மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
My email ID
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
29.12.22
இலவசம் !!!
23.12.22
Humour BLACK (TEA) DAY
22.12.22
பணம் - சுஜாதா கட்டுரை
19.12.22
God என்றால் என்ன?
14.12.22
*புளியோதரை புராணம்* Write up by சுஜாதா_
13.12.22
நம்முடைய காலக் கணக்கு
8.12.22
Lesson 79 Lesson on Money
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 79
New Lessons
பாடம்
எண்
79
பாடம் Holding Money
”வாத்தியார், இரண்டில் சனி இருந்தால் அந்த ஜாதகனுடைய கை ஓட்டைக் கை - கையில் காசு தங்காது” என்று சொல்கிறர்களே - அது உண்மையா?”
”அது உண்மையல்ல. வேறு அமைப்புக்களும் உள்ளன. அது தெரியாமல் ஓட்டைக் கை என்று சொல்வது தவறு”
“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்!”
-------------------------------------------------
இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள்
குடியிருந்தால் அதாவது சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற கிரகங்கள்
அமர்ந்திருந்தால்
அந்த வீடு பாதிப்பிற்கு உள்ளாகும்.
இரண்டாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள்.
பணத்திற்கான இடம் அது (House of finance)
குடும்ப வாழ்க்கைக்கான இடமும் அது(House of Family)
அத்துடன் வாக்கு ஸ்தானத்திற்கான இடமும் அதுதான் (House of speech)
அதில் ஒரு இலாக்கா பாதிக்கப்படும்
ஏன் அப்படி? சனி போன்ற தீய கிரகங்கள் இருந்தால் அந்த மூன்று இலாக்காக்களுமே பாதிப்பிற்கு உள்ளாகாதா?
ஆகாது. அந்த வீட்டுக்காரன் முக்கியம். அவன் நன்றாக, வலிமையாக இருந்தால் சனியின் பாதிப்பை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு நன்மைகளைச் செய்வான். அத்துடன் காரகனும் (authority) முக்கியம்
பணத்திற்குக் காரகன் குரு
மனையாளுடன் கூடி வாழும் குடும்ப
வாழ்க்கைக்குக் காரகன் சுக்கிரன்
அகட விகட சாமர்த்தியமான பேச்சிற்குக் காரகன் புதன்
இந்த மூவரில் யார் கெட்டிருந்தாலும் அந்த இலாக்கா சரிவர வேலை செய்யாது
ஆகவே இவை அனைத்தையும் பரிசீலிக்க வேண்டும்!
-------------------------------------------------------
ஒரு உதாரண ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்
இரண்டாம் வீட்டில் சனியும், கேதுவும் டென்ட் அடித்து உட்கார்ந்திருக்கிறார்கள். காசு தங்காது என்று சொல்லிவிடலாமா? முடியாது. ஜாதகத்திற்கு உரியவர் பெரிய செல்வந்தர்.
நிலைமை மாறியதற்கு என்ன காரணம்?
அம்சம் முக்கியமில்லையா? அதையும் பாருங்கள். இரண்டாம் வீட்டதிபதி புதன் உச்சம் பெற்று அங்கே கொடியுடன் உட்கார்ந்திருக் கிறார்.அத்துடன் அதே புதன், ராசியில் திரிகோண வீட்டில் சுக்கிரனைக் கட்டிகொண்டு உட்கார்ந்திருக்கிறார். சுக்கிரன் ஜாதகருடைய 10ம் வீட்டதிபதி! தொழில் செய்து சுயசம்பாத்தியத்தில் செல்வம் சேர்ந்தது!
ஜாதகர் யார் தெரிகிறதா?
நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த
அவர்களுடைய ஜாதகம் இது!
--------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
1.12.22
Lesson No.78 Arishta Yoga
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 78
Date 10-10-2022
New Lessons
பாடம்
எண்
78
பாடம் அரிஷ்ட யோகம்
(படுக்கவைக்கும் யோகம்)
நாமாகப் படுத்தால் அதற்கு அர்த்தம்
வேறு. வேறு யாராவது அல்லது வேறு ஏதாவது சூழ்நிலையில் நாம் படுக்க நேர்ந்தால்
அதன் பொருள் வேறு.
