வாருங்கள், தமிழ் தேன் பருகுவோம்!!!!
*தமிழ் தேன் பருகலாமா*
ஒரு புலவர் காளமேக புலவரிடம் கேட்டார்.
“ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?” என்றார்
“முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்றார் காளமேக புலவர்
”வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். *செருப்பில்* தொடங்கி *விளக்குமாறில்* முடித்தால் போதும்” என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.
என்ன கொடுமை?
என் இறைவனை,
முத்தமிழ்முதல்வனை,
செந்தமிழ் தெய்வத்தை,
வெற்றி வேல் அழகனை,
கருணைக் கடவுளை,
கண்கவர் காளையை,
முருகனை
பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா?
தகுமா? முறையா? என மனம் கேட்க
அதை தகும் என்றும் , முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேக புலவர்
...இப்படி .....
*செருப்புக்கு வீரர்களை*
*சென்றுழக்கும் வேலன்*
*பொருப்புக்கு நாயகனை*
*புல்ல- மருப்புக்கு*
*தண்தேன் பொழிந்த*
*திரு தாமரைமேல் வீற்றிருக்கும்*
*வண்டே விளக்குமாறே*
செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.
அப்படி போர்க்களத்தின் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம்.
குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே,
அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.விளக்குமாறு என்பதற்கு விளக்கம் , சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.....?
இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.....!
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
super Sir.
ReplyDeleteGood morning sir excellent post thanks sir vazhga valamudan
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Nice post...
Thanks for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn
வணக்கம்.ஐயா,அற்புதம்.நன்றி.
ReplyDelete/////Blogger kmr.krishnan said...
ReplyDeletesuper Sir./////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!
////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir excellent post thanks sir vazhga valamudan//////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Nice post...
Thanks for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn/////
நல்லது.நன்றி அவனாசி ரவி!!!!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம்.ஐயா,அற்புதம்.நன்றி./////
நல்லது. நன்றி ஆதித்தன்!!!!
வணக்கம் குருவே,
ReplyDeleteவாழ்க தமிழ்!வளர்க புலவர் பெருமக்கள் புகழ்!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே,
வாழ்க தமிழ்!வளர்க புலவர் பெருமக்கள் புகழ்!/////
நல்லது. நன்றி வரதராஜன்!!!!