மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.10

ஆறு வயதில் விதவையான மகள்; அதை முன்பே கணித்து வைத்திருந்த தந்தை!

....................................................................................................................
ஆறு வயதில் விதவையான மகள்; அதை முன்பே கணித்து வைத்திருந்த தந்தை!

லீலாவதி.

பெயரைப்போலவே அந்தச் சிறுமியும் அழகானவள். வயது ஆறுதான். அந்த வயதிற்கே உரிய குறுகுறுப்பும், சுட்டித்தனமும் அவளிடம் இருந்தன. ஆனால் அதிகமாக இருந்தன.

தன்னுடைய தந்தை வாங்கிக்கொண்டு வைத்திருந்த நீர்க் கடிகாரத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் எப்படி நேரம் தெரியும்? எதைவைத்து நேரத்தைக் கண்டுபிடிப்பது?

காலம் 12ஆம் நூற்றாண்டு. அதை நினைவில் வையுங்கள். அப்போதெல்லாம் சுவர்க்கெடிகாரம், கைக்கெடிகாரம் எல்லாம் ஏது?

அந்த அறைக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று அவளுடைய தந்தை எச்சரித்திருந்தார். அந்தக் கருமம் பிடித்த எச்சரிக்கைதான், ஒரு அதீதமான ஆர்வத்தை வேறு தூண்டி விட்டிருந்தது.

கடிகாரத்தை எட்டிப்பார்த்தாள். சிறிது குற்ற உணர்வும் எட்டிப் பார்த்தது.

அப்போதுதான் அது நடந்தது. அது என்ன விளைவிக்கப் போகிறது என்பது அவளுக்கு அப்போது தெரியாது.

அவள் அணிந்திருந்த மூக்குத்தியில் இருந்து கழன்ற முத்து ஒன்று, சட்டென்று, அந்தக் கடிகாரத்திற்குள் போய் விழுந்தது. அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அறையை விட்டு வெளியே ஓடிவந்துவிட்டாள்.

அடுத்த நாள் அவளுக்குத் திருமணம் நடக்கவிருந்தது. ஆமாம், பால்ய விவாகம். அந்தக் காலத்தில் அதெல்லாம்

சர்வசாதாரணம்.

இப்போது 32 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல், பொருள் ஈட்டலில் உள்ள பெண்களைப் போல அல்லாமல், அந்தக்காலத்தில் அதே வயதிற்குள் பெண் இரண்டு தலைமுறை வளர்ச்சியைப் பார்த்துவிடுவாள்.

லீலாவதியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

ஆனால் கொடுமை என்னவென்றால், திருமணம் முடிந்த மறுவாரம், அவளுடைய கணவன் (8 வயதுச் சிறுவன்) இறந்துவிட்டான். அருகில் இருந்த குன்றின் மீது நண்பர்களுடன் ஏறும்போது, தவறிக் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்துவிட்டான்.

அனைவரும் கதறி அழுதார்கள். இறந்த பிறகு என்ன செய்ய முடியும்? எடுத்துக்கொண்ட உயிரை எமன் திருப்பித்தருவானா என்ன?

அவளுடைய தந்தையின் பெயர் பாஸ்கராச்சாரியார். மிகப் பெரிய கணித மேதை. அத்துடன் ஜோதிட வல்லுனர். இந்திய வரலாறு அணைத்துக் கொண்ட பெயர்.

தன்னுடைய மகளின் திருமணம் குறிப்பிட்டுள்ள அந்த நாளில், குறிப்பிட்டுள்ள அந்த நேரத்தில்தான் நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். நாள் தவறினாலும், நேரம் தவறினாலும் மகள் விதவையாகி விடுவாள் என்பது அவருக்குத் தெரியும். அதானால்தான் அந்த நீர்க் கெடிகாரத்தை வாங்கிக் கொண்டுவந்து வைத்திருந்தார். அதைவைத்துச் சரியான நேரத்தில் தன்
மகளின் திருமணத்தை நடத்த எண்ணியிருந்தார். அவர் எண்ணத்தில் கழன்று விழுந்த முத்தின் வடிவில் மண்ணைப் போட்டான் காலதேவன். கடிகாரத்தில் முத்து விழுந்தது அவர் கண்ணில் படாமல் போய்விட்டது.

கடிகாரம் நேரத்தைச் சொதப்பியது அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. தன்னுடைய தவறான ஜோதிடக் கணிப்புத்தான் மகள் விதவையானதற்குக் காரணம் என்று அவர் தன்னையே குற்றம் சாட்டிக்கொண்டார்.

என்ன செய்வது? நடந்தது நடந்துவிட்டது.

ஆறுவயதுக் குழந்தைக்கு ஒன்றும் தெரியவில்லை. தான் விதவையாகிவிட்டதின் அவலம் புரியவில்லை. பாஸ்கராச்சார்யா ஆச்சாரமான அந்தனர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய குல வழக்கப்படி பெண் எந்த வயதில் விதவையானாலும்
விதவையானதுதான். மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

கலங்கிப் போன, நொருங்கிப்போன பாஸ்கராச்சார்யா, இரண்டு திங்களில் சமாதானமானார். விதியின் சவாலை ஏற்றுக் கொண்டார். தானே ஆசானாக இருந்து, தன் மகளையும் பெரிய கணித மேதையாக்கினார்.

சித்தாந்த சிரோனணி என்னும் கணித நூலை எழுதியவர் அவர். டிரிகொனாமெட்ரி, அல்ஜீப்ரா, கால்குலஸ் போன்ற கணிதங்களை எல்லாம் விடிவமைத்து விளக்கம் எழுதியவர். அவருடைய வரலாறைப் படித்தால் தலை சுற்றும். தலை சுற்றாது என்று நிச்சயம் தெரிந்தவர்கள், அவருடைய வரலாற்றைப் படியுங்கள். விக்கி மகாராசாவிடம் பாஸ்கராச்சார்யாவைப் பற்றிய பல தகவல்கள் உள்ளன அதற்கான சுட்டி இங்கே உள்ளது. அழுத்திப் பாருங்கள்

சூரிய, சந்திர கிரணங்களை அறியும் முறைகளை எல்லாம் கணிதத்தின் மூலம் வடிவமைத்தவர் அவர். இந்திய ஜோதிடத்திற்கு அவர் ஆற்றிய பங்கை எழுத்தில் வர்ணிக்க முடியாது.

அவருடைய காலம் கி.பி 1114 முதல் 1185 வரை. கர்நாடக மாநிலத்தில், பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜ்ஜடபிட்டா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அவர்.

அவரைப்பற்றிய மேலதிகத் தகவல்கள்:

Bhaskara accurately defined many astronomical quantities, including, for example, the length of the sidereal year, the time that is required for the Earth to orbit the Sun, as 365.2588 days[citation needed] which is same as in Suryasiddhanta. The modern accepted measurement is 365.2563 days, a difference of just 3.5 minutes.

His mathematical astronomy text Siddhanta Shiromani is written in two parts: the first part on mathematical astronomy and the second part on the sphere.

Bhaskara (1114 – 1185) (Kannada ಭಾಸ್ಕರಾಚಾರ್ಯ) (also known as Bhaskara II and Bhaskara Achārya ("Bhaskara the teacher")) was an Indian mathematician and astronomer. He was born near Bijjada Bida (in present day Bijapur district, Karnataka state, South India) into the Deshastha Brahmin family. Bhaskara was head of an astronomical observatory at Ujjain, the leading mathematical centre of ancient India. His predecessors in this post had included both the noted Indian mathematician Brahmagupta (598–c. 665) and Varahamihira. He lived in the Sahyadri region.

Bhaskara and his works represent a significant contribution to mathematical and astronomical knowledge in the 12th century. His main works were the Lilavati (dealing with arithmetic), Bijaganita (Algebra) and Siddhanta Shiromani (written in 1150) which consists of two parts: Goladhyaya (sphere) and Grahaganita (mathematics of the planets).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வராக மிஹிராவைப்பற்றிய மேலதிகத் தகவல் வேண்டுவோர்களுக்காக கிழே ஒரு சுட்டியைக் கொடுத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் அதை அழுத்திப்பார்க்கலாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் (1.4.10 & 2.4.10) விடுமுறை. அடுத்த வகுப்பு 3.4.2010 சனியன்று. ’கட்’ அடிக்காமல் அனைவரும் வந்து சேரவும்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

30.3.10

ஆஸ்தான ஜோதிடர் சொன்னது நடந்ததா? இல்லையா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆஸ்தான ஜோதிடர் சொன்னது நடந்ததா? இல்லையா?

ஆஸ்தான ஜோதிடர் சொன்னதைக் கேட்டு அரசசபை அதிர்ச்சியில் உறைந்தது!

எங்கும் அமைதி. யாரும் வாயைத் திறக்கவில்லை!

மன்னன் மட்டும் ஒரே விநாடியில், மனதைத் தேற்றிக்கொண்டு கேட்டான்: “நீங்கள் சொல்வது உண்மையா குருவே?”

குருவின் வார்த்தைகளில் துக்கம் தொனித்தாலும், அதிகாரத்தொனியும் சேர்ந்தே இருந்தது.

“உண்மைதான், மகராஜா! எனக்கும் அதைச் சொல்வதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. சில சமயங்களில் உண்மை கசக்கத்தான் செய்யும். கிரகங்களின் நிலைமை அதைத்தான் தெளிவு படுத்துகின்றன. இளவரசனின் மரணம் தவிர்க்க முடியாதது. அவன் தனது பதினெட்டாவது வயதில் உயிர் நீப்பான். மரண மடைவான்.”

அரசன் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டான். ஆனால் அவனுக்குப் பின்புறம் அமர்ந்திருந்த மகாராணியால் முடியவில்லை, உணர்ச்சி மேலிடக் கதறி அழும் தொனியில் அவள் சொன்னாள்: “இல்லை, இல்லை, மகராஜா! நீங்கள்தான் ஏதாவது செய்து நமது செல்வனைக் காப்பாற்ற வேண்டும். இவருடைய ஜோதிடத்தைப் பொய்யாக்க வேண்டும்.அது உங்களால்தான் முடியும்”

என்ன நடந்தது?

அரசன் ஜெயித்தானா? அவனால் ஜோதிடத்தைப் பொய்யாக்க முடிந்ததா?

அதெப்படி முடியும்? அரசனுக்கு ஜோதிடம் சொன்னவர் என்ன அரைக்காசு மரத்தடி ஜோதிடரா?

இந்திய ஜோதிடக்கலையின் தந்தை என்று போற்றப்படும் மிஹிரர் அவர். மன்னனும் சாதாரண பத்தோடு பதினொன்றாம் மன்னன் அல்ல! இந்திய வரலாற்றில் தனது பெயரை நிலை நிறுத்திவிட்டுப்போன மன்னன் அவன். பெயரைச் சொன்னால் உங்களில் பலருக்கும் அவனைத் தெரியவரும்.

அவன் பெயர் விக்கிரமாதித்தன். ஐந்தாம் நூற்றாண்டில் வாழந்து பெயர் பெற்றவன். மெளரிய சாம்ராஜ்யத்தின் தூணாக விளங்கியவன்.

ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும், ஜோதிடரின் மேல் மிகுந்த விசுவாசமும் இருந்தாலும், தனது பாழாய்ப்போன மனதிற்காக வேண்டிய பாதுகாப்பை எல்லாம் கொடுத்துத் தன் மகனைக் கண்ணுக்குகண்ணாய் வளர்த்தான் அவன். ஆனாலும் ஜோதிடர் குறித்துக் கொடுத்த தேதியில்,
குறித்துக் கொடுத்தபடி ஒரு வராகத்தால் (பன்றியால்) இளவரசன் கொல்லப்பட்டான்.

செய்தி காதிற்கு எட்டியவுடன், மன்னன் செய்த முதல் வேலை, ஜோதிடரை அழைத்துவரச் செய்ததுதான்.

வந்தவரிடம் அரசன் சொன்னான்: “ நான் தோற்றுவிட்டேன். நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள், நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்!”

அரசனைப்போலவே துக்கத்தால் சூழப்பட்ட ஜோதிடர், வருத்தமுற்றுப் பேசலானார்.“ மன்னர் மன்னா, நான் ஜெயிக்க வில்லை. நமது நாட்டின் வானவியலும், ஜோதிடமும் ஜெயித்துள்ளன! (My Lord, I have not won.
It is the science of astronomy and astrology that has won.)

