+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எவன் அரசனைப்போல வாழ்வான்?
எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி
இதன் முன்பாதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி வேண்டப்படுகிறார்கள்
எச்சரிக்கை:
இது ஜாதகத்தின் ஆயுள் ஸ்தானத்தைப் பற்றிய பகுதி. பாடம் விவரமாக எட்டு அல்லது பத்துப் பகுதிகளாக வரவுள்ளது. அனைவரும் பொறுமை காக்கவும். தங்கள் சொந்த ஜாதகத்தை வைத்து இடையில் யாரும் கேள்விகள் கேட்க வேண்டாம். சில பொது விதிகளை வைத்துக் குழம்பவும் வேண்டாம். அத்தனை பாடங்களையும் மனதில் உள்வாங்கிப் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும்.
--------------------------------------------------------------------
7
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஏழில் இருந்தால்:
பூரண ஆயுள் உண்டு.
மனைவியின் மேல் பிரியம் இருக்காது. பெண்ணாக இருந்தால் கணவனின் மேல் பிரியமாக இருக்க மாட்டாள்.
இருவரின் உறவிலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. நெருக்கம் இருக்காது.
சிலர் பெண் சகவாசத்தால் பொன், பொருளை இழக்க நேரிடும்
சிலர் தகாத பெண்களின் சிநேகத்தால், அவமானப்பட நேரிடும்
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்கு ஆயுள் குறையும். ஜாதகனின் மனைவி நோய்களால் பாதிக்கப்பெற்று ஜாதகனைப் படுத்தி எடுப்பாள். மேலும் இந்த அமைப்பு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனும் நோய் நொடிகளால் பாதிக்கப்படுவான்.
ஜாதகனுக்கு வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும், அதன் மூலம் அவன் பல பிரச்சினைகளை அங்கே சந்திக்க நேரிடும். இந்த அமைப்பு (8th & 7th lords association) ஒரு வலுவான சுபக்கிரகத்திப் பார்வையைப் பெற்றால், ஜாதகனுக்கு வெளி நாடுகளுக்குத் தூதரக அதிகாரியாகச் சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும்,. மதிப்பும், மரியாதையும் மிக்கவனாகத் திகழ்வான்.
----------------------------------------------------------------------------------
8.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தால்:
ஜாதகனுக்கு தீர்க்கமான ஆயுள் உண்டு!
வலுவாக இருந்தால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடம், வீடு, வாகனம் சொத்துக்கள் என்று எல்லாவகையான செல்வமும் சேரும். அதிகாரம், பட்டம், பதவிகள் என்று வாழ்க்கை அசத்தலாக இருக்கும்
எட்டாம் அதிபதி எட்டில் இருக்கும்போது உள்ள நிலைப்பாடு:
மேஷ லக்கினத்திற்கு எட்டாம் வீடு விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும்.ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
ரிஷப லக்கினத்திற்கு எட்டாம் வீடு தனுசு. அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு மகரம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
கடக லக்கினத்திற்கு எட்டாம் வீடு கும்பம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
சிம்ம லக்கினத்திற்கு எட்டாம் வீடு மீனம். அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
கன்னி லக்கினத்திற்கு எட்டாம் வீடு மேஷம். அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
துலா மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன் இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
விருச்சிக லக்கினத்திற்கு எட்டாம் வீடு மிதுனம். அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
தனுசு லக்கினத்திற்கு எட்டாம் வீடு கடகம். அதன் அதிபதி சந்திரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
மகர லக்கினத்திற்கு எட்டாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
கும்ப லக்கினத்திற்கு எட்டாம் வீடு கன்னி. அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை உச்ச பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
மீன லக்கினத்திற்கு எட்டாம் வீடு துலாம். அதன் அதிபதி சுக்கிரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
எட்டாம் அதிபதி ஆட்சி பலத்துடன் இருந்தால், ஜாதகன் தான் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலேயே செய்வான். அதனால், பல நஷ்டங்களை, தீமைகளை அவன் சந்திக்க நேரிடும்.
