மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.8.09

ஜோதிடப் பாடம்: கிரகங்களும் நோய்களும் (Planets & Diseases)


ஜோதிடப் பாடம்: கிரகங்களும் நோய்களும் (Planets & Diseases)

எச்சரிக்கை: இது பொதுப்பலன் மட்டுமே.
யாரும் குழப்பிக் கொள்ள வேண்டாம். அல்லது
கேள்வி கேட்டு என்னைக் குழப்ப வேண்டாம்!:-)))

கிரகக் கூட்டணியால் உண்டாகக்கூடிய நோய்களைப்
பட்டியல் இட்டுள்ளேன்.

சேர்க்கை, மற்றும் பார்வைகளால் அவைகள் உண்டாகும்
உண்டாகும் என்பது பொதுப்பலன்

உண்டாகமலும் போகலாம். அது தனிப்பட்ட ஜாதகங்களில்
உள்ள வேறு அமைப்புக்களால் உண்டாகமலும் போகலாம்.

”சார், எனக்கு இல்லையே?”என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்
இனி வரக்கூடும். அவற்றின் திசை ஆரம்பிக்கும்போது!

நோட்டிஸ் அல்லது வாரண்ட் இல்லாமல் வரலாம்.
வந்த பிறகு வாத்தியார் எழுதியதை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள்

வராவிட்டால், வாத்தியார் எழுதியது பொய், புனைசுருட்டு என்று
எண்ணாமல், நம் ஜாதகக் கோளாறு அல்லது நல்ல அமைப்பு அல்லது
இறைச் செயல், நம் மனைவி அல்லது நம் தாய் நமக்காகக் கும்பிட்ட
பலா பலன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு எங்கே கும்பிட நேரம் இருக்கும்?
அதனால்தான் மனைவி அல்லது தாய் என்று எழுதியுள்ளேன்!
பெண்களுக்கு மட்டும்தான் அந்த அக்கறை எல்லாம் உண்டு.

அபூர்வமாக சில ஆண்களுக்கும் உண்டு. இந்த வரி நான் தப்பிப்பதற்கு:-))))
---------------------------------------------------------------
1
செவ்வாய், புதன், & சந்திரன் = மூட்டு வலி
Mars, Mercury, Moon = Rheumatism, rheumatic disorder,
medical problems affecting the joints and connective tissue.
2
சனி & சூரியன் = பொதுவான உடல் நோய்கள், எலும்பு சம்பந்தப்பட்ட
நோய்கள்
Saturn, Sun = Body Problems and bone diseases
3
செவ்வாய் & புதன் = அஜீரணக்கோளாறுகள், நீரழிவு நோய்கள்
Mars, Mercury = Digestive diseases, diabetes
4
சனி & கேது = நரம்பு சம்பந்தமான நோய்கள்
Saturn, Ketu = Diseases of the nervous system
5
புதன், செவ்வாய், கேது = மனநோய்கள், ஹிஸ்டீரியா போன்ற
மன அழுத்த நோய்களும் அதில் அடக்கம்!
Mercury, Mars, Ketu = Psychol0ogical diseases, including hysteria
6
செவ்வாய், சனி, ராகு = தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்
Mars, Saturn, Rahu = Skin diseases
7
சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன், புதன் & குரு = மூத்திரப் பை,
கர்ப்பப்பை போன்றவற்றில் ஏற்படும் உபாதைகள் & நோய்கள்
Saturn, Mars, Moon,Venus, Mercury, Jupiter = Urinary and
gynaecological problems
8
சனி & செவ்வாய் = பற்கள், காதுகள் & தொண்டை போன்றவற்றில்
ஏற்படும் நோய்கள்
Saturn, Mars = Dental problems & Ear nose, and throat problems

9 சனி, செவ்வாய் கூட்டணி = இரத்த சம்பந்தமான நோய்கள்
Saturn, Mars = Blood-related problems

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

79 comments:

  1. எனக்கு எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் இருக்குங்கோ.

    ReplyDelete
  2. ////Blogger முருகன் அடிமை said...
    எனக்கு எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் இருக்குங்கோ.////

    கொஞ்சம் கொஞ்சம் இருந்தால் பரவாயில்லை. அதான் அடிமையாகிவிட்டீர்களே. அவர் பார்த்துக்கொள்வார்.

    இந்தப் பதிவைப் பொறுத்தவரை உங்கள் பின்னூட்டக் கோட்டா ஓவர்.
    அதாவது முடிந்துவிட்டது. இனி அடுத்த பின்னூட்டம் அடுத்த பதிவிற்கு!
    என்ன சரியா? சரி என்று வைத்துக்கொண்டால் போதும். அதற்குப் பின்னூட்டம் வேண்டாம் முருகா!

    ReplyDelete
  3. it would be very useful if the places of palnets were indicated rather than the "karagan"

    ReplyDelete
  4. உள்ளேன் அய்யா.

