மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.1.19

நிறைவான வாழ்க்கை எது?


நிறைவான வாழ்க்கை எது?

" Minimalism "- Fulfilment in real Life ! #

# "மினிமலிஸம் "... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை ! #

``எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார்.
 வீட்ல மூணு பசங்க, மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு,
 கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.

ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல...’’

இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது.
இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட்
என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது.
அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்... மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.

இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர் தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும்.
2009-ல் இருவருமே நிறைய சம்பாதிக்கிற ஹைக்ளாஸ் ஐ.டி பசங்க! தங்களுடைய 30-வது வயதில் ஆறு இலக்க சம்பளம், காஸ்ட்லி கார்கள், சகலவசதி வீடுகள், பார்ட்டி, கொண்டாட்டம் என வாழ்வில் எல்லாமே ஓகேதான்.

ஆனால், ஏதோ குறைவதை உணர்கிறார்கள். வெற்றிடம் இருந்துகொண்டே இருக்கிறது.
வாரத்தில் 80 மணி நேரம் உழைப்பதும், உழைத்த பணத்தில்  எதை எதையோ வாங்கி வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்கிறார்கள். மகிழ்ச்சி என்பது நுகர்வு கலாசாரத்தில் இல்லை என்பதை புரிந்துகொண்ட நொடியில்
`மினிமலிசம்’ என்கிற கான்செப்ட் பிறக்கிறது.

இன்று நம்மைச் சுற்றி நுகர்வுக் கலாசாரம் பெருகி விட்டது. பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, அதுவே சாதனை
என்கிற கருத்து பரவி வருகிறது.  உண்மையில், பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை; அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது என்பதையே மறந்து கொண்டிருக்கிறோம்.

இந்த மனநிலைகளுக்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் ஜோஷூவாவும், ரியானும். 2009 தொடங்கி மினிமலிஸ வாழ்வை வாழும் இவர்கள், இன்று உலகெங்கும் இருக்கிற பல்வேறு பல்கலைக் கழகங்களில் மினிமலிஸ வாழ்வுமுறை பற்றி பாடமெடுக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் இவர்களுடைய மினிமலிஸ வாழ்க்கை முறையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள்.
நூல்கள், ஆவணப்படம், வலைப்பதிவுகள் என மினிமலிஸத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்த இருவர் கூட்டணி.

மினிமலிஸம் என்றாலே கஞ்சப்பிசனாரி யாக வாழ்வது என்று எல்லோருமே நினைத்து விடுகிறார்கள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு, துறவியைப்போல வாழ்வது என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படியெல்லாம் எதையும் துறக்கத் தேவையில்லை.

மினிமலிஸம் என்பது அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வது. உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்தால், நோய்கள் எப்படி வருமோ அதுபோலவேதான் வாழ்க்கையில் தேவையில்லாத பொருள்கள் சேர்வதும். இடநெருக்கடியில் தொடங்கி பணநெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமாக இருப்பது இந்த ‘அவசியமில்லா நுகர்வு’தான்.

அதென்ன அவசியமில்லா நுகர்வு?

நடந்துபோகிற தூரத்திற்கு காரில் செல்வது, எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே
அதிக விலைகொடுத்து செல்போன் வாங்குவது, இரண்டுபேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக்கொள்வது, அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது என அவசியமில்லாமல் வாங்கிக் குவிக்கிற பயன்படுத்து கிற எல்லாமே தேவையில்லா நுகர்வுதான்.

``மினிமலிஸ்டுகள் குறைவு, குறைவு, குறைவு என வாழ்பவர்கள் இல்லை. அதிக நேரம், அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு,
அதிக படைப்பாற்றல் என தங்களுடைய வாழ்வில் அவசியமானதை அதிகப்படுத்திக்கொள்கிற வாழ்வையே வாழ்கிறார்கள்’’ என்பது ஜோஷூவாவின் கருத்து.

மினிமலிஸம் என்கிற பெயரெல்லாம் இல்லாத காலத்திலேயே நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். வீட்டில் தேவையில்லாமல் ஒரு பல்ப் எரிந்தால்கூட ஓடிச்சென்று அணைக்கிற பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காண முடியும். அதுதான் நம்ம வீட்டு மினிமலிஸம். இதுபோன்ற சின்னச் சின்ன சேமிப்புகளின்
வழிதான் அவர்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்வாகக் கட்டமைத்தார்கள்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என அறியப்படுகிற பலரும்கூட மினிமலிஸ்டுகள்தான். வாரன் பஃபெட் நல்ல உதாரணம். கோடிகளைக் குவிப்பதற்கு முன்பு எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாரோ, அப்படியேதான் இன்றுவரை இருக்கிறார். 1958-ல் நெப்ராஸ்காவில் வாங்கிய அதே சிறிய வீட்டில்தான் இன்னமும் வசிக்கிறார். ‘`தினமும் எதைச் செய்தால் மகிழ்ச்சியாக இருக்குமோ, அதையே செய்யுங்கள், அதுதான் உலகில் மிகப்பெரிய ஆடம்பரம்’’ என்கிறார் பஃபெட்.  அவர் மட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சக்கர்பெர்க் என மினிமலிஸ வாழ்வை வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற எண்ணற்ற மில்லியனர்களை நாம் காணமுடியும்.

மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்வதற்கான வழிகள் என்ன?

ஜோஷுவாவே 5 விஷயங்களை எழுதியிருக்கிறார்.

1 - பட்ஜெட் போட்டு வாழப் பழகுதல் :-
- மினிமலிஸ வாழ்க்கையில் முக்கியமானது இதுதான்.
நம்முடைய வரவுக்கு மேல் ஒரு பைசாக்கூட செலவழிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி திட்டமிடல். செலவழிக்கிற
ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

2 -  குறைவான பொருள்களில் வாழ்வது :-
 - வீட்டு பீரோவில் 30 சட்டைகள் அடுக்கி வைத்திருப் போம். ஆன்லைனில் புதிய ஆஃபர் ஒன்றைப் பார்த்ததும் இன்னொரு சட்டை வாங்க ஆசை வரும்... அப்படி இல்லாமல் நம்மிடம் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது, அவசிய மில்லாமல் இருக்கிற பொருள்களையே மீண்டும் மீண்டும் வாங்குவதைத் தடுக்கும்.

3 - வருங்காலத்திற்குத் திட்டமிடல் :-
- மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரி விஷயங்கள் மிகமிக முக்கியம். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்டை மாதந்தோறும் கட்டாயம் பொறுமையாக வாசித்து எது தேவை தேவையில்லை என்பதை முடிவு செய்து அடுத்தடுத்த மாதங்களில் கட்டுப்படுத்துதல். வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் போட்டுவைப்பது.

4 - ஒவ்வொரு பர்ச்சேஸையும் கேள்வி கேட்பது :-
- எதை வாங்குவதாக இருந்தாலும் அதை வாங்குவதற்குமுன்
இது எனக்கு அவசியம்தானா... இது இல்லாமல் வாழ முடியுமா... முடியும் என்றால் எத்தனை நாளைக்கு என்பதைக் கணக்கிட்டு அதற்கு பிறகும் அந்தப் பொருளை வாங்குகிற உந்துதல்
இருந்தால் மட்டும் வாங்குவது.

5 - அடுத்தவர்களுக்கு வழங்குவது :-
- உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடுத்தவர் களுக்கு உதவுவதுதான் என்பது வாரன் பஃபெட் தொடங்கி பில்கேட்ஸ் வரைக்கும் அத்தனை பேருமே பின்பற்றுகிற சீக்ரெட் ஃபார்முலா.
மாதந்தோறும் முடிந்த அளவு தொகையைப் பிறருக்கு கொடுங்கள் அதுவே உங்களைத் திருப்தியாக வாழவைக்கும்.

இந்த ஐந்து கட்டளைகள் நம்முடைய செலவுகளைக் குறைப்பதுடன், சேமிப்பையும் அதிகப்படுத்தும்.  கூடவே குறைந்த செலவில் திருப்தியான வாழ்வை வாழவும் உதவும்.

இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்களால் சிறிய வருமானத்திலும் சிறப்பாக வாழமுடிந்தது!!!!

படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.1.19

வியக்க வைத்த வரிகள்


வியக்க வைத்த வரிகள்
"" "" "" "" "" "" "" "" "" "
👌👌👌👌👌👌👌
நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
👌👌👌👌👌👌👌👌
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!
👌👌👌👌👌👌👌👌
பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்கள்.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்கள்.!
👌👌👌👌👌👌👌👌
பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
👌👌👌👌👌👌👌👌
அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
👌👌👌👌👌👌👌👌
வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
 👌👌👌👌👌👌👌👌
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
👌👌👌👌👌👌👌👌
திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!
👌👌👌👌👌👌👌👌
முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
👌👌👌👌👌👌👌👌
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...!
👌👌👌👌👌👌👌👌
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
👌👌👌👌👌👌👌👌
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!
👌👌👌👌👌👌👌
பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்கிறது என்று அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரவில்லை என்றால் மனசு பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம்...........!
👌👌👌👌👌👌👌👌
துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது.. 
👌👌👌👌👌👌👌
தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*
👌👌👌👌👌👌👌

அழகான வரிகள்
படித்து வியந்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.1.19

சமையல் கலைஞர் என்ன சொல்கிறார் - வாருங்கள் கேட்போம்!!!!


சமையல் கலைஞர் என்ன சொல்கிறார் - வாருங்கள் கேட்போம்!!!!

*போஜன திலகம் கோவை மணி ஐயர் வழங்கும் கிச்சன் டிப்ஸ்...*

● மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்...... ஊச்......... என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.

● வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.

● வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.

● அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அருகம்புல்லில் அதிகம்.

● ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும். கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.

● மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.

● ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்..

● பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

● வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

● சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

● சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

● தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

● உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

● கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

● ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

● தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

● பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

● இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

● தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

● மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.

● பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

● வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

● தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

● எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

● உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

● தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

● துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.1.19

சுஜாதாவின் மருத்துவமனை அனுபவம்!!!!!


சுஜாதாவின் மருத்துவமனை அனுபவம்!!!!!

உடல் நலம் குன்றிய போதும் எழுதுவதற்கு எழுத்தாளர்  சுஜாதாவால் மட்டுமே முடிந்திருக்கிறது!!!!.

சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் :

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக விரும்புபவர்களுக்கு என் பரிந்துரைகள்...

முடிந்தால் அட்மிட் ஆவதை தவிர்க்கவும். அப்படி தவிர்க்க இயலவில்லை என்றால், எத்தனை சீக்கிரம் வெளிவர முடியுமோ வந்துவிடவும். ஓர் உபாதைக்காக அட்மிட் ஆகி உள்ளே போனதும், அப்படியே மற்ற உபாதைகள் உள்ளனவா என்று பார்த்து விடலாம் என்று யாராவது அல்லக்கை யோசனை சொன்னால் பெரிய எழுத்தில் 'வேண்டாம்...!' என்று சொல்லி விடுங்கள் . முடிந்தால் அலறவும். இல்லையேல் மாட்டினீர்கள். எல்லா டாக்டர்களும் நல்லவர்கள். திறமைசாலிகள்.

சிக்கல் என்னவென்றால் அவர்கள் திறமைசாலிகளாக இருக்கும் அவயவங்கள் வேறுபடும். கிட்னி ஸ்பெஷலிஸ்ட், கிட்னியையே கவனிப்பார். ஹார்ட், ஹார்ட்டையே. சுவாச நிபுணர் சுவாசத்தையே..! யாராவது ஒருவர் பொதுவாக பொறுப்பேற்று செய்யாவிடில் அகப்படுவீர்கள்.

ஒவ்வொரு டாக்டரும் சிற்றரசர்கள் போல குட்டி டாக்டர் புடைசூழ வருவார்கள். மொத்தம் ஒரு நிமிஷம் நம் படுக்கை அருகே நிற்பார்கள். அன்று அதிர்ஷ்ட தினம் எனில் ஏறிட்டு பார்ப்பார்கள். இல்லையேல் தலைமாட்டில் இருக்கும் சார்ட்(chart) தான்.

"ஹவ் ஆர் யூ ரங்கராஜன் ?" என்று மார்பில் தட்டுவார் சீனியர். குட்டி டாக்டர் தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பார்.

"ஸ்டாப் லேசிக்ஸ்..இன்க்ரீஸ் ட்ரெண்டால்..!" என்று கட்டளையிட்டுவிட்டு கவுன் பறக்க கடவுள் புறப்பட்டு விடுவார்.

அடுத்து,அடுத்த ஸ்பெஷலிஸ்ட் வந்து குய்யோமுறையோ. "யார் லேசிக்சை நிறுத்தியது..?"...இவர்கள் இருவருக்கும் பொதுவாக வார்ட் சிஸ்டர் எனும் பெரும்பாலும் மலையாளம் பேசும் அப்பிராணி.

ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மனச்சோர்வு அளிக்கும் இடம்.

 சுற்றிலும் ஆரோக்கியர்கள் காபி, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, நாம் மட்டும் கண்காட்சி பொருள் போல படுத்திருக்க, கண்ட நேரத்தில் கண்டவர் வந்து கண்ட இடத்தில் குத்தி ரத்தம் எடுத்து, க்ளுக்கோஸ் கொடுத்து , பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து, ஷகிலா ரேஞ்சுக்கு உடம்பெல்லாம் தெரியும்படி நீல கவுன் அணிவித்து ...ஆஸ்பத்திரியில் நிகழ்வது போன்ற மரியாதை இழப்பு மந்திரியின் முன்னிலையில் கூட நிகழாது...!

படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
=================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.1.19

Astrology:ஜோதிடம்: புதிர்: 25-1-2019 புதிருக்கான விடை!!!!


Astrology:ஜோதிடம்: புதிர்: 25-1-2019 புதிருக்கான விடை!!!!

கேள்வி இதுதான். வேலையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!

நான் அடிக்கடி சொல்வதைப்போல மகா திசைகளும் புத்திகளும்தான்  (sub periods) ஜாதகப் பலனை வழங்கக்கூடியவை. நல்லதோ அல்லது கெட்டதோ அவைகள்தான் வழங்கும்.

கொடுத்துள்ள ஜாதகத்தில் எட்டாம் அதிபதி சந்திரன் 4ம் வீட்டில் ராகுவுடன் கூட்டாகச் சேர்ந்து 10ம் வீட்டைப் பார்ப்பதால் தன்னுடைய மகா திசை துவங்கியவுடன் ஜாதகரைப் புரட்டிப்போட்டார். அந்த வீட்டின் அதிபதி புதன் அந்த வீட்டிற்கு 12ல் அமர்ந்து விட்டதால் அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை! எட்டாம் அதிபதியால் கஷ்டங்களைத் தவிர வேறு என்ன கிடைக்கும்? ஆகவே ஜாதகர் பலவிதமான கஷ்டங்களுக்கு ஆளாக நேரிட்டது!!!