எட்டாம் அதிபதி (சேர்க்கை அல்லது பார்வையால்) கெட்டிருந்தால் மேற்சொன்னவற்றிற்கு எதிர்மாறான பலன்கள் கிடைக்கும் சிலரது தந்தை சிக்கலான சூழ்நிலையில் இறந்துவிடுவார். எட்டாம் அதிபதி கெட்டிருந்தால், ஜாதகன் எடுத்துச் செய்யும் முக்கிய செயல்கள் எல்லாம் தோல்வியில் முடியும். தவறான, ஒவ்வாத தொழில்களையே அவன் செய்வதற்குத் தூண்டப்படுவான். அதன்மூலம் கைப்பொருள் அனைத்தையும் இழப்பான்.
எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்இருக்காது. நல்ல பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்
-----------------------------------------------------------------------------------
9
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்:
பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது. கிடைத்தாலும் நாசமாகிவிடும்
பிள்ளைகளால் கடன் ஏற்படும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதன் மூலம் மோதல்கள், பிரிவுகள் உண்டாகும். என்னடா வாழ்க்கை என்னும் நிலை ஏற்படும்.
ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பெற்றிருந்தால் (உங்கள் மொழியில் சொன்னால் கெட்டிருந்தால்) ஜாதகனின் தந்தை ஒன்பதாம் அதிபதியின் தசா/புத்தியில் காலமாவார்.
இங்கே உள்ள எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத தன்மை நிலவும்.
இங்கே உள்ள எட்டாம் அதிபதி ஆட்சி அல்லது பார்வை/சேர்க்கை பலத்துடன் இருந்தால், ஜாதகனுக்குப் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தந்தைவழி உற்வுகளிடையே அவனுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். இல்லை என்றால் இதற்கு நேர் மாறான பலன்களே கிடைக்கும்!
--------------------------------------------------------------------------------------
10
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பத்தில் இருந்தால்:
ஜாதகன் ஒரே வேலையில் நிலைத்து இருக்கமாட்டான். அடிக்கடி தன் வேலையை அல்லது தொழிலை மாற்றிக்கொள்வான். சிலர் உறவினர்களிடமும், சக மனிதர்களிடமும், அரசாங்கத்துடனும் கெட்ட பெயரை உண்டாக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள்.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்குப் பத்தில், அந்த வீட்டுக்காரனுடன் சேர்ந்து இருந்தால், அவனுடைய வேலையில் அல்லது தொழிலில் வேண்டிய அளவு முன்னேற்றம் இருக்காது. தடைகளும், தாமதங்களும் மிகுந்திருக்கும்.
அதுவும் இந்த அமைப்பு, தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தால், அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படும். வேலை பார்க்கும் இடங்களிலும் உரிய மரியாதை இருக்காது. அதனால் சிலர் அதர்மவழியில் பொருள் ஈட்ட நேரிடும்.
அவர்களுடைய எண்ணங்களும் தவறானதாக இருக்கும். செயல்களும் சட்ட திட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும். சிலர் வருமானம் குறைந்து வறுமையில் உழல நேரிடும்.
இரண்டாம் வீட்டுக்காரன் பலமின்றி இருப்பதோடு, எட்டாம் வீட்டுக்காரனுடன் கைகோர்த்துப் பத்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவன் தலைமுடிக்கு மேல் கடன்கள் ஏற்படுவதோடு, கடனைத் திருப்பிக்கொடுக்கமுடியாமல் அவதிப்ப்ட நேரிடும். அவமானப்பட நேரிடும்.
எட்டாம் வீட்டுக்காரன் பத்தில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜீவனுமும் ஏற்றமுடையதாக இருக்கும். தீர்க்கமான ஆயுள் இருக்கும். அத்துடன் ஜாதகனுக்கு, திடீர் பொருள் வரவுகள் உண்டாகும். சிலருக்கு அவனுடைய உறவுகள் மரணமடைந்து, அவர்களுடைய செல்வங்கள், சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.
------------------------------------------------------------------------------------
11.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் இருந்தால்:
மூத்த சகோதரர்கள், சகோதரிகளை இழக்க நேரிடும்.
