---------------------------------------------------------------------------------------
சந்நியாசிகளை எப்படி சோதனை செய்ய வேண்டும்?
பக்திமலர்
"ஒரு சன்னியாசியை பகல் இரவு இரண்டுநேரத்திலும் சோதனை செய்" என்றார் ஸ்ரீ பரமஹம்சர்.
அவருடைய சேடர்கள் அவரை அவ்வாறு சோதனை செய்து இருக்கிறார்கள்.
ஸ்ரீ ராமகிருஷ்ணருடன் தூய அன்னையாரும் தக்ஷிணேஸ்வரக் கோவில் வளாகத்திலேயே வாழ்ந்து வந்தார். அன்னையார் தஙிகியிருந்தது கோவில் மணி கட்டுவதற்கான மண்டபத்துக்குக் கீழே உள்ள இடம். நாலு தூண்கள் உள்ள அந்த மண்டபத்தின் கீழே சுற்றி தட்டிவைத்து மறைத்த எட்டு அடிக்கு எட்டு அடி உள்ள குறுகிய இடத்தில் தான் அன்னையார் வழ்ந்தார்கள். விடியற்காலையில் எல்லோரும் எழுவதற்கு முன்பே கங்கைக்குச் சென்று குளியில் முதலியன முடித்துத், தன் சிறிய அறைக்குள் அன்னை சென்று விட்டால் பின்னர் அன்னையை பகல் நேரத்தில் காண்பது அரிது.
"பரமஹம்சரின் மனைவி இங்கே வாழ்கிறாராமே, எங்கே, எங்கே?" என்று குடும்பத்துடன் தக்ஷிணேஸ்வரர் கோவிலுக்கு வரும் பெண்கள் தேடித் தேடி களைத்துப்போவார்களாம். அப்படியே கண்டுபிடித்தவர்களும், "சீதாப் பிராட்டியார் அசோக வனத்தில் வாழ்ந்தது போல் அல்லவா இந்தப்பெண் வாழ்கிறாள்" ஏன்று அங்கலாய்ப்பார்களாம்.அப்படி தன்னை மறைத்துக்கொன்டு அன்னை வாழ்ந்தார்கள்.
ஸ்ரீ குருதேவருக்கு உணவு எடுத்துக்கொண்டு அவருடைய அறைக்கு அன்னை வருவதுண்டு. ஸ்ரீ குருதேவருக்கு அன்னையார் உணவு பறிமாறும் போது சீடர்களும் மற்ற காணவந்தோரும் அந்த அறையை விட்டு வெளியேறி விடுவார்கள். அப்போது அன்னையும் ஸ்ரீ குருதேவரும் தனித்து இருப்பார்கள்.
'நமக்கெல்லாம் பிரமச்சரியத்தைப் போதிக்கும் இவர் எப்படி?' என்று எதிர்காலத்தில் துறவரம் மேற்கொள்ளப்போகும் சீடர் ஒருவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.
அதுமுதல் குருதேவரையும் அன்னையாரையும் அவர் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்தார்.இரவு நேரத்தில் யாராவது ஒரு சீடராவது குருதேவருடன் தங்கி அவர் அறையிலேயே உறங்குவது வழக்கம். அந்த சந்தேகப்படும் சீடர் தன் முறைவரும் போது இரவு தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டு படுத்திருப்பார். அவருடைய கவனம் முழுவதும் குருதேவர் அன்னையாரின் அறைக்குச் செல்கிறாரா என்று பார்ப்பதிலேயே இருக்கும்.
ஓர் இரவு சிறிது கண் அயர்ந்து விட்ட அந்த சந்தேகச் சீடர், நள்ளிரவில் கண்விழித்தபோது ஸ்ரீ குருதேவர் அவருடைய கட்டிலில் இல்லாததைக் கண்டார்.
'ஆகா! இன்று என்னிடம் வசமாக மாட்டினார் ஐயா, இந்தப் போலி சாது!' என்று எண்ணியவாறு அன்னையாரின் இருப்பிடத்தையே வைத்தக்கண் எடுக்காமல் நோட்டம் விடத் துவங்கினார் அந்த சந்தேகச் சீடர்.
