பறவையின் அப்பாவித்தனத்தோடு இருக்கும் நம்மை நோக்கிக்
காலன் வரும் காட்சி!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!
கவியரசர் கண்ணதாசன் “பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும்
ஒருவிதம்” என்று பாடி வைத்தார். அதை நான் சற்று மாற்றி, “மரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!” என்று தலைப்பிட்டு, மரணத்தை வகைப்படுத்தி எழுதியுள்ளேன்.
மரணம் என்றால் ஒன்றுதானே? அதில் வகைப்படுத்த என்ன இருக்கிறது என்று கேட்பவர்கள், பதிவை விட்டு விலகவும்.
இளவரசி டயானா கார் விபத்தில் இறந்தார். ஜுல்ஃபிகர் அலி புட்டோவும், சதாம் ஹூசெய்னும், அவர்கள் நாட்டின் அதிபராக இருந்த காலத்தில் நினைத்துப்பார்த்திருக்காத வகையில், தூக்கில் தொங்கவிடப்பட்டு, இறந்தார்கள்.
தேசத்தந்தை மகாத்மா காந்தி. கருப்பின மக்களின் தந்தை மார்ட்டின் லூதர் கிங், அன்னை இந்திரா காந்தி, ஜான் எஃப் கென்னடி ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்கள்.
ராஜீவ் காந்தி, பெனாஸிர் புட்டோ போன்றவர்கள் தீவிரவாதிகளின் வெடிகுண்டிற்கு இரையானார்கள்.
பொதுமக்களில் பலர், கார், இரயில், விமான விபத்தில் இறக்கிறார்கள். சிகிச்சையின்போது இறக்கிறார்கள் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
“ உடலுக்கு ஒன்பது வாசல்
மனதிற்கு எண்பது வாசல்” என்பது கவிஞனின் வாக்கு
மரணத்திற்கோ எண்ணிக்கை இல்லாத வாசல்கள்.
அவற்றில் சிலவற்றை இன்று பார்ப்போம்!
---------------------------------------------------------------------------------------
செவ்வாய், ராகு & கேது ஆகிய கிரகங்கள் ஒருவருக்கு மரணத்தைத் திடீர் என்று கொடுக்கும். அகால மரணம் என்று சொல்லலாம். இவற்றில் ராகுவின் பங்கு அதீதமானது.
அஸ்தமனத் திதிகள், குறிப்பாக அமாவாசைத் திதி நன்மையானதல்ல. ஜாதகன் பிறந்த வீட்டில் ஜாதகனுடன் வறுமையும் நுழைந்துவிடும். பல திரதிர்ஷ்டங்களையும் கூடவே கூட்டிக்கொண்டுவரும். அந்தத் திதியில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் இடம் வலுவாக இல்லையென்றால், அது அவளைச் சீக்கிரம் விதவையாக்கிவிடும்.
A lady born in this Tithi is said to become a widow early in her married life! (இது பொது விதி)
--------------------------------------------------------------------------------------
மரணம் வரும் வழி!
முதல் நிலை மாரக ஸ்தான அதிபதியின் வீடான ஏழாம் வீட்டில் இருக்கும் கிரகங்களும், அதைப் பார்க்கும் கிரகங்களும், ஜாதகனுக்கு வித்தியாசமான முறையில் மரணத்தை ஏற்படுத்துவதில் வல்லமை பெற்றவை.
எச்சரிக்கை: கொடுக்கப் பெற்றுள்ளவை அனைத்துமே பொதுப்பலன்கள். அதை மனதில் கொள்க!
1. சந்திரன் எட்டில் இருப்பதுடன், சனியின் நேரடிப் பார்வையையும் பெற்றால், ஜாதகன் அறுவை சிகிச்சையின்போது உயிரைவிட நேரிடும்.
2. தேய்பிறைச் சந்திரன், செவ்வாய், அல்லது சனி, அல்லது ராகுவுடன் கைகோர்த்துக்கொண்டு எட்டில் இருந்தால், ஜாதகன் நீரில் மூழ்கி இறப்பான். அல்லது நெருப்பில் சிக்கி இறப்பான். அல்லது ஆயுதங்களால் தாக்குண்டு இறப்பான்.