புதிருக்கான பதிலை 10 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 1-2-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் இரண்டு மனம் வேண்டும் புதிருக்கான பதில்
1. ஜாதகரின் பத்தாம் இடமானது ராகு கேட்டு கட்டு பாட்டில் உள்ளது .
2. மேலும் பத்தாம் இடத்தில் மாந்தி சேர்ந்து மனிதரை பாடை படுத்தியது.
3. நவாம்ச கட்டமும் ராகு கேது கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்த நிலை தற்காலிகமாக அமைத்தது .
4. வர்கோத்தம லக்கினத்தை பெற்றதால் இந்த நிலை பின்னர் சரியாகி நிலையான வேலையை அடைந்தார் .
நன்றி
ப. சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399
Friday, January 25, 2019 8:54:00 AM
---------------------------------------------------------------------------
2
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 3 ஆகஸ்டு 1950 அன்று மாலை 5 மணி 21 நிமிடங்கள் போலப் பிறந்த‌வ்ர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
பத்தாம் இடத்தில் கேது,மாந்தி.பத்தாம் அதிபன் தன் வீட்டிற்கு 12ல் மறைவு.
எட்டாம் இட‌ அதிபன் சந்திரன் 4ல் அமர்ந்து ராகுவுடன் சேர்ந்து பத்தாம் இடத்தைப்பார்த்தார்.வேலைக்கான காரகர் சனைச்சரன் சூரியனின் வீட்டில் வலுவிழந்தார்.
44 வயதில் எட்டாம் அதிபன் சந்திரனின் தசா ஆரம்பித்தது.அந்த சமயம் வேலை போனது. பத்தாண்டுகள் சந்திரனின் தசாவில் ஜாதகர் தலை தூக்க முடியவில்லை.
kmrk1949@gmail.com
Friday, January 25, 2019 9:10:00 AM
-----------------------------------------------
3
Blogger GOWDA PONNUSAMY said...
ஜாதகர் 3-08-1950 மாலை 5-15 மணியளவில் பிறந்தவர்.
தனுசு லக்கினாதிபதி 3ல் மறைந்து 9ல் அமர்ந்த பாதகாதிபதி புதன் பகை பெற்ற சனி யுடன் இணைந்து பார்வைசெவதால் லக்கின பலம் கெட்டுள்ளது.
10ம் பதி புதன் தன் வீட்டிற்க்கு 12 மிடமான 9ல் அமர்வு
10ல் கேது அமர்ந்து ராகு மற்றும் 8ம் பதி சந்திரன் பார்வை சுகமில்லை.
புதன் 11 வ + கேது 7 வ + சுக் 20 வ + சூரி 6 வ = 44 வருடங்களின் பின் வந்த தேய்பிறை சந்திர்ன் 8ம் பதி 4ல் அமர்ந்து 10மிடத்தை பார்த்து தொழிலை வேலைக்கு உலை வைத்திருப்பார். பின்னர் வந்த செவ்வாய் 11ல் அமர்ந்து லக்கினாதி குருவின் பார்வை பெற்று 5மிடத்தை பார்த்து பலப்படுத்துவதால் செவ்வாய் தசையில் நிம்மதியாக தொழிலில் பயணித்திருப்பார்.
அன்புடன்
- பொன்னுசாமி.
Friday, January 25, 2019 10:19:00 AM
----------------------------------------------------------
4
Blogger Thanga Mouly said...
எட்டாம் அதிபதியின் தசை வருத்தியது.
போதாக் குறைக்கு ஜாதகத்தில் அமர்ந்த எட்டாம் அதிபதி சந்திரன், ராகுவுடன் கூட்டுச் சேர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும் 10 இல் கேது, மாந்தி சகிதம் நிற்பது மற்றும்
10 இன் அதிபதி தனது வீட்டிற்கு 12ல் கூடவே சனி, வேலையில் ஆட்டத்தை கொடுத்தது.
யோகன், குரு 10ம் வீட்டை பார்க்கவில்லை எனினும் இதர சுகங்களை அளித்திருப்பார்.
Friday, January 25, 2019 3:50:00 PM Delete
----------------------------------------------------------------------------
5
Blogger sundari said...
சார் வணக்கம்
8 ஆம் அதிபதி சந்தரன் 4 இல் ராகு உடன் அப்புறம் 8 இல் சூரியன் புதன் 10 கு 12 இல் 4 ஆம் அதிபதி குரு 4 கு 12 இல் அப்புறம் சூரிய தசை ரொம்ப நல்ல இருக்காது அதிலேயே பிரச்னை அதுக்கப்பறம் வைத்த சந்திர தசை வேலை இல் கஷ்டம் கொடுத்து வேற வேலைக்கு போகவைத்தது அப்புறம் அங்கயும் பிரச்சன்னை அந்த தசை முடியும் வரை ரொம்ப கஷ்டம்
Friday, January 25, 2019 8:53:00 PM
-------------------------------------------------------------
6
Blogger csubramoniam said...
ஐயா,
கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி குரு பத்தாம் இடத்திற்கு ஆறில் அமர்ந்துள்ளார்
2 லாபாதிபதி சுக்ர திசையில் அவருக்கு நல்ல வேலையில் அமர்ந்து சுகமாக இருந்திருப்பார்
3 நாற்பத்து நாலாவது வயதில் எட்டாம் இடத்தில் அமர்ந்த சூரியன் இரண்டாம் இடத்தை பார்த்து லாபத்தை கெடுத்திருப்பார்
4 .மேலும் அடுத்து வந்த எட்டாம் அதிபதி சந்திரா திசையும் நன்றாக இருந்துஇருக்காது
தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து
Friday, January 25, 2019 8:58:00 PM
-------------------------------------------------
7
Blogger Sanjai said...
- லக்கினத்திற்கு பத்தில் கேது (சுவிட்ச் ஆப்)
- லக்கினத்திற்கு பதத்தில் மாந்தி (இறப்பை சொல்லும்)
- பத்தாம் அதிபதி புதன், பத்திற்கு பன்னிரெண்டாம் இடமான ஒன்பதில்
- பத்தாம் அதிபதி சனி / கேதுவிற்கு இடையில் (கத்திரி யோகம்)
- ராசிக்கு பத்தாம் இடம் லக்கினம், அதன் அதிபதி (குரு), பன்னிரெண்டில் மறைவு.
- லக்கினாதிபதி மூன்றில், சுய முயற்சியில் தான் முன்னேற்றம், சிபாரிசு கிடைத்திருக்க வாய்ப்பில்லை
Saturday, January 26, 2019 7:32:00 AM
------------------------------------------------------
8
Blogger ஃபெர்னாண்டோ said...
ராகுவுடன் இணைந்து, திக்பலம் பெற்று வலுவடைந்து, ஜீவன ஸ்தானத்தைப் பார்க்கும் அஷ்டமாதிபதி சந்திரன் தசையில் வேலையில் சிக்கல்கள். அம்சத்திலும் சந்திரன் பகை வீட்டில், நீச குருவுடன். ஜீவனாதிபதி சனியுடன் இணைவு. அம்சத்தில் நீசமான குரு ஜீவனாதிபதியை பார்த்தாலும், நீச குருவிற்கு பார்வை பலம் குறைவு.
- ஐ எஸ் ஃபெர்னாண்டோ
Saturday, January 26, 2019 1:25:00 PM
----------------------------------------------------------
9
Blogger adithan said...
வணக்கம் ஐயா,1)10 ம் இடமும் அதன் அதிபதி புதனும் பாபகர்த்தாரி யோகத்தில்.10ம் இடத்திற்க்கு ராகுஉடன் சேர்ந்த அட்டமாதிபதி தேய்பிறை சந்திரனின் பார்வை.2)10 அதிபதி புதனுக்கு லக்னாதிபதி குரு பார்வை எனவே புதன் தசாவில் 10ம் இடத்திற்கான பாதகம் ஏதுமில்லை.அடுத்து வந்த கேது தசாவில் 10ல் அமர்ந்த கேது, மாந்தியால் அந்த இடத்திற்க்கு பாதகம் இல்லை.கேதுவிற்க்கும் அட்டமாதிபதி பார்வை இருந்தாலும்,கேது தசாவில் படிக்கும் பருவமாய் ஆனது.அடுத்து வந்த 6,11 அதிபதி சுக்ர தசாவில்,சுக்ரன்7ல் நட்பு வீட்டில் அமர்ந்து சுபராகி லக்னத்தை பார்த்ததால்,லாபாதிபதி வேலையை மட்டும் செய்து அவர் தசா முடியும் வரை,10ம் அதிபதியுடன் சேர்ந்த கர்மகாரகன் சனி பார்வையினால் பலம் பெற்று வேலையில் ஏற்றங்களையே கொடுத்தார்.அடுத்து வந்த பாக்யாதிபதி சூரியன் 8ல் அமர்ந்தாலும், சுபர் வீட்டில் அமர்ந்ததாலும்,சுபர் குரு பார்வையாலும் சுபத்தன்மை கெடாததால் அவர் தசாவும் மேன்மையாகவே அமைந்தது.அடுத்து வந்த,சுகஸ்தானத்தில் அமர்ந்த சந்திர தசா,ராகு புத்தியின் பார்வையில் பத்தாமிடம் கெட்டு மனக்குழப்பத்தை ஏற்படுத்தியது.லக்னாதிபதியும் அம்சத்தில் நீசமாகி போனதால்,பிரச்சினையை சமாளிக்கும் வலிமை இல்லாமல் போனது.நன்றி.
Saturday, January 26, 2019 3:04:00 PM
-------------------------------------------------------
10
Blogger venkatesh r said...
Quiz: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் - எதற்காக?
ஆசிரியருக்கு வணக்கம்.
தனுசு லக்னம், மீன ராசி ஜாதகர்.
இவரின் வேலையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஜாதகப்படி என்ன காரணம்?
1) லக்னாதிபதியும்,ராசியாதிபதியுமான குரு பகவான் 3ல் அமர்ந்து, நவாம்சத்தில் நீசமடைந்து வலுவிழந்துள்ளார்.
2) 10மிடமான தொழில் ஸ்தானத்தில் கேது பகவான் மாந்தியுடன் அமர்வு மற்றும் ராகு, அட்டமாதிபதி சந்திரனின் பார்வை உள்ளது.
3) ஜாதகரின் 44 வயதில் வந்த ஏழரை சனி மற்றும் அட்டமாதி சந்திர தசை, ராகு புத்தியில் பார்த்து வந்த உத்தியோகத்தை பிரச்சினைகள் காரணமாக விட நேர்ந்தது. பின்னர் புது நிறுவனத்திலும் பிரச்சினைகள் தொடர்ந்தன.
சந்திரன் மனோகாரகன், ராகு பகவானுடன் சுக ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகருக்கு தன்னுடைய தசையில் மனக் கஷ்டங்களை கொடுத்தார்.
இரா. வெங்கடேஷ்.
Saturday, January 26, 2019 8:01:00 PM
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.1.19

Astrology: Jothidam: Quiz: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் - எதற்காக?

Astrology: Jothidam: Quiz: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் - எதற்காக?

ஒரு அன்பரின்  ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தனது 44 வது வரை செளகரியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து கொண்டிருந்த அவரை காலதேவன் புரட்டிப் போட்டுவிட்டான். பார்த்துவந்த உத்தியோகத்தில் பல பிரச்சினைகள். வேலையை உதறிவிட்டு வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கே தலைவலி போய் திருகுவலி வந்த கதையாய் பல மடங்கு பிரச்சினை. அந்த நிறுவனம் கடும் நிதி நெறுக்கடியில் உள்ளதை அங்கே சேர்ந்த பிறகுதான் தெரிந்து கொண்டார். என்ன செய்வது என்று தெரியாத சூழ்நிலை. விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. உடனடித் தீர்விற்கும் வழி தெரியவில்லை.

இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்:
நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ ஒன்று
- என்னும் மனநிலை

கேள்வி இதுதான். வேலையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 27-1-2019  ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.1.19

நரசிம்மரை சாந்தப்படுத்த யாரை அனுப்பினார்கள்?


நரசிம்மரை சாந்தப்படுத்த யாரை அனுப்பினார்கள்?

*"மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..."*

இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித
உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு.

இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார். குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார்.

இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். 

அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.

""என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள்,
பிறகு நான் அருகில் செல்கிறேன்,'' என்றாள்.

அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது. தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். 

பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!

தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.

""பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?'' என்றார்.

அவனுக்கு தூக்கி வாரிபோட்டது. ""சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்?'' என்றான்.

""உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல
கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு,''
என்றார்.

இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.

""மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,'' என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,""ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,''
என்றான்.

பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம். ஆனால், ஆசை வேண்டாம் என்றான்
பிரகலாதன்.

குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல! பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு! பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின்
மனதை உருக்கிவிட்டது.

பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக்
கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.

""இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே!'' ஆனாலும், அவர் விடவில்லை. விடாமல் அவனைக்
கெஞ்சினார், ""இல்லையில்லை! ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,''.

பகவானே இப்படி சொல்கிறார் என்றால், "தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்' என்று முடிவெடுத்த பிரகலாதன்,

""இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம்
அளியுங்கள்,'' என்றான்.

நரசிம்மர் அவனிடம், பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே
செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்," என்றார்.

"நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை. அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது."

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.1.19

உப்பின் பயனையும் தேனின் பயனையும் தெரிந்து கொள்ளுங்கள்!!!!


உப்பின் பயனையும் தேனின் பயனையும் தெரிந்து கொள்ளுங்கள்!!!! 

உப்பின் பயனையும் தேனின் பயனையும் தெரிந்து கொள்ளுங்கள்!!!!

உப்பில் இருப்பது அசுர குணம்...
தேனில் இருப்பது தேவர் குணம்...

சித்த மருத்துவம்...

உப்பின் தன்மை என்ன ?
************************

சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ?

இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு...
உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்.
இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..
ஒரு உடல் இறந்த பின்பும் பதப்படுத்த வேண்டும் என்றால் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் .
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் .
சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உண்ண பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் ...