நேர்மையான வழியில் இல்லாது, பலவழிகளிலும் ஜாதகன் பொருள் ஈட்டுவான்.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் பதினொன்றாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், செய்யும் தொழில்கள் நஷ்டமடையும். பொருளை இழக்க நேரிடும். கடைசியில் கடனாளியாக நேரிடும்
இங்கே வந்தமரும் எட்டாம் வீட்டுக்காரன், சுபக்கிரகத்தின் பார்வையைப் பெற்றால், மேற்கூறிய கெடுதல்கள் இருக்காது. உடன் இருப்பவர்கள் கைகொடுப்பார்கள். உதவுவார்கள்.

12
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்:
தகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள்.
ஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது
இங்கே வந்தமரும் எட்டாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு எதிர்பாராத துன்பங்கள் தொல்லைகள் வந்து சேரும். நண்பர்களைப் பிரிய நேரிடும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுக் கைப்பொருள்களை இழக்க நேரிடும். சொத்துக்கள் கரையும்.
சிலர் தவறான நடவடிக்கைகளில் ஏடுபட்டுப் பிறகு மாட்டிக்கொண்டு துன்பப்படுவார்கள். தவறான நடவடிக்கைகள் என்பது, கடத்தல், பிறரை ஏமாற்றுதல், பெண்ணிடம் வன்புணர்ச்சி செய்தல், கள்ள நோட்டுப் பரிவர்த்தனை போன்ற செயல்கள் என்று பொருள் கொள்க
எட்டாம் அதிபதி இங்கே வந்து அதாவது பன்னிரேண்டில் அமர்ந்து, பன்னிரெண்டாம் வீட்டுக்காரன் திரிகோண வாழ்வு பெற்றால், ஜாதகன் ஆன்மிக வழியில் சென்று, பெரும் செல்வம் மற்றும் புகழை ஏற்படுத்திக்கொள்வான்.
எட்டாம் அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் பன்னிரெண்டாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், இருவரும் சேர்ந்து ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுப்பார்கள். ஜாதகன் அரசனைப்போல வாழ்வான் (அட, இது ஒன்றுதாங்க நன்றாக உள்ளது)

(தொடரும்)
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

//எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்:
ReplyDeleteதகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள்.
ஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது//
இது மிகச் சரியான சொற்றொடர். கும்ப லக்னம் கும்பராசி;எட்டாம் அதிபன் ஆன புதன் மகரத்தில் 12ல்; சுக்ரன் சேர்க்கை;சுக்ரன் யோககாரகன்;சுக்ரன் புதன், இரண்டு பாகைக்குள் சந்திரன்!ஆடிய ஆட்டம் என்ன!12ல் புதன் ஆனதால் சுக போகங்களுக்குப் பணம் தேட அண்டப் புளுகு ஆகாசப் புளுகு
கூறுவார்.பலரும் நம்பிப் பணம் கொடுத்து ஏமாந்தோம்.நன்றாக இருக்கும் தன் மனைவிக்கு கருப்பை எடுக்க வேண்டிய அறுவை சிகிச்சை என்று உடான்ஸை அவிழ்த்து விட்டு ஊர் முழுக்கக் கடன் பெற்று 1.5 லகரத்தை ஒரே மாதத்தில் அழித்தார். அந்த உத்தம மனைவி தன் நகைக்களையெல்லாம் விற்றுக் கடனை அடைத்தார்.
*எட்டாம் அதிபதி சுப கிரகம் அதிலும் குருவாக இருந்தால் தன்மை வேறுபடுமா? கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே- வா அல்லது யாராயினும் தன்மை அப்படித்தானா!
ReplyDelete*ராகு, கேதுவை விடுத்து, பார்க்கும் கெட்ட கிரகம்: லக்னாதியாகவோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தாநாதிபதியாகவோ இருந்தால் ஆதிபத்தியமா அல்லது தீய கிரகம் என்பதால் தீமையே விளையும் என்பதா?....
நன்றிகள் ஐயா!
