Astrology ஜோதிடமும், மனித முயற்சியும்!
மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?
ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.
நீ மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமென்பதுதான் விதியென்றால் நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பை நடத்தியாக வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் தீர்மானிப்பதில்லை.
அது உன் கையில்தான் உள்ளது. உன் முயற்சியில்தான் உள்ளது. 4 மாடுகளா அல்லது 40 மாடுகளா என்பது உன் முயற்சியால் நிர்ணயிக்கப்படும்.
-----------------------------------------------------
ஒரு ஏழைப் பால் வியாபாரி இருந்தான். இரண்டு மாடுகளை வைத்துப் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வருமானம் போதவில்லை. பற்றாக்குறை. வீட்டில் அவன் மனைவி, பிள்ளைகளைச் சேர்த்து ஐந்து ஜீவன்கள்
வீட்டு வாசல் திண்ணையில் கவலையோடு அவன் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாகச் சென்ற முனிவர் ஒருவர், அவனை நோக்கிக் கேட்டார், ”தம்பி, சற்றுக் களைப்பாக இருக்கிறது, பசியாற ஏதாவது கிடைக்குமா?”
அவன் பதறிவிட்டான். பசியின் கொடுமை அறிந்தவனல்லவா? உடனே திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே வந்தவன், “அய்யா நல்ல மோர் இருக்கிறது, தரட்டுமா?” என்று கேட்டான்.
அவர் சம்மதம் சொல்ல, ஒரு செம்பு நிறைய மோரைக் கொண்டு வந்து கொடுத்தான்.
வாங்கி அமைதியாகக் குடித்தார் முனிவர். குடித்தபிறகுதான் அவனை உற்று நோக்கினார். அவன் முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது.
தன் ஞானக்கண்ணால் அவனுடைய நிலைமையை முழுதாக உணர்ந்தவர் சொன்னார்:
“நாளை அதிகாலை என்னை வந்துபார். உன் கவலைகளை ஓட்டும் வழியைச் சொல்லித் தருகிறேன்”
அவன் அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அடுத்த நாள் உதயத்தில், நம்பிக்கையுடன், அவரைச் சென்று பார்த்தான்.
அவர் அவனுடன் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் தீர்க்கமாக ஒன்றைச் சொன்னார் “உன்னிடம் இருக்கும் இரண்டு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு போய் பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று விட்டு வந்து, விற்ற பணத்தை உன் வீட்டில் பத்திரமாக வை.”
அவன் அதிர்ந்து போய் விட்டான்.
மாடுகள் இரண்டையும் விற்று விட்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளும் முனைப்பில், “அய்யா...” என்று இழுத்தான்.
அது தெரியாதா அவருக்கு? கையைக் உயர்த்திக் காட்டியதோடு, சொன்னார், “ சொன்னதைச் செய், மற்றது தானாக நடக்கும், மீண்டும் நீயே வந்து என்னைப் பார்ப்பாய், இப்போது போ!”
அவன் அவர் சொன்னபடியே செய்தான். இரண்டு மாடுகளும் நல்ல விலைக்குப் போயிற்று. விற்ற பணத்தைக் கொண்டு வந்து, வீட்டுப் பரணின் மேலிருந்த பானைக்குள் வைத்து மூடினான். பிறகு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டு படுத்து உறங்கிவிட்டான்.
தூக்கம் என்றால் அப்படியொரு தூக்கம்.
மாலை ஆறு மணிக்குத்தான், ”அம்மா...” என்று தன் மாடுகள் கத்தும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன், ஓடிப்போய் தன் வீட்டிற்குப் பின் புறம் இருந்த தொழுவத்தில் பார்த்தான். அங்கே அவனுடைய மாடுகள் இரண்டும் நின்று கொண்டிருந்தன. மயக்கம் வராத குறை அவனுக்கு.
அதோடு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. விற்று விட்டு வந்த மாடுகள் எப்படித் திரும்பி வந்தன?
இருட்டி விட்டதால் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் ஒட்டமும் நடையுமாகச் சென்று முனிவரைப் பார்த்தான்.
தியானத்தில் இருந்த அவர் இவன் உள்ளே வந்த ஒலி கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தார். பார்த்தவர் கேட்டார்,” என்ன உன்னுடைய மாடுகள் இரண்டும் திரும்பி வந்து விட்டனவா?”
அவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான்.
