மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.8.09

காட்சியும் - சாட்சியும்!


காட்சியும் - சாட்சியும்!

கவிஞர்களால் எதையும் சுருங்கச் சொல்லி மனதை அசர அடிக்க முடியும்.
எழுத்தாளர்களுக்கு எதையும் விரிவாகச் சொல்லத்தான் வரும்.

அறுபடை வீடுகளுக்கு 24 வரிகளில் ஒரு பாட்டு!

பாடலை எழுதியவர் மிகப் பெரிய கவிஞர். முனைவர். கல்லூரியில்
தமிழ்த்துறைத் தலவராக இருந்தவர். அதோடு முக்கியமாக கவியரசர்
கண்ணதாசனின் சிநேகிதர். அவருடைய பெயர் அர.சிங்காரவடிவேலன்.
அசத்தலாக, எதுகை, மோனை, சீர், சந்தம் என்று இலக்கண சுத்தமாகப்
பாடல் எழுதுவதில் வல்லவர்.

கீழே உள்ள பாடல் எப்படி உள்ளது பாருங்கள்.
-----------------------------------------------------------------

"சுப்பன் சொன்னான் மந்திரத்தை
சொக்கன் கேட்டான் தலைகுனிந்து
இப்புவி மயங்குது காட்சிகண்டு
இதற்கு சாட்சி சுவாமிமலை!

மாம்பழம் கேட்டது இருபிள்ளை
மதியால் வென்றது முதல்பிள்ளை
மலையில் நின்றது மறுபிள்ளை
மயிலுமே சாட்சி பழநிமலை!

தீயவன் சூரனை கொன்றவனே
செந்தூர் கடலினை கொண்டவனே
மாயவன் மகனே முருகையனே
மலரொன்று சாட்சி திருச்சீர்அலை!

கானகம் வாழ்ந்தது புள்ளிமயில்
கந்தனை மணந்தது வள்ளிமயில்
வானகம் வாழ்த்துது பூத்தூவி
யானையே சாட்சி தணிகைமலை!

செந்தமிழ்ப் பாவை தெய்வானை
செந்தில் முருகனை கைப்பிடித்தாள்
பைந்தமிழ் வாழ்ந்திடும் மணக்காட்சி
பரங்குன் றத்தின் திருக்காட்சி

கோதையர் இருவரும் அருகிருக்க
குமரனும் மலையில் கொலுவிருக்க
மாமனும் அன்பால் வாழ்த்திசைக்க
மங்களக் காட்சி சோலைமலை!"
- அர.சிங்காரவடிவேலன்
--------------------------
முதல் 4 வரிகள் -- சுவாமிமலை
அடுத்த 4 வரிகள் - பழநி
அடுத்த 4 வரிகள் - திருச்செந்தூர்
அடுத்த 4 வரிகள் - திருத்தணி
அடுத்த 4 வரிகள் - திருப்பரங்குன்றம்
அடுத்த 4 வரிகள் - பழமுதிர்ச் சோலை
------------------------------------------

வாழ்க வளமுடன்!

35 comments:

  1. அருமையான பாடல் அய்யா.

    ReplyDelete
  2. ////Blogger அமர பாரதி said...
    அருமையான பாடல் அய்யா.///

    நன்றி பாரதி!

    ReplyDelete
  3. ///Blogger Shyam Prasad said...
    நல்ல பாடல்.////

    நன்றி ஷியாம்!

    ReplyDelete
  4. இன்று குரு வாரத்தில், குமர குருவை போற்றி, குரு தந்த பாடல் சூப்பர் .

    ReplyDelete
  5. நல்ல பாடல். அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற பாடலில் இருந்த எளிமை, பொருள் இதில் இல்லை. என்ன இருந்தாலும் கண்ணதாசன் கண்ணதாசன்தான். அதற்காக பிறரை குறைத்து சொல்லவில்லை.

