கோவை மக்கள் கொடுத்து வைத்தவர்கள். சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் அற்புத ஆன்மிக உரைகளை அடிக்கடி கேட்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். 11.7.2010 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கோவை ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்க வளாகத்தில் சுவாமிஜி ஆற்றிய உரையில் இருந்து சில முக்கியமான பகுதிகளை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.
பதிவிடுவதில் ஏன் தாமதம் என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு மாத இதழுக்கு அவ்வுரையின் தொகுப்பை அனுப்பியிருந்தேன். அவர்கள் 1.8.2010 இதழில் அதை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிடும்வரை பொறுமை காத்தேன்.
இப்போது நீங்கள் படித்து மகிழ் அதைக் கொடுத்துள்ளேன். பத்திரிக்கையில் உரையின் சுருக்கம் மட்டும் வந்துள்ளது. எனது பதிவில் முழு உரையும் உள்ள்து.
அப்பத்திரிக்கையில் உள்ள மற்ற ஆன்மிகக் கட்டுரைகளை எல்லாம் படிப்பதற்கு, அப்பத்திரிக்கையை வாங்கிப் படியுங்கள். விலை ரூபாய் பதினேழுதான்! 82 பக்கங்கள் உள்ளன.
Over to posting!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------
பக்கங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், பக்கங்கள் பெரிதாகத் தெரியும்!
-------------------------------------------------------------------------
அக்கரை பச்சை!
தலைப்பு: அக்கரைப் பச்சை
தலைப்பு & நிகழ்ச்சி உபயம்: திரு.எம். கிருஷ்ணய்யர், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், கோவை!
---------------------------------------------------------------------------------------------------------------
அக்கரைப்பச்சை என்பது சாதாரணமாகப் பேச்சு வழக்கில் உள்ள வாக்கியம். அதை இன்றையத் தலைப்பாகக் கொடுத்திருக்கிறார்கள்.
நான் குறிப்பு எழுதிக்கொண்டு வந்து பேசுபவன் அல்ல! எதிரில் அமர்ந்திருக்கும் உங்கள் முகக் குறிப்பு அறிந்து பேசுபவன்.
அருள்வாக்குக் கிடையாது. எனக்கு அருள் வாக்குக் கிடையாது.
அருளினால்தான் எனக்கு வாக்கு ; இறையருளினால்தான் எனக்கு வாக்கு!
இங்கே பச்சை இல்லை என்று, பலர் துபாய்க்குச் செல்கிறார்கள். பிறகு அங்கிருந்து குவைத்திற்குச் செல்கிறார்கள். அவற்றைவிட கனடா பச்சையாகத் தெரிய, அங்கேயும் செல்கிறார்கள். முன்பு ஈட்டிய பணத்தை அங்கே விட்டுவிடுகிறார்கள். இறுதியில் கனடாவில் இருந்து இங்கே திரும்பிவிடுகிறார்கள். கடைசியில் மாமனார் வீடு பச்சையாக உள்ளது.
-----------------------------
அக்கரை பச்சையாக இருக்கிறது என்றால் நாம் இருக்கும் இடம் பச்சையாக இல்லை என்றுதானே அர்த்தம்!
அமெரிக்கா பச்சையாக உள்ளது என்று அங்கே செல்பவர்களை எடுத்துக்கொள்வோம்.
அங்கே செல்பவன், அவன்தான் சமையலையும் செய்ய வேண்டும். பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவும் வேலையையும் செய்ய வேண்டும். அதற்கெல்லாம் அங்கே ஆள் கிடைக்காது. கிடைத்தால் இவன் வாங்கும் சம்பளம் முழுவதையும் அவனுக்குக் கொடுத்தாக வேண்டும்.
Do dishes என்றால் பத்துப் பாத்திரம் தேய்ப்பது என்று பொருள். சமைப்பதற்கும் அதுதான் உரிய சொல்.
This fellow will do the dishes;
She (wife) will do the dishes
இவன் பத்துப் பாத்திரம் தேய்க்கும் வேலையைச் செய்வான்; மனைவி சமையலைச் செய்வாள்.
நம்மூர் என்றால் இரண்டிற்குமே ஆட்களை நியமித்துவிடலாம். He can not have that kind of luxury in America!
இங்கே பண்ண மட்டான்; அங்கே போய்ப் பண்ணுவான்.
----------------------------------------------------------------------------------
நான் அமெரிக்காவில் இருக்கும் சமயம், என்னைப் பார்க்க பக்தர் ஒருவர் வருவார். ஒரு சமயம் மனைவி இல்லாமல் அவர் மட்டுமே 15 தினங்கள் தொடர்ந்து வந்தார்.
“எங்கே உங்கள் மனைவியைக் காணவில்லை?” என்று கேட்டேன்.
