மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.8.10

நகைச்சுவை: பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுவான்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுவான்!

இன்றைய வார மலரை இறக்குமதிச் சரக்கு ஒன்று அலங்கரிக்கிறது
படித்து இன்புறுங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"அப்படி என்னதான் வேலைபார்ப்பீங்க ?"

நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா  இந்த  கம்ப்யூட்டர்  படிச்சவங்க  எல்லாம்  நிறைய  சம்பளம் வாங்கிட்டு,  பந்தா  பண்ணிட்டு  ஒரு  தினுசாவே  அலையுறீங்களே?  அப்படி என்னதான்  வேலை  பார்ப்பீங்க ?" –ன்று  நியாயமான  ஒரு  கேள்வியை  கேட்டார்  எனது  அப்பா.

நானும்  விவரிக்க  ஆரம்பிதேன்..

"வெள்ளைகாரனுக்கு  எல்லா  வேலையும்  சீக்கிரமா முடியனும். அதே  மாதிரி  எல்லா  வேலையும் அவனோட வீட்டுல இருந்தே  செய்யணும். இதுக்காக  எவ்வளவு  பணம்  வேணுமானாலும்  செலவு செய்ய தயாரா  இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த  மாதிரி  அமெரிக்கால்-ல,  இங்கிலாந்து-ல  இருக்குற Bank, இல்ல எதாவது  கம்பெனி, நான்  செலவு  செய்ய  தயாரா இருக்கேன். எனக்கு இத  செய்து கொடுங்க  கேப்பாங்க. இவங்கள  நாங்க  "Client"னு  சொல்லுவோம்”

"சரி"

“இந்த  மாதிரி Client-அ  மோப்பம்  பிடிக்குறதுக்காகவே  எங்க பங்காளிக  கொஞ்ச  பேர  அந்த  அந்த  ஊருல  உக்கார  வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales  Consultants, Pre-Sales Consultants. . ..அவங்க போய் Client  கிட்ட பேச்சுவார்த்தை  நடத்துவாங்க. காசு  கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால  இத பண்ண  முடியுமா? அத பண்ண முடியுமான்னு  அவங்க கேக்குற  எல்லாம்  கேள்விக்கும், "முடியும்"னு பதில்  சொல்றது  இவங்க வேலை”

"இவங்க  எல்லாம்  என்னப்பா  படிச்சுருபாங்க"?

"MBA, MSனு  பெரிய  பெரிய  படிபெல்லாம் படிச்சி  இருப்பாங்க."

"முடியும்னு ஒரே  வார்த்தைய திரும்ப  திரும்ப  சொல்றதுக்கு எதுக்கு MBA  படிக்கணும்?" –ன் அப்பாவின் கேள்வியில்  நியாயம்  இருந்தது.

"சரி  இவங்க  போய்  பேசின  உடனே client  projectஐக் கொடுத்துடுவானா?"

"அது எப்படி?  இந்த  மாதிரி  பங்காளிக  எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500  நாள்ல முடிக்க  வேண்டிய வேலைய 60  நாள்ள முடிச்சு தரோம், 50  நாள்ல  முடிச்சு  தரோம்னு பேரம்  பேசுவாங்க..இதுல யாரு  குறைஞ்ச  நாள  சொல்றாங்களோ  அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500  நாள்ல  முடிக்க வேண்டிய  வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க  முடியும்?  ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க  முடியாதே?"

"இங்க தான்  நம்ம  புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50  நாள்னு சொன்ன  உடனே client  சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50  நாள்ல  அவனுக்கு  என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது,  என்ன  செய்யனும்னு நமக்கும்  தெரியாது. இருந்தாலும் 50 நாள்  முடிஞ்ச பிறகு  ப்ரோஜெக்ட்னு  ஒன்ன  நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க  கேட்டது  இதுல்ல, எங்களுக்கு இது  வேணும்,  அது  வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" அப்பா  ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க  நம்பியார்  மாதிரி  கைய  பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்”

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த  பணத்துக்கு  நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50  நாள்  வேலைய 500  நாள்  ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன்  ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி  வெட்டிட்டு வர  முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க  கைல வந்த உடனே என்ன  பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம்  உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய  தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான்  பொறுப்பு."

