++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆஸ்தான ஜோதிடர் சொன்னது நடந்ததா? இல்லையா?
ஆஸ்தான ஜோதிடர் சொன்னதைக் கேட்டு அரசசபை அதிர்ச்சியில் உறைந்தது!
எங்கும் அமைதி. யாரும் வாயைத் திறக்கவில்லை!
மன்னன் மட்டும் ஒரே விநாடியில், மனதைத் தேற்றிக்கொண்டு கேட்டான்: “நீங்கள் சொல்வது உண்மையா குருவே?”
குருவின் வார்த்தைகளில் துக்கம் தொனித்தாலும், அதிகாரத்தொனியும் சேர்ந்தே இருந்தது.
“உண்மைதான், மகராஜா! எனக்கும் அதைச் சொல்வதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. சில சமயங்களில் உண்மை கசக்கத்தான் செய்யும். கிரகங்களின் நிலைமை அதைத்தான் தெளிவு படுத்துகின்றன. இளவரசனின் மரணம் தவிர்க்க முடியாதது. அவன் தனது பதினெட்டாவது வயதில் உயிர் நீப்பான். மரண மடைவான்.”
அரசன் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டான். ஆனால் அவனுக்குப் பின்புறம் அமர்ந்திருந்த மகாராணியால் முடியவில்லை, உணர்ச்சி மேலிடக் கதறி அழும் தொனியில் அவள் சொன்னாள்: “இல்லை, இல்லை, மகராஜா! நீங்கள்தான் ஏதாவது செய்து நமது செல்வனைக் காப்பாற்ற வேண்டும். இவருடைய ஜோதிடத்தைப் பொய்யாக்க வேண்டும்.அது உங்களால்தான் முடியும்”
என்ன நடந்தது?
அரசன் ஜெயித்தானா? அவனால் ஜோதிடத்தைப் பொய்யாக்க முடிந்ததா?
அதெப்படி முடியும்? அரசனுக்கு ஜோதிடம் சொன்னவர் என்ன அரைக்காசு மரத்தடி ஜோதிடரா?
இந்திய ஜோதிடக்கலையின் தந்தை என்று போற்றப்படும் மிஹிரர் அவர். மன்னனும் சாதாரண பத்தோடு பதினொன்றாம் மன்னன் அல்ல! இந்திய வரலாற்றில் தனது பெயரை நிலை நிறுத்திவிட்டுப்போன மன்னன் அவன். பெயரைச் சொன்னால் உங்களில் பலருக்கும் அவனைத் தெரியவரும்.
அவன் பெயர் விக்கிரமாதித்தன். ஐந்தாம் நூற்றாண்டில் வாழந்து பெயர் பெற்றவன். மெளரிய சாம்ராஜ்யத்தின் தூணாக விளங்கியவன்.
ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும், ஜோதிடரின் மேல் மிகுந்த விசுவாசமும் இருந்தாலும், தனது பாழாய்ப்போன மனதிற்காக வேண்டிய பாதுகாப்பை எல்லாம் கொடுத்துத் தன் மகனைக் கண்ணுக்குகண்ணாய் வளர்த்தான் அவன். ஆனாலும் ஜோதிடர் குறித்துக் கொடுத்த தேதியில்,
குறித்துக் கொடுத்தபடி ஒரு வராகத்தால் (பன்றியால்) இளவரசன் கொல்லப்பட்டான்.
செய்தி காதிற்கு எட்டியவுடன், மன்னன் செய்த முதல் வேலை, ஜோதிடரை அழைத்துவரச் செய்ததுதான்.
வந்தவரிடம் அரசன் சொன்னான்: “ நான் தோற்றுவிட்டேன். நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள், நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்!”
அரசனைப்போலவே துக்கத்தால் சூழப்பட்ட ஜோதிடர், வருத்தமுற்றுப் பேசலானார்.“ மன்னர் மன்னா, நான் ஜெயிக்க வில்லை. நமது நாட்டின் வானவியலும், ஜோதிடமும் ஜெயித்துள்ளன! (My Lord, I have not won.
It is the science of astronomy and astrology that has won.)
”அது எதுவாக இருந்தாலும் சரி, எனது மதிப்பிற்கு உரிய ஜோதிடரே, நீங்கள் அறிந்து வைத்திருக்கும் கலையில் உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை!அந்தக் கலையில் நீங்கள் அடைந்திருக்கும் மேன்மைக்கு நான் தலை வணங்குகிறேன். உங்களுக்கு உயரிய விருதான வராக விருதை அளிக்கிறேன். இன்று முதல் நீங்கள் வராகமிஹிரர்!
