசனத்தில் நின்று தரிசனம் செய்து அவருக்கு சேர வேண்டிய பங்கை உண்டியில் போட்டு விட்டு அன்னதான கூடத்தில் வரிசையில் நின்று ஆனந்தமாய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு செல்வேன் .

நீங்கள் பலமுறை தினசரி பத்திரிக்கையில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் உண்டியலில் இரண்டு கோடி ,மூன்று கோடி ஒரே பண்டிலாக போட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளீர்கள்  அதை நான் தான் போட்டேன் . ஏனென்றால் இதை தேவஸ்தான அதிகாரி வாயிலாக கொடுத்திருந்தால் என்னை மிகுந்த மரியாதை செய்து சிறப்பு தரிசனம் அளித்திருப்பார்கள் .

ஆனால் அதை நான் விரும்ப வில்லை .

எந்த சூழ் நிலையிலும் என்னுடைய தந்தைக்கும் எனக்கும் உள்ள அந்த ஆரம்ப கால நினைவுகள் மாறிவிடக்கூடாது . இந்த பணம் என்னை என் பழைய வாழ்க்கையை மாற்றினாலும் நான் என்னுடைய நன்றியை மறக்காமல் இன்றும் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நான் எப்படி திருமலைக்கு வந்தேனோ அதை போலவே இன்றும் நடந்தே வந்து நடந்தே செல்கிறேன் .

என் நண்பர்களையோ என் உறவினர்களையோ நான் அழைத்து வந்தால்அவர்கள் எண்ணப்படி நான் மாற வேண்டும் .இவ்வளவு வசதி இருந்தும் நடந்து செல்வதா , தர்ம தரிசனத்தில் காத்து இருப்பதா இலவச சாப்பாட்டிற்காக வரிசையில் நிற்பதா என்று புலம்பி தள்ளுவார்கள்.அதனால் தான் எப்பொழுதும் தனியாகவே வருவேன் .இன்று தரிசனம் முடிந்து அன்னதான கூடத்தில் வரிசையில் நிற்கும் போது நிறைய பேர் வரிசையில் காத்து நிற்பதை பார்த்து இன்று திடீரெனஎன் மனதில் இதை விட பெரிய மண்டபம் இருந்தால் ஒரே நேரத்தில் நிறைய பக்தர்கள் அமர்ந்து சாப்பிட முடியும் அல்லவா? இந்த எண்ணத்தை என்னில் உருவாக்கியதும் என் தந்தை திருவேங்கடவன் தான் .அவர் சொல்ல சொல்ல அவரை சுற்றி இருந்த அதிகாரிகளின் கண்களில்நீர் அருவியாய் பெருகி பெருமாளின் லீலைகளையும் ,அவர் பக்தரின் பக்தியையும் பார்த்து வாயடைத்து அமைதியாய் நின்றிருந்தனர் .

அந்த அறையில் மின் விசிறியின் சப்தம் மட்டுமே இருந்தது.பின்பு தான் அவர் ஆந்திரமாநிலத்தில் ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று அறிந்து ஆச்சர்யத்துடன் அவரிடம் உங்கள் விருப்ப படி புதிய அன்னதான கூடம் கட்டி உங்கள் பெயரையே அதற்கு வைத்து விடலாம் என்றனர்.வேண்டாம்! வேண்டாம் ! சாதாரண ஏழை என்னை செல்வந்தனாக வாழவைத்தது இந்த திருமலை அப்பனே இந்த பணம் என்னுடையதல்ல எழுமலையானுக்கு சொந்தமானது.தேவஸ்தானம் விரும்பும் பெயரில் நடக்கட்டும் என்றதும்,அதிகாரிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.ஒரே வருடத்தில் கட்டப்பட்ட இந்த புதிய அன்னதான கூடம்  ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு கட்டப்பட்டு அதற்கு "மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா" அன்னதான கூடம் என்று பெயரிடப்பட்டு உள்ளது .

இது ஆசியாவிலேயே பெரிய அன்னதான கூடமாகும்.
--------------------------------------------------------------
படித்து வியந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.11.18

Astrology: 7-11-2018 புதிருக்கான விடை!!!


Astrology: 7-11-2018 புதிருக்கான விடை!!!