3. சூரியன், சந்திரன், செவ்வாய், சனி ஆகிய நான்கு கிரகங்களும் ஒன்றாக எட்டாம் வீடு, அல்லது ஐந்தாம் வீடு அல்லது ஒன்பதாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் மலை உச்சி போன்ற உயரமான இடங்களில் இருந்து தவறி விழுந்து இறக்க நேரிடும். அல்லது இடி, மின்னல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் சிக்கி இறக்க நேரிடும்.
4. தேய்பிறைச் சந்திரன் 6 அல்லது 8ல் இருக்க, ஜாதகனின் 4 & 10 ஆம் வீடுகளில் பாவக்கிரகங்கள் இருந்தால், ஜாதகன் எதிரிகளின் சூழ்ச்சியால் இறக்க நேரிடும். அல்லது எதிரிகளால் கொல்லப்படுவான்.
5. சூரியன், சந்திரன், புதன் ஆகிய 3 கிரகங்களும் ஏழில் இருக்க, சனி லக்கினத்திலும், செவ்வாய் விரையத்திலும் இருந்தால் ஜாதகன் வெளி தேசங்களில் இறக்க நேரிடும். அல்லது தூர தேசங்களுக்குப் போகும்போது இறக்க நேரிடும்.
6. புதனும், சுக்கிரனும் ஒன்றாக எட்டில் இருந்தால், ஜாதகன் தூக்கத்திலேயே இறந்து போவான் (அடடே, இது நன்றாக இருக்கிறதே!)
7. புதனும் சனியும் ஒன்றாக எட்டில் இருந்தால், ஜாதகன், அரச தண்டனையால் இறக்க நேரிடும்.
8. சந்திரனும் புதனும் 6 அல்லது 8ஆம் வீட்டில் ஜாதகனின் மரணம் விஷத்தால் (poison) ஏற்படும்.
9. சந்திரன், சனி, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக 8ல் இருந்தால் ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
10. செவ்வாய் 12லும், சனி 8லும் இருந்தாலும், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
11. சந்திரன் 12ல், சனி 8ல் இருந்தாலும் ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
12. ஆறில் செவ்வாய் இருந்து, அவர் மீது வேறு சுபப்பார்வை எதுவுமில்லை என்றால், ஜாதகனுக்கு மரணம் ஆயுதத்தால் ஏற்படும்.
13. ஆறாம் வீட்டில் ராகுவும் நான்காம் அதிபதியும் சேர்ந்து இருந்தால், ஜாதகன் திடீர் என இறக்க நேரிடும். அதாவது திருட்டு, கொள்ளை, கலவரம் போன்ற நிகழ்வுகளில் இறக்க நேரிடும்.
14. அந்த இடத்தில் ராகுவிற்குப் பதிலாக கேது இருந்தாலும், அதே முடிவுதான்!
15. எட்டாம் வீட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாவக் கிரகங்கள் இருந்தால், மரணம் வலி உடையதாக இருக்கும். அது புற்றுநோய் போன்ற கொடிய நோயாக இருக்கலாம் அல்லது விபத்தாக இருக்கலாம். அல்லது, கொலை, தற்கொலை போன்ற சம்பவங்களால் ஏற்படலாம்.
16. எட்டாம் வீட்டில் சுபக் கிரகங்கள் இருந்தால், மரணம் வலியில்லாததாகவும்,இயற்கையானதாகவும், அமைதியனதாகவும் இருக்கும்.
17. எட்டில் சந்திரன் இருக்க, எட்டாம் வீட்டில் இருபுறமும் பாவக்கிரகங்கள் இருந்தால் (அதாவது எட்டாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தல்) ஜாதகன் நீரில் மூழ்கி இறக்க நேரிடும்.
(இன்னும் உள்ளது. தொடரும்)
உங்களின் பொறுமை, பதிவின் நீளம், எனது தட்டச்சும் நேரம் ஆகியவற்றின் காரணமாக இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை நாளை!
கொடுக்கப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு அவற்றில் உள்ள கிரக அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடலாம். ஆகவே யாரும் குழப்பம் அடைய வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அன்புடன்,
வாத்தியார்.
வாழ்க வளமுடன்!
பாடத்திற்கு நன்றிகள் ஐயா!
ReplyDeleteமரணம் பலருக்கு கொடுமையானது
மரணம் சிலருக்கு இனிமையானது
மரணத்தின் வாசல் கதவை தட்டுபவனுக்கு இனிமை!