“இந்தியாவிற்குச் சென்றிருக்கிறாள். 15 தினங்கள் ஆகிறது. திரும்பிவர இன்னும் 15 தினங்கள் ஆகும்” என்றார்
“உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா?” என்று கேட்டேன்.
"தெரியாது” என்றார்.
“சாப்பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
“ஒரு மாதத்திற்கு வேண்டியதை அவள் சமைத்து, Deep Freezerல் வைத்துவிட்டுப்போய் இருக்கிறாள். அவ்வப்போது வேண்டியதை எடுத்து Micro Ovenல் சூடு பண்ணிச் சாப்பிட்டுக்கொள்வேன்”
அது சுவையாக இருக்காதே என்று நான் சொல்ல, அவர் சொன்னார்: “அவள் இங்கே இருந்தாலும், அப்படித்தான் செய்வாள்”
”நைவேத்தியத்திற்கு என்ன செய்வீர்கள்?” என்று கேட்டேன்.
“Dry Fruits களை வைத்துக் கும்பிடுவேன்” என்றார்.
இல்லம் என்றால் தினசரி சமையல் இருக்க வேண்டும். பூஜைக்கு நைவேத்தியம் இருக்க வேண்டும். இரண்டும் இல்லாவிட்டால் அது வெறும் வீடாகிவிடும். It will become a house and not a home!
There should be cooking & pooja.
அவை இல்லையென்றால் அது வெறும் வீடுதான்.
அதுதான் அமெரிக்கா! அதுதான் அக்கரைப் பச்சை. That is akkaraippachai!
-----------------------------------------------------------------------------
பச்சைக்கு என்ன வேண்டும்?
One thing is certain. You should enjoy yourself!
எந்தக் காரணமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
காரணம் வேண்டுமென்றல் கிடைக்காது. கிடைத்தாலும் போய்விடும். நிலைத்து நிற்காது.
--------------------------------------------------------------------------------------
நமது வேதங்களிலும், உபநிஷதங்களிலும், திருமறை நூல்களிலும் இருக்கும் எல்லா விஷயங்களுமே நாம் எப்படி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதைப்பற்றிதுதான். அதில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை.
சுகம், ஆனந்தம் எனும் பேறு முதலில் யாருக்கு எதில் இருக்கும் என்பதைப் பார்ப்போம். துக்கம் என்றால் மட்டும் யாரும் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். அதைத் தெரிந்து கொள்வதில் விருப்பம் இருக்காது.
தமிழில் ஒரு பாடல் உண்டு
கூழுக்கு உப்பு இல்லை என்பார்க்கும்
பாலுக்கு சர்க்கரை இல்லை என்பார்க்கும்
புற்றுதைத்த காலுக்கு செருப்பில்லை என்பார்க்கும்
கனகதண்டி மேலுக்கோர் பஞ்சனையில்லை என்பார்க்கும்
விசனம் ஒன்றே!
கூழ் கிடைத்தது. அதில் உப்பு இல்லை. உப்பு கிடைத்தால் பரவாயில்லை என்பான் ஒருத்தன். பால் கிடைத்தது. அதில் கலந்து ருசியோடு குடிக்கச் சர்க்கரை இல்லாமல் போய்விட்டதே எனபான் ஒருத்தன். முள் குத்தும் இடங்களில் செல்ல வேண்டியதாக இருக்கிறது. காலுக்கு ஒரு செருப்பு கிடைக்க வில்லையே என்பான் ஒருத்தன்.
பல்லக்கில் பயணிக்கும் ஒருவன், நன்றாகச் சாய்ந்து பயணிக்க ஒரு தலையனை இருந்தால் பரவாயில்லையே என்பான். ஆகக்கூடி தேவைகள் வேறாக இருந்தாலும் அவர்களின் விசனம் ஒன்றுதான்.
இவர்கள் நான்கு பேர்களின் அழுகையில் வித்தியாசம் உண்டா?
அவனவனுக்கு அதது வேண்டும். மாற்றிக் கொடுத்தால் என்ன ஆகும்?
-----------------------------------------------------------------------------------
ஒருமுறை என்னைப் பார்க்க வந்தவன் சொன்னான்.
“சுவாமிஜி, Familyயுடன் வந்திருக்கிறேன் என்றான். அவனுடன் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும் வந்திருப்பதாக அர்த்தமில்லை. மனைவியுடன் வந்திருப்பதையே அவன் அப்படிச் சொல்கிறான்.
இப்போது Family என்றால், “நாம் இருவர்; எப்போதும் இருவர்” என்றாகிவிட்டது.
சம்சாரி என்பதற்கு அர்த்தம் இல்லமல் போய்விட்டது.
It is a number game.
Elections are also number game!
சம்சாரம் என்பது one who is depending for his health and well being
எப்போதெல்லாம் நாம் ஆனந்தத்தை அடைகிறோமோ, அப்போது நாம் நாமாக இருக்கிறோம்.