"அப்போ இவருக்கு  நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான்  கிடையாது.இவருக்கு நாங்க பண்ற  எதுவும்யே  தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –ன அப்பா  குழம்பினார்.

"நாங்க  என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து  கைய  நீட்டுவோம். எப்போ எவன்  குழி பறிப்பானு  டென்ஷன் ஆகி  டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா  இவரு ரொம்ப  நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும்  இவரு  கிட்ட  போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும்  தீர்த்து  வச்சிடுவார?"

"ஒரு  பிரச்சனைய  கூட  தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும்  தலையாட்டிகிட்டே  உன்னோட பிரச்னை எனக்கு  புரியுதுனு சொல்றது மட்டும்  தான் இவரோட  வேலை."

"நான் உன்னோட  அம்மா  கிட்ட  பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட்,  மோடுல் லீட்,  டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி  பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து,  எல்லாரும் ஒழுங்கா  வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே?” நான் கடைசியா சொன்னேன் பாருங்க...

  “டெவலப்பர், டெஸ்டர்னு,  அவங்க மட்டும் தான்  எல்லா  வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த  டெவலப்பர்,வேலைக்கு  சேரும் போதே  "இந்த  குடும்பத்தோட மானம்,  மரியாதை உன்கிட்ட தான்  இருக்குனு"
சொல்லி, நெத்தில திருநீறு  பூசி அனுப்பி வச்ச  என்னைய மாதிரி தமிழ்  பசங்க  தான் அதிகம்  இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ  சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா  வேலை?"

"இந்த டெவலப்பர்  பண்ற வேலைல  குறை  கண்டு  பிடிக்கறது இவனோட வேலை.

“புடிக்காத  மருமக  கை பட்டா  குத்தம், கால்  பட்டா  குத்தம்  இங்குறது  மாதிரி."

"ஒருத்தன் பண்ற  வேலைல  குறை  கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி  இவங்களாவது வேலை செய்யுறாங்களா? சொன்ன தேதிக்கு  வேலைய  முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது  எப்படி..?  சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி  எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு  அந்த  அவமானத்துக்கு  பதிலா  தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு  கேள்வி  கேக்க  மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான்.  இது  வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி  விட்டுக்கிட்டு இருந்த நாங்க  எல்லாரும்  சேர்ந்து அவன் காலை வார  ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ  கொடுத்த  கம்ப்யூட்டர்-ல ஒரே  தூசியா  இருந்துச்சு. அன்னைக்கு டீம்  மீட்டிங்ல வச்சி  நீ  இருமின, உன்னோட ஹேர்  ஸ்டைல் எனக்கு  புடிக்கலை." இப்படி எதாவது  சொல்லி அவன  குழப்புவோம். அவனும் சரி சனியன  எடுத்து  தோள்ல  போட்டாச்சு,இன்னும் கொஞ்ச நாள்  தூங்கிட்டு  போகட்டும்னு  விட்டுருவான்".

"சரி  முன்ன  பின்ன ஆனாலும்  முடிச்சி  கொடுத்துட்டு கைய கழுவிட்டு  வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா,  நம்ம  நாட்டுல பாதி  பேரு  வேலை இல்லாமதான்  இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ  பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும்,  அவனால  அத  புரிஞ்சிக்க கூட  முடியாதுங்கற  மாதிரியும் நடிக்க  ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து  போய், "எங்கள தனியா  விட்டுடாதீங்க.  உங்க  டீம்-ல  ஒரு ஒன்னு,  ரெண்டுபேர  உங்க  ப்ரொஜெக்ட பார்த்துக்க  சொல்லுங்கன்னு" புது பொண்ணு  மாதிரி  புலம்ப  ஆரம்பிச்சிடுவாங்க. இதுக்கு பேரு "Maintenance and  Support". இந்த வேலை  வருஷ கணக்கா  போகும்.”

"ப்ராஜக்ட் அப்படிங்கறது  ஒரு  பொண்ண  கல்யாணம்  பண்ணி  வீட்டுக்கு கூட்டிட்டு  வர்றது  மாதிரி. தாலி கட்டினா மட்டும்  போதாது,  வருஷ  கணக்கா  நிறைய  செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய  விசயம்னு" இப்போ  தான்  கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம்  புரிஞ்சிடுப்பா."
---------------------------------------------------------------------
இதை எழுதிய பெருந்தகையாளர்:
S. Balasubramanian
Dy. General Manager - Electronics
THE HINDU
Chennai

--------------------------------------------------------------------
மின்னஞ்சலில் அனுப்பி வைத்தவர்
நமது வகுப்பறை மாணவர்:
V.Prasana kumar

இருவருக்கும் நம் நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

31 comments:

  1. ஆஹா! அருமையான கதை.
    இந்த துறையைப் பற்றி விளக்க அருமையான வழி...

