மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.3.08

ஓ போடு பாட்டும் வாத்தியாரும்!

ஓ போடு பாட்டும் வாத்தியாரும்

ஓ போடு பாட்டிற்கும் வாத்தியாருக்கும் என்னய்யா சம்பந்தம்?
இருக்கிறதே - படத்தைப் பாருங்கள்!


=========================================================


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


============================================================
நன்றி தினமலர் மற்றும் ஓவியர் மதி

20.3.08

சக்கையாகப் போவது எது?

சக்கையாகப் போவது எது?

ஒரு திரைப்படப் பாடலை இன்று பண்பலையில் கேட்க நேர்ந்தது.
கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்ததது.

பாடலைப் பாருங்கள்:

நாயகன்:
சட்டை போட்ட சாத்துக்குடி
சரசம் பண்ண சேர்த்துக்கடி

நாயகி:
மச்சான் பேரு தூத்துக்குடி
முத்துக்குளிக்க சேர்த்துக்கடா

இப்பொதெல்லாம் 'டா' போட்டுத்தான் நாயகி
நாயகனைக் கொஞ்சுகிறாள் அல்லது கூப்பிடுகிறாள்
பாவம் அந்த நாயகர்கள்(?)

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் - நமது இளைஞர்
களுக்கு என்ன கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது
தெரியவில்லை - புரியவில்லை!

வாழ்க்கை, வினைப் பகுதி (action period) எதிர்வினைப் பகுதி
(reaction period) என்ற இரண்டு பகுதிகளை உடையதாகும்

வினைப் பகுதியில் நீ என்னென்ன செய்கிறாயோ அதெல்லாம்
எதிர் வினைப் பகுதியில் உன்னை விடாது உன்னிடமே வந்து சேரும்.

வரவிற்கு மேல் செலவு செய்து கொண்டிருப்பவன்
எதிர்காலத்தில் கடனில் மூழ்கித் தத்தளிப்பானே அதுபோல!

இன்று கலக்கலாகத் திரிகின்றவன் வருங்காலத்தில்
கண் கலங்கித் திரிவான்.

நல்லது கெட்டதுகளை உணர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை!

சாத்துக்குடிகளைத் தேடி அலைபவனைக் காலன் பிழிந்து
ஜூசாக்கிக் குடித்துவிடுவான். பழத்தோல் குப்பைக் கூடைக்குப்
போவது போல அப்படி அலைந்தவனும் குப்பைக்
கூடைக்குதான் போக வேண்டியதாயிருக்கும்!

வாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்து - வகுப்பறை
மாணவர்கள் தங்களை நெறிப்படுத்திக் கொள்ள உதவலாம்
என்றுள்ளேன்

உங்கள் கருத்து என்ன?

ஜோதிடப் பாடங்களுக்கு மத்தியில் இனி தத்துவப் பாடங்களும்
நடத்தப்படும். அவை உரை வடிவாகவும் இருக்கும் அல்லது
உரையுடன் பாடல் வடிவாகவும் இருக்கும்.

சொந்த சரக்காகவும் இருக்கும், தேடிப் பிடித்து வந்த சரக்காகவும்
இருக்கும். ஆனால் மனதைத் தொடும்படியாக இருக்கும்.
ஆகவே அனைவரையும் படித்துக் கேட்டுப் பயனுற வேண்டுகிறேன்

தத்துவப்பாடம் - 1



இசைஞானி இளையராஜா அவர்கள் பாடிய தத்துவப் பாடல்
உரை மற்றும் ஒலி வடிவத்துடன் இன்று பதிவு செய்யப்படுகிறது.

பாடல் எளிமையாக இருப்பதால் விளக்கம் தேவையில்லை
என்று விட்டு விட்டேன்
-------------------------------------------------------







ஓஓஓஓஓஓஓ.................................

அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!

அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப் போகும் கரும்பு! - ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு

பந்த பாசச் சேற்றில்
வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கை யாற்றில்
இந்த அழுக்குப் போகும்?

அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!

குத்தம் குறை ஏதுமற்ற
ஜீவன் இங்கு யாரடா?
குத்தம் என்று யாரும் இல்லை
பாவ மூட்டை தானடா!

