மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.9.10

நமீதாவின் நடனத்தை மட்டுமே வைத்து ஒரு முழுத் திரைப்படத்தை எடுத்தால் ஓடுமா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நமீதாவின் நடனத்தை மட்டுமே வைத்து ஒரு முழுத் திரைப்படத்தை எடுத்தால் ஓடுமா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.18
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.61
அகிலா நாராயணன்

Dear vathiar avarkale!
        kindly clarify how bindus are assigned to all 12 places. in the chart for calculation of bindus  ,only lagna and 7 plantes are taken into account. also you have assigned one bindu number only for rasi where3 planets available.for the past 4 months i am reading all the lesson through kuduthurai. this blog is suggested by my son. kindly excuse me and enlighten me by sparing little time in your busy schedule.
with regards,
snarayanan

நல்ல கேள்வி. நீங்கள் கூடுதுறையார் பிரித்துக் கொடுத்திருக்கிற வழி மூலம் செல்லாமால், துவக்கத்தில் இருந்து அத்தனை பாடங்களையும் படிப்பது நல்லது சகோதரி!

ராகுவிற்கும், கேதுவிற்கும் சொந்த வீடு இல்லாததால் அவர்களை அஷ்டகவர்க்க ஆட்டத்தில்  சேர்த்துக் கொள்ளவில்லை. சூரியனுக்கு அவர் இருக்க வேண்டிய இடத்தை வைத்து மதிப்பெண்கள் கொடுத்து ஒரு அட்டவனையும், மற்ற கிரகங்களில் இருந்தும் லக்கினத்தில் இருந்தும் அவர் இருக்க வேண்டிய இடத்தை வைத்து அட்டவனைகளையும் தயார் செய்து (மொத்தம் 8 அட்டவனைகள்) பார்த்தால் சூரியனின் சுயவர்க்க அட்டவனை கிடைக்கும். இது போல மற்ற கிரகங்களுக்கும் சுயவர்க்க அட்டவனைகளைத் தயார் செய்து மொத்தத்தையும் கூட்டி இறுதி அட்டவனை தயார் செய்தால் சர்வாஷ்டக அட்டவனை கிடைக்கும்.

நீங்கள் இதைத் தயார் செய்யலாம். அந்தக் காலத்தில் கணினி ஜாதகங்கள் வரும் முன்பு அப்படித்தான் தயார் செய்தார்கள். புதியவர்களுக்கு நாக்குத் தள்ளிவிடும். ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தயார் செய்ததைச் சரி பார்க்க வேண்டும்.

கணினி கண் இமைக்கும் நேரத்தில் அதைச் செய்து கொடுக்கும். ஆகவேதான் அனைவரையும் கணினி மூலம் எடுத்துக் கொள்ளச் சொல்கிறேன். சிலர் அதையும் மீறி நாங்கள் அதைத் தெரிந்து கொண்டு செய்து பார்க்க விரும்புகிறேன் என்பார்கள். அவர்களுக்காக ஒரு நெடிய கட்டுரை மூலம் அதை விளக்க உள்ளேன். பொறுத்திருங்கள்.

சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் போகலாம். ரயிலில் போகலாம். பேருந்திலும் போகலாம். நடந்து போவேன் என்று சொன்னால் என்ன செய்வது?



++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.62
சிங்கை சூரி என்னும் சுரேந்திரன் சங்கர்
சிங்கப்பூர்
   
ஐயா வணக்கம்,

1. முதல் கேள்வி, 6,8,12 ல் எதேனும் ஒன்றில் கெட்டவர்கள் (ராகு, கேது, சனி, செவ்) இருந்தால் "கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம்” என்ற பஞ்ச் டயலாக் பெருந்துமா, எந்த அமைப்புக்கு இந்த டயலாக் பொருந்தும்?  

துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் யோகம் உண்டாகும்.

உதாரணத்திற்கு, சிம்ம லக்கினத்திற்கு, சனி 6ஆம் இட அதிபதி. அவர் ஜாதகனின் 12ஆம் வீட்டில் (கடகராசியில்) சந்திரனுடன் இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும்!

சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும். கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.

அது மட்டுமே இந்த டயாலாக்கிற்குப் பொருந்தும்.

