--------------------------------------------------------------------------------------
Astrology ஆடிய ஆட்டம் என்ன?
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அற்புதமான பாடல் ஒன்றின் தொகையறாவில் அசத்தலாக சில வரிகள் வரும். மனிதனின் நிலைப் பாட்டை மிக அற்புதமாகச் சொல்லியிருப்பார்.
வரிகளைக் கொடுத்துள்ளேன். பாருங்கள்
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
முழுப்பாடலையும் ஒலி வடிவில் கேட்க விருப்பமா?
இதோ சுட்டி உள்ளது:
--------------------------------------------------------------------------
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.
பட்டம், பதவி, பணம், புகழ், அதிகாரம், செல்வாக்கு உள்ள காலத்தில் மனிதன் போடும் ஆட்டம் விதமாக விதமாக இருக்கும். நாம் பார்க்காத ஆட்டங்களா?
எல்லா ஆட்டங்களுமே ஒரு முடிவிற்கு வராமல் போகாது. உயிரோடு இருக்கும் போதே முடிவிற்கு வந்து விடும்
மூன்று சுபக் கிரகங்களின் தசா புத்திகளில் ஆட்டம் போடும் மனிதனை, மூன்று பாப கிரகங்கள் தங்களுடைய தசா புத்திகளில் புரட்டிப் போட்டுவிடும். அடித்து நொறுக்கிவிடும்.
கட்டிவைத்தும் அடிக்கும். தொங்க விட்டும் அடிக்கும்.
பென்ஸ் காரில் போய்க் கொண்டிருந்தவன், திகார் சிறைச்சாலைக் கொசுக் கடியில் அவதிப்படவும் நேரிடும்
ஆகவே ஆட்டம் போடாமல் தர்ம சிந்தனையுடன், இறையுணர்வுடன் இருப்பதே நல்லது.
எதையும் எதிர்கொள்ளும் சமமான மனநிலை அப்போது கிடைக்கும்!
_______________________________________________________
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் சனி புத்திக்கான பலன்களையும், சனி மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.
அடுத்து சுக்கிரதிசையில் புதன் புத்தி, மற்றும் கேது புத்தி. அவை இரண்டையும் தசாபுத்திகள் தொடக்கப் பகுதியில் பார்த்து விட்டோம்.
இன்று, அதற்கு அடுத்து சூரிய மகா திசையில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் நல்ல பலன்களைத் தருவார். வலு என்றால் தனது சுயவர்க்கத்தில் 5 அல்லது அத்ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும். உச்சம் பெற்றோ அல்லது கேந்திர மற்றும் திரிகோண வீடுகளில் இருந்தாலும் நல்ல பலன்களைத் தருவார். இது பொதுப்பலன். தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும்.
ஜோதிடத்தில் குறுக்கு வழி எல்லாம் கிடையாது. அலசிப் பார்த்துத்தான் பலன்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
சூரிய திசை மொத்தம் ஆறு ஆண்டு காலத்திற்கு நடைபெறும். மற்ற கிரகங்களின் புத்திகளில் பலன்கள் வேறுபடும். ஆனால் அவர் தன்னுடைய சுய புத்தியில் (Sun's own period in his Maha Dasa) அவர் பெரிதாக நன்மைகள் ஒன்றையும் செய்ய மாட்டார். அவர் சுப கிரகம் அல்ல - அதனால் செய்ய மாட்டார்.
அவருடைய சுயபுத்திக் காலம் 108 நாட்கள் (just 108 days only)
பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!
கூறப்பா கதிருக்கு வருஷம் ஆறு
குணமுள்ள புத்திநாள் நூத்தி எட்டாகும்
பாரப்பா அக்கினியால் பீடை உண்டு
பாங்கான அபமிருந்து பொருளுஞ் சேதம்
ஆரப்பா அறிவார்கள் பிதாமிருந்தியு
அரிதான வாணிபம் ஜெயமாகாது நஷ்டம்
கோளப்பா கண்ணோணுவான் கனலே மீரும்
கொடுமையுள்ள நாளென்று கூறினோமே!
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

வணக்கம் வாத்தியார் ஐயா,
ReplyDelete//ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
//
சத்தியமான வார்த்தைகள்..
ஆனால் யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லையே ?
ஆடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்..
ம்ம்ம்..
////ஆகவே ஆட்டம் போடாமல் தர்ம சிந்தனையுடன், இறையுணர்வுடன் இருப்பதே நல்லது.
ReplyDeleteஎதையும் எதிர்கொள்ளும் சமமான மனநிலை அப்போது கிடைக்கும்!////
உண்மை தான்... தர்ம சிந்தனையும், இறைவுணர்வும் இரு கண்களானால்,,,
சமமான பாதையே எதிரே தோன்றும்
ஆட்டமோ பாட்டமோ உடலில் சூட்டான இரத்தம் பாயும்வரைதானே!இரத்தம் சுண்டிப் போன பின்னர் நினைவில்தான் ஆட்டம்,பாட்டம் ,கொண்டாட்டம் எல்லாம்.அப்புறம் 'அந்தக்காலத்திலே...'என்று ஆரம்பித்து எல்லோரையும் ஓடச் செய்யலாம். அவ்வளவுதான்.
ReplyDeletekmrk camp:London
Sir, one general question:
ReplyDeleteHow to judge from an horoscope if a person will earn money from stock market "intraday trading" (dinasari vanigam - not long term investment).