மரணம் வந்து வாசலக் கதவைத் தட்டினால் அது கொடுமை!
வந்தவேளை என்ன என்பதை உணர்ந்து
அந்த சொந்த வேளையை தர்மத்தோடு செய்தால்
மரணம் மட்டும் அல்ல மறுமையும் இனிமையே!
பிறப்பை விதி நிர்ணயிக்கிறது,
உறவுகளை சூழ்நிலை நிர்பந்தப் படுத்துகிறது,
மரணத்தை செய்த தர்மம் நிச்சயிக்கிறது.
பாடம் அருமை !!!
ReplyDelete//பொதுமக்களில் பலர், கார், இரயில், விமான விபத்தில் இறக்கிறார்கள். சிகிச்சையின்போது இறக்கிறார்கள் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.//
ReplyDeleteநிறுத்தாமல் சொல்லி இருந்தால் கொத்து குண்டு, தீவிரவாதின்னு முத்திரைக் குத்தி சுட்டுக் கொல்வது, (போபால்)விசவாயு, இன/ மதவெறி படுகொலைகளினாலும் மரணம் என்று கூடச் சொல்லி இருக்கலாம்.
எட்டாம் இடத்தில் அமர்ந்த சுபர் ஆயுள் மட்டும் கெட்டிப் படுத்திவிட்டு, மற்றவைகளில் காலை வாறிவிடுவாரா? ஏனெனில் இயற்கையான சுபர்கள் 6,8,12ல் அமர்ந்தால் பலன் இல்லை அல்லவா?
ReplyDelete"அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சு ஆனந்தப் பூந்தோப்பு" இந்த வரியின் ஆழம், அள்ளிக் கொடுத்துப் பழக்கப்பட்டவர்களின் மனங்களுக்குத்தான் தெரியும். இல்லையென்று வருந்துவோர்க்கு தேவையானபோது உதவி செய்யும் போது மனம் அடையும் திருப்தி, சுகம் வேறு எதிலும் இல்லை. இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் குறைவு. கண்ணதாசன் போன்ற ஞானிகள் இவ்வுணர்வுகளைப் புரிந்து கொண்டவர்கள். அபூர்வமான பாடல்களைத் தினமும் அள்ளித்தரும் உங்கள் வகுப்பறையில் ஜோசியத்தில் அதிக ஞானமில்லாமையால் இதுபோன்ற பாடல்களைப் படித்து இன்புறுகிறேன். மிக்க நன்றி. "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கிறேன். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக".
ReplyDelete////Alasiam G said...
ReplyDeleteபாடத்திற்கு நன்றிகள் ஐயா!
மரணம் பலருக்கு கொடுமையானது
மரணம் சிலருக்கு இனிமையானது
மரணத்தின் வாசல் கதவை தட்டுபவனுக்கு இனிமை!
மரணம் வந்து வாசலக் கதவைத் தட்டினால் அது கொடுமை!
வந்தவேளை என்ன என்பதை உணர்ந்து
அந்த சொந்த வேளையை தர்மத்தோடு செய்தால்
மரணம் மட்டும் அல்ல மறுமையும் இனிமையே!
பிறப்பை விதி நிர்ணயிக்கிறது,
உறவுகளை சூழ்நிலை நிர்பந்தப் படுத்துகிறது,
மரணத்தை செய்த தர்மம் நிச்சயிக்கிறது./////
நல்லது. நன்றி ஆலாசியம்!
/////SP Sanjay said...
ReplyDeleteபாடம் அருமை !!!/////
நல்லது. நன்றி சஞ்சை!
/////கோவி.கண்ணன் said...
ReplyDelete//பொதுமக்களில் பலர், கார், இரயில், விமான விபத்தில் இறக்கிறார்கள். சிகிச்சையின்போது இறக்கிறார்கள் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.//
நிறுத்தாமல் சொல்லி இருந்தால் கொத்து குண்டு, தீவிரவாதின்னு முத்திரைக் குத்தி சுட்டுக் கொல்வது, (போபால்)விசவாயு, இன/ மதவெறி படுகொலைகளினாலும் மரணம் என்று கூடச் சொல்லி இருக்கலாம்.////
பின்னூட்டத்தில் நீங்கள் வந்து சொல்வீர்கள் என்றுதான் அவற்றை விட்டு வைத்திருந்தேன். நினைத்தபடி வந்து சொல்லிவிட்டீர்கள் நன்றி கோவியாரே!