வெறும் மிஹிரர் வராகமிஹிரர் ஆனகதை இதுதான்.
இது புனையப்பெற்ற கதை அல்ல! உண்மையில் நடந்த கதையாகும்!
மீதிக்கதை நாளை வெளிவரும்
ஹி..ஹி..முழுக்கதையையும் எழுதிப் பதிவிட இன்று நேரம் இல்லை!
(தொடரும்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்!
வாழ்க வளமுடன்!

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteவெறும் மிஹிரர் வராகமிஹிரர் ஆனகதை,
ஜோதிடத்திர்க்கான பெருமை மற்றும் மேன்மையை அளிப்பது ஆகும்.அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டிய வரலாறு.
நன்றி! வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-03-30
வராக நதிக்கரைத் தென்றலாய் இருந்தது உங்கள் நடை.
ReplyDeleteஉயிரூட்டப்பட்ட அந்த உண்மைக் கதைக்கு நன்றிகள் குருவே!
தொடர்ச்சியை நோக்கி..............
சீரியல் நாடகம் மாதிரி நடுவிலே நிறுததி தொடரும் போட்டுவிட்டீர்களே ....அய்யா...பதிவு அருமை...வாழ்க வளமுடன்.வேலன்.
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்...
ReplyDeleteவராகமிகிரர் வரலாறு சிறப்பு ....
நன்றி வணக்கம்...
வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் ஜாதகமும் பிருஹத் சம்ஹிதையும் மிகுந்த புகழ் பெற்றதாயிற்றே. இன்று வரை எனக்கு விளங்காத ஒன்று. பிருஹத் ஜாதகத்தில் 7 கிரகங்களை வைத்துதான் பலன் எழுதியிருக்கிறார். ராகு கேதுக்களுக்கு அதில் இடமில்லை. இவற்றை கணக்கில் எடுக்காமலும் துள்ளியமாக பலன் காணலாம் என்பதுதான் இதன் அர்த்தமா என்று தெரியவில்லை.
ReplyDeleteDear sir,
ReplyDeleteThe story of Varaha Mhirar was touching one. To get that much experience in judging one's horoscope, how much knowledge he acquires. He is simply great. I really admire on him. Nice lesson sir.
Thanks sir,
J.SENDHIL
வாத்தியார் ஐயா!
ReplyDeleteஎம் 'குருநாதன்!' எம் 'குல தெய்வம்'! திருச்செந்தூர் திருசெந்தில் நாதனை'! வணங்கிவிட்டு, மீண்டும் வந்துள்ளேன் வாத்தியாரின் வகுப்பறைக்கு புத்துயிர் பெற்று ஐயா.
சான்றோர்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை ஐயா
தெரிந்த கதைதான ஆனால் நீங்கள் சொல்லும் விதம் சோரசியமாக உள்ளது.
ReplyDeleteஐயா எண் கனிதப் பாடத்தில் 7ஆம் எண்ணைப் பற்றிய பதிவு எப்போது வரும்........ஹி..ஹி..நான் 7ஆம் நம்பர்!......அதான்..........!ஹி..ஹி..
ReplyDeleteஇத்தனை நுணுக்கமாக எதிர்வு கூறக்கூடியதாயிருக்கும் இந்தக்கலை தொடர்பாக இந்திய அரசு தீர்க்கமான முடிவொன்றினை எடுக்க வேண்டும்.
ReplyDeleteஇதன் மூலம் போலிச் சோதிடர்களால் ஏற்படும் சமூகத் தீங்கினையும் போக்கலாம்.
ஆட்களுக்கு எதிர்வுகூரல்களையும் திருமணப்பொருத்தங்கள் போன்றனவற்றையும் சொல்லும் அத்தனை சோதிடர்களும் முறைப்படி அரசாங்கத்தில் தம்மை பதிவு செய்துகொண்டு அனுமதிப்பத்திரம் (லைசன்ஸ்) பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் இவ்வாறான அனைத்து சோதிடர்கள் குறித்த விபரங்களும் சட்டத்தின் பார்வைக்கு வரும்.
