மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.2.08

நீ பார்த்த பார்வைகள் எங்கே போகும்?

நீ பார்த்த பார்வைகள் எங்கே போகும்?

மீண்டும் ஜோதிடம் - பகுதி 8

மனித வாழ்க்கை சுவையானது. சின்னச் சின்ன சந்தோஷங்கள் நிறைந்தது.
அதோடு துன்பங்களும் அவலங்களும் நிறைந்ததுதான் - அதில் சந்தேகமில்லை.

எத்தனை பேர் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? போதும் என்ற மனம் எத்தனை
பேர்களுக்கு இருக்கிறது?

மரத்தில் உள்ள பழங்களைத் தின்பதைவிட்டு விட்டு, ஒருவன் இலைகளை மட்டுமே
தின்று கொண்டிருந்தால் அவனை என்னெவென்று சொல்வோம்?

ஆகவே வாழ்க்கையில் கிடைக்கும் அந்த சந்தோஷங்களுக்காக இறைவனுக்கு
நன்றி சொல்லுங்கள். இலைகளைக் காலதேவனுக்கு விட்டுவிடுங்கள்!

ஒரு நாள், நீடாமங்கலத்தில் (தஞ்சை மாவட்டம்) இருந்து திருவாரூருக்குப் போய்க்
கொண்டிருந்தேன். வழியில் உள்ள சிறுசிறு கிராமங்களிலெல்லாம் நான் பயணித்த
பேருந்து நின்று நின்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம். குளர்ந்த காற்று.

அந்த அதிகாலை நேரத்திலும் ஒவ்வொரு கிராமத்தின் முகப்பிலும் ஆண்களும்,
பெண்களுமாக குறைந்தது 50 முதல் 100 பேர்களாவது நின்று கொண்டிருந்தார்கள்
ஒவ்வொருவர் கையிலும் ஒரு தூக்குப் பாத்திரம். மதிய உணவிற்கான உணவு அது.
அனால் பேருந்தில் ஒருவரும் ஏறவில்லை.

அருகில் இருந்த சக பயணியிடம் கேட்டேன், “இடம்தான் இருக்கிறதே, ஏன்
ஒருவரும் ஏறவில்லை?”

நான் அந்தப் பகுதிக்குப் புதியவன் என்பதை உணர்ந்து கொண்ட அவர்
காரணத்தைக் கதையாகச் சொன்னார்.

அந்த மக்கள் எல்லாம் கூலித் தொழிலாளர்கள். அந்தப் பகுதிகளில் உள்ள
தோட்டங்களில் கூலி வேலை பார்ப்பவர்கள். தோட்டத்துக்காரர்கள் வயலில்
வேலை இருக்கும் நாட்களில் ஆட்களைத் தேடி வாடகை வாகனங்களில் வந்து
அவர்களில் சிலரை (அதாவது தங்களுக்குத் தேவையான அளவு எண்ணிக்கையில்)
நபர்களை அழைத்துச் செல்வார்களாம். மாலை ஆறு மணிக்குப் பணி முடிந்ததும்
கொண்டு வந்து இறக்கி விட்டு விடுவார்களாம். ஆண்களுக்கு ஒரு நாள் கூலி
நூறு ரூபாய். பெண்களுக்கு எண்பது ரூபாய் (இது முந்தைய கணக்கு - இன்றைய
நிலவரம் தெரியவில்லை)

அந்தந்தக் கிராமத்து ஜனங்கள் ஒற்றுமையாக வரிசையில் நின்று first cum first என்ற
அடிப்படையில் வேலைக்குப் போவார்கள். சமயத்தில் நிற்கும் அனைவருக்குமே
வேலை (தினக்கூலிதான் சாமி) கிடைக்கும் அல்லது பாதிப்பேருக்கு மட்டுமே கிடைக்கும்
கிடைக்காதவர்கள் திரும்பவும் தங்கள் குடிலுக்கே அல்லது குடிசைக்கே திரும்ப
வேண்டியதுதான். மாதத்தில் எல்லா நாட்களிலும் வேலை கிடைக்காது. பாதி நாட்கள்
மட்டுமே அல்லது அதிகம் போனால் இருபது நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும்

வருமானத்தைக் கணக்குப் பண்ணிக் கொள்ளூங்கள்.

