+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மஞ்சளின் மகிமை!
மூன்றாம் எண் குருவிற்கு உரியது.3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 3ஆம் எண்ணாகும்.
இந்த மூன்றாம் எண்காரர்கள் பொதுவாக வசீகரமானவர்கள். ஆண்கள் கம்பீரமாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். சிலர் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுடன் இருப்பார்கள்
ஜோதிடமாகட்டும் அல்லது எண் ஜோதிடமாகட்டும், குருவிற்கு முக்கியமான பங்கு உள்ளது. சூரியனிட மிருந்து தான் பெறும் சக்தியைவிடப் பன்மடங்கு சக்தியை வெளிபடுத்தும் கிரகமாகும் அது. நியாயத்தையும், தர்மத்தையும் போதிக்கும் கிரகம் அது. அதனால்தான் அதற்குப் பிரஹஸ்பதி அல்லது வாத்தியார் என்ற பெயரும் உண்டு. பண்டைய நூல்கள் குருவை முக்கியப்படுத்திப் பல செய்திகளைச் சொல்கின்றன. Jupiter is a planet of courage, boldness, power, hard work, energy, knowledge, and speech.
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் குருவிற்கு நட்புக் கிரகங்களாகும். தனுசு, மீனம் ஆகிய இரண்டு ராசிகளும் குருவிற்குச் சொந்த இடங்களாகும். கடகம் உச்சமான இடம். மகரம் நீசமான இடம்.
பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீட்டிற்குக் காரகன் குரு. தந்தைக்குக் காரகன் சூரியன் என்றபோதிலும். ஒன்பதாம்வீட்டின் மற்ற செயல்பாடுகளுக்கெல்லாம் குருவே அதிபதி.
ஒன்பதாம் வீடுதான் அதிர்ஷ்டத்தைக்குறிக்கும் வீடு. அதிர்ஷ்டத்திற்கு அதிபதி குரு. அதை மறக்க வேண்டாம். ஜாதகத்தில் குரு, கேந்திர கோணங்களில் இருப்பது நன்மை பயக்கும்!
நுண்ணறிவு, திருமணம், வாரிசு, ஆகியவற்றிற்கும் குருவின் அமைப்பு முக்கியம். பெண்ணின் ஜாதகத்தில் குருவின் அமைப்பைவைத்துத்தான் அவளுக்கு நல்ல கணவன் அமைவான். ஜாதகத்தில் குரு மறைவிடங்களில் இருந்தால் திருமணம் தாமதமாகும்.
சனி, ராகு அல்லது கேதுவுடன் கூட்டாகவோ அல்லது எதிரெதிர் பார்வையுடனோ இருக்கும் குருவால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. மிதுனம், கன்னி லக்கினக்காரர்களுக்கு, அதுபோன்ற அமைப்பு இருந்தால், சிலரது திருமணம் விவாகரத்தில் முடிந்துவிடும்
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் கடினமான உழைப்பாளிகள். விடாமுயற்சியுடன் செயல்படக்கூடியவர்கள். தங்களைத் தாங்களே பலவிதமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்கள். சோம்பேறித்தனம் என்பது சிறிதும் இருக்காது. அதீதமாகப் பொருள் ஈட்டக்கூடியவர்கள். அதாவது சம்பாதிக்கக்கூடியவர்கள்.
அறவழிகளில் ஈடுபாடு உடையவர்கள். கடமையே வெற்றிக்கு வழி என்பதிலும் உறுதியாக இருக்கக் கூடியவர்கள். செயல்படக்கூடியவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள். ஓய்வு என்று சொல்லி ஒரு இடத்தில் சும்மா இருக்கமாட்டார்கள். செய்யும் வேலை அலுப்பைத் தந்தாலும், அதை விடாது செய்து முடிக்கும் ஆற்றலைக் கொண்டவர்கள்.
எந்த வேலையை மேற்கொண்டாலும், அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவர்கள். அந்த விதமான செயல்பாடே அவர்களுக்கு அதீதமான தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அந்தத் தன்னம்பிக்கைதான் அவர்களின் தாரக மந்திரம். சொன்ன சொல்லையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றக் கூடியவர்கள். அதனால் பலரது நம்பிக்கைக்கும் ஆளாகியிருப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை விரும்புபவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சிறப்புடன் வாழ்பவர்கள். முத்தவர்களின் அன்பு, பாசம், பரிவு, ஆலோசனை என்று அனைத்தும் இவர்களைத் தேடி வரும். சமூக அந்தஸ்தும் தேடிவரும்.
ஆரோக்கியமான உடற்கட்டு இருக்கும். வாழ்க்கையுடன் இயைந்து போவார்கள். ஆக்கபூர்வமானவர்கள். மகிழ்ச்சியை உடையவர்கள். நகைச்சுவை உணர்வுடையவர்கள். மற்றவர்களுக்குத் தூண்டுதலாக விளங்கக்கூடியவர்கள். மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள்.