--------------------------------------------------------------------------------------
இக்கரை சரியாக இருந்தால், அக்கரை என்னும் பிரச்சினை இருக்காது.
கெளபீணத்தைத் தவிர - கோவணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாத நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறானே அவன்தான் பாக்கியவான்.
“எல்லாம் உண்மை.
எல்லாம் ஆண்டவனே
அக்கரையிலும் ஆண்டவனே
இக்கரையிலும் ஆண்டவனே”
என்னும் நிலைதான் நமது கலாச்சாரம்.
சந்தோஷம் என்றும் சுகம் என்றும் ஏதோ ஒரு பொருளில் இருக்கிறது என்று நினைக்கிறோம்.
அதாவது ஆப்பிள், Table போன்ற பொருள் என்று நினைக்கிறோம்.
ஆனந்தம் என்று ஏதாவது பொருள் உண்டா?
இல்லையே!
அது மாதிரி ஒரு பொருள் இருந்தால் நூறு ரூபாய்க்கு ஆனந்தம் கொடு என்று கேட்கலாம்.
ஒருவன் ஒரு காரை வாங்கினால் ஆனந்தம் என்று நினைக்கிறான். ஒருவன் அதே காரை அவனிடம் எப்படியாவது விற்கவேண்டும் என்று நினைக்கிறான். மூன்றாவது மனிதன் அவர்கள் இருவரையும் எப்ப்டியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறான். அவனுக்குக் கமிஷன் கிடைக்கும். அது நடந்தால் மூவருக்குமே ஆனந்தம்.
ஆக ஆனந்தம் என்பது காரில் இல்லை.
உனக்கு எது வேண்டுமோ, அதை அடையும்போது ஆனந்தமாகத் தெரியும்
வராமல் இருக்கக்கூடியது எதுவோ
போகாமல் இருக்கக்கூடியது எதுவோ
அதனால் உண்டாவதுதான் ஆனந்தம்
அது நீயாகவே இருக்கிறாய்
அதுதான் ஆனந்தம்!
பரங்கிக்காய் என்பது object
பெரிய பரங்கிக்காய் என்பது adjective
உண்மையான ஆனந்தத்தில் object ம் கிடையாது, substanceம் கிடையாது.
----------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவில் Happy Hours என்பார்கள்.
மாலை 5:30 மணி முதல் 6:30 மணிவரை அங்கே Happy Hours. Barகளில் விலை ஒரு டாலர் குறைவாக இருக்கும். அதுதான் அமெரிக்காவில் Happy Hours. அது நமக்கு துக்க நேரம்.
No place is happiness
No time is happiness
No substance is happiness
No object is happiness
இதைச் சொன்னால், “சுவாமிஜி, நீங்களே சொல்லிவிடுங்கள் - happiness எங்கே இருக்கிறது?” என்பார்கள்.
உடம்பில் இருக்கிறதா? இல்லை. உடல் உறுப்புக்கள் உபாதைகளைத் தரக்கூடியவை.
மனதில் இருக்கிறதா? இல்லை. மனதில் துக்கமும் இருக்கிறது.
Summer, spring, autumn, winter என்ற பருவங்களில் இருக்கிறதா? இல்லை.
வீட்டில் இருக்கிறதா?
அங்கேயும் கிடையாது.
இங்கேயும் கிடையாது.
உடம்பின் உள்ளேயும் கிடையாது.
மனதிலும் கிடையாது.
Subject & Object இரண்டும் ஒன்றுதான்.
(பொருளும், பொருளைக்குறித்த விஷயமும் ஒன்றுதான்)
அந்த இரண்டும் அற்ற ஒன்றுதான் ஆனந்தம்.
Gap இல்லாமல், இடைவெளி இல்லாமல் இருக்கின்ற ஒன்றுதான் ஆனந்தம்.
என்னிடம் உள்ள பற்றாக்குறை எழுந்து விடாமல், எது என்னைக் காக்கிறதோ அதுதான் ஆனந்தம்
Object & Subject ஐ ஒன்றாகக் காட்டினால், ஒன்றாகப் பார்த்தால், அதுதான் உண்மையான மனித சொரூபம். அதுதான் ஆனந்தம்!
அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்முடைய கலாச்சாரத்தில் அதற்கான பாடம் உள்ளது.
நம்பிக்கை என்பது after verificationஆல் ஏற்படுவதல்ல
இருப்பதெல்லாம் இறைவனே என்று சொன்னால், அப்படியே பார்க்க வேண்டும்.
அது நம்முடைய கலாச்சாரம்.
சிதம்பரத்தில் ஆகாயம்தான் லிங்கம்.
ஆனைக்காவில் தண்ணீர்தான் லிங்கம்.