சோதிடர்கள் சொல்லும் எதிர்வுகூரல்கள் ஏதும் பிழைத்தாலோ, திருமணப்பொருத்தங்கள் தவறினாலோ எவரும் குறித்த சோதிடருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
தவறான எதிர்வுகூரல்களைச்செய்யும் சோதிடர்களை சட்டம் உரிய முறையில் தண்டிக்க வேண்டும்.
வைத்தியர்களுக்கு இவ்வாறான சட்டம் நடப்பில் இருப்பதைக் கவனத்திற்ல்கொள்க.
சோதிடம் இவ்வளவு தூரம் துல்லியமாக இருக்கும்போது இவ்வாறு சட்டமீயற்றுதல் நியாயமானதே.
சோதொஇடத்தை அரைகுறையாய் படித்துவிட்டு மக்களை ஏமாற்றுபவர்களை இதன் மூலம் ஒழிக்கலாம்.
////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
வெறும் மிஹிரர் வராகமிஹிரர் ஆனகதை, ஜோதிடத்திர்க்கான பெருமை மற்றும் மேன்மையை அளிப்பது ஆகும்.அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டிய வரலாறு.
நன்றி! வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி////
நல்லது.நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!
////Alasiam G said...
ReplyDeleteவராக நதிக்கரைத் தென்றலாய் இருந்தது உங்கள் நடை.
உயிரூட்டப்பட்ட அந்த உண்மைக் கதைக்கு நன்றிகள் குருவே!
தொடர்ச்சியை நோக்கி..............////
தொடர்ச்சி நாளை வரும். நன்றி ஆலாசியம்!
////வேலன். said...
ReplyDeleteசீரியல் நாடகம் மாதிரி நடுவிலே நிறுததி தொடரும் போட்டுவிட்டீர்களே ....அய்யா...பதிவு அருமை...வாழ்க வளமுடன்.வேலன்./////
அப்போதுதானே ஒரு சுவாரசியம் இருக்கும் வேலன்! எழுத்தின் நுட்பமே அதுதான்.
astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்...
வராகமிகிரர் வரலாறு சிறப்பு ....
நன்றி வணக்கம்...////
நல்லது. நன்றி!
////ananth said...
ReplyDeleteவராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் ஜாதகமும் பிருஹத் சம்ஹிதையும் மிகுந்த புகழ் பெற்றதாயிற்றே. இன்று வரை எனக்கு விளங்காத ஒன்று. பிருஹத் ஜாதகத்தில் 7 கிரகங்களை வைத்துதான் பலன் எழுதியிருக்கிறார். ராகு கேதுக்களுக்கு அதில் இடமில்லை. இவற்றை கணக்கில் எடுக்காமலும் துள்ளியமாக பலன் காணலாம் என்பதுதான் இதன் அர்த்தமா என்று தெரியவில்லை.////
இருக்கலாம். சரியாகத்தெரியவில்லை! நன்றி ஆனந்த்!
/////dhilse said...
ReplyDeleteDear sir,
The story of Varaha Mhirar was touching one. To get that much experience in judging one's horoscope, how much knowledge he acquires. He is simply great. I really admire on him. Nice lesson sir.
Thanks sir,
J.SENDHIL////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
/////kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா!
எம் 'குருநாதன்!' எம் 'குல தெய்வம்'! திருச்செந்தூர் திருசெந்தில் நாதனை'! வணங்கிவிட்டு, மீண்டும் வந்துள்ளேன் வாத்தியாரின் வகுப்பறைக்கு புத்துயிர் பெற்று ஐயா.
சான்றோர்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை ஐயா////
நல்லது.நன்றி முருகா!
//////மதி said...
ReplyDeleteதெரிந்த கதைதான ஆனால் நீங்கள் சொல்லும் விதம் சுவாரசியமாக உள்ளது.////
நல்லது.நன்றி!
/////நேசன்..., said..
ReplyDeleteஐயா எண் கணிதப் பாடத்தில் 7ஆம் எண்ணைப் பற்றிய பதிவு எப்போது வரும்........ஹி..ஹி..நான் 7ஆம் நம்பர்!......அதான்..........!ஹி..ஹி../////
எழுதிவைத்திருந்தது, வைரஸ் பிரச்சினையால் அழிந்து விட்டது. மீண்டும் எழுத வேண்டும். அடுத்த வாரம் வரும். பொறுத்திருங்கள்!