ஒற்றிலக்க எண்களில் - அதாவது 1,3,5,7,9 எனும் எண்களில் 3ஆம் எண்தான் அதிக சக்தியுள்ள எண். தலைமை எண் என்றும் சொல்லலாம்.
It makes its natives independent, bold, active, hard, working, dependable, popular, disciplined & self-confident. At the beginning of their career, which they start quite early in life they have to struggle a lot. This struggle, however, is very beneficial for their growth and development and makes them shine.
கடுமையான உழைப்பினால், சிலருக்கு, மன அழுத்தங்கள் உண்டாகும். சில இடையூறுகள் ஏற்படும். ஆனால் இந்த எண்ணிற்கு இயற்கையாகவே உள்ள அதிர்ஷ்டம்தரும் அமைப்பினால், அவைகள் எல்லாம் அவ்வப்போது களையப்பட்டுவிடும். தேவையானபோது இந்த எண்காரர்களுக்குப் பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். செய்யும் வேலையில் அல்லது தொழிலில் தலைமை ஏற்கும் நிலைக்கு உயர்வார்கள்.
----------------------------------------------------------
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்: 3,12,21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும். வியாழக்கிழமை உரிய கிழமையாகும். அதுபோல திங்கள், செவ்வாய்
& புதன் கிழமைகளும் இந்த எண்காரர்களுக்குச் சாதகமான கிழமைகளே!
இந்த எண்காரர்களுக்குச் சாதகமான நிறம் மஞ்சள். மஞ்சள் நிறத்தில் துண்டு, படுக்கைவிரிப்பு, தலயணை உறை, கைக்குட்டை என்று எல்லாவற்றிலும் மஞ்சள் நிறத்தையே போற்றி வைத்துக்கொள்ளலாம்
நவரத்தினங்களில் மஞ்சள் நிறமுடைய புஷ்பராகக்கல் நன்மை பயக்கும்!
உடல் நலம்: இந்த எண்காரர்களுக்கு, நீரழிவு நோய், மஞ்சக்காமாலை நோய் போன்றவைகள் வரக்கூடும். எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இந்த எண்காரர்களின் வாழ்க்கையில், 21, 30, 33, 36, 48, 57, 66, ஆகிய வயதில் வாழ்க்கை ஏற்றமுடையதாக இருக்கும்
ஐந்தான் ஜார்ஜ் மன்னர், அப்ரஹாம் லிங்கன், வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற பிரபலங்கள் எல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்கள்.
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteமூன்றாம் எண்ணுக்கு உரிய
பலன் மற்றும் குரு பற்றிய விளக்கமும் நன்றாக உள்ளது. நன்றி!
வணக்கம்.
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-03-09
அய்யா இனிய காலை வணக்கம் ....
ReplyDeleteமங்கள வாரத்தில் மங்களகரமான தலைப்பில் பாடம் அருமை....
அய்யா என்க்கு தனுசு லக்னம் லக்னமும் லக்னாதிபதி குருபகவானும் பலமாக இருப்பதாக தாங்கள் முன்பு சந்தேகம் கேட்கும் போது கூறி இருந்தீர்கள் ...தற்சமயம் குரு தசை நடக்கின்றது நான் தற்போது புஸ்பராகம் கல் வைத்து மோதிரம் அணியலாமா?
நன்றி வணக்கம்.....
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஇன்றையப் பாடம் எனக்கு!
எனது பிறந்த தேதி,21/11/1969, 2+1=3,
2+1+1+1+1+9+6+9=30=3 .
பெய மாற்றத்தை நினைத்துக் கொண்டே இருந்தேன்..
உங்களப் பாடம் உதவி யானது.....
Aalaasiam Govindhasamy = 3 (I will deed poll it soon)
தனுசு லக்னம். தாங்கள் கூறிய குணங்கள்
அனைத்தும் இருந்தாலும். நேர்மை, ஒழுக்கம் இவைகள் தான்
என்னை படுத்தி வைக்கும் (என்னைப் போல் மற்றவர்களும் இருக்க வேண்டும்
என்று நினைப்பதுவும், தவறென்றால் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது,
இதனால் சில சங்கடங்கள்; ஒரு கண்டிப்பான வாத்தியாரின் குணம்).
அதிகம் சொல்ல வேண்டாம், இத்தனை மாதங்களில் என்னை நீங்கள் அறிவீர்கள்.......
நன்றிகள் குருவே! (குரு பக்தி சிறு வயதில் இருந்தே அதிகம்
உண்டு அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்).
அன்புடன், ஆலாசியம் கோ.
