மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.8.10

ராக்கம்மாவும் சனியப்பனும்!

ராக்கம்மாவும், சனியப்பனும் ஒன்றாக இருக்கும் படம் கிடைக்கவில்லை. சும்மா விட வேண்டாம் என்று இந்தப் படத்தைப் போட்டிருக்கிறேன். இவர்களை அவர்களுடன் சம்பந்தப் படுத்திப் பார்த்தால் 
அதற்கு நான் பொறுப்பல்ல!
எனக்குப் பிடித்தமானவர்கள் இவர்கள்...ஹி.ஹி...!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ராக்கம்மாவும் சனியப்பனும்!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 4

சீஸன் என்னும் சொல் விஜய் தொலைக்காட்சி உபயம்

உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
---------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண். 11
நித்தியானந்தம். எம்.
வயது 49
கரையாம்பாளையம்
பல்லடம்

குருவுக்கு வணக்கம்!
.1  ஆறாம்வீட்டின் பரல்கள் முப்பத்தாறுக்கு அதிகமாக இருந்தால் கடன் நோய் எதிர்ப்பு ஆகியவை எந்த அளவுக்கு பாதிக்கும்? 

ஆறாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருப்பதால், ஜாதகனுக்கு கடன், எதிரிகள், நோய்கள் ஏற்படும் வாய்ப்பில்லை. ஜாதகத்தில் வேறு அமைப்பினால் ஏற்பட்டாலும், அதைச் சமாளிக்கும், எதிர்க்கும் ஆற்றல் ஜாதகனுக்குக் கிடைக்கும்!

2. ஆறாம் வீட்டில் தனியாக  சந்திரன் நீசமாகி சந்திரன் எட்டு பரல்களுடன் இருந்தால் என்ன பலன்?

சந்திரன் நீசம் பெற்றாலும் எட்டு பரல்களுடன் இருப்பதால், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவிக்கும் ஸ்திரமான மனதைக் கொடுப்பார்.

3. காலசர்ப்ப தோஷத்தில் லக்கினம் சந்திரன் இரண்டும் வெளியே இருந்தாலும் அது அந்த அமைப்புக்குள் வருமா?

வரும்! வரும்! வரும்! 
===================================================
மின்னஞ்சல் எண். 12
S.உமா,
தில்லி
வயது.(துணிச்சலாகச் சொல்லியிருக்கிறார்) = 36
பொதுவாகப் பெண்கள் வயதையும், ஆண்கள் வருமானத்தையும் சொல்ல மாட்டார்கள். ஆகவே சகோதரி திருமதி உமாவின் துணிச்சலுக்கு ஒரு “ஓ” போட்டுவிடுவோம்!
   
வணக்கம் சார், எனது சில கேள்விகள்:

1. நீங்கள் முன்பு  Reversal of birth timing பற்றி எழுதுவதாகக் கூறியிருந்தீர்கள். மற்றும் பெண்களுக்கான சிறப்பு ஜோதிட விதிகள் பற்றியும் சொல்லி யிருந்தீர்கள்.  உங்களின் வேலைப்பளுவை நாங்கள் அனைவரும் புரிந்து வைத்திருக்கிறோம். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எழுதவும்.

ஜாதகரின் பிறந்த நாள் தெரியும். நேரம் சரியாகத் தெரியாது.  உத்தேசமாகத் தான் தெரியும் என்றால், அதற்கு இந்த Reversal of birth timing முறையில் நேரத்தை சரியாகக் கண்டு பிடித்துத் திருத்திக்கொடுப்பார்கள். நீங்கள் அதற்கு உதவியாக பல செய்திகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். படித்து முடித்த தேதி, வேலையில் சேர்ந்த தேதி, திருமணம் ஆன தேதி போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். தசாபுத்தி, அந்தரங்களை வைத்து அவற்றையும் வைத்து
சரியான நேரத்தைக் கண்டு பிடித்துக்கொடுப்பார்கள். தில்லியில்
சந்தானம் என்பவர் முன்பு அதைச் செய்து கொண்டிருந்தார். அவருடைய கட்டுரைகள் பல அந்தக் கால சஞ்சிகைகளில் (பத்திரிக்கைகளில்) வெளியாயின.