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மைப் படுக்க வைக்கும் யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடம் கீழே உள்ளது.
இவைகள் பொது விதிகள்.
தனிப்பட்டவர்களின் ஜாதகங்களுக்கு, சுபக்கிரகங்களின்
அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும்.
ஆகவே அவசரப்பட்டு முடிவிற்கு
வராதீர்கள். அதேபோல ஹோம் ஒர்க் நோட்டு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து, என்னுடைய
ஜாதகத்தை வைத்து இதற்கு விளக்கத்தை
எழுதிக்கொடுங்கள் சார் என்று யாரும் கேட்காதீர்கள். உங்களுக்கு நீங்களே
பாருங்கள். இவை எல்லாம் மேல் நிலைப்
பாடங்கள். அதை நினைவில் வையுங்கள்!
----------------------------------------------------------
அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும்.
அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும்.
உதாரணத்திற்குப் ‘பாலஅரிஷ்டம்’ என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு
ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அரிஷ்ட யோகம் 1
(அவயோகம்தான்)
தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு!
1
லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது
பார்வையில்
இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.
பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.
2.
எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.
பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.
அன்புடன்,
வாத்தியார்
21.11.22
Lesson 76 அறுவை சிகிச்சை (Surgery)
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 76
New Lessons
பாடம் எண் 76
தலைப்பு
அறுவை சிகிச்சை ()Surgery)
அறுவை சிகிச்சை (Surgery) என்றால் யாருக்குத்தான் பயம் இல்லை?
Surgery is an act of performing surgery may be called a surgical procedure, operation, or simply surgery. In this context, the verb operate means to perform surgery.
எத்தனை மன திடம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நிலவும் அசாத்திய மருத்துவமனைக் கட்டணங்களுக்கு எங்கே போவது? பணம் இருப்பவனை விட்டுத்தள்ளுங்கள். போதிய பணம் இல்லாதவன் என்ன செய்வான்? யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் அல்லது உறவினர்கள் / நண்பர்களிடம் கையேந்த வேண்டு்ம். அந்த நிலைமை பொருள் இல்லாதவனுக்கு வரக்கூடாது. ஏன் ஒருவருக்கும் வரக்கூடாது. இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டு மேலே படியுங்கள்.
ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி?
அதை இன்று பார்ப்போம்!
எட்டாம் வீட்டில் தேமே என்று தனித்திருக்கும் தீய கிரகங்களால், அந்தத் தீமை உண்டாகாது.
சனி லக்கினாதிபதியாகவும், எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கவும், அத்துடன் ஆறாம் அதிபதியைப் பார்த்துத் தொலைக்கவும் செய்யும் நிலையில், அப்படி அமர்ந்திருக்கும் சனியைச் செவ்வாய் தன் பார்வையில் வைத்திருந்தால், ஜாதகனுக்கு ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.
ஒரு தீய கிரகம் இன்னொரு தீய கிரகத்தினால் பாதிக்கப்பெற்ற நிலையில் - அதாவது சேர்க்கை அல்லது பார்வையால் - பாதிக்கப்பெற்ற நிலையில், ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிடும். உதாரணம் ராகு, செவ்வாயின் பார்வையைப் பெற்று இருக்கும் நிலையில், ஜாதகனுக்கு சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ ஒரு முறை அறுவை சிகிச்சை நடக்கும். அது அவைகள் இருக்கும் இடத்தை வைத்து, அறுவை சிகிச்சைக்கு உட்பட இருக்கும் உடலின் அவயங்கள் மாறுபடும்
அன்புடன்,
வாத்தியார்
19.11.22
Lesson 75 Lesson on Panjangam
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 75
New Lessons
பாடம்
எண்
75
தலைப்பு பஞ்சாங்கக் குறிப்புக்களால் என்ன பலன்?
