மீண்டும் ஜோதிடம் - பகுதி 1
ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே
இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை!
அதாவது ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்குஇல்லை. அவர்கள் தயவு செய்து பதிவை விட்டு விலகவும்.
நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண் டும்
என்ற கட்டாயம் எதுவும் எனக்கு இல்லை! எதையும் எதிர்பார்த்து
என் நேரத்தைச் செலவழித்து இந்தப் பதிவுகளை எழுதவில்லை.
நான் கற்றுக் கொண்டவற்றை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது
ஒன்று மட்டுமே எனது மேலான நோக்கம்
நம்பிக்கையின் அடிப்படையில்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இன்னும் ஒரு வாரம் நீ உயிரோடு இருப்பாய் என்று யாரும் யாருக்கும்
உறுதி மொழி கொடுக்க முடியாது. இருப்போம் என்ற நம்பிக்கையில்
தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
"இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்" என்று
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிவைத்து
விட்டுப் போனார். ஆகவே மரணம் வரும் - அது வரும்போது
வந்து விட்டுப்போகிறது என்ற நம்பிக்கையில் இருப்பதைப்
போலவே எல்லாவற்றையும் எதிர் கொள்வோம்
ஒரு ஊருக்குப் பயணிக்கும் போது, பஸ்சில் செல்கிறோம்.
யாராவது, பஸ் ஓட்டுனரிடம் சென்று பேசியிருக்கிறோமா?
அவர் நன்றாக ஓட்டுவாரா - பத்திரமாகக் கொண்டுபோய்ச்
சேர்ப்பாரா என்று கவலைப் பட்டிருக்கிறோமா? அவருடைய
ஓட்டுனர் உரிமத்தை வாங்கிப் பார்த்திருக்கிறோமா?
ஏன் பார்ப்பதில்லை? ஒரு நம்பிக்கைதான் - இல்லையா?
அதுபோல நான் சொல்லித்தரும் பாடங்களை நம்பிக்கை
யோடு படியுங்கள். நிச்சயம் அது உங்களுக்கு வசப்படும்.
எனக்கு வசப்பட்டதும் அப்படித்தான்!
இதன் முதல் பகுதியில் 51 அத்தியாயங்கள் வரை எழுதி னேன்.
அதை எத்தனை பேர்கள் முழுமையாகப் படித்தீர்கள் எத்தனை
பேர்களுக்கு அது முழுமையாகப் புரிந்தது என்று என்னால்
அனுமானிக்க முடியவில்லை. அந்தப் பாடங்கள் முழுமையும்
செய்யுள்களையும், சூத்திரங்களையும் அடிப்ப டையாகக்
கொண்டு எழுதப்பெற்றது.
ஆனால் இந்தத்தொடர் வேறு ஒரு வழிமுறையில் கிரகங்களுக்கும், வீடுகளுக்கும் உரிய மதிப்பெண்களைக் கொண்டு பலன்களைத்
தெரிந்து கொள்ளும் அஷ்டவர்க்க எண் முறைப்படி உள்ள
ஜோதிடப் பாடங்களாகும்.
சுருக்கமாகச் சொன்னால் குறுக்கு வழிச் ஜோதிடமாகும்.
நமக்குத்தான் குறுக்கு வழியென்றால் மிகவும் பிடிக்குமே!
பத்து கிலோமீட்டர் தூரத்தைக் குறுக்கு வழியில் ஒரு கிலோமீட்டர்
தூரத்திலேயே அடைந்து விடலாம் என்பது எத்தனை வசதி!
ஆகவே, ஜோதிடப்பாடங்கள் முடியும்வரை பொறுமையாகப் படியுங்கள்.
அந்தந்தப் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு மட்டும் அவ்வப்போது
பின்னூட்டங்களில் கேள்விகள் கேளுங்கள். பொதுவான கேள்விகள்
அல்லது பாடத்திற்கு சம்பந்தமில்லாத கேள்விகளைத் தயவு செய்து
கேட்க வேண்டாம்.
உங்கள் பொதுச் சந்தேகங்களுக்கான விடைகள் அடுத்தடுத்த
பாடத்தில் தானாகவே வரும்!
இந்தப் பாடத்தின் முதல் பகுதியை - அதாவது கிரகங் களுக்கு
மதிப்பெண் கொடுத்து - ஒரு ஜாதகத்தின் மதிப்பை நிர்ணயம்
செய்யும் வழிமுறையை நான் சொல்லித் தருவதற்கோ அல்லது
நீங்கள் கற்றுக் கொள்வதற்கோ தேவை இன்றி இணையத்தில்
ஒரு மென்பொருள் கிடைக்கிறது (Free of Cost)
அதன் முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் அதை
உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதோடு, உங்கள் பிறந்ததேதி, நேரம், பிறந்த ஊர் ஆகிய
குறிப்புக்களை அதில் உள்ளிட்டு உங்களுடைய ஜாதகத்தையும் -
சரியாக - அதில் கணித்து சேமித்து வைத்துக் கொள் ளுங்கள்.