கேள்விக்கான பதில்:
ஜாதகிக்கு தாமதமான திருமணம். அவருடைய 40வது வயதில் நடந்தது!
1. ஏழாம் வீட்டில் ராகு
2.எட்டாம் அதிபதி சூரியனின் பார்வை ஏழாம் வீட்டின் மேல்
3.லக்கினத்தில் லக்கின அதிபதி சனீஷ்வரன். அவருடன் 4 கிரகங்களின் சேர்க்கை
4. அவர்களுள் குரு 3 மற்றும் 12ம் இடத்தின் அதிபதி.
5.ஆறாம் வீட்டுக்காரன் புதனும் அங்கே உள்ளான்,
இந்த அமைப்பால், அதாவது இந்த கிரகங்கள் அனைத்தும் சேர்ந்து ஜாதகியின் திருமணத்தை உரிய காலத்தில் நடக்க விடாமல் செய்தன். அதீத தாமதம்.
---------------------------
லக்கினாதிபதியின் பார்வை முக்கியம். அவர் 7ம் வீட்டைப் பார்க்கிறார். அதனால் திருமணம் மறுக்கப்படவில்லை!!!!
களத்திரகாரகன் சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றுள்ளார். அதாவது இராசி, அம்சம் ஆகிய இரண்டிலும் ஒரே இடத்தில் உள்ளார்
ஜாதகிக்கு அவருடைய 40வது வயதில் திருமணம் நடந்தது,
7ல் உள்ள ராகுவின் மகாதிசையில் சுக்கிர புத்தியில் திருமணம் நடைபெற்றது.
அது சமயம் கடகத்திற்கு வந்த கோள்சாரக் குருவின் ஆசியோடும் திருமணம் நடந்தது.
-----------------------------------
விளக்கம் போதுமா?