    பல்லவி...... அமெரிக்காவில் உள்ளவன் எழுதவான்
    அனுபல்லவி........ சீனாவில் உள்ளவன் எழுதுவான்
    சரணம்............ இந்தியாவில் உள்ளவன் எழுதுவான்

    இதப் பாட்டா ஆக்குவதற்கு இரவு பகல் படாத பாடு தான்!
    ராத்திரின்னு பார்த்தா அமெரிக்கான எப்படி பிடிக்கிறது?
    நன்றி.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லாயிருந்தது!

    ReplyDelete
  3. ஐயா நீங்களுமா ?

    இப்படி எல்லாம் வேற நோசிச்கின்றார்களா ?

    நல்லா இன்னும் பலமாக நோசிங்க )))

    ReplyDelete
  4. exactly aruputham. puriyadhavargal anaivarukum .takaraaga puriyum. thank u

    ReplyDelete
  5. உண்மையாகவே நகைச்சுவை கொப்பளிக்கும் படைப்பு. காண்டோம் நகைச்சுவை பதிவுக்குக் கொடுத்த தலைப்பை இந்தப் பதிவுக்குக் கொடுத்து இருக்க வேண்டும்.இதுபோல வாய் விட்டு சிரித்து எத்தனை நாள் ஆயிற்று!?
    நன்றி!

    ReplyDelete
  6. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    //////"Client"
    "Sales Consultants, Pre-Sales Consultants".
    project
    CR raise
    "Change Request
    “டெவலப்பர், டெஸ்டர்,
    "Maintenance and Support".//////
    இந்த சொற்களுக்கான விளக்கங்களை நன்கு தெளிவாக
    அளித்துள்ளதோடு ,
    ///"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு"
    கிளைன்டுக்கு புரிய",//// வைத்துள்ள,
    பெருந்தகையாளர்:
    திரு.S. BalasubramanianDy. General Manager - ElectronicsTHE ஹிந்டுசென்னை அவர்களுக்கும்,
    வகுப்பறை மாணவர்: திரு.V.Prasana குமார் அவர்களுக்கும்,
    இதனைப் படிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த
    தங்களுக்கும்
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-08-29

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா.
    I.T கம்பெனினா என்னா
    இவுங்க என்ன செய்றாங்கன்னு
    என்னை மாதிரி ஒன்னும் தெரியாம‌
    அல்லாடிகிட்டிருந்தவங்களுக்கு
    ஓரளவு புரியவைத்தமைக்கு
    நன்றி அய்யா.

    ReplyDelete
  8. யதார்த்தமான உண்மை ,

    ReplyDelete
  9. Dear Sir

    Sunday Good Morning Sir..

    Nagachuvai Arumai... Super Sir..

    Iam also working as Team Leader(Java J2ee) in MNC. Thanks Sir...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  10. good afternoon sir,
    nice lesson.As soon as i read this lesson i got/had lot of smile.
    Thanks for today lesson.
    sundari.p

    ReplyDelete
  11. அய்யா
    முன்பே படித்தது என்றாலும் மீண்டும் படிக்க நன்றாகவே இருந்தது.

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  12. //////Alasiam G said...
    ஆஹா! அருமையான கதை. இந்த துறையைப் பற்றி விளக்க அருமையான வழி...
    பல்லவி...... அமெரிக்காவில் உள்ளவன் எழுதவான்
    அனுபல்லவி........ சீனாவில் உள்ளவன் எழுதுவான்
    சரணம்............ இந்தியாவில் உள்ளவன் எழுதுவான்
    இதைப் பாட்டா ஆக்குவதற்கு இரவு பகல் படாத பாடு தான்!
    ராத்திரின்னு பார்த்தா அமெரிக்கனை எப்படிப் பிடிக்கிறது?
    நன்றி./////

    ஆமாம். பல இரவுகளைத் தங்களின் வேலையால் தொலைத்தவர்களுக்கும்/ தொலைத்துக் கொண்டிருப்பவர்

    களுக்கும்தான் அந்தக் கஷ்டங்கள் தெரியும்!

