Astrology நஷ்டமும் நஷ்டஈடும்!
பயிற்சிப் பாடம்
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துப் போகும்போது, மரம், மட்டை என்று கிடைத்தவை அனைத்தையும் ஆற்று வெள்ளம் புரட்டி
எடுத்துக்கொண்டு போகும். அதுபோல மனித வாழ்க்கையில் கெட்ட நேரம் பெருக்கெடுத்து ஓடும் போது, கிரகங்கள் ஜாதகனை, அவனுடைய
மதிப்பு, மரியாதை, நிம்மதி என்று அனைத்துடனும் சேர்த்துப் புரட்டி எடுத்துக்கொண்டு போகும்.
அந்த நிலையில் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. வெள்ளத்தோடும், கண்ணில் கண்ணீரோடும், அவனும் போக வேண்டியதுதான்.
அதில் (நடுவில்) ஒரு நல்ல தசாபுத்தி தலை காட்டினால் கரை ஒதுங்கி, மூச்சு விடலாம்.
ஒரு ஜாதகனைக் கிரகங்கள் எப்படி புரட்டி எடுத்தன என்பதை இன்று பார்ப்போம்.
கிரகங்களின் விளையாட்டு இப்படித்தான் இருக்கும் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
-----------------------------------------
ஒரு உதாரண ஜாதகம்.
ஜாதகன் பிறந்தது ............(சில காரணங்களுக்காகப் பிறப்பு விவரத்தை இங்கே தரவில்லை)
ரேவதி நட்சத்திரம்
மீன லக்கின, மீன ராசி ராசி ஜாதகம்.
ஜாதகன் தான் வேலை செய்த நிறுவனத்தில், கள்ளக் கையெழுத்தைப் போட்டு, பணத்தைச் சுருட்டிய விவகாரத்தில் மாட்டிக்கொண்டு விட்டான். பணி நிறுத்தம் செய்யப்பட்டதுடன், நீதிமன்ற வழக்கையும் எதிர்கொண்டு பெரும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானான்.
வீட்டிலும், வெளிவட்டாரங்களிலும், அவனுடைய மதிப்பும், மரியாதையும் போய்விட்டது.
இறுதியில் என்ன ஆயிற்று?
வாருங்கள் அதையும் பார்ப்போம்.
1. இரண்டாம் அதிபதி (Lord of the 2nd house - house of finance) செவ்வாய் நீசம் பெற்றுள்ளான். இயற்கையாகவே பணப் பற்றாக்குறையான ஜாதகம். அதனால்தான் பணத்தைக் கையாடல் செய்து தன் பணக் கஷ்டத்தைப் போக்கும் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.
2. மூன்றாம் இடத்திற்கும், எட்டாம் இடத்திற்கும் அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்று லக்கினத்தில் அமர்ந்ததாலும், உடன் ராகுவின் சேர்க்கையாலும், அவனுக்கு அந்தக் குற்றத்தைப் புரியும் ஊக்கம் (துணிச்சல்) ஏற்பட்டது. அத்துடன் அவை இரண்டும் ஜாதகனுக்கு, அவன் நொந்து போகும் அளவிற்குச் சிரமங்களை உண்டாக்கின.
3. ஆறாம் வீடும், 12ஆம் வீடும் அதீதமான பாபகர்த்தாரி யோகத்தில். இருபுறமும் தீய கிரகங்கள். ஆறாம் வீட்டின் ஒரு பக்கம் செவ்வாய்.
மறுபக்கம் கேது. 12ம் வீட்டின் ஒரு பக்கம் சனி. மறுபக்கம் ராகு. எப்படிக் கெட்டிருக்கின்றன பாருங்கள். இந்தக் கெடுதல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
4. எட்டாம் வீட்டின் மேல் செவ்வாய் (4ஆம் பார்வை), மற்றும் சனியின் பார்வை (10ஆம் பார்வை)
5. லக்கினம், மற்றும் எதிர்ப்பாளரின் (opponent) கட்டங்களில் - அதாவது 1ல் மற்றும் 7ல் ( 1 & 7 axis) ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கம்
6. எல்லா தீய இடங்களும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. எல்லாவிதமான உபத்திரவங்களையும், சிரமங்களையும், சோதனைகளையும் அவைகள் ஜாதகனுக்குக் கொடுத்து அவனை அலைக்கழித்தன!