8 அன்பர்கள் கலந்து கொண்டு சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

மீண்டும் ஒரு புதிருடன் 16-11-2018 அன்று சந்திபோம்

அன்புடன்
வாத்தியார்
===============================
1
Blogger Bala subramanian said...
அன்புள்ள வாத்தியார் அவர்களின் தாள் பணிகிறேன்.
ஏன் தாமத திருமணம்? காரணங்கள் கீழே
1. லக்கினத்திற்கு 7ல் ராகு அமர்ந்து , 7க்கு உடைய சந்திரன் நவாம்சத்தில் நீச்சம்.
2. லக்கினத்திற்கு 7ம் வீட்டை இயற்கை பாபிகளான சனியும் செவ்வாயும் பார்த்து, ராசிக்கு 7க்கு உடைய சுக்ரன் பகை வீட்டில் அமர்ந்து , செவ்வாய் உடன் 5 டிகிரிக்குள் இணைந்து, ராசிக்கு 7ம் வீட்டை இயற்கை பாபி சனி பார்த்தது
3. லக்கினத்திற்கு 2க்கு உடைய குடும்பாதிபதி சனி சூரியன் உடன் அஸ்தமனமாகி , 2ஆம் வீட்டிற்கு 12ல் மறைந்து , ராசிக்கு 2க்கு உடைய சுக்ரன் செவ்வாய் உடன் பகை வீட்டில் நின்று, தன்னுடைய 2ம் வீட்டிற்கு எட்டில் மறைந்ததால் குடும்பம் அமைய தாமதம்
திருமணம் மறுக்கப்படாமல் நடந்ததற்கு காரணங்கள் கீழே
1. லக்கினத்திற்கு 7கு உடைய சந்திரன், 4ல் நின்று ஆட்சி பலத்திற்கு சமமான திக் பலம் பெற்றது.
2. ராசியில் நீச்சம் ஆனாலும் , ஆட்சி பலத்திற்கு சமமான திக் பலம் பெற்று நவாம்சத்தில் உச்சமடைந்த இயற்கை சுபரான குருவின் பார்வை 7ம் வீட்டிற்கு கிடைத்தது
3.ராசிக்கு 7கு உடைய சுக்ரன் பகை வீட்டில் நின்றாலும் தன்னுடைய நட்சத்திரமான பூராடத்தில் நின்று ராசியிலும், நவாம்சத்திலும் வர்கோத்தமம் அடைந்து ஆட்சிக்கு நிகரான பலம் அடைந்தது .
4. இவை எல்லாவற்றிற்கும் மேலாக , இவருக்கு புத்திர பாக்கியம் இருப்பதை , லக்கினத்திற்கு 5க்கு உடைய சுக்ரன் வர்கோத்தமம் , ராசிக்கு 5க்கு உடைய சூரியன் வர்கோத்தமம் ஆகி , புத்திர காரகனும் , பரம சுப கிரகமுமான குரு வலு பெற்று லக்கினத்திற்கு 5 ம் இடத்தை பார்த்து, நவாம்சத்தில் உச்சம் பெற்றதும் , இவருக்கு திருமண பாக்கியம் உள்ளதை உறுதியாக காட்டுகின்றன
5. வாத்தியார் ஐயா கொடுத்த குறிப்பின் படி , லக்கினத்திற்கு பூர்ண யோகா காரகனும், ராசிக்கு 7க்கு உடைய , தன்னுடைய சுய சாரம் பெற்று வர்கோத்தமம் அடைந்த ( ராகு திசை) சுக்ர புத்தியில் திருமணத்தை நடத்தினார்.
பணிவுடன்
பாலா
Wednesday, November 07, 2018 11:45:00 AM
-------------------------------------------------------------------
2
Blogger Saravanan Annamalai said...
Respected acharyare,
Regarding the quiz, The jataki's 7th house is occupied by Rahu. So during his dasa period and kalathrakarakan sukran bukthi she was married from 40 years to 41 years.
Thank you, ---A.Saravanan, Pondicherry.
Wednesday, November 07, 2018 6:31:00 PM
------------------------------------------------------------
3
Blogger thozhar pandian said...
ஜாதகிக்கு தாமதமாக திருமணம் நடந்தது. இதற்கு காரணம், ஏழாம் வீட்டில் உள்ள இராகு, எட்டாம் வீட்டு சூரியன் மற்றும் ஆறாம் வீட்டு (வில்லன்) புதன் இலக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பது, திருமண காரகர் சுக்கிரன் சுபர் பார்வை இன்றி இலக்கினத்திற்கு 12ல், ஏழாம் வீட்டிற்கு 6ல் மறைந்தது ஆகும். புதன் மகர இலக்கினத்திற்கு பாக்கியாதிபதியாகவும் இருக்கிறார் என்பதாலும் அவரது 7ம் வீட்டு பார்வையும், இலக்கினாதிபதி ஆட்சி பெற்று மகரத்தில் அமர்ந்து அவரின் 7ம் வீட்டு பார்வையும் ஜாதகிக்கு 40வது வயதில் திருமணத்தை நடத்தி வைத்தன. தசா புக்திகளும் ஒரு காரணம். ஜாதகிக்கு 20 வயதிலிருந்து 27 வயது வரை செவ்வாய் மகாதசை. 27 வயதிலிருந்து 7ம் வீட்டில் அமையப்பெற்ற இராகு மகாதசை. அந்த தசையில் சுக்கிர புத்தியில் ஜாதகிக்கு திருமணம் நடை பெற்றது. சுக்கிரன் மகர இலக்கினத்திற்கு பிரதான யோகாதிபதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, November 08, 2018 2:56:00 AM