அவர்கள் வாழ்வில் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் சுடு சோறு. அதாவது மாலை
ஏழு மணிக்கு அடுப்பை மூட்டி, ஒரு பானையில் சோறு - இன்னொறு பாத்திரத்தில்
கிடைக்கின்ற காய்கறிகள் பருப்பைப்போட்டுக் குழம்பு. அதிகமாகப் புளிக்கும்
தன்மையுடைய மோர் காரமாக ஊறுகாய். இதுதான் சாப்பாடு. பாதி சாதம் மிஞ்சும்.
அதில் நீரை ஊற்றி வைத்திருந்து அடுத்தநாள் காலையில் வேலைக்குப் போகும்
போது மோரையும் சேர்த்து ஊற்றி எடுத்துக் கொண்டு போவார்கள் - அது
அன்றைய மதிய உணவு.

சரி, what about break-fast? பன்னும் டீயும்தான் சாமி!

அவர்கள் யாருடைய முகத்திலும் கவலை தென்படவில்லை!

ஏன்?

அந்த வாழ்க்கையை அவர்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

வாய்க்காலில் சலசலத்து ஓடும் தண்ணீர், பரந்த வயல் வெளிகள், இயற்கையான
ஏசி வீடுகள் (கூரை வேய்ந்த வீடுகள்) கயிற்றுக் கட்டில், வருடிக்கொடுக்கும் வேப்பமரத்துக்
காற்று, அவ்வப்போது ஒலிக்கும் இளையராஜாவிற்குப் பாடம் சொல்லிக் கொடுத்த குயில்
களாரின் கானமழை என்று இறைவன் அவர்களுக்கு எண்ணற்ற நஷ்ட ஈட்டைக் (compensation)
கொடுத்திருக்கிறான்.

நமது நகரங்களின் பரபரப்பும், அசுத்தமும், எரிச்சலும் அங்கே இல்லை.

அந்த வாழ்க்கையை நாம் ஒப்புக்கொள்வோமா? மாட்டோம்.

அதைவிட அவதியாக வாழந்த கவிஞன் ஒருவன் தன் வாழ்வைப் பற்றி, இப்படிக்
கவிதையாகச் சொன்னான்:

“அணைக்க
ஒரு அன்பில்லாத மனைவி,
பிழைக்க
ஒரு பிடிப்பில்லாத தொழில்
வளர்க்க
இரு நோயுற்ற சேய்கள்
ஆனாலும்
வாழ்க்கை - இன்னும்
கசக்கவில்லை!”

ஆக சந்தோஷம் என்பது நம் மனதிலும், ரசனை உணர்விலும்தான் இருக்கிறது!

என்ன, நான் சொல்வது சரிதானே?

சரி இப்போது பாடத்திற்கு வருகிறேன். அந்த மனமும், ரசனை உணர்வும் யாருக்கு
இருக்கும்? ஜாதகப்படி இருக்க வேண்டிய அமைப்பு என்ன?

வாருங்கள், பார்த்து விடுவோம்!

மனதிற்கு உரிய கிரகம் சந்திரன். ரசனைக்கு உரிய கிரகம் சுக்கிரன்

அந்த இரண்டு கிரகங்களும் வலுவுடன் இருக்க வேண்டும். வலு என்றால் என்ன?

அந்த கிரகங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சி வீடு, உச்ச வீடு அல்லது நட்பு வீடு
அல்லது கேந்திர வீடு அல்லது மூலத்திரிகோண வீடுகளில் இருக்க வேண்டும்.

என்ன கண்டு பிடிக்க அலுப்பாக இருக்கிறதா? ஈசியான வழியிருக்கிறது.
தங்கள் சுய அஷ்டகவர்க்கத்தில் அவைகள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன்
இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
---------------------------------------------------
சரி பழைய பாடத்தில் உள்ள மீதிப் பகுதியைக் கீழே கொடுத்துள்ளேன்

அதாவது முன் பாடத்தில் திருமணப் பொருத்தம் பகுதியில் 1 முதல் 5 வரை உள்ள
விதிகளைக் (Rules) கூறியிருந்தேன். இன்று 6 முதல் 10 வரை உள்ள விதிகள்:

6. ராசிப்பொருத்தம் (Matching of Chandra Rasi) - இது வம்ச விருத்திக் கணக்கில் வரும்

பெண்ணின் ராசியையும் (சந்திரன் இருக்கும் ராசி) பையனின் ராசியையும் குறித்துக்
கொள்ளுங்கள்.