”அது எதுவாக இருந்தாலும் சரி, எனது மதிப்பிற்கு உரிய ஜோதிடரே, நீங்கள் அறிந்து வைத்திருக்கும் கலையில் உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை!அந்தக் கலையில் நீங்கள் அடைந்திருக்கும் மேன்மைக்கு நான் தலை வணங்குகிறேன். உங்களுக்கு உயரிய விருதான வராக விருதை அளிக்கிறேன். இன்று முதல் நீங்கள் வராகமிஹிரர்!

வெறும் மிஹிரர் வராகமிஹிரர் ஆனகதை இதுதான்.

இது புனையப்பெற்ற கதை அல்ல! உண்மையில் நடந்த கதையாகும்!

மீதிக்கதை நாளை வெளிவரும்

ஹி..ஹி..முழுக்கதையையும் எழுதிப் பதிவிட இன்று நேரம் இல்லை!

(தொடரும்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்
வாத்தியார்!


வாழ்க வளமுடன்!

29.3.10

ஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்!

225 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.

இடம்: கடவுளின் சொந்த தேசம் என்று அங்கிருக்கும் மக்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும் மாநிலத்தில் உள்ள இயற்கை கொஞ்சும் சிற்றூர்
(எந்த மாநிலம் என்று தெரிகிறதா?)

அங்கே, விவரமில்லாத ஜோதிட மேதை ஒருவர், ஜோதிடத்தை வைத்துக்
காசு பார்ப்பதை விட்டு விட்டு, பல ஜோதிடர்களை உருவாக்கும் முகமாக, ஜோதிடக் கலையை காப்பாற்ற வந்த ரட்சகனாக தன்னை எண்ணிக்
கொண்டு, பல சீடர்களை வைத்துக் குருகுலம் நடத்திக் கொண்டிருந்தார்.
பல மாணவர்கள் அக்கறையாக அக்கலையைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.
அவரும் சிறப்பாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்

அந்தப் பள்ளியிலேயே நம்பர் ஒன்னாக - முதல் மாணவனாகத் தேறி, வாத்தியார் கையாலேயே விருதும் வாங்கிய இளைஞன் ஒருவனுக்கு, ஒரு விபரீத ஆசை வந்தது.

தன் ஜாதகத்தை வைத்தே ஜோதிடத்தைப் பரிட்சை செய்து பார்க்க ஆசைப் பட்டான்.

தன் ஆயுள் காலம் எவ்வளவு என்று கணித்துப் பார்த்தான்.

77 ஆண்டுகள் என்று தெரிந்தது!

மரண தண்டனை கிடைக்கும்படியான ஒரு குற்றத்தைச் செய்து, தன் ஜாதகம் தன்னைக் காப்பாற்றுகிறதா, பார்த்து விடுவோம். போனால் உயிர் போகட்டும். இல்லையென்றால் ஜோதிடக் கலைக்கு ஒரு வலுவான ஆதாரத்தைத் தேடிக் கொடுப்போம் என்றும் முடிவு செய்தான்.

இளைஞனல்லவா? உடனே செயலிலும் இறங்கினான்.

நடந்தது என்ன?

படித்தால், திகைப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்! மேலே படியுங்கள்

இது நடந்த கதை.

அந்த இளைஞனின் பெயர் நாராயணன் இளையத். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், திருச்சூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மச்சத் என்னும் ஊரில் பிறந்தவன் அவன். பிறந்த ஆண்டு 1765. எடக்காடு நம்பூதிரி என்னும் பிரபலமான ஜோதிட விற்ப்பன்னர் அவனுக்கு குருவாக அமைந்தார். அவருடைய குருகுலத்தில் இவனும் கற்றுத் தேறினான்.

அவனுக்கு இருபது வயதாகும்போது, ஒரு ஆர்வத்தில், தனது ஆயுள் ஸ்தானத்தைக் கணக்குப்பண்ணிப் பார்த்தான். தனது விதிப்படி தனக்கு நீண்ட ஆயுள் உண்டு என்று தெரிந்துகொண்டான். அதை சோதித்துப்பார்க்கவும் விரும்பினான்.

அதற்கு அவன் தேர்வு செய்த இடம், அந்தக் காலக்கட்டத்தில் கொச்சிப் பகுதியில் ஆட்சி செய்துகொண்டிருந்த சதன் தம்புரான் என்னும் அரசனின் மாளிகை. அந்த அரசன் கோலோச்சிய காலம். (1781 - 1805)

அரசனின் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த நம் நாயகன்,கருவறை வரை சென்று, அங்கிருந்த ஏராளமான பொக்கிஷங்களில், தங்கத்தால் நிறைத்து வைக்கப்பட்டிருந்த பானைகளில் ஒன்றை மட்டும் தூக்கிக் கொண்டு தப்பிக்க முயன்றான். இரவு நேரம் என்றாலும் காவல் பலமாக இருந்ததால் மாட்டிக்கொண்டு விட்டான். கையும் களவுமாக அவனைப் பிடித்த காவலர்கள்,
அவனை அரசனின் முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.

அரசன் யோசிக்கவேயில்லை. கடுங்கோபத்துடன், அவனுக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறினான்.

விதி எப்போதுமே அதற்கென்று ஒரு வழி வைத்திருக்கும். அந்த வழியை அது திறந்துவிட்டது.

அரண்மனையில் இருந்த பண்டிதர்களில் சிலர் அவனை அறிந்திருந்தார்கள். அவனுக்குத் தண்டனையளிக்கப்பட்டிருப்பது தெரிந்ததும், இரக்கத்துடன் வந்து அவனிடம் பேசலுற்றார்கள். அத்தகைய கொடிய தண்டனை பெறும் அளவிற்கு அவன் செய்த குற்றம் என்ன?

நமது நாயகன் தான் வந்த நோக்கத்தை அவர்களிடம் முழுமையாக சொன்னான். விரைந்து சென்ற அவர்கள், மன்னனிடம் முழு விவரத்தையும் சொல்ல, மன்னன், ஒருவிதக் குறுகுறுப்புடன், நமது நாயகனைத் திரும்ப அழைத்துப் பேசலுற்றான்.
மன்னன் எல்லாக் கலைகளுடனும், ஜோதிடத்தையும் ஓரளவிற்குக் கற்றவன் என்பதால், நமது நாயகனிடம் பேசப் பேசப் பிரமிப்பிற்கு ஆளானான். அவனை மன்னித்ததோடு, விடுதலை செய்தும் அனுப்பிவைத்தான்.

ஜோதிடம் என்னும் ஒரு தெய்வீகக் கலையை சோதிக்க முயன்றது மாபெரும் தவறு என்று மன்னன் அவனை எச்சரித்தபோது, நமது நாயகன் மன்னனிடம் இவ்வாறு சொன்னான்.”அரசே ஜோதிடத்தின் மீதும், தெய்வத்தின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. என் ஜாதகப்படி நான் சாக மாட்டேன், தண்டனைக்குள்ளாக மாட்டேன் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் துணிந்து இச்செயலில் ஈடுபட்டேன். இக்கலையின் சிறப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இதைச் செய்தேன்”

அவனின் வார்த்தைகளில் மயங்கிய மன்னன், தன் காலம்வரை அவனையே தனது ஆஸ்தான ஜோதிடராக வைத்துக் கொண்டார்.

பிரசன்ன ஜோதிடத்தில் மிகவும் தேர்ந்தவனான நமது நாயகன், பல அசரடிக்கும் பலன்களைக்கூறி, அவை அவ்வாறே நடந்தேறியபோது, அவனைப் பார்த்துப் பிரம்மித்தவர்களே அதிகம்.

பிரசன்ன ஜோதிடம் என்பது கேள்வியையும், கேள்வி கேட்கும் நேரத்தையும் வைத்துப் பலன் சொல்வதாகும்.

ஒரு வாழைக்கன்று வைக்கப்படும் நேரத்தை வைத்து, அந்தக் கன்று வளர்ந்து கனி தருமா? தராதா? வைத்தவன் அதைச்சாப்பிடுவானா? அல்லது மாட்டானா? அல்லது அந்தக் கனி என்னவாகும் என்பது வரை சொல்லும் ஆற்றல்
பிரசனன ஜோதிடத்திற்கு உண்டு என்பார்கள்.

ஒரு சமயம் நமது நாயகன், தம்புராக்கள் என்னும் பெரிய பண்டிதரைப் பார்த்துவரச் சென்றான். இவன் சென்ற நேரம், பண்டிதர், முடிதிருத்தத்திற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார். இவனைக் கணடதும், அவர் விளையாட்டாகச் சொன்னார்:

“என்னப்பா நான் முடிவெட்டக் கிளம்பும்போது, நீ வந்திருக்கிறாயே, உன்னோடு இப்போது எப்படிப் பேசுவது? சரி, உன்னுடைய பிரசன்ன ஜோதிடத்தை வைத்துச் சொல், இப்போது நான் முடிவெட்டிக்கொள்வேனா? அல்லது மாட்டேனா?”

“சட்டென்று தன் மனதிற்குள் கணக்கிட்ட நமது நாயகன் சொன்னான், “இல்லை, இப்போது நீங்கள் முடி வெட்டிக் கொள்ள முடியாது. அதற்கு இன்னும் எட்டு மாதங்கள் காத்திருக்கவும் வேண்டும்”

”நாவிதன் எங்கள் தோட்டத்தில் எனக்காகக் காத்திருக்கிறான். உன் பிரசன்னம் பொய்யாகப் போகிறது. என்னுடன் வா, காட்டுகிறேன்” என்று அவர் புன்னகையுடன் சொன்னார்.

ஆனால் அது பொய்யாகவில்லை. உண்மையாகிப்போனது.

எப்படி?

அது சமயம், அங்கே வந்த பண்டிதரின் தாய், தன் மருமகளுக்கு (அதாவது பண்டிதரின் மனைவிக்கு) நாள் தள்ளிப்போய்விட்டதையும், அவள் கருவுற்றிருப்பதையும் சொல்ல, முடி திருத்தம் தள்ளிவைக்கப்பட்டது.
கேரள அந்தனர்களின் முறைப்படி மனைவி கருவுற்றிருக்கும்போது,
கணவன் தாடி வளர்க்கும் அந்தக்கால வழக்கத்திற்கு அவரும்
ஆட்படுத்தப்பட்டார். எட்டு மாதங்கள் கழித்து, அவருடைய மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகே, அவர் முடிதிருத்தம் செய்துகொள்ள முடிந்தது.

நமது நாயகனின் பிரசன்ன ஜோதிட மகிமை எப்படி உள்ளது பார்த்தீர்களா?

(V S. கல்யாணராமன் என்னும் கணிதம் மற்றும் ஜோதிட மேதை எழுதிய செய்திகளின் தமிழாக்கம் இந்தக் கட்டுரை. அவருக்கு நமது நன்றி உரித்தாகுக!)

சதன் தம்புரானைப் பற்றிய மேல் விவரங்கள் விக்கி மகராசாவிடம் கிடைக்கும். இங்கே சொடுக்கிப் பாருங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
V S. கல்யாணராமனைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:

V S KALYANRAMAN A mathematician and amateur astronomer by training, a bureaucrat by profession and a student of astrology by passion, the author had his traditional training in astrology in his teens, under a couple of doyens of Gurus of yester years, with a vow not to
turn a professional. Commencing his career as a teacher in Kerala completed it as a
Senior Class I officer of the Government of India. After a stint of story writing in Tamil in the fifties, turned to serious study of Saiva Siddhanta, Philosophy, Psychology, Vedic Mathematics, Bharateeya Ganitha Sastra, Jyothisha (astronomy), the various astrological systems, Vastu Sastra, Vedic Numerology and allied disciplines, under various masters of repute.

As a freelancer, though was contributing on varied topics, occasionally to various magazines in English, Tamil and Malayalam, mostly under disguise, for decades and has received many awards and accolades, would prefer to remain, anonymous and a student, till his last breath

பிரசன்ன ஜோதிடத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:

Prasna Marga is an ancient branch of horoscopic astrology by which an astrologer attempts to answer a question by constructing a horoscope for the exact time and place at which the question was received and understood by the astrologer. A common misconception is that the horoscope must be constructed for the place and time the querent establishes the question. In the previous centuries this issue did not create any problems as the astrologer would consult with the querent face to face. These days the querent could be in Africa and send an email with the question to an
astrologer in Australia. Hence, it is necessary to emphasize the point.