Sir,
ReplyDeleteinitially you said, when 8th lord is in 8th, it is good.
then you said, when 8th lord in 8th house is in neecha, then there will be bad results.
but, when 8th lord is placed in 8th house, he will always be placed in his own house. how can he be in neecha ?
then, when do you say that 8th lord is not good, even if it placed in 8th house ?
kindly clarify.
Thank you.
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது இங்கு சரியாக பொருந்துவது போல் தெரிகிறது
ReplyDeleteஐயா!
ReplyDeleteஎட்டாம் அதிபதி எட்டில் இருந்தால்.....(ஆட்சிப் பலத்தில் என்பதுவும் வலுவான நிலை என்றால்)...... என்ற பகுதியில் உள்ள முதல் பத்திக்கும், கடைசி இரண்டு பத்திக்கும் முரண்பாடு தோன்றுகிறது ..... தட்டச்சிலோ (அ) வெட்டி ஒட்டியதில் மாற்றம் கண்டுள்ளது.
////kmr.krishnan said...
ReplyDelete//எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்:
தகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள்.
ஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது//
இது மிகச் சரியான சொற்றொடர். கும்ப லக்னம் கும்பராசி;எட்டாம் அதிபன் ஆன புதன் மகரத்தில் 12ல்; சுக்ரன் சேர்க்கை;சுக்ரன் யோககாரகன்;சுக்ரன் புதன், இரண்டு பாகைக்குள் சந்திரன்!ஆடிய ஆட்டம் என்ன!12ல் புதன் ஆனதால் சுக போகங்களுக்குப் பணம் தேட அண்டப் புளுகு ஆகாசப் புளுகு
கூறுவார்.பலரும் நம்பிப் பணம் கொடுத்து ஏமாந்தோம்.நன்றாக இருக்கும் தன் மனைவிக்கு கருப்பை எடுக்க வேண்டிய அறுவை சிகிச்சை என்று உடான்ஸை அவிழ்த்து விட்டு ஊர் முழுக்கக் கடன் பெற்று 1.5 லகரத்தை ஒரே மாதத்தில் அழித்தார். அந்த உத்தம மனைவி தன் நகைக்களையெல்லாம் விற்றுக் கடனை அடைத்தார்./////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
இனிய காலை வணக்கம்....
ReplyDeleteஎட்டாம் இடம் பாடம் அசத்தலாக செல்கின்றது ,,,,,
நன்றி வணக்கம்....
/////Alasiam G said...
ReplyDelete*எட்டாம் அதிபதி சுப கிரகம் அதிலும் குருவாக இருந்தால் தன்மை வேறுபடுமா? கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே- வா அல்லது யாராயினும் தன்மை அப்படித்தானா!//////
தன்மை வேறுபடும். அதற்காக வரவேண்டிய கஷ்டங்கள் வராமல் போகாது. கொடுக்க வேண்டியதை அவர் மென்மையாகக் கொடுப்பார்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
*ராகு, கேதுவை விடுத்து, பார்க்கும் கெட்ட கிரகம்: லக்னாதியாகவோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தாநாதிபதியாகவோ இருந்தால் ஆதிபத்தியமா அல்லது தீய கிரகம் என்பதால் தீமையே விளையும் என்பதா?....
நன்றிகள் ஐயா!
ஆதிபத்யம்! லக்கினாதிபதி, 5ற்குரியவன் எனும்போது, தன் பார்வையால் நன்மைகளைச் செய்ய அவர் கடமைப்பட்டவராவார்!
எட்டைப் பற்றி
ReplyDeleteஏதேனும் எழுதுவோமா !
சும்மா இரு.
கம்முனு கட.
இனியன பாலாஜி,
இங்கே குச்சியுடன் வந்துக்கினே கீரார்.
ஸைலன்ட் ப்ளீஸ்
சுப்பு ரத்தினம்.
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஎட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பகுதி பாடமும் மற்றும் விபரங்கள் யாவும் விளக்கங்களுடன் நன்கு புரியும்படியும் உள்ளது . ஆனால் திரும்பவும் பலமுறைகள் படித்து மனதில் வைக்க வேண்டும்.
மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-07-02
//////Pinky said...