பெண்களின் ஜாதக விஷேசங்கள் குறித்துத் தனிக்கட்டுரைகள் பின்னால் வரவுள்ளன. பொறுத்திருங்கள்.

2. நிறைய கனவுகள் வருவதற்கு எது காரணம்? நான் கேள்விப்பட்டது, கனவுகள் வருபவர்க்கு, ஆழ்ந்த தூக்கம்  இருப்பதில்லை. இதற்கு,12 ஆம் வீட்டைப் பார்க்க வேண்டுமா?

நல்ல தூக்கம் என்பது வரம். பண்பலை வானொலியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு படுத்தால், முதல் பாட்டு முடிவதற்குள் தூங்கிவிட வேண்டும். முதல் 2 அல்லது 3 மணி நேரத்திற்குக் கனவுகள் வரக்கூடாது. அதுதான் ஆழ்ந்த தூக்கத்திற்கு அடையாளம். நல்ல தூக்கத்திற்கான அமைப்பு.

கவலை இல்லாத மனிதனுக்கு மட்டுமே நல்ல தூக்கம் கிடைக்கும்.
கவலை இல்லாமல் இருப்பதற்கு அல்லது கவலை இருந்தாலும்
அதை உதறிவிட்டு இருப்பதற்கு, ஜாதகத்தில் மனகாரகன் (அதாங்க
நம்ம சந்துரு) நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் சந்துருவுடன்
ராக்கம்மா (ராகு) கேதம்மா (கேது) சனியப்பன் ஆகிய மூவரும்
சேராமல் இருக்க வேண்டும். அத்துடன் வேறு எங்காவது ஒளிந்து
கொண்டு, சந்துருவைத் தங்கள் பார்வையால் லுக் விடாமல் அல்லது
உங்கள் மொழியில் சொன்னால் சைட் அடிக்காமல் இருக்க வேண்டும்

3. ஒருவர் ஜாதகத்தை வைத்து, அவரின் destiny பற்றி சொல்ல முடியுமா?  ஏன் கேட்கிறேன் என்றால், எனக்குத் தெரிந்த ஒருவரிடம், இன்னொருவர் நீ இந்த காலகட்டத்தில், எழுத்தாளராக இருப்பாய் என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன். அது சரியாகவும் இருந்தது.  அவர் மேலும் சொன்னது, அதன்பின் நீ ஒரு M.P. ஆவாய் என்று. அது இனிமேல்தான் தெரியும்.

வேலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள், உயர்வுகள், பற்றிச் சொல்ல முடியும். சில சமயங்களில் துறைகளைப் பற்றிச் சொல்ல முடியும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல, pin point ஆக இன்ன position ல் இன்ன வேலை என்று சொல்வதற்கெல்லாம் தெய்வ அருள், வாக்கு சித்தி வேண்டும். உங்கள் மொழியில் சொன்னால் அதற்கு intution power வேண்டும்.

4. ஒருவர் தன் சொந்த ஊரை விட்டு ரொம்ப தூரத்தில் இருப்பார் என்று 
எந்த கிரகம் (அ) அமைப்பை வைத்து சொல்லலாம்?  சில பேர் தன்
வாழ்க்கை முழுவதும் ஒரே இடத்திலும், சிலர் 10, 15 வருடங்களுக்குப்
பின் தன்சொந்த ஊருக்கும் திரும்பி விடுகின்றனர். இதை எப்படி கண்டுபிடிப்பது? தசா புத்தியை வைத்தா?

லக்கினாதிபதி, 10ஆம் அதிபதி, 12ஆம் அதிபதி மற்றும் அவர்களுடைய தசா புத்திகளை வைத்து ஊர் மாற்றங்கள் இட மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டலாம்.

5. ஆண்களுக்கு சுப கிரஹங்கள் கேந்திரத்தில் இருந்தால், அதிக பலன் கிடைக்காது என்பது உண்மையா?  கேந்திராதிபத்ய தோஷம் பற்றி ஒரு பதிவு நேரம் கிடைக்கும்போது எழுதவும்.