---------------------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகியின் லக்கினத்திலேயே கேதுவும், கணவ்ர் ஸ்தானமான 7ம் இடத்தில் ராகுவும் நின்றது திருமணம் தள்ளிப் போனதற்கான முதற்காரணம்.ஜாதகி 15 ஜனவரி 1962ல் காலை 6 மணி 49 வினாடிக்குப் பிறந்தவர்.லக்கினத்திலேயே சூரியன்,சனி, புதன் கேது, குரு. 12ல் சுக்கிரன் ,செவ்வாய். சுக்கிரன், செவ்வாய், சனி, சூரியனால் அஸ்தங்கதம் அடைந்து வலுவிழந்தனர்.லக்கினாதிபதி சனி,களத்திரகாரகனும்,யோககாரகனுமான சுக்கிரன் 12ல் மறைந்து சூரியனால் எரிக்கப்பட்டு வலுவிழந்த காரணத்தால் திருமணம் தள்ளிப்போனது.சில‌ நூல்களின் படி பெண்களுக்கு செவ்வாயை களத்திரகாரகனாகக் கொள்வதுண்டு அவ்வகையில் பார்த்தாலும் செவ்வாய் 12ல் மறைந்து போனதும் படுக்கை சுகத்தினை ஒத்திவைத்தது.
குரு நீசமானாலும், நீச்ச பங்கம் ஆனது. குருவின் பார்வை 7ம் இடத்திற்குக் கிடைத்ததால் திருமணம் மறுக்கப்படவில்லை. தாமதமாக நடந்தது.
ராகு 7ல் நின்றதால் சந்திரன் செய்ய வேண்டியதைத் தன் சுய‌தசாவில், யோககாரகனான் சுக்கிரன் புக்தியில் 40 வயதில் திருமணத்தை நடத்தி வைத்தது,.மேலும் சந்திரன், குரு ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் நின்று கஜ கேசரி யோகத்தைக் கொடுத்தது.இதுவும் திருமணம் நடை பெற‌ ஒரு காரணம்.
K.Muthuramakrishnan
kmrk1949@gmail.com
Thursday, November 08, 2018 5:57:00 AM
-------------------------------------------------------------
5
Blogger SIVA said...
வணக்கம் அய்யா
ஜாதகியின் பிறப்பு 15.01.1962 6.50 AM ., பிறப்பு முதல் நடைபெறும் திசை சாதகம் இல்லாததும், அஷ்டமாதி , ஆறாம் பாவாதிபதி லக்கினத்தில் சேர்க்கையும் ஒரு அவயோக பலன்களை தந்தது முதலில் நடைபெற்ற திசைநாதர்கள் நட்புபெற்ற நட்சத்திர சரங்களில் இல்லாததும் மோசமானதே ., அவரின் களஷ்தர அதிபதியாக உள்ள சந்திரன் கேசரி யோகத்தில் மேலும் சுயபரல் வலுபெற்ற புதன் மற்றும் குரு பார்வையுடன் கடக ராகு , ஆகவே
ராகு திசை கடைசி அல்லது குரு திசையில் திருமணம் உண்டு
Thursday, November 08, 2018 11:08:00 AM
---------------------------------------------------------------
6
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
வகுப்பறையின் தலைமாணாக்கர்களில் ஒருவராகிய KMRK அவர்களுக்கு நன்றி.
இன்று தரப்பட்டுள்ளது மகர லக்ன ஜாதகம். லக்னாதிபதி சனி. ஏழாம் இடத்துக்கு உரியவர் சந்திரன். லக்னாதிபதி சனிக்கு சந்திரன் பகை.
லக்னத்தில் சனி ஆட்சியாக இருந்தாலும் கூடவே 6, 8, 12 க்குரிய துர்ஸ்தானாதிபதிகள் கூட்டணி போட்டுள்ளனர். இது போதாதென்று லக்னத்தில் கேதுவும், 7ல் ராகுவும் அமர்ந்து சர்ப்ப தோஷம் தருகின்றனர்.
அதனால் திருமணம் அதீத தாமதமாகியது. 40 வயதில், 7ம் வீட்டில் இருக்கும் கிரகத்தின் தசையில் திருமணம் நடக்கும் என்ற விதிப்படி ராகு தசையில் சுக்கிர புத்தியில் ( சுக்கிரன் வர்கோத்தமம்) திருமணம் நடந்தேறியது.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Thursday, November 08, 2018 1:59:00 PM
-----------------------------------------------------------
7
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்