சனி இரண்டு லக்கினங்களுக்கு அதிபதி. ஆயுள்காரகன். கர்மகாரகன் (authority for work) அவனை எப்படிக் கெட்டவர்கள் லிஸ்ட்டில் சேர்ப்பீர்கள்? அதுபோல செவ்வாய் இடம் பூமிகளுக்குக்குக் காரகன். அத்துடன் இரண்டு வீடுகளுக்குக் காரகன். அவனை எப்படிக் கெட்டவர்கள் லிஸ்ட்டில் சேர்ப்பீர்கள்? ராகு & கேது தாங்கள் இருக்கும் இடத்தைத் தங்கள் வீடாக்கி கொண்டு அதற்கான பலனைத் தருபவர்கள். அவர்களையும் எப்படி முழுக் கெட்டவர்களாகச் சித்தரிக்கமுடியும். ஆற அமர்ந்து யோசித்துப்பாருங்கள்!

2. ரிஷப லக்னம், 8ம் விட்டில் அமர்ந்திருக்கும் ராகுவிற்கு , 2ம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனியின் பார்த்தால், does it signifies Longevity or still subject undergoes painful death as per you 8th house lessons?

சனி இரண்டில் அமர்ந்திருப்பது தனம், குடும்பம் ஆகிய மேட்டர்களுக்கு நல்லதல்ல. மற்றபடி அவர் ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பது நன்மையளிக்கும் அமைப்பாகும். நீங்கள் சொல்லும் வலியுடைய மரணத்திற்கு எட்டாம் வீட்டைவைத்து இன்னும் அலச வேண்டும். ஆகவே பொதுவிதியை வைத்துக் கும்மி அடிக்க முடியாது. கும்மி அடிப்பதற்கு மேளமும் வேண்டும், தாளமும், நாயனமும் வேண்டும் அதை நினைவில் வையுங்கள்!

3. செவ்வாய் 2,4,7,8,12 அமர்ந்திருந்தால் தோஷம்,  செவ்வாய் - 2,4,7,8,12க்கு இந்த எதேனும் ஒன்றில்/இரண்டிற்கு  அதிபதியானாலும்  தோஷம் ஆகுமா? எது நிக்கவைத்து family life அடிக்கும் - எது தொங்கவிட்டு அடிக்கும்?

செவ்வாய் தோஷத்தை வைத்து இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. அவன் அந்த வீடுகளுக்கு அதிபதியானால் தனக்குத்தானே தோஷத்தைக் கொடுக்க மாட்டான் என்பது பரவலாக நம்பப்ப்டுகிறது. மாந்தி, ராகு போன்றவர்கள்தான் தொங்க விட்டு அடிப்பார்கள். வாய்ப்புக் கிடைத்தால் செவ்வாய் நிற்க வைத்து மட்டுமே அடிப்பார்:-)))))
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.63
T.மகேஷ் என்னும் மகேஷ் ராஜ்
திருச்சி
    

1). லக்னத்தில் சனி என்றால் அவன் துன்பப்படப் பிறந்தவனா?

யார்தான் துன்பப்படவில்லை? 100% இன்பமாக இருக்கிறேன் என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்! இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை! இரவு பகலைப் போல இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும்! லக்கினத்தில் குரு இருந்தால் மட்டும் வாழ்க்கை இன்ப மயமாகிவிடுமா என்ன? இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகப் பார்க்கப் பழகிக்கொள்ளுங்கள். நமீதாவின் நடனத்தை மட்டுமே வைத்து முழுமையாக ஒரு படத்தைத் தயாரிக்க முடியுமா என்ன? இரண்டரை மணி நேரம் அதைத் தொடர்ந்து பார்க்க முடியுமா என்ன? படம் என்றால் ஒரு நாயகன் ஒரு நாயகி, நான்கு காதல் காட்சிகள், இரண்டு பாடல்கள், வெட்டு, குத்து, வில்லன்களின் சேஸிங், இரண்டு காட்சிகள் வடிவேலின் காமெடி என்று எல்லாம் கலவையாக இருக்க வேண்டாமா? வாழ்க்கையும் அதுபோலத்தான். ஜாதகமும் அதற்குத் தக்கபடிதான் வெரைட்டியாக இருக்கும்.

2). லக்னத்தில்  சனி  இருந்தால் அவன் சனி பகவானை வணங்கினால் வெற்றி பெறுவானா? அவன் தொழிலில் வெற்றி கான முடியாது அதாவது தொட்டது துலங்காது என்பார்களே அது சரியா? ஒபாமா ஜாதகம்கூட லக்னத்தில்  சனி அவர் ஹனுமான் பக்தர் அதனால் வெற்றி வந்ததா?