சலனமற்று காட்சியளித்த அவர் சொன்னார்,”நேற்றுச் செய்ததுபோல இன்றும் செய்; ஒன்றும் கேட்காதே, பிறகு சொல்கிறேன் இப்போது போய் வா”
வந்த வேகத்திலேயே திரும்பியவன், அவர் சொல்லியபடியே அன்றும் செய்தான். மறுபடியும் கிட்டத்தட்ட அதே அளவு தொகை கிடைத்தது. வீட்டிற்குக் கொண்டு வந்து, பானைக்குள் போட்டுப் பரணுக்குள் வைத்துவிட்டு, எப்போதும் போல சாப்பிட்டு விட்டுக் கண் அயர்ந்தான்.
நேற்று நடந்தது போலவே இன்றும் நடந்தது. அவன் அதிசயப்படும் விதமாக அவனுடைய இரண்டு மாடுகளும் இன்றும் திரும்பி வந்து தொழுவத்தில் நின்று கொண்டிருந்தன!
இது தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பத்து நாட்கள் தொடர்ந்தது. வழக்கப்படி பதினோறாம் நாள் காலையில் முனிவரைச் சென்று பார்த்தான்
அவர் சொன்னார், “இனிமேல் அந்த அதிசயம் தொடராது. உன்னிடம் இப்போது 20 மாடுகளுக்கான தொகை இருக்கிறது. இன்று சந்தைக்குப்போ; நல்ல மாடுகளாகக் கிடைக்கும் 20 மாடுகளை வாங்கி வந்து இன்று முதல் உன் பால் வியாபாரத்தை நல்லபடியாகச் செய்!”
அவன் நெகிழ்ந்து விட்டான். கண்கள் பனிக்கக் கேட்டான், “அய்யா உங்களுக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன். இதுவரை அந்த அதியசம் எப்படி நடந்தது என்பதைச்சொன்னீர்கள் என்றால் நான் சற்று மன நிம்மதியோடு போவேன்.”
“உன் தலையெழுத்து மாடுகளை வைத்து பிழைப்பதுதான். ஆனால் நீ முயற்சி எதுவும் செய்யாமல், இருப்பதை வைத்து இதுவரை உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு உதவும் பொருட்டே, எனது சித்து வேலையால் நான் அப்படிச் செய்தேன். எதற்கும் ஒரு அளவு உண்டு. அது தெரிந்து நான் நேற்றோடு நிறுத்திவிட்டேன். இனிமேல் நான் நினைத்தால்கூட உனக்கு உதவ முடியாது. இறைவனை வேண்டிக்கொள். உன் பிரச்சினைகள் எல்லாம் தீரும் அதோடு இனிச் சோம்பியிருக்காமல் முயற்சி செய்து கடுமையாக உழைத்தாய் என்றால் உன் மாடுகளின் எண்ணிக்கை கூடிய சீக்கிரம் 100 ஆகும், பிறகு 200 ஆகும். போய்ப் பிழைத்துக் கொள்!” என்று முடித்தார்.
கதை அவ்வளவுதான். முயற்சி எப்படி வேலை செய்யும் என்பதற்குத்தான் இந்தக் கதை!
நமக்கும் ஒரு முனிவர் வருவாரா என்று யாரும் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது கலியுகம். முனிவரெல்லாம் வரமாட்டார். முனி வேண்டும் என்றால் வரும்.
முனி என்றால் என்னவா? அதுதான் நட்பு என்ற பெயரில் வரும் டாஸ்மார்க், சல்பேட்டா பார்ட்டிகள் அதாவது தண்ணியடிக்கும் ஆசாமிகள்.
--------------------------------------------------------------
சரி துவக்கத்திற்கு வருகிறேன். நல்ல வாழ்க்கைக்கு ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?
ஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும்.
அதவது First House (Lagna), Ninth House (House of gains), 10th House (House of Profession) 11th House (House of Profit) ஆகிய நான்கு இடங்களிலும் 30 பரல்களோ அல்லது 30ற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பரல்கள் இருக்க வேண்டும்.
அவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் ஏன் ஏன் என்பதை இன்னொரு நாள் விரிவாகச் சொல்கிறேன்!
மற்ற இடங்களெல்லாம் முக்கியமில்லையா? இல்லை!
அப்படியிருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்?
சூப்பராக இருக்கும்!