தேன்....
********

தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் .
சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?

தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது .
இதனால் தான் தேனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் .
 மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .
ஒரு நெல்லி கனியை தேனில் ஊறப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .
இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள்...

மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ:-

1.மாதம் 2 முறையாவது 3 வேளையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .

2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .
தேன் சர்க்கரை நோய்களை தூண்டாது .

3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும் நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .

உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் )
இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணப்படுத்த உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(alaopathy )

இனிப்பை வைத்து வைத்யம் செய்வது homeopathi .
உப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.

நல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது
கருவாடு ,உறுகாய்,போன்றவைகள் உதாரணம் ...
நம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே .

தேவ அமிர்தம் என்பது தேன் ...
தேன் தேவகுணம் உடையது
உப்பு அசுரகுணம் உடையது
தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும்
உப்பு பூலோகத்தில் இருக்க வைக்கும் ..
இவைகள் உடல் சார்ந்த விவரம் ....

ஆகவே உப்பை குறைத்தும் ,தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம்

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.1.19

ஆஞ்சநேயரும் வடைமாலையும்!!!!


ஆஞ்சநேயரும் வடைமாலையும்!!!!

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவும் வடை மாலையும்!!!!

1,00,008 வடை தயாரிக்கும் பணி தீவிரம்.

  மார்கழி திங்கள் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். அந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அன்றைய தினம்1,00,008 வடை
மாலை சாத்தப்பட உள்ளது. அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு
காட்சியளிக்கும் ஆஞ்சநேயருக்கு காலை 11 மணிக்கு பால் மற்றும் பல் வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்
நடை பெற உள்ளது. மதியம் 1 மணிக்கு தங்க கவசஅலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்!

   ஆஞ்சநேயர் க்கு  மாலையாக சாத்தப்பட்ட 1,00,008 வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட உள்ளது.

 வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திரு.ஸ்ரீதர் (பேட்டி) கூறுகையில் :-

  ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 32 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். 2250 கிலோ உளுந்த மாவு, 600 கிலோ நல்லெண்ணெய், 
36 கிலோ மிளகு, 36 கிலோ சீரகம், 25கிலோ உப்பு ஆகியவற்றை கொண்டு வடை தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல்நாள் மதியம்
தொடங்கும் இந்த பணி அடுத்த நாள் இரவு நிறைவடையும் என்றார். ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் இது

போன்று வடை மாலை சாத்துவது வழக்கம்!!!!

-----------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.1.19

விஸ்வரூபம் காணும் பாக்கியம் எப்படிக் கிடைத்தது?


விஸ்வரூபம் காணும் பாக்கியம் எப்படிக் கிடைத்தது?

ராவணனை அழித்த பிறகு, போர்க்களத்தில் ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்....!!

அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது.....!!

அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை, ராமபிரான்.... நிழலின் அசைவின் மூலம் புரிந்து கொண்டார்...!!

உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்....!!

“நீ யாரம்மா?” என்றார்....!!

“நான் ராவணனின் மனைவி மண்டோதரி....!!

என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!! ஆனால், அவரையே ஒருவன்
கொன்று விட்டான் என்றால்,அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்.....!!

மேலும். சத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் , என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.....!!
ஆனால் நீ என்னிடம் வரவில்லை....!! ஆச்சரியப்பட்டேன்.....!!

இங்கே நீ , என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது, உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்......!
என் கணவரிடம் கூட , ரகு குலத்தில் உதித்த ராமன் , மனிதன் அல்ல.....!! உலகைக் காக்கும் பரம்பொருள்...!! விஸ்வரூபன்.....!!
அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கவல்லது.....!! அவன் வேதத்தின் சாரம்.....!! ராமன் சாட்சாத் தெய்வ வடிவம்....!! அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன்.....!! அவர் கேட்கவில்லை.....!!
உன் வெற்றிக்கு காரணம், என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உங்களிடத்தில் இருந்தது தான்....!! அதுதான் தங்களின் ஏகபத்தினி விரதத்தன்மை.....!! அதனால் தான் நீ வென்றாய்,” என்றாள்.....!!

அனைத்தும் கேட்ட ராம பிரான் சிறு புன்னகை புரிந்தார்.....!!

தன் சுயவடிவான ' நாராயணனாக' அவளுக்கு 'விஸ்வரூப தரிசனம்' கொடுத்தார்.....!!

ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதரி.....!!

அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது, மண்டோதரி ஒழுக்கமான உடை அலங்காரத்தை கண்டு,
' இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம் கொண்டான் அனுமன்....!!

அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான், கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் மண்டோதரிக்கு ' நாராயணின் விஸ்வரூப தரிசனம்' பெற்றாள்....!!

உயர்ந்த சாதியில் பிறந்தவன், வசதியில் உயர்ந்தவன், அரச பதவியில் இருப்பவன் , என இறைவன் பார்ப்பதில்லை...!!

நம்முடைய பயபக்தி, அன்பு, ஒழுக்கம், இறைச்சேவை ,அப்பழுக்கற்ற தூய உள்ளம் என இவையே இறைவனின் அருள் தரிசனம் பெறும் வழிமுறையாகும்.....!! ஆகவே தான் அசுரகுலத்தில் பிறந்தாலும், தன் ஒழுக்க குணத்தால், 'இராவணனின் மனைவி' மண்டோதரிக்கு ஸ்ரீராமபிரானின் விஸ்வரூபம் காணும் பாக்கியம்
கிடைத்தது.......!!

ஸ்ரீ ராம ஜெயம்..!!
ஸ்ரீ ராம ஜெயம்....!!!
ஸ்ரீ ராம ஜெயம்......!!!!
-------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.1.19

Astrology:ஜோதிடம்: புதிர்: 18-1-2019 புதிருக்கான விடை!!!!

Astrology:ஜோதிடம்: புதிர்: 18-1-2019 புதிருக்கான விடை!!!!

அந்த புதிரில் கேட்டிருந்த கேள்வி இதுதான்: ஜாதகப்படி அன்பர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதற்குக் காரணம் என்ன? 

The Moon as well as Rahu have karakattwa over intoxicating drinks

அன்பரின் ஜாதகத்தில் சந்திரன் லக்கினத்தில் ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதோடு செவ்வாயின் வலுவான பார்வையையும் பெறுகிறது. லக்கினாதிபதி சுக்கிரன் நீசமானதோடு 12ம் வீட்டில் (விரையத்தில்) இருக்கிறார், லக்கினத்தைக் கவனிக்க வேண்டிய வேலை சந்திரன் தலையில் விழுந்துவிட்டது. ராகுவின்சாரத்தில் இருக்கும் சந்திரன் ஜாதகனை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கிவிட்டார். ஜாதகன் குடிமகனானதற்குக் காரணம் அதுதான்!!!!!