சிவனைக்கூட பித்தன் என்று
பேசு கின்ற ஊரடா
புத்திகெட்ட மூடர்க் கென்றும்
ஞானப் பார்வை ஏதடா?

ஆதி முதல் அந்தம்
உன் சொந்தம் உன் பந்தம்
நீ உள்ளவரைதான்
வந்து வந்து கூடும்
கூத்தாடும் விட்டோடும்
ஒர் சந்தைக் கடைதான்

இதில் நீயென்ன, நானென்ன
வந்தாலும் சென்றாலும்
என்னாச்சு விட்டுத்தள்ளு!

அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!

கையும் காலும் மூக்கும் கொண்டு
ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேர்த்து வச்ச
பாவம் யாவும் தீரனும்

ஆட ஆடப் பாவம் சேரும்
ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று
ஓடிப் போன தாரடா?

தட்டுக்கெட்டு ஓடும் தள்ளாடும்
எந்நாளூம் உன் உள்ளக்குரங்கு
கட்டு படக்கூடும் எப்போதும்
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்றுவிழும்!

அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும்பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!

அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப்போகும் கரும்பு! - ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு

பந்தபாசச் சேற்றில் வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கையாற்றில் இந்த அழுக்குப் போகும்?

அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும்பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!

அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப்போகும் கரும்பு! - ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
- படம்: குணா
------------------------------------------------------------------

Get this widget | Track details | eSnips Social DNA


========================================

14.3.08

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

மீண்டும் ஜோதிடம் - பகுதி 10

இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒரே மாதிரியான பதில் சர்வ நிச்சயமாக வராது. ஒவ்வொருவரிடம் இருந்து ஒவ்வொரு மாதிரியான பதில் வரும்.

அன்புமிக்க தாய், அறிவுமிக்க தந்தை, பாசமிக்க சகோதரர்கள், சகோதரிகள், பரிவுமிக்க மனைவி,
உள்ளத்தைக் கொடுக்கும் குழந்தைகள், உயிரைக்கூட கொடுக்கும் நண்பர்கள், இவற்றோடு
பாரதி பாடிய காணி நிலம், வற்றாத கேணி, பத்துப்பதினைந்து தென்னை மரங்கள், கத்தும்
குயிலோசை, அதோடு...!

என்ன அதோடு? இது போதாதா?

சற்றுப் பொறுங்கள் சொல்லி முடித்துவிடுகிறேன்.

அதோடு இணைப்பாக அசையா சொத்துக்கள், வற்றாத வங்கிக் கணக்கு இருப்பு, பிடித்தமான ஊரில்
வசிக்கும் வசதி, போட்டியில்லாத தொழில், இன்னோவா, டாட்டா சுமோக் கார்கள், பாரத ரத்னாவேண்டாம், அட்லீஸ்ட் பத்மபூஷன் பட்டம் கிடைக்கும் கெளரவம். ஒரு வட்டம் அல்லது மாவட்டச்
செயலாளர் பதவி, என்று பலரும் பலவற்றை ஏக்கத்துடன் அல்லது ஆசையுடன் சொல்வார்கள்.

அவ்வளவும் கிடைத்து விடுமா என்ன?

கிடைக்காது!

அதெல்லாம் எப்படிக் கிடைக்கும். அதற்கு உரிய தகுதி நமக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா?

ஆசையிருக்குத் தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க' என்று கிராமங்களில் சொல்வார்கள்
80% மக்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கும்! இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

சரி மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?

ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.

நீ மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமென்பதுதான் விதியென்றால் நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பை நடத்தியாக வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன்
தீர்மானிப்பதில்லை.

அது உன் கையில்தான் உள்ளது. உன் முயற்சியில்தான் உள்ளது. 4 மாடுகளா அல்லது 40 மாடுகளா என்பது உன் முயற்சியால் நிர்ணயிக்கப்படும்.