ஒரு 20 நிமிடங்கள் கழித்து ஏதோ சலனம் கேட்டது.காதையும் கண்ணையும் கூர்மையாக்கிக்கொண்டு உஷரானர் சாது சந்தேகம். அப்போது கங்கைக்கறை தோப்புக்குள் இருந்து ஸ்ரீ ராமகிருஷ்ணர் வெளிப்பட்டார். அது அன்னையரின் அறைக்கு நேர் எதிர் திசையில் இருந்தது. சீடரின் பின் பக்கமாக வந்து ஸ்ரீ குருதேவர் சீடரின் முதுகைத் தொட்டார்.அதிர்ந்து திரும்பிய சீடரிடம், "என்ன சந்தேகம் தீர்ந்ததா, இல்லையா? அமாம், இப்படிதான் ஒரு சாதுவை இரவிலும் கண்காணிக்க வேண்டும். நீ வைத்த பரிட்சையில் நான் தேரிவிட்டேனா? என்னிடம் எத்தனை அணா சன்னியாசம் இருக்கிறது?" என்று கேட்டாராம்.
சீடர் தலை குனிந்தார்.அவர் பிற்காலத்தில் சுவாமி யோகானந்தர் என்று அறியப்படலானார்.
சுவாமி விவேகானந்தரும் கூட பரமஹம்சரை சோதித்துஇருக்கிறார். "காசு பணம் போன்ற உலோகத்தைத் தொட்டால் என் கை முறுக்கிக்கொள்ளும், உடல் பதறும்" என்பார் குருதேவர். இதைச் சோதிக்க ஒரு முறை உலோக நாணயங்களை குருதேவரின் படுக்கைக்கு அடியில் வைத்துவிட்டார் சுவாமி விவெகானந்தர்.
அன்று படுக்கையில் படுத்த குருதேவர் துள்ளி எழுந்தார். மீன்டும் படுக்கையில் அமர்ந்து பார்த்து ,மீண்டும் துள்ளினார். 'படுக்கையில் ஏதோ விஷ ஜந்து இருந்த்து தொந்திரவு கொடுக்கிறது படுக்கையை உதறிப்போடுங்கள்' என்று கூவினார். கூட இருந்த சீடர்கள் படுக்கையை உதற, பணம் கீழே விழுந்தது. விவேகானந்தர் தான்தான் அப்படி வைத்ததாக குருதேவரிடம் ஒப்புக்கொண்டார்.
ஒரு குருவை ஏற்கும் முன்னர் சோதிப்பதில் தவறில்லை.ஆம்! ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாக்குப்படி,"ஒரு சன்யாசியை பகல் இரவு இரண்டுநேரத்திலும் சோதனை செய்"!!
வாழ்க வளமுடன்!
ஆக்கம்: வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
முகாம்: இலண்டன்

சந்தேகமும், சோதனையும் ஒருத் தெளிவைத் தருகிறது, அதுவே நம்பிக்கையும் தரும் என்பதற்கு சான்று. எல்லா வற்றிற்குமே இது பொருந்தும்.
ReplyDeleteநல்ல சுவாரஷ்யமானப் பதிவு. நன்றிகள் ஐயா!
நல்ல பதிவு ஐயா.
ReplyDeleteநன்றி.
வணக்கம் ஆசானே!
ReplyDeleteபெரியவர்கள் ஆன தங்களிடம் இருந்து நிறைய கத்துகொள்ள வேண்டிய விசையம் நிறைய இருக்கு, தாங்கள் கற்றுக்கொண்ட நல்ல விசையங்களை ஐயாகளே !
நன்றி!
நன்றி ஐயா!இஙே சர்வர் நின்றுவிடதால் உங்களுக்கு சிரமம் கொடுத்துவிட்டேன். மன்னிக்கவும். ஒருசில் எழுத்துபிழைகள் உள்ளன முடிந்தால் அவற்றையும் நேராக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteநான் இங்கிருந்து 22 செப் 2011 கிளம்புகிறேன். இனி என் ஆக்கங்கள் இந்தியா வந்தபிறகே என்று நினைக்கிறேன்.
செப் 11 பாரதி நினைவு நாள். தஞ்சாவூர் பெரியவரிடம் ஒரு பாரதி கட்டுரை பெற்று போடவும் .நன்றி!
வணக்கம் அய்யா,
ReplyDeleteமிகவும் அரிய ஆன்மிக கருத்துக்களை உள்ளடக்கிய சம்பவங்களை மிக நேர்த்தியாக எளிய வகையில் கூறி வரும் கே.முத்துராமகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றிகள்...
