2. கற்றுணர்தல்
------------------------------ஒருவர் எப்படி மேதையாக முடியும்?
அனுபவத்தால் மட்டுமா? அல்ல!
யாருக்குதான் அனுபவம் இல்லை! கைவண்டி இழுப்பவருக்கும், கழனியில் விவசாயம் செய்பவருக்கும், கணினிப் பொறியாளருக்கும், உத்தியோகத்தில் முப்பது, நாற்பது வருடங்கள் பணிபுரிந்த வருக்கும், இப்படி இன்னபிற துறைகளில் இருப்பவர்களுக்கும் இல்லாத அனுபவங்களா?
பல நூல்களைக் கற்றுணர்வதாலே மட்டும்தான் ஒருவர் மேதையாக முடியும்!
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் நிறைய நூல்களைப் படித்தவர். படித்துணர்ந்தவர். உணர்ந்ததைத் தன் உள்ளத்தில் சேமித்து வைத்தவர்.
கம்பராமயணத்திலிருந்து, காரல்மார்க்ஸ் வரை, சங்க இலக்கியங்களிருந்து சமகால இலக்கியங்கள் வரை கிடைத்த அனைத்தையும் படித்தார்.
அவர் மிகவும் விரும்பிப்படித்த புத்தகங்களில் ஒன்று பட்டினத்தார் பாடல்கள். அதன் தாக்கம் அவரின் தத்துவப் பாடல்களில் வெளிப்படும்.
தாக்கம் இன்றி, எவரும் எதையும் சிறப்பாக எழுத முடியாது.!
அந்த தாக்கத்தை உந்துசக்தி எனலாம்.
கார் பெட்ரோலில்தான் ஓடும் என்றாலும், அந்தக் காரின் எஞ்சினில் உள்ள பிஸ்டனின் இயக்கம்தான் உந்துசக்தி என்று வைத்துக் கொள்ளலாம்.
பட்டினத்தார் எழுதிய நூற்றுக் கணக்கான பாடல்களில்
வாழ்க்கையின் முடிவைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டும் பாடல் ஒன்று உள்ளது.
கவியரசரின் மனதில் உட்கார்ந்து கொண்டு விட்ட அந்தப் பாடல், அவர் திரைப்படம் ஒன்றிற்கு எழுதிய பாடலில் வெளிப்பட்டு பலருடைய மனதையும் புரட்டிப் போட்டது.
முதலில் பட்டினத்தாரின் அந்த நான்கு வரிப் பாடலைச் சொல்கிறேன்.பிறகு, கவியரசர் அதே தாக்கத்துடன் எழுதிய பாட்டிற்கு வருகிறேன்.
"அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே,
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே."
சொத்து, சுகம், வீடு, மனைவி, பெற்ற பிள்ளை, உறவினர்கள், நண்பர்கள் என்று நாம் தேடி வைத்திருக்கும் அனைத்தும் ஒரு நாள் நம்மை விட்டு நீங்கி விடும்.
எப்போது? நம் உயிர் நம் உடலை விட்டு நீங்கும் போது!
சரி ! யார், யார் நம் இறுதிவரை வருவார்கள்? அதுவும் எதுவரை வருவார்கள்?
அதைத்தான் பட்டனத்தடிகள் அந்தப்பாட்டில் சிறப்பாகச் சொல்லியிருப்பார்.
மனிதன் வசிப்பதற்குப் பெயரும் வீடு தான். அவன் ஆத்மா அல்லது உயிர் வசிக்கும் உடம்பிற்குப் பெயரும் வீடுதான்.
என்ன சிறப்புப் பாருங்கள்!
அத்தம் என்றால் செல்வமென்று பொருள் படும் (Wealth) அகம் என்ற சொல்லிற்கு ஆத்மா (Soul) என்ற பொருளும் உண்டு, வீடு (House) என்ற பொருளும் உண்டு.
மெத்த என்கின்ற சொல்லிற்கு அதிகமான (Much) என்ற பொருள் வரும்.
உறவும், செல்வமும் வீடு வரைதான்.
நிலை குலைந்து, உணர்வுகளை அடக்க முடியாமல் அதிகமாக அழுகின்ற மனைவி தெருவரை வருவாள்.
இறுதிப் பயணத்தில் துக்கத்தை அடக்க முடியாமல் உடன் வரும் பிள்ளைகள் சுடுகாடு வரை வருவார்கள்.
அதற்குப் பிறகு என்ன?
உன் ஆத்மாவின் பயணத்திற்கு யார் துணை?
