மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.8.09

வாத்தியாரின் ஜோதிட நூல்கள்

வாத்தியாரின் ஜோதிட நூல்கள்

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின்
ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன.

DTP Type setting & Layout of the books வேலைகள் துவங்கவுள்ளன!
அடுத்து printing & binding வேலைகள் உள்ளன. அப்பணிகள்
இரண்டு மாத காலத்தில் முடிந்து விடும். நவம்பர் முதல் வாரம்
புத்தகங்கள் தயாராகிவிடும்.

மொத்தம் 4 பாகங்கள். முதலில் இரண்டு பாகங்கள் வெளிவரும்.

தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மற்றும்
உள்ள இரண்டு பாகங்கள் வெளிவரும்.

புத்தகங்கள் அனைத்தும் Demi 1/8 Size - 320 Pages each என்கின்ற
அளவில் இருக்கும். வாத்தியாரின் சொந்தங்கள், உறவினர்கள் மற்றும்
நண்பர்களுக்கென சில பிரதிகள் ஒதுக்கப்படும். வகுப்பறைக்
கண்மணிகளுக்கென சில பிரதிகள் ஒதுக்கப்படும்.

முதல் பதிப்பு வெளி விற்பனைக்கு இல்லை! கடைகளில் கிடைக்காது.
முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

நீங்கள் எந்த நாட்டில் வசித்தாலும் அஞ்சல் மூலம் உங்கள் இருப்பிடம்
தேடிப் புத்தகங்கள் வரும்!

The books will be sent to your address by register post under
printed books postal option!

புத்தகம் வேண்டுவோர், தங்களுடைய பெயர், முகவரி,
(கைபேசி எண் - இது மட்டும் உங்கள் விருப்பம்)
ஆகியவற்றுடன், வேண்டிய பிரதிகள் ஒன்றா அல்லது அல்லது
இரண்டா? என்கின்ற விவரத்துடன் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு
எழுதுங்கள். இந்த முகவரிக்கு மட்டுமே எழுதுங்கள்.

email: spvrsubbiah@gmail.com
---------------------------------------------
புத்தகத்தைப் பற்றிய மேலதிக விவரம்.

இதுவரை வெளிவந்த பாடங்கள் முறைப்படுத்தப் பட்டு, படிப்பதற்குச்
சுலபமான வழியில் ஒழுங்கு படுத்தப்பெற்று, அழகிய வடிவில் வரும்.

பாகம் ஒன்று (Part 1)

அறிமுகம் (Brief introduction)
ஆதாரங்கள் (Evidences)
ஜோதிடம் வந்தவழி (About the sages who formulated astrology)
அடிப்படைப் பாடங்கள் (Basic lessons)
அட்டவனைகள் (Astrological Charts)
------------------------------
பாகம் இரண்டு (Part 2)

கிரகங்கள் (Planets)
வீடுகள் (Houses)
மதிப்பெண்கள்(Ashtakavarga)
யோகங்கள் (Yogas)
--------------------------------
தொடர்ந்து வரவுள்ள புத்தகங்கள்

பாகம் மூன்று (Part 3)

ஜோதிட நுட்பங்கள் (Predictive Techniques)
உதாரண ஜாதகங்கள்
அலசல்கள்
ஜோதிடக் கதைகள்
-------------------------------------
பாகம் நான்கு (Part 4)

கேள்விகள் பதில்கள் (Questions & Answers)
(பின்னூட்டங்களில் கேட்கப்பெற்ற உபயோகமான
கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும்)
--------------------------------------
Please write to me within 10 days time.
I want to plan for the number of books to be printed

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

109 comments:

  1. Dear Sir,

    Really good news. I pray God to get success on your publication and I am sure that will benefit everyone.

    I will write you an email.

    Thanks
    Shankar

    ReplyDelete
  2. உண்மையில் நல்ல செய்தி தான் அய்யா.
    விலை மதிப்பற்ற புத்தகங்களை பெற நான்
    பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  3. Dear Sir,

    It is going to be very valuble book for new students, and also for others who learns jothidam. Particularly your students are desperatly waiting for your book. I am sure your book is going to be great success and more sold book. We will all stand with you for your success.Almighty is always with you blessing in your every venture.

    I have also sent advance booking to the said email id.
    endrum anbudan.
    Ezhil

    ReplyDelete
  4. ஜோதிட புத்தகங்களுக்கும் வெளி இட நல்ல நேரம் உண்டா ?

    :)

    வாத்தியாரின் முயற்சிக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  5. ஜோதிட புத்தகம் மட்டும் அல்ல, எந்த புத்தகம் வெளியிடுவதாக இருந்தாலும், ஊரடங்கு, நெருக்கடி நிலை, கலவரம், பந்த் போன்ற எந்த தொல்லைகளும், வில்லங்கங்களும் இல்லாத நல்ல நேரமாக பார்க்க வேண்டும். சரிதானே ஆசிரியரே.

    ReplyDelete
  6. ////Blogger hotcat said...
    Dear Sir,
    Really good news. I pray God to get success on your publication and I am sure that will benefit everyone.
    I will write you an email.
    Thanks
    Shankar/////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  7. /////Blogger thirunarayanan said...
    உண்மையில் நல்ல செய்தி தான் அய்யா.
    விலை மதிப்பற்ற புத்தகங்களை பெற நான்
    பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
    நன்றி அய்யா./////

    அதிகமாகப் புகழ்கிறீர்கள்! கூச்சமாக இருக்கிறது:-)))))

    ReplyDelete
  8. Blogger Ezhil said...
    Dear Sir,
    It is going to be very valuble book for new students, and also for others who learns jothidam. Particularly your students are desperatly waiting for your book. I am sure your book is going to be great success and more sold book. We will all stand with you for your success.Almighty is always with you blessing in your every venture.
    I have also sent advance booking to the said email id.
    endrum anbudan.
    Ezhil////

    உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகாது. புத்தகம் இறையருளால் நன்றாக அமையும்!

    ReplyDelete
  9. /////Blogger கோவி.கண்ணன் said...
    ஜோதிட புத்தகங்களுக்கும் வெளி இட நல்ல நேரம் உண்டா ? :)////

    Toilet போவதற்கும், சரக்க’டிக்கப்போவதற்கும் நேரம் காலம் பார்க்க வேண்டாம்.
    அதுதானே முக்கியம் மக்களுக்கு?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    வாத்தியாரின் முயற்சிக்கு வாழ்த்துகள் !
    நன்றி கோவியாரே!