    ReplyDelete
  6. மாந்தியுடன் மங்கி போன பிறகு இந்த பாடல் ஒன்னும் புரியவில்ல

    ReplyDelete
  7. Arupadai veedu lord murugapperumanin pugal paadum songs
    very super thanks your posts sir!

    ReplyDelete
  8. Blogger Meena said...
    இன்று குரு வாரத்தில், குமர குருவை போற்றி, குரு தந்த பாடல் சூப்பர் .////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. ////Blogger ananth said...
    நல்ல பாடல். அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற பாடலில் இருந்த எளிமை, பொருள் இதில் இல்லை. என்ன இருந்தாலும் கண்ணதாசன் கண்ணதாசன்தான். அதற்காக பிறரை குறைத்து சொல்லவில்லை./////

    உங்கள் கருத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  10. ////Blogger ceylonstar said...
    மாந்தியுடன் மங்கி போன பிறகு இந்த பாடல் ஒன்னும் புரியவில்ல/////

    சிலோன் ஸ்டார் என்று பெயரை வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லலாமா?
    மாந்தியால் மருண்டவர்களை நிமிர்த்தி உட்காரவைக்கத்தான் இந்தப் பாட்டு!

    ReplyDelete
  11. /////Blogger pudukaikaran said...
    Arupadai veedu lord murugapperumanin pugal paadum songs
    very super thanks your posts sir!/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. அறுபடை வீடுகளை கவிஞர்கள் விதவிதமாக
    ரசிக்கிறார்கள் என்பதை அறிய தந்தமைக்கு நன்றி
    அய்யா.

    ReplyDelete
  13. ////Blogger thirunarayanan said...
    அறுபடை வீடுகளை கவிஞர்கள் விதவிதமாக
    ரசிக்கிறார்கள் என்பதை அறிய தந்தமைக்கு நன்றி
    அய்யா.///

    அவர்கள் ரசித்ததை நாமும் ரசிக்கும் விதமாக அழகு தமிழில் தருவதுதான் மிகவும் சிறப்பு! நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. http://pudugaithendral.blogspot.com/2009/08/blog-post_06.html

    விருது காத்திருக்கு

    ReplyDelete
  15. ////Blogger புதுகைத் தென்றல் said...
    http://pudugaithendral.blogspot.com/2009/08/blog-post_06.html
    விருது காத்திருக்கு////

    எனக்கெதுக்கு விருது அம்மணி?
    நீங்கள் இளம் பதிவர்களுக்குக் கொடுங்கள்.
    எனக்கு உங்கள் (உங்களைப் போன்றவர்களின்) அன்பு ஒன்றே போதும்.
    அதைவிடப் பெரிய விருது என்ன இருக்கிறது? சொல்லுங்கள்!

    ReplyDelete
  16. ////Blogger krish said...
    Good poem.Thanks///

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  17. Pathivu nanru........


    Ayya naan "sanieswaranum jeevanasthaanamum".....yenra book padithu kondu irukiren.........


    athil sila udhaarana jadhagamum.........navagrahangalin
    mukiya mattergal ullathu......

    thaangal utharavu ittal commentsile naan eluthuguren....

    patent problem varum yenraal vendam ayya....thangal chella maanavan.......

    (maaveeran)மா.Balamurugan...

    ReplyDelete
  18. ////Blogger Bala said...
    Pathivu nanru........
    Ayya naan "sanieswaranum jeevanasthaanamum".....yenra book padithu kondu irukiren.........
    athil sila udhaarana jadhagamum.........navagrahangalin mukiya mattergal ullathu......
    thaangal utharavu ittal commentsile naan eluthuguren....
    patent problem varum yenraal vendam ayya....thangal chella maanavan.......
    (maaveeran)மா.Balamurugan.../////

    காப்பி ரைட் பிரச்சினை வரும். அதெல்லாம் வேண்டாம் செல்லம்!
    என் அனுபவத்தில் பலவற்றைப் பார்த்துள்ளேன். பின்னால் எழுதுகிறேன்.
    அதைப் படித்தால் போதும் செல்லம்!