அவற்றை லிங்கமாகத்தான் பார்க்கிறோம். வழிபடுகிறோம்
அது நம்முடைய கலாச்சாரம்.
-------------------------------------------------------------------
அக்கரை என்பது கிடையாது.
எல்லாமே இறைவன் எனும்போது கரைகள் ஏது?
அக்கரை என்பது இல்லாமல் இருப்பதால், இக்கரை என்பதும் இல்லை.
அறியாமையைப் போக்கக்கூடிய சாஸ்திரங்கள் நம்மிடம் உள்ளன.
“அக்கரை’யற்ற தர்மம் நம்முடைய தர்மம்.
இந்தப் புண்ணிய தேசத்தில், நம் வம்சா வழிவந்தவர்கள். அது ஒரு புண்ணியம்.
இங்கே பிறந்துவிட்டு அங்கே போகிறான். அதை என்னவென்பது?
You have a great inheritors, heritage & spiritual heritage.
We don't search for GOD
We search for knowledge about GOD
இங்கே இருப்பதெல்லாம் ஆனந்தம்தான்.
Akkarai Pachai does not exit for us!
You need not search Anandha anywhere!
There is only one anandha
That is you!
------ சுவாமிஜியின் உரையைக் கேட்டு, குறிப்ப்பெடுத்து, தொகுத்து வழங்கியவர், SP.VR.சுப்பையா, கோயம்புத்தூர்
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
6.8.10
Subscribe to:
Post Comments (Atom)
மிக்க நன்றி
ReplyDelete5ந் தேதி அன்று 'உம்மா உம்மம்மா...'என்று பிரேக் டான்ஸ்! 6ந் தேதிசன்யாசம்! இது நல்ல ஸ்விங்!
ReplyDeleteபூஜ்ய தயானந்த சரஸ்வதி சுவாமிகள் தஞ்சைப் பெருவுடையாருக்கு 10கிலோ
தினசரி நெய்வேத்யம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளார்கள்.அதன் நேரடி நிர்வாகத்தில் அடியேன் அணில் போல் சிறு சேவை செய்து வருகிறேன்.
இதில் பங்கு பெற விரும்பும் அன்பர்கள் எனக்கு மின் அஞ்சல் அனுப்பவும்.
kmrk1949@gmail.com
டெல்லி உமா அவர்களுக்கும் மின் அஞ்சல் முகவரி கொடுத்ததுபோல் ஆயிற்று.
ஆஹா அற்புத சொற்பொழிவு.
ReplyDeleteஆனந்தம் அது, இங்கும் அங்குமில்லை,
இடைவிடாது எங்கும் நிறைந்திருப்பதே ஆனந்தம்.
அற்புதம். நன்றிகள் ஐயா!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteசுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் "அக்கரைப்பச்சை"
ஆன்மிக உரையினை தொகுத்து வழங்கி,அதனைப் படித்து
மகிழ வாய்ப்பும் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010 08 06
பரவசம்..
ReplyDeleteஅருமை.
ReplyDeleteநல்ல தொகுப்பு.
வாத்தியாருக்கும்-வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள்
AAhhaaaa,,.....
ReplyDeleteWhat a great secret of life. swamiji has explored the secrets of happiness.
Happiness is nowhere. it is within ourself only.
Happiness without reason is only permanent happiness.
oh... what a great explanations...
We are all searching the happiness outside somewhere, where it is not available.
Thank you very much for you to post swamiji's teachings...Thank you.
வணக்கம் அய்யா....
ReplyDeleteஇனிய கருத்துக்கள் அனைவரும் உணரவேண்டிய உண்மை.....
நன்றி வணக்கம்.....
Shyam Prasad said...
ReplyDeleteமிக்க நன்றி////
நல்லது. நன்றி ஷியாம்!
//////kmr.krishnan said...
ReplyDelete5ந் தேதி அன்று 'உம்மா உம்மம்மா...'என்று பிரேக் டான்ஸ்! 6ந் தேதிசன்யாசம்! இது நல்ல ஸ்விங்!
பூஜ்ய தயானந்த சரஸ்வதி சுவாமிகள் தஞ்சைப் பெருவுடையாருக்கு 10கிலோ
தினசரி நெய்வேத்யம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளார்கள்.அதன் நேரடி நிர்வாகத்தில் அடியேன் அணில் போல் சிறு சேவை செய்து வருகிறேன்.
இதில் பங்கு பெற விரும்பும் அன்பர்கள் எனக்கு மின் அஞ்சல் அனுப்பவும்.
kmrk1949@gmail.com
டெல்லி உமா அவர்களுக்கும் மின் அஞ்சல் முகவரி கொடுத்ததுபோல் ஆயிற்று./////
ஸ்விங் இன் தி ரெயின்... இல்லாவிட்டால் எப்படி சார்? எல்லா வயதினரும் வகுப்பறைக்கு வருகிறார்களே!