    ReplyDelete
  10. ///Blogger ananth said...
    ஜோதிட புத்தகம் மட்டும் அல்ல, எந்த புத்தகம் வெளியிடுவதாக இருந்தாலும், ஊரடங்கு, நெருக்கடி நிலை, கலவரம், பந்த் போன்ற எந்த தொல்லைகளும், வில்லங்கங்களும் இல்லாத நல்ல நேரமாக பார்க்க வேண்டும். சரிதானே ஆசிரியரே./////

    காரியங்கள் ’ஆனந்த’மாக நடக்க வேண்டுமென்றால் நேரம் பார்த்துத்தான் செய்ய வேண்டும்!

    ReplyDelete
  11. உங்கள் புத்தகங்கள் வெற்றியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன்.

    நானும் உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கின்றேன்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  13. மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் புத்தக வெளியீட்டை வரவேற்கிறோம்.அதுவும் இலவசமாக வகுப்பறை மாணவர்களுக்கு.வாவ்.நான் போன வாரம்தான் உங்கள் வகுப்பில் சேர்ந்துள்ளேன்.போன பதிவில் opportunity,opportunity என்றீர்களே அது இதுதானா?.கடைசிப் பெஞ்ச் மாணவர்களுக்கு அதிர்ஷ்டம்தான்.என்ன இருந்தாலும் புத்தகத்தில் படிப்பதில் உள்ள சுகமே தனிதான்..நன்றி.‍_ பொட்டல் கிருஷ்ணன்

    ReplyDelete
  14. All the best. A comprehensive book on astrology in a free flow writing style is required. Your effort in this regard is highly appreciable.

    ReplyDelete
  15. ஒருவழியா புக் ரிலீஸ் பண்ணி முடிச்சுட்டீங்கன்னா நீங்க free ஆகிடுவீங்கோ.கேள்விபதில் பகுதி இன்னும் interestingகாவும் classroom sessionsலே இன்னும் concentrate பண்றதுக்கும் வசதியா இருக்கும்.சோ..சீக்கிரமா முடிச்சு ரிலீஸ் பண்ணிடுங்க சார்.

    தசாவதாரம் படத்துக்குப்பிறகு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரிலீஸ் உங்க புத்தகஅவதாரம் தான் சார்.
    எத்தினி கெட் அப் லே அசத்திருக்கீங்க சார்.
    ஏதும் trailer லாம் இல்லையா?

    ReplyDelete
  16. வாத்தியாரே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!

    தமிழ்ச் சமுதாயத்திற்கு தாங்கள் படைத்திருக்கும் இந்த நல்ல உதவிக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்..

    வாழ்க ஐயா நீர்..!

    ReplyDelete
  17. Nanry ayya,


    700 Jeevaathmavin vaazhtugaludan thuvangugireergal......

    Sithi(vetri) ungaluku thaan...

    ReplyDelete
  18. Ayya..........

    thaangal yen september mudintha vudan books veliyidugireergal enru kandu konden........


    Namma sanieswaranin transit kaagava?????????sep 26 sani peyarchi.......

    joke thaan seriousaaga dont take ayya..........

    ReplyDelete
  19. I'm waiting for this golden opportunity.

    ReplyDelete
  20. Excellent work!! and great news sir. Eagerly waiting for those books.

    I'll send you the details in mail.

    Regards,
    Mohan

    ReplyDelete
  21. Dear Sir,

    எத்தனையோ புத்தகங்கள் படித்து மக்கள் பயன் பெற்றார்களோ இல்லையோ ஆனால் உங்கள் ஜோதிட புத்தகத்தை படித்து மக்கள் பயன் அடைவது நிச்சயம்.

    Rgds
    Nainar

    ReplyDelete
  22. Dear Subbaiah Sir,
    I have recently joined this classroom..i am studying about the Dasa puthi lesson now..Really all your articles are impressive..i got mesmerised by your articles.its great news that you are making a book..We are waiting for that moment..All the best..

    I hope your book will become integral part of every family..

    thanks for your service to the world of astrology..

    hail..hail..subbaiah sir..

    long live subbaiah sir

    ReplyDelete
  23. I joined this class room through Kicha..he is also your student..since i am reading all the previous lessons i am not active in the blog..because i have taken all the lessons as a .PDF files from our classmate Mr.Kooduthurai yar Blog..Thanks to him also..

    ReplyDelete
  24. Congratulations! very very gooood news, sir.
    I also like to get one.
    Thanks

    ReplyDelete
  25. அப்பாடா! ஒரு வழியா இப்பவாது சொன்னீங்களே. ரஜினி பட அறிவிப்பு மாதிரி இழுத்துட்டே போனது. இப்பதான் விடை கெடச்சிருக்கு. வாத்தியார் ஐயா புத்தகங்களை பாத்தா ஒடனே வாங்கணும் போல தூண்டனும். அதாவது காந்தம் மாதிரி இழுக்கணும்னு சொல்ல வந்தேன்.

    ReplyDelete
  26. வாத்தியார் ஐயா

    அடியேனுக்கு எல்லாத்திலையும் ஒரு காப்பி.

    மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  27. அப்டியே புத்தகத்தில ஓங்க போட்டாவும் போட்டீங்கன்னா நல்லாருக்கும்.

    ReplyDelete
  28. புக்குல விஷயங்கள் அருமையாக இருக்கும்னு எல்லாருக்குமே நல்லாத்தெரியும்.

    அட்டை படங்கள் சூப்பெரா இருக்கற மாதிரி போடுங்கள். அதாவது அட்டைப் படங்களை பாத்த ஒடனே அப்டியே காந்தம் மாதிரி கவர்ந்திழுக்கிற மாதிரி டிசைன் பண்ணி வெளியிடுங்கள்.

    ReplyDelete
  29. பதிப்பு வேலைகள் ரெண்டு மாசத்துல முடிஞ்சா நல்லாருக்கும். அதுக்கு முன்னாடியே முடிஞ்சாலும் சந்தோசம்தான்.

    சட்டு புட்டுன்னு சீக்ரமா ரெடி பண்ணுங்க. அப்புறம் தீபாவளி அது இதுன்னு ஒரே பண்டிகையா வந்துட்டே இருக்கும்.

