மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.8.12

Astrology - Popcorn Post பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் உள்ளனவா?

Astrology - Popcorn Post  பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் உள்ளனவா?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பதினெட்டு

ஏன் இல்லாமல்? பெண்களுக்கென்று உடல் அமைப்பு, கால் அமைப்புக்கள் மாறுபடும்போது, ஜாதகத்தில் மட்டும் சில தனி அமைப்புக்கள்  இல்லாமல் போகுமா என்ன?

அவை என்னென்ன?

விரிவாகக் குறைந்தது ஒரு பத்து பதிவுகளாவது எழுத வேண்டும். இங்கே எழுதினால் திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஆகவே மேல்  நிலைப் பாடத்தில் எழுதலாம் என்றுள்ளேன்.

ஒரே ஒரு மேட்டரை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்
-----------------------------------------------------
கைம்பெண்’ நிலைமையைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது?

கைம்பெண் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? கணவனை இழந்த பெண். விதவை. widow அதாவது கணவனை இழக்கும் நிலை ஒரு பெண்ணுக்கு எவ்வாறு ஏற்படுகிறது?

கணவனை இழக்கும் பெண்ணின் மன பாதிப்புக்களையும், அவளுடைய வாழ்வில் ஏற்படும் சமூக, மற்றும் பொருளாதார பாதிப்புக்களையும்
பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். பதிவு திசை மாறிப்போய்விடும் என்பதாலும், இது பாப்கார்ன் பதிவு என்பதாலும் அதைப்பற்றி எழுதவில்லை. நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்
------------------------------------------------------
1.  செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து, அது அவருக்குப் பகை வீடு என்னும் நிலைமை விதவையோகத்தைக் குறிக்கும்

2. அவ்வாறு ஏழில் அமர்ந்திருக்கும் கேதுவும் அதே காரியத்தைச் செய்யும்
.
3. வலுவிழந்து, பாபகர்த்தாரி யோகத்துடன் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரனும் அந்த வேலையைச் செய்யும்

4. பிரசன்ன மார்க்கத்தை எழுதிய முனிவர் பெண்களுக்கு, சனிதான் கணவனுக்கான காரகன் என்கிறார். அத்துடன் பெண்ணின் ஜாதகத்தில்   
சனீஷ்வரன் செவ்வாய் அல்லது கேதுவுடன் சேர்ந்து ஏழில் இருந்தால், பெண் சீக்கிரம் விதவையாகிவிடுவாள் என்கிறார்.

5. பெண்களின் ஜாதகத்தில் எட்டாம் வீடு மாங்கல்ய ஸ்தானம். அந்த  ஸ்தானத்தை, அதாவது அந்த வீட்டை செவ்வாயோ அல்லது கேதுவோ
 பார்த்தால் பெண்ணிற்கு மாங்கல்ய தோஷம்.

இதெல்லாம் பொது விதி.

விதிவிலக்கு உண்டா?

உண்டு!

ஜாதகியின் இரண்டாம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்தால், அது அவளை விதவையாகாமல் காப்பாற்றிவிடும். அதுபோல மேற்கண்ட  வீடுகளை குரு பகவான் தன்னுடைய நேரடிப் பார்வையில் வைத்திருந்தாலும், அந்த அமைப்பு ஜாதகியைக் காப்பாற்றும்

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

30 comments:

  1. பாடம் அருமை. குரு பகவான் தான் இங்க ஹீரோ :)