புதிருக்கான பதிலை 10 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 25-1-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
//////Blogger Sanjai said...
நவகிரகங்களில் சனி,ராகு,கேது போன்ற பாவிகள் சாதகமற்று அமைந்து சுபர் பார்வை,சேர்க்கையின்றி இருந்து திசா, புக்தி நடைபெறும் போது தன்னிலை மறந்து மது பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்.
- லக்கினாதிபதி சுக்ரன் 12 ல் நீசம் 
- பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் (சூரியன் சிம்மத்தில் )
- குரு + கேது - தன்னிலை மறக்க குடிக்கும் பழக்கம்
- சனி தசையில் (தனது, மற்றும் புதன் புக்தியில் மது பழக்கம் ஆரம்பம் ஆனது, கேது புக்தியில் அளவுக்கு மீறி போய்விட்டது)
Friday, January 18, 2019 6:44:00 AM 
--------------------------------------------------------------------
2
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம் 
புதிருக்கான பதில் 
அதீத குடி பழக்கத்திற்கான காரணங்கள்
1. லக்கின அதிபதி சுக்கிரன் லக்கின கட்டத்தில் பன்னிரண்டாம் இடத்தில மறைந்து ஜாதகரின் வாழ்வை விரயம் செய்தது .
2. நவாம்ச கட்டத்திலும் லக்கின அதிபதி சுக்கிரனுடன் ராகு கூட்டு .
3. ஆறாம் இடது அதிபதி குரு மாந்தி யுடன் சேர்ந்து குடி பழக்கத்தை ஏற்படுத்தியது . மேலும் ஆறாம் இடத்தில ராகுவின் பார்வை அதை ஊக்க படுத்தியது .
நன்றி 
ப. சந்திரசேகர ஆசாத் 
MOB. 8879885399
Friday, January 18, 2019 8:12:00 AM 
=-------------------------------------------------------------
3
Blogger adithan said...
வணக்கம் ஐயா,1)லக்னாதிபதி சுக்ரன் நீசமாகி விரையத்தில் அமர்ந்து,6ம் இடமான நோய்க்கான பாவத்தை தன் பிடியில் வைத்துள்ளார்.அம்சத்திலும் அவர் பகை வீட்டில்.2)நீச சுக்ரனுக்கு லக்ன பாபர் குருவின் நீச பார்வை.செவ்வாய் பார்வை.யோககாரகன் சனி கேதுவுடன் சேர்ந்து கெட்டதால்,லக்ன சுபத்தன்மை மாறி,இயற்கை குணத்தை கொண்டதால்,அவர் பார்வையும் லக்னாதிபதிக்கு கெடுதலாய் ஆனது.செவ்வாய் லக்னத்திற்க்கு நடுநிலையானவர் ஆனாலும் அவரும் சனி பார்வையால் கெட்டு லக்னாதிபதியை பார்க்கிறார்.3)சரி.மனோகாரகன் சந்திரன் வளர் பிறையாகி வலுவுடன் நட்பு வீட்டில் இருந்தாலும்,அவரால் மனதை அடக்க முடியாது.காரணம் லக்னாதிபதி சொல்வதைத்தான் அவர் ஊக்கமாக செய்ய வேண்டும்.4)கஜகேசரி,சசிமங்களம் என்று சந்திரன் சம்மந்தபட்ட யோகங்கள் இருந்தாலும் அவற்றால்,லக்னாதிபதியின் வலுவை மீறிய பலன் இல்லை.5)குரு இயற்க்கை சுபர் என்பதால்,குரு தசா சுக்ர புத்தியில் கெடு பலன்களை தரவில்லை.அடுத்து வந்த சனி தசா,சுக்ர புத்தியில் மதுவிற்க்கு அடிமையானார்.மதுவிற்க்கு அடிமையான காரணம் பிடிபடவில்லை.சுக்ரனின் காரகங்களில் மதுவும் என்பதாலா?.நன்றி.
Friday, January 18, 2019 1:13:00 PM 
--------------------------------------------------
4
Blogger Thanga Mouly said...
ஜாதகனுக்கு, சோகம், பலவீனம் அளிக்கும் வகையில் முக்கிய கிரக அமைப்புகள் காணப்படுகின்றன. லக்கினாதிபதி சுக்கிரன் 12ல் நீசம் பெறுவதும் 10ம் அதிபதி (ஜலராசி - தொழில் ஸ்தானாதிபதி) சந்திரன் லக்கினத்தில் அமர்ந்து செவ்வாயின் பார்வையை பெற்று இருப்பினும், அம்சத்தில் சுக்கிரன், செவ்வாய் புதன் கிரகங்கள் மேலும் பலவீனப் பட்டிருப்பது உடல், உள நிலையில் ஸ்திரமற்ற நிலையை கொடுத்தது.
Friday, January 18, 2019 5:15:00 PM 
--------------------------------------------------
5
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir, The person was born on 02/09/1973 10.10am 12th house represents Ayana Sayana Bogasthanam here lagnathypathy Venus in 12 th house in debilitated state makes him Drunker
Friday, January 18, 2019 8:54:00 PM 
--------------------------------------------------
6
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
18-01-2019 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் துலா லக்ன ஜாதகம் ஆகும். லக்னாதிபதி சுக்கிரன் 12ல் நீசமாக உள்ளார். லக்னத்தில் தேய்பிறை சந்திரன். சுக ஸ்தானத்தில் நீச குருவுடன் மாந்தி. சுகக்கேடு. சனிதான் போதைக்குரிய கிரகம்.அது கேதுவுடன் சேர்ந்தது, சனி தசையில் ஜாதகரை முழு குடிகாரனாக்கியது.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Friday, January 18, 2019 9:15:00 PM 
-----------------------------------------------------
7
Blogger J Murugan said...
அய்யா வணக்கம் 🙏
அய்யா, இது துலாம் இலக்கின ஜாதகம். இலக்கினாதிபதி சுக்கிரன் நீசம் மற்றும் விரயம் ஸ்தானம் சென்றது. மூன்றாம் இடத்தோன் குரு நீசம் அடைந்து, மூன்றில் பாபர் இராகு வின் அமர்வு, மூன்றாம் இடத்தை சனி, கேது இவர்களின் பார்வை. மனோகாரகன் சந்திரனும் நீசன் வீட்டில் அமர்ந்தது ஆகிய காரணங்களால் ஜாதகர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.
Saturday, January 19, 2019 8:23:00 PM
-----------------------------------------------------
8
Blogger sundari said...
வணக்கம் சார் 
துலா லக்கனம் நபரிடம் எல்லா கெட்ட பழக்கம் இருக்கும் இவர்களுக்கு குடி சினிமா சங்கீதம் உல்லாசம் எல்லா பிடிக்கும் பொதுவா லக்கினஅதிபதி சுகுரான் இது வேற நிசம் ஆகி 12 இல் இருக்கிறார் சனி 9இல் கேது கூட இருக்கிறார் அந்த வீடு சாமி குமிடுவது ஒழுக்கம் அ னிய நாடு எல்லாத்தியும் குறிக்கும் சனி மகா தசை அவரை குடிகரான ஆகிடுச்சு 
சனி கெட பழக்கத்துக்கும் பொறுப்பு நல்ல பழக்கத்துக்கும்
Saturday, January 19, 2019 9:45:00 PM 
----------------------------------------------------
9
Blogger guru said...
வணக்கம் அய்யா,
துலா லக்கின ஜாதகர். லக்கினாதிபதி 12 -இல் நீச்சம் பெற்று மறைந்துள்ளார். வாழ்க்கை பயனில்லாமல் விரயமாகிறது 
சுக்ரன் 8 மதிபதியும் ஆகிறார். சுக்ரன் 12 -இல் மறைவதும் , 
3 ,6 குடைய உச்ச குரு (நீச்ச வக்கிரம் ) சுக்ரனை பார்ப்பதும்,
நவாம்சத்தில் சுக்ரன் ராகுவோடு சேர்ந்ததும் 
ஜாதகரை குரு தசையில் குடி பழக்கத்திற்கு அடிமையாக்கியது. குரு மாந்தியோடு சேர்ந்ததால் முழுமையான அசுபர் போல் செயல்படுகிறார்.
யோக காரகனான சனி,( ராகு - கேது) பிடியில் உள்ளார். 
3 மிட ராகுவும் , லக்கினத்தை பார்க்கும் ஆட்சி பெற்ற செவ்வாயும்
அதீத தைரியத்தையும் , யார் சொல்லையும் கேட்காத பிடிவாதத்தையும் தருகிறது.
நன்றி
Sunday, January 20, 2019 12:40:00 AM 
-------------------------------------------------------------------
10
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
02/09/1973 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 10.04.14 மணிக்கு ஸ்வாதி நட்சத்திரத்திர துலா லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம் - சென்னை)
1. 7ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் சுலபமாக மதுக்கு அடிமையாவார்கள். 
2. 12ம் வீட்டில் லக்கினாதிபதி சுக்கிரன் மறந்து இருப்பதால் எப்பொழுதும் தவறான செயல்கள் செய்வார்கள் . மதிப்பும், மரியாதையும் கிடைக்காது . சுக்கிரன் நீசம் கன்னி ராசியில் .
3. ஜாதகருக்கு 18 வயது முதல் (1991) 37 வயது வரை (2010) சனி மஹா தசை . 4ம் வீட்டு அதிபதி சனி 9ம் வீட்டில் கேதுவுடன் அமர்ந்து 3ல் அமர்ந்துள்ள ராகுவின் 7ம் பார்வையில் உள்ளார் . துர திருஷ்டம் பின் தொடரும் . பாக்கியம் இல்லாமல் செய்து விட்டார் . பின் நாட்களில் சாமியாராகி விடுவார். கல்வி பாதிப்பு ஏற்பட்டது 
4. லக்கினத்தில் உள்ள சந்திரனால் வாக்கு திறன் பாதிக்கப்பட்டது ஜாதகர் அழகானவர் .
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Sunday, January 20, 2019 2:11:00 AM 
===================================================

18.1.19

Astrology: ஜோதிடம்: புதிர்: நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்!!!!


Astrology: ஜோதிடம்: புதிர்: நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்!!!!

ஒரு இளைஞரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். ஜாதகர் தனது 25வயதிற்குள்ளாகவே முழுக்  குடிமகனாகிவிட்டார். அதாவது குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று யார் சொல்லியும் கேட்கவில்லை. ஜாதகப்படி அன்பர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதற்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!!

20-1-2019 ஞாயிறன்று சரியான பதில் வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.1.19

மதுவின் தீமைகளை பாட்டாக எழுதிய கவியரசர்!!!!


மதுவின் தீமைகளை பாட்டாக எழுதிய கவியரசர்!!!!

*கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்: எம்ஜிஆர் போட்ட கட்டளை: நடுங்கியது  படக்குழு..*

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.

“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர  முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் .

“சங்கே  முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!

மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர்.  பாடுவதாக வரும் பாடல் ;

அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு  எழுதச் சொன்னால் எப்படி ..?

சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..! வேறு வழி இல்லை..!  படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள் .

சிரித்தார் கண்ணதாசன்.

சில காலம் முன் அவர்  எழுதி இருந்த ஒரு கவிதை : "ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும் சேர்ந்திருக்கின்ற வேளையிலே 
என் ஜீவன் பிரிய வேண்டும் - இல்லையென்றால் என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே எனை படைத்த இறைவன் கேட்பான்..”

கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதை , எம்.ஜி.ஆருக்கும் தெரியும்..! அப்படி  இருந்தும் தன்னை எம்.ஜி.ஆர் அழைக்கிறார். மதுவின் தீமைகளை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார்  என்றால்?

புரிந்து கொண்டார் கண்ணதாசன் !

மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மதுப்  பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது .

எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி  இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்.

கண்ணதாசனுக்கு  தெளிவாக தெரிந்து போனது தயாரானார் கண்ணதாசன்.

*“சிலர் குடிப்பது போலே நடிப்பார்*
*சிலர் நடிப்பது போலே குடிப்பார்”*

கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள்..!

*“மதுவுக்கு ஏது ரகசியம் ?*
*அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்*
*மதுவில் விழுந்தவன் வார்த்தையை*
*மறுநாள் கேட்பது அவசியம் !”*

“ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்.

அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த  வார்த்தைகள் :
*“அவர் இவர் எனும் மொழி*
*அவன் இவன் என வருமே”*

கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்.

கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள் :

*“நாணமில்லை வெட்கமில்லை*
*போதை ஏறும் போது*
*நல்லவனும் தீயவனே*
*கோப்பை ஏந்தும் போது”*

“சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை 
விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..?

கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி  சில பாஸிடிவ் விஷயங்களை சொல்ல வேண்டாமா..?

“எழுதிக் கொள்ளுங்கள்” என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து  உதிர்ந்த வார்த்தைகள் :

*“புகழிலும் போதை இல்லையோ*
*பிள்ளை மழலையில் போதை இல்லையோ*
*காதலில் போதை இல்லையோ*
*நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ*

*மனம் மதி அறம் நெறி 
தரும் சுகம் மது தருமோ ?*

*நீ நினைக்கும் போதை வரும்*
*நன்மை செய்து பாரு*
*நிம்மதியை தேடி  நின்றால்*
*உண்மை சொல்லிப் பாரு !”*

சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார் 
கண்ணதாசன்.

படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போதாவது தெரிகிறதா..?”

ஆம் .. யாரிடம் எதை எப்படி கேட்டு வாங்க வேண்டும்  என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது ;
சரி .. இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் இந்த வித்தை ..அது எங்கிருந்து வந்தது கண்ணதாசனுக்கு ..?

இதோ.. அதை  கண்ணதாசனே சொல்லி இருக்கிறார் :
“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி!

தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற 
போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே

உன்னைத் தவிர
உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”

ஆஹா..!

*வாழ்க  கண்ணதாசன் புகழ் !
வளர்க அவர் தாலாட்டிய தமிழ் !!*

*நன்றி:
எழுத்தாளர் :* *Vallam John*
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.1.19

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!

மாணவக் கண்மணிகள், வகுப்பறைக்கு வந்து போகும் அன்பர்கள், சக பதிவாளர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!!

பொங்கலை முன்னிட்டு வகுப்பறைக்கு 3 நாட்களுக்கு விடுமுறை!!!

அடுத்த வகுப்பு 17-1-2019 வியாழனன்று துவங்கும்

அன்புடன்
வாத்தியார்
================================== ===
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.1.19

Astrology: ஜோதிடம்: மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா! 11-1-2019 புதிருக்கான விடை!!!


Astrology: ஜோதிடம்: மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா! 11-1-2019 புதிருக்கான விடை!!!

புதிரில் கேட்டிருந்த கேள்வி இதுதான். ஜாதகியின் திருமணம் அதீதமாக தாமதமானதற்கு  ஜாதகப்படி என்ன காரணம்?

ஏழாம் வீட்டுக்காரன் சுக்கிரன் நீசம். சுக்கிரன் ஏழாம் வீட்டுக்காரன் மட்டுமல்ல களத்திரகாரனும் கூட. அத்துடன் செவ்வாயின்
பார்வையுடன் உள்ளான். மேலும் சனீஷ்வரனின் பார்வையும் உள்ளது. இவை எல்லாமாகச் சேர்ந்து ஜாதகியின் திருமணத்தை
தாமதப்படுத்தி அவரை வாட வைத்துவிட்டன!!!! கோள்சாரக் குரு குடும்ப ஸ்தானத்திற்கு வந்தவுடன்  ஜாதகியின் திருமணத்தை
நடத்தி வைத்தான்.