//3,12,21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும்.//
ReplyDeleteதேவ குருவிற்க்கான 3ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அசுர குருவின் 6ம் எண் கொண்ட தேதிகள் நன்மையாக இருக்குமா. இப்போதுதான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன்.
அன்புள்ள அய்யா,
ReplyDeleteமேற்கூரிய லக்னம் மிதுனதிர்க்கு குரு 7 லில் (ஆட்சி) நின்றால் என்ன பலன்?
புஷ்பராக கல் அணிய வேண்டுமா? 5 இல் சனி (உச்சம்), 6 இல் கேது (உச்சம்) , 12 இல் ராகு (நீசம்)
8 மற்றும் 9 ஆம் அதிபனாக வரும் சனி உச்சம் பெறுவது நல்லதா?
நன்றி
சரவணா
அய்யா குரு, ஏழாம் இடத்தில், சிம்ம இராசியில் சூரியன்,சுக்கிரன்,சந்திரன்,புதன் ஆகியோருடன் அமர்ந்து இருந்தால் என்ன பலன். திருமணம் நடக்குமா? நடக்காதா?
ReplyDeleteகுருவைப் பற்றிய கருத்துக்கள் அருமை, பயன் தரும் தகவல். மிக்க நன்றி.
நம்பிக்கை இல்லை என்றவர்களையும் மஞ்சள் ஆடை அணியச் செய்யும்
ReplyDeleteமகத்துவம் குருவுக்கே உண்டு.சனீஸ்வரரைப் போல அல்ல குரு. வேண்டுவோர் வேண்டாதோர் என்றெல்லாம் குரு பார்ப்பார்.அவரிடம் "காய்தலும் உவத்தலும்" உண்டு.பாடம் எளிமையாக உள்ளது.
Dear sir,
ReplyDeleteNice lessons on moon and jupiter.
I am waiting eagerly for tomorrow, because my birth date is 4.
Tahnks sir,
J.SENDHIL
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் தொடர் நன்றாக உள்ளது
ReplyDelete/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
மூன்றாம் எண்ணுக்கு உரிய
பலன் மற்றும் குரு பற்றிய விளக்கமும் நன்றாக உள்ளது. நன்றி!
வணக்கம்.
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
/////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம் ....
மங்கள வாரத்தில் மங்களகரமான தலைப்பில் பாடம் அருமை.... அய்யா எனக்கு தனுசு லக்னம் லக்னமும் லக்னாதிபதி குருபகவானும் பலமாக இருப்பதாக தாங்கள் முன்பு
சந்தேகம் கேட்கும் போது கூறி இருந்தீர்கள் ...தற்சமயம் குரு தசை நடக்கின்றது நான் தற்போது புஸ்பராகம் கல் வைத்து மோதிரம் அணியலாமா? நன்றி வணக்கம்.....///////
நன்றாக அணிந்துகொள்ளுங்கள் ஸ்வாமி!
/////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம், இன்றையப் பாடம் எனக்கு!
எனது பிறந்த தேதி,21/11/1969, 2+1=3, 2+1+1+1+1+9+6+9=30=3 .
பெயர் மாற்றத்தை நினைத்துக் கொண்டே இருந்தேன்..
உங்களப் பாடம் உதவியானது.....
Aalaasiam Govindhasamy = 3 (I will deed poll it soon)
தனுசு லக்னம். தாங்கள் கூறிய குணங்கள்
அனைத்தும் இருந்தாலும். நேர்மை, ஒழுக்கம் இவைகள் தான்
என்னை படுத்தி வைக்கும் (என்னைப் போல் மற்றவர்களும் இருக்க வேண்டும்
என்று நினைப்பதுவும், தவறென்றால் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது,
இதனால் சில சங்கடங்கள்; ஒரு கண்டிப்பான வாத்தியாரின் குணம்).
அதிகம் சொல்ல வேண்டாம், இத்தனை மாதங்களில் என்னை நீங்கள் அறிவீர்கள்.......
நன்றிகள் குருவே! (குரு பக்தி சிறு வயதில் இருந்தே அதிகம்
உண்டு அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்).
அன்புடன், ஆலாசியம் கோ.////
நல்லது.நன்றி ஆலாசியம் கோவிந்தசாமி!
////ananth said...
ReplyDelete//3,12,21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும்.//
தேவ குருவிற்க்கான 3ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அசுர குருவின் 6ம் எண் கொண்ட தேதிகள்
நன்மையாக இருக்குமா. இப்போதுதான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன்.////
3,6 & 9 ஆகிய மூன்று எண்களுமே ஒன்றுக்கொன்று நட்புடைய எண்கள்!
////Saravana said...
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
மேற்கூரிய லக்னம் மிதுனத்திற்கு குரு 7 லில் (ஆட்சி) நின்றால் என்ன பலன்?