தன் குருவையே சோதித்துப் பார்க்கும் சீடர் யாரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்வர் இல்லை என்று நினைத்திருப்பார் போலும். இன்றைய கால கட்டத்தில் பலரும் அப்படி நினைத்திருந்தால் போலிச் சாமியார்கள் உருவாகியிருக்க மாட்டார்கள்.
ReplyDeleteசந்தேகப் படுவது என்பது
ReplyDeleteசகஜமானது.. ஆனால்
நமக்கு தகுதியில்லாத போது
நம்மவரை சந்தேகிப்பது சரியல்ல..
இன்றைய வகுப்பின் பதிவு
இன்னமும் என்ன சொல்ல வருகிறது?
சந்தேகப் படுபவர்கள் உள்ளனர் என
சாமனியர்களுக்கு தெரிவிக்கவா..?
உயர்நிலையில் இருப்பவர்களையும்
உலகம் விட்டுவைக்காது என காட்டவா
சந்தேகம் என்னும் ஒரு சரக்கு அது
சகலர் இடத்திலும் இருக்கு என்ற
பாடலினை மெல்லிய ஓசையில்
பாட விட்டபடி அமைதி கொள்கிறோம்
தினமும் படுக்கையறையில் தூங்கிவிடுகிறான் கணவன் என்று பிரான்சிலே ஒரு மனைவி கோர்ட்டுக்குப் போய் வழக்கு ஜெயித்து ஆறு லட்சம் அபராதம் தீர்ப்பானதாக சமீபத்தில் படித்தேன்..இந்தியன் பெனல் கோட் IPC படியும் மெயிண்டனன்ஸ் ஆக்ட் என்று உண்டு..மனைவியைப் பராமரிக்க வேண்டியது கணவனின் கடமை என்கிற ரீதியில்..இவையெல்லாம் சந்நியாசிகளுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை..
ReplyDeleteபிரம்மச்சரியம் மனிதனால் சாத்தியப்படும் விஷயமா என்ற கேள்வி எப்போதும் காலகாலமாக விடைதெரியாமல் தொக்கிநிற்கும் கேள்வி..அப்படியே சாத்தியப்பட்டாலும் அவசியமா என்ற கேள்வியும் எழுகிறது..இல்லை பிரம்மச்சரியம் என்ற பெயரில் உடலியல் ரீதியிலான குறைபாடோ என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது..
திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துவிட்டுப் போகலாமே இவர்கள்..அப்படியே இருந்தாலும் பணிவிடை என்ற போர்வையில் சிலர் செய்யும் லீலைகள் "திரனனா..திரனனா..." என்று நக்கீரனில் சந்தேகக்ப்படும் சீடர்களால் வீடியோ பதிவாக வெளியிடப்படும் அபாயம் இருப்பதால் நவீன சந்நியாசிகள் வெளிப்படையாக இருந்துவிட்டுப் போகலாமே..தேடிவரும் மக்களின் மனசாந்திக்காக கன்சல்டன்ட்டாக பழைய புராணக் கதைகளிலிருந்து உதாரணங்கள் கூறி ஏதாவது ஏமாந்த இளிச்சவாயர்கள் கொடுக்கும் நன்கொடைப் பணத்தில் உழைக்கத் தெரியாக சோம்பேறி சீடர்களுக்கு வடித்துப் போட்டு கூடவைத்துக்கொண்டு கூட்டம் நடத்திவிட்டுப் போகலாம்..எந்த நாட்டிலும் இப்படி ஆசாமிகளுக்கென்று தனி சட்டவிதிகள் இல்லை.இருந்தாலும்கூட என்ன வாழப்போகிறது?ஆட்சி மாறினால் சட்டமும் மாறிப்பேசும்..எந்த விஷயத்திலும் இதுதானே நடைமுறை..
இதிலே போலிசாமியார் என்றும் ஒரிஜினல்சாமியார் என்றும் தரம் பிரிக்க ஒன்றும் இல்லை..
என்ன மைனர் சார், பழம் சுட்டுருச்சா...எழுத்தில் வலி தெரிகின்றததே!!
ReplyDeleteஎந்தப்பழம்? என்னா சுட்டுச்சு..?என்ன சொல்றீங்கன்னு ஒண்ணுமே புரியலே கடைக்குட்டி..
ReplyDeleteஎந்த வலியும் எனக்கு இல்லே..இந்தப்பதிவுக்கு சம்பந்தப்பட்டு பொதுநடப்பைச் சொன்னேன்.. அவ்வளோதான்..