பெண்ணின் ராசியிலிருந்து எண்ணிக் கொண்டு வரும்போது பையனின் ராசி ஆறு
அல்லது எட்டு அல்லது பன்னிரெண்டாக இருந்தால் சரியான பொருத்தமாகாது.
அதே ரூல்தான் பையனுக்கும்.

ஒரே ராசியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் ஏழாம் ராசியாக இருந்தாலும்
சூப்பராகப் பொருந்தும்!

7. ராசி அதிபதிப் பொருத்தம் (Matching of the owners of the Rasi)
(கிரகங்கள் ஒருவருக்கொருவர் யார் யாருக்கு நட்பு, யார் யாருக்கு சமம்
யார் யாருக்குப் பகை என்பதை முன் பதிவு ஒன்றில் கொடுத்துள்ளேன், அங்கே
சென்று குறித்துக் கொள்ளவும்)

இருவரின் ராசி அதிபதிகளும் ஒருவருக்கொருவர் நட்புக்கிரகங்கள் என்றால் பொருந்தும்
இருவரின் ராசி அதிபதிகளும் ஒருவருக்கொருவர் பகைவர்கள் என்றால் பொருந்தாது
மற்றபடி சமம் x நட்பு பொருந்தும்
சமம் x பகை பொருந்தாது

8. வசியப் பொருத்தம் (Intimacy between couples)
தம்பதிகளிடையே ஒற்றுமை அல்லது ஒருமித்த மனதிற்கு இந்தப் பொருத்தம் அவசியம்
See the Chart for details:




============================================
9. ரஜ்ஜீப் பொருத்தம் (பெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பதற்குரிய பொருத்தம்)
Duration of married life!
அட்டவனையில் உள்ள ஆறு பிரிவுகளும் தனித் தன்மை வாய்ந்தது. ஒரு பிரிவிற்
குள்ளாகவே பெண்ணின் நட்சத்திரமும், பையனின் நட்சத்திரமும் இருந்தால் அது
பொருத்தமல்ல! இருவரும் வெவ்வேறு பிரிவிலுள்ள நட்சத்திரத்தை உடையவர்களாக
இருத்தல் வேண்டும்



=================================================
10. வேதைப் பொருத்தம் (To avoid miseries in married life) வேதை என்றால்
ஒன்றுக்கு ஒன்று எதிரானது என்று பொருள். ஒன்றுக்கு ஒன்று வேதை என்றால்
அதாவது எதிரானது என்றால் அவை பொருந்தாது.

அஸ்வினி x கேட்டை
பரணி x அனுஷம்
கார்த்திகை x விசாகம்
ரோகிணி x சுவாதி
திருவாதிரை x திருவோணம்
புனர்பூசம் x உத்திராடம்
பூசம் x பூராடம்
ஆயில்யம் x மூலம்
மகம் x ரேவதி
பூரம் x உத்திரட்டாதி
உத்திரம் x பூரட்டாதி
ஹஸ்தம் x சதயம்

மிருகசீர்ஷம் x சித்திரை x அவிட்டம்
(இம்மூன்றும் ஒன்றுக்கொன்று எதிரானது - நம்து அரசியல்
கட்சிகளில் ஒரே கட்சிக்குள் எதிர் எதிர் அணிகள் இருப்பதைப்போல)

ஆக மொத்தம் இந்தப் பொருத்தப் பாடத்தைப் படித்துக் குழம்பிப்போயிருப்பீர்கள்.
பத்தில் ஆறு பொருந்தினால் போதும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதில் ரஜ்ஜீப்
பொருத்தம் மட்டுமே அதி முக்கியமானது.

நீங்கள் விவரம் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே இதைப் படித்ததாக வைத்துக்
கொள்ளுங்கள். மேலும் உங்களுடையதோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களின்
ஜாதகத்தையோ எடுத்துவைத்துக் கொண்டு இதன்படி பொருத்தம் பர்த்து மண்டையை
உடைத்துக் கொள்ளாதீர்கள். நான் முன் பதிவில் சொன்ன இணைய தளத்திற்குச்
சென்று பார்த்துக் கொள்ளுங்கள். அது மிகச் சரியாக இருக்கும். அதோடு உங்கள்
பொன்னான நேரமும் மிச்சமாகும்.

கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடல் வரிகளில் மறக்க முடியாத வரிகள் சில உண்டு

“நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்”

அதோடு மட்டுமா? என் பங்கிற்கு மேலும் இரண்டு வரிகளை சேர்த்துப்
பார்ப்பது என் வழக்கம். அந்த வரிகள் இதோ:

“நீ போட்ட தேட்டைகள் வீட்டோடு போகும்
நீ பிடித்த கோட்டைகள் காட்டோடு போகும்”

தேட்டைகள் = சேர்த்த பணம்
கோட்டைகள் = வாங்கிய சொத்துக்கள்
காட்டோடு = சுடுகாட்டோடு (அதாவது அங்கே ஒருவன் போய்ச் சேரும் வரைதான் அது)

அதுதான் வாழ்க்கை. ஆகவே வருவது வரட்டும் என்று துணிந்து நில்லுங்கள். சும்மா, சும்மா
ஜாதகத்தைப் பார்த்துக் குழம்பிப்போகாதீர்கள். மருந்து எப்போது உட்கொள்கிறோம்?
நோய் வரும்போது மட்டுமே. அதுபோல துன்பம் வாட்டும்போது, அதிலிருந்து எப்போது
விடுபடுவோம் என்பதை தெரிந்து கொண்டு ஆறுதல் அடைய மட்டுமே, ஜாதகத்தைத்
துணை கொள்ளுங்கள்! மற்றபடி வேண்டாம்.

வாழ்க வளமுடன்,
வகுப்பறை வாத்தியார்

பி.கு: அடுத்த பதிவில் வேறு ஒரு தலைப்பில் ஜோதிடத்தை ஆராய்வோம்

வகுப்பறையில் இது என்னுடைய 100 வது பதிவு!
மற்றொரு பதிவான பல்சுவையில் நேற்றுத்தான் என்னுடைய 200 வது
பதிவைப் பதிந்தேன்! ஆக மொத்தம் 300 பதிவுகள்

(தொடரும்)

29 comments:

  1. 100வது பதிவு வாழ்த்துக்கள் அய்யா!

    -கிச்சா

    ReplyDelete
  2. ////Kicha said...
    100வது பதிவு வாழ்த்துக்கள் அய்யா!
    -கிச்சா ///

    வாழ்த்தா முக்கியம்? பாடத்தைப் படித்தீர்களா கிச்சா?

    ReplyDelete
  3. More than astrology, the way you write about life, experience in the blend of lesson is very interesting!!!!
    I've one quick question: If Moon is in cancer with venus but both are in 12th houses.Is that signify that person having good mind but not good taste of life? If not what does that tell us?

    Thanks
    Shankar

    ReplyDelete
  4. நிறைவான(இருக்கும்) வாழ்கையை அனுபவிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  5. /////Anonymous said...
    More than astrology, the way you write about life, experience in the blend of lesson is very interesting!!!!
    I've one quick question: If Moon is in cancer with venus but both are in 12th houses.Is that signify that person having good mind but not good taste of life? If not what does that tell us?
    Thanks
    Shankar////

    Thanks for the appreciation!
    What is ashtakavarga of these two planets Mr.Shankar?

    ReplyDelete
  6. /////வடுவூர் குமார் said...
    நிறைவான(இருக்கும்) வாழ்கையை அனுபவிக்க தெரிந்திருக்க வேண்டும்./////

    அனுபவிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதோடு அதற்கென நேரத்தையும் ஒதுக்க வேண்டும்.
    எத்தனை பேர்கள் நேரத்தை ஒதுக்கிறார்கள்? அல்லது எத்தனை பேருக்கு நேரம் இருக்கிறது
    சொல்லுங்கள் வடுவூராரே!

    ReplyDelete
  7. century அடித்த எங்கள் வாத்தியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். brain lara-வீனுடைய 400* முறியடிக்க வாழ்த்துகிறேன்.

    மக்கு மாணவன்

    ReplyDelete
  8. Ashtakavarga in the Jagannatha Hora software says the positions in D-1 is highlighted. Is that mean -to reference to houses

    The points for moon in cancer is 3, venus in cancer is also 3.

    Can you explain this pls?

    -Shankar

    ReplyDelete
  9. வாத்தியாரே,

    அதுக்குள்ள நூறா..