/////Alasiam G said...
ReplyDeleteஆஹா அற்புத சொற்பொழிவு.
ஆனந்தம் அது, இங்கும் அங்குமில்லை,
இடைவிடாது எங்கும் நிறைந்திருப்பதே ஆனந்தம்.
அற்புதம். நன்றிகள் ஐயா!////
நல்லது. நன்றி ஆலாசியம்!
//////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் "அக்கரைப்பச்சை"
ஆன்மிக உரையினை தொகுத்து வழங்கி,அதனைப் படித்து
மகிழ வாய்ப்பும் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி////
எல்லாம் உங்களைப்போன்ற அன்பர்களுக்காகத்தான் தட்சணாமூர்த்தி!
///////காவேரி கணேஷ் said...
ReplyDeleteபரவசம்..//////
அதுதான் தேவை!
/////ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteஅருமை.
நல்ல தொகுப்பு.
வாத்தியாருக்கும்-வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள்/////
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஸ்வாமிஜி!
///////CJeevanantham said...
ReplyDeleteAAhhaaaa,,.....
What a great secret of life. swamiji has explored the secrets of happiness.
Happiness is nowhere. it is within ourself only.
Happiness without reason is only permanent happiness.
oh... what a great explanations...
We are all searching the happiness outside somewhere, where it is not available.
Thank you very much for you to post swamiji's teachings...Thank you.//////
பதிவின் சாராம்சத்தை உள்வாங்கிக்கொண்டு பின்னூட்டமிட்டமைக்கு நன்றி நண்பரே!
///astroadhi said...
ReplyDeleteவணக்கம் அய்யா...
இனிய கருத்துக்கள் அனைவரும் உணரவேண்டிய உண்மை.....
நன்றி வணக்கம்...../////
நல்லது. நன்றி ஆதிராஜ்!
எக்கரையும் பச்சை தான் . .
ReplyDeleteஎண்ணம் தெளிவானால் எதுவும் எளிதாகும் என்பதனை எத்தனை குருமார்கள் வந்து சொன்னாலும் இவர்கள் கேட்டு ரசிப்பார்களே அன்றி புரிந்து நடப்பார் இல்லை . .
இவர் கனவில் அவள் வருவாள் . .
அவள் கனவில் யார் வருவார் . .
என்ற சந்திரபாபு பாடும் பாடலை பின்னனி இசையோடு பாடியபடி . .
ஆனந்தம் என் பெயரிலேயே இருக்கிறது. அதை நான் எங்கேயும் சென்று தேட வேண்டாம்.
ReplyDeleteசரி விஷயத்திற்கு வருகிறேன். ஆனந்தம் என்றால் என்ன என்பது அவரவர் பார்வையிலும் தேவையிலும்தான் இருக்கிறது. இது மனிடருக்கு மனிதர் வித்தியாசப்படும். இந்த கட்டுரையில் சொல்லப்பட்டதுதான்.
yes sir
ReplyDeleteமிகவும் அருமையான கருத்துக்கள்.
ReplyDeleteவாத்தியார் ஐயா
ReplyDeleteபொன்காலை வணக்கம்.
'மக்கள் தொண்டே மகேஷன் தொண்டு'! என்று வாழும் தங்களின் சரிரம் மற்றும் ஆத்மா மென்மேலும் செழுமை பெற எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகின்றேன்
ஐயா!!!
ReplyDeleteஜோதிடம் கற்கும் ஆவலில் கூகுள் ஆண்டவரிடம் வழி கூறுமாறு கேட்டேன். அவர் உங்களை அடையாளம் காட்டினார்.ஜோதிட பாடங்கள் ஒரு புறம் நன்றாக மனதில் ஏறினாலும் உங்கள் மன வளக் கட்டுரைகள் என் மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடி கொள்ளும் வழிகளை காட்டியது. என்னைப் போன்று பலர் பயன் பெற்றிருப்பார்கள். உங்களின் நோக்கமும் இதுவாகத்தான் இருக்கும் என் நினைக்கிறேன். மாதமொரு முறையாவது இது போன்று கட்டுரைகளை பதிவிடவும்.என் இதய பூர்வமான நன்றி...
This is one of the best article, I have read...Thanks Sir
ReplyDeleteஐயா வணக்கம்...!
ReplyDeleteகடந்த சில நாட்களாக சில தவிர்க்க முடியாத காரணங்களால் வகுப்புக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். ஆனால் இன்று வந்தவுடன் முதல் வேலையாக விடுபட்ட பாடங்களை படித்துவிட்டுதான் பின்னூட்டமிடுகிறேன்.. கேள்விபதில்களும் ஆனந்தம்... ஸ்வாமிஜியின் சொற்பொழிவும் ஆனந்தம்.. வகுப்பறை முழுவதும் ஆனந்தம், ஆனந்தம்... பேரானந்தம்... ஸ்வாமிஜியின் சொற்பொழிவைக் கேட்கும் பாக்கியம் கிடைக்காதவர்களுக்கு அதைப்படிக்கும் பாக்கியம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள்..