புதிருக்கான பதிலை 13 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 18-1-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger ezhil said...
1.laknathipathi 8til maraive.
2.7th lord in 8th with theipirai chandran.
3.2nd house occupied by sani and both sani and sevai (mutual 2 & 8 houses paarvai.)
amsathil raguvodu sevai serkai.
4.kalathira karagan neecham. and with sani paarvai and with eighth lord.
5.puthira karagan with sani and getting sevai aspect.
2nd and 8th house affected. may be in puthan dasa marriage would have hapened.
I am learning student only, any mistakes please correct me.
thanks &regards
ezhil
Friday, January 11, 2019 8:00:00 PM
--------------------------------------------------------
2
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாமத திருமணத்திற்கான காரணம்
இரண்டாம் இடத்தில மாந்தி உடன் சனி சேர்ந்து திருமணத்தை தாமத படுத்தியதுடன் , லக்கின அதிபதி எட்டாம்
இடத்தில மறைந்து அதை மேலும் தாமத படுத்தினார்.
மேலும் நவாம்ச கட்டத்தில் கேது ராகு இரண்டு மற்றும் எட்டில் அமர்ந்து லக்கின அதிபதியும் நவாம்ச கட்டத்தில் எட்டில் அமர்ந்து
அதை மேலும் தாமத படுத்தினார்.
களத்திர காரகன் நீச பங்கம் பெற்றதாலும் குரு பார்வை இரண்டாம் இடத்தில அமைந்ததாலும் திருமணம் நடைபெற்றது .
நன்றி
ப . சந்திரசேகர ஆசாத்
Friday, January 11, 2019 9:05:00 PM
---------------------------------------------
3
Blogger kmr.krishnan said...
ஜாதகி 13 ஸெப்டம்பர் 1960 அன்று மதியம் 12.30 மணியளவில் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ஜாதகத்தில் ராசி அம்சம் இரண்டிலும் செவ்வாய் எட்டாம் இடத்தில் இருந்து கடுமையான செவ்வாய் தோஷ ஜாதக‌ம் ஆகிறது.
ராசிக் கட்டத்தில் குடும்ப ஸ்தானத்தில் மாந்தி இருந்து குடும்பம் அமைவதற்குத் தடை ஏற்படுத்தியது.
இந்த ஜாதகத்தில் நவாம்சம் முக்கியத்துவம் பெறுகிறது. நவாம்ச லக்கினத்தில் 7ம் அதிபன் புதன் அமர்ந்து நீசம் பெற்றது. 7ம்
இடத்தில் சனி அமர்ந்தது இவையும் திருமணம் தாமதம் ஆனதற்குக் காரணங்கள்.பாவபல அட்டவணையில் 7ம் இடம் ஒன்பதாவது
இடத்தையே பெறுகிறது.
Saturday, January 12, 2019 7:14:00 AM
----------------------------------------------------------------
4
Blogger Thanga Mouly said...
இப்பெண்ணின் ஜாதகத்தில் 8ல் மறைந்த லக்கினாதிபதியும், ராகு செவ்வாய் சேர்க்கை பெற்ற யோக காரகர்கள் சூரிய, சந்திரரும்
ஜாதகிக்கு உரிய வயதில் திருமணம் வழங்க ஒத்துழைப்பு நல்கவில்லை. மனோகாரகன் சந்திரன் பாதிக்கப்பட்டு ஜாதகியின்
உளநிலை பக்குவத்தை பாதித்திருப்பார்.
கூடவே 25 வயதுகளில்ன் மேல் வந்த ஏழரை சனி மேலும் தாமதத்தை கொடுத்தாலும், கொடுப்பவர் சனியாகவே((தசை) நின்று
சுக்கிர புத்தியில் திருமணத்தை நடத்தியிருப்பார்.
பொதுவாக திருமணத்தை தரும் குரு தசை இவருக்கு சாதகமில்லாமல் போனதன் விளக்கத்தினை வாத்தியாரிடம்
எதிர்பார்க்கின்றேன்.
Saturday, January 12, 2019 12:06:00 PM
---------------------------------------------------------
5
Blogger sundari said...
சார் வணக்கம்
இந்த ஜாதகத்தில் சுக்கிரன் சனியின் பார்வையை பெற்றார் அப்புறம் 8 ஆம் அதிபதி புதன் கூட கூட்டு 9 அதிபதி 8 இல
செவ்வாயோடு கூட்டு
செவ்வாய் ஆறாம் அதிபதி சந்தரன் சனி பார்வையை பெற்றார் லக்கான அதிபதி செவ்வாய் சனி பார்வையை பெற்றார் மேலும் தன
குடும்ப இஸ்தானம் மந்தி சனி இருக்குது இரண்டாம் அதிபதி தசை 7 அதிபதி தசை 11 அதிபதி தசை கல்யாணம் கொடுக்கும்
நவாம்சம் லக்கனத்தில் புதன் நீச்சம் அவர் 7 அதிபதி 8 செவ்வாய் சந்திரன் ரக்து இருக்குது பெண்களுக்கு தாலி க்ரீன் குரு ராசி
நவாம்சம் இரண்டிலும் கட்டுப்போய்டர் அதனால் திருமணம் ரொம்ப தாமதம்
Saturday, January 12, 2019 5:10:00 PM
-------------------------------------------------------------
6
Blogger ponnusamy gowda said...
அய்யா வணக்கங்கள்!
ஜாதகர் 13-09-1960 அன்று மதியம் 12-30 மணியளவில் விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்.
லக்கினாதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்தது குற்றம்.
லக்கினத்திற்க்கு 2ல் சனி பகவான் ஆட்சியான குருவுடன் அமர்வு.செவ்வாயின் பார்வை 2மிடத்தின் மீது பட்டு குடும்பத்தை
கெடுக்கும் அமைப்பு.
7மதிபன் சுக்கிரன் நீசம்,மற்றும் விருச்சிக லக்கின பகைவரான புதனுடன் அமர்ந்து சனியின் பார்வையை பெற்று கெட்டுள்ளார்.
பாக்கியாதிபதியான சந்திரன் பாதகாதிபதியுமாகி தன் வீட்டிற்க்கு விரய வீடான 8மிடத்தில் அமர்ந்து 2மிடத்தை பாதிக்கின்றார்.
சந்திரன் சனி பார்வை புனர்பூ தோஷம். 2 மற்றும் 8 மிடங்கள் கெட்டதால் மண வாழ்வு சுகமில்லை.
ராசிக்கு 7ல் சனி அமர்ந்து செவ்வாயின் பார்வை திருமண பாதிப்பு தரும்.ராஜ கிரகமான சூரியன் ஆத்மகாரகன் ராகுவுடன்
இணைந்து கெட்டுள்ளதால் வாழ்வு சுகமில்லை.
-பொன்னுசாமி.
Saturday, January 12, 2019 7:31:00 PM
----------------------------------------------------------
7
Blogger venkatesh r said...
புதிர் : எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?
ஆசிரியருக்கு வணக்கம்.
விருச்சிக லக்கினம், மிதுன ராசி ஜாதகி.
அவரின் திருமணம் அதீதமான தாமதமான‌திற்கு ஜாதகப்படி என்ன காரணம்?
1) லக்கினாதிபதி செவ்வாய் 8ல் மறைவு. பாக்கியாதிபதி சந்திரனும் எட்டில் மறைவு.
2) களத்திராதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் கன்னியில் நீசம் அடைந்து அட்டமாதிபதி புதனுடன் கூட்டு.
3) களத்திராதிபதி சுக்கிரனின் மேல் சனியின் 10ம் தனிப் பார்வை.
வாத்தியாரின் பதிலை எதிர் நோக்கும்,
இரா.வெங்கடேஷ்.
Saturday, January 12, 2019 10:05:00 PM
---------------------------------------------------------------
8
Blogger guru said...
வணக்கம் ஐயா
பிறந்த தேதி : 13 -செப்-1960 பகல் 12 மணி
விருச்சிக லக்கின ஜாதகர். லக்கினாதிபதியும் பாக்கியாதிபதியும் கிரஹ யுத்தம் பெற்று 8 இல் மறைவு. இருவரையும் சனி பார்க்கிறார்.
ஜாதகர் முடிவு எடுக்க சிரமப்படுவார்.
7 குரிய சுக்ரன் 11 -இல் நீச பங்கம் பெற்றாலும் 8 குரிய புதனின் சேர்க்கை பெற்று சனியின் பார்வையும் பெறுகிறார். மேலும் புதன்
அல்லது சுக்ர திசை ஜாதகருக்கு பின்னாளில் தான் வருகிறது.
குடும்பாதிபதி குரு ஆட்சி பெற்றாலும் சனியும் மாந்தியும் சேர்ந்து இரண்டாமிடத்தை(21 பரல்) வலுவிழக்க செய்தது.
நவாம்சத்தில் கூட சனி 7இல் அமர்ந்து, நீசம் பெற்ற 7 -மாதிபதி புதனை பார்க்கிறார்.
கிட்டத்தட்ட சனியே திருமண தாமதத்திற்கு காரணம். விந்தை என்னவென்றால் சனி பெற்ற சுய பரல் 0 .
யோகாதிபதி குரு திசை ராகு புத்தியில் 37 வயதில் திருமணம். 10 இல் சுக்ர சாரம் பெற்ற ராகு திருமண யோகம் தந்திருக்க கூடும்.
நன்றி.
Saturday, January 12, 2019 11:37:00 PM
--------------------------------------------------------
9
Blogger ஃபெர்னாண்டோ said...
தாமதத் திருமணத்தின் காரணங்கள்: களஸ்திர காரகனும், களஸ்திர ஸ்தான அதிபதியுமான சுக்கிரன் நீசம், சனி, செவ்வாயின்
பார்வையில். நீச பங்க ராஜயோகத்தை உச்ச புதன் அளிப்பதாகத் தோன்றினாலும், புதன் அம்சத்தில் நீசம். லக்னாதிபதி,
சந்திரனுடன் இணைந்து, குரு பார்த்து, சுப வலுப் பெற்றாலும், அவர் 8-ல் மறைவு. - ஃபெர்னாண்டோ
Saturday, January 12, 2019 11:53:00 PM
Blogger ஃபெர்னாண்டோ said...
திருமணத்தில் தாமதத்திற்கு காரணம்: களஸ்திர ஸ்தானாதிபதியும், காரகனுமான சுக்கிரன் நீசம். அவர் நீசபங்க ராஜயோகம்
பெற்றதாகத் தோன்றினாலும், அந்த யோகத்திற்கு காரணமான உச்ச புதன் அம்சத்தில் நீசம். சுக்கிரன் மேல் அஷ்டமத்தில் அமர்ந்த
செவ்வாயின் பார்வையும், சனியின் பார்வையும். லக்னாதிபதி செவ்வாய், சந்திரனுடன் இணைந்து, குருவின் பார்வையில் சுப வலுப் பெற்றாலும், 8-ல் மறைவு.
- ஃபெர்னாண்டோ
Sunday, January 13, 2019 12:02:00 AM
--------------------------------------------------
10
Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியார் அவர்களிற்கு அன்பு வணக்கங்கள்
புதிற்கான விடை
ஜாதகர் 13-09-1960 பிறந்துள்ளார். அவரது யோகங்கள் வருமாறு
• 8ம் வீட்டில் – சந்திர மங்கள யோகம்
• 11ம் வீட்டில் – புத ஆதித்ய யோகம்
1. லக்னாதிபதி 8ம் வீட்டில்
2. குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி குருவும், சனியும் மாந்தியுடன்.
3. விரயாதிபதி சுக்கிரன் 11ம் வீட்டில் உச்ச புதனுடன் சேர்ந்து புத ஆதித்ய யோகம்
4. 10ம் வீட்டில் சூரியன் ஆட்சி
ஜாதகர் 36 வயதில் திருமணம் நடப்பதிற்கான காரணம்
• ராசிக்கோ லக்கினத்திற்கோ 2,7,8ல் சனியோ செவ்வாயிருந்தால் தாமத திருமணம். இதன்படி லக்கினத்திற்கு 2ம் வீட்டில் சனி,
8ம் வீட்டில் செவ்வாய். செவ்வாயும் சனியும் ஒருவரை ஒருவர் 7ம் பார்வையாக பாரக்கின்றனர்
மேற் சொன்ன காரணத்திற்காக, ஜாதகற்கு கல்யாணம் 36வயதில் நடந்தது .
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Sunday, January 13, 2019 12:46:00 AM
---------------------------------------------------
11
Blogger Vijay Parasuraman said...
Dear Subbiah Sir - This is my first post on your website and quizzes. Regarding the horoscope, i assumed she is born in Coimbatore, it would be great if you can provide location details for accuracy in the future.
I believe she was born on September 13 1960, around 12.40 pm.
7th lord and Kalathra karaka Venus is neecha, though he is in 11th with 11th lord Mercury in own house. To further damage, two natural malefic Sani and Mars(though lagna lord) aspecting this neecha Venus. But, Venus gets neecha bhanga raja yoga, so though marriage is delayed, she got married eventually.
Other points:
2nd lord kudumba stana lord Jupiter is with Sani and aspected by mars(6th lord).
12 lord in neecha and 12th from own house.
from moon, 7th lord jupiter in own house with 8th lord sani and aspected by 6th lord mars.
Again in navamsa, Sani is in 7th, Venus is being aspected by sani and sun(6th lord as well). 7th lord Mercury is in neecha and aspected by Sani.
She should have married when Jupiter Dasa started but because of above points, marriage is much delayed and finally she must have married in the fag end of Jupiter Dasa when Jupiter transits her 7th house(from moon)
Thanks
Vijay
Sunday, January 13, 2019 12:58:00 AM
-------------------------------------------------------------------
12
Blogger Sanjai said...
- லக்கினாதிபதி எட்டில் (மறைவிடத்தில்)
- பாதகாதிபதி (சந்திரன்) எட்டில்
- குடும்ப ஸ்தானத்தில் (சனி, மாந்தி, - தாமதம் மற்றும் கெடுபலன், ஆயினும் குரு தன் வீட்டில், இரண்டாம் இடம், ஆதலால் குரு
தசை முடியும் தருவாயில் திருமணம் நடந்தேறி இருக்க வாய்ப்பு உள்ளது)
- மேற் கூறிய காரணங்கள் தான் தாமதத்திற்கு காரணம்.
மேலதிக தகவல் -
- ஜாதகரின் தாய் மற்றும் சகோதரருக்கு (சகோதரி யாகவும் இருக்கலாம்) விபத்து நடந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
Sunday, January 13, 2019 1:58:00 AM
----------------------------------------------------------
13
Blogger Selvaraj said...
Iyya nan manavan than eppo than jothidam padikka arambichi erukkan.
Nan soldrathu la thappu eruntha sry.
1) lagnathipathi sevvai 8la maraiyurar.
2) 2nd house la sani + manthi santhu erukku.
3) 7m veetin athibathi sukkiran. Avara lagnathi pathitana sevvai 8il erunthu 4m parvaiya 11il erukkum sukkirana parkirar. Athu mattum ellama. Sani 2m veetil erunthu 10m parvaiya 11m veetil erukkum sukkirana parkirar.
4) 2il erukkum guru 6m veetaiyum 8m veetaiyum (lagnathipathi) iyum parkirar.so lata marrage nadanthu erukkalam.thu
Ethu right (or) wrong nu vathiyar than sollanum.
Ethu yennoda 1st comment.
Spelling mistake eruntha sry
Sunday, January 13, 2019 9:44:00 AM
----------------------------------------------------------
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.1.19

Astrology: Jothidam: Quiz: எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?


Astrology: Jothidam: Quiz: எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?

ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அந்தப் பெண்ணிற்கு அவருடைய 36 வயது வரை திருமணம் ஆகவில்லை. அதற்குப் பிறகு ஆயிற்று. அது தனிக் கதை!

கேள்வி இதுதான். அதீதமான தாமதத்திற்கு ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 13-1-2019  ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Short Story சிறுகதை:பொங்கற் பானை!!!!


பொங்கற் பானை

இது எனது முதல் கதை 12 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. 
ஒரு மாத இதழில் வெளிவந்து அனைவரது பாராட்டையும் பெற்றது. இன்னும் 4 நாட்களில் பொங்கல் வரவுள்ளது. 

நீங்கள் அனைவரும் படித்து மகிழ இன்று அக்கதையை வலையில் ஏற்றியுள்ளேன்!!!!