The answer might be a simple yes or no, but is generally more complex with insights into, for example, the motives of the questioner, the motives of others involved in the matter, and the options available to him. History Prasna Marga has been practiced for centuries in India known as Prasna Shastra (Sanskrit prasna = question). It is a branch of Vedic astrology which is still widely used across the Indian subcontinent. The more advanced form is the Astamangalam Prasna and Deva Prasna methods of Kerala. The state of Kerala, in India, is famous even today for its traditional use of Prasna Marga.
++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி, வணக்கத்துடன்,
வாத்தியார்


சதன் த்ம்பூரான் மன்னரின் அரண்மனை
வாழ்க வளமுடன்!

27.3.10

கண்ணதாசனின் இறையுணர்வு



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணதாசனின் இறையுணர்வு

கவியரசர் வாழ்ந்தது மொத்தம் 54 வருடங்கள், 3 மாதங்கள், 23 நாட்கள். அந்த நாட்களில், உணர்வு தெரிந்தது முதல்,அவர் இறையுணர்வோடு தான் வாழ்ந்தார்

ஆமாம், அதுதான் உண்மை!

அதை அவருடைய பல நூல்களிலும், பாடல்களிலும் காணலாம்.

24.06.1927ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல் பட்டி என்னும் அழகிய கிராமத்தில் பிறந்த அவர், அமெரிக்க மண்ணில், (சிகாகோவில்) 17.10.1981ஆம் தேதியன்று சிவபதவி அடைந்தார்.

எங்கள் பகுதியில் ஒருவரை, அவர் காலமாகி விட்டால், இறந்து விட்டார் என்று சொல்வதில்லை. சிவபதவி அடைந்து விட்டார் என்றுதான் சொல்வார்கள்.

தன் கவிதைகளாலும், எழுத்துக்களாலும்,மேடைப் பேச்சுக்களாலும் தமிழக மக்களை மொத்தமாக ஈர்த்து அவர்களுடைய மனதிற்குள் இடம் பிடித்து விட்ட அவர், தன்னைப் பற்றிச் சொல்லும் போது இப்படிச் சொல்வார்.

"நான் சரியாகச் சிந்திப்பேன்: ஆனால் தவறாகச் செய்து முடிப்பேன். சுபாவம் இதுதான். பழக்கமும் இதுதான்"

அவர் ஈடுபட்டிருந்த திரையுலகமும், அரசியல் உலகமும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

அவர் இறையுணர்வு மிக்கவர். முத்தையா என்ற தன் பெயரை, அவர் தான் அதிகமாக வணங்கும் அந்த மாயக் கண்ணனின் நினைவாகத்தான் கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்டார்.அந்தப்பெயரில்தான் பெரும் புகழும் பெற்றார்.

அந்த மாயக் கண்ணன், அவர் பாடல்களில் பல இடங்களில் வெளிப்பட்டுள்ளான். அதைப் பின் வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

இடையில் ஒரு பத்தாண்டு காலம் ஒரு அரசியல் இயக்கத்தில் இருந்த காலத்தில் தன்னுடைய இறையுணர்வை தன்னோடு மட்டுமே வைத்திருந்தார். தான் பேசிய இடங்களில் அவர் அதை வெளிப்படுத்தியதில்லை.

அதுவும் சினிமாவில் வருவதைபோன்ற ஒரு சூழ்நிலைதான்!

அதைப் பற்றி அவரே ஒரு நூலில் குறிப்பிட்டும் எழுதியுள்ளார். இயக்கக் கூட்டங்களுக்குப் போய்வந்து விட்டு, வீட்டில் உணவு சாப்பிட அமரும் போது, விட்டகுறை தொட்ட குறையாக, விபூதியை எடுத்துப் பூசிக் கொண்டு தான் சாப்பிட உட்காருவேன் என்று எழுதியுள்ளார்.

அந்த இறையுணர்வுதான் அவரைப் பல அற்புதமான பாடல்களை எழுத வைத்தது.

"இறைவன் என்பவன் ஒருவன்தான், நாம்தான் அவனைப்பல வடிவங்களில், பல விதங்களில் வணங்குகின்றோம். ஆறுகள் பலவாக இருந்தாலும் அவை அனைத்தும் சேருமிடம் கடல்தான். கடல்கள் பலவாக இருந்தாலும் அவை
அனைதிற்கும் நீர் என்று தான் பெயர்" என்று அவர் வலியுறுத்திக் கூறுவார்.

அதுபோல இறைவழிபாடு பல விதமாக இருந்தாலும், மதங்கள் பலவாக இருந்தாலும் இறைவன் ஒருவன்தான் என்ற கொள்கையுடையவர் அவர்.

அதைவலியுறுத்தி அற்புதமான பாட்டு ஒன்றை அவர் எழுதினார்.

பாடலின் பெருமை கருதி அதை அப்படியே கொடுத்துள்ளேன்.
----------------------------------------------------
"ராமன் என்பது கங்கை நதி
அல்லா என்பது சிந்து நதி
யேசு என்பது பொன்னி நதி
நதிகள் பிறக்குமிடம் பலவாகும்
எல்லா நதிகளும் கலக்குமிடம் கடலாகும்.

தேவன் வந்தான், தேவன் வந்தான்
குழந்தை வடிவிலே - என்னைத்
தேடித் தேடி காவல் கொண்டான்
மழலை மொழியிலே!

பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா

அன்னை மேரி தெய்வ பாலன்
எங்கள் யேசு தேவ தூதன்
ராஜசபை ஜோதி கண்டேன்
ஞானக் கோயில் தீபம் கண்டேன்.

பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா

அல்லாஹ¥ அக்பர் என்றேன்
ஆண்டவனே அடிமை என்றேன்
பிள்ளை ஒன்றைப் பேசச் சொன்னான்.
எல்லாமும் இதுதான் என்றான்.

பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா

வேணுகான ஓசை கேட்டேன்
விஜயன் கேட்ட கீதை கேட்டேன்
நேரில் வந்த கண்ணன் கண்டேன்
கண்ணனென்னும் ராமன் கண்டேன்

பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா

(படம் - குழந்தைக்காக - வருடம் 1968)
------------------------------------------------------------------
ஆனால் திரைப் படங்களில், பக்திப் பாடல்களை கேட்டவர்களுக்குக் கேட்டபடி அவர் எழுதி கொடுத்தார். பல சிறந்த பாடல்கள் உள்ளன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
இயற்கையும் இறைவனும்.

ஒரு பன்னிரெண்டு வயதுச் சிறுவன், தன் தந்தையிடம் கேட்டான்.

"அப்பா இது என்ன?"

'இது ஒரு மலர்!"

"எல்லா மலர்களுமே ஒரே வகைதானா?'

"இல்லை அதனதன் தன்மையால் ஒவ்வொன்றும் மாறுபடும்"

"இந்த மலரின் பெயர் என்ன?"

"இதை ரோஜா என்று சொல்வோம்!"

அவன் தன் கையில் வைத்திருந்த இரண்டு ரோஜாக்களில் ஒன்றைக்காட்டி, "இந்த ரோஜாவின் நிறம் என்ன?"

"இது சிவப்பு ரோஜா"

மற்றொன்றைக் காட்டினான்.

"இது மஞ்சள் ரோஜா"

"இவற்றிற்கு எங்கிருந்து நிறம் கிடைக்கிறது?"

"பூமியில் இருந்துதான் அவற்றிற்கு நிறம் கிடைக்கிறது"

"இவற்றை நம் வீட்டுத் தோட்டத்திலிருந்து பறித்தேன்.இரண்டுமே நம் தோட்டத்து மண்ணில்தான் வளர்ந்தது. அப்படியிருக்க ஒன்று சிவப்பாகவும் ஒன்று மஞ்சளாகவும் இருப்பது ஏன் - இரண்டும் ஒரே நிறத்தில் அல்லவா
இருக்க வேண்டும்? அதே போல அவற்றின் தண்டுப் (ஸ்டெம்) பகுதிகளும், இலைகளும் ஏன் வெவ்வேறு நிறங்களில் இருக்கின்றன? பூக்களுக்கு
மணம் எங்கிருந்து கிடைக்கிறது?"

அவன் தந்தை திகைத்து விட்டார். அதற்குமேல் அவரால் சரியான பதிலைச் சொல்ல இயலவில்லை.

ஆனாலும் இப்படிச் சொன்னார், "கண்ணா, நம் அறிவிற்கு எட்டாத விஷயங்கள் பல உள்ளன.அதில் இதுவும் ஒன்று. விஞ்ஞானிகளைக் கேட்டால் நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் என்று பொதுப் படையாகச் சொல்வார்கள். ஆனால் அவை இயற்கையின் படைப்பு.இயற்கையைப் படைத்தவர் இறைவன்.இயற்கை வடிவில் இறைவன் பூமி எங்கும் உள்ளார்."

ஆமாம் இயற்கையென்பது என்பது வேறு, இறைவன் என்பது வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். பூமியெங்கும் அவர் வியாபித்திருக்கின்றார்.

அதனால்தான், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்
என்று இறைவனை நாம் குறிப்பிடுகின்றோம்.

பூமியின் தட்ப வெட்ப நிலை இடத்திற்கு அதன் உயரத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபடுகின்றது. கடல் மட்டத்திலிருந்து ஒவ்வொரு ஆயிரம் அடி
உயரத்திற்கும். ஒரு டிகிரி உஷ்ணம் குறைகிறது.

ஆனால் காற்றில் உள்ள 'ஆக்சிஜென்' அளவு மட்டும் 21% சதவிகித அளவில் மாறுபடாமல் இருக்கிறது. இறைவன் தான் படைத்த ஜீவராசி களின் சுவாசத்திற்காக அதை மட்டும் கட்டுப் படுத்தி வைத்திருக்கின்றார்!

அதே போல ஒரு பறவை சைபீரியாவிலிருந்து வேடந்தாங்கலுக்கு வந்து
விட்டுத் திரும்பிப் போய் விடுகிறது. அதற்கு விமானங்களுக்கு இருப்பது
போல வழிகாட்டும் கருவிகள் எங்கே இருக்கிறது.?

தென்னை மரங்கள் நீரை உறிஞ்சி அதைத்தன் உச்சியில் இருக்கும் காய்களில் சேர்த்து வைத்து நமக்கு இளநீராகத் தருகின்றது. அதற்குப் பூமியில் இருந்து
நீரை உறிஞ்சித் தன் காய்களுக்குள் சேர்க்க குட்டி மோட்டார் இருக்கிறதா
என்ன?

இதைப்போன்று பல வினோதங்கள் இயற்கையில் உள்ளன. கவியரசர் அனைத்தையும் உணந்ததோடு, தன்னுடைய பாடல்களிலும் அவற்றைக் குறிப்பிட்டு எழுதினார்.

காலம், இடம் கருதி, ஒரே ஒரு பாட்டை மட்டும் உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறேன்.

முழுப்பாடலையும் கீழே கொடுத்துள்ளேன். முக்கியமான வரிகளை மட்டும் இப்போது பார்ப்போம்.

இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை.

"இறைவன் வருவான். அவன் என்றுமே நமக்கு நல்வழி யைத்தான் காட்டுவான். அவனுடைய அன்பு ஒன்றுதான் நாம் தேடிப் பெற வேண்டிய கருணை!" என்று பொருள் பட இந்த வரிகளை எழுதினார் அவர்.

அதோடு மட்டுமா.?

இறைவன்தான் வண்ண வண்ணப் பூக்களைக் கொடுத்தவர். அந்தப் பூக்கள் மூலமாகக் காய்களையும், கனிகளையும் கொடுத்தவர். சின்னச்சின்ன குழந்தைகளின் நெஞ்சங்களில் பாசத்தை வைத்தவர். அந்தப்பாசத்தைப்
பேச வைத்துக்குழந்தைகள் மூலம் நமக்கு இந்த உலக வாழ்க்கையின் மீது
ஒரு பிடிப்பை ஏற்படுத்தியவர்.

வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்.

சின்னச் சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
சின்ன சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்.

என்ன நண்பர்களே இது நீங்கள் அறிந்த பாடல்தான். இந்த எளியவன் அந்த மேதையின் பாடலுக்குச் சொன்ன விளக்கம் எப்படியுள்ளது? ஒரு வரி பின்னூட்டத்தில் எழுதுங்கள்.
-----------------------------------------------------
இறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான்
படம் - சாந்தி நிலையம்
பாடியவர் - பி சுசீலா குழுவினர்

பி எஸ்.
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

ஒன்றுகூடி
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

பி எஸ்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை

ஒன்றுகூடி
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

பி எஸ்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
சின்ன சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
அன்பே என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு

ஒன்றுகூடி
பாசம் என்பது வீடு
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

பி எஸ்
உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்கள் அவனைக் காண
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க

ஒன்றுகூடி
கைகள் அவனை வணங்க
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
______________________________________



வாழ்க வளமுடன்!