ReplyDeleteSir,
initially you said, when 8th lord is in 8th, it is good.
then you said, when 8th lord in 8th house is in neecha, then there will be bad results.
but, when 8th lord is placed in 8th house, he will always be placed in his own house. how can he be in neecha ? then, when do you say that 8th lord is not good, even if it placed in 8th house ?
kindly clarify.
Thank you./////////
எட்டாம் அதிபதியின் நிலை பற்றிய விவரத்தை இப்பொது புதிதாகச் சேர்த்துள்ளேன். மீண்டும் ஒருமுறை படித்துப்பார்க்க வேண்டுகிறேன். முன்பு எழுதியதியதில் சிறு குழப்பம் இருந்தது உண்மைதான். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
/////NandaKumar said...
ReplyDeleteகெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது இங்கு சரியாக பொருந்துவது போல் தெரிகிறது////
அதில் சந்தேகமில்லை. கெட்டவன் உரிய இடத்தில் இன்னொரு கெட்டவனுடன் சேர்ந்தால் ராஜயோகம்தான். நன்றி!
Alasiam G said...
ReplyDeleteஐயா!
எட்டாம் அதிபதி எட்டில் இருந்தால்.....(ஆட்சிப் பலத்தில் என்பதுவும் வலுவான நிலை என்றால்)...... என்ற பகுதியில் உள்ள முதல் பத்திக்கும், கடைசி இரண்டு பத்திக்கும் முரண்பாடு தோன்றுகிறது ..... தட்டச்சிலோ (அ) வெட்டி ஒட்டியதில் மாற்றம் கண்டுள்ளது./////
எட்டாம் அதிபதியின் நிலை பற்றிய விவரத்தை இப்பொது புதிதாகச் சேர்த்துள்ளேன். மீண்டும் ஒருமுறை படித்துப்பார்க்க வேண்டுகிறேன். முன்பு எழுதியதியதில் (வெட்டி ஒட்டியதில்) சிறு குழப்பம் இருந்தது உண்மைதான். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
//////astroadhi said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம்....
எட்டாம் இடம் பாடம் அசத்தலாக செல்கின்றது ,,,,,
நன்றி வணக்கம்.... /////
எழுதுவதெல்லாம் நம் வகுப்பறைக் கண்மணிகளுக்காகத்தான். அது நன்றாக உள்ளது என்று நீங்கள் சொல்வதில் எனக்கும் மகிழ்ச்சியே ஆதிராஜ். நன்றி!
////sury said...
ReplyDeleteஎட்டைப் பற்றி ஏதேனும் எழுதுவோமா !
சும்மா இரு. கம்முனு கட.
இனியன் பாலாஜி, இங்கே குச்சியுடன் வந்துக்கினே கீரார்.
ஸைலன்ட் ப்ளீஸ்
சுப்பு ரத்தினம்.//////
அவர் அன்பே உருவானவர். அவர் இல்லத்திலேயே தன் தந்தையின் நினைவாகக் கோவில் ஒன்றை வைத்திருப்பவர். குச்சியுடன் அவர் வரமாட்டார். நீங்கள் உங்களுக்குத்தோன்றுவதை எழுதலாம்!
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பகுதி பாடமும் மற்றும் விபரங்கள் யாவும் விளக்கங்களுடன் நன்கு புரியும்படியும் உள்ளது . ஆனால் திரும்பவும் பலமுறைகள் படித்து மனதில் வைக்க வேண்டும்.
மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி///////
நல்லது. மனதில் ஏற்றுங்கள்!
எனக்கு 8ம் அதிபதி செவ்வாய் 5ல் உச்சமாக இருக்கிறார். ஒரு நாணயத்திற்கு 2 பக்கங்கள் இருப்பது போல் இ(எ)தற்கும் நன்மை தீமை என்று 2 பக்கங்கள் இருக்கின்றன. எந்த கிரகமும் தன் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவத்திற்கான அனைத்து நல்ல அல்லது தீய பலன்களையும் கொடுக்காதல்லவா. நமக்கு கொடுக்க வேண்டியதைத் தவறாமல் கொடுத்து நம்மிடம் இருந்து பிடுங்கிக் கொள்ள வேண்டியதையும் தவறாமல் பிடிங்கிக் கொள்வார்கள்.