மு.மயூரன் said...
ReplyDeleteஇத்தனை நுணுக்கமாக எதிர்வு கூறக்கூடியதாயிருக்கும் இந்தக்கலை தொடர்பாக இந்திய அரசு தீர்க்கமான முடிவொன்றினை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் போலிச் சோதிடர்களால் ஏற்படும் சமூகத் தீங்கினையும் போக்கலாம்.
ஆட்களுக்கு எதிர்வுகூரல்களையும் திருமணப்பொருத்தங்கள் போன்றனவற்றையும் சொல்லும் அத்தனை சோதிடர்களும் முறைப்படி அரசாங்கத்தில் தம்மை பதிவு செய்துகொண்டு அனுமதிப்பத்திரம் (லைசன்ஸ்) பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் இவ்வாறான அனைத்து சோதிடர்கள் குறித்த விபரங்களும் சட்டத்தின் பார்வைக்கு வரும்.
சோதிடர்கள் சொல்லும் எதிர்வுகூரல்கள் ஏதும் பிழைத்தாலோ, திருமணப்பொருத்தங்கள் தவறினாலோ எவரும் குறித்த சோதிடருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
தவறான எதிர்வுகூரல்களைச்செய்யும் சோதிடர்களை சட்டம் உரிய முறையில் தண்டிக்க வேண்டும்.
வைத்தியர்களுக்கு இவ்வாறான சட்டம் நடப்பில் இருப்பதைக் கவனத்திற்ல்கொள்க.
சோதிடம் இவ்வளவு தூரம் துல்லியமாக இருக்கும்போது இவ்வாறு சட்டமீயற்றுதல் நியாயமானதே.
சோதிடத்தை அரைகுறையாய் படித்துவிட்டு மக்களை ஏமாற்றுபவர்களை இதன் மூலம் ஒழிக்கலாம்.//////
உண்மை உங்களுடைய யோசனை நல்ல யோசனை. இந்தியாவில் உள்ள சில பல்கலைக் கழகங்களில் ஜோதிடப்பாடம் கற்றுத்தரப்படுகிறது. அங்கே படித்துப்பட்டம் பெற்றவர்களை முறைப்படுத்தலாம். பண்டையை ஜோதிட நூல்களை எல்லாம் தேசியமயமாக்கி, அரசே அவற்றைப் பதிப்பித்து வெளியிடலாம்.
"கதையல்ல, நிஜம்"என்று வராஹமிஹிரர் கதை சொன்னது அருமை.ராஹு கேது தமிழகத்திதில் 7ம் நூற்றாண்டு முதலே உண்டு.ஆதாரம்: கோளறு திருப்பதிகம்; ".....சனி பாம்பிரண்டும் உடனே.." பாம்பிரண்டு என்பது
ReplyDeleteராஹு&கேதுதான் !
/////kmr.krishnan said...
ReplyDelete"கதையல்ல, நிஜம்"என்று வராஹமிஹிரர் கதை சொன்னது அருமை.ராஹு கேது தமிழகத்திதில் 7ம் நூற்றாண்டு முதலே உண்டு.ஆதாரம்: கோளறு திருப்பதிகம்; ".....சனி பாம்பிரண்டும் உடனே.." பாம்பிரண்டு என்பது
ராஹு&கேதுதான் !///////
குமாரசுவாமியம் என்னும் நூல்தான் தமிழ் ஜோதிடத்திற்கு அடிப்படை. அது அகத்தியர் அருளியது! அதோடு புலிப்பாணி ஜொதிடம் எல்லாம் வராகிமிஹிரரின் காலத்திற்கு முற்பட்டது. நன்றி கிருஷ்ணன் சார்! அவற்றில் ராகு கேது உண்டு!
ராகு கேதுக்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது எனது கேள்வியில்லை. அவற்றை கணக்கில் எடுக்காமல் துல்லியமாக பலன் காண முடியுமா என்பதுதான். அத்தோடு வராஹ மிஹிரர் அவற்றை கணக்கில் எடுத்து கொள்ளாததன் காரணம் என்ன என்பதும்தான். என்னால் இதற்கு சரியான விடை காண முடியவில்லை. இதைத்தான் நான் எனது பின்னுட்டத்தில் தெரிவித்திருந்தேன். பிருஹத் ஜாதகத்தைத் தவிர மற்ற எல்லா ஜோதிட நூல்களிலும் ராகு கேதுக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பதை நான் அறிவேன்.