ஒரு ஏழைப் பால் வியாபாரி இருந்தான். இரண்டு மாடுகளை வைத்துப் பால் வியாபாரம் செய்து
கொண்டிருந்தான். வருமானம் போதவில்லை. பற்றாக்குறை. வீட்டில் அவன் மனைவி, பிள்ளைகளைச்
சேர்த்து ஐந்து ஜீவன்கள்

வீட்டு வாசல் திண்ணையில் கவலையோடு அவன் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாகச் சென்ற
முனிவர் ஒருவர், அவனை நோக்கிக் கேட்டார், ”தம்பி, சற்றுக் களைப்பாக இருக்கிறது, பசியாற
ஏதாவது கிடைக்குமா?”

அவன் பதறிவிட்டான். பசியின் கொடுமை அறிந்தவனல்லவா? உடனே திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே வந்தவன், “அய்யா நல்ல மோர் இருக்கிறது, தரட்டுமா?” என்று கேட்டான்.

அவர் சம்மதம் சொல்ல, ஒரு செம்பு நிறைய மோரைக் கொண்டு வந்து கொடுத்தான்.

வாங்கி அமைதியாகக் குடித்தார் முனிவர். குடித்தபிறகுதான் அவனை உற்று நோக்கினார்.
அவன் முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது.

தன் ஞானக்கண்ணால் அவனுடைய நிலைமையை முழுதாக உணர்ந்தவர் சொன்னார்:

“நாளை அதிகாலை என்னை வந்துபார். உன் கவலைகளை ஓட்டும் வழியைச் சொல்லித் தருகிறேன்”

அவன் அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அடுத்த நாள் உதயத்தில், நம்பிக்கையுடன்,
அவரைச் சென்று பார்த்தான்.

அவர் அவனுடன் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் தீர்க்கமாக ஒன்றைச் சொன்னார் “உன்னிடம்
இருக்கும் இரண்டு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு போய் பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று விட்டு
வந்து, விற்ற பணத்தை உன் வீட்டில் பத்திரமாக வை.”

அவன் அதிர்ந்து போய் விட்டான்.

மாடுகள் இரண்டையும் விற்று விட்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது என்று அவரிடமே
கேட்டுத் தெரிந்து கொள்ளும் முனைப்பில், “அய்யா...” என்று இழுத்தான்.

அது தெரியாதா அவருக்கு? கையைக் உயர்த்திக் காட்டியதோடு, சொன்னார், “ சொன்னதைச் செய்,
மற்றது தானாக நடக்கும், மீண்டும் நீயே வந்து என்னைப் பார்ப்பாய், இப்போது போ!”

அவன் அவர் சொன்னபடியே செய்தான். இரண்டு மாடுகளும் நல்ல விலைக்குப் போயிற்று. விற்ற
பணத்தைக்கொண்டு வந்து, வீட்டுப் பரணின் மேலிருந்த பானைக்குள் வைத்து மூடினான். பிறகு
நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டு படுத்து உறங்கிவிட்டான்.

தூக்கம் என்றால் அப்படியொரு தூக்கம்.

மாலை ஆறு மணிக்குத்தான், ”அம்மா...” என்று தன் மாடுகள் கத்தும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு
எழுந்தவன், ஓடிப்போய் தன் வீட்டிற்குப் பின் புறம் இருந்த தொழுவத்தில் பார்த்தான். அங்கே
அவனுடைய மாடுகள் இரண்டும் நின்று கொண்டிருந்தன. மயக்கம் வராத குறை அவனுக்கு.

அதோடு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. விற்று விட்டு வந்த மாடுகள் எப்படித் திரும்பி வந்தன?

இருட்டி விட்டதால் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் ஒட்டமும் நடையுமாகச்
சென்று முனிவரைப் பார்த்தான்.

தியானத்தில் இருந்த அவர் இவன் உள்ளே வந்த ஒலி கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தார்.
பார்த்தவர் கேட்டார்,” என்ன உன்னுடைய மாடுகள் இரண்டும் திரும்பி வந்து விட்டனவா?”

அவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான்.