நீ செய்த புண்ணியங்களும், பாவங்களும் தான் - அவை இரண்டு மட்டும் தான் துணை!
அந்தப் பாடல் வாழ்வின் முடிவை இப்படி அழுத்தமாகச் சொல்லும்!
இப்போது உங்களுக்குப் பிடிபட்டிருக்கும் நான் எதைச் சொல்ல வருகிறேன் என்று!
ஆமாம் கவியரசர் எழுதி மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றான "வீடு வரை உறவு" என்ற பாடலைத்தான் சொல்ல வருகிறேன்.
தமிழர்களை மிகவும் சிந்திக்க வைத்த பாடல் அது. முழுப் பாடலையும் கீழே கொடுத்துள்ளேன்.
நான் சொல்ல வந்தது மற்றும் ஒரு விஷயம். அந்தப் பாடல் ஒலிப் பதிவான போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று உள்ளது. அதை முதலில் சொல்கிறேன். பிறகு முழுப் பாடல்.
அந்தப் பாடலின் இசை அமைப்பாளர்களான திரு.விஸ்வநாதன் அவர்கள், திரு.ராமமூர்த்தி அவர்களுடன் ஆலோசனையில் இருந்தார்.
பாட்டை எழுதிக் கொடுத்த கவியரசர் பாடல் எப்படி அமைகிறது என்பதைப் பார்த்து விட்டுப்போகலாம் என்று அமர்ந்திருந்தார்.
பாடலைப் பாடுவதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த
பாடகர் திரு..டி.எம்.எஸ் அவர்கள், திடீரென கவியரசர் அருகே வந்து இப்படிக் கேட்டார்.
"அப்பச்சி, இந்தப் பாடலின் முதல் நான்கு வரிகளை நான் முன்பே கேட்ட மாதிரி உள்ளது. அது என்ன பாடல் என்பதைத் தயவு செய்து சொல்லுங்கள் "
கவியரசர் பதிலுரைத்தார்."அது பட்டினத்தார் பாடல் வரிகளய்யா. எளிமைப் படுத்தி எழுதியிருக்கிறேன்"
.
அந்த மூலப்பாட்டைச் சொல்லுங்கள்"
கவியரசர் சொன்னார்.
உடனே திரு..டி.எம்.எஸ் அவர்கள்,:"நன்றாக மாற்றி அமைத்துள்ளீர்கள். ஆனால் கடைசி வரியை மட்டும் ஏன் விட்டு வீட்டீர்கள்?"
அதாவது மனிதனுடன் வரப்போவது, புண்ணிய, பாவம் என்பதைச் சொல்லாமல், கடைசி வரை யாரோ? என்று ஏன் எழுதினீர்கள் என்று கேட்டார்.
அதற்குக் கவியரசர் அதிரடியாக இப்படிச் சொன்னார்.
"பாவம், புண்ணியம்னா பாமரனுக்குத் தெரியாதைய்யா. படிச்சவன்லேயும் சில பேருக்குத் தெரியாதைய்யா. அதனாலதான் யரோன்னு போட்டேன். தெரிந்து கொள்ள முயற்சிக்கிறவன் தெரிந்து கொள்ளட்டும். தெரியாதவனுக்கு அது தெரியாமலேயே போகட்டும்!"
(தொடரும்)
---------------------------------------------
பாத காணிக்கை (வருடம் 1962 ) என்ற படத்தில் வரும் அந்தப் பாடலின் வரிகள் முழுவதையும் கீழே கொடுத்துள்ளேன்.
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)
தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)
சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)
---------------------------------------------------
The wealth, kith & kin, till the house
The wife, till the street,
The son, up to the cemetery,
Who will come after that?
Dear sir,
ReplyDeleteNice lesson. I like the song very much. It has great impact on me, when one of my family member expired......
" சூனியத்தில் நிலைப்பு "
ReplyDeleteநிலையில்லா மனித வாழ்வு நிலைத்திருப்பது எப்போது என்பதை இதை விட
தெளிவாக கூற இயலாது.
சுப்பு ரத்தினம்.
//ஆடிய ஆட்டம் என்ன?//
ReplyDeleteஅதிகாலை 5 மணிக்கு இந்த பாட்டுசத்தம் கேட்டாலே மனதுக்குள் ”ரைட்டு ஒரு மாலைக்கு சொல்லிட வேண்டியது தான்னு” நினைச்சுக்கிட்டே எழுதிரிப்போம்,
முதல் பாட்டும் இதுதான், கடைசி பாட்டும் இதுதான்...