புஷ்பராகக் கல் அணிய வேண்டுமா? 5 இல் சனி (உச்சம்), 6 இல் கேது (உச்சம்) , 12 இல் ராகு (நீசம்)
8 மற்றும் 9 ஆம் அதிபனாக வரும் சனி உச்சம் பெறுவது நல்லதா?
நன்றி
சரவணா/////
உங்கள் பிறந்த எண் என்ன ஸ்வாமி? அதைச் சொல்லுங்கள்!
/////பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஅய்யா குரு, ஏழாம் இடத்தில், சிம்ம இராசியில் சூரியன்,சுக்கிரன்,சந்திரன்,புதன் ஆகியோருடன் அமர்ந்து
இருந்தால் என்ன பலன். திருமணம் நடக்குமா? நடக்காதா?
குருவைப் பற்றிய கருத்துக்கள் அருமை, பயன் தரும் தகவல். மிக்க நன்றி.//////
திருமணம்தானே? உங்கள் பிறப்பு விவரங்களை எழுதுங்கள்
////kmr.krishnan said...
ReplyDeleteநம்பிக்கை இல்லை என்றவர்களையும் மஞ்சள் ஆடை அணியச் செய்யும்
மகத்துவம் குருவுக்கே உண்டு.சனீஸ்வரரைப் போல அல்ல குரு. வேண்டுவோர் வேண்டாதோர்
என்றெல்லாம் குரு பார்ப்பார்.அவரிடம் "காய்தலும் உவத்தலும்" உண்டு.பாடம் எளிமையாக உள்ளது.////
நல்லது.நன்றி கிருஷ்ணன் சார்!
////dhilse said...
ReplyDeleteDear sir,
Nice lessons on moon and jupiter. I am waiting eagerly for tomorrow, because my birth date is 4.
Thanks sir,
J.SENDHIL////
ஆகா, பொறுத்திருங்கள். நாளையப்பாடம் எண் 4ஐப் பற்றியதுதான்!
/////rajesh said...
ReplyDeleteஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் தொடர் நன்றாக உள்ளது////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
சார். என் பிறந்த தேதி 30. க்ட்டு எண் 4.
ReplyDeleteரிசப லக்னம். அனுச நட்சத்திரம்...
நான் வெள்ளியில் நீலக்கல் அணிவதா. மஞ்சள் புஸ்பராகம் அணிவதா, அல்லது விருசிசிக ராசிக்கு உண்டான் பவளம் அணிவதா என்று குழப்பமாக இருக்கிறது....தெளிவியுங்கள் சார்,
அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், மூன்றாம் எண்,குருவை பற்றிய பாடம்
ReplyDeleteசிறப்பு,இன்று பாடம் மிகவும் மங்களகரமாக இருந்தது.என் ஜாதகத்தில் குருவும்,கேதுவும்
ஒன்பதாம் இடத்தில்(மகர லக்கனம்).எனக்கு எதிலும் பிடிப்பு இல்லாமல் இருக்கிறேன்.
தினமும் எதைபற்றியாவது சிந்தனை செய்துகொண்டுதான் இருப்பேன்.இது ஏன்? என்று தெரியவில்லை
அன்புடன் உங்கள் மாணவன்
ஜீவா
Sir
ReplyDeleteMy birth date is:15/02/1979:
my name a.babu(12=3).My horoscope rishaba laknam.Kuru in 3rd place(ie katagam(astavargam=31,suyavarga=5).
3 is friendly no for 6.
Can I change my no related to 6.
Or i continue with existing name(ie 12).my sugg(S.A.BABU=15)
Pl explain sir.
Your student
A.Babu
/////கண்ணகி said...
ReplyDeleteசார். என் பிறந்த தேதி 30. கூட்டு எண் 4.
ரிசப லக்னம். அனுச நட்சத்திரம்...
நான் வெள்ளியில் நீலக்கல் அணிவதா. மஞ்சள் புஸ்பராகம் அணிவதா, அல்லது விருசிசிக ராசிக்கு உண்டான் பவளம் அணிவதா என்று குழப்பமாக இருக்கிறது....தெளிவியுங்கள் சார்,////
என்ன தசை நடக்கிறது?
/////ஜீவா said...
ReplyDeleteஅன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், மூன்றாம் எண்,குருவை பற்றிய பாடம்
சிறப்பு,இன்று பாடம் மிகவும் மங்களகரமாக இருந்தது.என் ஜாதகத்தில் குருவும்,கேதுவும்
ஒன்பதாம் இடத்தில்(மகர லக்கனம்).எனக்கு எதிலும் பிடிப்பு இல்லாமல் இருக்கிறேன்.