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
ஸ்வாமிஜியின் சிறப்பான உரையின் சாரத்தைப் பிழிந்து தந்திருக்கும் உங்களுக்கு நன்றி. மேலோர்கள் இத்தகையக் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பட்டுக்கோட்டை ஒரு பாட்டில் சொல்கிறார்: (எனக்குச் சரியான வரிகள் மறந்து விட்டன. எனினும் அதன் கருத்து இதுதான்) "நமக்கு முன்னே வந்தவங்க என்னென்னவோ சொன்னாங்க, எல்லாத்தையும் படிச்சீங்க, என்ன செஞ்சு கிழிச்சீங்க" என்று. பகவத் கீதை முதல் பரமாச்சாரியாரின் "தெய்வத்தின் குரல் வரை" இன்று ஸ்வாமி தயானந்த சரஸ்வதி வரை இதுபோன்ற அரிய கருத்துக்களைச் சொல்லி வருகிறார்கள். நமது இளமை வேகத்தில் அவர்களின் கருத்துக் கடலின் ஆழத்தை அறிய நாம் விரும்புவதில்லை. வயது ஆனபின் அனுபவமும், அறிவும் உண்மையை அறிந்து கொள்ள உதவினாலும், அதன்படி இதுவரை நடக்காமல் இப்போது நடப்பதற்குத் தயக்கம் வரலாம். உண்மை எந்தக் காலத்துக்கும் பொருந்தும் உண்மைதான். நடப்பவன் சைக்கிளுக்கும், சைக்கிள் இருந்தால் மோட்டார் சைக்கிளுக்கும், அது இருந்தால் காருக்கும், ஒரு கார் இருந்தால் மேலும் சில கார்களுக்கும் ஆசைப்படுவது இயல்பு. இதைத் தடுக்கும் ஒரே ஆயுதம் மனம். அதைப் பண்படுத்தி வைத்திருந்தால் ஸ்வாமிஜி சொல்லும் கருத்தை உள்வாங்கிக் கொண்டு வையத்துள் வாழ்வாங்கு வாழலாம். கருத்து சொன்ன ஸ்வாமிஜிக்கும், அதனை எங்களுக்கு எடுத்துக் கொடுத்த ஆசிரியருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteவணக்கம் சார்,
ReplyDeleteஅப்பா, தத்துவங்கள் என் மனதை தொட்டுவிட்டது. ரொமபநன்றி சார் அந்த பத்திரிக்கை சென்னையில் கிடைக்கும்மா? துனபங்களுக்கு காரணம் ஆசைதான்
என்பதை தங்கள் நன்கு தெரிவித்திருக்கிறீர்கள்.
சுந்தரி.
சகோத்ரர் கிருஷ்ணனுக்கு
என்னையும் சேர்த்து கொள்ளுங்கல் நானும் எறும்புப்போல சேவை செய்ய போகிறேன் ஆனால் நான் சென்னையிலிருக்கிறேன்.
அருமை.
ReplyDeleteநல்ல தொகுப்பு.
வாத்தியாருக்கும்-வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள்///
appa long days after i met u in class room that too aadi month.
sundari
சுபவரம் இதழின் அட்டைப்படத்தில் இருக்கும் கடமையைச் செய்வதே கடவுள் வழிபாடு என்ற வாசகம் பிடித்திருந்தது
ReplyDelete///////iyer said...
ReplyDeleteஎக்கரையும் பச்சைதான் . .
எண்ணம் தெளிவானால் எதுவும் எளிதாகும் என்பதனை எத்தனை குருமார்கள் வந்து சொன்னாலும் இவர்கள் கேட்டு ரசிப்பார்களே அன்றி புரிந்து நடப்பார் இல்லை . .
இவர் கனவில் அவள் வருவாள் . .
அவள் கனவில் யார் வருவார்
என்ற சந்திரபாபு பாடும் பாடலை பின்னனி இசையோடு பாடியபடி . ///////.
நல்லது. நன்றி நண்பரே!
/////ananth said...
ReplyDeleteஆனந்தம் என் பெயரிலேயே இருக்கிறது. அதை நான் எங்கேயும் சென்று தேட வேண்டாம்.
சரி விஷயத்திற்கு வருகிறேன். ஆனந்தம் என்றால் என்ன என்பது அவரவர் பார்வையிலும் தேவையிலும்தான் இருக்கிறது. இது மனிடருக்கு மனிதர் வித்தியாசப்படும். இந்த கட்டுரையில் சொல்லப்பட்டதுதான்.//////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!