26.3.10

கண்ணதாசன்: பூஜைக்கு வந்த மலரே வா! பூமிக்கு வந்த நிலவே வா!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணதாசன்: பூஜைக்கு வந்த மலரே வா! பூமிக்கு வந்த நிலவே வா!

நேற்றையப் பதிவைப் படித்துவிட்டு, சகோதரி ஒருவர் கேட்டிருந்தார்:

// கவியரசரோட அழகான பாடல் ஒண்ணு அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி. இரவோடு இரவாக ஓடிப்போய் விடக்கூடாது.இது எல்லாப் பெண்களுக்குமே உள்ள நியதி என்று ஏன் பெண்களை மட்டும் சொல்றீங்க? ஆண்களுக்கு அதில் சம்பந்தம் இல்லையா? அவர்கள் ஓடிப்போனால் மட்டும் நியாயமா?//////

நல்ல கேள்வி !

அதற்குப் பதில் சொல்ல வேண்டியது எனது கடமை. பதிலை சற்று விரிவாகவே சொல்ல வேண்டிய நிலைமை. அதனால் விரிவாகவே எழுதுகின்றேன்.

இறைவன் படைப்பில் ஆணும், பெண்ணும் சமம்தான். ஆணிற்கு உடல் வலிமையைக் கொடுத்த கடவுள். பெண்ணிற்கு மன வலிமையைக் கொடுத்தார்.

இன்ன பிற படைப்புக்களிலும் கடவுள் சமத்துவத்தையே கடைப்பிடித்துள்ளார்.

ஆடு, மாடு, மான் இவைகளுக்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்கு மட்டும் ஏன் கொம்பைக் கொடுக்கவில்லை?

குதிரைக்கு வலிமையைக் கொடுத்துள்ளார். (Power - அதைத்தான் நாம் horse power என்கின்றோம்) அதோடு கொம்பையும் கொடுத்திருந்தால் என்ன ஆகும்? சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்!

இதைக் கேட்ட என் நண்பர் ஒருவர், "சரி, கடவுள், கழுதைக்கு ஏன் கொம்பைக் கொடுக்கவில்லை என்றார்?"

நான் சொன்னேன்,"கடவுள் கழுதைக்குக் காலில் பலத்தைக் கொடுத்துள்ளார். உதை வாங்கியவர்களைக் கேட்டுப் பாருங்கள். தெரியும்!"

அதனால் தான் கடவுளுக்கு விருப்பு, வெறுப்பு இல்லாதவர் (Likes and dislikes) என்று பெயர். வள்ளுவரும் அதைத்தான் சொல்கிறார். "வேண்டுதல்
வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல!" என்று
அவர் கடவுளைச் சிறப்பித்துச் சொல்கின்றார்.

நமது பண்டைய ஜோதிட நூல்களான சரவளி, காலப்பிரசிகா, கேரள
மணிகண்ட ஜோதிடம், புலிப்பாணி ஜோதிடம், அகத்தியர் ஜோதிடம் ஆகியவையும் அதைத்தான் சொல்கின்றன.

ஜாதகத்தில் எல்லோருக்கும் அஷ்டவர்கத்தில் மொத்தப் பரல்கள் 337தான்.அது மாறாது. (It is constant to everyone) சந்தேகம் இருப்பவர்கள் கணினியில் தங்கள் ஜாதகத்தை அடித்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்

ஜோதிடத்தின் மீதே சந்தேகம் இருப்பவர்கள் திரு பெங்களுர் வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய (How the planets are influencing human life) நூலைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

ஆகவே ஆணும் பெண்ணும் சமம்தான். ஆனால் நம் இலக்கியங்கள் பெண்ணை மிகவும் உயர்வாகச் சொல்கின்றன.

"மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!" என்று பாரதி சொன்னார்.

God could not be every where, so he made mothers என்று ஒரு படித்த ஞானியும் சொன்னார்

கவியரசர் கண்ணதாசன் அவர்களும் பெண்மையின் உயர்வைப் பல பாடல்களில் சிறப்பாக எழுதியுள்ளார். அவைகள் இந்த தொடரில் பிறகு வரும்.

"பூஜைக்கு வந்த மலரே வா!
பூமிக்கு வந்த நிலவே வா"

என்று பெண்ணை மலராகவும், நிலவாகவும் அவரால்தான் நினைக்க முடிந்தது.

நிற்க, நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகிறேன்.

கவிஞர் தான் வாழ்ந்த காலத்திலிருந்த சூழ்நிலையையும், படக் காட்சியின் சூழ்நிலையையும் மனதில் வைத்து அந்தப் பாடலை எழுதினார்.

அப்போது பல பெண்கள் அதிகம் படித்திராமலும், வேலைக்குச் செல்லாமலும் இருந்த காலம். தன் காலிலேயே பெண் தானாக நிற்க முடியாத நிலைமை.

அத்தகைய நிலையில் உள்ள பெண் வழி தவறிப்போனால் - போகின்ற காதல்பாதை சரியாக அமையாவிட்டால் அவளை அழைத்துச் சென்றவனை விட அவளுக்குத்தான் துக்கம் அதிகம் ஏற்படும்.

அவள்தான் திசையறியாமல் திகைத்துக் கலங்கி நிற்க நேரிடும். ஆணிற்கு அன்றைய நாளில் பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்பட வாய்ப்பில்லாத நிலமை. துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு போய் விடுவான்

அந்த நியதியைப் பெண் கடைப்பிடித்தல் நலமானது என்பதால்தான் கவியரசர், நாட்டோரைச் சாட்சி வைத்து வந்து விடவா? என்று எழுதினார்.

சகோதரிக்கு விளக்கம் போதுமென்று எண்ணுகிறேன்.

இதேபோல கவியரர் எழுதிய வேறு ஒரு பாடலுக்கு ஆண்கள் பலர் சேர்ந்து, அவரை மொய்த்துக் கொண்டு கேள்விகள் கேட்ட சம்பவம் ஒன்றும் உண்டு.

பாட்டை பாருங்கள்:

“நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனை இல்லை ..
சிந்தனை இல்லை

காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட
நாள் முதலாய் பெண்
உறங்கவில்லை ..
பெண் உறங்கவில்லை

உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது

இந்தக் காவல் தாண்டி
ஆவல் உன்னைத்
தேடி ஓடுது ..
தேடி ஓடுது

பொன் விலங்கை வேண்டுமென்றே
பூட்டிக் கொண்டேனே
உன்னைப் புரிந்தும் கூட சிறையில்
வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை
எண்ணுகின்றேனே
இன்று நாளை என்று நாளை
எண்ணுகின்றேனே

நான் என்றும் உந்தன் எல்லையிலே
வந்திடுவேனே ..
வந்திடுவேனே
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனை இல்லை.
சிந்தனை இல்லை!

(திரைப் படம்: தெய்வத்தின் தெய்வம்
பாடியவர்: பி.சுசீலா, இசை: ஜி.ராமனாதன்
பாடலாக்கம்: கண்ணதாசன்)

இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு பல இளைஞர்கள் கூடிக் கவியரசர் அவர்களைப் பிடித்துக் கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்

அவர்கள் என்ன கேட்டார்கள்? அதற்குக் கவியரசர் என்ன பதில் சொன்னார் - என்பதை அடுத்துக் கொடுத்துள்ளேன்!

பாடலின் முதல் பன்னிரெண்டு வரிகளைப் பாருங்கள்.

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனை இல்லை ..
சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட
நாள் முதலாய் பெண்
உறங்கவில்லை ..
பெண் உறங்கவில்லை.

இளைஞர்கள் கேட்டது இதுதான்:

உணர்வுகள் என்பது ஆண், பெண் என்று இருபாலருக்கும் பொதுவானதுதானே! அப்படியிருக்கையில்,உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை" என்று நீங்கள் பெண்ணை மட்டும் எப்படிச் சிறப்பித்துக் கூறலாம்? அதே காதல் உணர்வினால் அவளுடைய காதலனும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டானா - சொல்லுங்கள்?"

இவள் உறங்காதது போல அவனும் உறங்கியிருக்க மாட்டானில்லையா? அப்படியிருக்கும்போது பெண் உறங்கவில்லை என்று பெண்ணை மட்டும் ஏன் உயர்த்தி எழுதினீர்கள்? காதல் உணர்வில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுத் தூக்கமின்றித் தவிப்பவன் ஆண்தான் - அது உங்களுக்குத் தெரியாதா?"" என்று கேட்டுத் துளைத்து எடுத்து விட்டார்கள்.

அவர் நடத்திக் கொண்டிருந்த தென்றல் என்ற பத்திரிக்கை மூலமாகத்தான்
இந்தக் கேள்வியைப் பல ஆண் வாசகர்கள் கேட்டு எழுதியிருந்தார்கள்.
கடிதங்கள் நூற்றுக் கணக்கில் வந்து குவிந்து விட்டது.

நம் கவியரசர் அவர்கள் நல்லதாக ஒரு பதிலைக் கொடுத்து அனைவரையும் சமாதானமடையச் செய்தார்.

அதற்கு முன் வெளிவந்திருந்த வானம்பாடி என்ற படத்தில் தான் எழுதியிருந்த பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பதிலை எழுதியிருந்தார்.

"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!"

என்று துவங்கும் பாடல் அது. அந்தப் பாட்டின் இடையில்

"அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!

படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்தி வைப்பான்!"

என்ற வரிகள் வரும். அதைச் சுட்டிக் காட்டிக் கவியரசர் இப்படி எழுதினார்.

"பெண் குலத்தைப் படைப்பதை நிறுத்திவை" என்று ஒரு காதலன் துக்க உணர்வு மேலோங்கிப் பாடுவதாக எழுதியிருந்தேன்.அவன் ஒருவனுடைய உணர்வுகளுக்காக மொத்த பெண் குலமும் என்ன செய்யும்? கடவுளென்ன
அவன் வைத்த ஆளா? இவனுக்காக அவர் எப்படி பெண்களைப் படைப்பதை நிறுத்துவார்?.

இதையே ஒரு பெண் குரல் கொடுத்து ஆண்களைப் படைப்பதை நிறுத்து கடவுளே என்றால் என்ன ஆகும்?

ஆனாலும் அவன் பாட்டில் தவறு இல்லை தன் உணர்வுகளின் தாக்கத்தினால் அவன் அப்படிப் பாடுகின்றான். அவனுடைய சூழ்நிலை அப்படி.

அதே போன்ற சூழ்நிலையில் தான் அந்தப் பெண்ணும், தன் உணர்வுகள் மேலோங்கப் பெண் உறங்கவில்லை என்கிறாள்!

அதைத் தவறென்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், இதுவும் தவறுதான். அது தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை. என்ன சொல்கிறீர்கள்?" என்று
வந்த எதிர்ப்பிற்கு சரியான கேள்வி ஒன்றைக் கேட்டு அவர்களையே உணரவைத்தார்.

மேலும் அதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென்றல் இதழில் இப்படி எழுதினார்.

"இந்த வானம்பாடிப் படப்பாடல் வந்த போது ஒரு பெண் கூட என்னைக் கேள்வி கேட்கவில்லை. நீங்கள் எத்தனையோ பேர் கேட்டு எழுத நான் பதில் சொன்னேன்.
உங்களுக்கு மேலும் ஒன்று சொல்வேன். உணர்வுகள் பொதுவானவை. உணர்வுகளுக்கு ஆண், பெண் என்கின்ற பேதம் கிடையாது! திரைப்படப் பாடல்கள் எல்லாம் படத்தின் சூழ்நிலைக்கு, நாயகன், நாயகியின் மன உணர்வுகளுக்கு எழுதப்படுபவை.அவைகளை நீங்கள் அந்தப் பாத்திரங்களின் தன்மையோடு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்"

என்ன நிதர்சனமான உண்மை!
----------------------------------------------------------------------------
இந்தப் பாடல் ஒலிப்பதிவின் போது ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்தது.

பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு ஒலிப்பதிவு அரங்கவாயிலில் கவியரசர் தன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பாடலைப் பாடுவதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த பாடகர். திரு.டி.எம்.எஸ். பாட்டில் உள்ள ஒரு சொல்லைக் கண்டு திடுக்கிட்டு, இசையமைப்பாளரிடம் போய் அதைக் காட்டி "இந்தப் பாட்டை நான் பாட விரும்பவில்லை என்றார்!"