    ReplyDelete
  13. ////HVL said...
    ரொம்ப நல்லாயிருந்தது!/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ////kannan said...
    yes sir
    Super!/////

    நன்றி கண்ணன்!

    ReplyDelete
  15. /////kannan said...
    ஐயா நீங்களுமா ?
    இப்படி எல்லாம் வேற யோசிக்கின்றார்களா ?
    நல்லா இன்னும் பலமாக யோசிங்க )))

    அதெல்லாம் யோசிப்பார்கள். விடமாட்டார்கள்.

    ReplyDelete
  16. //////Jack Sparrow said...
    exactly aruputham. puriyadhavargal anaivarukum .takaraaga puriyum. thank u/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////kmr.krishnan said...
    உண்மையாகவே நகைச்சுவை கொப்பளிக்கும் படைப்பு. காண்டோம் நகைச்சுவை பதிவுக்குக் கொடுத்த

    தலைப்பை இந்தப் பதிவுக்குக் கொடுத்து இருக்க வேண்டும்.இதுபோல வாய் விட்டு சிரித்து எத்தனை நாள்

    ஆயிற்று!?
    நன்றி!/////

    நல்லது. உங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  18. V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    //////"Client"
    "Sales Consultants, Pre-Sales Consultants".
    project
    CR raise
    "Change Request
    “டெவலப்பர், டெஸ்டர்,
    "Maintenance and Support".//////
    இந்த சொற்களுக்கான விளக்கங்களை நன்கு தெளிவாக
    அளித்துள்ளதோடு ,
    ///"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி

    கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு"
    கிளைன்டுக்கு புரிய",//// வைத்துள்ள,
    பெருந்தகையாளர்:
    திரு.S. BalasubramanianDy. General Manager - ElectronicsTHE ஹிந்து சென்னை அவர்களுக்கும்,
    வகுப்பறை மாணவர்: திரு.V.Prasana குமார் அவர்களுக்கும்,
    இதனைப் படிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த
    தங்களுக்கும்
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  19. //////thirunarayanan said...
    வணக்கம் அய்யா. I.T கம்பெனினா என்னா இவுங்க என்ன செய்றாங்கன்னு என்னை மாதிரி ஒன்னும்

    தெரியாம‌ அல்லாடிகிட்டிருந்தவங்களுக்கு ஓரளவு புரியவைத்தமைக்கு
    நன்றி அய்யா./////

    நல்லது. நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  20. ////profit500 said...
    யதார்த்தமான உண்மை/////

    நல்லது. நன்றி நண்பரே!!

    ReplyDelete
  21. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Sunday Good Morning Sir..
    Nagachuvai Arumai... Super Sir..
    Iam also working as Team Leader(Java J2ee) in MNC. Thanks Sir...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  22. paramasivam said...
    good afternoon sir,
    nice lesson.As soon as i read this lesson i got/had lot of smile.
    Thanks for today lesson.
    sundari.p/////

    நல்லது. நன்றி சகோதரி!!

    ReplyDelete
  23. ////venkatesan.P said...
    அய்யா
    முன்பே படித்தது என்றாலும் மீண்டும் படிக்க நன்றாகவே இருந்தது.
    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்//////

    நல்லது. நன்றி வெங்கடேசன்!!

    ReplyDelete
  24. அருமை. அற்புதமான படைப்பு.

    ReplyDelete
  25. /////Govindasamy said...
    அருமை. அற்புதமான படைப்பு. ////

    உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி வெங்கடேசன்!

    ReplyDelete
  26. //////phoenix said...
    super ////

    உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  27. எண்ணுங்க ஐய எங்கள இந்த மாறி கிளுசுட்டீங்க

    ReplyDelete
  28. ////ngs said...
    ஏணுங்க ஐயா, எங்கள இந்த மாறி கிளிச்சிட்டீங்க? /////

    நான் எங்கசாமி கிளிச்சேன்? எழுதிய மவராசன் உணமையத்தானே சொல்லிப்போட்டிருக்காரு!

    ReplyDelete
  29. Gruve ungalukku kodanu kodi nanrikal.kalakkuringle ellathuleyum

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com