    ReplyDelete
  2. நேற்றைய பதிவின் பின்னூட்டத்தில் நான் சொன்ன அந்தப் பெண் 8ல் செவ்வாய், சூரியன் என்று இரண்டு பாப கிரகங்கள். மாங்கல்ய தோஷம் என்று பார்க்கும் ஜோதிடர்களெல்லாம் சொல்லி பயமுறுத்தியிருக்கிறார்கள். இது என் பார்வைக்கு வந்தது. இந்த அமைப்பில் 9ல் பலமான சுப கிரகங்கள் இருந்தால் விதி விலக்கு உண்டு என்று நான் படித்ததை சுட்டிக் காட்டி அவருக்கு திருமணம் நடக்க உதவி புரிந்தேன். அவருக்கு புதன், சுக்கிரன் என்ற இரண்டு சுப கிரகங்கள் 9ல் (ரிஷபம்) இருந்தன. ஏதோ நம்மால் முடிந்த ஒரு நல்ல காரியம். திருமணமாகி பல வருடங்கள் ஆகி விட்டன. மகிழ்ச்சியாகதான் திருமண வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  3. துனையை இழத்தல் எனும் நிலை யாவருக்கும் ஒருகட்டத்தில் வருவதுதான். ஆனால் அது இளமையில் வரும் போது ஆண்களுக்கு பெரிய பாதிப்பு தருவதில்லை,இன்னும் சொல்லப்போனால் பாதிப்பே தருவதில்லை. அடுத்த மாதமே புது மாப்பிள்ளை.ஆனால் பெண்ணுக்கு நேரெதிர். இதில் அவர்களூக்கு மறுமனம் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அவளின் மனம் கூறுபடாமல் இருந்தாலே போதும். இந்த சமூக பிரச்சினை அனைத்து சமூகத்திலும் இருக்கிறது. ஏன் இந்த நிலமை? பெண்ணை தாயக பார்க்கும் நம் வாழ்வில் இளமை விதவை ஏன் வருகிறது. இதுவும் இறைவனின் திருவிளையாடலா? அப்படி விளையாட நினைப்பவன் வளர விட்டு வாலிபத்தில் கழுத்தை அறுப்பதை விட்டு விட்டு ஐந்திலேயே அழித்து விடட்டும். இதற்காக அவனிடம் யார் பேசுவது? யார் சண்டை போடுவது? அடுத்தவரின் பிறப்புக்கும் இறப்புக்கும் காரணம் அவனே என்பதால் இந்த அழிச்சாட்டியம் ஏன் செய்கிறான்.ஆண்டவன் எனும் திமிரா? கஷ்டம் வந்தால் கடவுளிடம் சொல்வோம் அந்த கஷ்டத்தை அவனே கொடுத்தால் யாரிடம் சொல்வது.

    ReplyDelete
  4. துணையை இழத்தல் என்பது
    கணவரின் மறைவு தானே(விவாகரத்து இல்லை தானே)

    அந்த
    ..சிறந்த கல்ஊரி பேராசிரியை
    ..சிறந்த பேச்சாளர்
    .. சிறந்த பாடகர்
    ..அண்மையில் அரசு சார்பில்
    ,,ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்

    இளமையில்
    இழந்தவைகள் பட்ட
    இன்னல்கள்
    என அவரை நினைவூட்டியது..
    இன்றைய பதிவு..

    ReplyDelete
  5. ம்ம்ம்.. குரு பார்க்க கோடி புண்ணியம் தான் .
    ஆனால் கன்னி & மிதுன லக்ன காரர்களுக்கும் மற்றும்
    மறைவிடம் பெற்றவர்களுக்கும் ,
    கேந்திராதிபதி தோஷமும் அவரே பெற்று இருந்தால்... ?
    இப்போது தங்கள் பாடங்கள் அனைத்தும் ஓரளவு படித்து விட்டதினால்
    மீண்டும் என் வலைத்தளத்தை திறந்து
    கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன்.
    நன்றி ! வணக்கம் !

    ReplyDelete
  6. very good post sir. nandraga ulladhu.

    ReplyDelete
  7. குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா
    நன்றி

    ReplyDelete
  8. vanakam ..sir padam nanrga .ullthu ... sanium chandrianum serthunthu eruthulum .. parthu kondulum ... entha amippel varuma..

    ReplyDelete
  9. sir...seppothu jothidam book vellivarum..

    ReplyDelete
  10. என் மூத்த மகளுக்கு நீங்கள் சொல்லியுள்ள அனைத்தும் உள்ளன. 7ல் கேது 8ல் செவ்வாய். லக்னத்திலேயே ராகு. சந்திரன் 12ல் மறைவு. குரு 6ல் தன் வீட்டிலேயே மறைவு.பார்த்த சோதிடர்கள் அனைவரும் 30 வயதுகடந்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என்றனர். அவளுக்குப் பின்னர் இரண்டு பெண்கள். அவர்களுடைய திருமணமும் தள்ளிப் போகும் நிலை. எனவே துணிந்து ஜாதகத்தை எடுத்து தோஷ சாம்யம் உள்ள ஜாதகத்தை சேர்த்தோம். லக்ன ராகுவும், 5ல் சூரியனும் குழந்தை பாக்கியத்தைத் தரவில்லை இதுவரை. 15 வருடங்களாக தாம்பத்ய வாழ்க்கை ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