உண்மையில்லை! கிரகங்களுக்கு ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடுகள் எல்லாம் கிடையாது. கிரகங்களுக்கு  உமா சேச்சியும் ஒன்றுதான் சுப்பையா வாத்தியாரும் ஒன்றுதான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.13
A.R.பாபு கிருஷ்ணா,
மலேசியா

ஐயா வணக்கம்.
எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வீகசக்தியை எளிதில் உணர்வார்கள்?
அன்புடன்,
ஏ.ஆர்.பாபுகிருஷ்ணா
மலேசியா

இதற்கு நட்சத்திரங்கள் எதற்கு? ஜாதகத்தைத் தூசி தட்டிக் கையில் எடுப்பவர் கள்  அனைவருமே தெய்வ சக்தியை  உணர்ந்தவர்கள்தான். நன்றாக, தெனாவட்டாக இருக்கும் வரை, எல்லாமே என் செயல் என்ற நினைப்பு இருக்கும்வரை எவனுமே ஜாதகத்தைக் கையில் எடுக்க மாட்டான். நம்மையும் மீறி ஏதோ நடக்கிறது என்பதை உணரும் போதுதான் மனிதன் தெய்வ சக்தியை உணர்வான்.

4ஆம்வீடு, 8ஆம் வீடு, மற்றும் 12ஆம் வீடு வலுவாக இருக்கும் ஜாதகங்களுக்கு ஞான ஜாதகங்கள் என்று பெயர். அவர்கள்தான் சொத்து, சுகங்களை எல்லாம் இழந்து, அல்லது பறிகொடுத்து, பல துன்பங்கள், ஏமாற்றங்கள், துரோகங் களுக்கு ஆளாகி, இவ்வளவுதான், உலகம் இவ்வளவுதான் என்பதை சீக்கிரம் உணர்வார்கள். அவர்களுக்குத்தான் ஞானம் வரும். அத்துடன்,

  “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
  தன்னாலே வெளிவரும் தயங்காதே..
    தலைவன் இருக்கிறான் மயங்காதே”


என்ற பாடல் வரிகள் அவர்களுக்கு வேதமாகி விடும். நம்மால் நடப்பது ஒன்றும் இல்லை. எல்லாம் ஈசன் செயல்  என்பதை உணர்ந்திருப்பார்கள்.

இப்போது சொல்லுங்கள் யாருக்கு தெய்வ சக்தி எளிதில் தெரியவரும்? அல்லது எளிதில் உணர்வார்கள்?
================================================
(தொடரும்)

இதன் தொடர்ச்சி 9.8.2010 திங்களன்று வெளிவரும். இடையில் வேறு பாடம். வெரைட்டி வேண்டாமா? ருசியாக இருக்கிறது என்பதற்காக புலவு சாதத் தையே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமா? நடுவில் தயிர்சாதம் வித் மாங்காய் ஊறுகாய்.

8.8.2010 ஞாயிறன்று காலை விசேசச் சிற்றுண்டி. இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பாருடன். நமது வகுப்பறை மாணவரின் உபயம். யார் அவர்? அது சஸ்பென்ஸ். சாப்பிடும்போது தெரியவரும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

41 comments:

  1. கால சர்ப்ப தோஷம் பற்றி இந்த கேள்வி (உதாரணத்தை வைத்து விளக்கி உள்ளேன் . யாருடைய ஜாதகமும் இல்லை):-

    லக்னம் - மிதுனம்.
    மீனம் - கேது - 20 12'
    கன்னி - ராகு - 3 14'
    கன்னி - சுக்ரன் - 12 18'
    கன்னி - புதன் - 16 20'

    சந்திரன் வெளியே விருச்சிகத்தில் உள்ளார் .

    ராகுவோடு சுக்ரனும் புதனும் சேர்ந்து ஒரே வீட்டில் உள்ளார்கள். ஆனால் டிகிரி வைத்து பார்க்கும் பொழுது ராகுவுக்கு வெளியே உள்ளார்கள் .

    இந்த அமைப்பு காலசர்ப்ப தோஷத்தை சேர்ந்ததா ? மேலே கூறிய ஜாதகம் உதாரண ஜாதகம் தான் .