    //”சார், எனக்கு இல்லையே?”என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்// நோய் இல்லையே என்று வருத்தப்படுபவர்களும் இருக்கிறார்களா? :-(

    ReplyDelete
  5. முன்பே ஒரு பாடத்தில், ஒருவருக்கு லகினத்தில் சந்திரன் இருந்து, அதன் இருபுறங்களிலும் செவ்வாயும் ராகுவும் நின்று (பாபகர்த்தாரி) சூரியன் ஏழாம் வீட்டிலிருந்து லகினத்தைப் பார்த்தல் அவருக்கு leucoderma (தோல் நிறமிழந்து வெண்மயடைதல்) உண்டாகும் என்று எழுதி இருந்தீர்கள். என் உறவினர் ஒருவருக்கு ஜாதகத்தில் இந்த அமைப்பும் இந்த நோயும் உள்ளது.

    ReplyDelete
  6. சுப்பையா ஐயா,

    கிரக கூட்டணியால் உண்டாகக்கூடிய நோய்களைப் பட்டியல் இட்டுள்ளீர்கள்!

    அதில் எனககு ஒரு சந்தேகம். இது ஒருவரது ஜனன ஜாதகத்தைப் பொறுத்தா அல்லது கோட்சாரத்தை பொறுத்தா பார்க்க வேண்டும்? மேலும் பஞ்சபட்சி சாஸ்திரம் ஜோதிடத்தில் வருகிறதா? அப்படியானால் அது என்ன? பஞ்சபட்சி சாஸ்திரம் ஜோதிடத்தில் வரவில்லை என்றால் தங்கள் பல்சுவை பதிவிலாவது எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  7. ரொம்ப வருசத்துக்கு முன் என்னுடன் வேலை பார்த்த ஒருவர் சூரியன் எந்த வீட்டில் இருக்கிராரோ அந்த பாகத்தை எரித்து விடுவார் என்று கூறினார். உதாரணம் முதல வீடு என்றல் தலை (அதாவது, தலை சம்பந்தமான நோய்கள்), இரண்டாம் வீர்டு என்றல் கழுத்து. இது போன்று. உண்மையா?

    ReplyDelete
  8. அய்யா உங்கள் கிரகங்களும் நோய்களும் என்ற தலைப்பில் உள்ள விவரங்கள் அந்ததந்த ராசிக்கான அங்க உறுப்ப்களுக்கு ஏற்பட இருக்கும் நோய்கள்ளுக்கும் பொருந்தும் என் நினைக்கிறேன் .அதோபோல அஷ்டகவர்க்கத்தில் அந்ததந்த கிரகங்கள் தன்னுடைய சுய வர்கத்தில் நான்குக்குமேல் இருந்தால் அந்த நோய்க்கான தாக்கமும் குறையும் என நினைக்கிறேன் . தங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கும் உங்கள் செட்டி .நன்றி

    ReplyDelete
  9. பன்றி காய்ச்சல் எந்த கிரகத்தின் தாக்கத்தால் வந்தது.
    தெளிவு படுத்துவீர்கள் என நம்புகிறேன்.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  10. about swine flu

    i emember reading in some astro magazine last year during the period of guru transit that that year 2009 would see the spread of strange diseases..

    ReplyDelete
  11. sir neengal miscellaneous questionsukkaka yen oru thaani link podakutathu. aanaal athu mikkavum dangerla kondu poi vittalum vidum lols...

    ReplyDelete
  12. sir, best astrologers paguthilyil oru athur jothidarin address paarthathga nyabagam. anna eppo athu eillaye /
    sir unnkalukku yaravathu oru reliable nadi astrologerin address theriyuma ?

    ReplyDelete
  13. Medical Astrology is very tough. Ayurveda doctors use astrology to diagonise diseases and prescribe remedies. The book Ayurvedic Astrology is very informative and useful.

    ReplyDelete
  14. Ayurvedic Astrology by David Frawley. Freely available on www.scribd.com.

    ReplyDelete
  15. எனக்கு எல்லாமே கலந்து கட்டி ஒரு சால்னா மாதிரியிருக்கு வாத்தியாரே..!

    என்ன செய்றது..? யாரை நோவுவது..?

    ReplyDelete
  16. Enrolment Listல் இருப்பவர்கள் 675 பேர்கள். உங்கள் அததனை பேருக்கும் Mail Lessons வந்ததா? வந்திருக்காது! ஏன்? வாத்தியாருக்குத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தவர்கள் 400 பேர்கள் மட்டுமே. அவர்களுக்கு மட்டுமே வந்திருக்கும். தராதவர்களின் முகவரி வாத்தியாருக்கு எப்படித் தெரியும்?யோசித்துப் பாருங்கள்!

    வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

    Inform your mail ID through an email message! ஒரு வரி எழுதுங்கள்!


    sir
    what r the details we send to your mail id to join member pl inform sir thanks you..

    Example ;
    1.our email id
    2.Name


    thanks
    nataraj

    ReplyDelete
  17. மிகவும் நல்ல பதிவு

    ReplyDelete
  18. good artickle sir, it will help them to prevent the deceses. they should takecare about the disecess before the planets rounds.

    ReplyDelete
  19. ஐயா,

    வகுப்புக்கு ஆஜர்...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  20. வர வர பதிவைப் படிப்பதை விட பின்னுட்டத்தைப் படிப்பதற்குதான் நேரம் அதிகம் எடுக்கிறது.