அதே நேரத்தில் ஒரு கேள்வி எழும். ஜாதகத்தில் நஷ்டம் இருந்தால், நஷ்ட ஈடும் இருக்கும் என்பார்களே, ஜாதகனுக்கு ஜாதகத்தில் நஷ்டஈடு உள்ளதா? அவன் மீண்டு வந்தானா? தப்பிப் பிழைத்தானா? என்பது போன்ற கேள்விகள் எழும்.
வாருங்கள் அதையும் பார்ப்போம்.
ஆசாமியின் ஜாதகத்தில், பல தீமைகள் இருந்ததைப் போலவே, அசத்தலாக சில நன்மை தரும் அமைப்புக்களும் இருந்தன.
1. முதல்நிலை சுபக்கிரகமான குரு பகவான் 5ஆம் பார்வையாக 8ஆம் வீட்டையும், 9ஆம் பார்வையாக 12ஆம் வீட்டையும் தனது கட்டுப்
பாட்டில் வைத்திருக்கிறார். மற்ற கிரகங்களை ஆடவிட்டுவிட்டு, உரிய நேரத்தில் ஓடி வந்து அவர் ஜாதகனுக்குக் கை கொடுத்தார்.
2. ஆறாம் அதிபதி சூரியன் இருபுறமும் சுபக்கிரகங்கள் நிற்க சுபகர்த்தாரி யோகத்தில் உள்ளார். அவர் ஜாதகனை மீட்டுக்கொண்டு வந்தார். ஒருபக்கம் புதன். மறுபக்கம் குரு.
3. எட்டாம் அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று, கோணத்தில் அமர்ந்துள்ளார்.
4. அவருடன் 5ஆம் அதிபதி (பூர்வ புண்ணியாதிபதி) சந்திரனும் அமர்ந்துள்ளார்.
5. அவர்கள் இருவருமே, அதாவது சந்திரனும், சுக்கிரனும், லக்கின அதிபதி குருவிற்கு கேந்திரத்தில் உள்ளார்கள்.
6. 12ஆம் அதிபதி சனி லக்கினத்திற்குப் பதினொன்றில், தனது சொந்த வீட்டில் வலுவாக அமர்ந்துள்ளான்.
இந்த ஆறு அமைப்புக்களும், தீய கிரகங்கள் குழிக்குள் தள்ளிய ஜாதகனை, கை கொடுத்துத் தூக்கி, மேலே கொண்டு வந்தன. நீதி மன்ற வழக்கில் அவனை வெற்றிபெறச் செய்தன.
7ல் கேது இருந்ததாலும், 7ஆம் அதிபதி புதன் அந்த வீட்டிற்கு எட்டில் இருந்ததாலும் அவன் வழக்கில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. லக்கினமும், லக்கினாதிபதியும் வலுவாக இருந்ததால் அவன் மீண்டு வந்தான்
ஜாதகத்தில் நஷ்டங்களும் இருக்கும் நஷ்ட ஈடுகளும் இருக்கும். இல்லாவிட்டால் அனைவருக்கும் மதிப்பெண் 337தான் என்னும் ஜாதக
அமைப்பு எப்படி உண்டாகும்?
இறைவன் கருணை மிக்கவர். ஆகவே கஷ்டங்கள் வந்தால், அழுது புரள்வதை விட்டு விட்டு அல்லது அசந்துபோய் கவலையுடன் தரையில் படுப்பதை விட்டுவிட்டு, அதில் இருந்து மீள்வது எப்படி என்று பாருங்கள்
இது மேல்நிலை வகுப்பிற்காக ( e class 2012) எழுதப்பெற்ற பாடம். அனைவரும் படிக்கட்டும் என்று இங்கே, இன்று பதிவிட்டுள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++====

ayya, intha jadhagathil sani 11 m idathil ullare adhuvum atchi veedu veru. adhu patri thangal ondrum solla villaye? 11 m veetu sani jadhaganukku nanmaye seyvan endru thangal padathin moolam
ReplyDeletekelvipattirukkiren.
ayya,
ReplyDelete11 m idaththu sani jadhaganukku nanmaye seyvan ena thangal padathil padithullen. adhu patri thangal edhuvum sollavillaye?