அன்னை இந்திரா காந்தியின் ஜாதகத்தில் லக்கினத்தில் சனி இருந்தது. அவர் வெற்றி பெறவில்லையா? பதினேழு ஆண்டுகள் இந்தியப் பிரதமராக இருந்தாரே - அதை எந்தக் கணக்கில் சேர்ப்பது? பகவானை வணங்கினாலும் வெற்றி பெறுவான். வணங்காவிட்டாலும் வெற்றி பெறுவான். உங்கள் வணக்கத்தை எல்லாம் எதிர்பார்த்து சனி பகவான் ஒன்றும் காத்துக்கொண்டிருக்க மாட்டார். அதை முதலில் உணருங்கள். வணங்குபவனுக்குத் துன்பம் விலகாது. ஆனால் ஸ்டாண்டிங் பவர் கிடைக்கும்.  மழையில் சும்மா செல்பவனுக்கும், குடையுடன் செல்பவனுக்கும் உள்ள வித்தியாசம் என்று அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

3).லக்னத்தில் சனி இருப்பவன் தொழிலதிபர் (business management guy) ஆவான். சனி (sani is good for management and all kind of business - is it true?) இருப்பவனை வெல்வது கடினம் இப்படி ஒரு கருத்து உள்ளது  அது உண்மையா?

லக்கினத்தில் சனி இருப்பவன் அத்தனை பேரும் எப்படித் தொழிலதிபர் ஆக முடியும்? பத்தாம் வீட்டுக்காரனின் தயவு வேண்டாமா?

4). லக்னத்தில் சனி குரு நீசம். ஆனால் எழில் லக்னாதிபதி நின்று லக்னத்தை (விருச்சிக லக்னம்) பார்த்தால் சனி ஏழைப் பார்த்தால் ஏழை குரு 5 பார்வை  இதனால் திருமணம் தாமதம்  ஆகுமா ? இதில் ஏழில் (செவ்வாய் +சூரியன் ) இருந்தால் ?

மிகவும் குழம்பிப் போயிருக்கிறீர்கள்! ஏழாம் வீட்டை சனி பார்த்தால் திருமணம் தாமதம் ஆகும் என்பது பொது விதி! களத்திரகாரகன் சுக்கிரன் எங்கே இருக்கிறான்? அவனை ஏன் ஒளித்து வைத்திருக்கிறீர்கள்? அவன் முக்கியமில்லையா? உங்கள் ஜாதகத்தில் - லக்கினத்தில் சனி இருக்கிறது - அதனால் கேட்ட கேள்விகள் அனைத்துமே லக்கினத்தில் சனியை வைத்து - சரிதானே?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
========================================================


வாழ்க வளமுடன்!

25 comments:

  1. "பகவானை வணங்கினாலும் வெற்றி பெறுவான். வணங்காவிட்டாலும் வெற்றி பெறுவான். உங்கள் வணக்கத்தை எல்லாம் எதிர்பார்த்து சனி பகவான் ஒன்றும் காத்துக்கொண்டிருக்க மாட்டார்."

    நல்ல பஞ்ச் டயலாக். இன்றைய கேள்விபதில் நல்ல எக்ஸ்ப்ரெஸ் வேகம்

    ReplyDelete
  2. "சொல்லி அடிப்பேனடி
    அடித்ததெல்லாம் நெத்தியடிதானடி"

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயா வணக்கம்.

    மிகவும் நீண்ட நாட்கள் சந்தேகத்தை தீர்க்கும் பதியாக ( பயனுள்ள கேள்வி பதில்கள் அடங்கிய) அமைந்தது இன்று.

    ReplyDelete
  4. ஐயா வணக்கம்,
    இன்றைய பதில்கள் அருமை, சும்மா பின்னி பெடல் எடுத்திட்டிங்க.

    இன்றைய பாடத்தில் சில சந்தேகங்கள், மின்னஞ்சல் இட ஒதுக்கீடுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது என்ற நமபிக்கையில் இக்கேள்விகளை முன்வைக்கின்றேன்.

    ௧. ஒருவனின் நல்ல ஒழுக்க நிலைக்கு குருவைப்போல், லக்ன சனிக்கும் சம்பந்தம் உள்ளதா?
    ௨. என்ன.........இ.காந்திக்கும், ஒபாமாவுக்கும் லகனத்தில் சனி யா? அரசியலுக்கும் சனிக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா ஐயா.