    முடியல (வடிவேலு பாணியில் படிக்கவும்). எல்லா பின்னுட்டங்களையும் படித்து விட்டு ஆசிரியர் இப்படிதான் சொல்வார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  21. Dear Vathiyar Sir,

    Need a clarification. In a female horoscope, if Sevvai & suriyan are in 8th place(Rishabam), is that considered are mangalya dosam? If the 8 place has Guru's 7th parvai, means, is that nullified? Need your explanation?

    (Going through the lesson's and didn't find any hits related to this)

    Thanks
    Saravan

    ReplyDelete
  22. /////Blogger T K Arumugam said...
    it would be very useful if the places of palnets were indicated rather than the "karagan"////

    காரகர்களுக்கு, அதுவும் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் சேரும்போது இடம் எதற்கு?
    அவர்கள் காரகர்கள் (authorities) அல்லவா? எங்கேயிருந்து வேண்டுமென்றாலும் செயல்படுவார்கள்.
    தங்களுக்குரிய நேரம் வரும்போது!

    ReplyDelete
  23. ////Blogger அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா.
    //”சார், எனக்கு இல்லையே?”என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்// நோய் இல்லையே என்று வருத்தப்படுபவர்களும் இருக்கிறார்களா? :-(////

    ராசியா? அம்சமா? எதில் என்று தேடிப் பார்த்து இல்லையெனும்போது, குழப்பத்தில், இல்லையே? என்று வருத்தப்படுபவர்கள் இருப்பார்கள். அவர்களுக்காக எழுதினேன்.

    ReplyDelete
  24. ////Blogger T.V.Radhakrishnan said...
    Present Sir////

    வருகைப்பதிவிற்கு நன்றி சார்!

    ReplyDelete
  25. /////Blogger chaks said...
    முன்பே ஒரு பாடத்தில், ஒருவருக்கு லகினத்தில் சந்திரன் இருந்து, அதன் இருபுறங்களிலும் செவ்வாயும் ராகுவும் நின்று (பாபகர்த்தாரி) சூரியன் ஏழாம் வீட்டிலிருந்து லக்கினத்தைப் பார்த்தால் அவருக்கு leucoderma (தோல் நிறமிழந்து வெண்மயடைதல்) உண்டாகும் என்று எழுதி இருந்தீர்கள். என் உறவினர் ஒருவருக்கு ஜாதகத்தில் இந்த அமைப்பும் இந்த நோயும் உள்ளது.////

    தகவலுக்கு நன்றி சக்ஸ்!

    ReplyDelete
  26. ////Blogger SUBA said...
    சுப்பையா ஐயா,
    கிரக கூட்டணியால் உண்டாகக்கூடிய நோய்களைப் பட்டியல் இட்டுள்ளீர்கள்!
    அதில் எனககு ஒரு சந்தேகம். இது ஒருவரது ஜனன ஜாதகத்தைப் பொறுத்தா அல்லது கோட்சாரத்தை பொறுத்தா பார்க்க வேண்டும்? மேலும் பஞ்சபட்சி சாஸ்திரம் ஜோதிடத்தில் வருகிறதா? அப்படியானால் அது என்ன? பஞ்சபட்சி சாஸ்திரம் ஜோதிடத்தில் வரவில்லை என்றால் தங்கள் பல்சுவை பதிவிலாவது எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்./////

    ஜனன ஜாதகத்தை வைத்துத்தான்!
    பஞ்சபட்சி சாஸ்திரமா? என் குருவை விசாரித்து எழுதுகிறேன்.
    அவர் மலைமேல் இருக்கிறார். அவருக்கு மொபைல் போனும் கிடையாது. ஈமெயில் ஐடியும் இல்லை!

    ReplyDelete
  27. ///Blogger vineeth said...
    Present sir////

    வருகைப்பதிவிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. Blogger The Botanist said...

    ரொம்ப வருசத்துக்கு முன் என்னுடன் வேலை பார்த்த ஒருவர் சூரியன் எந்த வீட்டில் இருக்கிராரோ அந்த பாகத்தை எரித்து விடுவார் என்று கூறினார். உதாரணம் முதல் வீடு என்றல் தலை (அதாவது, தலை சம்பந்தமான நோய்கள்), இரண்டாம் வீடு என்றல் கழுத்து. இது போன்று. உண்மையா?

    இல்லை. சூரியன் இருக்குமிடத்தை சனி பார்த்தால், இருவரும் சேர்ந்து கோளாறு செய்வார்கள்.

    ReplyDelete
  29. Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
    அய்யா உங்கள் கிரகங்களும் நோய்களும் என்ற தலைப்பில் உள்ள விவரங்கள் அந்ததந்த ராசிக்கான அங்க உறுப்புகளுக்கு ஏற்பட இருக்கும் நோய்களுக்கும் பொருந்தும் என் நினைக்கிறேன் .அதோபோல அஷ்டகவர்க்கத்தில் அந்ததந்த கிரகங்கள் தன்னுடைய சுய வர்கத்தில் நான்குக்குமேல் இருந்தால் அந்த நோய்க்கான தாக்கமும் குறையும் என நினைக்கிறேன் . தங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கும் உங்கள் செட்டி .நன்றி

    அங்க உறுப்புக்களுக்கான குறைகளுக்கு வேறு கூட்டணி. அதை சூரியனும், சனியும் சேர்ந்து சேர்க்கை அல்லது பரஸ்பர பார்வை மூலம் செய்வார்கள்!