திங்கள் காலையில் ஒரு அருமையான பாடம் :) நன்றி ஐயா.
ReplyDeleteபாடமும் அதற்குத் தந்திருக்கும் படமும் அருமை. துன்பத்தில் இருக்கும் போது அருகிலிருந்து ஆறுதலளிப்பவர் தெய்வத்திற்குச் சமம்.
ReplyDeleteவாங்கி வந்த வரத்திற்குத் தகுந்தபடிதான் வாழ்க்கை அமைகிறது.
//இறைவன் கருணை மிக்கவர். ஆகவே கஷ்டங்கள் வந்தால், அழுது புரள்வதை விட்டு விட்டு அல்லது அசந்துபோய் கவலையுடன் தரையில் படுப்பதை விட்டுவிட்டு, அதில் இருந்து மீள்வது எப்படி என்று பாருங்கள்//
என்ற வரிகள், 'வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை' என்ற கவியரசரின் அமர வரிகளை நினைவுபடுத்தின. மிக்க நன்றி.
நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது இன்றைய
ReplyDeleteமேல்நிலை பாடத்தில். பகிர்விற்கு மிக்க நன்றி.
vanakam sir .. enrya alsal padam narga ulluthu .. thanks.
ReplyDeleteநல்லதொரு பாடம். ஜாதகர் எந்த தசா/புத்தியில் வழக்கில் சிக்கினார். எந்த தசா/புத்தியில் வழக்கில் இருந்து விடை பெற்றார்? சுக்கிரன், ராகு & சந்திரன் கூட்டணி அவரை பெண் பித்தராக மாற்றியதா இல்லையா? 3 கேள்விகளுக்கும் விடை தர வேண்டுகிறேன்.நன்றி...
ReplyDeletearumayana pathivu ayya
ReplyDeleteஆப்பிரிகரின் படம் பொருத்தமாக அமைந்தன.
ReplyDeleteபாதுகாப்பில்லாத கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இப்படித்தான் ..
பிரச்சனைகளுக்கு நடுவே ஆனந்தமாக வாழும்
("ஹபாரி" என்பதும் ஒரு வினாடி கூட தமாதிக்காமல் "கபீசா" என்பதும் how are u என்றதும் excellant என பதில் தருவதும்) அவர்களிடம் நஷ்டமும் நஷ்ட ஈடும் அன்றாட வாழ்க்கையின் அங்கமே
இந்த வரிகளை மனதில் பதிக்க பதிவிடுகிறோம்.
Nature runs a restaurant called."KARMA". It's a place where there is no need to place any order. We are served what we deserve
பிடித்தமான அலசல் பாடம்.
ReplyDeleteபல விழயங்கள் பல கோனங்களிலிருந்து, நன்மை செய்ததுக்கு காரனங்கள் தனியே, தீமை செய்ததுக்கு காரணங்கள் தனியே.
நன்றிகள் அய்யா.
பொதுவில் ஒருவருக்கு 6, 8, 12 ல் தீய க்ரஹம் இல்லாமலிருந்து லக்னாதிபதி பலமுடன் இருந்து ஏதாவது சுப க்ரஹம் உச்சத்திலிருதால் அது மிகவும் நல்ல ஜாதகம் என்று இது நாள் வரை என்னியிருந்தேன் (பன தட்டுபாடு ஒரு வேலை இருந்தாலும்). ஆனால் இந்த ஜதாகம் அலசல் மூலம் தீய க்ரஹங்களின் பார்வை, 6ம் இடத்தின் முன்னும் பின்னும் தீய க்ரஹங்கள் இருத்தல் போன்ற சில விசயங்கள் எப்படி எல்லாம் ஒரு ஜாதகனை புரட்டி போடும் என்று புரிந்து கொண்டேன். நன்றி.