Thanks, Siva
எந்த கிரகமும் சுயபுத்தியில் நன்மை செய்வதில்லை. (இதற்கு விதிவிலக்கும் இருக்கிறது). சூரியன் மட்டும் நன்மை செய்து விடுவாரா என்ன?
ReplyDelete//How to judge from an horoscope if a person will earn money from stock market "intraday trading" (dinasari vanigam - not long term investment).//
ஒரு பெரிய பதிவாக போட்டுதான் இதற்கு முழு பதில் எழுத முடியும். நன்றாக அலசி ஆராய்ந்து விரிவாக இதற்கு பதில் எழுதினாலும் சிலர் இதை அப்படியே திருடிக் கொண்டு போய் தாங்கள் எழுதியது போல் தங்கள் வலைத் தளங்களில் போட்டுக் கொள்வார்கள்.
ஆடத்தான் வேண்டும்..
ReplyDeleteஆடி விழத்தான் வேண்டும்..
இல்லையேல் சூரியனுக்கும்
இருக்கும் கிரக பலன்களுக்கு
வேலை இல்லாமல் போய்விடுமே..
வேண்டுமென சொல்லவில்லை...
எதார்த்தங்களையே சொல்வதனால்
எங்கேயோ இருப்பதாகஎண்ணவேண்டா
வழக்கம் போல் இந்த
வகுப்பில் இந்த குறளை சொல்லி
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
வருகை பதிவினை தருகிறோம்
வாழ்த்துக்களுடன் வணக்கங்களுடன்
////////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
ReplyDeleteவணக்கம் வாத்தியார் ஐயா,
//ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன? //
சத்தியமான வார்த்தைகள்..
ஆனால் யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லையே?
ஆடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்..
ம்ம்ம்..///////
ஒரு கணமாவது உணரவைத்துத்தான் சனீஷ்வரன் மேலோ போவதற்குப் போர்டிங் பாஸ் கொடுப்பான். ஆகவே மேலே போவதற்குள் உணர்வார்கள்!
//////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDelete////ஆகவே ஆட்டம் போடாமல் தர்ம சிந்தனையுடன், இறையுணர்வுடன் இருப்பதே நல்லது.
எதையும் எதிர்கொள்ளும் சமமான மனநிலை அப்போது கிடைக்கும்!////
உண்மை தான்... தர்ம சிந்தனையும், இறைவுணர்வும் இரு கண்களானால்,,,
சமமான பாதையே எதிரே தோன்றும்//////
உங்களின் புரிதலுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஆட்டமோ பாட்டமோ உடலில் சூட்டான இரத்தம் பாயும்வரைதானே!இரத்தம் சுண்டிப் போன பின்னர் நினைவில்தான் ஆட்டம்,பாட்டம் ,கொண்டாட்டம் எல்லாம்.அப்புறம் 'அந்தக்காலத்திலே...'என்று ஆரம்பித்து எல்லோரையும் ஓடச் செய்யலாம். அவ்வளவுதான்.
kmrk camp:London//////
எல்லோரையும் ஓடச் செய்வதும் ஆட்டக் கணக்கில்தான் வரும் கிருஷ்ணன் சார்!
/////Blogger Trans Technicals said...
ReplyDeleteSir, one general question:
How to judge from an horoscope if a person will earn money from stock market "intraday trading" (dinasari vanigam - not long term investment).
Thanks, Siva/////
பதினொன்றாம் வீடு (House of speculation) நன்றாக இருக்க வேண்டும். அத்துடன் அதற்குத் தொடர்புடைய கிரகத்தின் தசா புத்தியும் நடக்க வேண்டும்.
///////Blogger ananth said...
ReplyDeleteஎந்த கிரகமும் சுயபுத்தியில் நன்மை செய்வதில்லை. (இதற்கு விதிவிலக்கும் இருக்கிறது). சூரியன் மட்டும் நன்மை செய்து விடுவாரா என்ன?
//How to judge from an horoscope if a person will earn money from stock market "intraday trading" (dinasari vanigam - not long term investment).//
ஒரு பெரிய பதிவாக போட்டுதான் இதற்கு முழு பதில் எழுத முடியும். நன்றாக அலசி ஆராய்ந்து விரிவாக இதற்கு பதில் எழுதினாலும் சிலர் இதை அப்படியே திருடிக் கொண்டு போய் தாங்கள் எழுதியது போல் தங்கள் வலைத் தளங்களில் போட்டுக் கொள்வார்கள்.//////
என்ன செய்வது? கலியுகம்!
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!
////Blogger iyer said...
ReplyDeleteஆடத்தான் வேண்டும்..
ஆடி விழத்தான் வேண்டும்..
இல்லையேல் சூரியனுக்கும்
இருக்கும் கிரக பலன்களுக்கு
வேலை இல்லாமல் போய்விடுமே..
வேண்டுமென சொல்லவில்லை...
எதார்த்தங்களையே சொல்வதனால்
எங்கேயோ இருப்பதாகஎண்ணவேண்டா
வழக்கம் போல் இந்த
வகுப்பில் இந்த குறளை சொல்லி
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
வருகை பதிவினை தருகிறோம்
வாழ்த்துக்களுடன் வணக்கங்களுடன்////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி விசுவநாதன்!
//How to judge from an horoscope if a person will earn money from stock market "intraday trading" (dinasari vanigam - not long term investment).//
ReplyDeleteThank you sir for the reply. Thanks Ananth sir.