ReplyDelete/////ananth said...
ReplyDeleteஎனக்கு 8ம் அதிபதி செவ்வாய் 5ல் உச்சமாக இருக்கிறார். ஒரு நாணயத்திற்கு 2 பக்கங்கள் இருப்பது போல் இ(எ)தற்கும் நன்மை தீமை என்று 2 பக்கங்கள் இருக்கின்றன. எந்த கிரகமும் தன் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவத்திற்கான அனைத்து நல்ல அல்லது தீய பலன்களையும் கொடுக்காதல்லவா. நமக்கு கொடுக்க வேண்டியதைத் தவறாமல் கொடுத்து நம்மிடம் இருந்து பிடுங்கிக் கொள்ள வேண்டியதையும் தவறாமல் பிடிங்கிக் கொள்வார்கள்./////
கரெக்ட்! உள்ளதை உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள். நன்றி ஆனந்த்!
ஐயா,
ReplyDeleteபாடம் அருமை...பின்னூட்ட விளக்கங்களுக்கும், திருத்தலுக்கும் நன்றி...
அன்புடன்,
செங்கோவி
வணக்கம் அய்யா , மிதுன லக்னத்திற்கு எட்டாம் ஒன்பது இடத்தின் அதிபதி சனி , சுக்கிரன் ராகு சேர்கையுடன் மீனத்தில், ஐந்தாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் பத்தில் நன்று தானே , அல்லது சனியின் எட்டாம் idam காரகத்தினால் அவஸ்தைகள் உண்டாகுமா.
ReplyDeleteKumar
Again and again thank you very much Sir..
ReplyDeleteI haven't much words to explain my feelings and contention. You have explained in such a way, there is no way to raise a doubt for me. Please keep the same style..
M. Thiruvel Murugan
/////SHEN said...
ReplyDeleteஐயா,
பாடம் அருமை...பின்னூட்ட விளக்கங்களுக்கும், திருத்தலுக்கும் நன்றி...
அன்புடன்,
செங்கோவி///
நல்லது. வாழ்க வளமுடன். வளர்க நலமுடன்!
/////CUMAR said...
ReplyDeleteவணக்கம் அய்யா , மிதுன லக்னத்திற்கு எட்டாம் ஒன்பது இடத்தின் அதிபதி சனி , சுக்கிரன் ராகு சேர்கையுடன் மீனத்தில், ஐந்தாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் பத்தில் நன்று தானே , அல்லது சனியின் எட்டாம் idam காரகத்தினால் அவஸ்தைகள் உண்டாகுமா.
Kumar////
இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை. பிறகு பார்க்கலாம்!
////M. Thiruvel Murugan said...
ReplyDeleteAgain and again thank you very much Sir..
I haven't much words to explain my feelings and contention. You have explained in such a way, there is no way to raise a doubt for me. Please keep the same style..
M. Thiruvel Murugan////
ஆகா, உங்கள் பாராட்டிற்கு நன்றி! எனது எழுத்து நடை எப்போதும் தளராமல் இருக்கும். அதற்கு நான் க்யாரண்டி (விளம்பரங்களில் வருவதைப் போல உச்சரித்துக்கொள்ளுங்கள்):-)))
When 8th lord placed in his own place at 5th and looking at 11th place is how far good as far as profit is concerned.
ReplyDeleteLagna is Simha and 5th & eight lord is Guru.11th lord is in Simha with Surya and Ragu.
I am at present living in abroad earning good but lonely.
Though property, wealth and income is good why I was forced to live abroad.Presently Surya dasa sukra bukthi.please answer
My lagna is simha.Surya,budhan and raagu are placed in Lagna.Guru at 5th with sani.Chandra in 4th Mars in 10th,Sukra in 2nd kethu in 7th.Present dasa is Surya and bukthi is Sukra.I am living in abroad earning good money. But i dont like to be here.What will happen in Chandra dasa when it comes from 16-11-2010 and i am comfortable in India itself with all property,wealth and money.
ReplyDeletePlease look at my 7th place and sukran's status and you will understand my situation. When it will change.Please answer.