படிக்கும் வாசகர்கள் யாருக்காவது அப்படியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்
எனக்குத் தெரிந்து என்னுடைய உறவினர்கள் இரண்டு பேருக்கு இருக்கிறது. அவர்களது வாழ்க்கையும் சூப்பராக இருக்கிறது. அவர்களுடைய ஜாதகத்தை நான் பர்த்திருக்கிறேன். அதனால்தான் அடித்துச் சொல்கிறேன்.
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
---------------------------------------------------------------

'முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்'
ReplyDeleteபதிவுக்கும் அறிவுரைக்கும் நன்றி ஐயா!
அன்புள்ள ஆசிரியருக்கும் மற்றும் வகுப்பறை நண்பர்களுக்கும்
ReplyDeleteதிருவோணம் பண்டிகை நல்வள்ழ்துக்கள்....
நல்ல வாழ்க்கைக்கு ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?
வாத்தியாரின் பழைய பாடத்திலும் உள்ளது இது.
எனக்கு 1ம் இடத்தில் = 26
9 இல் =27
10 இல் 36
11 இல் 35
ஏதாவது தேறுமா?...[தருமியை போல .....]
அன்புடன்
ரா.சரவணன்
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதை தெளிவாக விளக்கும் கதை. ஆனால் அதையும் மீறி நெஞ்சில் நிலைத்தது,
ReplyDeleteவாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
என்ற வள்ளலார் பெருமானின் அமுத மொழிகளை ஒத்த நல் மனது படைத்த பால் வியாபாரியின் உயரிய செயல். பசி என்று வந்தவருக்கு மோர் தந்த, வறுமையிலும் வற்றாத தொண்டுள்ளம் படைத்த அந்த ஏழை பால் வியாபாரியின்
நற்செயலே, அவனுக்கு முனிவர் மூலமாக நல்ல வழி காட்டியது போலும்.
திரு.கே.எம்.ஆர் அவர்களின், இன்று அனுமன் இருந்தால்....மிக மிக அருமை. மிக்க நன்றி.
Good Morning Sir!
ReplyDeleteஅன்புள்ள வாத்தியாருக்கு,
ReplyDeleteகாலை வணக்கங்கள்;
ஒணத்திண்டே ஆஷம்ஷகள்!
+++++
லால்குடியார் நகைச்சுவி நன்று. அவர் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பணி ஆற்றியவர் ஆதலால் இந்த பரிபாஷை நன்கு அறிந்தவர் அல்லவா?
+++++
தங்கள் பாடம் எப்போதும் போல பயன் உள்ளதாக உள்ளது.
தெய்வப்புலவர் கூறியது போல
"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்"
"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்"
என்ன, கொஞ்சம் கூடுதலாக முனைந்து உழைக்க வேண்டி வரும். உழைத்தால் போகிறது, என்ன இப்போ!
முற்பிறவிகளில் நாம் பண்ணின வினைப்பயன் இந்த ஜாதகம். நொந்து பயனில்லை. இப்பிரவியிலாவது நல்ல வழியில் வாழ்ந்தால் அடுத்த ஜாதகம் நன்றாக அமையும் அல்லவா?
பட்டென்று மனசில் பட்டதை இங்கே பதிவு பண்ணுகிறேன்:
"எனக்கு கிரகம் சரியில்லை" என்று சொல்லுவது எள்ளற்க்குரிய வாக்கு என இப்போதெல்லாம் மனத்தில் படுகிறது.
கிருத்திருமம் பண்ணியவரை கோர்ட் ஆணை ஆஜராகும் படி சொல்ல, அதை தபால் காரர் வீட்டில் கொடுக்கிறார். தபால் காரரை நொந்து என்ன பயன்? இங்கே கிரகங்கள் தபால் காரர்கள். மன்னிப்பு வேண்டி ஒரு வேளை கருணை மனு போட்டாலும் அது ஜனாதிபதியிடம் தான் போட வேண்டுமே தவிர தபால் காரரிடமா போட முடியும்? இங்கே இறைவன் ஜனாதிபதி.
+++++
காலை எழும்பியவுடன், இன்று வகுப்பறையில் என்ன பாடம் என சிந்திக்க வைக்கும் உங்கள் வகுப்பறை உண்மையாகவே ஒரு மகத்தான விஷயம் தான். கொஞ்சமும் ஆபாசமோ கிளிகிளுப்போ ஹிட்ஸ் காக விரசமான கட்டுரைகளோ இல்லாமல் ஒரு இணையதளம் இத்தனை பேருடைய அன்பை பெற்று இயங்குகிறது எனில் கட்டாயம் அதன் ஆசிரியர் போற்றுதலுக்கு உரியவரே. இறையருள் தான் தங்களை இத்துனை மகத்தான நற்பணியில் உந்தி செலுத்தி உள்ளது என்பதுள் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை.