பஞ்சாங்கத்தில், நாள், நட்சத்திரம்,
திதி, யோகம், கரணம் என்று ஒவ்வொரு நாளுக்கும்
குறிப்பிடப்பெற்றிருக்கும். அவற்றிற்கு
உரிய பொருள் என்ன என்பதைப் பற்றி முன்பே பதிவுகளில் எழுதியுள்ளேன்.
நாளை வைத்துத்தான் என்ன கிழமையில் நீங்கள் பிறந்தீர்கள் என்று தெரியும். நட்சத்திரத்தை வைத்துத்தான் நீங்கள் பிறந்த ராசி தெரியும். திதியை வைத்துத்தான் உங்கள் வீட்டில் உள்ள முன்னோர்கள் இறந்த நாள் தெரியவரும். அமாவாசை, பெளர்ணமி எல்லாம் தெரியவரும்.
அதுபோல யோகமும் முக்கியம். நீங்கள் அன்று செய்யும் செயல்கள் முடியுமா அல்லது ஊற்றிக்கொள்ளுமா? என்று தெரியவரும்.
யோகங்கள், அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்று மூன்று வகைப்படும். மரணயோகத்தன்று செய்யும் செயல்கள் திருப்தியாக முடியாது. சில செயல்கள் ஊற்றிக்கொள்வதோடு உங்களை அழைக்கழித்துவிடும்.
எனக்கு தெரிந்த உறவினர் ஒருவருக்கு, மரண யோகத்தன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அன்பர் வீடு திரும்பவில்லை. அவுட். மரணமடைந்துவிட்டார். மேலே சென்று விட்டார்.
மரண யோகத்தன்று யாருக்காவது கடன் கொடுத்தீர்கள் என்றால் பணம் திரும்ப வராது. காந்தி கணக்கில் எழுதிக் கதையை முடிக்க வேண்டியதாக இருக்கும்.
திருமண முகூர்த்த நாட்கள் எல்லாம் மரணயோக தினத்தன்று இருக்காது. வேண்டுமென்றால் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
Routine work எனப்படும் அன்றாட வேலைகளைச் செய்வதற்கெல்லாம் யோகத்தைப் பார்க்க வேண்டியதில்லை.
ஆனால் சுபகாரியங்களைச் செய்வதற்கும், சொத்துக்களை வாங்குவதற்கும், பணத்தை முதலீடு செய்வது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதற்கும் யோகத்தைப் பார்க்க வேண்டும்.
எங்கே பார்க்க முடியும்?
பஞ்சாங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாட்காட்டிகளில் குறிப்பிட்டு இருப்பார்கள்
அன்புடன்
வாத்தியார்
18.11.22
Lesson 74 Teaching Profession
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 74
New Lessons
பாடம்
எண்
74
தலைப்பு வாத்தியார் வேலை
வாத்தியார் என்றால் ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா’ என்று திரைப்படங்களில் மக்கள்
பாட்டுப்பாடி, பிரபலப் படுத்தும் வாத்தியார் அல்ல!
பள்ளிகளில், கல்லூரிகளில், கலாசாலையில் பாடம் சொல்லிகொடுக்கும், மற்றவர்களுக்குக் கற்பிக்கும்
வாத்தியார்.
அதாவது class teacher!
அதற்கு ஜாதகப்படி என்ன கிரக அமைப்பு வேண்டும்?
பத்தாம் வீட்டில் (House of profession) புதன் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது 10ம் வீட்டைப் புதன் தன் பார்வையில்
வைத்திருக்க வேண்டும். (That
is mercury aspecting the 10th house)
இல்லையென்றால் பத்தாம் வீட்டு அதிபதியுடன்
புதன் கூட்டணி (association)
போட்டிருக்க வேண்டும் அல்லது பத்தாம்
வீட்டுக்காரனும் புதனும் ஒருவரை ஒருவர்
பார்க்க வேண்டும் That is
aspecting each other
இந்த அமைப்புக்களில் ஏதாவது ஒன்று
உள்ளவர்கள்தான் வாத்தியாராக முடியும்!