    மிக்க நன்றி .

    ReplyDelete
  2. நம்மையும் மீறி ஏதோ நடக்கிறது என்பதை உணரும் போதுதான் மனிதன் தெய்வ சக்தியை உணர்வான்.

    இந்த காலை வேளை இனிதாக இந்த வாசகத்தில் இருந்து தொடங்குகிறது.

    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. டெல்லி திருமதி உமா எங்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்.தஞ்சாவூர் சம‌த்து கேள்விகளிலேயே தெரிகிறது அல்லவா?

    ஆனந்த் தன் வலைப்பூவில் கடக‍ மகர, ராகு கேதுவைப் பற்றி திறம்படச் சொல்லி முதல் பாடத்தைத் துவங்கிவிட்டார். அவர் வகுப்பறைக்கு ஒருமுறை வந்து ஆசி கூறிச் செல்லுங்கள் அய்யா!

    ReplyDelete
  4. வணக்கம் ஆசிரியரே!

    "கனத்த கேள்விகள்,
    கனிந்தப் பதில்கள்"

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. நம்மையும் மீறி ஏதோ நடக்கிறது என்பதை உணரும் போதுதான் மனிதன் தெய்வ சக்தியை உணர்வான்.//

    இறை நம்பிக்கை எப்பவுமே அதிகம். ஆனா சில இல்ல பல சமயம் தாங்க முடியாம படுத்தும்போது அவநம்பிக்கை ஏற்படுதே அது ஏன்???

    ReplyDelete
  6. ////Shyam Prasad said...
    மிக்க நன்றி/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  7. /////Shyam Prasad said...
    கால சர்ப்ப தோஷம் பற்றி இந்த கேள்வி (உதாரணத்தை வைத்து விளக்கி உள்ளேன் . யாருடைய ஜாதகமும் இல்லை):-
    லக்னம் - மிதுனம்.
    மீனம் - கேது - 20 12'
    கன்னி - ராகு - 3 14'
    கன்னி - சுக்ரன் - 12 18'
    கன்னி - புதன் - 16 20'
    சந்திரன் வெளியே விருச்சிகத்தில் உள்ளார் .
    ராகுவோடு சுக்ரனும் புதனும் சேர்ந்து ஒரே வீட்டில் உள்ளார்கள். ஆனால் டிகிரி வைத்து பார்க்கும் பொழுது ராகுவுக்கு வெளியே உள்ளார்கள் .
    இந்த அமைப்பு காலசர்ப்ப தோஷத்தை சேர்ந்ததா ? மேலே கூறிய ஜாதகம் உதாரண ஜாதகம் தான் .
    மிக்க நன்றி .//////

    சூரியனும், குருவும் எங்கே இருக்கிறார்கள்? அவர்களை ஆட்டத்திற்கு சேர்த்துக்கொள்ளவேண்டாமா?

    ReplyDelete
  8. ////ஜோதிஜி said...
    நம்மையும் மீறி ஏதோ நடக்கிறது என்பதை உணரும் போதுதான் மனிதன் தெய்வ சக்தியை உணர்வான்.
    இந்த காலை வேளை இனிதாக இந்த வாசகத்தில் இருந்து தொடங்குகிறது.
    நல்வாழ்த்துகள்.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////kmr.krishnan said...
    டெல்லி திருமதி உமா எங்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்.தஞ்சாவூர் சம‌த்து கேள்விகளிலேயே தெரிகிறது அல்லவா?
    ஆனந்த் தன் வலைப்பூவில் கடக‍ மகர, ராகு கேதுவைப் பற்றி திறம்படச் சொல்லி முதல் பாடத்தைத் துவங்கிவிட்டார். அவர் வகுப்பறைக்கு ஒருமுறை வந்து ஆசி கூறிச் செல்லுங்கள் அய்யா!/////

    ஆசிகூறுவதற்கெல்லாம் சில சிறப்புத்தகுதிகள் வேண்டும். முன்னதாகவே அவருடைய வலைப்பூவிற்குச் சென்று வாழ்த்தைச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. Alasiam G said...
    வணக்கம் ஆசிரியரே!
    "கனத்த கேள்விகள்,
    கனிந்தப் பதில்கள்"
    நன்றிகள் ஐயா!