ReplyDeleteஅற்புதமான அலசல்..சுபகர்த்தாரியைப் பற்றியும் அறிந்து கொண்டோம்! வாத்தியார் ஐயாவிற்கு மிக்க நன்றி!
ReplyDeleteAiyya Vanakkam ,
ReplyDeleteNalla pathivu ,
Nandri ,....
வணக்கம் சார்,
ReplyDeleteமுழு சாப்பாடு ரொம்ப நல்லாயிருந்தது ரொம்ப நன்றி என்னதா நஷ்டத்துக்கு நஷ்ட ஈடு கொடுத்திருந்தாலும் நஷ்டத்துக்கு கலங்காமல் விழுந்து புரளாமல் இருக்க முடியவில்லையே சரி முயற்சி செய்வோம் இனிமே 337 டானிக் குடிக்கிறேன்.
////Blogger renga said...
ReplyDeleteayya, intha jadhagathil sani 11 m idathil ullare adhuvum atchi veedu veru. adhu patri thangal ondrum solla villaye? 11 m veetu sani jadhaganukku nanmaye seyvan endru thangal padathin moolam
kelvipattirukkiren.////
அதான் செய்திருக்கிறாரே ராசா! நானும் எழுதியிருக்கிறேன். பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள்
/////Blogger renga said...
ReplyDeleteayya,
11 m idaththu sani jadhaganukku nanmaye seyvan ena thangal padathil padithullen. adhu patri thangal edhuvum sollavillaye?/////
அதான் செய்திருக்கிறாரே ராசா! நானும் எழுதியிருக்கிறேன். பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள்
/////Blogger Sanjai said...
ReplyDeleteதிங்கள் காலையில் ஒரு அருமையான பாடம் :) நன்றி ஐயா.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
///Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteபாடமும் அதற்குத் தந்திருக்கும் படமும் அருமை. துன்பத்தில் இருக்கும் போது அருகிலிருந்து ஆறுதலளிப்பவர் தெய்வத்திற்குச் சமம்.
வாங்கி வந்த வரத்திற்குத் தகுந்தபடிதான் வாழ்க்கை அமைகிறது.
//இறைவன் கருணை மிக்கவர். ஆகவே கஷ்டங்கள் வந்தால், அழுது புரள்வதை விட்டு விட்டு அல்லது அசந்துபோய் கவலையுடன் தரையில் படுப்பதை விட்டுவிட்டு, அதில் இருந்து மீள்வது எப்படி என்று பாருங்கள்//
என்ற வரிகள், 'வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை' என்ற கவியரசரின் அமர வரிகளை நினைவுபடுத்தின. மிக்க நன்றி./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
////Blogger ஸ்ரவாணி said...
ReplyDeleteநிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது இன்றைய
மேல்நிலை பாடத்தில். பகிர்விற்கு மிக்க நன்றி./////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
/////Blogger eswari sekar said...
ReplyDeletevanakam sir .. enrya alsal padam narga ulluthu .. thanks.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
////Blogger Arul said...
ReplyDeleteநல்லதொரு பாடம். ஜாதகர் எந்த தசா/புத்தியில் வழக்கில் சிக்கினார். எந்த தசா/புத்தியில் வழக்கில் இருந்து விடை பெற்றார்? சுக்கிரன், ராகு & சந்திரன் கூட்டணி அவரை பெண் பித்தராக மாற்றியதா இல்லையா? 3 கேள்விகளுக்கும் விடை தர வேண்டுகிறேன்.நன்றி.../////
சூரிய திசை (Lord of the sioxth) புதன் புத்தியில் சிக்கல் உண்டானது. தொடர்ந்து வழக்கும் ஏற்பட்டது.
சந்திர திசை சுயபுத்தில் வெற்றி கிடைத்தது
////Blogger arul said...