//////kmr.krishnan said...
ReplyDeleteஎட்டாம் இடத்தில் அமர்ந்த சுபர் ஆயுள் மட்டும் கெட்டிப் படுத்திவிட்டு, மற்றவைகளில் காலை வாறிவிடுவாரா? ஏனெனில் இயற்கையான சுபர்கள் 6,8,12ல் அமர்ந்தால் பலன் இல்லை அல்லவா?/////
வீட்டிற்கு 3 பலன்கள் வீதம் மொத்தம் 36 பலன்கள். அதில் பாதிதான் கிடைக்கும். ஒன்றிருந்தால் ஒன்றில்லை. அனைவருக்கும் அது பொதுவானது. அதனால்தான் ஆண்டி, அரசன் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் 337 பரல்கள். ஆரோக்கியம் இருந்தால், செல்வம் இருக்காது. நல்ல அன்னை கிடைத்தால் நல்ல மனைவி கிடைக்கமாட்டாள். நல்ல மனைவி கிடைத்தால், நல்ல பிள்ளைகள் கிடைக்காது. தீர்க்கமான ஆயுள் என்றால் சுகமான வாழ்க்கை மிஸ்ஸாகிவிடும். இப்படிப் பல விநோதங்கள். தொட்டிலை ஆட்டியவன் உயரத்திலே இருந்துவிட்டான்.
அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிச் சொன்னார்:
அது இருந்தா இது இல்லை
இது இருந்தா அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா
அவனுக்கு இங்கே இடமில்லை!
அதாவது மேலே போய்விடுவான்
/////Thanjavooraan said...
ReplyDelete"அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சு ஆனந்தப் பூந்தோப்பு" இந்த வரியின் ஆழம், அள்ளிக் கொடுத்துப் பழக்கப்பட்டவர்களின் மனங்களுக்குத்தான் தெரியும். இல்லையென்று வருந்துவோர்க்கு தேவையானபோது உதவி செய்யும் போது மனம் அடையும் திருப்தி, சுகம் வேறு எதிலும் இல்லை. இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் குறைவு. கண்ணதாசன் போன்ற ஞானிகள் இவ்வுணர்வுகளைப் புரிந்து கொண்டவர்கள். அபூர்வமான பாடல்களைத் தினமும் அள்ளித்தரும் உங்கள் வகுப்பறையில் ஜோசியத்தில் அதிக ஞானமில்லாமையால் இதுபோன்ற பாடல்களைப் படித்து இன்புறுகிறேன். மிக்க நன்றி. "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கிறேன். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக".///////
உங்களின் மனப்பூர்வமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஐயா!
Thanks for todays lessons
ReplyDeleteவணக்கம் அய்யா,
ReplyDeleteசிறப்பான பாடம்.
சென்றவார இறுதியில் திருப்தி மற்றும் காளகஸ்தி சென்று வந்தேன். வகுப்புக்கு வர இயலவில்லை.
திரு காளகஸ்தி கோவில் மிகவும் அழகாக இருந்தது.
காலசர்ப்ப தோஷ பரிகாரமும் செய்தேன் அய்யா.....
நன்றி அய்யா
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteDear Sir
ReplyDeletePaadam Arumai Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
நீங்கள் எது சொன்னாலும்
ReplyDeleteஅந்த 337 தான் . . .
337வது குறளாக வரும்
ஒரு போதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.
என்பதனை கருத்து ஊட்டி சரியான பாடலுடன் அமைந்த பாடத்திற்கு ஒரு சபாஷ்.
நீங்கள் வரிசைப் படுத்திய மரண பட்டியலில் கொலையும் தற்கொலையும் இல்லை . .
இது கேதுவின் கையில் தானே . . (?)
//////Ram said...
ReplyDeleteThanks for todays lessons///////
நல்லது. நன்றி ராம்!
///////////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Paadam Arumai Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////////
நல்லது. நன்றி ராஜாராமன்!
/////iyer said...
ReplyDeleteநீங்கள் எது சொன்னாலும்
அந்த 337 தான் . . .
337வது குறளாக வரும்
ஒரு போதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.
என்பதனை கருத்து ஊட்டி சரியான பாடலுடன் அமைந்த பாடத்திற்கு ஒரு சபாஷ்.