    அசத்திட்டீங்க.. இலக்கியம், ஆன்மிகம், சமூகம், ஜோதிடம், கதை, கவிதை, கட்டுரை அரசியல் என்று பன்முகத்தன்மையுடன் ஐயா சர்ச்சைகள் எதுவுமில்லாமலேயே சதம் போட்டுவிட்டீர்கள்..

    வாழ்த்துக்கள் ஐயா..

    என் அப்பன் முருகன் அருளால் தாங்கள் மேலும் 900 பதிவுகள் போட்டு 1001-வது பதிவிற்கு நான் வாழ்த்து எழுதவும் விரும்புகிறேன்..

    வணக்கம்..

    ReplyDelete
  10. பாடத்தை படிக்காமல் இருப்பேனா அய்யா.

    -கிச்சா.

    ReplyDelete
  11. ஆசானுக்கு,

    திருமணப்பொருத்தம் பாடம் நன்றாக இருந்தது. மேலும் 100 வது பதிப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. /////vimal said...
    century அடித்த எங்கள் வாத்தியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    brain lara-வீனுடைய 400* முறியடிக்க வாழ்த்துகிறேன்.
    மக்கு மாணவன்////

    பதிவிற்கும் லாராவிற்கும் என்ன தொடர்பு சாமி?:-)))))

    ReplyDelete
  13. /////Anonymous said...
    Ashtakavarga in the Jagannatha Hora software says the positions in D-1 is highlighted. Is that mean -to reference to houses
    The points for moon in cancer is 3, venus in cancer is also 3.
    Can you explain this pls?
    -Shankar////

    It is a personal question about your horoscope. Pl inform your doubt through email Mr.Shankar

    ReplyDelete
  14. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே,
    அதுக்குள்ள நூறா..
    அசத்திட்டீங்க.. இலக்கியம், ஆன்மிகம், சமூகம், ஜோதிடம், கதை, கவிதை, கட்டுரை அரசியல் என்று பன்முகத்தன்மையுடன் ஐயா சர்ச்சைகள் எதுவுமில்லாமலேயே சதம் போட்டுவிட்டீர்கள்..
    வாழ்த்துக்கள் ஐயா..
    என் அப்பன் முருகன் அருளால் தாங்கள் மேலும் 900 பதிவுகள் போட்டு 1001-வது பதிவிற்கு நான் வாழ்த்து எழுதவும் விரும்புகிறேன்..
    வணக்கம்..///

    எழுத வைத்தது அவன்தான். பாராட்டுக்களும் அவனையே சேரட்டும்!

    ReplyDelete
  15. ///Kicha said...
    பாடத்தை படிக்காமல் இருப்பேனா அய்யா.
    -கிச்சா.////
    படித்திருந்தால் சரிதான்

    ReplyDelete
  16. ////மணிவேல் said...
    ஆசானுக்கு,
    திருமணப்பொருத்தம் பாடம் நன்றாக இருந்தது.
    மேலும் 100 வது பதிப்புக்கு வாழ்த்துக்கள்./////

    நன்றாக இருந்தது சரி. உங்களுக்குப் பயன்படுமா?

    ReplyDelete
  17. 100 ஆவது பதிவுக்கு வவழ்த்துகள்.
    என்க்கொரு நல்ல சேதி கிடைத்தது.

    என் மீனத்துக்கு மகரம் பொருத்தம் என்னும் இனிப்பான செய்தி:))
    அப்பாடா 42 வருடங்கள் பொருத்தமாகத்தான் ப்ஓயிருக்கின்றன:)

    ReplyDelete
  18. ////வல்லிசிம்ஹன் said...
    100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.
    என்க்கொரு நல்ல சேதி கிடைத்தது.

    என் மீனத்துக்கு மகரம் பொருத்தம் என்னும் இனிப்பான செய்தி:))
    அப்பாடா 42 வருடங்கள் பொருத்தமாகத்தான் போயிருக்கின்றன:)////

    வாருங்கள் சகோதரி! இனிப்பான செய்தி என்றிருக்கின்றீர்கள். திருமணம் ஆனவர்கள் பார்த்தால் பொதுவாகக் குறைகளைத்தான் கண்டுபிடிப்பார்கள். நீங்கள்தான் வித்தியாசமாக நிறைவைப் பார்த்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  19. ஐயா, எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆகவே எதிர்காலத்தில் பயன்படும் என்று நினைக்கிறேன். இப்பவே குறிப்பெடுத்துக்கொண்டேன். நன்றி

    ReplyDelete
  20. Ayya,

    Naadi porutham endral enna? athu migavum mukkiyamaga paarkapada vendiyathu endru solgirargale? unmaya?