ReplyDeletearumayana pathivu ayya////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger அய்யர் said...
ReplyDeleteஆப்பிரிகரின் படம் பொருத்தமாக அமைந்தன.
பாதுகாப்பில்லாத கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இப்படித்தான் ..
பிரச்சனைகளுக்கு நடுவே ஆனந்தமாக வாழும்
("ஹபாரி" என்பதும் ஒரு வினாடி கூட தமாதிக்காமல் "கபீசா" என்பதும் how are u என்றதும் excellant என பதில் தருவதும்) அவர்களிடம் நஷ்டமும் நஷ்ட ஈடும் அன்றாட வாழ்க்கையின் அங்கமே
இந்த வரிகளை மனதில் பதிக்க பதிவிடுகிறோம்.
Nature runs a restaurant called."KARMA". It's a place where there is no need to place any order. We are served what we deserve/////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!!!
////Blogger thanusu said...
ReplyDeleteபிடித்தமான அலசல் பாடம்.
பல விழயங்கள் பல கோணங்களிலிருந்து, நன்மை செய்ததுக்கு காரனங்கள் தனியே, தீமை செய்ததுக்கு காரணங்கள் தனியே.
நன்றிகள் அய்யா./////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனுசு!
//////Blogger Ramnath said...
ReplyDeleteபொதுவில் ஒருவருக்கு 6, 8, 12 ல் தீய க்ரஹம் இல்லாமலிருந்து லக்னாதிபதி பலமுடன் இருந்து ஏதாவது சுப க்ரஹம் உச்சத்திலிருதால் அது மிகவும் நல்ல ஜாதகம் என்று இது நாள் வரை என்னியிருந்தேன் (பணத் தட்டுபாடு ஒரு வேலை இருந்தாலும்). ஆனால் இந்த ஜதாகம் அலசல் மூலம் தீய க்ரஹங்களின் பார்வை, 6ம் இடத்தின் முன்னும் பின்னும் தீய க்ரஹங்கள் இருத்தல் போன்ற சில விசயங்கள் எப்படி எல்லாம் ஒரு ஜாதகனை புரட்டி போடும் என்று புரிந்து கொண்டேன். நன்றி./////
படித்துத் தெரிந்து கொண்டு அதை உங்களின் பின்னூட்டம் மூலம் சொல்லியமைக்கு நன்றி நண்பரே!
/////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஅற்புதமான அலசல்..சுபகர்த்தாரியைப் பற்றியும் அறிந்து கொண்டோம்! வாத்தியார் ஐயாவிற்கு மிக்க நன்றி!/////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger Soundarraju said...
ReplyDeleteAiyya Vanakkam ,
Nalla pathivu , Nandri ,..../////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger sundari said...
ReplyDeleteவணக்கம் சார்,
முழு சாப்பாடு ரொம்ப நல்லாயிருந்தது ரொம்ப நன்றி என்னதா நஷ்டத்துக்கு நஷ்ட ஈடு கொடுத்திருந்தாலும் நஷ்டத்துக்கு கலங்காமல் விழுந்து புரளாமல் இருக்க முடியவில்லையே சரி முயற்சி செய்வோம் இனிமே 337 டானிக் குடிக்கிறேன்./////
அது இயற்கை. ஆனால் நம் வகுப்பறை மாணவர்கள், எனது பதிவுகளைத் தொடர்ந்து படித்ததன் மூலம் தங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு கலக்கம் அடையாமல் இருக்க வேண்டுமல்லவா? நான் தொடர்ந்து எழுதுவதன் நோக்கமும் அதுதான் சகோதரி. நன்றி!
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteநல்ல அருமைய்னபாடம்
நன்றாகயுள்ளது ஜயா
நன்றி
01) பாபகர்த்தாரி சுபகர்த்தாரி, I can understand from your lessons what will happen to the house if one side good and other side evil planet will it be mixed reaction.
ReplyDelete02) When a house is under பாபகர்த்தாரி and we have that house planet திசை what is the remedy we should take.
thank you
//////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
நல்ல அருமையானபாடம்
நன்றாகயுள்ளது ஜயா
நன்றி/////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger yishun270 said...