நீங்கள் வரிசைப் படுத்திய மரண பட்டியலில் கொலையும் தற்கொலையும் இல்லை . .
இது கேதுவின் கையில் தானே . . (?)////////
நல்லது. நன்றி நண்பரே!
////தமிழ்மணி said...
ReplyDeleteவணக்கம் அய்யா,
சிறப்பான பாடம்.
சென்றவார இறுதியில் திருப்பதி மற்றும் காளகஸ்தி சென்று வந்தேன். வகுப்புக்கு வர இயலவில்லை.
திரு காளகஸ்தி கோவில் மிகவும் அழகாக இருந்தது.
காலசர்ப்ப தோஷ பரிகாரமும் செய்தேன் அய்யா.....
நன்றி அய்யா////
தகவலுக்கு நன்றி நண்பரே!
அன்புடன் வாத்தியார் அவர்களுக்கு, தங்கள் பாடங்கள் அருமை. தங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா? ஒருவருக்கு மிதுன லக்னமாக இருந்தால் அவருக்கு 8ம் இடமாக வருவது மகரராசி அதன் அதிபதி சனி பகவான் அவர் இரண்டாமிடத்தில் அமர்ந்து 7ம் பார்வையாக தனது வீடான 8ம் வீட்டை பார்ப்பதாக இருந்தால் அதன் பலன் என்ன ? உங்கள் பாடத்தில் சனி இருக்கும் அல்லது பார்க்கும் இடத்திற்கும் உள்ள பலன்கள் கொடுத்துள்ளீர்கள். எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி
ReplyDeleteஅமாவாசையை பற்றி எழுதுங்கள் அய்யா. அமாவாசையில் பிறந்தால் என்ன நடக்கும்.
ReplyDeleteஎனக்கு 8ம் இடத்தில் புதன், சுக்கிரன். எதுவும் தெரியாமலே தூக்கத்தில் இறந்து போகலாம். உடன் செவ்வாயின் 4ம் பார்வையும் அந்த வீட்டின் மேல் விழுகிறது. இதன் பலனை பற்றி கவணமாக யோசித்துதான் முடிவுக்கு வர வேண்டும். இருப்பினும் இதை ஓராளவுக்கு அனுமானிக்க முடிகிறது.
ReplyDelete//எட்டாம் இடத்தில் அமர்ந்த சுபர் ஆயுள் மட்டும் கெட்டிப் படுத்திவிட்டு, மற்றவைகளில் காலை வாறிவிடுவாரா?//
ReplyDeleteஇதற்கு வேறு ஏதாவது ராஜ யோகங்கள் இருக்கின்றனவா என்பதையும் பார்த்து விட்டுதான் முடிவுக்கு வர முடியும். என் ஜாதகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். புதன், சுக்கிரன் சேர்ந்து இருப்பது தர்ம கர்மாதிபதி யோகமும் கூட. 8ல் இருப்பது யோகம் இல்லை என்று அர்த்தமில்லை. இது அதற்குத்தகுந்த வகையில் வேலை செய்யும் என்றுதான் அர்த்தம்.
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteமரணம் வரும் வழியினை எளிய முறையில் விபரங்களுடன் தெரிவித்ததோடு,
அனைத்துமே பொதுப்பலன்கள் என்ற முக்கியமான எச்சரிக்கையையும் தவறாமல் கொடுத்து,வகுப்பில் படிப்போர்களின் மனதிற்கு நிம்மதியை ஏற்ப டுத்தியுள்ளீர்கள்
மற்றவற்றையும் பார்த்து முடிவு மேற்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வதற்கு நினைவூட்டும் விதம் நன்றாக உள்ளது.நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-07-26
//////Madurai Kumaran said...
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அவர்களுக்கு, தங்கள் பாடங்கள் அருமை. தங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா? ஒருவருக்கு மிதுன லக்னமாக இருந்தால் அவருக்கு 8ம் இடமாக வருவது மகரராசி அதன் அதிபதி சனி பகவான் அவர் இரண்டாமிடத்தில் அமர்ந்து 7ம் பார்வையாக தனது வீடான 8ம் வீட்டை பார்ப்பதாக இருந்தால் அதன் பலன் என்ன ? உங்கள் பாடத்தில் சனி இருக்கும் அல்லது பார்க்கும் இடத்திற்கும் உள்ள பலன்கள் கொடுத்துள்ளீர்கள். எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி/////
இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை.