    நறுக்குத்தெரித்த பின்னூட்டம்
    நல்லது ஆலாசியம்!

    ReplyDelete
  11. //////புதுகைத் தென்றல் said...
    நம்மையும் மீறி ஏதோ நடக்கிறது என்பதை உணரும் போதுதான் மனிதன் தெய்வ சக்தியை உணர்வான்.//
    இறை நம்பிக்கை எப்பவுமே அதிகம். ஆனா சில இல்ல பல சமயம் தாங்க முடியாம படுத்தும்போது அவநம்பிக்கை ஏற்படுதே அது ஏன்???///////

    தாய் மருந்தைப் புகட்டும்போது பிள்ளை அது தன் நன்மைக்குத்தான் என்று தெரியாமல் தாயை உதைக்கும் அதுபோலத்தான் இதுவும். எல்லாவற்றிற்கும் மனதுதான் காரணம். அதானால்தான் மனம் ஒரு குரங்கு என்று மனதைச் சிறப்பித்துச் சொல்வார்கள் சகோதரி!

    ReplyDelete
  12. இனிய காலை வணக்கம்......

    அய்யா கேள்வி பதில் பகுதி சுவாரிசியமாக செல்கின்றது....
    நன்றி வணக்கம்....

    ReplyDelete
  13. என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி. (ஓ போட்டதற்கும்தான்).

    //pin point ஆக இன்ன position ல் இன்ன வேலை என்று சொல்வதற்கெல்லாம் தெய்வ அருள், வாக்கு சித்தி வேண்டும். உங்கள் மொழியில் சொன்னால் அதற்கு intution power வேண்டும்.//

    நீங்கள் சொல்வது சரிதான். அந்த நபர் (அவர் காவல் துறையில் ஒரு உயர் அதிகாரி என்று சொன்னதாக நினைவு) இவரின் முகத்தைப் பார்த்துதான் எல்லாம் சொன்னாராம்.

    கிருஷ்ணன் சார், நாங்கள் எல்லாம் யாரு? ரூம் போட்டு யோசிக்கிறவங்க. நான் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். உங்களுக்கு கிடைக்கவில்லை என நினைக்கிறேன். உங்கள் மெயில் முகவரி தரவும்.

    ReplyDelete
  14. இன்றைய பதிவில், கேள்வி பதிலுடன் தங்கள் அலங்கார வரில்கள் அனைத்தும் superb sir ,.....

    ReplyDelete
  15. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    கேள்விக்ககான. _ பதில்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.

    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-08-05

    ReplyDelete
  16. நாஸ்டர்டாமஸைப் பற்றி

    ReplyDelete
  17. ஐயா வணக்கம்

    நாஸ்டர்டாமஸைப் பற்றி 1999 வருடத்திற்கு க்கு முன்னர் படித்தது ஐயா. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள தமிழ் மற்றதில் உரை நிகழ்த்தும் பொழுது கேட்டது ஐயா

    ' முற்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் தோன்றும் ஒருவர்'!
    'உலகையே ஒரு மதம் ஆக்கும் நபர் ஒருவர் வருவார் '!

    அதன் பின்னர் குறிப்பாக இந்தியாவும் அதன் பக்கத்துக்கு நாடும் மிகவும் சிறப்பாக விளங்கும் என்பது.

    மேற்கண்ட கூற்று உண்மையானால் நமது நாடும் மற்றும் ஏற்கனவே இங்கு உள்ள மதம் அல்லது புதியதாக தோன்றும் மதம் தானே சிறந்து விளங்கும் ஐயா.

    ReplyDelete
  18. Hi Sir,

    Question and Answer session goes very well.

    Keep it up!

    ReplyDelete
  19. Dear Sir

    Indru Kelviyum & Badhilum Thelivagavum Arumayagavum ulladhu...

    Arumayana solledu (Rakkamma, Kedhamma, Saniyappa)...

    Thanks Sir

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  20. Dear Sir

    Shall I get Mr.Anand Blog address?