உணர்ச்சிகரமாக இருக்கும்...
அர்த்தம்பொதிந்த வார்த்தைகள்.,
வாழ்த்துகள் வாத்தியார்...
////dhilse said...
ReplyDeleteDear sir,
Nice lesson. I like the song very much. It has great impact on me, when one of my family member expired....../////
உங்களின் பகிர்விற்கு நன்றி!
/////sury said...
ReplyDelete" சூனியத்தில் நிலைப்பு "
நிலையில்லா மனித வாழ்வு நிலைத்திருப்பது எப்போது என்பதை இதை விட
தெளிவாக கூற இயலாது.
சுப்பு ரத்தினம்./////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
//////அப்பாவி முரு said...
ReplyDelete//ஆடிய ஆட்டம் என்ன?//
அதிகாலை 5 மணிக்கு இந்த பாட்டுசத்தம் கேட்டாலே மனதுக்குள் ”ரைட்டு ஒரு மாலைக்கு சொல்லிட வேண்டியது தான்னு” நினைச்சுக்கிட்டே எழுதிரிப்போம்,
முதல் பாட்டும் இதுதான், கடைசி பாட்டும் இதுதான்...
உணர்ச்சிகரமாக இருக்கும்...
அர்த்தம்பொதிந்த வார்த்தைகள்.,
வாழ்த்துகள் வாத்தியார்...//////
நல்லது.நன்றி நண்பரே!
அய்யா வணக்கம்...
ReplyDeleteகவியரசரை பற்றிய விளக்கம் அருமை ....
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteகவியரசர் பற்றிய கதைக்கு
நன்றிகள் குருவே!
கண்ணதாசன் எழுதியவற்றுள் எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல்களில் நவரசத்தையும் தொட்டு எழுதியவராயிற்றே. அவரைப் பிடிக்காதர்கள் இருக்க முடியாது. அனுபவம் எல்லோருக்கும் இருக்கும். தாங்கள் சொல்ல வருவது ஞானம். அது எல்லோருக்கும் வந்து விடாது. அதற்கு ஞானகாரகனின் அனுக்கிரமும் வேண்டுமே.
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteதங்களின் எழுத்து வன்மை மற்றும் தங்கள் கருத்தின்
வெளிப்பாடு பின் வரும் வரிகளில் நன்கு காண முடிகிறது.
"பல நூல்களைக் கற்றுணர்வதாலே மட்டும்தான் ஒருவர் மேதையாக முடியும்".
"காரின் எஞ்சினில் உள்ள பிஸ்டனின் இயக்கம்தான் உந்துசக்தி"
"உன் ஆத்மாவின் பயணத்திற்கு நீ செய்த புண்ணியங்களும்,
பாவங்களும் மட்டும் தான் துணை".
"பாவம், புண்ணியம்னா பாமரனுக்கும்,
படித்தவர்களிலும் சில பேருக்கும் தெரியாது.
அதனாலதான் யாரோன்னு போட்டேன்".
போன்றவைகள் மிக சிறப்பாக உள்ளது.
ஆக மொத்தத்தில் தங்களின் சொல்லாற்றலால்
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பற்றிய குறிப்புகள்
மேலும் சிறப்படைகிறது.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-03-24
வாத்தியார் ஐயா!
ReplyDeleteவணக்கம்
இருக்கு இடைத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கயோ அலைகின்றாய் ஞானத்தங்கமே அடி! ஞான தங்கமே
என்று சும்மாவா சொன்னார்கள் அன்று
சூத்திரம் சொல்லுங்கள் வாத்தியாரே!
ஐயா! என்னதான் சொல் மற்றும் பட்டரிவ் இருந்தும் தன்னையும் அறியாமல், தன்னை பற்றியதை (மற்றவருக்கு பயன் தரும் என்று நினைத்து, ஆனால் பயன் தராததை) சொல்லி விட்டு, தனக்கே பெரும் குழி தோண்டுவதில் இருந்து தப்பிக்க வழி வகை காட்டுங்கள் வாத்தியாரே.
உரிமையுடன் மாணவன்.
//////astroadhi said...
ReplyDeleteஅய்யா வணக்கம்...
கவியரசரை பற்றிய விளக்கம் அருமை ....////
நல்லது. நன்றி நண்பரே!
////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
கவியரசர் பற்றிய கதைக்கு
நன்றிகள் குருவே!/////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
/////ananth said...