////Uma said...
ReplyDeleteமிகவும் அருமையான கருத்துக்கள்.////
நன்றி சகோதரி!
////kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா
பொன்காலை வணக்கம்.
'மக்கள் தொண்டே மகேஷன் தொண்டு'! என்று வாழும் தங்களின் சரீரம் மற்றும் ஆத்மா மென்மேலும் செழுமை பெற எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகின்றேன்/////
ஆகா, அப்படியே வேண்டுங்கள். உங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் என் எழுத்து இன்னும் மேன்மை பெறவும் வேண்டுங்கள். நன்றி!
////Arul said...
ReplyDeleteஐயா!!!
ஜோதிடம் கற்கும் ஆவலில் கூகுள் ஆண்டவரிடம் வழி கூறுமாறு கேட்டேன். அவர் உங்களை அடையாளம் காட்டினார். ஜோதிட பாடங்கள் ஒரு புறம் நன்றாக மனதில் ஏறினாலும் உங்கள் மனவளக் கட்டுரைகள் என் மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடி கொள்ளும் வழிகளை காட்டியது. என்னைப் போன்று பலர் பயன் பெற்றிருப்பார்கள். உங்களின் நோக்கமும் இதுவாகத்தான் இருக்கும் என் நினைக்கிறேன். மாதமொரு முறையாவது இது போன்று கட்டுரைகளை பதிவிடவும்.என் இதய பூர்வமான நன்றி...////
நல்லது. உங்களின் யோசனைக்கு நன்றி நண்பரே!
/////மிஸ்டர் அரட்டை said...
ReplyDeleteThis is one of the best article, I have read...Thanks Sir/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
//////M.Thiruvel Murugan said...
ReplyDeleteஐயா வணக்கம்...!
கடந்த சில நாட்களாக சில தவிர்க்க முடியாத காரணங்களால் வகுப்புக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். ஆனால் இன்று வந்தவுடன் முதல் வேலையாக விடுபட்ட பாடங்களை படித்துவிட்டுதான் பின்னூட்டமிடுகிறேன்.. கேள்விபதில்களும் ஆனந்தம்... ஸ்வாமிஜியின் சொற்பொழிவும் ஆனந்தம்.. வகுப்பறை முழுவதும் ஆனந்தம், ஆனந்தம்... பேரானந்தம்... ஸ்வாமிஜியின் சொற்பொழிவைக் கேட்கும் பாக்கியம் கிடைக்காதவர்களுக்கு அதைப்படிக்கும் பாக்கியம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள்..
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்//////
எனக்கு முருகன் என்ற பேரைக்கேட்டால் ஆனந்தம்! நன்றி திருவேல் முருகன்!
/////Thanjavooraan said...
ReplyDeleteஸ்வாமிஜியின் சிறப்பான உரையின் சாரத்தைப் பிழிந்து தந்திருக்கும் உங்களுக்கு நன்றி. மேலோர்கள் இத்தகையக் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பட்டுக்கோட்டை ஒரு பாட்டில் சொல்கிறார்: (எனக்குச் சரியான வரிகள் மறந்து விட்டன. எனினும் அதன் கருத்து இதுதான்) "நமக்கு முன்னே வந்தவங்க என்னென்னவோ சொன்னாங்க, எல்லாத்தையும் படிச்சீங்க, என்ன செஞ்சு கிழிச்சீங்க" என்று. பகவத் கீதை முதல் பரமாச்சாரியாரின் "தெய்வத்தின் குரல் வரை" இன்று ஸ்வாமி தயானந்த சரஸ்வதி வரை இதுபோன்ற அரிய கருத்துக்களைச் சொல்லி வருகிறார்கள். நமது இளமை வேகத்தில் அவர்களின் கருத்துக் கடலின் ஆழத்தை அறிய நாம் விரும்புவதில்லை. வயது ஆனபின் அனுபவமும், அறிவும் உண்மையை அறிந்து கொள்ள உதவினாலும், அதன்படி இதுவரை நடக்காமல் இப்போது நடப்பதற்குத் தயக்கம் வரலாம். உண்மை எந்தக் காலத்துக்கும் பொருந்தும் உண்மைதான். நடப்பவன் சைக்கிளுக்கும், சைக்கிள் இருந்தால் மோட்டார் சைக்கிளுக்கும், அது இருந்தால் காருக்கும், ஒரு கார் இருந்தால் மேலும் சில கார்களுக்கும் ஆசைப்படுவது இயல்பு. இதைத் தடுக்கும் ஒரே ஆயுதம் மனம். அதைப் பண்படுத்தி வைத்திருந்தால் ஸ்வாமிஜி சொல்லும் கருத்தை உள்வாங்கிக் கொண்டு வையத்துள் வாழ்வாங்கு வாழலாம். கருத்து சொன்ன ஸ்வாமிஜிக்கும், அதனை எங்களுக்கு எடுத்துக் கொடுத்த ஆசிரியருக்கும் மனமார்ந்த நன்றிகள்./////
பிரபல எழுத்தாளர் ஜாவர் சீதாராமன் சொன்னதுபோல இறுதியில் நடப்பது என்னவோ ஆண்டவன் கட்டளைப் படிதான்! உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி சார்!