    ReplyDelete
  30. ////Blogger thirunarayanan said...
    பன்றி காய்ச்சல் எந்த கிரகத்தின் தாக்கத்தால் வந்தது.
    தெளிவு படுத்துவீர்கள் என நம்புகிறேன்.
    நன்றி அய்யா.////

    நீங்கள் சொல்லும் காய்ச்சலுக்கெல்லாம் முனிவர்கள் ஒன்றும் எழுதவில்லை சாமி!
    அந்தக் காலத்தில் அதெல்லாம் ஏது?

    ReplyDelete
  31. ////Blogger mike said...
    about swine flu
    i emember reading in some astro magazine last year during the period of guru transit that that year 2009 would see the spread of strange diseases..////

    குரு நீசமாவதை வைத்துச் சொல்லியிருக்கலாம். சரியாகத் தெரியவில்லை சாமி!

    ReplyDelete
  32. ////Blogger mike said...
    sir neengal miscellaneous questionsukkaka yen oru thaani link podakutathu. aanaal athu mikkavum dangerla kondu poi vittalum vidum lols...////

    நீங்களே கேள்வியையும் கேட்டு - பதிலையும் சொல்லிவிட்டீர்கள். நன்றி!

    ReplyDelete
  33. Blogger mike said...
    sir, best astrologers paguthilyil oru athur jothidarin address paarthathga nyabagam. anna eppo athu eillaye / sir unnkalukku yaravathu oru reliable nadi astrologerin address theriyuma ?/////

    சென்னையில் இருப்பதாக அறிகிறேன். முன்பு நம் வகுப்பறை மாணவர் ஒருவர் முகவரியைத் தந்திருந்தார். மெயில் பெட்டியில் உள்ளது. தேடிப்பார்க்க வேண்டும். இப்போது நேரமில்லை!

    ReplyDelete
  34. ///Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    எனக்கு எல்லாமே கலந்து கட்டி ஒரு சால்னா மாதிரியிருக்கு வாத்தியாரே..!
    என்ன செய்றது..? யாரை நோவுவது..?/////

    சால்னாதானே? எடுத்து ஒரு வெட்டு வெட்டுங்கள். மிச்சத்தைப் பழநி அப்பன் பார்த்துக்கொள்வான்!

    ReplyDelete
  35. Blogger natraj said...
    Enrolment Listல் இருப்பவர்கள் 675 பேர்கள். உங்கள் அததனை பேருக்கும் Mail Lessons வந்ததா? வந்திருக்காது! ஏன்? வாத்தியாருக்குத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தவர்கள் 400 பேர்கள் மட்டுமே. அவர்களுக்கு மட்டுமே வந்திருக்கும். தராதவர்களின் முகவரி வாத்தியாருக்கு எப்படித் தெரியும்?யோசித்துப் பாருங்கள்! வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
    Inform your mail ID through an email message! ஒரு வரி எழுதுங்கள்!
    sir
    what r the details we send to your mail id to join member pl inform sir thanks you..
    Example ;
    1.our email id
    2.Name
    thanks
    nataraj////
    3.வயது, 4. வசிக்கும் ஊர்
    ஆகியவற்றையும் எழுதுங்கள்

    ReplyDelete
  36. /////Blogger natraj said...
    மிகவும் நல்ல பதிவு////

    நன்றி நடராஜ்!

    ReplyDelete
  37. ///Blogger PITTHAN said...
    good article sir, it will help them to prevent the diseases. they should take care about the diseases before the planets rounds.////

    எச்சரிக்கையா இருக்கலாம். பணத்தையும் சற்று சேமித்து வைத்திருக்கலாம்!வைத்திய செலவிற்கு வேண்டுமே?

    ReplyDelete
  38. Blogger வேலன். said...
    ஐயா,
    வகுப்புக்கு ஆஜர்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    இரண்டு மடங்கு வளமுடன் வாழ்க!

    ReplyDelete
  39. ////Blogger ananth said...
    வர வர பதிவைப் படிப்பதை விட பின்னுட்டத்தைப் படிப்பதற்குதான் நேரம் அதிகம் எடுக்கிறது.
    முடியல (வடிவேலு பாணியில் படிக்கவும்). எல்லா பின்னுட்டங்களையும் படித்து விட்டு ஆசிரியர் இப்படிதான் சொல்வார் என்று நினைக்கிறேன்./////

    ”அடிஅடின்னு அடிச்சிட்டு, கடைசியில எவ்வளவு அடிச்சாலும் இவரு தாங்குறாருடா...ரெம்ப நல்லவருன்னு சொல்லிட்டாங்கய்யா...சொல்லிட்டாய்ங்க!”(வடிவேலு பாணியில் படிக்கவும்) பின்னூட்டமும் அதே கதைதான் ஆனந்த்!

