மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.7.10

சொல்லச் சொல்ல இனிக்குதடா!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சொல்லச் சொல்ல இனிக்குதடா!

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 11
புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம்
புகழ் பெற்ற பாடல்கள்தான்!
----------------------------------------------
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
   உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல)

பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
   உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல)

பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
   முருகா அமைதி கொண்டது - அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
   கந்தா பெருமை கொண்டது - முருகா
(சொல்லச் சொல்ல)

உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
   உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
   உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது - குமரா
(சொல்லச் சொல்ல)

முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
   அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
   அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ - முருகா
(சொல்லச் சொல்ல)

படம் : கந்தன் கருணை
இசை : K.V. மகாதேவன்
ஆக்கம்: கண்ணதாசன்
பாடியவர்: P.சுசீலா
---------------------------------------------------------------------
பாடலின் ஒலி வடிவம்: இங்கே அழுத்தவும்!

--------------------------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

14 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 11 க்கான பாடல்
    "சொல்லச் சொல்ல இனிக்குதடா"!
    ஒலியுடன் ஒளியும பார்த்து பரவசம் அடைய முடிந்தது.முருகன் படமும் நன்றாக உள்ளது.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-17

    ReplyDelete
  2. இந்த பாடலின் கடைசி இரண்டு வரிகள் உள்ளத்தை தொட வைக்கிறது . .

    அதனால் தானே (கடவுள் இல்லாக் கட்சிக் காரர்களும் கூட) தமிலும் தங்கிலீத்திலும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறோம் . .

    திருச்செந்துரின் கடல் ஓரத்தில் என வரும் பாடல் எப்போ வரும் என காத்திருக்கிறேன் . .

    கனமாக சீர்கோழியார் இனமான டிஎம்எஸ் என மாறி மாறி முருகனுக்கு பாமாலை சூடும் அந்த பாடல் அரை நிமிட நேர மட்டில் என அருணகிரியார் சொல்லிச் சென்றதை . . .
    அந்த வடிவேல் அழகனை மனக்கண் முன் கொண்டு நிறுத்தும். .

    ReplyDelete
  3. En appan Murugan padal arumai. We can really sing along with the video with the lines given. But unfortunately some lines were missing in the audio. Still many thanks for giving us such a beautiful song. Keep it up.

    ReplyDelete
  4. "அழ‌கன் முருகன் வந்தான் வான்
    அமுதின் வடிவம் கண்டேன்
    குமரன் நான் தான் என்றான்
    கூறும் அழகைக் கண்டேன்" என்று ஒரு பாடல் உண்டு.
    பாலமுரளியோ, ஜேசுதாசோ பாடியது.கேட்க மிக இனிமை.

    ReplyDelete
  5. கவியரசரின் கவிவரிகளில்
    சுசீலா-ம்மாவின் தேன் குரலில்
    ஒரு இனிமையான பாடல்!
    வாத்தியார் அவர்களுக்கு மகிழ்வான
    வணக்கங்கள்!
    நன்றிகள்!

    ReplyDelete
  6. வணக்கம் அய்யா,
    முருகன்பாடல் பரவசபடகூடிய பாடல்.
    நினைவு படுத்தியதர்க்கு
    நன்றீ ,அரிபாய், வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 11 க்கான பாடல்
    "சொல்லச் சொல்ல இனிக்குதடா"!
    ஒலியுடன் ஒளியும பார்த்து பரவசம் அடைய முடிந்தது.முருகன் படமும் நன்றாக உள்ளது.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  8. /////iyer said...
    இந்த பாடலின் கடைசி இரண்டு வரிகள் உள்ளத்தை தொட வைக்கிறது . .
    அதனால் தானே (கடவுள் இல்லாக் கட்சிக் காரர்களும் கூட) தமிலும் தங்கிலீத்திலும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறோம் . .
    திருச்செந்துரின் கடல் ஓரத்தில் என வரும் பாடல் எப்போ வரும் என காத்திருக்கிறேன் . .
    கனமாக சீர்கோழியார் இனமான டிஎம்எஸ் என மாறி மாறி முருகனுக்கு பாமாலை சூடும் அந்த பாடல் அரை நிமிட நேர மட்டில் என அருணகிரியார் சொல்லிச் சென்றதை . . .
    அந்த வடிவேல் அழகனை மனக்கண் முன் கொண்டு நிறுத்தும். .///////

    ஆகா, கூடிய விரைவில் வலை ஏற்றிவிட்டால் போகிறது! நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Balasubramanian Pulicat said...
    En appan Murugan padal arumai. We can really sing along with the video with the lines given. But unfortunately some lines were missing in the audio. Still many thanks for giving us such a beautiful song. Keep it up.////

    நல்லது. நன்றி பாலா!

    ReplyDelete
  10. /////kmr.krishnan said...
    "அழ‌கன் முருகன் வந்தான் வான்
    அமுதின் வடிவம் கண்டேன்
    குமரன் நான் தான் என்றான்
    கூறும் அழகைக் கண்டேன்" என்று ஒரு பாடல் உண்டு.
    பாலமுரளியோ, ஜேசுதாசோ பாடியது.கேட்க மிக இனிமை.////

    உங்களின் பின்னூட்டத்திற்கும் தகவலுக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. ////அண்ணாமலை..!! said...
    கவியரசரின் கவிவரிகளில்
    சுசீலா-ம்மாவின் தேன் குரலில்
    ஒரு இனிமையான பாடல்!
    வாத்தியார் அவர்களுக்கு மகிழ்வான
    வணக்கங்கள்!
    நன்றிகள்!////

    நல்லது. நன்றி அண்ணாமலை!

    ReplyDelete
  12. ///////aryboy said...
    வணக்கம் அய்யா,
    முருகன்பாடல் பரவசப்படக்கூடிய பாடல்.
    நினைவு படுத்தியதற்கு
    நன்றி ,அரிபாய், வாழ்க வளமுடன்//////

    நல்லது. நன்றி அரிபாய்!

    ReplyDelete
  13. கேட்ட பாடல்தான் படிக்கும் போது மேலும் இன்பம்தாங்க..

    ReplyDelete
  14. /////தாராபுரத்தான் said...
    கேட்ட பாடல்தான் படிக்கும் போது மேலும் இன்பம்தாங்க.. //////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com