கவியரசர் முதலில் எழுதியிருந்த வரிகள் இதுதான்.

"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் சாக வேண்டும்....."

அதிர்ச்சியடந்த இசையமைப்பாளர், அதை வாங்கிப் பார்த்துவிட்டு "ஏன் என்றார்?"

திரு.டி.எம்.எஸ் சொன்னார். "என்னைப் பாட வைப்பதே இறைவன்தான் என்று நம்பிக் கொண்டிருப்பவன் நான். எனவே அவரைச் சாகச் சொல்லி நான் எப்படிப் பாடுவது? "

விஷயம் கவியரசரின் காதுகளுக்கு உடனே எட்டியது.திரு.டி.எம்.எஸ். அவர்களின் கருத்து சரிதான் என்றுணர்ந்த கவியரசர், எந்தவித தன்முனைப்புமில்லாமல் அந்த வார்த்தையை மாற்றி எழுதிக் கொடுத்தார்.

சாக என்றிருந்த வார்த்தை வாட என்று மாற்றப்பட்டது!

பாடலின் வரி இப்படி மாறியது

காதலித்து வேதனையில் சாக வேண்டும்!
என்றிருந்த வரி
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
என்று மாறியது.

(தொடரும்)
-----------------------------------------------------
முழுப்பாடலையும் கீழே கொடுத்துள்ளேன் இதில் உங்களுக்குப் பிடித்த இரண்டு வரிகளை எழுதுங்கள்

"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!

(கடவுள்)

எத்தனை பெண் படைத்தான்
எல்லோர்க்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையெனும் விஷம் கொடுத்தான் - அதை

ஊரெங்கும் தூவி விட்டான்
உள்ளத்திலே பூச விட்டான்
ஊஞ்சலை ஆட விட்டு
உயரத்திலே தங்கி விட்டான்....

அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!

படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்தி வைப்பான்!

(கடவுள்)

படம் வானம்பாடி (வருடம் 1962)
______________________________________________________________


வாழ்க வளமுடன்!

25.3.10

கண்ணதாசனின் சமூகப்பார்வை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணதாசனின் சமூகப்பார்வை!

3. சமூகப் பார்வை!

எழுதும் திறன் என்பது வரம்! எழுத்தில், கவிதைகள் எழுதுவது என்பது கேட்டுப் பெற்ற அல்லது பயிற்சியால் பெற்ற வரம் அல்ல! கொடுக்கப்பட்ட வரம் அது!

ஆமாம் இறைவனால் கொடுக்கப்பெற்ற வரம் அது

அந்த வரத்தைத் தவறில்லாமல் பயன்படுத்த வேண்டுமல்லவா?

கவியரசர் தவறில்லாமல் பயன்படுத்தினார். எப்படிப் பயன்படுத்தினார் என்பதைச் சொல்கிறேன்

"உள்ளத்து உள்ளது கவிதை - நெஞ்சில்
உருவெடுப்பது கவிதை!
தெள்ளத் தெளிந்த மொழியால் - நன்கு
தெரிந்துரைப்பது கவிதை!"

என்று என் நண்பர் ஒருவர், கவிதைக்கு விளக்கம் சொல்வார்

அவரும் ஒரு சிறந்த கவிஞர்தான். அதுவும் கவியரசரிடம் சான்றிதழ் பெற்ற கவிஞர். கவியரசருடன் நெருங்கிப் பழகிய கவிஞர்.

அவரைப் பற்றிப் பிறகு பேசுவோம். இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

கவிதை உள்ளத்தின் வெளிப்பாடு. நல்ல கவிதை என்றால் அது நல்ல உள்ளத்திலிருந்து வெளிப்பட்டதாக இருக்கும்!

முதலில் நல்ல உள்ளம் வேண்டும்.

நல்லது, கெட்டது, நியாயம், அநியாயம், வேண்டியது, வேண்டாதது என்று பலவற்றையும் பகுத்து அறியக்கூடிய உள்ளம்தான் நல்ல உள்ளம்.

நல்ல உள்ளத்திற்கு மனித நேயமும், சமூகப் பார்வையும் அத்தியாசமானவை

தொலைதூரப் பேருந்திற்கு இரண்டு வாகன ஓட்டிகள் இருந்து மாற்றி மாற்றி அந்தப் பேருந்தை இயக்குவதுபோல, ஒரு நல்ல உள்ளத்தை இயக்குவது
இவை இரண்டும்தான்.

சமூகம் என்பது பலதரப்பட்ட மக்களைக் கொண்ட அமைப்பு அல்லது அங்கம்.

சமூகப் பார்வை என்பது, சமூகத்திற்கு அது கடைப்பிடிக்க வேண்டிய செய்திகளைச் சொல்வது. நல்ல செய்திகளை மட்டுமே சொல்வது.
சமூகத்திற்கு ஒவ்வாததைச் சொல்வது அல்ல! சொல்லவும் கூடாது!

ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதி, இசையமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.

தாயாரிப்பாளர், இயக்குனர், கதை-வசனம் எழுதுபவர்,இசையமைப்பாளர், இவர்களோடு நமது கவியரசரும் அமர்ந்து, பணியைத் துவக்கினார்கள். இயக்குனர், பாடல் இடம் பெறும் சூழ்நிலையைச் சொன்னார்.

படத்தின் நாயகி தன் மனதைக் கவர்ந்துவிட்ட நாயகனை நினைத்துத் தன் கனவில் பாடுவது போன்ற காட்சி.

பத்தே நிமிடத்தில் கவிஞர், அந்தக் காட்சியைத் தன் மனதில் வாங்கிக் கொண்டு பாடலை எழுதிக் கொடுத்து விட்டார்.

பாடல் இப்படித் துவங்கும்:

படம் - பாத காணிக்கை (வருடம்1962)

"அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
எந்தன் மனதைத் தந்து செல்லவா
உந்தன் மனதைக் கொண்டு செல்லவா"

படத்தில் நாயகன், நாயகியின் தாய்மாமன் மகன். மாமாவை அம்மான் என்பார்கள். மாமாவின் மனைவியை அத்தை என்பார்கள். அம்மாவின் தம்பி - அம்மா + ன் = அம்மான். அதுதான் தூய தமிழ்ச் சொல். எங்கள் பகுதிகளில் அம்மாவின் சகோதரர்களை அப்படித்தான் அழைப்போம். அம்மாவிற்கு ஒரு தம்பிதான் என்றால் அம்மான். ஒருவர் அம்மாவின் மூத்தசகோதரர், மற்றொருவர் இளைய சகோதரர் என்றால், பெரியவர் பெரியஅம்மான், சின்னவர் சின்னஅம்மான்.

அந்த உறவு முறைகளை கொஞ்சம் மறந்து விட்டுப் பாட்டிற்கு வருவோம்.

காதலி எதைத் தருவதாகச் சொல்கிறாள். தன் மனதைத் தருவதாகச் சொல்கிறாள். எதை எடுத்துக் கொண்டு போக விரும்புவதாகச் சொல்கிறாள். நாயகனின் மனதை!

அடடா, இதைவிடப் பெரியதாக ஒரு ஆடவனுக்கு என்ன கிடைத்து விட முடியும்? அதுவும் ஒரு பெண்ணே சொல்லும் போது.!

மீண்டும் அந்த வரிகளைப் பாருங்கள்:

"எந்தன் மனதைத் தந்து செல்லவா
உந்தன் மனதைக் கொண்டு செல்லவா"

இங்கேதான் கவியரசரின் மேன்மை புலப்படும். அதோடு என்ன எளிமையான சொல் விளையட்டுப் பாருங்கள்

இப்போது அந்தப் பாடலில் உள்ள சமூக நோக்கிற்கு வருகிறேன்

"மல்லிகைமலர் சூடிக் காத்து நிற்கவா
மாலைஇளம் தென்றல்தனைத் தூது விடவா
நல்லதோர் நாள்பார்த்துச் சேதி சொல்லவா
நாட்டோரைச் சாட்சிவைத்து வந்து விடவா?"

அவள் மல்லிகை மலர்சூடி அவனுக்காக் காத்து நிற்கட்டும் அல்லது அவனை வரச் சொல்லி தென்றலைத் தூதாக அனுப்பட்டும். ஆனால் அவன் கரம் பிடித்து இல்வாழ்க்கைக்குப் போவதென்றால் நான்கு பேர்களைச் சாட்சி வைத்து, அதாவது அவனை முறைப்படி திருமணம் செய்து கொண்டுதான் போக வேண்டும். இதுதான் பாட்டிலுள்ள செய்தி!

இரவோடு இரவாக ஓடிப்போய் விடக்கூடாது. இது எல்லாப் பெண்களுக்குமே உள்ள நியதி.

காதல் திருமணமாக இருந்தால்கூட, நான்கு நண்பர்களை சாட்சியாக வைத்துக் கொண்டுதான், காதல் திருமணத்திற்கென்று உள்ள முறைப்படி திருமணம்
செய்து கொண்டுதான் பொகவேண்டும்!

திருட்டுத்தாலி என்பது கூடவே கூடாது!

கவியரசர் மறைந்து 27 வருடங்கள் ஆகிவிட்டன. அவருக்குப் பிறகு திரைக்கு வந்துள்ள இன்றைய கவிஞர்கள் எப்படிப் பாட்டெழுதுகிறார்கள்.?

இப்போது வரும் பாடல்களில் பல சமுதாயச் சீரழிவிற்கு வழி வகுப்பதாக உள்ளது. சமுதாய அக்கறையென்றால் சிலர் கிலோ என்ன விலை என்பார்கள்.

அப்படி மனதை அதிர வைக்கும் பல பாடல்களை என்னால் சுட்டிக் காட்ட முடியும். இருந்தாலும் பதிவின் நீளம் கருதி (உங்களின், நேரம் மற்றும்
பொறுமை கருதி) மாதிரிக்கு இரண்டு பாடல்களை மட்டும் கோடிட்டுக்
காட்டுகிறேன்.

பாட்டைப் பாருங்கள்:

"கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா - இல்லை
ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலமா?
தாலியைத்தான் கட்டிக்கிட்டுப் பெத்துக்கலாமா
பெத்துக்கிட்டுத் தாலியைத்தான் கட்டிக்கலாமா?"

எப்படி இருக்கிறது பாட்டு?

இந்தப் பாடலை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, அதிகமாக மனனம்செய்து பாடியது சிறுவர்களும், சிறுமியர்களும் என்பது வருந்தக்கூடிய விஷயம்.

சரி, இன்னொரு பாடலையும் தருகிறேன்.

"சிரிச்சுவந்தான் சிரிச்சுவந்தான் சீனாதானா டோய்
சிறுக்கிமகள் சிறுக்கிமகள் தானாப்போனா டோய்!"

ஆகா இவற்றை எழுதியவர்கள் பல்லாண்டு வாழ்ந்து, தமிழ் சமூகத்தை மேம்படுத்தட்டும்!!!

வேறு என்ன சொல்ல முடியும் என்னால்?

(தொடரும்)



வாழ்க வளமுடன்!

24.3.10

ஒருவர் எப்படி மேதையாக முடியும்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2. கற்றுணர்தல்
------------------------------
ஒருவர் எப்படி மேதையாக முடியும்?

அனுபவத்தால் மட்டுமா? அல்ல!

யாருக்குதான் அனுபவம் இல்லை! கைவண்டி இழுப்பவருக்கும், கழனியில் விவசாயம் செய்பவருக்கும், கணினிப் பொறியாளருக்கும், உத்தியோகத்தில் முப்பது, நாற்பது வருடங்கள் பணிபுரிந்த வருக்கும், இப்படி இன்னபிற துறைகளில் இருப்பவர்களுக்கும் இல்லாத அனுபவங்களா?

பல நூல்களைக் கற்றுணர்வதாலே மட்டும்தான் ஒருவர் மேதையாக முடியும்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் நிறைய நூல்களைப் படித்தவர். படித்துணர்ந்தவர். உணர்ந்ததைத் தன் உள்ளத்தில் சேமித்து வைத்தவர்.

கம்பராமயணத்திலிருந்து, காரல்மார்க்ஸ் வரை, சங்க இலக்கியங்களிருந்து சமகால இலக்கியங்கள் வரை கிடைத்த அனைத்தையும் படித்தார்.

அவர் மிகவும் விரும்பிப்படித்த புத்தகங்களில் ஒன்று பட்டினத்தார் பாடல்கள். அதன் தாக்கம் அவரின் தத்துவப் பாடல்களில் வெளிப்படும்.

தாக்கம் இன்றி, எவரும் எதையும் சிறப்பாக எழுத முடியாது.!