ஜோதிடப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், தங்கள் சொந்த ஜாதகத்தில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அதுபோல் வந்த மின்னஞ்சல்கள் அனைத்திற்கும் (100ற்கும் மேலாக) ஒரு தொடர் விளக்கத்தை முன்பு எழுதினேன். அது போல மீண்டும் ஒரு கேள்வி-பதில் sessionஐ வைக்க உள்ளேன். தற்சமயம் நேரம் இல்லை. இரண்டுமாதங்கள் பொறுத்திருங்கள்.
அந்தச் சமயம் பதிவில் அறிவிப்பு வரும். அப்போது உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். அனைத்திற்கும் பதில் பதிவிலேயே (in the blog) கிடைக்கும்
/////rajesh said...
ReplyDeleteஅமாவாசையை பற்றி எழுதுங்கள் அய்யா. அமாவாசையில் பிறந்தால் என்ன நடக்கும்.///////
ஆமாவாசையில் பிறந்தால் பயப்படத்தேவையில்லை! நான் அமாவாசையில் பிறந்தவன்தான். சின்ன வயதில் கஷ்டப்பட நேரிடும். வேறு ஒன்றும் பெரிதாக ஆகிவிடாது. ஜாதகத்தின் மற்ற அமைப்புக்கள் ஜாதகனுக்குக் கை கொடுக்கும்!
/////ananth said...
ReplyDeleteஎனக்கு 8ம் இடத்தில் புதன், சுக்கிரன். எதுவும் தெரியாமலே தூக்கத்தில் இறந்து போகலாம். உடன் செவ்வாயின் 4ம் பார்வையும் அந்த வீட்டின் மேல் விழுகிறது. இதன் பலனை பற்றி கவணமாக யோசித்துதான் முடிவுக்கு வர வேண்டும். இருப்பினும் இதை ஓராளவுக்கு அனுமானிக்க முடிகிறது.//////
நல்லது. உங்களுக்குத்தான் ஜோதிடம் நன்கு பிடிபடுமே! பார்த்து அனுமானித்துக்கொள்ளுங்கள் ஆனந்த்!
/////ananth said...
ReplyDelete//எட்டாம் இடத்தில் அமர்ந்த சுபர் ஆயுள் மட்டும் கெட்டிப் படுத்திவிட்டு, மற்றவைகளில் காலை வாறிவிடுவாரா?//
இதற்கு வேறு ஏதாவது ராஜ யோகங்கள் இருக்கின்றனவா என்பதையும் பார்த்து விட்டுதான் முடிவுக்கு வர முடியும். என் ஜாதகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். புதன், சுக்கிரன் சேர்ந்து இருப்பது தர்ம கர்மாதிபதி யோகமும் கூட. 8ல் இருப்பது யோகம் இல்லை என்று அர்த்தமில்லை. இது அதற்குத்தகுந்த வகையில் வேலை செய்யும் என்றுதான் அர்த்தம்.///////
உண்மை. “பாட்டில் எத்தனை பிழை இருக்கிறதோ அதற்குத் தகுந்த மாதிரி பரிசுத் தொகையைக் குறைத்துக் கொடுங்கள்” என்று தர்மி சொல்வதைப் போல, அததற்குத் தகுந்தாற்போலப் பலன்கள் கிடைக்கும். ஆனால் இல்லாமல் போகாது!
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
மரணம் வரும் வழியினை எளிய முறையில் விபரங்களுடன் தெரிவித்ததோடு,
அனைத்துமே பொதுப்பலன்கள் என்ற முக்கியமான எச்சரிக்கையையும் தவறாமல் கொடுத்து,வகுப்பில் படிப்போர்களின் மனதிற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளீர்கள்
மற்றவற்றையும் பார்த்து முடிவு மேற்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வதற்கு நினைவூட்டும் விதம் நன்றாக உள்ளது.நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!
செவ்வாய் 12ல் சனி 8 ல் இருக்க, ஆயுதம் மரணத்திற்கு காரணமாக இருக்கும் என்பது
ReplyDeleteஆபரேஷன் சக்ஸஸ் என்று சர்ஜன் தியேட்டரை விட்டு போன பிறகு பேஷன்ட் அம்பேல் ஆகும்
கேசுகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
சுப்பு ரத்தினம்.