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  21. ஐயா,
    கேள்விகளுக்கு மிக அருமையான பதில்கள் மிக்க நன்றி

    ReplyDelete
  22. ////astroadhi said...
    இனிய காலை வணக்கம்......
    அய்யா கேள்வி பதில் பகுதி சுவாரசியமாக செல்கின்றது....
    நன்றி வணக்கம்....//////

    நல்லது. நன்றி ஆதிராஜ்!

    ReplyDelete
  23. //////Uma said...
    என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி. (ஓ போட்டதற்கும்தான்).
    //pin point ஆக இன்ன position ல் இன்ன வேலை என்று சொல்வதற்கெல்லாம் தெய்வ அருள், வாக்கு சித்தி

    வேண்டும். உங்கள் மொழியில் சொன்னால் அதற்கு intution power வேண்டும்.//
    நீங்கள் சொல்வது சரிதான். அந்த நபர் (அவர் காவல் துறையில் ஒரு உயர் அதிகாரி என்று சொன்னதாக

    நினைவு) இவரின் முகத்தைப் பார்த்துதான் எல்லாம் சொன்னாராம்.
    கிருஷ்ணன் சார், நாங்கள் எல்லாம் யாரு? ரூம் போட்டு யோசிக்கிறவங்க. நான் உங்களுக்கு ஒரு மெயில்

    அனுப்பினேன். உங்களுக்கு கிடைக்கவில்லை என நினைக்கிறேன். உங்கள் மெயில் முகவரி தரவும்.//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  24. /////Soundarraju said...
    இன்றைய பதிவில், கேள்வி பதிலுடன் தங்கள் அலங்கார வரிகள் அனைத்தும் superb sir ,...../////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கேள்விக்ககான. _ பதில்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  26. ///kannan said...
    ஐயா வணக்கம்
    நாஸ்டர்டாமஸைப் பற்றி 1999 வருடத்திற்கு க்கு முன்னர் படித்தது ஐயா. மேலும் மதுரை மீனாட்சி அம்மன்

    கோவிலில் உள்ள தமிழ் மற்றதில் உரை நிகழ்த்தும் பொழுது கேட்டது ஐயா
    ' முற்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் தோன்றும் ஒருவர்'!
    'உலகையே ஒரு மதம் ஆக்கும் நபர் ஒருவர் வருவார் '!
    அதன் பின்னர் குறிப்பாக இந்தியாவும் அதன் பக்கத்துக்கு நாடும் மிகவும் சிறப்பாக விளங்கும் என்பது.
    மேற்கண்ட கூற்று உண்மையானால் நமது நாடும் மற்றும் ஏற்கனவே இங்கு உள்ள மதம் அல்லது புதியதாக

    தோன்றும் மதம் தானே சிறந்து விளங்கும் ஐயா.////

    இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். நான் படித்திருக்கிறேன். அது சம்பந்தமான
    செய்திகள் என்னிடம் உள்ளன. முன்பு பதிவிட்டிருக்கிறேன்

    ReplyDelete
  27. ////Ram said...
    Thanks for the todays anwers.////

    நல்லது. நன்றி ராம்!

    ReplyDelete
  28. ////Naresh said...
    Hi Sir,
    Question and Answer session goes very well.
    Keep it up!////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. ////Arulkumar Rajaraman said..
    Dear Sir
    Indru Kelviyum & Badhilum Thelivagavum Arumayagavum ulladhu...
    Arumayana solledu (Rakkamma, Kedhamma, Saniyappa)...
    Thanks Sir
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  30. //Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Shall I get Mr.Anand Blog address?
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    Blog URL: http://ananth-classroom.blogspot.com/

    ReplyDelete
  31. ///////SP.VR. SUBBAIYA said... 4ஆம்வீடு, 8ஆம் வீடு, மற்றும் 12ஆம் வீடு வலுவாக இருக்கும் ஜாதகங்களுக்கு ஞான ஜாதகங்கள் என்று பெயர். அவர்கள்தான் சொத்து, சுகங்களை எல்லாம் இழந்து, அல்லது பறிகொடுத்து, பல துன்பங்கள், ஏமாற்றங்கள், துரோகங் களுக்கு ஆளாகி, இவ்வளவுதான், உலகம் இவ்வளவுதான் என்பதை சீக்கிரம் உணர்வார்கள். அவர்களுக்குத்தான் ஞானம் வரும்.\\\\\\
    நீங்க சொன்ன 3 இடங்கள்லே
    12ஆம் இடம் மட்டும் ஸ்ட்ரோங். 33பரல்.அதுக்கே தாவு தீர்ந்துடுச்சி..இதுலே 4 ,8 வேறயா?அய்யா..சாமி..நான் இந்த ஆட்டத்துக்கு ஜூட்......