15.01.1962 ஆம் தேதி திங்கள் கிழமை காலை 6.49.10 மணிக்கு மகர லக்கினத்தில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த‌ ஜாதகி. (எடுத்து கொண்ட இடம் - சென்னை)
மகர லக்கினத்திற்கு யோககாரனான சுக்கிரன் (3 பரல்) , யோககாரர்கள் : புதன், சுக்கிரன் (இந்த ஜாதகத்தில் புதன் (6 பரல்).
ராஜ யோகத்தை கொடுப்பவர் : சனி, சுக்கிரனும்
40 வ‌ய‌தில் (2002) தாமதமாக திரும‌ண‌ம் ந‌டைபெற்றது
திருமண தாமதமானதற்கு காரணங்கள்:
1. 7ம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளார். 7ல் தீய கிரகம் இருந்தால் திருமணம் தாமத மாகும்.
2. 7ம் வீட்டு அதிபதி சந்திரன் நவாம்சத்தில் நீசம். விருச்சிக ராசியில் அமர்ந்துள்ளார்
3. 2ம் வீட்டு அதிபதி சனி அந்த வீட்டிற்கு 12ல் அமர்ந்துள்ளது.
4. 8ம் வீட்டு அதிபதி லக்கினத்தில் அமர்ந்து 7ம் வீட்டை பார்ப்பது.
5. லக்கினத்த்தில் தீய கிரங்கள் (கேது, சூரியன், சனி) அமர்ந்து 7ம் வீட்டை பார்ப்பது.
6. 26 வயதில் ராகு தசை ஆரம்பம். ராகு-ராகு புக்தியில் (26-7-1988 - 1991) - 7ல் ராகு அமர்ந்துள்ளார் . 7ல் தீய கிரகம் இருந்தால் தாமத மாகும்.
அடுத்து வந்த ராகு-குரு புக்த்தியில் (1991-1993) லக்கினத்தில் குருவுடன் கேதும், சூரியனும், சனியும் கூட்டு சேர்ந்து 7ல் உள்ள ராகுவின் பார்வையில் உள்ளார்.
அடுத்து வந்த ராகு-சனி புக்தியில் (1993-1996) ராகுவின் 7ம் பார்வையில் சனி உள்ளார். மேலும் சூரியனும் , கேதும் கூட்டு
அடுத்து வந்த ராகு-புதன் புக்தியில் (1996-1999) ராகுவின் 7ம் பார்வையில் புதன், மேலும் 8ம் வீட்டு அதிபதி சூரியனுடன் கூட்டு. கேதுவுடனும் கூட்டு இந்த புதன் அசுப ராசி. ராஜ யோகக்காரனாக இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலமை
அடுத்து வந்த ராகு-கேது புக்த்தியும் (1999-2000) இதே நிலைமைதான்
ராகு-சுக்கிரன் 2002ல் குரு அந்திர புக்தியில் திருமணம் நடைபெற்றது
திருமணம் மறுக்கப்படாமல் இருக்க காரணம்
1. நவாம்சத்தில் 7ம் வீட்டில் குரு கடக ராசியில் உச்சத்தில் அமர்ந்துள்ளார்
ராசியில் குருவின் (6 பரல்) 7ம் பார்வை 7ம் வீட்டின் மீது இருப்பது. சிறப்பு வாய்ந்தது . நீச பங்க யோகம்.
2. 7ம் வீட்டு அதிபதி சந்திரன் (5 பரல்) 4ல் அமர்ந்துள்ளார். மேலும் எந்த தீய கிரங்களின் பார்வையும் . கூட்டும் இல்லை.
3. லக்கினம் 27 பரல். லக்கினாதிபதி சனி யோகக்காரன். லக்கினம் வர்க்கோத்தமம்.
4. இந்த மகர ராசிக்கு ராஜ யோகத்தை கொடுப்பவர் சனியும், சுக்கிரனும்.
5. லக்கினத்தில் குரு அமர்ந்து, 4ல் சந்திரன் இருப்பதால் கஜகேசரி யோகம் பெற்று உள்ளது
6. 9ம் வீட்டு அதிபதி புதன் பாக்கிய ஸ்தான அதிபதி 9ம் வீட்டில் 30 பரல் உள்ளது. இந்த ஜாதகத்திற்கு யோக காரன்
6. ராகு- சுக்கிரன் புத்தியில் (2002) 40 வயதில் திருமணம் நடந்தது.
7. 11ம் வீட்டில் 41 பரல் உள்ளது.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Friday, November 09, 2018 4:58:00 AM
-----------------------------------------------------
8
Blogger Kannan L R said...
ஐயா வணக்கம்
////அதீத தாமதமான திருமணத்திற்கு ஜாதகப்படி என்ன காரணம்? ///
* இலக்கினாதிபதி சனி பகவான் லக்னத்தில் 6ம், 8ம், 12ம் அதிபதி களுடன் கூட்டு
* 7 ஆம் வீட்டில் ராகு...
* நவாம்சத்தில் 7 ஆம் வீட்டில் கேது..
* சுக்கிரன் 12ல் மறைவு.
///திருமணம் மறுக்கப்படாமல் நடந்ததற்கு என்ன காரணம் ///
** 7ஆம் வீட்டில் குரு பார்வை
** காரகன் சுக்கிரன் வர்கோத்தமம்
** குரு நவாம்சத்தில் உச்சம்
நன்றி ஐயா
கண்ணன்.
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!