சலனமற்று காட்சியளித்த அவர் சொன்னார்,” நேற்றுச் செய்ததுபோல இன்றும் செய்; ஒன்றும்
கேட்காதே, பிறகு சொல்கிறென் இப்போது போய் வா”

வந்த வேகத்திலேயே திரும்பியவன், அவர் சொல்லியபடியே அன்றும் செய்தான். மறுபடியும்
கிட்டத்தட்ட அதே அளவு தொகை கிடைத்தது. வீட்டிற்குக் கொண்டு வந்து, பானைக்குள்
போட்டுப் பரணுக்குள் வைத்துவிட்டு, எப்போதும் போல சாப்பிட்டுவிட்டுக் கண் அயர்ந்தான்

நேற்று நடந்தது போலவே இன்றும் நடந்தது. அவன் அதிசயப்படும் விதமாக அவனுடைய
இரண்டு மாடுகளும் இன்றும் திரும்பி வந்து தொழுவத்தில் நின்று கொண்டிருந்தன!

இது தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பத்து நாட்கள் தொடர்ந்தது. வழக்கப்
படி பதினோறாம் நாள் காலையில் முனிவரைச் சென்று பார்த்தான்

அவர் சொன்னார்,” இன்மேல் அந்த அதிசயம் தொடராது. உன்னிடம் இப்போது 20 மாடுகளுக்கான
தொகை இருக்கிறது. இன்று சந்தைக்குப்போ; நல்ல மாடுகளாகக் கிடைக்கும் 20 மாடுகளை
வாங்கி வந்து இன்று முதல் உன் பால் வியாபாரத்தை நல்லபடியாகச் செய்!”

அவன் நெகிழ்ந்து விட்டான். கண்கள் பனிக்கக் கேட்டான்,”அய்யா உங்களுக்கு நான் மிகுந்த
நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன். இதுவரை அந்த அதியசம் எப்படி நடந்தது என்பதைச்
சொன்னீர்கள் என்றால் நான் சற்று மன நிம்மதியோடு போவேன்.”

“உன் தலையெழுத்து மாடுகளை வைத்து பிழைப்பதுதான். ஆனால் நீ முயற்சி எதுவும் செய்யாமல்,
இருப்பதை வைத்து இதுவரை உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு
உதவும் பொருட்டே, எனது சித்து வேலையால் நான் அப்படிச் செய்தேன். எதற்கும் ஒரு அளவு
உண்டு. அது தெரிந்து நான் நேற்றோடு நிறுத்திவிட்டேன். இனிமேல் நான் நினைத்தால்கூட
உனக்கு உதவ முடியாது. இறைவனை வேண்டிக்கொள். உன் பிரச்சினைகள் எல்லாம் தீரும்
அதோடு இனிச் சோம்பியிருக்காமல் முயற்சி செய்து கடுமையாக உழைத்தாய் என்றால்
உன் மாடுகளின் எண்ணிக்கை கூடிய சீக்கிரம் 100 ஆகும், பிறகு 200 ஆகும். போய்ப்
பிழைத்துக் கொள்!” என்று முடித்தார்.

கதை அவ்வளவுதான். முயற்சி எப்படி வேலை செய்யும் என்பதற்குத்தான் இந்தக் கதை!
நமக்கும் ஒரு முனிவர் வருவாரா என்று யாரும் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது
கலியுகம். முனிவரெல்லாம் வரமாட்டார். முனி வேண்டும் என்றால் வரும்.

(முனி என்றால் என்னவா? அதுதான் நட்பு என்ற பெயரில் வரும் டாஸ்மார்க், சல்பேட்டா
பார்ட்டிகள்)
-----------------------------------------------------------------------------------------------------------
சரி துவக்கத்திற்கு வருகிறேன். நல்ல வாழ்க்கைக்கு ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?

ஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள்
இருக்க வேண்டும்.

அதவது First House (Lagna), Ninth House (House of gains), 10th House (House of Profession)
11th House (House of Profit) ஆகிய நான்கு இடங்களிலும் 30 பரல்களோ அல்லது 30ற்கு
மேற்பட்ட எண்ணிக்கையில் பரல்கள் இருக்க வேண்டும்.

மற்ற இடங்களெல்லாம் முக்கியமில்லையா? இல்லை!

அப்படியிருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்?

சூப்பராக இருக்கும்!