--------------------------------------
எனக்கு இந்த அமைப்பு இல்லை. அதனால் நான்
வாத்தியார் வேலைக்குப் போகவில்லை.
ஆனாலும் புதன் லக்கினத்தைற்கு 7ல் வலுவாக அமர்ந்து லக்கினத்தைத் தன்
பார்வையில் வைத்திருப்பதால் பயிற்றுவிற்கும் திறமையைக் (Teachibg ability) கொடுத்தான். அதானால்தான் பதிவுகளில்
எழுதி நான் வாத்தியாராக ஆனேன். அதுவும் கர்மகாரகன் சனி தனது கடைசி தசா புத்தியில்
கொடி பிடித்துத் துவங்கி வைக்க, புதன்
திசையில், பதிவில் வாத்தியாராக முழு அங்கீகாரம்
கிடைத்தது!
அன்புடன்
வாத்தியார்
17.11.22
Lesson 73 Chance of career in Films
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 73
New Lessons
பாடம்
எண்
73
தலைப்பு திரைப்பட வாய்ப்பு
யாருக்குத்தான் ஆசை இல்லை? பெரும்பாலான
மக்களுக்குத் திரைப்படங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. சிலர் வெளியே சொல்லுவார்கள்.
சிலர் சொல்ல மாட்டார்கள். சிலர் கடும் முயற்சி செய்து அதில் ஒரு இடத்தைப்
பிடிப்பார்கள். சிலர் அதுவாகத் தேடி வரட்டும் என்று காத்திருப்பார்கள்.
பணம், பெயர், புகழ் என்று ஒரு சேர எல்லாம் கிடைக்கும் துறை ஒன்று உண்டென்றால், அது சந்தேகத்திற்கு இடமின்றி திரைப்படத்துறைதான்.
அதிலும் நடிகர் அல்லது பாடகர் என்றால் அதி விரைவில், புகழின் உச்சிக்குப் போய்விடலாம். எண்ணற்ற ரசிகர்கள் வேறு கிடைப்பார்கள்.
ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி?
அதை இன்று பார்ப்போம்!
சுக்கிரன் ஜாதகத்தில் வலுவாக (Strong) இருந்தால் எல்லாக் கலைகளும் எளிதில் கைவரும்!
நடிப்பும், பாடும் திறமையும் கலையோடு சம்பந்தப்பட்டது. அதை மனதில் கொள்க!
சரி, அதையே தொழிலாகக் கொள்வதற்கு என்ன அமைப்பு வேண்டும்?
தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுடன் சுக்கிரனுக்கு நல்ல சம்பந்தம் அல்லது நல்ல தொடர்பு இருக்க வேண்டும். நேரடியாகவும் இருக்கலாம் அல்லது மறைமுகமாகவும் இருக்கலாம். இருக்க வேண்டும்.
4ஆம்
வீட்டில் அல்லது 10ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலை. அல்லது 10ஆம்
வீட்டின் மீது சுக்கிரனின் பார்வை அல்லது 10ஆம்
வீட்டுக்காரனுடன் சுக்கிரன் கூட்டாக (ஒன்றாக) இருக்கும் நிலைமை ஆகியவை அந்த
வாய்ப்பை நல்கும்!
------------------------------------------------------------------------------
உதாரணம்
நடிகர் திரு ரஜினிகாந்த்தின் ஜாதகம்.
சிம்ம லக்கின ஜாதகர். சிம்ம லக்கினம் நாயகர்களுக்கு (Heroes) உரிய
லக்கினம்
பத்தாம் வீட்டின் (ரிஷப வீட்டின்) அதிபதியே சுக்கிரன்.
அதுவும் அவர் அம்சத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார்.
லக்கினாதிபதி சூரியன் கேந்திரத்தில் அமர்ந்து பத்தாம்
வீட்டைத் தன் பார்வையில் வத்திருப்பது ஒரு சிறப்பாகும்!
இந்த அமைப்புக்கள்தான் அவரை நடிகராக்கின!
அன்புடன்,
வாத்தியார்
================================================