தங்கள் சீரிய பணி சிறக்க இந்த திருவோண நன்னாளில் இறையருளை வேண்டுகிறேன்.
தங்களை வாழ்த்த எனக்கு வயதும் இல்லை, தகுதியும் இல்லை, அறிவும் இல்லை - ஆதலால் வணங்குகிறேன்.
பணிவன்புடன்
புவனேஷ்வர்
vanakam sir my son 1 house 30..9th 29 ..10 th ..11th 32..eppadi urukkum sir
ReplyDeleteகிருஷ்னன் சார், ரூம் போட்டு யோசிச்சிங்களோ, நீண்ட நாளுக்கு பின் வகுப்பறையில் வாய் விட்டு சிரிக்க நல்ல கற்பனை.
ReplyDeleteஅய்யா எனக்கு அந்த நான்கில் 1, 11, இந்த இரண்டு இடங்கள் மட்டுமே நீங்கள் சொன்னது போல் இருக்கிறது. ஆனால் எப்போதும் எதிலும் இன்னும் இன்னும் என்று முயற்சி செய்துக்கொண்டே இருப்பேன்.
ReplyDeletesir,
ReplyDeletei have
1 -> 34
2 -> 21
3 -> 28
4 -> 31
so... ஏதாவது தேறுமா? :)
thanks,
rajesh
அய்யாவுக்கு காலை வணக்கம்.
ReplyDeleteநீங்கள் சொல்லும் பரல்கள் அளவு உடைய ஜாதகர் ஜாதகத்தை நம்புவார் என நான் நினைக்கவில்லை. அதற்கு அவசியம் இருக்காது என்பது என் எண்ணம்.
நன்றி, தங்கள் மாணவன்,
ரெங்கா
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteநல்ல பதிவு
நன்றி
Respected Sir,
ReplyDeleteThanks for giving an easy way to find out through Astavarga about one's life.
///Blogger kmr.krishnan said...
ReplyDelete'முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்'
பதிவுக்கும் அறிவுரைக்கும் நன்றி ஐயா!/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
Blogger saravanan said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கும் மற்றும் வகுப்பறை நண்பர்களுக்கும்
திருவோணம் பண்டிகை நல் வாழ்துக்கள்....
நல்ல வாழ்க்கைக்கு ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?
வாத்தியாரின் பழைய பாடத்திலும் உள்ளது இது.
எனக்கு 1ம் இடத்தில் = 26
9 இல் =27
10 இல் 36
11 இல் 35
ஏதாவது தேறுமா?...[தருமியை போல .....]
அன்புடன்
ரா.சரவணன்//////
பாதிக் கிணறைத் தாண்டியிருக்கிறீர்கள். பாதிக் கிணறை மட்டும் தாண்டினால் என்ன ஆகும் சொல்லுங்கள்!
Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteமுயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதை தெளிவாக விளக்கும் கதை. ஆனால் அதையும் மீறி நெஞ்சில் நிலைத்தது,
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
என்ற வள்ளலார் பெருமானின் அமுத மொழிகளை ஒத்த நல் மனது படைத்த பால் வியாபாரியின் உயரிய செயல். பசி என்று வந்தவருக்கு மோர் தந்த, வறுமையிலும் வற்றாத தொண்டுள்ளம் படைத்த அந்த ஏழை பால் வியாபாரியின்
நற்செயலே, அவனுக்கு முனிவர் மூலமாக நல்ல வழி காட்டியது போலும்.
திரு.கே.எம்.ஆர் அவர்களின், இன்று அனுமன் இருந்தால்....மிக மிக அருமை. மிக்க நன்றி./////
ஆமாம் சகோதரி! நன்றி!
Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஅன்புள்ள வாத்தியாருக்கு,
காலை வணக்கங்கள்;
ஒணத்திண்டே ஆஷம்ஷகள்!
+++++
லால்குடியார் நகைச்சுவை நன்று. அவர் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பணி ஆற்றியவர் ஆதலால் இந்த பரிபாஷை நன்கு அறிந்தவர் அல்லவா?