    ReplyDelete
  30. உருப்படியா ஒரு கேள்வி கேக்கலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எதுக்குன்னா, அப்பதானே நாலாம் பாகத்துல கேள்வி கேட்ட மகராசன்னு அடியேன் பேரு வரும். அதான் யோசிச்சிட்டே இருக்கேன். ஆனா என் மரமண்டைல நல்ல கேள்வியே உதிக்க மாட்டுக்கே.

    ReplyDelete
  31. அன்புமிகு அருளளார்
    ஆற்றல்மிகு ஆசிரியரின்
    இனிமையாய் இசைபாடி
    ஈசனருளுடன் ஈர்ப்புடன்
    உலகமக்களை உய்விக்க
    ஊர்நலம் ஊரார்நலத்தை
    என்றும் எக்கலாமும்
    ஏற்றமுடன் ஏறுபோல்
    ஐங்கரத்தானின் ஐயமில்லா
    ஒற்றுமையுடன்
    ஓங்குபுகழ்
    ஒளவை பாடிய தமிழில்
    வெளிவரும் ஐயா சுப்பையாவின்
    புத்தகம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள்
    அன்பர்களின் வாழ்வில்
    வசந்தத்தை தந்து மணம் பரப்பட்டும்

    ReplyDelete
  32. ///Blogger இராகவன் நைஜிரியா said...
    உங்கள் புத்தகங்கள் வெற்றியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன்.
    நானும் உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கின்றேன்.////

    ஆகா, அதுதான் இப்போது எனக்கு வேண்டும் (ஆண்டவன் அருள்). புத்தகம் நன்றாக அமைந்து உங்கள்

    அனைவரையும் மகிழ்விக்க வேண்டும்.
    நன்றி!

    ReplyDelete
  33. /////Blogger chaks said...
    வாழ்த்துக்கள் சார்.////

    உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்க மருந்து, நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. ///////Blogger பொட்டல் said...
    மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் புத்தக வெளியீட்டை வரவேற்கிறோம்.அதுவும் இலவசமாக வகுப்பறை

    மாணவர்களுக்கு.வாவ்.நான் போன வாரம்தான் உங்கள் வகுப்பில் சேர்ந்துள்ளேன்.போன பதிவில்

    opportunity,opportunity என்றீர்களே அது இதுதானா?.கடைசிப் பெஞ்ச் மாணவர்களுக்கு

    அதிர்ஷ்டம்தான்.என்ன இருந்தாலும் புத்தகத்தில் படிப்பதில் உள்ள சுகமே தனிதான்..நன்றி.‍_ பொட்டல்

    கிருஷ்ணன்/////

    ஆமாம். புத்தகமாகப் படிப்பதில் உள்ள சுகமே தனி!
    நான் எத்தனை புத்தகங்களைப் படித்து மகிழ்ந்திருப்பேன். அப்போதெல்லாம் கணினி ஏது?

    ReplyDelete
  35. //////Blogger krish said...
    All the best. A comprehensive book on astrology in a free flow writing style is required. Your effort in

    this regard is highly appreciable./////

    ப்ரீ ப்ளோ ரைட்டிங் எல்லாம் உங்களுக்காகத்தான். இல்லையென்றால் ஜோதிடம் போன்ற ஒரு கடினமான
    சப்ஜெக்டை எழுதி, அனைவரையும் படிக்க வைக்கமுடியுமா என்ன?
    நான் படிக்கும்போது வெறும் Dryஆகப் படித்துக் காய்ந்திருக்கிறேன். அதனால்தான், நான் பட்ட சிரமங்களை
    மற்றவர்கள் படக்கூடாது என்று சுவாரசியமாக எழுதத் துவங்கினேன்.

    ReplyDelete
  36. /////Blogger minorwall said...
    ஒருவழியா புக் ரிலீஸ் பண்ணி முடிச்சுட்டீங்கன்னா நீங்க free ஆகிடுவீங்கோ.கேள்விபதில் பகுதி இன்னும்

    interestingகாவும் classroom sessionsலே இன்னும் concentrate பண்றதுக்கும் வசதியா

    இருக்கும்.சோ..சீக்கிரமா முடிச்சு ரிலீஸ் பண்ணிடுங்க சார்.
    தசாவதாரம் படத்துக்குப்பிறகு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரிலீஸ் உங்க புத்தகஅவதாரம் தான்

    சார். எத்தினி கெட் அப் லே அசத்திருக்கீங்க சார்.
    ஏதும் trailer லாம் இல்லையா?/////

    தசாவதாரத்துடன் எல்லாம் ஒப்பிடாதீர்கள் மைனர்வாள். அது கூட்டு முயற்சி.
    trailer போட்டால் சஸ்பென்ஸ் போய்விடும். புத்தகத்தில் பல நகாசு வேலைகளைச் செய்ய உள்ளேன்.
    பொறுத்திருந்து பாருங்கள்.

    ReplyDelete
  37. //////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!
    தமிழ்ச் சமுதாயத்திற்கு தாங்கள் படைத்திருக்கும் இந்த நல்ல உதவிக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்

    கடன் பட்டிருக்கிறோம்..
    வாழ்க ஐயா நீர்..!////

    ஜோதிடத்தில் விருப்பம் உள்ள தமிழர்களுக்கு மட்டுமே இது உதவியாக இருக்கும் தமிழரே!
    ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்திற்கும் உதவும் என்று சொல்ல முடியாது.
    உங்கள் அன்பிற்கு நன்றி!

    ReplyDelete
  38. ////Blogger Bala said...
    Nanry ayya,
    700 Jeevaathmavin vaazhtugaludan thuvangugireergal......
    Sithi(vetri) ungaluku thaan.../////

    அது நிதர்சனமான உண்மை. அந்த 701 எனும் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, எனக்கு மகிழ்ச்சியைவிட
    கவலைதான் அதிகமாகிறது. நான் இன்னும் பொறுப்புடனும், அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் விதமாகவும் அல்லவா எழுத வேண்டும்!