ReplyDeleteகண்ணதாசன் எழுதியவற்றுள் எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல்களில் நவரசத்தையும் தொட்டு எழுதியவராயிற்றே. அவரைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அனுபவம் எல்லோருக்கும் இருக்கும். தாங்கள் சொல்ல வருவது ஞானம். அது எல்லோருக்கும் வந்து விடாது. அதற்கு ஞானகாரகனின் அனுக்கிரமும் வேண்டுமே./////
கவியரசருக்கு ஒன்பதில் குரு. ஞானத்தைப் பெறும் பாக்கியத்தையும், குருபகவான் நல்கினார் போலும்!
நன்றி ஆனந்த்!
மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க ஆசிரியரே.
ReplyDeleteஇந்த பாடம் மனத்தில் இருப்பதில்லையே ;) வாழ்க்கையின் ஓட்டத்தில்.. எல்லாம் மறந்து விடும்.. 7 மணி - 9 மணி வாழ்க்கையில் சில நேரம் எட்டி பார்க்கும் வாழ்க்கை தத்துவங்கள்.. உங்கள் கணணி virus பாதித்ததும் நல்லதுக்குதான் ;)
ReplyDelete/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
தங்களின் எழுத்து வன்மை மற்றும் தங்கள் கருத்தின்
வெளிப்பாடு பின் வரும் வரிகளில் நன்கு காண முடிகிறது.
"பல நூல்களைக் கற்றுணர்வதாலே மட்டும்தான் ஒருவர் மேதையாக முடியும்".
"காரின் எஞ்சினில் உள்ள பிஸ்டனின் இயக்கம்தான் உந்துசக்தி"
"உன் ஆத்மாவின் பயணத்திற்கு நீ செய்த புண்ணியங்களும்,
பாவங்களும் மட்டும் தான் துணை".
"பாவம், புண்ணியம்னா பாமரனுக்கும்,
படித்தவர்களிலும் சில பேருக்கும் தெரியாது.
அதனாலதான் யாரோன்னு போட்டேன்".
போன்றவைகள் மிக சிறப்பாக உள்ளது.
ஆக மொத்தத்தில் தங்களின் சொல்லாற்றலால்
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பற்றிய குறிப்புகள்
மேலும் சிறப்படைகிறது.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!
/////kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா!
வணக்கம்
இருக்கு இடைத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கயோ அலைகின்றாய் ஞானத்தங்கமே அடி! ஞான தங்கமே என்று சும்மாவா சொன்னார்கள் அன்று
சூத்திரம் சொல்லுங்கள் வாத்தியாரே!
ஐயா! என்னதான் சொல் மற்றும் பட்டரிவ் இருந்தும் தன்னையும் அறியாமல், தன்னை பற்றியதை (மற்றவருக்கு பயன் தரும் என்று நினைத்து, ஆனால் பயன் தராததை) சொல்லி விட்டு, தனக்கே பெரும் குழி தோண்டுவதில் இருந்து தப்பிக்க வழி வகை காட்டுங்கள் வாத்தியாரே.
உரிமையுடன் மாணவன்./////
எத்ற்குக் கவலை? தொடர்ந்து நீ எதை நினைக்கிறாயோ - அதாகவே நீ ஆகிவிடுவாய் என்பார்கள். நாம் நல்லதையே நினைப்போம். மற்றதை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம் கண்ணன்!
//////V.Radhakrishnan said...
ReplyDeleteமிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க ஆசிரியரே./////
நல்லது.நன்றி!
//////Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteஇந்த பாடம் மனத்தில் இருப்பதில்லையே ;) வாழ்க்கையின் ஓட்டத்தில்.. எல்லாம் மறந்து விடும்.. 7 மணி - 9 மணி வாழ்க்கையில் சில நேரம் எட்டி பார்க்கும் வாழ்க்கை தத்துவங்கள்.. உங்கள் கணணி virus பாதித்ததும் நல்லதுக்குதான் ;)///////
ஆமாம், நல்லதுக்குத்தான். நன் அப்படி நினைத்துத்தான் என்னை சமாதானம் செய்துகொண்டேன்!
//சென்றவனைக் கேட்டால்
ReplyDeleteவந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்!//
வரிகள் நான்காகினும், இதனுள் புதைந்துள்ள அர்த்தங்கள் ஆயிரம். நன்று ஐயா...
///////சீனு said...
ReplyDelete//சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்!//
வரிகள் நான்காகினும், இதனுள் புதைந்துள்ள அர்த்தங்கள் ஆயிரம். நன்று ஐயா.../////
நல்லது. நன்றி நண்பரே!