+++++
தங்கள் பாடம் எப்போதும் போல பயன் உள்ளதாக உள்ளது.
தெய்வப்புலவர் கூறியது போல
"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்"
"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்"
என்ன, கொஞ்சம் கூடுதலாக முனைந்து உழைக்க வேண்டி வரும். உழைத்தால் போகிறது, என்ன இப்போ!
முற்பிறவிகளில் நாம் பண்ணின வினைப்பயன் இந்த ஜாதகம். நொந்து பயனில்லை. இப்பிரவியிலாவது நல்ல வழியில் வாழ்ந்தால் அடுத்த ஜாதகம் நன்றாக அமையும் அல்லவா?
பட்டென்று மனசில் பட்டதை இங்கே பதிவு பண்ணுகிறேன்:
"எனக்கு கிரகம் சரியில்லை" என்று சொல்லுவது எள்ளற்க்குரிய வாக்கு என இப்போதெல்லாம் மனத்தில் படுகிறது.
கிருத்திருமம் பண்ணியவரை கோர்ட் ஆணை ஆஜராகும் படி சொல்ல, அதை தபால் காரர் வீட்டில் கொடுக்கிறார். தபால் காரரை நொந்து என்ன பயன்? இங்கே கிரகங்கள் தபால் காரர்கள். மன்னிப்பு வேண்டி ஒரு வேளை கருணை மனு போட்டாலும் அது ஜனாதிபதியிடம் தான் போட வேண்டுமே தவிர தபால் காரரிடமா போட முடியும்? இங்கே இறைவன் ஜனாதிபதி.
+++++
காலை எழும்பியவுடன், இன்று வகுப்பறையில் என்ன பாடம் என சிந்திக்க வைக்கும் உங்கள் வகுப்பறை உண்மையாகவே ஒரு மகத்தான விஷயம் தான். கொஞ்சமும் ஆபாசமோ கிளிகிளுப்போ ஹிட்ஸ் காக விரசமான கட்டுரைகளோ இல்லாமல் ஒரு இணையதளம் இத்தனை பேருடைய அன்பை பெற்று இயங்குகிறது எனில் கட்டாயம் அதன் ஆசிரியர் போற்றுதலுக்கு உரியவரே. இறையருள் தான் தங்களை இத்துனை மகத்தான நற்பணியில் உந்தி செலுத்தி உள்ளது என்பதுள் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை.
தங்கள் சீரிய பணி சிறக்க இந்த திருவோண நன்னாளில் இறையருளை வேண்டுகிறேன்.
தங்களை வாழ்த்த எனக்கு வயதும் இல்லை, தகுதியும் இல்லை, அறிவும் இல்லை - ஆதலால் வணங்குகிறேன்.
பணிவன்புடன்
புவனேஷ்வர்/////
உண்மைதான். இறையருளால்தான் என்னால் எழுத முடிகிறது. அதே இறையருள்தான் எனக்கு இத்தனை அன்பான வாசகர்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
////Blogger eswari sekar said...
ReplyDeletevanakam sir my son 1 house 30..9th 29 ..10 th ..11th 32..eppadi urukkum sir/////
நன்றாக இருக்கும். 9லும் 30ஐத்தாண்டியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்!
/////Blogger thanusu said...
ReplyDeleteகிருஷ்ணன் சார், ரூம் போட்டு யோசிச்சிங்களோ, நீண்ட நாளுக்கு பின் வகுப்பறையில் வாய் விட்டு சிரிக்க நல்ல கற்பனை.////
அவருக்கு அதெல்லாம் தேவையில்லை. கூட்டத்திற்கு நடுவில் இருக்கும்போதுகூட சிறப்பான யோசைனைகள் வரும்!
////Blogger thanusu said...
ReplyDeleteஅய்யா எனக்கு அந்த நான்கில் 1, 11, இந்த இரண்டு இடங்கள் மட்டுமே நீங்கள் சொன்னது போல் இருக்கிறது. ஆனால் எப்போதும் எதிலும் இன்னும் இன்னும் என்று முயற்சி செய்துக்கொண்டே இருப்பேன்.////
நல்லது. தொடர்ந்து அப்படியே செய்யுங்கள்!
/////Blogger nsrajesh said...