    ReplyDelete
  39. ////Blogger Bala said...
    Ayya..........
    thaangal yen september mudintha vudan books veliyidugireergal enru kandu konden........
    Namma sanieswaranin transit kaagava?????????sep 26 sani peyarchi.......
    joke thaan seriousaaga dont take ayya........../////

    உண்மை! நான் திருவோண நட்சத்திரம். அஷ்டமத்துச்சனி, புரட்டிக்கொண்டிருந்தார். இப்போது விட்டுவிட்டார். தீய கிரகங்கள் ஒரு இடத்திற்கு வரும்போது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தங்கள் வேலையைத் துவங்கி விடும். அதேபோல இடம் மாறும்போது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பிடியைத் தளர்த்திவிடும்.

    ReplyDelete
  40. /////Blogger யாரோ ஒருவன் said...
    I'm waiting for this golden opportunity./////

    நன்றி. உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகாது!
    புத்தகத்தை நல்ல முறையில் வடிவமைப்பதாக உள்ளேன்.

    ReplyDelete
  41. ////Blogger Mohan said...
    Excellent work!! and great news sir. Eagerly waiting for those books.
    I'll send you the details in mail.
    Regards,
    Mohan////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  42. /////Blogger arumuga nainar said...
    Dear Sir,
    எத்தனையோ புத்தகங்கள் படித்து மக்கள் பயன் பெற்றார்களோ இல்லையோ ஆனால் உங்கள் ஜோதிட

    புத்தகத்தை படித்து மக்கள் பயன் அடைவது நிச்சயம்.
    Rgds
    Nainar/////

    ஜோதிடத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே, பயன் உள்ளதாக இருக்கும் நைனா(ர்)
    உங்கள் கருத்திற்கு நன்றி!

    ReplyDelete
  43. ////Blogger G.Nagarajan said...
    Dear Subbaiah Sir,
    I have recently joined this classroom..i am studying about the Dasa puthi lesson now..Really all your

    articles are impressive..i got mesmerised by your articles.its great news that you are making a book..We are

    waiting for that moment..All the best..
    I hope your book will become integral part of every family..
    thanks for your service to the world of astrology..
    hail..hail..subbaiah sir..
    long live subbaiah sir/////

    உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நாகராஜன்!

    ReplyDelete
  44. //////Blogger G.Nagarajan said...
    I joined this class room through Kicha..he is also your student..since i am reading all the previous lessons

    i am not active in the blog..because i have taken all the lessons as a .PDF files from our classmate

    Mr.Kooduthurai yar Blog..Thanks to him also../////

    ஆமாம். வகுப்பில் அவர் சீனியர் மாணவர்!
    அவருக்கு எப்போதும் எனது நன்றிகள் உண்டு!

    ReplyDelete
  45. /////Blogger முருகன் அடிமை said...
    1. அப்பாடா! ஒரு வழியா இப்பவாது சொன்னீங்களே. ரஜினி பட அறிவிப்பு மாதிரி இழுத்துட்டே போனது.

    இப்பதான் விடை கெடச்சிருக்கு. வாத்தியார் ஐயா புத்தகங்களை பாத்தா ஒடனே வாங்கணும் போல

    தூண்டனும். அதாவது காந்தம் மாதிரி இழுக்கணும்னு சொல்ல வந்தேன்./////
    2. வாத்தியார் ஐயா
    அடியேனுக்கு எல்லாத்திலையும் ஒரு காப்பி.
    மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள்.
    3. அப்படியே புத்தகத்தில ஓங்க போட்டாவும் போட்டீங்கன்னா நல்லாருக்கும்.
    4. புக்குல விஷயங்கள் அருமையாக இருக்கும்னு எல்லாருக்குமே நல்லாத்தெரியும்.
    அட்டை படங்கள் சூப்பெரா இருக்கற மாதிரி போடுங்கள். அதாவது அட்டைப் படங்களை பாத்த ஒடனே

    அப்டியே காந்தம் மாதிரி கவர்ந்திழுக்கிற மாதிரி டிசைன் பண்ணி வெளியிடுங்கள்.
    5. பதிப்பு வேலைகள் ரெண்டு மாசத்துல முடிஞ்சா நல்லாருக்கும். அதுக்கு முன்னாடியே முடிஞ்சாலும்

    சந்தோசம்தான்.
    சட்டு புட்டுன்னு சீக்ரமா ரெடி பண்ணுங்க. அப்புறம் தீபாவளி அது இதுன்னு ஒரே பண்டிகையா வந்துட்டே

    இருக்கும்.
    6. உருப்படியா ஒரு கேள்வி கேக்கலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எதுக்குன்னா, அப்பதானே நாலாம்

    பாகத்துல கேள்வி கேட்ட மகராசன்னு அடியேன் பேரு வரும். அதான் யோசிச்சிட்டே இருக்கேன். ஆனா என்

    மரமண்டைல நல்ல கேள்வியே உதிக்க மாட்டுக்கே.////

    அண்ணே, முருகன் அடிமை அண்ணே, ஒரே பின்னூட்ட மழையாகப் பெய்திருக்கிறீர்கள்.
    தலையைத் துவட்டிக் கொண்டு வருகிறேன்! சற்றுப் பொருங்கள்
    உங்களுடைய பின்னூட்டக் கோட்டா முடிந்துவிட்டது:-))))

    ReplyDelete
  46. ஐயா ,
    ஜோதிடத்தில் நீங்கள் ஆற்றும் மகத்தான சேவைக்கு தலை வணங்குகிறேன் . உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள் .



    நன்றியுடன்
    பிரேமானந்தன்

    ReplyDelete
  47. வாழ்த்துக்கள் Sir. I already send my details to your email. did you receive it?

    ReplyDelete
  48. Blogger பொட்டல் said...
    மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் புத்தக வெளியீட்டை வரவேற்கிறோம்.அதுவும் இலவசமாக வகுப்பறை மாணவர்களுக்கு.வாவ்.நான் போன வாரம்தான் உங்கள் வகுப்பில் சேர்ந்துள்ளேன்.போன பதிவில் opportunity,opportunity என்றீர்களே அது இதுதானா?.கடைசிப் பெஞ்ச் மாணவர்களுக்கு அதிர்ஷ்டம்தான்.என்ன இருந்தாலும் புத்தகத்தில் படிப்பதில் உள்ள சுகமே தனிதான்..நன்றி.‍_ பொட்டல் கிருஷ்ணன்/////

    அதுவும் இலவசமாக என்று எழுதியுள்ளீர்கள் நண்பரே!