//////Nandagopal said...
ReplyDelete1
When 8th lord placed in his own place at 5th and looking at 11th place is how far good as far as profit is concerned.
Lagna is Simha and 5th & eight lord is Guru.11th lord is in Simha with Surya and Ragu.
I am at present living in abroad earning good but lonely.
Though property, wealth and income is good why I was forced to live abroad.Presently Surya dasa sukra bukthi.please answer
2
My lagna is simha.Surya,budhan and raagu are placed in Lagna.Guru at 5th with sani.Chandra in 4th Mars in 10th,Sukra in 2nd kethu in 7th.Present dasa is Surya and bukthi is Sukra.I am living in abroad earning good money. But i dont like to be here.What will happen in Chandra dasa when it comes from 16-11-2010 and i am comfortable in India itself with all property,wealth and money.
Please look at my 7th place and sukran's status and you will understand my situation. When it will change.Please answer.//////
ஜோதிடப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், தங்கள் சொந்த ஜாதகத்தில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அதுபோல் வந்த மின்னஞ்சல்கள் அனைத்திற்கும் (100ற்கும் மேலாக) ஒரு தொடர் விளக்கத்தை முன்பு எழுதினேன். அது போல மீண்டும் ஒரு கேள்வி-பதில் sessionஐ வைக்க உள்ளேன். தற்சமயம் நேரம் இல்லை. இரண்டுமாதங்கள் பொறுத்திருங்கள்.
அந்தச் சமயம் பதிவில் அறிவிப்பு வரும். அப்போது உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். அனைத்திற்கும் பதில் பதிவிலேயே (in the blog) கிடைக்கும்
விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை விலாவாரியாக பட்டியலிட்டால் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று சமீபத்தில் வேண்டியிருந்தேன்.அது இப்படி 8ஆம் ஆதி சம்பந்தப்பட்ட பாட விளக்கமானதால் பல தீய விளைவுகளைப் பட்டியலிடும்படி ஆகிவிட்டதேன்னவோ உண்மை..உண்மையின் உரைகல்லாக இன்றைய பதிவு..உண்மை கசக்கும்..?
ReplyDelete/////minorwall said...
ReplyDeleteவிளைவுகள் எப்படி இருக்கும் என்பதை விலாவாரியாக பட்டியலிட்டால் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று சமீபத்தில் வேண்டியிருந்தேன்.அது இப்படி 8ஆம் ஆதி சம்பந்தப்பட்ட பாட விளக்கமானதால் பல தீய விளைவுகளைப் பட்டியலிடும்படி ஆகிவிட்டதேன்னவோ உண்மை..உண்மையின் உரைகல்லாக இன்றைய பதிவு..உண்மை கசக்கும்..?///////
உண்மை கசக்காது. உண்மையை எங்கு வேண்டுமென்றாலும் பேசலாம். உண்மைக்கு ஒரே வடிவம்தான் - வடிவேலன் கை வேலைப்போல! உங்கள் மொழியில் சொல்வதானால் தாயின் அன்பைப்போல மைனர்!
லக்னத்தில் இருந்து எட்டாம் இடத்தில் செவ்வாயும் சனியும் இருந்தால் அதனை செவ்வாய் தோஷம் என்று எடுத்து கொள்ளுதல் சரியா?
ReplyDelete///satheshpandian said...
ReplyDeleteலக்னத்தில் இருந்து எட்டாம் இடத்தில் செவ்வாயும் சனியும் இருந்தால் அதனை செவ்வாய் தோஷம் என்று எடுத்து கொள்ளுதல் சரியா? /////
எடுத்துக்கொள்ளலாம்! சரிதான்! சனியும் சேர்ந்ததால் தோஷம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிடும். அதற்காகப் பயப்படாதீர்கள். இதே அளவு தோஷமுள்ள பெண்ணை உங்களுக்காக இறைவன் படைத்திருப்பான். தேடிப்பிடித்து மணந்து கொள்ளுங்கள். கேள்வி வேறு நபருக்கானது என்றால், தேடிப்பிடித்து மணம் செய்து வையுங்கள்!