ReplyDeletesir,
i have
1 -> 34
2 -> 21
3 -> 28
4 -> 31
so... ஏதாவது தேறுமா? :)
thanks,
rajesh/////
லக்கினமும், 4ஆம் வீடும் நன்றாக இருப்பதால், ரோட்டி, கப்டா, மக்கானுக்கு (உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகியவற்றிற்குக்) குறை இருக்காது!
//////Blogger renga said...
ReplyDeleteஅய்யாவுக்கு காலை வணக்கம்.
நீங்கள் சொல்லும் பரல்கள் அளவு உடைய ஜாதகர் ஜாதகத்தை நம்புவார் என நான் நினைக்கவில்லை. அதற்கு அவசியம் இருக்காது என்பது என் எண்ணம்.
நன்றி, தங்கள் மாணவன்,
ரெங்கா//////
ஆமாம். அவர்களுக்கு ஜாதகத்தைக் கையில் எடுக்கும் வேலை (வேளையும்) இருக்காது
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
நல்ல பதிவு
நன்றி/////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger Mahesh said...
ReplyDeleteRespected Sir,
Thanks for giving an easy way to find out through Astavarga about one's life./////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
Triythisi, thiyel printavrgal, ketagunam udiyavargal enru oru padivel padithen, unmaiyavaa
ReplyDeleteவணக்கம்.எனக்கு 1ம் இடத்தில் = 36
ReplyDelete9 இல் =29
10 இல் 36
11 இல் 28
ஏதாவது தேறுமா?..
When analyzing three of us in our family all of them got >30 in 1st, 10th,11th, but in 9th house father got 24, mother 22 (me)and my daughter 18. Is that mostly 9th house will be less? When 9th house is less is that means we should not depend on LUCK or we do not have LUCK.Thank you so much SIR. Take care
ReplyDeleteஒரு buildingக்கு basement போன்றதுதான் லக்கினம். அதில் பரல் குறைந்தால் என்ன ஆகும் என்று நானோ வாத்தியாரோ சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த பாடத்தில் சொல்லப் பட்ட மற்ற 3 இடங்களில் பரல் ஏன் அதிகம் இருக்க வேண்டும் வாத்தியார் பின்னொரு நாளில் விளக்குவதாக சொல்லிவிட்டதால், நான் இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஎன் ஜாதகத்தில் உள்ளதை நடிகர் வடிவேலு பாணியில் சொல்வதானால் basement strong building weak.
ஹனுமாரின் பயணப்படி பற்றிய தமாஷ் என் சொந்த சரக்கல்ல. மின் அஞ்சலில் வந்தது.
ReplyDeleteகிருஷ்ணபாபு வாசுதேவன் அவர்களே! தமிழில் எப்படி பின்னூட்டம் இடுவது என்பது பற்றி வகுப்பறையின் முகப்புப் பக்கத்தில் வலது மார்ஜினில் விளக்கம் உள்ளது. அதனைப் படித்துப் பார்த்து அடுத்த முறை தமிழிலேயே பின்னூட்டம் இடுங்கள்.
First house: 31 points
ReplyDelete9th: 31 points
10th: 33 points
11th: 33 points
4th: 32 points
12th: 30 points
3rd: 28 points
Others: below 28 pts.
Lagna Lord Sun: 3 pts
9th Lord Mars: 3 pts
10th Lord Venus: 5 pts
11th Lord Moon: 7 pts
Just an average middle class life, beset with worldly problems and a strong sense of alienation from everything. How?
- Sekar
1st house: 31 pts
ReplyDelete9th: 31 pts
10th: 33 pts
11th: 33 pts
Also: 12th: 30 pts, 4th: 32 pts; 3rd: 28 pts. Others: below 28.
Lagna Lord Sun: 3 pts; 9th Lord Mars: 3 pts; 10th Lord Venus: 5 pts; 11th Lord Mercury: 4 pts; 12th Lord Moon: 7 pts.
- Average middle class life with ordinary worldly worries, but total estrangement from everything, everybody. How?
- Sekar
லக்னாதிபதி சுக்ரன் 6 சுயவர்க்க பரல்கள்.
ReplyDelete2, 9ஆம் இடத்து அதிபதி செவ்வாய் 6 சுயவர்க்க பரல்கள்
10 ஆம் இடத்து அதிபதி சந்திரன் - 4 பரல்கள்,
11 ஆம் இடத்து அதிபதி சூரியன் - 3 பரல்கள்
1-ஆம் இடத்தில் 22
9ஆம் இடத்தில் 30
10ஆம் இடத்தில் 43
11ஆம் இடத்தில் 26
இது பாதிக்கிணறு இல்லை அதிலும் அரைக்கால் வாசிதான் என்று புரிகிறது.