    ReplyDelete
  40. ////Blogger Saravana said...
    Dear Vathiyar Sir,
    Need a clarification. In a female horoscope, if Sevvai & suriyan are in 8th place(Rishabam), is that considered are mangalya dosam? If the 8 place has Guru's 7th parvai, means, is that nullified? Need your explanation?
    (Going through the lesson's and didn't find any hits related to this)
    Thanks
    Saravan//////

    குரு பார்த்தால் கோடி தோஷம் போகும். ஆனால் பொருத்தம் பார்க்கும் உள்ளூர் ஜோதிடர்கள் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

    ReplyDelete
  41. Dear Sir,
    One more clarification.

    In your lessons I read, If SANI is in 11th house, that is tretaed as a good position.

    Also If SANI is in simmam, its not good position. what if, 11th house became Simmam in a birth chart?

    Please explain?

    Thanks
    Saravana

    ReplyDelete
  42. ////Blogger Saravana said...
    Dear Sir,
    One more clarification.
    In your lessons I read, If SANI is in 11th house, that is tretaed as a good position.
    Also If SANI is in simmam, its not good position. what if, 11th house became Simmam in a birth chart?
    Please explain?
    Thanks
    Saravana///

    பகைவீடாக இருப்பதனால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்.
    ஆளும் கட்சி எம்.எல்.ஏவாக இருப்பதற்கும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருப்பதற்கும் உள்ள வித்தியாசம். சரிதானா?

    ReplyDelete
  43. Dear sir,

    I see in your lessons, CHEVVAI DOSHAM is not properly explained anywhere.

    Very sorry If I am wrong? I have doubts about 8th place, treated as dosham if Chevvai is there?

    Thanks
    Saravana

    ReplyDelete
  44. வணக்கம் அய்யா.
    இப்படி ஒன்றாய் சேர்ந்து கூட்டு சதி பண்ணும் கிரகங்களுக்கு எப்படி ஐஸ் வைத்து தப்பிக்கலாம் என்றும் கூறிவிடுங்களேன்.
    - அன்புடன்
    லலித்

    ReplyDelete
  45. ////Saravana said...
    Dear sir,
    I see in your lessons, CHEVVAI DOSHAM is not properly explained anywhere.
    Very sorry If I am wrong? I have doubts about 8th place, treated as dosham if Chevvai is there?
    Thanks
    Saravana////

    செவ்வாய் தோஷம் பற்றி பல குழப்பங்கள் உள்ளன.
    சென்னை ஜோதிடர்கள் இருக்கு என்பதை இங்கே கோவை ஜோதிடர்கள் இல்லை என்பார்கள்.
    கேரள ஜோதிடர்கள், ஆண்களுக்கு எதற்காக தோஷம் பார்க்கிறீர்கள் என்பார்கள்.

    மேஷம் மற்றும் விருச்சிக லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் அதிபதி. ஆகவே அவர்களுக்கு தோஷம் இல்லை என்பார்கள். செவ்வாய் உச்சம் பெற்றிருந்தால் அவர்களுக்குத் தோஷம் இல்லை என்பார்கள்.

    இப்படிப் பல குழப்பங்கள்.

    அதனால் நாமும் எழுதி மேலும் குழப்ப வேண்டாம் என்று எழுதவில்லை!:-)))

    ReplyDelete
  46. ///Blogger செல்லி said...
    present , Sir/////

    என்ன சிஸ்டர், வருகைப் பதிவு மட்டும்தானா?

    ReplyDelete
  47. ///Blogger லலித் said...
    வணக்கம் அய்யா.
    இப்படி ஒன்றாய் சேர்ந்து கூட்டு சதி பண்ணும் கிரகங்களுக்கு எப்படி ஐஸ் வைத்து தப்பிக்கலாம் என்றும் கூறிவிடுங்களேன்.
    - அன்புடன்
    லலித்/////

    அதுதெரிந்தால் நான் ஏன் பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன்? தில்லியில் அலுவலகம் திறந்து, இந்தியாவில் உள்ள முன்னணிப் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து, பெரிய பெரிய ஆட்களை எல்லாம் என் அலுவலகம் முன்பாக க்யூவில் நிறுத்திவிட மாட்டேனா என்ன?

    ReplyDelete
  48. மிகவும் பயனுள்ள பதிவு அய்யா... நன்றி.
    குரு

    ReplyDelete
  49. 1)ராசி & லக்னம் மிதுனம் .லக்னாதிபதி புதன் 10ல்(மீனம்)நிச்சம்.10ல் இருக்கும் கிரகங்கள் செவ்வாய், சூரியன் ,புதன்..

    என்னவெல்லாம் நல்லது & கெட்டது செய்யும்

    2)புதன் நிச்சம் சரி செய்ய இயலுமா

    ReplyDelete
  50. அய்யா
    தற்போது என்ன கிரக பெயர்ச்சிகள் வருகின்றன


    அன்புடன் மாணவன்
    nataraj

    ReplyDelete
  51. ///Guru said...
    மிகவும் பயனுள்ள பதிவு அய்யா... நன்றி.
    குரு////

    எல்லாம் உங்களுக்காகத்தான் குரு(வே!)