தினமும் எதைபற்றியாவது சிந்தனை செய்துகொண்டுதான் இருப்பேன்.இது ஏன்? என்று தெரியவில்லை
அன்புடன் உங்கள் மாணவன்
ஜீவா/////
திருமணமாகிவிட்டதா?
////Babu said...
ReplyDeleteSir
My birth date is:15/02/1979:
my name a.babu(12=3).My horoscope rishaba laknam.Kuru in 3rd place(ie katagam(astavargam=31,suyavarga=5).
3 is friendly no for 6.
Can I change my no related to 6.
Or i continue with existing name(ie 12).my sugg(S.A.BABU=15)
Pl explain sir.
Your student
A.Babu//////
S.A.BABU=15 என்று மாற்றிக்கொள்ளுங்கள். அது பழக்கமாவதற்கு தினமும் குறைந்தது 24 முறைகளாவது அப்பெயரை எழுதிப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
பாடங்களை படிப்பவர்கள் ஏன் ஓட்டுகள் போடமாட்டேங்குறாங்க ?
ReplyDeleteமஞ்சள் நல்லாத்தான் இருக்கு...!!!
அன்பு அய்யாவுக்கு வணக்கம், எனக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் முடிந்துவிட்டன.
ReplyDeleteஅன்புடன் உங்கள் மாணவன்
ஜீவா
/////செந்தழல் ரவி said...
ReplyDeleteபாடங்களை படிப்பவர்கள் ஏன் ஓட்டுகள் போடமாட்டேங்குறாங்க ?
மஞ்சள் நல்லாத்தான் இருக்கு...!!!/////
வகுப்பறைக்கு வருவதே பெரிய விஷயம். படிப்பது அதைவிடப் பெரிய விஷயம். இதில் ஓட்டுப்போடுங்கள் என்று கட்டாயப் படுத்தமுடியுமா என்ன? அதோடு ஓட்டை வாங்கி நாம் என்ன செய்யப்போகிறோம். இந்த ஓட்டுக்கள் எதற்காவது உதவுமா? சொல்லுங்கள் செந்தழலாரே!
/////ஜீவா said...
ReplyDeleteஅன்பு அய்யாவுக்கு வணக்கம், எனக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் முடிந்துவிட்டன.
அன்புடன் உங்கள் மாணவன்
ஜீவா/////
பின் ஏன் பிடிப்பு இல்லை? இல்லாளிடம் மாத்து வாங்குகிறமாதிரி ஏதாவது செயலைச் செய்யுங்கள். பிறகு பிடிப்பு வந்துவிடும். அதாவது அவர், பிடிப்பு வரும்படி செய்துவிடுவார்:-))))))
Sir
ReplyDeleteAs per my old post(Tuesday, March 09, 2010 2:14:00 PM) you suggest
to change my name to S.A.BABU(15=6).(Birth Date 15/02/1979).
I will get a good results only write a name(or signature) 24 time per day or chagne the name in gazatte and all my records in future.
Your Student
S.A.Babu
Sir
ReplyDeleteNamathu வகுப்பறை blog il tamilil type seia enna seiya vendum.
Your Student
S.A.Babu
ஆனந்த் அவர்களின் கேள்வி எனக்கும் எழுந்தது.(பல சமயங்களில் இந்த அனுபவம் இருந்துள்ளது.6ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு 3ஆம் தேதியில் நடக்கும் சம்பவங்கள் மனதிற்கு இனிமையை அளிப்பதில்லை. கோட்டையூர் நகரத்தாரான என் நண்பர் ஒருவரின் தகப்பனார் ஜோதிட அனுபவத்தில் பலருக்கும் பலன்கள் சொல்லுவார்.என் கணிதத்திலும் அனுபவம் பெற்றவர்.அவர் என் நண்பருக்கு-தன் மகனுக்கு இதே அடிப்படையில் (3&6 &9 கணக்கிலே)
ReplyDelete(3&9 பிறந்தநாள் combination .) சிறு வயது முதலே 15ஆம் எண்ணிலே பெயர் அமைத்து இருந்தார்.
கல்லூரி வாழ்விலே அவருக்கு காதலில் பெரும் சிக்கல் அமைந்தது.அதன் பின் திருமண வாழ்வும்
மணமுறிவு அடைந்துவிட்டது.