    ReplyDelete
  32. /////|கீதப்ப்ரியன்|Geethappriyan| said..
    ஐயா,
    கேள்விகளுக்கு மிக அருமையான பதில்கள் மிக்க நன்றி ////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. மற்றவர்கள் எப்படியோ. ஆனால் என் விஷயத்தில் எனக்கு கஷ்ட காலம் வந்து அது எப்போது தீரும் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஜோதிடத்தை கையில் எடுக்கவில்லை. இந்த நவகிரகங்கள், தசா புத்தி, கோச்சாரம் இவற்றை மீறிய சக்தி இருக்கிறது. அதை என்னால் உணர முடிகிறது. அதன் அருள் இருந்தால் இந்த நவநாயகர்கள் என்ன, அந்த எம நாயகனையும் வெல்லலாம். எதன் பிடிக்குள்ளும் நாம் போக மாட்டோம். எல்லாம் நம் பிடிக்குள் வரும்.

    ReplyDelete
  34. /////
    கால சர்ப்ப தோஷம் பற்றி இந்த கேள்வி (உதாரணத்தை வைத்து விளக்கி உள்ளேன் . யாருடைய ஜாதகமும் இல்லை):-
    லக்னம் - மிதுனம்.
    மீனம் - கேது - 20 12'
    கன்னி - ராகு - 3 14'
    கன்னி - சுக்ரன் - 12 18'
    கன்னி - புதன் - 16 20'
    சந்திரன் வெளியே விருச்சிகத்தில் உள்ளார் .
    ராகுவோடு சுக்ரனும் புதனும் சேர்ந்து ஒரே வீட்டில் உள்ளார்கள். ஆனால் டிகிரி வைத்து பார்க்கும் பொழுது ராகுவுக்கு வெளியே உள்ளார்கள் .
    இந்த அமைப்பு காலசர்ப்ப தோஷத்தை சேர்ந்ததா ? மேலே கூறிய ஜாதகம் உதாரண ஜாதகம் தான் .
    மிக்க நன்றி .//////

    // சூரியனும், குருவும் எங்கே இருக்கிறார்கள்? அவர்களை ஆட்டத்திற்கு சேர்த்துக்கொள்ளவேண்டாமா? //

    சூரியன் + குரு = கடகம்
    சனி + செவ்வாய் = மேஷம்
    லக்னம் - மிதுனம்.
    மீனம் - கேது - 20 12'
    கன்னி - ராகு - 3 14'
    கன்னி - சுக்ரன் - 12 18'
    கன்னி - புதன் - 16 20'
    சந்திரன் வெளியே விருச்சிகத்தில் உள்ளார் .

    ReplyDelete
  35. பிளாக்கரில் பிரச்சனையா . .
    வாத்தியாரின் நேர பற்றாக்குறையா . .

    அய்யரின் பின் ஊட்டம் வரவில்லையே . .

    வரட்டும் . . .
    பதில்கள் வரும் வரை காத்திருக்கும் . .