ஆனால் என்ன ஒன்று. 10ஆம் இடத்தில் 43 பரல்கள் என்று ஓஹோ புரொடக்சன்ஸ் (காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ்-ன் தயாரிப்பு கம்பெனி) ஆக இருக்கிற காரணத்தால் எந்த வேலையை செய்தாலும் அதை ஓரளவு நேர்த்தியாக செய்து முடிக்கும் திறனை இறைவன் கொடுத்திருக்கிறார்ன். பத்தாம் இடத்தை விட குறைவாக 11ஆம் இடத்தில் 26 பரல்கள் என்று இருப்பதால் வேலைக்கேற்ற கூலி இல்லை என்றாலும் படித்த நாளிதழைக்கூட கசங்காமல் கலையாமல் மடித்து வைப்பதில் இருந்து எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்து முடித்து நல்ல பெயர் மட்டும் கிடைத்துக்கொண்டிருக்கிறது.
பாடத்துக்கு நன்றி ஐயா.
Blogger krishnababuvasudevan said...
ReplyDeleteTriythisi, thiyel printavrgal, ketagunam udiyavargal enru oru padivel padithen, unmaiyavaa//////
அது உண்மையல்ல! தவறானதாகும்!
/////Blogger MnB said...
ReplyDeleteவணக்கம்.எனக்கு 1ம் இடத்தில் = 36
9 இல் =29
10 இல் 36
11 இல் 28
ஏதாவது தேறுமா?../////
காய்கறி, பருப்பு, புளி, காரம், உப்பு என்று உள்ளவை உள்ளபடி சேர்ந்தால்தான் மணக்கும் சாம்பார். அல்லது சாம்பார் மணக்கும். அவற்றில் இரண்டு குறைந்தால் அது எப்படி மணக்கும்?
//////Blogger yishun270 said...
ReplyDeleteWhen analyzing three of us in our family all of them got >30 in 1st, 10th,11th, but in 9th house father got 24, mother 22 (me)and my daughter 18. Is that mostly 9th house will be less? When 9th house is less is that means we should not depend on LUCK or we do not have LUCK.Thank you so much SIR. Take care//////
ஒன்பதாம் வீட்டை மட்டும் வைத்து அதிர்ஷ்டத்தை தீர்மானிக்க முடியாது. ஜாதகத்தில் லக்ஷ்மி யோகங்கள் போன்று இருக்கும் யோகங்கள் அதற்குக் கைகொடுக்கும்! யோகங்களைப் பற்ரிய பாடங்களை முழுமையாக நடத்த உள்ளேன். அப்போது அது பிடிபடும். பொறுமையாக இருங்கள்!
//////Blogger ananth said...
ReplyDeleteஒரு buildingக்கு basement போன்றதுதான் லக்கினம். அதில் பரல் குறைந்தால் என்ன ஆகும் என்று நானோ வாத்தியாரோ சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த பாடத்தில் சொல்லப் பட்ட மற்ற 3 இடங்களில் பரல் ஏன் அதிகம் இருக்க வேண்டும் வாத்தியார் பின்னொரு நாளில் விளக்குவதாக சொல்லிவிட்டதால், நான் இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.
என் ஜாதகத்தில் உள்ளதை நடிகர் வடிவேலு பாணியில் சொல்வதானால் basement strong building weak./////
வடிவேலின் கமெடியால் பேஸ்மென்ட்டிற்கு தவறான கண்ணோட்டம் கிடைத்துள்ளது. அது உறுதியாக இருந்தால் போதும். கட்டடத்தை சற்று மாற்றிக் கட்டும் நேரம் வரும்போது கட்டிவிடலாம்!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஹனுமாரின் பயணப்படி பற்றிய தமாஷ் என் சொந்த சரக்கல்ல. மின் அஞ்சலில் வந்தது.
கிருஷ்ணபாபு வாசுதேவன் அவர்களே! தமிழில் எப்படி பின்னூட்டம் இடுவது என்பது பற்றி வகுப்பறையின் முகப்புப் பக்கத்தில் வலது மார்ஜினில் விளக்கம் உள்ளது. அதனைப் படித்துப் பார்த்து அடுத்த முறை தமிழிலேயே பின்னூட்டம் இடுங்கள்./////
உங்களின் தகவலுக்கு நன்றி!!
