-----------------------------------------------------------------------------------------
Astrology: Made for each other கூட்டணி எது?
Astrology ஒத்துவரும் கூட்டணி எது?
கூட்டணியில் பலவகை உள்ளது.
உண்மையான கூட்டணி. சந்தர்ப்பக் கூட்டணி. காலத்தின் கட்டாயத்தால் ஏற்படும் கூட்டணி. ஒத்துவராது என்றாலும் அதைத் தெரிந்தே அமைந்திருக்கும் கூட்டணி என்று பலவிதமான கூட்டணிகள் உள்ளன.
கிரகங்களின் கூட்டணியும் அதைப் போன்றதுதான்.
சுபகிரகங்களின் கூட்டணி ஜாதகனுக்கு நன்மைகளை அள்ளித்தரும் உண்மையான கூட்டணியாக இருக்கும். Made for each other என்று சொல்லக்
கூடிய அம்சங்கள் நிறைந்திருக்கும்
ஒரு சுபக்கிரகமும், ஒரு பாப (தீய) கிரகமும் கூட்டணி சேர்ந்தால், அது ஒத்துவராத கூட்டணியாக இருக்கும் உங்கள் மொழியில் சொன்னால்
Not made for each other என்று வைத்துக்கொள்ளுங்கள்.
சூரியனும் சந்திரனும் கூட்டாக இருந்தால், அது இரண்டாவது வகையைச் சேர்ந்ததாக இருக்கும். ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும்போது, சூரியனுக்குப் பத்து பாகைகள் சந்திரன் தள்ளி இருப்பது நன்மையானதாக இருக்கும். அத்துடன் சூரியனைவிடச் சந்திரன் வலுவாக இருந்தால் (வலு என்றால் என்ன என்பதைப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன்) சந்திரன் கூட்டணிக் கொள்கைகளையும் மீறி ஜாதகனுக்கு நன்மையான பலன்களைச் செய்வார்.
அப்படி இல்லாவிட்டாலும், சந்திரன் தன்னுடைய மகா திசையிலும், அல்லது வேறு கிரகங்களின் மகா திசையில் தன்னுடைய புத்திக் காலங்களிலும் நன்மைகளையே செய்வார். ஏனென்றால் அவர் சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள்
__________________________________________________________________________
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், அவர் தன்னுடைய சுய புத்தியில் (Sun's own period in his Maha Dasa) என்ன பலன்களைத் தருவார் என்பதை இதற்கு முந்தைய பாடத்தில் பார்த்தோம்
அடுத்து சூரிய மகா திசையில், சந்திர புத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
திசைபுத்தி நடைபெறும் காலம் 180 நாட்கள் (just 180 days only) - அதாவது ஆறுமாத காலம். மொத்த காலமும் நன்மையுடையதாக மகிழ்ச்சியுடையதாக இருக்கும்
பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!
கூறினோம் ரவிதிசையில் சந்திரபுத்தி
குணமான மாதமது ஆறதாகும்
தேறினோம் அதன்பலனை செப்பக்கேளு
தீங்கில்லா தனலாபம் சம்பத்துண்டாம்
ஆறினோம் வந்தபிணி தீரும் ரோகம்
அரசரால் மகிழ்ச்சியது தானுண்டாகும்
தேறினோம் ரவிசந்திரன் பொசித்த நாளில்
தீங்கிலா நாளென்று தெளிந்து காணே!
ஆனால் இதற்கு நேர்மாறாக சந்திரதிசையில் சூரிய புத்தி இருக்கும். தன்னுடைய மகா திசையில் சந்திரன் தன் புத்திக்காலத்தில் அளித்த நன்மைகளுக்கு பதில் நன்மைகளை சூரியன் அளிக்க மாட்டார். அவர் வழி தனிவழி
பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.
மானேகேள் சந்திரதிசை சூரியபுத்தி
மரணநாள் மாதமது ஆறதாகும்
தானேதான் சத்துருவும் அக்கினியின் பயமும்
தாபமுள்ள சுரதோஷம் சன்னிதோஷம்
ஏனோதான் காணுமடா யிறுக்கமதுவுண்டாம்
ஏகாந்த தேகமது இருளதுவேயடையும்
தேனேகேள் லட்சுமியும் தேகமுடன் போவாள்
திரவியங்கள் சேதமடா சிலவுடனே தீதாம்!
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!