    ReplyDelete
  52. ////natraj said...
    1)ராசி & லக்னம் மிதுனம் .லக்னாதிபதி புதன் 10ல்(மீனம்)நீசம்
    10ல் இருக்கும் கிரகங்கள் செவ்வாய், சூரியன் ,புதன்..
    என்னவெல்லாம் நல்லது & கெட்டது செய்யும்//////

    முக்கியமான ஆளைக் கோட்டைவிட்டு விட்டீரே?
    பத்தாம் அதிபதி முக்கியம் இல்லையா?
    யார் அவர் தெரியுமா?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //// 2)புதன் நீசம் சரி செய்ய இயலுமா/////

    சரி செய்வதற்கு அது என்ன டிங்கரிங் வேலையா?
    யாராலும் முடியாது including Ambani & Bill Gates

    ReplyDelete
  53. ///natraj said...
    அய்யா
    தற்போது என்ன கிரக பெயர்ச்சிகள் வருகின்றன
    அன்புடன் மாணவன்
    nataraj/////

    பெயர்ச்சி என்றால் அதற்கு குரு, சனி, ராகு & கேது ஆகியவற்றை மட்டும் சீரியசாக எடுத்துக்கொள்வோம். அடுத்து வரவுள்ளது சனிப் பெயர்ச்சி!

    Sanee (Saturn), the Lord that brings us all good things transits from Simha Rasi (Leo) to Kanni Rasi (Virgo) on Saturday 26th September, 2009 and is going to remain there for the next two and half years. This shift is going to bring in mixed fortunes.
    High aspects Moon Sign(Rasi) - Rishabam, Kadagam, Vrichigam, Magaram
    Medium aspects Moon Sign(Rasi) - Mesham, Dhanus
    Low aspects Moon Sign(Rasi) - Mithunam, Simham, Kanni, Thulam, Kumbham, Meenam

    ReplyDelete
  54. Dear Sir,

    One astrologer said, the Yoni porutham is missing between the Star Chithirai (Bride) and Thiruvathirai (Groom). The reason is the combination Male Tiger & Male Dog will not work out.

    But few said the porutham is there? Sir, need suggestions from you?

    Thanks
    Saravana

    ReplyDelete
  55. ////natraj said...
    1)ராசி & லக்னம் மிதுனம் .லக்னாதிபதி புதன் 10ல்(மீனம்)நீசம்
    10ல் இருக்கும் கிரகங்கள் செவ்வாய், சூரியன் ,புதன்..
    என்னவெல்லாம் நல்லது & கெட்டது செய்யும்//////

    முக்கியமான ஆளைக் கோட்டைவிட்டு விட்டீரே?
    பத்தாம் அதிபதி முக்கியம் இல்லையா?
    யார் அவர் தெரியுமா?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //// 2)புதன் நீசம் சரி செய்ய இயலுமா/////

    சரி செய்வதற்கு அது என்ன டிங்கரிங் வேலையா?
    யாராலும் முடியாது including Ambani & Bill Gates


    -----
    முக்கியமான ஆளைக் கோட்டைவிட்டு விட்டீரே?
    பத்தாம் அதிபதி முக்கியம் இல்லையா?
    யார் அவர் தெரியுமா?

    யார் அவர் ? குரு தானே
    1)குரு அவர் (பத்தாம் அதிபதி) அவர் 6ல் விருச்சுகத்தில் உள்ளார்.
    10ல்bhudan,suriyan,chevvai உள்ளார்

    2)புதன் தோஷம்(உண்டா)

    ReplyDelete
  56. தற்போது என்ன கிரக பெயர்ச்சிகள் வருகின்றன
    அன்புடன் மாணவன்
    nataraj/////

    பெயர்ச்சி என்றால் அதற்கு குரு, சனி, ராகு & கேது ஆகியவற்றை மட்டும் சீரியசாக எடுத்துக்கொள்வோம். அடுத்து வரவுள்ளது சனிப் பெயர்ச்சி!

    அன்புடன் மிக்க நன்றி
    nataraj

    ReplyDelete
  57. நீங்கள் எங்கள்ல்லுக்குகாக
    பதில் & வகுப்பு அறை பாடங்கள் டைப் செய்து முடிக்கும்போது
    இரவு போய் காலை ஆகிவிடுகிறது

    கஷ்டமாக இல்லையா

    அன்புடன்
    nataraj

    ReplyDelete
  58. natraj said...
    ////natraj said...
    1)ராசி & லக்னம் மிதுனம் .லக்னாதிபதி புதன் 10ல்(மீனம்)நீசம்
    10ல் இருக்கும் கிரகங்கள் செவ்வாய், சூரியன் ,புதன்..
    என்னவெல்லாம் நல்லது & கெட்டது செய்யும்//////
    முக்கியமான ஆளைக் கோட்டைவிட்டு விட்டீரே?
    பத்தாம் அதிபதி முக்கியம் இல்லையா?
    யார் அவர் தெரியுமா?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //// 2)புதன் நீசம் சரி செய்ய இயலுமா/////
    சரி செய்வதற்கு அது என்ன டிங்கரிங் வேலையா?
    யாராலும் முடியாது including Ambani & Bill Gates
    -----
    முக்கியமான ஆளைக் கோட்டைவிட்டு விட்டீரே?
    பத்தாம் அதிபதி முக்கியம் இல்லையா?
    யார் அவர் தெரியுமா?/////
    யார் அவர் ? குரு தானே
    1)குரு அவர் (பத்தாம் அதிபதி) அவர் 6ல் விருச்சுகத்தில் உள்ளார்.
    10ல்bhudan,suriyan,chevvai உள்ளார்/////