இந்த குரு சுக்ரன் விவகாரம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை..வழித்தோன்றல்களில் அசுரன் யார் தேவர் யார் என்று தீவிர ஆராய்ச்சியில் இன்றும் குழம்பிக் கிடக்கிறது நமது சமூகம்.தெய்வ வழிபாடுகளை ஆராதிக்கும் நபர்களுக்கு காரகனாக விளங்கும் குரு ஏன் மோசடி சாமியார்களை அனுமதித்து வேடிக்கை பார்க்கிறார் என்று புரியவில்லை.ஒருவேளை சுக்கிரனுக்கே உச்சமடைய தன் வீட்டை கொடுத்தவர் என்பதாலா?சுக்கிரனின் சேட்டைகளை தடுக்க முடியாதவராகிவிடுகிறாரா? தெய்வ வழிபாடுகளை ஆராதிக்கும் நபர்களுக்கு எதிரான மனப்பாங்குடன் இருந்து ஆட்சி பரிபாலனங்களில் உள்ளவர்களுக்கும் நல்ல உன்னதமான பலன்களை குருவே அளிப்பதுவும்
விந்தைதான்.குழப்பம்தான்.பல சமயங்களில் ஜாதகமே ஒரு குழப்பமான புதிராகத்தான் உள்ளது.
////Babu said...
ReplyDeleteSir
As per my old post(Tuesday, March 09, 2010 2:14:00 PM) you suggest
to change my name to S.A.BABU(15=6).(Birth Date 15/02/1979).
I will get a good results only write a name(or signature) 24 time per day or chagne the name in gazatte and all my records in future.
Your Student
S.A.Babu////
என்ன அவசரம்? பொறுத்திருந்து பார்த்து நன்மை பயத்தால் பிறகு வேண்டிய மாற்றங்களைச் செய்யுங்கள்
////Babu said...
ReplyDeleteSir
Namathu வகுப்பறை blog il tamilil type seia enna seiya vendum.
Your Student
S.A.Babu/////
சைடு பாரில் பாருங்கள். தமிழ் எழுதி உள்ளது. இல்லையென்றால், இணையத்தில் NHM writer எனும் இலவச தமிழ் எழுதும் மென்பொருள் கிடைக்கும். அதை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி விடுங்கள். கீ போர்டு பயிற்சி தேவையில்லை. ஆங்கிலத்தில் அடிப்பதை அது தமிழில் மாற்றிக் கொடுக்கும். ammaa = அம்மா
/////minorwall said...
ReplyDeleteஆனந்த் அவர்களின் கேள்வி எனக்கும் எழுந்தது.(பல சமயங்களில் இந்த அனுபவம் இருந்துள்ளது.6ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு 3ஆம் தேதியில் நடக்கும் சம்பவங்கள் மனதிற்கு இனிமையை அளிப்பதில்லை. கோட்டையூர் நகரத்தாரான என் நண்பர் ஒருவரின் தகப்பனார் ஜோதிட அனுபவத்தில் பலருக்கும் பலன்கள் சொல்லுவார்.என் கணிதத்திலும் அனுபவம் பெற்றவர்.அவர் என் நண்பருக்கு-தன் மகனுக்கு இதே அடிப்படையில் (3&6 &9 கணக்கிலே)
(3&9 பிறந்தநாள் combination .) சிறு வயது முதலே 15ஆம் எண்ணிலே பெயர் அமைத்து இருந்தார்.
கல்லூரி வாழ்விலே அவருக்கு காதலில் பெரும் சிக்கல் அமைந்தது.அதன் பின் திருமண வாழ்வும்
மணமுறிவு அடைந்துவிட்டது.
இந்த குரு சுக்ரன் விவகாரம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை..வழித்தோன்றல்களில் அசுரன் யார் தேவர் யார் என்று தீவிர ஆராய்ச்சியில் இன்றும் குழம்பிக் கிடக்கிறது நமது சமூகம்.தெய்வ வழிபாடுகளை ஆராதிக்கும் நபர்களுக்கு காரகனாக விளங்கும் குரு ஏன் மோசடி சாமியார்களை அனுமதித்து வேடிக்கை பார்க்கிறார் என்று புரியவில்லை.ஒருவேளை சுக்கிரனுக்கே உச்சமடைய தன் வீட்டை கொடுத்தவர் என்பதாலா?சுக்கிரனின் சேட்டைகளை தடுக்க முடியாதவராகிவிடுகிறாரா? தெய்வ வழிபாடுகளை ஆராதிக்கும் நபர்களுக்கு எதிரான மனப்பாங்குடன் இருந்து ஆட்சி பரிபாலனங்களில் உள்ளவர்களுக்கும் நல்ல உன்னதமான பலன்களை குருவே அளிப்பதுவும்
விந்தைதான்.குழப்பம்தான்.பல சமயங்களில் ஜாதகமே ஒரு குழப்பமான புதிராகத்தான் உள்ளது./////
குரு வாத்தியார் அல்லவா? பிரம்பை எடுக்க வேண்டிய நேரத்தில் அதை எடுத்து விளாசிவிடுகிறாரே மைனர்! அதைக்கவனித்தீர்களா?
அண்ணா !
ReplyDeleteமஞ்சள் மகிமைக்கு நீங்கள் போட்டிருக்க வேண்டிய பிரதான;பிரபல படம்.