அஷ்டவர்க்கத்தின் மொத்த மதிப்பெண்களையும் கூட்டிப் பாருங்கள்.
கூட்டல் 337 தான் வரும். யாராயிருந்தாலும் 337 தான் வரும்.
ஐஷ்வர்யா ராய்க்கும் 337தான் நம்மூர் நடிகை காந்தி மதிக்கும் 337தான்.
இன்போஸிஸ் நாரயணமூர்த்திக்கும் அதுதான் வரும். அவருடைய
கார் டிரைவருக்கும் அதுதான்வரும்
பின் ஏன் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு? அதைச் சொல்லித்
தருவதுதான் இந்தத் தொடர்!
மென்பொருளுக்கான சுட்டி இங்கே!
(தொடரும்)
===================================
இது மென்பொருளின் தளம்
========================================================
மென்பொருளின் முகப்புப் பகுதி
Please Note: This Horoscope is a VVIP's Horoscope
========================================================
டேட்டா என்னும் மெனுவைக் கிளிக்கினால் கிடைக்கும் பகுதி. இதில் உங்களுடைய பிறப்பு விவரங்களைக் கொடுத்தால் ஜாதகம் கிடைக்கும்
===========================================================
SAV என்னும் இப்பகுதிதான் சர்வஷ்டகவர்க்கம் என்னும் மதிப்பெண்களுடன் வரும் பக்கமாகும்
=============================================================

நன்றி ஐயா..பரல்கள் அடிப்படையில் பலன்கள் பற்றிய பாடங்களுக்கு காத்திருக்கிறேன்..
ReplyDeleteஅய்யா, உங்களிடம் என்னுடைய ஜாதகத்தைப்பற்றி பலனை கேட்கலாமா?
ReplyDelete///தங்ஸ் said...
ReplyDeleteநன்றி ஐயா..பரல்கள் அடிப்படையில் பலன்கள் பற்றிய பாடங்களுக்கு காத்திருக்கிறேன்..///
Thanks Mr.Thangs
///அய்யா, உங்களிடம் என்னுடைய ஜாதகத்தைப்பற்றி பலனை கேட்கலாமா?///
ReplyDeleteஅன்புள்ள நண்பர் சிவாவிற்கு,
பாடங்களைத் தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே அனைத்தும் தெரியவரும்
யாரிடமும் கேட்க வேண்டாம். உங்கள் ஜாதகப் பலனை நீங்களே தெரிந்து கொள்ளலாம்
ஐயா, கால தாமதம் ஆனததாருக்கு மன்னிக்கவும், நான் மீண்டும் வந்து விட்டேன், இனி வாரம் இருமுறை வருவேன்.
ReplyDeletePS: attached MC for long term leave for past 3 weeks.
மரியாதைக்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம். வகுப்பறைக்கு அடியேன் புதியவன்.ஜோதிடத்தில் நம்பிக்கையுடவன்.எனது தந்தையாருக்கு சிறிது ஜாதகம் தெரியும்.கற்றுக்கொள்கிறாயா என என்னிடம் கேட்டார்.ஆனால் நான் தவறிவிட்டேன்,அவரும் தவறிவிட்டார்.தற்போது அவரின் இடத்தில் உங்களை காண்கிறேன்.மிகச்சிறந்த பணியினை மேற்கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
ReplyDeleteஇந்த முறை தவறாமல் படித்துக் கற்க விருப்பம். இறையருள் முன்னிற்கட்டும்.
ReplyDeleteவாத்தியார் ஐயா. நீங்கள் சொன்ன மென்பொருளைத் தரவிறக்கி வைத்திருக்கிறேன். பயன்படுத்திப் பார்க்கிறேன். நன்றிகள்.
கடவுளுக்கு நன்றி !
ReplyDeleteஉம்மை உலகத்திற்கு கொடுத்ததற்கு!
உமக்கு நன்றி !
உம்மை எமக்கு(வகுப்பறை)
கொடுத்ததற்கு !
ஐயா ! காலை வணக்கம் !நேரம் இருந்தால் இந்த ப்ளாக் கொஞ்சம் பாருங்கள்.
சு.பெருமாள்.
perumalsivapriyan.blogspot.com
ungal shevaikku mikka nandrigal !
ReplyDeleteungalukku endrum kadamaippattullen !
s.perumal
/////விமல் said...
ReplyDeleteஐயா, கால தாமதம் ஆனததாருக்கு மன்னிக்கவும், நான் மீண்டும் வந்து விட்டேன், இனி வாரம் இருமுறை வருவேன்.