    தமிழ்க் காவலர், மாண்புமிகு முதல்வர், நம் கலைஞர் அய்யா, அவர்கள் எதாவது மானியம் அளித்தால் புத்தகங்களை இலவசமாகத் தருகிறேன்.

    இல்லையென்றால் புத்தகங்கள் அனைத்தும் commercial sale copyகள்தான். உங்களுக்குக் கட்டுபடியாகும் விலையில். புத்தகம் அச்சாகும்போதுதான் அதன் விலையை நிர்ணயிக்க முடியும்.

    Type setting, graphic works, layout, paper & art board costs, printing expenses, stitching, binding, mat finishing work என்று பல நிலைகளில் வேலைகள் உள்ளன. அனைவரிடமும் quotation வாங்கி, அச்சிற்குக் கொண்டு செல்லும்போதுதான் விலையை நிர்ணயம் செய்ய முடியும். அந்த சமயத்தில், விருப்பம் உள்ளவர்கள் வாங்கிக் கொள்ளலாம். விருப்பம் இல்லாதவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிடலாம் அங்கேயும் உங்களுக்கு ஒரு option உள்ளது. option கொடுக்கப்படும்.

    புத்தகம் தயாரானவுடன், உங்களுக்குப் பதிப்பகத்தாரின் முகவரியையும், அவர்களுடைய வங்கிக் கணக்கு எண் மற்றும் IFCS Code ஆகியவற்றையும் தருகிறேன். அப்போது நீங்கள் பணம் செலுத்தினால் போதும். புத்தகம்
    உங்களைத் தேடி வரும். எந்த நாட்டில் இருந்தாலும் சரி, தேடிவரும்

    ReplyDelete
  49. I have registered in the mail ID given by you,ayya!

    kmr.krishnan(s.no 158)

    ReplyDelete
  50. //புத்தகம் தயாரானவுடன், உங்களுக்குப் பதிப்பகத்தாரின் முகவரியையும், அவர்களுடைய வங்கிக் கணக்கு எண் மற்றும் IFCS Code ஆகியவற்றையும் தருகிறேன். அப்போது நீங்கள் பணம் செலுத்தினால் போதும். புத்தகம்
    உங்களைத் தேடி வரும். எந்த நாட்டில் இருந்தாலும் சரி, தேடிவரும்//

    இது ஒரு சிறந்த முடிவு! எந்த பொருளுக்கும் விலை கொடுத்தால்தான் அதன் மதிப்பு தெரியும்! புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
  51. ////Blogger T.V.Radhakrishnan said...
    வாழ்த்துகள்////

    நன்றி ராதாகிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  52. Blogger பொதிகைத் தென்றல் said...
    அன்புமிகு அருளளார்
    ஆற்றல்மிகு ஆசிரியரின்
    இனிமையாய் இசைபாடி
    ஈசனருளுடன் ஈர்ப்புடன்
    உலகமக்களை உய்விக்க
    ஊர்நலம் ஊரார்நலத்தை
    என்றும் எக்கலாமும்
    ஏற்றமுடன் ஏறுபோல்
    ஐங்கரத்தானின் ஐயமில்லா
    ஒற்றுமையுடன்
    ஓங்குபுகழ்
    ஒளவை பாடிய தமிழில்
    வெளிவரும் ஐயா சுப்பையாவின்
    புத்தகம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள்
    அன்பர்களின் வாழ்வில்
    வசந்தத்தை தந்து மணம் பரப்பட்டும்/////////

    உங்கள் அன்பிற்கும், உயிர் எழுத்துக்களால் செய்த (அர்ச்சினைக்கும்) பாராட்டு மடலுக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  53. ////Blogger Dinesh babu said...
    All the very best sir!///

    நன்றி பாபு!

    ReplyDelete
  54. ////Blogger Prem said...
    ஐயா ,
    ஜோதிடத்தில் நீங்கள் ஆற்றும் மகத்தான சேவைக்கு தலை வணங்குகிறேன் . உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள் .
    நன்றியுடன்
    பிரேமானந்தன்////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  55. Blogger தஞ்சை-சித்தர் said...
    வாழ்த்துக்கள் Sir. I already send my details to your email. did you receive it?/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  56. ////Blogger kmr.krishnan said...
    I have registered in the mail ID given by you,ayya!
    kmr.krishnan(s.no 158)////

    நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  57. /////Blogger karmegaraja said...
    //புத்தகம் தயாரானவுடன், உங்களுக்குப் பதிப்பகத்தாரின் முகவரியையும், அவர்களுடைய வங்கிக் கணக்கு எண் மற்றும் IFCS Code ஆகியவற்றையும் தருகிறேன். அப்போது நீங்கள் பணம் செலுத்தினால் போதும். புத்தகம் உங்களைத் தேடி வரும். எந்த நாட்டில் இருந்தாலும் சரி, தேடிவரும்//
    இது ஒரு சிறந்த முடிவு! எந்த பொருளுக்கும் விலை கொடுத்தால்தான் அதன் மதிப்பு தெரியும்! புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!////

    உங்களுடைய புரிதலுக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  58. வணக்கம் ஐயா
    நாங்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த விஷயம் நடக்கப்போவது குறித்து மிகவும் சந்தொஷபடுகிறோம் ,தங்களின் எது போன்ற முயற்சி மென் மேலும் தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
    நன்றி
    கணேசன்

    ReplyDelete
  59. ////Blogger choli ganesan said...
    வணக்கம் ஐயா
    நாங்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த விஷயம் நடக்கப்போவது குறித்து மிகவும் சந்தொஷபடுகிறோம் ,தங்களின் எது போன்ற முயற்சி மென்மேலும் தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
    நன்றி
    கணேசன்////

    உங்கள் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி கணேசன்!

    ReplyDelete
  60. புத்தகங்கள் வாங்க ஆவலாக உள்ளோம்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  61. வணக்கம் ஐயா,மிகுந்த மகிழ்ச்சி.அனைத்து பதிப்புக்களும் சிறப்பாக வெளிவர வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  62. வணக்கம் ஐயா,மிகுந்த மகிழ்ச்சி.அனைத்து பதிப்புக்களும் சிறப்பாக வெளிவர வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  63. புத்தக வெளியீடு நல்ல முறையில் அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    அன்புடன்
    மதுரை சுப்பு

    ReplyDelete
  64. ////Blogger வேலன். said...
    புத்தகங்கள் வாங்க ஆவலாக உள்ளோம்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  65. ////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,மிகுந்த மகிழ்ச்சி.அனைத்து பதிப்புக்களும் சிறப்பாக வெளிவர வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    மதுரை தனா.////

    நன்றி தனா!