Sir,
ReplyDeleteWhat will happen if 8th lord is in 12th house and 12th lord is in 8th house?. Will this parivartana yield good results?.
Thanks,
Sathya.
ReplyDeleteSir,
ஜனன ஜாதகத்தில் வக்ரமாக இருக்கும் கிரகங்கள் கோட்சாரத்தில் வக்ரம் அடையும்போது நிச்சயம் நல்ல பலன்களே நடக்கும்!
I read the above line from the following link.
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5428
I am interesting to know your opinion.
regards,
krishna
நான் விருச்சிக லக்கினக்காரன், எட்டாம் அதிபதி புதன், 12 ஆம் அதிபதி சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார். சோ ?
ReplyDelete----------------------------
| | | | |
| | | | சந் |
----------------------------
| | | செவ்|
| | | ராகு|
------- --------
|கேது | | |
| | | |
-----------------------------
| | |சுக் |சூ,ச, |
| | லக் |புதன் |குரு |
----------------------------
பொதுவாக கும்ப லக்ன ஜாதகம் ஜோதிடரிடம் வருவதில்லை
ReplyDeleteஅப்படி வந்தாலும் கும்ப லக்னத்திற்கு சகோதரர்களால்
தான் பிரச்சினை வரும்.உடன்பிறந்த சகோதரர்கள் இல்லை என்றால்
அவர்கள் பிரச்சனை பண்ணுவதும் இல்லை ,யாருக்கும் பிரச்சனை கொடுப்பதும் இல்லை
ஏனென்றால் மூன்றாம் அதிபதி செவ்வாயாக இருப்பதால் தான்.
மேலும் லக்னத்தை குருவோ, ஒன்பதாமதிபதியோ, பார்த்தாலும்,அந்த புதனை
அவன் இருந்த வீடு அதிபதி பார்த்தாலும் பாதிப்பதில்லை.குருநாதர் தான்
பதில் சொல்லவேண்டும் .

/////Blogger sivasankaravadivelu said...
ReplyDeleteபொதுவாக கும்ப லக்ன ஜாதகம் ஜோதிடரிடம் வருவதில்லை
அப்படி வந்தாலும் கும்ப லக்னத்திற்கு சகோதரர்களால்
தான் பிரச்சினை வரும்.உடன்பிறந்த சகோதரர்கள் இல்லை என்றால்
அவர்கள் பிரச்சனை பண்ணுவதும் இல்லை ,யாருக்கும் பிரச்சனை கொடுப்பதும் இல்லை
ஏனென்றால் மூன்றாம் அதிபதி செவ்வாயாக இருப்பதால் தான்.
மேலும் லக்னத்தை குருவோ, ஒன்பதாமதிபதியோ, பார்த்தாலும்,அந்த புதனை
அவன் இருந்த வீடு அதிபதி பார்த்தாலும் பாதிப்பதில்லை.குருநாதர் தான்
பதில் சொல்லவேண்டும் ./////
பிரச்சினைகளுக்கு எந்த லக்கினகாரனும் விதிவிலக்கல்ல!
கும்பலக்கினக்காரனுக்கு ஒரு தனிப்பட்ட அபாயம் இருக்கிறது. அவனுக்கு லக்கினாதிபதியும்சனிதான். விரையாதிபதியும் (12th Lord) சனிதான். அதுபற்றித் தெரியுமா உங்களுக்கு? பழைய பதிவுகளைப் படியுங்கள்
Dear Sir, I cannot seem to locate the first part about the eighth house. Can someone help me please? Thanks heaps. Geetha
ReplyDelete////Blogger geetha said...
ReplyDeleteDear Sir, I cannot seem to locate the first part about the eighth house. Can someone help me please? Thanks heaps. Geetha/////
1.7.2010 அன்று அந்தப் பகுதி வெளியாகி உள்ளது. கிடைக்கும். படியுங்கள். உங்களுக்குத் தேடிக் கிடைக்கவில்லை என்றால், பின்னூட்டம் இடாமல் மின்னஞ்சல் மூலம் வாருங்கள். நான் உதவி செய்கிறேன்
என்னுடைய மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com