அந்த தாக்கத்தை உந்துசக்தி எனலாம்.

கார் பெட்ரோலில்தான் ஓடும் என்றாலும், அந்தக் காரின் எஞ்சினில் உள்ள பிஸ்டனின் இயக்கம்தான் உந்துசக்தி என்று வைத்துக் கொள்ளலாம்.

பட்டினத்தார் எழுதிய நூற்றுக் கணக்கான பாடல்களில்
வாழ்க்கையின் முடிவைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டும் பாடல் ஒன்று உள்ளது.

கவியரசரின் மனதில் உட்கார்ந்து கொண்டு விட்ட அந்தப் பாடல், அவர் திரைப்படம் ஒன்றிற்கு எழுதிய பாடலில் வெளிப்பட்டு பலருடைய மனதையும் புரட்டிப் போட்டது.

முதலில் பட்டினத்தாரின் அந்த நான்கு வரிப் பாடலைச் சொல்கிறேன்.பிறகு, கவியரசர் அதே தாக்கத்துடன் எழுதிய பாட்டிற்கு வருகிறேன்.

"அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே,
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே."

சொத்து, சுகம், வீடு, மனைவி, பெற்ற பிள்ளை, உறவினர்கள், நண்பர்கள் என்று நாம் தேடி வைத்திருக்கும் அனைத்தும் ஒரு நாள் நம்மை விட்டு நீங்கி விடும்.

எப்போது? நம் உயிர் நம் உடலை விட்டு நீங்கும் போது!

சரி ! யார், யார் நம் இறுதிவரை வருவார்கள்? அதுவும் எதுவரை வருவார்கள்?

அதைத்தான் பட்டனத்தடிகள் அந்தப்பாட்டில் சிறப்பாகச் சொல்லியிருப்பார்.
மனிதன் வசிப்பதற்குப் பெயரும் வீடு தான். அவன் ஆத்மா அல்லது உயிர் வசிக்கும் உடம்பிற்குப் பெயரும் வீடுதான்.

என்ன சிறப்புப் பாருங்கள்!

அத்தம் என்றால் செல்வமென்று பொருள் படும் (Wealth) அகம் என்ற சொல்லிற்கு ஆத்மா (Soul) என்ற பொருளும் உண்டு, வீடு (House) என்ற பொருளும் உண்டு.

மெத்த என்கின்ற சொல்லிற்கு அதிகமான (Much) என்ற பொருள் வரும்.

உறவும், செல்வமும் வீடு வரைதான்.

நிலை குலைந்து, உணர்வுகளை அடக்க முடியாமல் அதிகமாக அழுகின்ற மனைவி தெருவரை வருவாள்.

இறுதிப் பயணத்தில் துக்கத்தை அடக்க முடியாமல் உடன் வரும் பிள்ளைகள் சுடுகாடு வரை வருவார்கள்.

அதற்குப் பிறகு என்ன?

உன் ஆத்மாவின் பயணத்திற்கு யார் துணை?

நீ செய்த புண்ணியங்களும், பாவங்களும் தான் - அவை இரண்டு மட்டும் தான் துணை!

அந்தப் பாடல் வாழ்வின் முடிவை இப்படி அழுத்தமாகச் சொல்லும்!

இப்போது உங்களுக்குப் பிடிபட்டிருக்கும் நான் எதைச் சொல்ல வருகிறேன் என்று!

ஆமாம் கவியரசர் எழுதி மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றான "வீடு வரை உறவு" என்ற பாடலைத்தான் சொல்ல வருகிறேன்.

தமிழர்களை மிகவும் சிந்திக்க வைத்த பாடல் அது. முழுப் பாடலையும் கீழே கொடுத்துள்ளேன்.

நான் சொல்ல வந்தது மற்றும் ஒரு விஷயம். அந்தப் பாடல் ஒலிப் பதிவான போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று உள்ளது. அதை முதலில் சொல்கிறேன். பிறகு முழுப் பாடல்.

அந்தப் பாடலின் இசை அமைப்பாளர்களான திரு.விஸ்வநாதன் அவர்கள், திரு.ராமமூர்த்தி அவர்களுடன் ஆலோசனையில் இருந்தார்.

பாட்டை எழுதிக் கொடுத்த கவியரசர் பாடல் எப்படி அமைகிறது என்பதைப் பார்த்து விட்டுப்போகலாம் என்று அமர்ந்திருந்தார்.

பாடலைப் பாடுவதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த
பாடகர் திரு..டி.எம்.எஸ் அவர்கள், திடீரென கவியரசர் அருகே வந்து இப்படிக் கேட்டார்.

"அப்பச்சி, இந்தப் பாடலின் முதல் நான்கு வரிகளை நான் முன்பே கேட்ட மாதிரி உள்ளது. அது என்ன பாடல் என்பதைத் தயவு செய்து சொல்லுங்கள் "

கவியரசர் பதிலுரைத்தார்."அது பட்டினத்தார் பாடல் வரிகளய்யா. எளிமைப் படுத்தி எழுதியிருக்கிறேன்"
.
அந்த மூலப்பாட்டைச் சொல்லுங்கள்"

கவியரசர் சொன்னார்.

உடனே திரு..டி.எம்.எஸ் அவர்கள்,:"நன்றாக மாற்றி அமைத்துள்ளீர்கள். ஆனால் கடைசி வரியை மட்டும் ஏன் விட்டு வீட்டீர்கள்?"

அதாவது மனிதனுடன் வரப்போவது, புண்ணிய, பாவம் என்பதைச் சொல்லாமல், கடைசி வரை யாரோ? என்று ஏன் எழுதினீர்கள் என்று கேட்டார்.
அதற்குக் கவியரசர் அதிரடியாக இப்படிச் சொன்னார்.

"பாவம், புண்ணியம்னா பாமரனுக்குத் தெரியாதைய்யா. படிச்சவன்லேயும் சில பேருக்குத் தெரியாதைய்யா. அதனாலதான் யரோன்னு போட்டேன். தெரிந்து கொள்ள முயற்சிக்கிறவன் தெரிந்து கொள்ளட்டும். தெரியாதவனுக்கு அது தெரியாமலேயே போகட்டும்!"

(தொடரும்)
---------------------------------------------
பாத காணிக்கை (வருடம் 1962 ) என்ற படத்தில் வரும் அந்தப் பாடலின் வரிகள் முழுவதையும் கீழே கொடுத்துள்ளேன்.

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)
தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)
சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)
---------------------------------------------------
The wealth, kith & kin, till the house
The wife, till the street,
The son, up to the cemetery,
Who will come after that?




23.3.10

எண்ணையில்லாமல் ஓடும் கார்!

----------------------------------------------------------------
எண்ணையில்லாமல் ஓடும் கார்!

கவிஞர், பாடலாசிரியர், கட்டுரையாளர், கதாசிரியர் என்று எழுத்தின் எந்தப் பகுதியைப் பிரித்துப் பார்த்தாலும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்தான் என் முன்வந்து நிற்பார்!

அவரிடத்தில் எனக்கு அப்படியொரு ஈடுபாடு!

அவர் காலத்தில் நானும் வாழ்ந்தேன். இரண்டு முறைகள் அவரைச் சந்தித்துப்
பேசினேன். அவர் எழுத்துக்களைச் சொல்லிற்குச் சொல் ரசித்தேன் என்கின்ற மனத்திருப்தி எனக்கு இருக்கிறது. அதுவே எனக்குப் போதும்.

எல்லோருமே கவியரசர் ஆகிவிட முடியாது. அவரைப் போல எழுத முடியாது.
அதற்குக் கடவுள் அருள் வேண்டும். அந்த அருள் அவரிடம் நிறையவே இருந்தது.

இல்லையென்றால் வெறும் எட்டாம் வகுப்புவரையுமே படித்த ஒருவரால்
எப்படி இத்தனை சாதனைகள் புரிந்திருக்க முடியும்? இத்தனை லட்சம் மக்கள் மனதைக் கவர்ந்திருக்க முடியும்?

நமக்கெல்லாம் அவர் எழுதியதைப் புரிந்து கொள்ளும் அறிவையும், ரசிக்கும்
தன்மையும் கொடுத்துள்ளான் இறைவன். என்னைப் பொறுத்தவரை அதுவே எனக்கு போதும்!

பாமரனுக்கும் புரியும் வண்ணம், எளிமையான சொற்களால், தெளிவான
கருத்துக்களால் சுருங்கச் சொல்லி படித்தவுடன் அல்லது கேட்டவுடன் மனதில் பதியும் வண்ணம் இருக்கும் அவருடைய எழுத்துக்கள். அதனால்தான் அவர் வெற்றி கண்டார்!

வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து எழுதினார் அவர்.
உள்ளதை உள்ளபடியே எழுதினார்
.
அதனால்தான் அவர் இன்றளவும் எராளமான தமிழ் மக்களின் மனதில்
சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றார்.

அவருக்கு ஒன்றும் அறிமுகம் தேவையில்லை. தமிழ் கூறும் நல்லுலகத்தில்
அவரை அறியாதவன் ஒருவன் இருந்தால் அவன் தமிழனே அல்ல!

எதையும் நயம் படச் சொல்வார். மேடைகளிலும் அப்படித்தான் பேசுவார்.
அவர் தென்றல் என்ற இலக்கியப் பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்த போது, துணை ஆசிரியர் ஒருவர் இரண்டு சினிமா ஸ்டில்ஸ்களை காண்பித்து, சினிமா பகுதியில் பிரசுரிக்க வந்துள்ளது என்றார்.

படத்தை வாங்கிப் பார்த்தார் கவியரசர்.

ஒரு படம் நடிகை ராஜசுலோசனா, கதாநாயகனுக்குக் காப்பிக் கோப்பையைக் கொடுப்பது போல இருந்தது. அந்த சமயம் ராஜசுலோச்சனா அவர்கள் திரைக்கு வந்த புதிது. மிகவும் அழகான தோற்றத்துடன் இருப்பார்.

படத்தைப் பார்த்த கவியரசர் ஒரே நிமிடத்திற்குள், படத்தின் பின்புறம் இரண்டு
வரிகளை எழுதியதோடு, அந்த உதவி ஆசிரியரிடம் அதைக் கொடுத்து விட்டுச் சொன்னார். "புகைப்படத்திற்குக் கீழே இந்த இரண்டு வரிகள் வரவேண்டும் - படத்துடன் சேர்த்துப் போட்டு விடுங்கள்"

அந்த இரண்டு வரிகள் என்ன தெரியுமா?

"காப்பிக்கு உப்பிட்டுக் காரிகைதான் தந்தாலும்
சாப்பிட்ட பின்தான் சர்க்கரையின் நினைவு வரும்!"

காப்பிக்கு அந்தப் பெண் தவறுதலாக உப்புப் போட்டுக் கொடுத்தால் கூட,
கொடுத்த அந்த சிவந்த கரங்களையும், மலர்ந்த அவளுடைய முகத்தையும், பார்த்துக்கொண்டே வாங்கியவன் அந்தக் காப்பியைக் குடித்து விடுவானேயன்றி சர்க்கரையின் ஞாபகம் அப்போது அவனுக்கு எப்படி வரும்? .வந்தாலும் குடித்து முடித்தபின்தானே வரும் என்று பொருள் படும்படி எழுதியிருந்தார் கவியரசர்.

என்ன அசத்தலான வரிகள் பாருங்கள்!

இரண்டவது படம் நடிகை பத்மினியின் படம். அவர் கார் ஒன்றில்
ஸ்டீரிங்கைப் பிடித்தபடி முன் சீட்டில் அமர்ந்திருப்பது போன்ற படம்.அதற்கும்
கவியரசர் இரண்டு வரிகள் எழுதிக் கொடுத்தார்.

அந்த வரிகள் இதுதான்!

"வண்ண மயில் காரோட்ட வருகின்றார் என்றால்
எண்ணை யில்லாமல் ஓடாதா இந்தக்கார் ?

கவிதை அவர் வாழ்க்கையோடு இப்படிப் பின்னிப் பிணைந்திருந்தது.

கவியரசரின் மனைவி நன்றாகச் சமையல் செய்வார்கள். எல்லாம் மிகவும்
பக்குவமாகவும், ருசியோடும் இருக்கும்.அருகிருந்து பறிமாறுவார்கள்.

தன் மனைவியின் சமையலைப் பற்றித்தன் நண்பர்களிடம் கவியரசர் அடிக்கடி
இப்படிக் கூறுவார்.