    அப்போது செவ்வாய் எட்டில் இருக்கும் நிலையைப் பற்றி கேட்டபோது சோதிடம் நன்கு அறிந்த ஒரு பெரியவர், 'செவ்வாய் தசா சிறு வயதிலேயே முடிந்துவிட்டதால் 8ல் செவ்வாயைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்' என்று கூறினார்.அது சரிதான் என்று தோன்றுகிறது.
    பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  11. நல்ல பாடம் ஐயா...கிருக்ஷ்ணன் சாரின் கருத்துப்பதிவு பதிவிலே மற்றொரு பதிவு...இருவருக்கும் நன்றி...

    ReplyDelete
  12. thank you for another iformation. If you can able to send me only the lessons on " பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் " which your going to post foe Seniors,it will be very useful we got only one daughter who is 25 years old not yet married. Your information will be useful for us.
    thank you

    ReplyDelete
  13. மதிப்பிற்குரிய அய்யா,
    கனமான சப்ஜெக்ட்.ஆனால் ஐந்தே வரிகளில் துல்லியமான,தெளிவான நடையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்.நன்றி அய்யா.
    சனி மற்றும் கேது ஏழில் இருந்து,குரு எட்டாம் இடமாகிய மாங்கல்ய ஸ்தானத்தை பார்த்தாலும் ஜாதகியை காப்பாற்றும் என்று எடுத்துக்கொள்ளலாமா?

    அன்புடன்
    s.k.Raj.

    ReplyDelete
  14. நன்றி அருள்.நான் என் பின்னூட்டங்களை மேல் அதிகத் தகவல்களாகவே அமைத்து வருகிறேன். பல சமயங்களில் அது உங்களைப் போன்றவர்களால் பாராட்டப்பட்டுள்ளது.மிகச் சில சமயங்களில் தவிர்த்து இருக்கக்கூடிய வாதப் பிரதிவாதத்தில் அறிந்தும் அறியாமலும் சிக்கிவிடுவேன். ஒரு போதும் என்னுடன் வாதம் செய்பவர்களை பகையாக நினைப்பதில்லை. ஆனால் அவர்களோ என்னுடன் நிரந்தரமாகப் பகைத்து விலகி விடுவார்கள்.சோதிடக் காரணம் மூன்றாம் இடத்தில் கேது. வாக்கில் சனீஸ்வரன்.

    ReplyDelete
  15. பாடத்திற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  16. ////Blogger Sanjai said...
    பாடம் அருமை. குரு பகவான் தான் இங்க ஹீரோ :)////

    நீங்கள் சொன்னால் சரிதான் ஹீரோ (சஞ்சை)!

    ReplyDelete
  17. ////Blogger ananth said...
    நேற்றைய பதிவின் பின்னூட்டத்தில் நான் சொன்ன அந்தப் பெண் 8ல் செவ்வாய், சூரியன் என்று இரண்டு பாப கிரகங்கள். மாங்கல்ய தோஷம் என்று பார்க்கும் ஜோதிடர்களெல்லாம் சொல்லி பயமுறுத்தியிருக்கிறார்கள். இது என் பார்வைக்கு வந்தது. இந்த அமைப்பில் 9ல் பலமான சுப கிரகங்கள் இருந்தால் விதி விலக்கு உண்டு என்று நான் படித்ததை சுட்டிக் காட்டி அவருக்கு திருமணம் நடக்க உதவி புரிந்தேன். அவருக்கு புதன், சுக்கிரன் என்ற இரண்டு சுப கிரகங்கள் 9ல் (ரிஷபம்) இருந்தன. ஏதோ நம்மால் முடிந்த ஒரு நல்ல காரியம். திருமணமாகி பல வருடங்கள் ஆகி விட்டன. மகிழ்ச்சியாகதான் திருமண வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது./////

    அதெல்லாம் பொது விதிதான். ஜாதகத்தில் மற்ற அம்சங்கள் கைக்கொடுக்கும் அல்லவா? அதுதான் அந்தப் பெண்ணின் வாழ்வில் நடந்திருக்கும்!