    ReplyDelete
  19. வாத்தியார் சொன்ன தத்துவத்தை
    வணங்கிக் கேட்போம் நாமெல்லாம்
    நாத்திக‌ எண்ண‌ம் தான் அழியும்
    ஆத்திக‌ ம‌ன‌மே மேலோங்கும்!‌

    KMR.KRISHNAN
    http://parppu.blogspot.com

    ReplyDelete
  20. Dear Sir,

    எம்பெருமானின் அறுபடை வீட்டின் பெருமை பாடலை எழுதியதுக்கு
    மிக்க நன்றி

    Rgds
    Nainar

    ReplyDelete
  21. ////Blogger kmr.krishnan said...
    வாத்தியார் சொன்ன தத்துவத்தை
    வணங்கிக் கேட்போம் நாமெல்லாம்
    நாத்திக‌ எண்ண‌ம் தான் அழியும்
    ஆத்திக‌ ம‌ன‌மே மேலோங்கும்!‌
    KMR.KRISHNAN
    http://parppu.blogspot.com/////

    நாத்திக எண்ணமும் இருக்கட்டும் சார்!
    அப்போதுதான் நாம் பேசுவது எடுபடும்!
    எதிர் அணியின்றி எப்படி விளையாட்டு சுவாரசியமாக இருக்கும்?

    ReplyDelete
  22. ////Blogger arumuga nainar said...
    Dear Sir,
    எம்பெருமானின் அறுபடை வீட்டின் பெருமை பாடலை எழுதியதுக்கு மிக்க நன்றி
    Rgds
    Nainar/////

    டேங்ஸ் நைனா(ர்)!!!!

    ReplyDelete
  23. Dear Sir,


    exellent song...ethuvarai katkatha pattu....arumai..

    Best wishes,
    Vineeth

    ReplyDelete
  24. ///Blogger vineeth said...
    Dear Sir,
    exellent song...ethuvarai katkatha pattu....arumai..
    Best wishes,
    Vineeth////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. அருமையான பாடல்.. ஆசிரியரே!

    ReplyDelete
  26. ////Blogger T.V.Radhakrishnan said...
    அருமையான பாடல்.. ஆசிரியரே!/////

    நன்றி ராதாகிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  27. thalaippu arumai athaivida paadal mika arumai...

    ReplyDelete
  28. ////Blogger seenu said...
    thalaippu arumai athaivida paadal mika arumai...////

    நன்றி சீனு!

    ReplyDelete
  29. அறுபடை வீடு கொண்ட திருமுருகா..!

    திருமுருகாற்றுப்படைதனிலே வரும் முருகா.. முருகா..

    வேல் வேல் வெற்றி வேல்..

    ReplyDelete
  30. ///Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    அறுபடை வீடு கொண்ட திருமுருகா..!
    திருமுருகாற்றுப்படைதனிலே வரும் முருகா.. முருகா..
    வேல் வேல் வெற்றி வேல்..////

    நீங்கள் வந்தபிறகுதான் வெற்றிவேல் வந்திருக்கிறது!
    நன்றி உண்மைத்தமிழரே!

    ReplyDelete
  31. Dear Sir, I've started reading this blogspot recently. You are doing an excellent job to the community. I'm going through the old lessons. How can I send my email id to you. Please let me know. Rgds.. K Jaishankar

    ReplyDelete
  32. ////Blogger Kavidasan said...
    Dear Sir, I've started reading this blogspot recently. You are doing an excellent job to the community. I'm going through the old lessons. How can I send my email id to you. Please let me know. Rgds.. K Jaishankar////

    My email ID is classroom2007@gmail.com

    ReplyDelete
  33. http://paymentproofonline.blogspot.com/ visit my blog to get ideas for making money online

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com