"பொன்னம்மாள் சமையல் செய்தால்
பூமியெங்கும் வாசம்வரும்
சர்க்கரைப்பொங்கல் வைத்தால்

சாமிக்கே ஆசைவரும்!"


என்ன ஒரு வெளிப்பாடு பாருங்கள்.

அந்த அம்மையார் கோவில்களில் பொங்கல் வைத்தால்,வைத்து
முடித்தவுடன் உள்ளிருக்கும் சாமியே எழுந்து வெளியே வந்து விடுவாராம், அந்தப் பொங்கலின் மணம் கண்டு!

ஒரு சமயம் அவர் மனைவியின் காதுகளுக்கு கேட்கும் திறன் குறைந்து விட்டது .
அந்த நாட்களில் பெரிய சிகிச்சைகள் இல்லாததால் அந்த அம்மையாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. அதேபோல அந்தக் குறைபாட்டினால் கவிஞருக்கு எந்தக் குறையும் வந்து விடாமலும், கவிஞர் மனம் மகிழும்படியாகவும் நன்றாகச் சேவகம் செய்தார்.

எங்கள் ஊர்ப்பக்கம் மேடைகளில் பேசும் போது, கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் தன் மனைவியைப் பற்றி இப்படித்தான் இரண்டே வரிகளில் குறிப்பிட்டுப் பேசுவார்.

"தன் செவிகள் பழுதானாலும்
என் கவிகள் பழுதாகாமல்

பார்த்துக் கொண்ட மகராசி!"

_________________________________________________
நான்கு பகுதிகள். அடுத்த பகுதி நாளை வரும்!
-----------------------------------------------------------------------
எனது கணினி வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. அதை, ஒரு நாள் போராட்டத்திற்குப் பின் சரி செய்தேன். word Pad ல் எழுதிய, எழுதி வைக்கப்பட்டிருந்த கோப்புக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன.
அவற்றைச் சரி செய்துகொண்டிருக்கிறேன். எல்லாம் என் மற்ற வேலைகளுக்கிடையே!
சரியாக இரண்டு நாட்கள் ஆகலாம். அதுவரை என் பதிவிற்கு கவியரசர் கண்ணதாசன் அவர்களைப் பற்றி எழுதி வைத்துள்ள பழைய ஆக்கங்கள் கைகொடுக்கும். அவைகள் வேறு prompt இருந்ததால் தப்பித்தன!
இவைகள் மீள் பதிவுகள்தான். இருந்தாலும் மீண்டும் படிப்பதற்குச் சுவையாக இருக்கும். படித்து மகிழுங்கள்!
-----------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

22.3.10

நகைச்சுவை: தாய்மொழி எப்படி வந்தது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: தாய்மொழி எப்படி வந்தது?

எச்சரிக்கை: நகைச்சுவைக்காகப் பதியப்பட்டுள்ள பதிவு!
உம்'மன்னா மூஞ்சிகள் பதிவை விட்டு விலகவும்.

நகைச்சுவை இல்லாத வாழ்க்கை, உப்பு இல்லாத சாப்பாட்டைப்போன்றது!
அதை உணருங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
நீதிபதி : நாற்காலியால் உன் கணவனை ஏன் தாக்கினாய்?

மனைவி : மேஜை தூக்கும்படியாக இல்லாததால்!
....................................................................................
2
'எனக்கு ஞாபக மறதி அதிகம் என்று டாக்டரிடம் சொன்னது தப்பாகப் போயிற்று"

"ஏன் என்ன செய்தார்?"

"மொத்த ஃபீஸையும் முன்னாடியே வாங்கிக்கொண்டுவிட்டார்!"
....................................................................................
3
"தொல்லையாக இருக்கிறது. தனக்கு என்ன வேண்டுமென்பது என் மனைவிக்குத் தெரிவதில்லை"

"நீங்கள் லக்கியானவர். என் துரதிர்ஷ்டம் என் மனைவிக்கு அது தெரியும்"
.....................................................................................
4
"பாத்திரங்களைக் கழுவதற்கு எதை உபயோகிக்கிறீர்கள்?"

"நானும் எதைஎதையோ உபயோகித்துப் பார்த்துவிட்டேன். எதுவுமே சரியில்லை, என் கணவரைத்தவிர!"
.........................................................................................
5.
வாத்தியார்: நாம் பேசும் மொழிக்குத் தாய்மொழி என்று எப்படிப் பெயர் வந்தது?

மாணவன்: வீட்டில் அப்பாக்கள் வாயைத் திறப்பதே இல்லை. அதனால்தான் வீட்டில் பேசும் மொழியைத் தாய்மொழி என்கிறோம்!
...............................................................................................
6.
"நான் டாக்டருக்குப் படிக்க விரும்புகிறேன்"

"அதற்குரிய தகுதி உனக்கு இருக்கிறது. உன் கையெழுத்து படிக்கும்படியாக இல்லை!"
.................................................................................................

==================================================
7.
தன் மனைவியைக் காணவில்லை என்று புகார் செய்வதற்காக வந்திருந்த ஆசாமியை உட்காரவைத்த காவல்துறைக் கண்காணிப்பாளர், அவனுடன் பேசத்துவங்கினார்:

"எத்தனை நாட்களாக உன் மனைவியைக் காணவில்லை"

"மூன்று நாட்களாக!"

"என்ன உயரம் இருப்பார்?"

"என்னைவிடக் குட்டையானவள்"

"என்ன நிறம் இருப்பார்?"

"என்னைவிடக் கறுப்பாக இருப்பாள்"

"என்ன உடை அணிந்திருந்தார்?"

"காணாமல் போன சமயத்தில் நான் வீட்டில் இல்லை. அதனால் தெரியவில்லை!"

"புகைப்படம் இருக்கிறதா?"

"பத்து வருடங்களுக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் நடைபெற்றபோது எடுத்த புகைப்படம் இருக்கிறது"

இந்த இடத்தில் கண்காணிப்பாளர் தயக்கத்துடன் கேட்டார். "உங்கள் மனைவிக்கு நெருக்கமானவர்கள், பழக்கமானவர்கள் யாரேனும் உண்டா?"

"எங்கள் வீட்டு நாயின்மேல் அவள் உயிரையே வைத்திருப்பாள். அவளுடன் சேர்த்து அதையும் காணவில்லை. அது ராஜபாளையம் கோம்பை நாய். நான்கடி உயரம் இருக்கும். காலைத் தூக்கி நம் தோளின்மீது வைத்தால் ஆறடி உயரம் இருக்கும். கோதுமை நிறத்தில் இருக்கும். ஆரோக்கியமான நாய். அதன் கண்கள் நீல நிறத்தில் ஜொலிக்கும். கழுத்தில் தங்க நிற பெல்ட் அணிந்திருக்கும். அதில் வெள்ளி நிற மணிகள் தொங்கும். நான்-வெஜ் உணவுகளை விரும்பிச் சாப்பிடும். குரைக்கவே குரைக்காது. நாங்கள் மூவரும் ஒன்றாகத்தான் ஜாக்கிங்
செல்லுவோம். ஒன்றாகத்தான் சாப்பிடுவோம்...." என்று சொல்லிக்கொண்டே வந்தவன், துக்கத்தை அடக்க முடியாமல் அழுகத்துவங்கி விட்டான்.

அவனை ஆறுதற்படுத்திய கண்காணிப்பாளர் மெல்லச் சொன்னார்:

"முதலில் நாயைத் தேடுவோம்!"
=======================================================

சாமிகளா, ஏழில் எது நன்றாக உள்ளது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

20.3.10

நமக்கு ஒரு கிளிக்கில் எல்லாம்! அவர்களுக்கு....?


..................................................................................................................................
நமக்கு ஒரு கிளிக்கில் எல்லாம்! அவர்களுக்கு....?

அவர்களுக்கு என்பது Broadband Serviceகாரர்களைக் குறிக்கும்

நமக்கு ஒரு க்ளிக்கில் எல்லாம் நடக்கவேண்டும். அடுத்ததைப் பற்றிய கவலை இல்லை. யோசிப்பதுமில்லை. இணைய இணைப்பில் தடங்கல் அல்லது சுணக்கம் ஏற்பட்டால் (மனதிற்குள்ளாவது) திட்ட ஆரம்பித்துவிடுவோம்.

என்னடா அகண்டவரிசை?
என்னடா ஆமை வேகம்? என்று கோபம் வேறு வரும்.


ஆனால் நமக்கு இணைப்புத் தருவதற்காக அவர்கள் பட்டபாடு அல்லது படும்பாடு என்னவென்று முழுமையாகத் தெரியுமா? அல்லது
என்றைக்காவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா?


நமக்கு இணைய இணைப்பு அல்லது இணையத் தொடர்பு கிடைப்பதன் பின்புலத்தை (ஒரு பகுதியைத்தான்) படமாகக் கொடுத்துள்ளேன்.
அவர்கள் படும்பாட்டைப் பாருங்கள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


1


2


3


4


5


6


7


8


9


10


11


12


13


14


15

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"வாத்தி (யார்) பாடம் எப்போது?"

"வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்களும் தொடர்ந்து பாடம்!
இன்றையப்பதிவு வார இறுதிப் பதிவு. Coding எழுதும் கண்மணிகளுக்கும்,
மற்ற வெலைகளில் இருக்கும் கண்மணிகளுக்கும், சனி, ஞாயிறு ஓய்வு
நாட்கள். அதனால் சனிக்கிழமைகளில் பாடம் நடத்துவதில்லை.
ஞாயிறு ஓய்வுதினம்! ஓக்கேயா?"

அன்புடன்
வாத்தியார்

.............................................................................................................................

வாழ்க வளமுடன்!

19.3.10

ஒரே மாதிரியான சாராம்சம் எதற்காக?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரே மாதிரியான சாராம்சம் எதற்காக?

எனக்கு வந்த மின்னஞ்சலைக் கீழே கொடுத்துள்ளேன். அதற்கான பதிலையும் அடுத்துக் கொடுத்துள்ளேன்.
------------------------------------------------------------------------------
from palani senthil
to classroom2007@gmail.com
date 17 March 2010 19:53
subject என் கருத்து
mailed-by gmail.com
Signed by gmail.com
வணக்கம்.
மன்னிக்கவும்.
தஙகளின் எல்லா செட்டி நாட்டு கதைகளிலும் பணக்கார செட்டியார் வருகிறார்.......
அவரின் பணக்கார வீடு,ஆடம்பரம் வருகிறது......
சொத்து பிரச்னை,பாக பிரிப்பு பிரச்னை வருகிற்து......
ஒரே மாதிரியான சாரம்சம்.
ஏன் மாற்ற கூடாது.
ஆனால் தஙகளின் நடை பாரட்டுக்குரியது.
மனதில் பட்டதை கூறி உள்ளேன்.
தவறாக கருதினால் மன்னிக்கவும்.
ந‌ன்றி.
ப.செந்தில்.
மதுரை
----------------------------------------------------------------------------------
எனது சிறுகதைகள்:
இதுவரை மொத்தம் 60 கதைகள் எழுதி வெளியாகியுள்ளன. சமூகத்தில் உள்ள பல அவலங்களை, பிரச்சினைகளை, கற்பனையில் ஓட்டி ஒரு தீர்வுடன் கதையாகச் சொல்லியுள்ளேன். பணக்காரர்கள் என்றில்லை. வாழ்க்கையின் எல்லா நிலை மக்களைப் பற்றியும் கதை எழுதியுள்ளேன். சுவைக்காக கதை நடந்த இடங்களைச் செட்டிநாட்டுப் பிண்ணனியில்,அந்தப் பகுதி மக்களின் சொல்வழக்கில் எழுதியுள்ளேன்.அன்பரின் குற்றச்சாட்டு தவறு என்று சுட்டிக்காட்ட கீழே உள்ள கதையைப் பதிவில் ஏற்றியுள்ளேன். இதைப் படித்து விட்டு அவர் தனது கருத்தை மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறேன்.
அன்புடன்
வாத்தியார்
=================================================
சிறுகதை:
தந்தி மீனி ஆச்சி
****************************************
தந்தி மீனி ஆச்சி வழக்கத்திற்கு மாறாக கலக்கத்துடன் காணப்பட்டார். என் தந்தையிடம் வந்ததும் வராததுமாகக் கடுகடுப்போடு சொல்லிக் கொண்டிருந்தார்.

“இராமசாமி அண்ணே, கேட்டீயளா இந்த அநியாயத்தை! இன்னிக்குச் சாயந்திரம் நடக்கப்போகும் மகாசபைக் கூட்டததில் அந்தக் கோடி வீட்டு ராமஞ்செட்டி தீர்மானம் கொண்டு வரப்போகிறாராம்.”