PS: attached MC for long term leave for past 3 weeks.//////
இது இணைய வகுப்பு. இங்கே விடுப்புக் கடிதம் தேவையில்லை விமல்!
/////தியாகராஜன் said...
ReplyDeleteமரியாதைக்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம். வகுப்பறைக்கு அடியேன் புதியவன்.ஜோதிடத்தில் நம்பிக்கையுடவன்.எனது தந்தையாருக்கு சிறிது ஜாதகம் தெரியும்.கற்றுக்கொள்கிறாயா என என்னிடம் கேட்டார்.ஆனால் நான் தவறிவிட்டேன்,அவரும் தவறிவிட்டார்.தற்போது அவரின் இடத்தில் உங்களை காண்கிறேன்.மிகச்சிறந்த பணியினை மேற்கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.///////
முயன்றால் முடியாதது எதுவுமில்லை. கற்றுக்கொள்ளுங்கள். இறையருள் முன்னிற்கும்!
குமரன் (Kumaran) said...
ReplyDeleteஇந்த முறை தவறாமல் படித்துக் கற்க விருப்பம். இறையருள் முன்னிற்கட்டும்.
வாத்தியார் ஐயா. நீங்கள் சொன்ன மென்பொருளைத் தரவிறக்கி வைத்திருக்கிறேன். பயன்படுத்திப் பார்க்கிறேன். நன்றிகள்.///////
வாருங்கள் கூடல்காரரே! பயன் படுத்துங்கள். அவ்வப்பொது உங்களின் கருத்தையும் அறியத்தாருங்கள்! நன்றி!
/////S.perumal shivan (kaadhalshivan) said...
ReplyDeleteகடவுளுக்கு நன்றி !
உம்மை உலகத்திற்கு கொடுத்ததற்கு!
உமக்கு நன்றி !
உம்மை எமக்கு(வகுப்பறை)
கொடுத்ததற்கு !
ஐயா ! காலை வணக்கம் !நேரம் இருந்தால் இந்த ப்ளாக் கொஞ்சம் பாருங்கள்.
சு.பெருமாள்.
perumalsivapriyan.blogspot.com////////
எனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறென். அவ்வளவுதான்!
/////perumal sundaram said...
ReplyDeleteungal shevaikku mikka nandrigal !
ungalukku endrum kadamaippattullen !
s.perumal/////
நல்லது. நன்றி நண்பரே!
chanrean and sukran lookig good or bad
ReplyDeleteஅய்யா மிகவும் அருமையான வகுப்பு
ReplyDeletevinoth
நன்றி ஐயா!தஙகளின் வகுப்புகள், மிகவும் எளிமையாகவும், புரியும்படியும் உள்ளன.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி ஐயா.
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஎனது நண்பர் ஒருவர் மூலம் இன்றுதான் தங்கள் அலைக்குள் புகுந்து படித்துக்கொண்டிருக்கின்றேன். இயற்கையிலேயே எனது சிறுவயது முதல் astrology யில் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வருகிறேன். சிற்சில விஷயங்கள், அதாவது, அடிப்படையான சில மட்டும் தெரியும். தங்களின் பாடங்களின் மூலம் நான் தேர்ச்சி பெறுவேன் என்று நம்புகிறேன். என்னை வாழ்த்துங்கள்.
அய்யா,
ReplyDeleteவணக்கங்கள் கோடியில்! தங்களின் வலைக்குள் இன்றுதான் முதன்முதலாக நுழைந்துள்ளேன்.ஜோதிட பாடங்கள் படிக்கும் நோக்கத்துடன் முதல் பகுதியில் என் கண்களை பதித்துள்ளேன். ஆகா, என்ன அழகு வார்த்தைகள். நிச்சயம் நான் விரும்பும் வண்ணம் தேர்ச்சி பெறுவேன். வாழ்த்துங்கள்.
என்னை இவ்வலைக்குள் நுழைய உதவிய அன்பர் திரு பாலாஜி வேங்கடசாமி அவர்கள். அவருக்கு எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்.
Dear sir
ReplyDeleteparalkal parpathai neenkal munpu sonna attavanaiyinbati eppati parpathu? Utharanam kodungal pls
மென்பொருள் தரவிரக்கமுடியவில்லை. என்ன செய்யலாம்.சோதிடம் கற்பதில் ஆர்வமாக உள்ளேன்.ஈஸ்வரபாதம்
ReplyDelete/////Blogger idly said...
ReplyDeleteமென்பொருள் தரவிரக்கமுடியவில்லை. என்ன செய்யலாம்.சோதிடம் கற்பதில் ஆர்வமாக உள்ளேன்.ஈஸ்வரபாதம்////
Astrovision mini என்னும் மென்பொருள் இணையத்தில் கிடைக்கும். அதைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!