ReplyDelete01) பாபகர்த்தாரி சுபகர்த்தாரி, I can understand from your lessons what will happen to the house if one side good and other side evil planet will it be mixed reaction.
02) When a house is under பாபகர்த்தாரி and we have that house planet திசை what is the remedy we should take.
thank you//////
ஒரே பரிகாரம் பிரார்த்தனைதான்!
thank you so much,sorry I send the question two time
ReplyDeleteவியாபார காராகனான புதன் வியாபார ஸ்தானமான 3லேயே நின்றதும், அங்கே தீய கிரஹங்களால் சூழப்பட்டுள்ளதும்,அந்த புதனே 6ம் அதிபதியாகி பகை வீட்டில் நீச மடைந்தது, பெரும்பாலும் 8ம் அதிபதியான சூரியனால் அஸ்தங்கதம் அடைந்தும், அந்தா புதனே பக்கிய ஸ்தானதிபதியும் ஆகி, பாக்கிய ஸ்தனாத்தை தீயவர் சூழ நின்றதும்.....
ReplyDeleteவியாபாரத்தைப்படுக்கவைத்தது.யோககாரகன் சுக்ரன் 3ல் மறைந்து 8க்குடைய சூரியனால் அடிவாங்கி உச்சம் பெற்ற பலனையும் இழந்தாரோ?
நல்ல உதாரண ஜாதகன் ஐயா!நன்றி,.
//சில காரணங்களுக்காகப் பிறப்பு விவரத்தை இங்கே தரவில்லை//
ReplyDeleteகொடுக்காவிட்டாலும் இதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமான விஷயமில்லை.
என் ஜாதகத்தில் ஒரு வீட்டில் சுப கிரகம் இருக்கிறது. ஆனால் அந்த வீடு பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறது. இன்னொரு வீட்டில் இரண்டு பாப கிரககங்கள் இருக்கின்றன. ஆனால் சுப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறது. எதையும் மேலோட்டமாக பார்த்து விட்டு பலன் கூறுவது சரியல்ல என்பதை என் ஜாதகத்தை வைத்தே தெரிந்துக் கொண்டேன்.
Blogger kmr.krishnan said...
ReplyDeleteவியாபார காராகனான புதன் வியாபார ஸ்தானமான 3லேயே நின்றதும், அங்கே தீய கிரஹங்களால் சூழப்பட்டுள்ளதும்,அந்த புதனே 6ம் அதிபதியாகி பகை வீட்டில் நீச மடைந்தது, பெரும்பாலும் 8ம் அதிபதியான சூரியனால் அஸ்தங்கதம் அடைந்தும், அந்தா புதனே பக்கிய ஸ்தானதிபதியும் ஆகி, பாக்கிய ஸ்தனாத்தை தீயவர் சூழ நின்றதும்.....
வியாபாரத்தைப்படுக்கவைத்தது.யோககாரகன் சுக்ரன் 3ல் மறைந்து 8க்குடைய சூரியனால் அடிவாங்கி உச்சம் பெற்ற பலனையும் இழந்தாரோ?
நல்ல உதாரண ஜாதகன் ஐயா!நன்றி,///////
ஆமாம். உங்களின் கருத்துப் பகிவிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
Blogger ananth said...
ReplyDelete//சில காரணங்களுக்காகப் பிறப்பு விவரத்தை இங்கே தரவில்லை//
கொடுக்காவிட்டாலும் இதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமான விஷயமில்லை.
என் ஜாதகத்தில் ஒரு வீட்டில் சுப கிரகம் இருக்கிறது. ஆனால் அந்த வீடு பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறது. இன்னொரு வீட்டில் இரண்டு பாப கிரககங்கள் இருக்கின்றன. ஆனால் சுப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறது. எதையும் மேலோட்டமாக பார்த்து விட்டு பலன் கூறுவது சரியல்ல என்பதை என் ஜாதகத்தை வைத்தே தெரிந்துக் கொண்டேன்./////
நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!