/////sundari said...
ReplyDeleteவணக்கம் சார்,
அப்பா, தத்துவங்கள் என் மனதை தொட்டுவிட்டது. ரொமபநன்றி சார் அந்த பத்திரிக்கை சென்னையில் கிடைக்கும்மா? துனபங்களுக்கு காரணம் ஆசைதான்
என்பதை தங்கள் நன்கு தெரிவித்திருக்கிறீர்கள்.
சுந்தரி.
சகோதரர் கிருஷ்ணனுக்கு
என்னையும் சேர்த்து கொள்ளுங்கல் நானும் எறும்புப்போல சேவை செய்யப்போகிறேன் ஆனால் நான் சென்னையிலிருக்கிறேன்.///////
அந்தப் பத்திரிக்கை சென்னையில் இருந்துதான் வெளியாகிறது. மாத இதழ்! சென்னையில் உள்ள புத்தகக்கடைகளில் (வார, மாத இதழ்களை விற்கும் கடைகளில்)கிடைக்கும்
////sundari said...
ReplyDeleteஅருமை.
நல்ல தொகுப்பு.
வாத்தியாருக்கும்-வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள்///
appa long days after i met u in classroom that too aadi month.
sundari////
நன்றி சகோதரி!
/////பாலராஜன்கீதா said...
ReplyDeleteசுபவரம் இதழின் அட்டைப்படத்தில் இருக்கும் கடமையைச் செய்வதே கடவுள் வழிபாடு என்ற வாசகம் பிடித்திருந்தது///
நடிகர் பாக்யராஜ்ஜின் வாசகம் அது. அந்த இதழில் அவருடைய நேர்காணல் ஊள்ளது.
அருமையான பதிவு. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே!
ReplyDelete/////phoenix said...
ReplyDeleteஅருமையான பதிவு. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்/////
நல்லது நன்றி நண்பரே!
/////phoenix said...
ReplyDeleteஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே! /////
அலைந்து முடிவில் சிலர் மட்டுமே உணர்கின்றார் ஞானத்தங்கமே!
வணக்கம் அய்யா,
ReplyDeleteஆகா இதுவள்ளவோ ஆனந்தம், ஆனந்தம்.பூச்சியம் இல்லை என்ரால் எண்க்கு
ஆனந்தம்(மதிப்பு) இல்லை.நமக்கு கையில் ஒன்ரும் இல்லை என்ரால் நமக்கும்
ஆனந்தம்தான் அதுதான் உண்மை.நல்ல விளக்கம்.நன்ரி அய்யா.
வாழ்க வளமுடன். அரிபாய்.a
simply super !
ReplyDeleteஎந்தக் காரணமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
காரணம் வேண்டுமென்றல் கிடைக்காது. கிடைத்தாலும் போய்விடும். நிலைத்து நிற்காது.
simply super !
ReplyDeleteஎந்தக் காரணமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
காரணம் வேண்டுமென்றல் கிடைக்காது. கிடைத்தாலும் போய்விடும். நிலைத்து நிற்காது.
simply super !
ReplyDeleteஎந்தக் காரணமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
காரணம் வேண்டுமென்றல் கிடைக்காது. கிடைத்தாலும் போய்விடும். நிலைத்து நிற்காது.
/////aryboy said...
ReplyDeleteவணக்கம் அய்யா,
ஆகா இதுவல்லவோ ஆனந்தம், ஆனந்தம்.பூச்சியம் இல்லை என்றால் எனக்கு
ஆனந்தம்(மதிப்பு) இல்லை.நமக்கு கையில் ஒன்றும் இல்லை என்றால் நமக்கும்
ஆனந்தம்தான் அதுதான் உண்மை.நல்ல விளக்கம்.நன்றி அய்யா.
வாழ்க வளமுடன். அரிபாய்.a////
நல்லது அரிபாய். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
/////profit500 said...
ReplyDeletesimply super !
எந்தக் காரணமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
காரணம் வேண்டுமென்றல் கிடைக்காது. கிடைத்தாலும் போய்விடும். நிலைத்து நிற்காது. ////
நல்லது. நன்றி நண்பரே!
அருமையான பதிவு, மிகவும் நனறி.
ReplyDelete/////vprasanakumar said...
ReplyDeleteஅருமையான பதிவு, மிகவும் நனறி.////
நல்லது. நன்றி நண்பரே!