    ReplyDelete
  66. ///////////////Blogger subbu said...
    புத்தக வெளியீடு நல்ல முறையில் அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
    அன்புடன்
    மதுரை சுப்பு////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  67. தாங்கள் எப்போதும் சொல்வது போல் அஷ்டவர்க பரல் என்பது 337 தான். இதில் எங்கே எனக்கு குழப்பம் ஆரம்பித்தது என்றால் Jagannatha Hora programmeல் என் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு சுய அஷ்டவர்கத்தில் 5 பரல்கள் இருந்தன. ஆனால் வகுப்பறை மாணவர் கரூர் தியாகராஜன் அவர்கள் கொடுத்த programmeல் அதே சுக்கிரனுக்கு சுய அஷ்ட வர்கத்தில் 4 பரல்கள்தான் இருந்தது. பிறகுதான் தெரிய வந்தது. இதிலும் 2 வகை இருக்கிறது என்று. ஒன்று பராசரரின் பிருஹத் பராசர ஹோரையப் பின் பற்றியது. இன்னொன்று வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகத்தைப் பின் பற்றியது. அது பின்வருமாறு:-

    1) பிருஹத் பராசர ஹோரையின் படி
    2) பிருஹத் ஜாதகத்தின் படி

    சந்திரனுடைய அஷ்டவர்கத்தில் குருவினுடைய பரல்

    1) 1,2,4,7,8,10,11
    2) 1,4,7,8,10,11,12


    சுக்கிரனுடைய அஷ்டவர்கத்தில் செவ்வாயின் பரல்

    1) 3,4,6,8,11,12
    2) 3,5,6,9,11,12

    இதன்படி பார்த்தால் குரு இருக்கும் இடத்தில் இருந்து சந்திரன் 1,4,7,8,10,11ம் இடங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தாலும், செவ்வாய் இருக்கும் இடத்தில் இருந்து சுக்கிரன் 3,6,11,12ம் இடங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தாலும் இந்த குழப்பம் வராது. இல்லாவிட்டால் பிரச்சினைதான். (எனக்கு செவ்வாய் இருக்கும் ராசியில் இருந்து 4ல் சுக்கிரன் இருக்கிறார்)

    இது குறித்து பிரபல ஜோதிடர்களும், இது சரி இது தவறு என்று கூற முன் வரவில்லை. அவரவர் வாழ்க்கைக்கு எது சரியாக வருகிறதோ அதைப் பின்பற்ற சொல்கிறார்கள். நாமும் அப்படியே செய்ய வேண்டியதுதான். எனென்றால் ஜோதிடம் தோன்ற காரணமாக இருந்த விற்பன்னர்களை விமர்சிக்கும் தகுதி நமக்கில்லை.

    ReplyDelete
  68. மிகுந்த மகிழ்ச்சி,உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

    நன்றி.

    -கிமூ-

    ReplyDelete
  69. Dear Sir

    Nangal Migundha Magilzhiyaga Ungal Book - Ethirpargirom...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  70. வாத்யார் சுப்பையா ஐயா அவர்களின் ஜோதிடக்கலை கற்பிக்கும் நான்கு புத்தகங்களுக்கான முன்பதிவிற்காக விபரங்களை தனி மின் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளேன்.

    உங்கள் சீரிய முயற்சி முழு வெற்றி பெற செந்திலாண்டவன் துணை நிச்சயம் உண்டு.


    வளர்க!
    வாழ்க!



    அன்புடன்
    நெல்லை கார்த்திக்

    ReplyDelete
  71. வாத்யார் சுப்பையா ஐயா,

    I think you are busy with your book sales booking. that's why not send latest lesson (adv. jothida padam). isn't it?

    அன்புடன்,
    Eagle

    ReplyDelete
  72. Dear Sir,

    2 questions.

    1. What is the use if Guru present in 2 house.

    2. Is it considered as dosham, even if Raghu or kethu present in Navamsa? I mean in 1st and 7th place?

    Thanks
    Saravana

    ReplyDelete
  73. Blogger ananth said...
    தாங்கள் எப்போதும் சொல்வது போல் அஷ்டவர்க பரல் என்பது 337 தான். இதில் எங்கே எனக்கு குழப்பம் ஆரம்பித்தது என்றால் Jagannatha Hora programmeல் என் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு சுய அஷ்டவர்கத்தில் 5 பரல்கள் இருந்தன. ஆனால் வகுப்பறை மாணவர் கரூர் தியாகராஜன் அவர்கள் கொடுத்த programmeல் அதே சுக்கிரனுக்கு சுய அஷ்ட வர்கத்தில் 4 பரல்கள்தான் இருந்தது. பிறகுதான் தெரிய வந்தது. இதிலும் 2 வகை இருக்கிறது என்று. ஒன்று பராசரரின் பிருஹத் பராசர ஹோரையப் பின் பற்றியது. இன்னொன்று வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகத்தைப் பின் பற்றியது. அது பின்வருமாறு:-
    1) பிருஹத் பராசர ஹோரையின் படி
    2) பிருஹத் ஜாதகத்தின் படி
    சந்திரனுடைய அஷ்டவர்கத்தில் குருவினுடைய பரல்
    1) 1,2,4,7,8,10,11
    2) 1,4,7,8,10,11,12
    சுக்கிரனுடைய அஷ்டவர்கத்தில் செவ்வாயின் பரல்
    1) 3,4,6,8,11,12
    2) 3,5,6,9,11,12
    இதன்படி பார்த்தால் குரு இருக்கும் இடத்தில் இருந்து சந்திரன் 1,4,7,8,10,11ம் இடங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தாலும், செவ்வாய் இருக்கும் இடத்தில் இருந்து சுக்கிரன் 3,6,11,12ம் இடங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தாலும் இந்த குழப்பம் வராது. இல்லாவிட்டால் பிரச்சினைதான். (எனக்கு செவ்வாய் இருக்கும் ராசியில் இருந்து 4ல் சுக்கிரன் இருக்கிறார்)
    இது குறித்து பிரபல ஜோதிடர்களும், இது சரி இது தவறு என்று கூற முன் வரவில்லை. அவரவர் வாழ்க்கைக்கு எது சரியாக வருகிறதோ அதைப் பின்பற்ற சொல்கிறார்கள். நாமும் அப்படியே செய்ய வேண்டியதுதான். எனென்றால் ஜோதிடம் தோன்ற காரணமாக இருந்த விற்பன்னர்களை விமர்சிக்கும் தகுதி நமக்கில்லை.//////

    உண்மை. தகவலுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  74. ////Blogger kimu said...
    மிகுந்த மகிழ்ச்சி,உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
    நன்றி.
    -கிமூ-////

    நன்றி கிருஷ்ணமூர்த்தி!