    குரு 6,8, 12ல் இருந்தால் அதிக நன்மைகளைச் செய்ய முடியாது. ஆனால் அவர் உங்கள் 10ஆம் வீட்டிற்கு அங்கிருந்து 9ல் இருக்கிறார். ஆகவே நன்மைகளைச் செய்வார்.
    என்ன நன்மை என்று கேட்டு உடனே அடுத்த பின்னூட்டம் இட வேண்டாம். பொறுத்திருந்து பெற்ருக்கொள்ளூங்கள்!:-))))
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ///// 2)புதன் தோஷம்(உண்டா)//////

    குழப்புகிறீரே? புதனுக்கு ஏது தோஷம்?

    ReplyDelete
  59. /////natraj said...
    நீங்கள் எங்கள்லுக்குகாக
    பதில் & வகுப்பு அறை பாடங்கள் டைப் செய்து முடிக்கும்போது
    இரவு போய் காலை ஆகிவிடுகிறது
    கஷ்டமாக இல்லையா
    அன்புடன்
    nataraj/////

    அது தெரிந்தும் கேள்விக்கனையாகத் தொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
    கஷ்டத்தைப் பார்த்தால் பதிவு எழுத முடியுமா? அல்லது பதிவு எழுத வரலாமா?

    ReplyDelete
  60. Dear Sir,

    Is this combination of planets will give the result if they sit anywhere in the chart or only in 6th place? If one of the said planets is a yoghakara for the native then what is the effect? For example if thula is ascendant sani is yigakara then what is the result?Kindly clarify...

    Regards,
    Arulnithi

    ReplyDelete
  61. என் குருவை விசாரித்து எழுதுகிறேன்.
    அவர் மலைமேல் இருக்கிறார். அவருக்கு மொபைல் போனும் கிடையாது. ஈமெயில் ஐடியும் இல்லை!

    interestingana vishayamaga irruku.yaar sir ungal guru ?solleveyillaiye ?

    sir antha address vishayam eppo thaan mail la kooda search option irruke ? key wordsa podunga romba easy ...he he

    ReplyDelete
  62. அய்யா வாத்தியார் அய்யா . . .

    உங்களுக்குத்தான் தரணும் டாக்டர் பட்டம் . . .

    அப்படியே ஸ்டெத்ஸ்கோப்பு இல்லாம ஒரு லேப் கூட இல்லாமா

    அசத்தலா அசத்திட்டீங்க . . .

    நோய் இருக்கறவங்க ஜாதகத்தை சாம்பிளுக்கு பாத்தேன் . . .

    அப்படியே இருக்குங்கோ . . .
    அட ஆமாங்கோ . . .

    ஜோதித்தில இவ்ளோ இருக்கு . .
    அதை எங்களுக்கு எடுத்துச் சொல்ற
    உங்களோட அன்புள
    எவ்ளோ இருக்கு . . .

    டாக்டர் பட்டத்தை நாங்க கொடுக்கறோம் எங்க வாத்தியாருக்கு. . .

    விசு அய்யர்

    ReplyDelete
  63. அய்யா வாத்தியார் அய்யா . .
    இனி நீங்க டாக்டர் அய்யா . .

    தேவகோட்டைக்கள் இத்தனை சரக்கா . .

    ஒரு ஸ்டெத்ஸ்கோப்பு இல்லாம ஒரு லேப் கூட இல்லாம அப்படியே diagonise பன்னித்தன் தர உங்களுக்கு தான் தரனும் டாக்டர் பட்டம் வகுப்பறையில் பதிவு செய்துட்டீங்க..

    ஜோதிடத்துல இருக்கு . . ங்கற ரகசியத்தை
    அன்பு மாணவர்களுக்காக வகுப்பறையிலே பதிவு செய்துட்டீங்க

    சில ஜாதகங்களை சாம்பிலுக்கு பாத்தேன் . . .
    அப்படியே சரியா இருக்கு . . டாக்டர் அய்யா (அப்படி கூப்பிடலாம் தானே)

    விசு அய்யர்

    ReplyDelete
  64. அய்யா வாத்தியார் அய்யா . .
    இனி நீங்க டாக்டர் அய்யா . .

    தேவகோட்டைக்கள் இத்தனை சரக்கா . .

    ஒரு ஸ்டெத்ஸ்கோப்பு இல்லாம ஒரு லேப் கூட இல்லாம அப்படியே diagonise பன்னித்தன் தர உங்களுக்கு தான் தரனும் டாக்டர் பட்டம் வகுப்பறையில் பதிவு செய்துட்டீங்க..