நம்ம முதல்வர்,கலைஞர் மஞ்சள் போர்வையுடன் இருக்கும் படமே!
மஞ்சளின் மகிமைக்கு அது தவிர எதுவும் சாட்சியில்லை.
//////Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ReplyDeleteஅண்ணா !
மஞ்சள் மகிமைக்கு நீங்கள் போட்டிருக்க வேண்டிய பிரதான;பிரபல படம்.
நம்ம முதல்வர்,கலைஞர் மஞ்சள் போர்வையுடன் இருக்கும் படமே!
மஞ்சளின் மகிமைக்கு அது தவிர எதுவும் சாட்சியில்லை.////
நீங்கள் சொல்வது சரிதான். வேண்டுமென்றுதான் அதைப் போடவில்லை. சிலர் அதைப் பிரச்சினையாக்கக்கூடும்!:-))))
Sir,
ReplyDeleteGreat info about number 3 @ Jupiter
சார். எனக்கு சுக்ர தசை ராகு புத்தி..
ReplyDeleteபிறந்த தேதி 30. கூட்டு எண் 4.
அனுசம். விருசிசிகம்.. எனது கேள்வி.
வெள்ளியில் நீல்க்கல்லா. அல்லது 3ம் எண்ணுக்குரிய புஸ்பராகக்கல்லா, அல்லது விருச்சிக ராசிக்குரிய பவளமா...
இந்த ராசிக்கற்கள் எப்போதும் அணியலாமா.. அல்லது திசாபுத்திக்கு உரிய காலங்களில் உரியதை மட்டும் அணிவதா.
ராசியில் வேறு கற்கள் வருகின்றன. எண் கணிதப்படி வேறு கற்கள் வருகின்றன.
இது எல்லோருக்கும் பொதுவான கேள்வி.
எந்தக்கற்கள் என்று எதை வத்து முடிவு செய்வது. விளக்குங்கள் சார்.
எனது முந்தைய பின்னூட்டத்தில் அப்படி கேட்டதற்கான காரணம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வெளியிடப் பட்ட எண் கணித புத்தகங்களில் 3ம் எண்ணிற்கு 6ம் எண் ஆகாது என்றுதான் எழுதியுள்ளனர். உதாரணத்திற்கு பண்டிட் சேதுராமன் அவர்கள் எழுதிய அதிஷ்ட விஞ்ஞானம் புத்தகம், துரைமுருகர் அவர்கள் எழுதிய numerology, (இன்னும் இருக்கிறது, இவை உதாரணத்திற்கு மட்டுமே). ஆனால் மேல் நாட்டவர்கள் எழுதிய எண் கணிதத்திற்கான சில புத்தகங்களில் தாங்கள் சொல்லியது போல்தான் இருக்கிறது. அனுபவப்பூர்வமாக ஆராய்ந்தால்தன் இதற்கு உரிய விடை கிடைக்கும்.
ReplyDeleteDear Sir!
ReplyDeleteGd evening.
**********************************
Unmai iyaa!
>>>>>>>>>>>>>>>>>>...<<<<<<<<<<<<<<
////ananth said...
//3,12,21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும்.//
தேவ குருவிற்க்கான 3ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அசுர குருவின் 6ம் எண் கொண்ட தேதிகள்
நன்மையாக இருக்குமா. இப்போதுதான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன்.////
3,6 & 9 ஆகிய மூன்று எண்களுமே ஒன்றுக்கொன்று நட்புடைய எண்கள்!
Tuesday, March 09, 2010 10:47:00 AM
>>>>>>>>>>>>>>>>>...<<<<<<<<<<<<<<<
/////Blogger Ashok said...
ReplyDeleteSir,
Great info about number 3 @ Jupiter///
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
////Blogger கண்ணகி said...
ReplyDeleteசார். எனக்கு சுக்ர தசை ராகு புத்தி.. பிறந்த தேதி 30. கூட்டு எண் 4.
அனுசம். விருசிசிகம்.. எனது கேள்வி.
வெள்ளியில் நீல்க்கல்லா. அல்லது 3ம் எண்ணுக்குரிய புஸ்பராகக்கல்லா, அல்லது விருச்சிக ராசிக்குரிய பவளமா...
இந்த ராசிக்கற்கள் எப்போதும் அணியலாமா.. அல்லது திசாபுத்திக்கு உரிய காலங்களில் உரியதை மட்டும் அணிவதா. ராசியில் வேறு கற்கள் வருகின்றன. எண் கணிதப்படி வேறு கற்கள் வருகின்றன.
இது எல்லோருக்கும் பொதுவான கேள்வி.
எந்தக்கற்கள் என்று எதை வைத்து முடிவு செய்வது. விளக்குங்கள் சார்.///////
ஜாதகம்தான் முக்கியம். உங்களுக்கு சுக்கிர தசை நடைபெறுவதால், அதற்குரிய வைரக்கல்லை அணிவது நன்மை பயக்கும்
/////Blogger ananth said...