    ReplyDelete
  75. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Nangal Migundha Magilzhiyaga Ungal Book - Ethirpargirom...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகாது!நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  76. ////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
    வாத்யார் சுப்பையா ஐயா அவர்களின் ஜோதிடக்கலை கற்பிக்கும் நான்கு புத்தகங்களுக்கான முன்பதிவிற்காக விபரங்களை தனி மின் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளேன்.
    உங்கள் சீரிய முயற்சி முழு வெற்றி பெற செந்திலாண்டவன் துணை நிச்சயம் உண்டு.
    வளர்க!
    வாழ்க!
    அன்புடன்
    நெல்லை கார்த்திக்/////

    நன்றி கார்த்திக்!

    ReplyDelete
  77. /////Blogger Eagle said...
    வாத்யார் சுப்பையா ஐயா,
    I think you are busy with your book sales booking. that's why not send latest lesson (adv. jothida padam). isn't it?
    அன்புடன்,
    Eagle/////

    இந்த நக்கல்தானே வேண்டாம் என்கிறது. இந்த மாதம் 19 நாட்களில் 12 இடுகைகளை வலையேற்றியிருக்கிறேன் சுமார் 400 பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதியிருக்கிறேன். இதற்கு மேல் என்னை என்ன செய்யச் சொல்லியிருக்கிறீர்கள்? உங்கள் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் வக்கிரமாக உள்ளது என்று பாருங்கள். யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள் நண்பரே!

    ReplyDelete
  78. Blogger Saravana said...
    Dear Sir,
    2 questions.
    1. What is the use if Guru present in 2 house.
    2. Is it considered as dosham, even if Raghu or kethu present in Navamsa? I mean in 1st and 7th place?
    Thanks
    Saravana/////

    பழைய பாடங்களில் எழுதியுள்ளேன். முதலில் பழைய பாடங்களைப் படியுங்கள் தோழரே!

    ReplyDelete
  79. இப்பொழுது தான் இந்த இடுக்கையை பார்த்தேன்.


    மிக்க மகிழ்ச்சி.

    புத்தகங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    எனக்கு ஒரு பிரதியை இங்கே பதிவு செய்கிறேன். எங்கள் நூலகத்தில் இப்புத்தகங்கள் இருந்து சிறப்பிக்கட்டும் என்பது என் ஆவல்.

    நன்றி

    ReplyDelete
  80. ////ஸ்வாமி ஓம்கார் said...
    இப்பொழுது தான் இந்த இடுக்கையைப் பார்த்தேன்.
    மிக்க மகிழ்ச்சி.
    புத்தகங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    எனக்கு ஒரு பிரதியை இங்கே பதிவு செய்கிறேன். எங்கள் நூலகத்தில் இப்புத்தகங்கள் இருந்து சிறப்பிக்கட்டும் என்பது என் ஆவல்.
    நன்றி/////

    ஆகா, நன்றி ஸ்வாமிஜி

    ReplyDelete
  81. Dear sir,

    Its very happy occasion for all of us who reads your blog regularly. Looking forward to receive those valuable treasure. No doubt that will be a great success.

    ReplyDelete
  82. All the best.Kindly booked one copy to me

    ReplyDelete
  83. What is book price and how to we pay the Book amount.


    Your's
    nataraj

    ReplyDelete
  84. Sir,

    I kept answering your mails. This is the the first time that I am joining a blog. Looks like you prefer answering the replies in blog to answering individual mails.In the blog I see that you patiently answer every reply. I appreciate you for that

    Thanks!

    Blog il Tamizil tattacha enna seyya vendum? At times I use the internet from a pc where I do not have administrator rights. Also I like Google Tranliteration method Can I use it here too?

    ReplyDelete
  85. ///sowri said...
    Dear sir,
    Its very happy occasion for all of us who reads your blog regularly. Looking forward to receive those valuable treasure. No doubt that will be a great success.////

    நன்றி நண்பரே! மின்னஞ்சலில் பிரதிகளுக்குப் பதிவு செய்துகொள்ளூங்கள்!

    ReplyDelete
  86. ////achukichan said...
    All the best.Kindly booked one copy to me/////

    மின்னஞ்சலில் பிரதிகளுக்குப் பதிவு செய்துகொள்ளூங்கள்!

    ReplyDelete
  87. ////natraj said...
    What is book price and how to we pay the Book amount.
    Your's
    nataraj////

    புத்தகம் அச்சுக்குப் போகும்போதுதான், பக்கங்களின் அளவும், விலையும் தெரியவரும். அப்போது தெரிவிக்கிறேன். அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் அவைகள் இருக்கும். அப்போதும் கூட நீங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே உங்களுக்கு அவைகள் அனுப்பிவைக்கப்படும். வேண்டாம் என்று மறுக்கும் option உங்களுக்குத் தரப்படும். இரண்டு மாதங்கள் பொறுத்திறுங்கள்

    ReplyDelete
  88. ebibliophile said...
    Sir,
    I kept answering your mails. This is the the first time that I am joining a blog. Looks like you prefer answering the replies in blog to answering individual mails.In the blog I see that you patiently answer every reply. I appreciate you for that
    Thanks!
    Blog il Tamizil tattacha enna seyya vendum? At times I use the internet from a pc where I do not have administrator rights. Also I like Google Tranliteration method Can I use it here too?/////

    /////I like Google Transliteration method Can I use it here too? ////
    தட்டச்சு செய்து cut & paste செய்ய வேண்டும்!
    ----------------------------------------------------------------------------
    You can download NHM writer. It is free & also user friendly!
    =====================================================