    ReplyDelete
  21. பாடம் படிக்க வழக்கம் போல் மெதுவாக வந்தாலும் திருப்தியுடன் வாழ்வதற்கு சந்திரனும் சுக்கிரனும் பலமுடன் சாதகத்தில் இருக்க வேண்டும் என்பதைப் படித்துக் கொண்டேன் ஐயா. நன்றிகள்.

    ReplyDelete
  22. /////மணிவேல் said...
    ஐயா, எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆகவே எதிர்காலத்தில் பயன்படும் என்று நினைக்கிறேன். இப்பவே குறிப்பெடுத்துக்கொண்டேன். நன்றி/////

    ஆகா, குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.நிச்சயம் பயன்படும்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. ////Anonymous said..
    Ayya,
    Naadi porutham endral enna? athu migavum mukkiyamaga paarkapada vendiyathu endru solgirargale? unmaya? /////

    எல்லாப் பொருத்தமும் அமையாது. வசியப்பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ரச்சுப் பொருத்தம் ஆகிய இம்மூன்றும் அவசியம் நண்பரே!

    ReplyDelete
  24. //////குமரன் (Kumaran) said...
    பாடம் படிக்க வழக்கம் போல் மெதுவாக வந்தாலும் திருப்தியுடன் வாழ்வதற்கு சந்திரனும் சுக்கிரனும் பலமுடன் சாதகத்தில் இருக்க வேண்டும் என்பதைப் படித்துக் கொண்டேன் ஐயா. நன்றிகள்.////

    நீங்கள் நன்றாக எழுதிகிறீர்கள். அதற்குக் குருவருளும், திருவருளும், புத்திநாதனுடைய அருளும் நிறைய வேண்டும். அதனால் உங்கள் ஜாதகத்தில்ல், குருவும், புதனும் வலுவாக இருக்கும். அதையும் தெரிந்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  25. அதோடு மூத்தவர்களின் ஆசிகளும் முக்கிய காரணம் ஐயா. தங்களின் பாராட்டுகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றி. அடியேனின் சாதகத்தில் புத்திகாரகன் நன்றாக அமைந்துள்ளதை ஓர்ந்திருக்கிறேன். வியாழபகவானும் அப்படியே என்று நினைக்கிறேன். மீண்டும் அடியேனின் நன்றிகள்.

    ReplyDelete
  26. Hello Sir,
    My DOB is
    Date : 19-10-1984
    Time : 10.33PM
    Raasi : Kadagam
    Star : Ayilyam 3rd Paadham

    and DOB of the Girl i love is
    Date : 9-5-1984
    Time : 4.45AM
    Raasi : Simma
    Star : Magam

    Our Parents didnt accept our love. Still we are struggling for their acceptance. And another problem is i checked our marriage compatibility with a book whick compares stars alone. This make me so sad, as i am ready for anything to live with her and not losing my family. If according to astrology we are not a perfect match, then pls tell me if there is any parigaaram to live a happy life after marriage. Pls tell me Sir.
    Thank you.

    ReplyDelete
  27. ////Blogger dudlee said...
    Our Parents didnt accept our love. Still we are struggling for their acceptance. And another problem is i checked our marriage compatibility with a book whick compares stars alone. This make me so sad, as i am ready for anything to live with her and not losing my family. If according to astrology we are not a perfect match, then pls tell me if there is any parigaaram to live a happy life after marriage. Pls tell me Sir.
    Thank you./////

    i am ready for anything to live with her என்று சொல்கிறீர்கள். அதற்குப் பிறகு என்ன?
    காதலித்த பிறகு எதற்குச் ஜாதகத்தை வைத்து நோண்டிக் கொண்டிருக்கிறீர்கள்?
    இறைவன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, அந்தப் பெண்ணையே மணந்து கொள்ளுங்கள்.
    மற்றவற்றை அவன் பார்த்துக் கொள்வான். ஒரு பெண்ணின் உள்ளத்தைவிட ஜாதகம் முக்கியமில்லை!
    ஒரு நாள் அவளுடன் வாழ்ந்தாலும் போதும். அதுதான் காதலின் முதல் இலக்கணம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com