    ReplyDelete
  36. //////minorwall said...
    ///////SP.VR. SUBBAIYA said... 4ஆம்வீடு, 8ஆம் வீடு, மற்றும் 12ஆம் வீடு வலுவாக இருக்கும் ஜாதகங்களுக்கு ஞான ஜாதகங்கள் என்று பெயர். அவர்கள்தான் சொத்து, சுகங்களை எல்லாம் இழந்து, அல்லது பறிகொடுத்து, பல துன்பங்கள், ஏமாற்றங்கள், துரோகங் களுக்கு ஆளாகி, இவ்வளவுதான், உலகம் இவ்வளவுதான் என்பதை சீக்கிரம் உணர்வார்கள். அவர்களுக்குத்தான் ஞானம் வரும்.\\\\\\
    நீங்க சொன்ன 3 இடங்கள்லே
    12ஆம் இடம் மட்டும் ஸ்ட்ரோங். 33பரல்.அதுக்கே தாவு தீர்ந்துடுச்சி..இதுலே 4 ,8 வேறயா?அய்யா..சாமி..நான் இந்த ஆட்டத்துக்கு ஜூட்....../////

    என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா
    அது முடியுமா?
    எண்ணத்திலே கலந்து நண்பரான பின்னே
    என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா
    ஜூட்விட முடியுமா?
    மைனரே முடியுமா?

    ReplyDelete
  37. ////ananth said...
    மற்றவர்கள் எப்படியோ. ஆனால் என் விஷயத்தில் எனக்கு கஷ்ட காலம் வந்து அது எப்போது தீரும் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஜோதிடத்தை கையில் எடுக்கவில்லை. இந்த நவகிரகங்கள், தசா புத்தி, கோச்சாரம் இவற்றை மீறிய சக்தி இருக்கிறது. அதை என்னால் உணர முடிகிறது. அதன் அருள் இருந்தால் இந்த நவநாயகர்கள் என்ன, அந்த எம நாயகனையும் வெல்லலாம். எதன் பிடிக்குள்ளும் நாம் போக மாட்டோம். எல்லாம் நம் பிடிக்குள் வரும்.////

    எனக்கு, என் தந்தையார், மற்றும் அவருடைய ஜோதிட நண்பர்கள் திரு. ஆசான், மற்றும் திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களை வைத்து இளம் வயதிலேயே ஜோதிடத்தின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டது.

    ReplyDelete
  38. Shyam Prasad said...
    /////
    கால சர்ப்ப தோஷம் பற்றி இந்த கேள்வி (உதாரணத்தை வைத்து விளக்கி உள்ளேன் . யாருடைய ஜாதகமும் இல்லை):-
    லக்னம் - மிதுனம்.
    மீனம் - கேது - 20 12'
    கன்னி - ராகு - 3 14'
    கன்னி - சுக்ரன் - 12 18'
    கன்னி - புதன் - 16 20'
    சந்திரன் வெளியே விருச்சிகத்தில் உள்ளார் .
    ராகுவோடு சுக்ரனும் புதனும் சேர்ந்து ஒரே வீட்டில் உள்ளார்கள். ஆனால் டிகிரி வைத்து பார்க்கும் பொழுது ராகுவுக்கு வெளியே உள்ளார்கள் .
    இந்த அமைப்பு காலசர்ப்ப தோஷத்தை சேர்ந்ததா ? மேலே கூறிய ஜாதகம் உதாரண ஜாதகம் தான் .
    மிக்க நன்றி .//////

    // சூரியனும், குருவும் எங்கே இருக்கிறார்கள்? அவர்களை ஆட்டத்திற்கு சேர்த்துக்கொள்ளவேண்டாமா? //

    சூரியன் + குரு = கடகம்
    சனி + செவ்வாய் = மேஷம்
    லக்னம் - மிதுனம்.
    மீனம் - கேது - 20 12'
    கன்னி - ராகு - 3 14'
    கன்னி - சுக்ரன் - 12 18'
    கன்னி - புதன் - 16 20'
    சந்திரன் வெளியே விருச்சிகத்தில் உள்ளார் /////

    காலசர்ப்ப தோஷம்/யோகம் உள்ள ஜாதகம்தான்!

    .

    ReplyDelete
  39. ////iyer said...
    பிளாக்கரில் பிரச்சனையா . .
    வாத்தியாரின் நேர பற்றாக்குறையா . .
    அய்யரின் பின் ஊட்டம் வரவில்லையே .
    வரட்டும் . . .
    பதில்கள் வரும் வரை காத்திருக்கும் //////

    ப்ளாக்கரில் பிரச்சினையா? கணபதி ஹோமம் பண்ணிவிடலாமா சுவாமி? .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com