அன்புடன்
SP VR சுப்பையா
=================================================================
தேனம்மைக்குக் கோபம் கோபமாக வந்தது. யாரிடம் அதை வெளிப்படுத்துவது?  ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை! அடக்கிக்  கொண்டாள்.

நடுத்தெருவில் கையைக் காட்டி நிறுத்திய கோலீஸ் அதிகாரியிடம் வாகன ஓட்டி கோபப்பட முடியுமா? அதே சூழ்நிலைதான் அவளுக்கும்.

திருமணமாகி இரண்டு மாதங்கள்தான் ஆகின்றது. கட்டா  கட்டியாக பொங்கலுக்குத் தேவகோட்டைக்கு வரும்படி சொல்லிவிட்டார்கள் பெரிய சுந்தரி ஆச்சி - அதாவது அவளுடைய மாமியார்.

அதனால் இவளையும் கூட்டிக்கொண்டு நான்கு நாட்கள்விடுப்பில் ஊருக்கு வந்து விட்டான் அவளுடைய அன்புக் கணவன் கண்ணன்.

நாளை மறுநாள் பொங்கல். பெங்களூரில் இருந்து பதினோறு மணிநேரம் பயணித்து வந்த களைப்பு நீங்கத் தூங்கியவன். எழுந்தவுடன் அருகில் இருந்த தேனம்மையிடம் சொன்ன செய்திதான் அவளைக் கோபப்பட வைத்தது.
ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் புன்னகையை வரவழைத்துக் கொண்டு மெதுவாகக் கேட்டாள்.

எங்கள் அப்பச்சி வருகிறார்களா - எதற்கு? ”

உனக்குப் பொங்கல் வாழ்த்து சொல்லிவிட்டுப் போகத்தான்!“

விளையாடாமல் சொல்லுங்கள் - எதற்கு வருகிறார்கள்?”   கவலையுடன் கேட்டாள்.

அவன் தெளிவாகச் சொன்னான். “பொங்கல் பானை, பொங்கல் முறையை யெல்லாம் கொடுத்துவிட்டுப் போவதற்காக  வருகிறார்கள்.

அதுதான் நம் திருமணத்தின்போதே மூன்று ஆண்டு முறையென்று உங்கள் தாயார் முப்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு விட்டார்களே - இப்போது இந்த அழிச்சாட்டியம் எல்லாம் எதற்கு? “

அவள் பாலக்காட்டில் படித்து வளர்ந்தவள். அதனால்  புதிது புதிதாக  சொற்கள் வந்து விழுந்தது. அவள் அப்பச்சிக்கு அங்கே ஒரு நூற்பாலையில் வேலை. உற்பத்தி மேலாளர்.

தேனம்மையின் கணவன் சாஃப்ட்வேர் இஞ்சினியர்.   பெங்களூரில் வேலை. மாதம் அறுபதாயிரம் ரூபாய் சம்பளம். சரளமாகப்  பேசுவான்; வேடிக்கையாகவும் பேசுவான்.

வெப்சைட்டில் பார்த்துவிட்டு ஒற்றைக்காலில் நின்று பிடிவாதம் பிடித்துத் தன் தாயாரைச் சம்மதிக்க வைத்து, தேனம்மையைத் திருமணம் செய்து கொண்டான்தேனம்மை தேவயானி போல நல்ல அழகு. சிவந்த நிறம் வேறு.

பெரிய சுந்தரி ஆச்சிக்கு அவன் திருமணத்தில் மிகுந்த வருத்தம். ஆறும் மூன்றும் வாங்கலாம் என்று இருந்தவருக்கு, இரண்டும் ஒன்றும் வாங்கிக்கொண்டு முடிக்கும்படியாகி விட்டது

ஆனாலும் அவருடைய இயற்கைக்குணம் அவ்வப்போது தலைதூக்கும். கல்யாணத்தின்போது முறைக்கென்று பணமும் வாங்கிக்கொண்டு, சாஸ்திரம் என்று சொல்லி, உப்பு, புளி, வாளி, எவர்சில்வர் அண்டாவென்று தனியாக வேறு வாங்கிக் கடுப்படித்து விட்டார்.

அதெல்லாம் வடுக்களாகத் தேனம்மையின் மனதில் ஆழமாகப்  பதிந்து விட்டது. அப்பச்சிக்கு நான்கு பெண் குழந்தைகள். இவள் இரண்டாவது. கல்யாணத்தின்போது அப்பச்சி பட்ட கஷ்டங்கள், வாங்கியகடன்களெல்லாம் இவளுக்குத் தெரியும். அதனால்தான் வருத்தம்.

எங்கள் ஆத்தாவிற்கு கம்ப்யூட்டர் ப்ரெயின். அதற்குத் தனியாக சாஃட்வேர், யுட்டிலிட்டி புரோகிராம் எல்லாம் உள்ளது. அதைப் பயன்படுத்துவதற்கு எனக்கும் எங்கள் அப்பச்சிக்கும்தான் தெரியும். நீயும் பழகிக்கொள்.” என்று சொல்லியவன் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கப் போய்விட்டான்

போகும்போது தன் கால்சட்டைப் பையில் இருந்து கடிதம் ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டுப்  போனான்.

அவள் கடிதத்தைப் படித்தாள். அது பத்து தினங்களுக்கு முன்பு  அவன் தாயார் எழுதியது. அவன் அலுவலக முகவரிக்கு எழுதப்பட்டிருந்தது.

அவனை தன் மனைவியைக் கூட்டிக்கொண்டு பொங்கலுக்கு  ஊருக்கு வரும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் அவன் மாமனாருக்கு பொங்கற்பானை கொண்டு வரும்படி லிஸ்ட் அனுப்பிய விபரம் தெரிவிக்கப்பட்டிருந்தது

ஊரில் அவர்கள் வீட்டில் படைப்பாம். வளவில் எல்லோரும் வருவார்களாம். பங்காளி வீட்டாட்களும் வருவார்களாம். பெருமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பொங்கற்பானையாம்.

பொங்கற்பானையென்றால் வெறும் பானையல்ல. பதினைந்து கிலோ பச்சரிசி. மூன்று கிலோ உருண்டை வெல்லம். இரண்டு கிலோ நெய். முந்திரி. கிஸ்முஸ் பழம் தலா கால் கிலோ. இவையெல்லாம் எவர்சில்வர் சம்படங்களுடன் தேங்காய் பதினொன்று. வாழைப்பழம் மூன்று சீப்புகள். தலா இரண்டு கிலோ வீதம் ஏழுவகைக் காய்கறிகள். மஞ்சள் கொத்து. கரும்பு ஒரு பெரிய கட்டு என்று சிட்டை காணப்பட்டது.

சம்பந்தி செட்டியார் வந்து போகிற செலவையும் சேர்த்தால் ரூ.6,500/- வரை ஆகலாம். தேனம்மைக்கு மயக்கம் வராத குறைதான். மிகுந்த வருத்தத்திற்கு ஆளானாள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அன்று மாலை ஐந்து மணி இருக்கும். சிட்டைப்படி எல்லாச் சமான்களையும் காரைக்குடியில் வாங்கிக்கொண்டு, ஒரு வாடகைக் கார் பிடித்து அங்கிருந்து வந்து சேர்ந்தார் தேனம்மையின் பரிதாபத்திற்குரிய அப்பச்சி. 

பருத்தித் துணியில் வெள்ளைச் சட்டை. நான்கு முளம் தட்டுச் சுற்று வேஷ்டி.எப்போதும்போல எளிமையான தோற்றம். முன்னிரவு பாலக்காட்டில் இருந்து .புறப்பட்டதாகச் சொன்னார்.

பெரிய சுந்தரி ஆச்சிவாங்கண்ணேஎன்று பலத்த குரலோடு, வாயெல்லாம் பல்லாக வரவேற்றார். வந்தவர் கால்மணி நேரத்திற்குமேல் இருக்கவில்லை. வெறும் காப்பி மட்டும் சாப்பிட்டு விட்டு, எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்றார்.

தேனம்மை மட்டும் அவருடன் வீட்டு வாசல்வரைக்கும் வந்தவள், தூரத்தில் நின்ற வாடகைக் காரை நோக்கித் தன் தந்தையார் நடக்கும்போது மெதுவாகக் கேட்டாள்.

அப்பச்சி உங்களுக்குத்தான் அலைச்சல். அநியாயத்திற்குச் செலவு வேறு. எவ்வளவு செலவாயிற்று? பணத்திற்கு என்ன செய்தீர்கள்..?”
அவர் புன்முறுவலிட்டார். “அதெல்லாம் ஒன்றுமில்லை ஆத்தா. நீ மகிழ்ச்சியாக இருந்தால் போதும். வீட்டிற்குப்போ...” என்றார்

இல்லை அப்பச்சி சொல்லுங்கள்!”

போனவாரம் மாப்பிள்ளை என்னுடன் போனில் பேசினார் ஆத்தா. சொல்லச் சொல்லக் கேட்காமல் ஏழாயிரம் அனுப்பி வைத்தார். யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். உன்னிடம்கூட சொல்ல  வேண்டாம் என்றார். நல்ல மனுஷன். நீ உனக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாதே! அவர் மனம் கோணாமல் நடந்து கொள். அவரை நன்றாக வைத்துக் கொள்!” என்று கூறிக்கொண்டே வந்தவர் விருட்டென்று காரில் ஏறிக்கொண்டார். வண்டியும் புறப்பட்டுச் சென்று விட்டது.

  தேனம்மை கண்ணில் நீர் மல்க ஒரு நிமிடம் நின்றாள்.

அவளுடைய அன்புக் கணவன் கண்ணன் இப்போது அவளுடைய கண்களிலும், மனதிலும் சாட்சாத் அந்தப் பரமாத்மா கண்ணனாகக் காட்சியளித்தான்.
       ********************************************************************