//////sury said...
ReplyDeleteசெவ்வாய் 12ல் சனி 8 ல் இருக்க, ஆயுதம் மரணத்திற்கு காரணமாக இருக்கும் என்பது
ஆபரேஷன் சக்ஸஸ் என்று சர்ஜன் தியேட்டரை விட்டு போன பிறகு பேஷன்ட் அம்பேல் ஆகும்
கேசுகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
சுப்பு ரத்தினம். ///////
:-)))))))
ஐயா வணக்கம்...!
ReplyDeleteஇன்றைய பாடமும் வழக்கம் போல் இரத்தின சுருக்கம், அருமை.. எஞ்சிய பகுதிகளுக்காகவும் காத்திருக்கிறேன்.. சில அலுவல்கள் காரணமாக கடந்த 2 நாட்களாக வகுப்புக்கு வர இயலவில்லை, மன்னிக்கவும்.. என்னுடைய பெயர் தங்களுக்கு பிடித்துள்ளது என்பதை அறிந்ததும் மிக்க மகிழ்ச்சியுற்றேன்.. பெயர் வைத்த என் தந்தையாருக்கு நன்றிகள் (அவரும் ஓரளவிற்கு ஜோதிடம் அறிந்தவர்). ஒரு படத்தின் மூலமே தாங்கள் சொல்ல நினைத்தது என்ன (பறவையை மலைப்பாம்பு உண்ண வரும் படம்) என்பதை உணர வைத்து விட்டீர்கள்.... தங்கள் பாடங்களைப் படித்தபின், விதி வலியது, அதை விட வலியவன் இறைவன் என்னும் தெளிவு பிறக்கின்றது. "மன இருளைப் போக்கி தெளிவைத் தருபவர் எவரோ அவரே குரு" என்பதற்கு இணங்க, குருவிற்கு இலக்கணமாக வாழ்ந்து வரும் தங்களை குருவாகப் பெற்ற நாங்கள் அனைவரும் பக்கியசாலிகள்...
மிக்க நன்றிகளுடன்
தங்கள் அன்புமாணவன்
மா. திருவேல் முருகன்
மிக்க நன்றி . ஒரு ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் அல்லது தேய்பிறை சந்திரன் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது ?
ReplyDeleteமிக்க நன்றி .
அன்புடைய வாத்தியாரே,
ReplyDeleteஎமக்கோர் ஐயம்.
ஞானியர் மகாசமாதி அடைகின்றனரே, அவர்களும் இந்த உடல் எப்பொழுது மரணமடைய வேண்டும் என்று கணித்து அப்பொழுது தான் தங்கள் உடலை உதறுவார்களோ? (அதை மரணம் என்று அழைக்க மனம் ஒவ்வவில்லை - காலதேவன் பலவந்தமாக உயிரையும் உடலையும் நம் விருப்பமின்றி பிரித்தால் மரணம். தானே பற்றற்று, உடலை உதறுவது மகாசமாதி இல்லையா...... அவர்களும், இந்த உடல் இந்த தசா புக்தியில் மரணம் அடைய வேண்டும் என்று அறிந்து/கணித்து உடலை விடுவாரா, அல்லது ஞாநியானதும் அவர்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் விட்டு விட அதிகாரம் உள்ளதா?
நன்றி.........
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.......
அன்புடைய வாத்தியாரே,
ReplyDeleteஎமக்கோர் ஐயம்.
ஞானியர் மகாசமாதி அடைகின்றனரே, அவர்களும் இந்த உடல் எப்பொழுது மரணமடைய வேண்டும் என்று கணித்து அப்பொழுது தான் தங்கள் உடலை உதறுவார்களோ? (அதை மரணம் என்று அழைக்க மனம் ஒவ்வவில்லை - காலதேவன் பலவந்தமாக உயிரையும் உடலையும் நம் விருப்பமின்றி பிரித்தால் மரணம். தானே பற்றற்று, உடலை உதறுவது மகாசமாதி இல்லையா...... அவர்களும், இந்த உடல் இந்த தசா புக்தியில் மரணம் அடைய வேண்டும் என்று அறிந்து/கணித்து உடலை விடுவாரா, அல்லது ஞானியானதும் அவர்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் விட்டு விட அதிகாரம் உள்ளதா?
நன்றி.........
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.......