“என்ன தீர்மானம்? “ என் தந்தையார் நிதானமாகக் கேட்டார்.

“என்னை இந்த ஊரைவிட்டு இரண்டு வருஷமாவது தள்ளி வைக்க வேண்டுமாம்!”

“கவலைப்படாதே மீனா! நான் பார்த்துக் கொள்கிறேன். நீ யாரிடமும் ஒன்றும் பேசாதே. போய்ப் பேசாமல் வீட்டில்இரு.” என்று கண்டிப்புடனும், நம்பிக்கையுடனும் சொன்னவர், மீனி ஆச்சியை எங்கள் வளவில் உள்ள மற்றவர்கள் விசாரிக்கும் முன்பு அனுப்பி வைத்தார்.

அடுத்த வீடுதான் மீனி ஆச்சியின் வீடு. அவரும் உடனே போய் விட்டார்.

எங்கள் ஊரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாசபைக் கூட்டம் இன்று மாலை நகரச் சிவன் கோவிலி ல் நடக்க உள்ளது.

ராமஞ்செட்டியாரும் பேசப்போகின்றார், என் தந்தையாரும் பேசப் போகின்றார் என்றால் அது சுவாரசியமாக இருக்கும், நாமும் போக வேண்டும் என்று முடிவு செய்தேன்.

தந்தி மீனி ஆச்சி எங்கள் ஊரில் மிகவும் புகழ் பெற்றவர். அவரை ரேடியோ மீனி ஆச்சி என்பார்கள்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் மனோரமாவை நினைத்துக் கொள்ளுங்கள் - மீனி ஆச்சியும் அசப்பில் அப்படியேதான் இருப்பார். அதே மாதிரிதான் பேசுவார். செட்டிநாட்டுத்தொனி சிறப்பாக இருக்கும்.

1960ஆம் ஆண்டு பாகப்பிரிவினை படம் வந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த காலம்.

நான் அழகப்பாவில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது மீனி ஆச்சிக்கு வயது 45. ஆனாலும் முப்பது வயசுக்குள்ள கேலியும் கிண்டலும் அவரது பேச்சில் மிகுந்திருக்கும்.

“மீனி ஆச்சி ஏதாவது செய்தி உண்டா?” என்று வம்புக்கு இழுத்தால், உடனே பட்டென்று சொல்வார்.

“படிச்சுப் பாஸாகிற வேலையைப் பார் அப்பச்சி! நாட்டுச் செய்தியை எல்லாம் கேட்கிற வயசா உன் வயசு?”

ஒரு செய்தி மீனி ஆச்சிக்குத் தெரிந்தால் போதும் அன்று மாலைக்குள் ஊர் முழுக்கத் தெரிந்துவிடும். அதுவும் ‘யாரிடமும் சொல்லாதீர்கள்’ என்று சொல்லிவிட்டால் போதும். அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் அது ஊர் முழுக்கத் தெரிந்துவிடும்.

எங்கள் ஊரில் மொத்தம் எண்ணூறு புள்ளிகள். அத்தனை பேர்களைப் பற்றிய விபரங்களும் மீனி ஆச்சிக்கு அத்துபடி. அதுமட்டுமல்ல எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மற்ற நகரத்தார் ஊர்களிலும் மீனி ஆச்சியைத் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள்.

மீனி ஆச்சி செய்தி சேகரிக்கும் விதமே அலாதியானது. பெரும்பாலும் நகரச்சிவன்கோவில், ஊருணிக்கரை, திருமண, சாந்திக்கார வீடுகள் போன்ற இடங்கள்தான் அவருடைய செய்திக்களங்கள். மாமியாரைப் போகவிட்டு மருமகளை மடக்குவார். அப்பச்சியைப் போகவிட்டு மகனை மடக்குவார். அண்ணனைப் போகவிட்டுத் தம்பியை மடக்கிப் பேசுவார். எப்படியோ
அவருக்கு செய்திகள் கிடைத்துவிடும். சில இடங்களில் நேர்காணலும் செய்துவிடுவார்.

அவருக்குக் கல்யாணமாகி இரண்டாவது ஆண்டு அவருடைய கணவர் வெளியூர் போனவர் போனவர்தான். இன்றுவரை திரும்பவில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு பையன். அதைவிற்று, இதைவிற்று எப்படியோ அவனைப் பள்ளி இறுதி வகுப்புவரை படிக்க வைத்துவிட்டார். அவனுக்குச் சென்னையில் ஒரு பதிப்பகத்தில் வேலை. திருமணமாகிவிட்டது. கைக்கும்
வாய்க்குமான சம்பளம். வாழ்க்கைப் போராட்டம். அவன் ஊருக்கே வருவதில்லை.

காலையில் எழுந்து குளித்துவிட்டுச் சிவன் கொவிலில் போய் ஒரு மணி நேரம் பொழுதைப் போக்கிவிட்டு, அங்கேயே அருகில் இருக்கும் கூடைக்காரப் பெண்களிடம் இரண்டு கட்டுக் கீரையை வாங்கிக் கொண்டு நகர்வலம் கிளம்பி விடுவார்.

முதல் கீரைக்கட்டை ஒரு வீட்டில் கொடுப்பார். அங்கே சாப்பிடச் சொல்வார்கள் - காலைப்பலகாரம் முடிந்துவிடும். அடுத்த கீரைக்கட்டிற்கு மதியம் ஒரு வீட்டைப் பிடித்து விடுவார். இரவிற்குச் சிவன் கொவில் கட்டளைக்காரர்கள் புளியோதரை, சர்க்கரைச்சாதம் என்று கொடுத்து விடுவார்கள். சமையல் வேலையெல்லாம் அவருக்கு இல்லை.

தேன் குழல், மாவுருண்டை, சீப்புச்சீடை என்று வீடுகளில் பலகாரம் செய்யும் ஆச்சிமார்கள் ஆள் அனுப்பி மீனி ஆச்சியை உதவிக்குக் கூட்டிக் கொள்வார்கள். காரைக்குடிக்குச் சாமான்கள் வாங்கப்போகும் ஆச்சிமார்களும் இவரைத்தான் கூட்டிக் கொள்வார்கள். பத்து இருபது கொடுப்பார்கள். அதுதான் அவருடைய வருமானம்.

அவரால் பிரிந்த குடும்பங்களும் உண்டு. ஒன்று சேர்ந்த குடும்பங்களும் உண்டு. திருமணமாகிப்போன பெண்களும் உண்டு. மருமகள்களாக வந்த பெண்களும் உண்டு.

ஒரே ஒரு அசத்தலான விஷயம்-இவ்வளவு கஷ்டத்திலும் அவர் மிகவும் நேர்மையானவர். நாணயமானவர். காசு விஷயத்தில் ஒரு பத்து பைசாக்கூட அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படமாட்டார்.

****************************
நகரச்சிவன் கொவிலில் அலங்கார மண்டபம். மாலை மணி ஆறு. கூட்டம் தொடங்கியது. மொத்தம் முன்னூறு பேர் வந்திருந்தார்கள்.

காரியக்காரர் வரவேற்புரை ஆற்றி, நிதிக்கணக்கைச் சமர்ப்பித்தார். பிறகு ஆற்ற வேண்டிய பணிகளைப்பற்றி விவாதித்தார்கள்..முடிவு எடுத்தார்கள். தீர்மானங்களை எழுதிக்கொண்டார்கள்.

கடைசியாகக் காரியக்காரர் ’வேறு ஏதாவது உள்ளதா? ‘ என்று கேட்டதுதான் தாமதம், ராமஞ்செட்டியார் எழுந்து நின்று தீர்க்கமாகச் சொன்னார்.

“தந்தி மீனி ஆச்சியின் தொல்லை பெரிய தொல்லையாக உள்ளது. மகாசபை அதற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டும்!”

‘ஆமாம், ஆமாம்’ என்று நான்கைந்து குரல்கள் ஒன்று சேர்ந்து ஒலித்தன.

காரியக்காரர் கேட்டார், “நாம் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?”

ராமஞ்செட்டியார் சொன்னார்., “ஒரு மூன்று ஆண்டுகளாவது ஆச்சியை ஊரைவிட்டுத் தள்ளி வைக்க வேண்டும்!

“எல்லோரும் ஒரு மனதாக ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார் காரியக்காரர்.

உடனே என் தந்தையார் எழுந்து சொன்னார்.

“தள்ளிவைப்பது என்பது மிகவும் கடுமையான செயல். ஒழுக்கமில்லாமல் நெறிகெட்டுப் போயிருந்தால் மட்டுமே அப்படிச் செய்யலாம். ஆச்சி மேல் உள்ள குற்றம் என்ன யோசித்துப் பாருங்கள். அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர்
பேசிக்கொண்டு திரிவது குற்றம் என்றால் ஊரில் உள்ள நாம் அனைவரும் காலம் காலமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே - அது குற்றமில்லையா? அடுத்த வீட்டு விஷயங்களைக் கேட்பதில்லை, அவற்றில் நமக்கு ஆர்வமில்லை என்ற நிலை இருந்தால் அவர் எப்படிப் பேசுவார்? ஆகவே நாம் அவரிடம் சேதிகள் கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும். இரண்டாவதாக அவர் பேச்சுக்களால் பாதிக்கப்படுவதை மட்டுமே சொல்கிறீர்கள். இருக்கலாம்.ஆனால் அவரால் எவ்வளவு நன்மைகளை நாம் அடைந்திருக்கிறோம். எவ்வளவு திருமணங்கள் அவரால், அவர் கூறிய மேன்மையான பரிந்துரைகளால் முடிந்திருக்கிறது.
அதை எல்லோரும் நினைத்து பாருங்கள்!

இப்போது ராமஞ்செட்டியார் குறுக்கிட்டார், “அவரால் நன்மையும் வேண்டாம். தீமையும் வேண்டாம். அவர் பேசாமல் இருக்க வேண்டும். அதற்கு ஏதாவது வழியிருக்கிறதா? சொல்லும்!”

என் தந்தையார் அதிரடியாகச் சொன்னார் “இருக்கிறது!”

சபையில் இருந்த அத்தனை தலைகளும் என் தந்தையாரை நோக்கித் திரும்பிப் பார்த்தன. பத்துப் பதினைந்து குரல்கள் ஒருமித்துக் கேட்டன, “ என்னவென்று சொல்லுங்கள்? “

என் தந்தையார் தொடர்ந்தார்.

“மீனா தன் வறுமை காரணமாகவே வீடுவீடாகச் செல்கின்றார். வலியப்போய் பேசுகின்றார். நம் ஊரில் எவ்வளவோ தொழில் அதிபர்கள், மேதைகள் இருக்கிறீர்கள். யாராவது ஒருவர் அவருக்கு ஏதாவது ஒரு வேலை போட்டுக்கொடுங்கள். பிரச்னை தீர்ந்துவிடும்!”

“இப்போது நான்கைந்து பேர் எழுந்து நின்று, “ஆமாம் அதுதான் சரியான
முடிவு என்றார்கள்”

என்ன ஆச்சர்யம் பாருங்கள். கூட்டத்திற்கு வந்திருந்த எங்கள் ஊரைச்
சேர்ந்த நூற்பாலை அதிபர் ஒருவர் தான் அதைச்செய்வதாக ஒப்புக்கொள்ள பலத்த ஆதரவிற்கிடையே கூட்டம் இனிதே முடிவுற்றது.

அந்த தொழில் அதிபர் தன் நூற்பாலையில் மீனி ஆச்சிக்கு மட்டும் இல்லை, அவருடைய மகனுக்கும் சேர்த்து வேலை போட்டுக்கொடுத்து விட்டார். அவர்கள் தங்குவதற்கு ஆலையின் குடியிருப்பில் இடமும் கொடுத்துவிட்டார்.

அடுத்தநாள் காலை மீனி ஆச்சி ஊரைவிட்டுப் புறப்படும் முன்பு எங்கள் வீட்டிற்கு வந்து என் தந்தையாரின் காலில் விழுந்து வணங்கி எழுந்து, கண்ணில் நீர் பெருக்கெடுக்க - ஒன்றும் பேசாமல் - கைகூப்பி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றார் பாருங்கள் - நான் அசந்து விட்டேன்.

மௌனமும் ஒரு மொழி என்பதை அப்பொதுதான் தெரிந்து கொண்டேன்.

- 16 மார்ச் 2005’ ஆச்சி வந்தாச்சு மாத இதழில் வெளிவந்தது
***********************************************************************














வாழ்க வளமுடன்!