    ஜோதிடத்துல இருக்கு . . ங்கற ரகசியத்தை
    அன்பு மாணவர்களுக்காக வகுப்பறையிலே பதிவு செய்துட்டீங்க

    சில ஜாதகங்களை சாம்பிலுக்கு பாத்தேன் . . .
    அப்படியே சரியா இருக்கு . . டாக்டர் அய்யா (அப்படி கூப்பிடலாம் தானே)
    விசு அய்யர்

    ReplyDelete
  65. 1)எலும்பு & எலும்பு மஜ்ஜை உரிய கிரகம் எது

    2)நரம்புகுள் வரும் பிரச்சனைகள் உரிய கிரகம் எது

    3)வாதநோய்க்கு உரிய கிரகம் எது

    வாத்தியார் அவர்களக்கு வணக்கம் உங்கள் பாடம் & விளக்கங்கள் உபயோகமாக உள்ளது

    அன்புடன் நன்றி

    நடராஜ்

    ReplyDelete
  66. ////Blogger Arul said...
    Dear Sir,
    Is this combination of planets will give the result if they sit anywhere in the chart or only in 6th place? If one of the said planets is a yoghakara for the native then what is the effect? For example if thula is ascendant sani is yigakara then what is the result?Kindly clarify...
    Regards,
    Arulnithi/////

    பதிவில் உள்ளது பொதுப்பலன். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு அவற்றில் உள்ள கிரக அமைப்பைவைத்து மாறும்!

    ReplyDelete
  67. ///Blogger mike said...
    என் குருவை விசாரித்து எழுதுகிறேன்.
    அவர் மலைமேல் இருக்கிறார். அவருக்கு மொபைல் போனும் கிடையாது. ஈமெயில் ஐடியும் இல்லை! interestingana vishayamaga irruku.yaar sir ungal guru ?solleveyillaiye ?//////

    பழநி மலைமேல் தண்டத்துடன் இருக்கிறார். அவர்தான் என் மானசீகக் குரு!

    ReplyDelete
  68. ////Blogger iyer said...
    அய்யா வாத்தியார் அய்யா . . .
    உங்களுக்குத்தான் தரணும் டாக்டர் பட்டம் . . .
    அப்படியே ஸ்டெத்ஸ்கோப்பு இல்லாம ஒரு லேப் கூட இல்லாமா
    அசத்தலா அசத்திட்டீங்க . . .
    நோய் இருக்கறவங்க ஜாதகத்தை சாம்பிளுக்கு பாத்தேன் . . .
    அப்படியே இருக்குங்கோ . . .
    அட ஆமாங்கோ . . .
    ஜோதித்தில இவ்ளோ இருக்கு . .
    அதை எங்களுக்கு எடுத்துச் சொல்ற
    உங்களோட அன்புள
    எவ்ளோ இருக்கு . . .
    டாக்டர் பட்டத்தை நாங்க கொடுக்கறோம் எங்க வாத்தியாருக்கு. . .
    விசு அய்யர்/////

    ஒரு பட்டமும் வேண்டாம் ஸ்வாமி! வாத்தியார் பட்டம் மட்டும் போதும்!

    ReplyDelete
  69. /////Blogger iyer said...
    அய்யா வாத்தியார் அய்யா . .
    இனி நீங்க டாக்டர் அய்யா .
    தேவகோட்டைக்கள் இத்தனை சரக்கா .
    ஒரு ஸ்டெத்ஸ்கோப்பு இல்லாம ஒரு லேப் கூட இல்லாம அப்படியே diagonise பன்னித்தன் தர உங்களுக்கு தான் தரனும் டாக்டர் பட்டம் வகுப்பறையில் பதிவு செய்துட்டீங்க..
    ஜோதிடத்துல இருக்கு . . ங்கற ரகசியத்தை
    அன்பு மாணவர்களுக்காக வகுப்பறையிலே பதிவு செய்துட்டீங்க
    சில ஜாதகங்களை சாம்பிலுக்கு பாத்தேன் . . .
    அப்படியே சரியா இருக்கு . . டாக்டர் அய்யா (அப்படி கூப்பிடலாம் தானே)
    விசு அய்யர்./////

    வாத்தி(யார்) என்று மட்டும் கூப்பிடுங்கள். அது போதும்!
    வேறு குழப்பங்கள் எதுவும் வேண்டாம்!

    ReplyDelete
  70. ///Blogger natraj said...
    1)எலும்பு & எலும்பு மஜ்ஜை உரிய கிரகம் எது
    2)நரம்புகுள் வரும் பிரச்சனைகள் உரிய கிரகம் எது
    3)வாதநோய்க்கு உரிய கிரகம் எது
    வாத்தியார் அவர்களக்கு வணக்கம் உங்கள் பாடம் & விளக்கங்கள் உபயோகமாக உள்ளது
    அன்புடன் நன்றி
    நடராஜ்////

    இப்போது நேரம் இல்லை. பின்னால் விவரமாக எழுதுகிறேன். பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  71. Dear Sir,

    Thank you your reply...

    Regards,
    Arulnithi

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com