    ReplyDelete
  89. ////natraj said...
    What is book price and how to we pay the Book amount.
    Your's
    nataraj////

    புத்தகம் அச்சுக்குப் போகும்போதுதான், பக்கங்களின் அளவும், விலையும் தெரியவரும். அப்போது தெரிவிக்கிறேன். அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் அவைகள் இருக்கும். அப்போதும் கூட நீங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே உங்களுக்கு அவைகள் அனுப்பிவைக்கப்படும். வேண்டாம் என்று மறுக்கும் option உங்களுக்குத் தரப்படும். இரண்டு மாதங்கள் பொறுத்திறுங்கள்

    கண்டிப்பாக என்னக்கு 1 book வேண்டும்

    மெயில்லில் விலாசம் அணுப்பி உள்ளேன்.2days back .

    thanks for reply
    nataraj

    ReplyDelete
  90. This comment has been removed by the author.

    ReplyDelete
  91. ////natraj said...
    What is book price and how to we pay the Book amount.
    Your's
    nataraj////

    புத்தகம் அச்சுக்குப் போகும்போதுதான், பக்கங்களின் அளவும், விலையும் தெரியவரும். அப்போது தெரிவிக்கிறேன். அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் அவைகள் இருக்கும். அப்போதும் கூட நீங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே உங்களுக்கு அவைகள் அனுப்பிவைக்கப்படும். வேண்டாம் என்று மறுக்கும் option உங்களுக்குத் தரப்படும். இரண்டு மாதங்கள் பொறுத்திறுங்கள்

    கண்டிப்பாக என்னக்கு 1 book வேண்டும்

    மெயில்லில் விலாசம் அணுப்பி உள்ளேன்.2days back .


    புத்தகங்களை பெற நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்

    thanks for reply
    nataraj

    ReplyDelete
  92. அடியேனுக்கு ஒரு புத்தகம் வேண்டும் . அடியேன் வசம் செங்கை .சிங்கப்பூர் க்கு புத்தகம் கெடைக்குமா? இல்லை இந்திய அட்ரஸ் குடுக்கணுமா?

    பதிவு பண்ணியாச்சு எழிமை நடை வாத்தியரே!!

    ReplyDelete
  93. ////natraj said...
    கண்டிப்பாக என்னக்கு 1 book வேண்டும்
    மெயில்லில் விலாசம் அணுப்பி உள்ளேன்.2days back .
    புத்தகங்களை பெற நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்
    thanks for reply
    nataraj////

    புத்தகங்கள் டிஸம்பரில் வரும். தயவு செய்து பொறுத்திருங்கள். பதிவு செய்துள்ள அனைவருக்கும் புத்தகங்கள் கிடைக்கும். அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பிவைக்கப்படும்!

    ReplyDelete
  94. ////Priya said...
    அடியேனுக்கு ஒரு புத்தகம் வேண்டும் . அடியேன் வசம் செங்கை .சிங்கப்பூர் க்கு புத்தகம் கிடைக்குமா? இல்லை இந்திய அட்ரஸ் குடுக்கணுமா?
    பதிவு பண்ணியாச்சு. எளிமை நடை வாத்தியரே!!////

    நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு (அது சிங்கை அல்லது உள்ளூர்) அது அனுப்பிவைக்கப்படும்.
    நன்றி சகோதரி

    ReplyDelete
  95. Dear sir,
    I am new to your classroom. I studied your lessons,its easy to understand, I want to study about your navamsa lessons.can you send my mail id.my id is vbmaha86@gmail.com

    ReplyDelete
  96. அன்புள்ள அய்யா,
    சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உரித்தாகுக!

    நான் இன்று தான் ஜோதிட வகுப்பில் சேர்ந்துள்ளேன். தங்களின் புத்தகங்கள் விவரங்கள் அறிந்தேன். தங்களின் அனைத்துப் புத்தங்கங்களும் ஒருவேளை வெளிவந்துவிட்டனவோ? தெரியாது. தாங்கள் அன்பு கூர்ந்து இவ்வேழைக்கும் உதவிட வேண்டுகிறேன். எனக்குத் தங்களின் புத்தகங்கள் தேவை. என்னை ஒரு நல்ல தலைசிறந்த ஜோதிடன் ஆக்கிட வேண்டுகிறேன். தங்களின் புத்தகங்களைப் பெற நான் என்ன செய்யவேண்டும்? அன்புடன் பதிலளிக்க வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
    தங்களின் அன்பு மடலை வேண்டிநிற்கிறேன்.

    ReplyDelete
  97. Dear sir,

    I am new student and i would like to learn from your books.Kindly help me to learn astrology. How shall i get your books kindly let me know sir. my email id sleekkanns@gmail.com
    NAME : M.S.KAMALAKANNAN

    ReplyDelete
  98. Dear Sir,
    where can i get all your books about astrology? I meas all 4 parts.
    Thanks.
    saravanan.muthu@gmail.com.
    -Saravanan.

    ReplyDelete
  99. வணக்கம் ஐயா
    உங்கள் மாணவன் சண்முகம் என்பதில் மிக்க மகிச்சியுடன் நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஐயா

    ReplyDelete
  100. Hi Sir,

    Kindly let me know if you have those books available. I tried to you reach you thru your email ( classroom.. gmail and spvr...@gmail) but unfortunately not able to get reply from you.

    Kindly let me know whether can get these4 books.

    Thanks,
    Raja chinna.

    ReplyDelete
  101. Hello Sir,

    Please update me the list of available books with the details till date.

    Thanks in advance !!

    Regards,
    Rajkumar

    ReplyDelete
  102. Dear Sir,

    I want all the books written by you. I have ordered a book from Umayal pathipagam. Pls let me know the other books details written by you.

    Also the available places to buy the books.

    Help me sir.

    Kaveri

    ReplyDelete
  103. Dear Sir

    Congratulations for bringing out a wonderful piece of work which will be a encyclopedia for tamil astrological students community and the world.

    Rajasekarapandian
    Chennai

    ReplyDelete
  104. Pl enroll my name towards the books to be released by you

    ReplyDelete
  105. Kindly tell me the amount to be sent for purchasing your ஜோதிட நூல்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com