Blogger Sekar Fernando said...
ReplyDelete1st house: 31 pts
9th: 31 pts
10th: 33 pts
11th: 33 pts
Also: 12th: 30 pts, 4th: 32 pts; 3rd: 28 pts. Others: below 28.
Lagna Lord Sun: 3 pts; 9th Lord Mars: 3 pts; 10th Lord Venus: 5 pts; 11th Lord Mercury: 4 pts; 12th Lord Moon: 7 pts.
- Average middle class life with ordinary worldly worries, but total estrangement from everything, everybody. How?
- Sekar///////
காலசர்ப்ப தோஷம் போன்ற இடைஞ்சல் இருக்கலாம். அவைகள் காலாவதியான பிறகு பரல்களுக்கான முழுப் பலன்கள் கிடைக்கும். பொறுமையாக இருங்கள்
Blogger சரண் said...
ReplyDeleteலக்னாதிபதி சுக்ரன் 6 சுயவர்க்க பரல்கள்.
2, 9ஆம் இடத்து அதிபதி செவ்வாய் 6 சுயவர்க்க பரல்கள்
10 ஆம் இடத்து அதிபதி சந்திரன் - 4 பரல்கள்,
11 ஆம் இடத்து அதிபதி சூரியன் - 3 பரல்கள்
1-ஆம் இடத்தில் 22
9ஆம் இடத்தில் 30
10ஆம் இடத்தில் 43
11ஆம் இடத்தில் 26
இது பாதிக்கிணறு இல்லை அதிலும் அரைக்கால் வாசிதான் என்று புரிகிறது.
ஆனால் என்ன ஒன்று. 10ஆம் இடத்தில் 43 பரல்கள் என்று ஓஹோ புரொடக்சன்ஸ் (காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ்-ன் தயாரிப்பு கம்பெனி) ஆக இருக்கிற காரணத்தால் எந்த வேலையை செய்தாலும் அதை ஓரளவு நேர்த்தியாக செய்து முடிக்கும் திறனை இறைவன் கொடுத்திருக்கிறார்ன். பத்தாம் இடத்தை விட குறைவாக 11ஆம் இடத்தில் 26 பரல்கள் என்று இருப்பதால் வேலைக்கேற்ற கூலி இல்லை என்றாலும் படித்த நாளிதழைக்கூட கசங்காமல் கலையாமல் மடித்து வைப்பதில் இருந்து எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்து முடித்து நல்ல பெயர் மட்டும் கிடைத்துக்கொண்டிருக்கிறது.
பாடத்துக்கு நன்றி ஐயா.//////
கசங்காமல் மடித்து வைக்கும் நேர்த்தியான மனதுஇருக்கிறதே! அது போதும்! நானும் அப்படித்தான். படித்த பிறகும் நாளிதழ்கள் புதிதாக இருக்கும். வைத்த சாமான்கள் வைத்த இடத்தில் இருக்கும் இருட்டில் கூடத் தேடி எடுக்கலாம்! உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சரண்!!
Your are amazing, waiting for that classes SIR, thank you, take care
ReplyDelete1 house - 30
ReplyDelete9 house - 29
10 house - 31
11 house - 42
very normal middle class life ????
/////Blogger yishun270 said...
ReplyDeleteYour are amazing, waiting for that classes SIR, thank you, take care//////
வகுப்புதான் வாரத்திற்கு ஐந்து நாட்கள் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறதே? அதைத் தொடர்ந்து படித்துக்கொண்டு வாருங்கள். நீங்கள் காத்திருப்பது வீண் போகாது சகோதரி!
/////Blogger KING_OF_SWING said...
ReplyDelete1 house - 30
9 house - 29
10 house - 31
11 house - 42
very normal middle class life ????//////
உரிய தசாபுத்தி வரும் காலங்களில் நீங்கள் கிங்’ தான் கவலையை விடுங்கள்!
தெளிவுபடுத்தியது நன்றி
ReplyDeleteNandri iyaa
ReplyDeletevalave salithu poi vitathu, 11 edathin 42 paral mel nambikayae ila enaku, ulaithatharakae ondrum kidaipathilai ithel veru ethai solvathu
ayya enakku lagnathil 38 paral ..9th house 25 paral.... 10th house 32 paral and 11th house 34 paral ayya...ithu nalla amaippa...
ReplyDelete