ReplyDeleteஎனது முந்தைய பின்னூட்டத்தில் அப்படி கேட்டதற்கான காரணம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வெளியிடப் பட்ட எண் கணித புத்தகங்களில் 3ம் எண்ணிற்கு 6ம் எண் ஆகாது என்றுதான் எழுதியுள்ளனர். உதாரணத்திற்கு பண்டிட் சேதுராமன் அவர்கள் எழுதிய அதிஷ்ட விஞ்ஞானம் புத்தகம், துரைமுருகர் அவர்கள் எழுதிய numerology, (இன்னும் இருக்கிறது, இவை உதாரணத்திற்கு மட்டுமே). ஆனால் மேல் நாட்டவர்கள் எழுதிய எண் கணிதத்திற்கான சில புத்தகங்களில் தாங்கள் சொல்லியது போல்தான் இருக்கிறது. அனுபவப்பூர்வமாக ஆராய்ந்தால்தன் இதற்கு உரிய விடை கிடைக்கும்.//////
ஆமாம். நீங்கள் சொல்வதும் சரி!
/////Blogger kannan said...
ReplyDeleteDear Sir!
Gd evening.
Unmai iyaa!
>>>>>>>>>>>>>>>>>>...<<<<<<<<<<<<<<
////ananth said...
//3,12,21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும்.//
தேவ குருவிற்க்கான 3ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அசுர குருவின் 6ம் எண் கொண்ட தேதிகள்
நன்மையாக இருக்குமா. இப்போதுதான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன்.////
3,6 & 9 ஆகிய மூன்று எண்களுமே ஒன்றுக்கொன்று நட்புடைய எண்கள்!//////
நல்லது.நன்றி!
Vaathiyariya,
ReplyDeleteAs usual, very good explanation
Could not read for last few weeks as I will be relocating back to india by this month end.
I think, when Guru is in Sukiran houses like Rishabham and Thulam are considered to be bad for guru (enemy house)
Because of the above, our astrologers might have told 3 is not good for 6
But if sukiran in thanus is not bad right..
As alasim said, I have also seen that most of the time only the straight forward people are getting in to trouble..
Is it always because of guru in good place like in 1st house etc..
If 9 camel and 1 horse is there, even though the horse is strong but for those camels, the horse is a stranger,low profiled and look different and they will under estimate the horse :)
Thanks
Rajan Kumaresan
ஆசானே
ReplyDelete9ல் மகரத்தில் குரு, ரிஷப லக்னம், நவாம்சத்தில் குரு ரிஷபத்தில் -again 9ல் சுக்கிரனுடன், இதை எப்படி கணிப்பது, குரு நல்லதை செய்வாரா?
/////Blogger Rajan said...
ReplyDeleteVaathiyariya,
As usual, very good explanation
Could not read for last few weeks as I will be relocating back to india by this month end.
I think, when Guru is in Sukiran houses like Rishabham and Thulam are considered to be bad for guru (enemy house)
Because of the above, our astrologers might have told 3 is not good for 6
But if sukiran in thanus is not bad right..
As alasim said, I have also seen that most of the time only the straight forward people are getting in to trouble.. Is it always because of guru in good place like in 1st house etc..
If 9 camel and 1 horse is there, even though the horse is strong but for those camels, the horse is a stranger,low profiled and look different and they will under estimate the horse :)
Thanks
Rajan Kumaresan////
நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!
/////Blogger சிங்கைசூரி said...
ReplyDeleteஆசானே
9ல் மகரத்தில் குரு, ரிஷப லக்னம், நவாம்சத்தில் குரு ரிஷபத்தில் -again 9ல் சுக்கிரனுடன், இதை எப்படி கணிப்பது, குரு நல்லதை செய்வாரா?/////
மகரத்தில் குரு நீசம் பெறுவார். கலவையான பலன். That is mixed result!
வாக்குகள் பதிவு நிறைய பேரை சென்றடைய உதவுமே என்ற அர்த்ததில் சொன்னேன் வாத்தியாரே...
ReplyDelete////செந்தழல் ரவி said...
ReplyDeleteவாக்குகள் பதிவு நிறைய பேரை சென்றடைய உதவுமே என்ற அர்த்ததில் சொன்னேன் வாத்தியாரே.../////
நீங்கள் சொல்வது உண்மைதான் செந்தழலாரே! என் பதிவுகளை சராசரியாக 2,500 பேர்கள் படிக்கிறார்கள் (ஹிட் கவுண்ட்டர் சொல்கிறது) 1345 ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் ஒட்டு எண்ணைக்கை இல்லை! என்ன காரணம் என்று தெரியவில்லை!