    என்றும் அன்புடன் மற்றும் தங்கள் பாடத்தில் ஆர்வத்துடன்
    இரா.புரட்சிமணி

    ReplyDelete
  5. ////kmr.krishnan said...
    "பகவானை வணங்கினாலும் வெற்றி பெறுவான். வணங்காவிட்டாலும் வெற்றி பெறுவான். உங்கள் வணக்கத்தை எல்லாம் எதிர்பார்த்து சனி பகவான் ஒன்றும் காத்துக்கொண்டிருக்க மாட்டார்."
    நல்ல பஞ்ச் டயலாக். இன்றைய கேள்விபதில் நல்ல எக்ஸ்ப்ரெஸ் வேகம்////

    உங்களின் பாரட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. ////Alasiam G said...
    "சொல்லி அடிப்பேனடி
    அடித்ததெல்லாம் நெத்தியடிதானடி"////

    நான் வழக்கம்போல்தான் எழுதியுள்ளேன் சுவாமி!

    ReplyDelete
  7. ////kannan said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    மிகவும் நீண்ட நாட்கள் சந்தேகத்தை தீர்க்கும் பதிலாக ( பயனுள்ள கேள்வி பதில்கள் அடங்கிய) அமைந்தது இன்று.////

    அப்படி அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  8. R.Puratchimani said...
    ஐயா வணக்கம்,
    இன்றைய பதில்கள் அருமை, சும்மா பின்னி பெடல் எடுத்திட்டிங்க.
    இன்றைய பாடத்தில் சில சந்தேகங்கள், மின்னஞ்சல் இட ஒதுக்கீடுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது என்ற நமபிக்கையில் இக்கேள்விகளை முன்வைக்கின்றேன்.
    ௧. ஒருவனின் நல்ல ஒழுக்க நிலைக்கு குருவைப்போல், லக்ன சனிக்கும் சம்பந்தம் உள்ளதா?
    ௨. என்ன.........இ.காந்திக்கும், ஒபாமாவுக்கும் லகனத்தில் சனியா? அரசியலுக்கும் சனிக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா ஐயா.
    என்றும் அன்புடன் மற்றும் தங்கள் பாடத்தில் ஆர்வத்துடன்
    இரா.புரட்சிமணி//////

    அய்யா புரட்சி! உங்கள் கேள்விகளை மின்னஞ்சல் மூலம் Doubt என்று தலைப்பிட்டு அனுப்பிவையுங்கள்!

    ReplyDelete
  9. அய்யா வணக்கம்....

    கேள்வி பதில் பகுதி2 அமர்கள பட்டுகொண்டு இருக்கின்றது....

    நன்றி வணக்கம்.....

    ReplyDelete
  10. ////சிங்கைசூரி said...
    நன்றி ஆசானே.////

    நல்லது நன்றி சிங்கை சூரி!

    ReplyDelete
  11. ///astroadhi said...
    அய்யா வணக்கம்....
    கேள்வி பதில் பகுதி 2 அமர்களப் பட்டுகொண்டு இருக்கின்றது....
    நன்றி வணக்கம்..... ////

    நான் எப்போதும் போல எழுதிக்கொண்டிருக்கிறேன்! அவ்வளவுதான்!

    ReplyDelete
  12. வணக்கத்திற்கு உரியவர்கள் நம்மிடமே உள்ளதால், நம்மை நாமே வண்ங்கிக் கொள்ளளாமே

    ReplyDelete
  13. வாத்தியார் கேள்வி பதில் செஷன் க்கு வரும் போதே DVD பிளேயர்லே
    'அர்ஜுனா..அர்ஜுனா..' பாட்டு போட்டுட்டுதான் கீ போர்டுலே கையையே வெப்பீங்க போலருக்கே?

    (ரைட்டர் ன்னாலே ஒரு 'மூட்' வர வேண்டாம்? எத்தினி சினிமா கம்பெனி இப்பிடி ஓடுதுங்குறீங்களா ? )

    ReplyDelete
  14. Dear Sir

    Questions and Answer Arumai Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  15. ////natarajan said...
    வணக்கத்திற்கு உரியவர்கள் நம்மிடமே உள்ளதால், நம்மை நாமே வணங்கிக் கொள்ளலாமே/////

    அப்படிவிட்டால், வணக்கத்திற்கே மரியாதை இல்லாமல் போய்விடும் அபாயம் உண்டு சார்!