படிக்கும் வாசகர்கள் யாருக்காவது அப்படியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்

எனக்குத் தெரிந்து என்னுடைய உறவினர்கள் இரண்டு பேருக்கு இருக்கிறது. அவர்களது
வாழ்க்கையும் சூப்பராக இருக்கிறது. அவர்களுடைய ஜாதகத்தை நான் பர்த்திருக்கிறேன்.
அதனால்தான் அடித்துச் சொல்கிறேன்.

மற்றவை அடுத்த பதிவில்!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

(தொடரும்)

3.3.08

யாருக்கு மாப்பிள்ளை யாரோ!

யாருக்கு மாப்பிள்ளை யாரோ - அவர்
எங்கே பிறந்திருக்கின்றாரோ!

மீண்டும் ஜோதிடம் - பகுதி 9

நாட்டு மருந்துகளைத் தேனில் கலந்து கொடுப்பார்கள்
மருந்தின் கசப்புத் தெரியக்கூடாது என்பதற்காக!

அதுபோல நானும் பாடங்களை, சம்பந்தப்பட்ட
சுவாரசியமான விஷயங்களுடன் கலந்து கொடுத்துக்
கொண்டிருக்கிறேன்

சில சமயம் மருந்து தூக்கலாக இருக்கும், சில சமயம்
தேன் அதிகமாக இருக்கும். அது தற்செயலாக அமைந்து
விடுவது!

பாடங்கள் நிறைய உள்ளன. நேரமின்மை காரணமாக
தட்டச்சுவது செய்வது ஒன்றுதான் பிரச்சினையாக உள்ளது.
அதோடு எனது வியாபார அலுவல்களும் சேர்ந்து கொள்வதால்
தொடர்ந்து பதிவுகள் வெளியிட முடிவதில்லை. வருந்துகிறேன்

நீங்கள் கொண்டிருக்கும் அன்பின் காரணமாகவும், ஆர்வத்தின்
காரணமாகவும், வாரம் ஒரு பதிவாவது வெளியிடுவேன்.

இன்று அரட்டைக் கச்சேரி இல்லை; நேரடியாகப் பாடம்தான்!
-----------------------------------------------------------------------------------------
1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும்.
(Seventh house is called as house of marriage)

2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான்
(Venus is called as authority for marriage).

3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின்
Sub - periodல் திருமணம் நடக்கும்

4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள்
.
5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில்
அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.

6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி
கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல
கணவனாகக் கிடைப்பான் என்று பொருள் கொள்ளவும்.

7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான
மனைவி கிடைப்பாள்

8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு
பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.

9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற
- ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்
மனைவியாகக் கிடைப்பாள்.

10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ
அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும்.
ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின்
பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.

11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில்
ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால்
ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.

12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந்
திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்

13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால்
மனைவிக்கு நோய் உண்டாகும்

14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும்,
அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும்
அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.

15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு
இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான்.
உபயராசியென்றால் அவன் பல பெண்களுக்கு நாயகன்.

16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன்
சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை
பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம்
உடையவனாக இருப்பான்.

17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி,
செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு
உரிய காலத்தில் திருமணம் நடக்காது!

18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள்,
அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு,
எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி
நிலைக்க மாட்டாள்

19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள்
கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,.
அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு,
எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல
பெண்களிடம் தொடர்பு ஏற்படும்

20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர,
திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு
அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்

21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு,
பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது
.
22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால்
பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.

23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில்
இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.

24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில்
மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ
அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும்

25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி
நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை
என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.

26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு,
பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை
மணக்க நேரிடும்.

27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில்
நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.

கொடுத்திருப்பது எல்லாம் பொதுவிதிதான். அவரவர் ஜாதகத்தைப்
பொறுத்து இந்த விதிகள் சிலருக்குச் செல்லுபடியாகாமல் போகலாம்.
ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் ஜாதகத்தின் மற்ற அமைப்பையும்
கொண்டு பலன் பார்த்துத் தெளிவது நல்லது!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிவைத்தபடி,”மனைவி
அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!”

அதில் மாற்றுக் கருத்திற்கு இடம் இல்லை!

அடுத்த வகுப்பில் சந்திப்போம்
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

(தொடரும்)