ReplyDelete////ananth said...
ReplyDeleteராகு கேதுக்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது எனது கேள்வியில்லை. அவற்றை கணக்கில் எடுக்காமல் துல்லியமாக பலன் காண முடியுமா என்பதுதான். அத்தோடு வராஹ மிஹிரர் அவற்றை கணக்கில் எடுத்து கொள்ளாததன் காரணம் என்ன என்பதும்தான். என்னால் இதற்கு சரியான விடை காண முடியவில்லை. இதைத்தான் நான் எனது பின்னுட்டத்தில் தெரிவித்திருந்தேன். பிருஹத் ஜாதகத்தைத் தவிர மற்ற எல்லா ஜோதிட நூல்களிலும் ராகு கேதுக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பதை நான் அறிவேன்./////
அவர் எப்படி அவைகளில்லாமல் முழுப்பலன்களைக் கணித்தார் என்பது புதிராகத்தான் உள்ளது.கிரகங்களின் 120 ஆண்டு சுற்றில் ராகுவிற்குப் 18 ஆண்டுகளும், கேதுவிற்கு 7 ஆண்டுகளும் உண்டே. அதைத் தவிர்த்து எப்படிப்பலன் சொல்வது? அவர் எப்படிச் சொன்னார்?அதுபற்றிய விவரம் அறிந்தவர்கள் நமக்குச் சொன்னால்தான் உண்டு! நன்றி ஆனந்த்!
வராஹ மிஹிரர் தன் காலத்திற்கு முந்தையவர்களான சத்தியாச்சார்யா, யவனெச்வரர், கர்கர் போன்றவர்களை மேற்கோள் காட்டியும் பிருஹத் ஜாதகத்தில் பலன் எழுதியிருக்கிறார். லக்ன தசா, நைசர்கிக தசா போன்றவற்றைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இந்த முறையில் லக்னம் மற்றும் மற்ற 7 கிரகங்கள்தான் பயன்படுத்தப் படுகிறது. நாம் அதிகம் பயன் படுத்தும் விம்ஷொத்ரி அல்லது உடுதசாவைப் பற்றி அதிகம் எழுதவில்லை. இன்னின்ன கிரகங்களுக்கு இத்தனை வருடம் என்று மட்டும் எழுதியவர் இந்த ஒரு இடத்தில் மட்டும் ராகு கேதுக்கு இத்தனை வருடம் என்று குறிப்பிட்டு ராகு கேதுக்கு ஒரு வரியைப் மட்டும் பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு முன்னும் பின்னும் இவற்றைப் வேறு எந்த குறிப்பும் இல்லை. எல்லா இடத்திலும் ராகு கேது இவற்றைத் தொடாமலே பலன் கூறியிருக்கிறார்.
ReplyDelete/////ananth said...
ReplyDeleteவராஹ மிஹிரர் தன் காலத்திற்கு முந்தையவர்களான சத்தியாச்சார்யா, யவனெச்வரர், கர்கர் போன்றவர்களை மேற்கோள் காட்டியும் பிருஹத் ஜாதகத்தில் பலன் எழுதியிருக்கிறார். லக்ன தசா, நைசர்கிக தசா போன்றவற்றைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இந்த முறையில் லக்னம் மற்றும் மற்ற 7 கிரகங்கள்தான் பயன்படுத்தப் படுகிறது. நாம் அதிகம் பயன் படுத்தும் விம்ஷொத்ரி அல்லது உடுதசாவைப் பற்றி அதிகம் எழுதவில்லை. இன்னின்ன கிரகங்களுக்கு இத்தனை வருடம் என்று மட்டும் எழுதியவர் இந்த ஒரு இடத்தில் மட்டும் ராகு கேதுக்கு இத்தனை வருடம் என்று குறிப்பிட்டு ராகு கேதுக்கு ஒரு வரியைப் மட்டும் பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு முன்னும் பின்னும் இவற்றைப் வேறு எந்த குறிப்பும் இல்லை. எல்லா இடத்திலும் ராகு கேது இவற்றைத் தொடாமலே பலன் கூறியிருக்கிறார்.//////
மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஆனந்த்!
இந்த இடுகையை போட்டபின் , உங்கள் இடுகையைக் கண்டேன். கூடுதல் மகிழ்ச்சி
ReplyDelete