    ReplyDelete
  16. //////minorwall said...
    வாத்தியார் கேள்வி பதில் செஷன் க்கு வரும் போதே DVD பிளேயர்லே
    'அர்ஜுனா..அர்ஜுனா..' பாட்டு போட்டுட்டுதான் கீ போர்டுலே கையையே வெப்பீங்க போலருக்கே?
    (ரைட்டர்ன்னாலே ஒரு 'மூட்' வர வேண்டாம்? எத்தினி சினிமா கம்பெனி இப்பிடி ஓடுதுங்குறீங்களா ? )///////

    இல்லை, சில கேள்விகளைப் பார்த்தவுடன் பதில் எழுதும் மூட் வந்துவிடும்!:-))))

    ReplyDelete
  17. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Questions and Answer Arumai Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  18. நடிகர் வடிவேலின் வசனம். எனக்கு இப்பையே கண்ணைக் கட்டுது. சனி லக்னத்தில் இருப்பதைப் பற்றியே வளைத்து வளைத்து கேள்வி. கேள்விகள் ஆசிரியரின் பொன்னான நேரத்தை வீணடிப்பதாக இல்லாமலும் பலருக்கும் பயன்படும் விதமாகவும் இருக்க வேண்டும். கேள்வி கேட்பவர்கள் இதனை மனதில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  19. ஏற்கனவே தாங்கள் இது பற்றி விளக்கமாக பாடம் நடத்தியிருப்பினும், இந்த அமைப்பில் அதாவது கேட்ட கிரகங்கள் 3.6 ,8 ,12 கலீல் இருந்தாலே இந்த யோகம் என்ற வகையில் பாணன் ஜெயராமன் சாப்ட்வேர் லே சொல்லப் பட்டதாக நினைவு..அது குழப்பம்தான்..

    ReplyDelete
  20. ////ananth said...
    நடிகர் வடிவேலின் வசனம். எனக்கு இப்பையே கண்ணைக் கட்டுது. சனி லக்னத்தில் இருப்பதைப் பற்றியே வளைத்து வளைத்து கேள்வி. கேள்விகள் ஆசிரியரின் பொன்னான நேரத்தை வீணடிப்பதாக இல்லாமலும் பலருக்கும் பயன்படும் விதமாகவும் இருக்க வேண்டும். கேள்வி கேட்பவர்கள் இதனை மனதில் கொள்ள வேண்டும். /////

    மற்றவர்களுக்கு என்றால் ஆமாம் என்பார்கள். தங்களுக்கு என்று வரும்போது அதைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். அது மனிதனின் பொதுக்குணம்:-))))

    ReplyDelete
  21. //////minorwall said...
    ஏற்கனவே தாங்கள் இது பற்றி விளக்கமாக பாடம் நடத்தியிருப்பினும், இந்த அமைப்பில் அதாவது கெட்ட கிரகங்கள் 3,.6 ,8 ,12 ஆம் இடங்களில் இருந்தாலே இந்த யோகம் என்ற வகையில் பாணன் ஜெயராமன் சாப்ட்வேர்லே சொல்லப் பட்டதாக நினைவு..அது குழப்பம்தான்..////

    தகவலுக்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  22. லக்கினத்தில் சனி இருக்கிறது - அதனால் கேட்ட கேள்விகள் அனைத்துமே லக்கினத்தில் சனியை வைத்து - சரிதானே? for this question my answer is

    yes sir it's true சரிதான். but u ask me to tell about where sukeran . sukeran is in 5th place(meenam)ucham . he is ucham .and he looks 11th place.as well as kuru neesam.but he (kuru)looks 7th palce and in 7th palce (செவ்வாய் +சூரியன் ) .செவ்வாய் is lagnenathe pathe and சூரியன் is 10th palce kerakam.

    ReplyDelete
  23. /////மகேஷ் ராஜ் said...
    லக்கினத்தில் சனி இருக்கிறது - அதனால் கேட்ட கேள்விகள் அனைத்துமே லக்கினத்தில் சனியை வைத்து - சரிதானே? for this question my answer is
    yes sir it's true சரிதான். but u ask me to tell about where sukeran . sukeran is in 5th place(meenam)ucham . he is ucham .and he looks 11th place.as well as kuru neesam.but he (kuru)looks 7th palce and in 7th palce (செவ்வாய் +சூரியன் ) .செவ்வாய் is lagnenathe pathe and சூரியன் is 10th palce kerakam. ///////

    சொந்த ஜாதகத்தை வைத்துக் கேட்கும் கேள்விகளுக்கு இங்கே இடமில்லை. காரணம் நேரமின்மை!

    ReplyDelete
  24. Dear Sir, For Rishabha lagna, Saturn owns 9th & 10th houses(Dharma-Karma). In such case, placement of Saturn in 2(Midhuna), how will it affect Kudumbam, Dhanam. Moreover 10th Parvai of Saturn is on 11th (Laabha) Sthan. Being a person holding Karma sthan & Dharma than, How family will get affected? Require your SME( Subject Matter Expert) advise & blessings. Thanks a lot. Hari

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com