    ReplyDelete
  18. //////Blogger thanusu said...
    துனையை இழத்தல் எனும் நிலை யாவருக்கும் ஒருகட்டத்தில் வருவதுதான். ஆனால் அது இளமையில் வரும் போது ஆண்களுக்கு பெரிய பாதிப்பு தருவதில்லை,இன்னும் சொல்லப்போனால் பாதிப்பே தருவதில்லை. அடுத்த மாதமே புது மாப்பிள்ளை.ஆனால் பெண்ணுக்கு நேரெதிர். இதில் அவர்களூக்கு மறுமனம் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அவளின் மனம் கூறுபடாமல் இருந்தாலே போதும். இந்த சமூக பிரச்சினை அனைத்து சமூகத்திலும் இருக்கிறது. ஏன் இந்த நிலமை? பெண்ணை தாயக பார்க்கும் நம் வாழ்வில் இளமை விதவை ஏன் வருகிறது. இதுவும் இறைவனின் திருவிளையாடலா? அப்படி விளையாட நினைப்பவன் வளர விட்டு வாலிபத்தில் கழுத்தை அறுப்பதை விட்டு விட்டு ஐந்திலேயே அழித்து விடட்டும். இதற்காக அவனிடம் யார் பேசுவது? யார் சண்டை போடுவது? அடுத்தவரின் பிறப்புக்கும் இறப்புக்கும் காரணம் அவனே என்பதால் இந்த அழிச்சாட்டியம் ஏன் செய்கிறான்.ஆண்டவன் எனும் திமிரா? கஷ்டம் வந்தால் கடவுளிடம் சொல்வோம் அந்த கஷ்டத்தை அவனே கொடுத்தால் யாரிடம் சொல்வது./////

    அமைதி! அமைதி! அமைதி
    இதில் ஆண்டவன் எங்கே வருவார்?
    மனிதனுடைய கர்மவினைகளுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை!
    அவ்வாறு துன்பத்தில் உழலும் மனிதனுக்கு ஆறுதலுக்காகத்தான் அவர் இருக்கிறார்!

    ReplyDelete
  19. Blogger அய்யர் said...
    துணையை இழத்தல் என்பது
    கணவரின் மறைவு தானே(விவாகரத்து இல்லை தானே)
    அந்த
    ..சிறந்த கல்ஊரி பேராசிரியை
    ..சிறந்த பேச்சாளர்
    .. சிறந்த பாடகர்
    ..அண்மையில் அரசு சார்பில்
    ,,ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்
    இளமையில்
    இழந்தவைகள் பட்ட
    இன்னல்கள்
    என அவரை நினைவூட்டியது..
    இன்றைய பதிவு..//////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!!

    ReplyDelete
  20. /////Blogger ஸ்ரவாணி said...
    ம்ம்ம்.. குரு பார்க்க கோடி புண்ணியம் தான் .
    ஆனால் கன்னி & மிதுன லக்ன காரர்களுக்கும் மற்றும்
    மறைவிடம் பெற்றவர்களுக்கும் ,
    கேந்திராதிபதி தோஷமும் அவரே பெற்று இருந்தால்... ?
    இப்போது தங்கள் பாடங்கள் அனைத்தும் ஓரளவு படித்து விட்டதினால்
    மீண்டும் என் வலைத்தளத்தை திறந்து
    கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன்.
    நன்றி ! வணக்கம் !/////

    ஆகா! அப்படியே செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. /////Blogger vprasana kumar said...
    very good post sir. nandraga ulladhu./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா
    நன்றி/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  23. Blogger eswari sekar said...
    vanakam ..sir padam nanrga .ullthu ... sanium chandrianum serthunthu eruthulum .. parthu kondulum ... entha amippel varuma.////.

    சனியும் சந்திரனும் சேர்ந்திருந்தால் அதற்கு புனர்பூ தோஷம் என்று பெயர். தம்பதிகளுக்குள் பிரிவை உண்டாக்கும். அதை பற்றி முன்பே எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் உள்ளது!

    ReplyDelete
  24. //////Blogger eswari sekar said...
    sir...seppothu jothidam book vellivarum../////

    அக்டோபர் மாதம் நிச்சயம் வரும். முறையான அறிவிப்பு பதிவில் வெளியாகும் சகோதரி!

    ReplyDelete
  25. /////Blogger kmr.krishnan said...
    என் மூத்த மகளுக்கு நீங்கள் சொல்லியுள்ள அனைத்தும் உள்ளன. 7ல் கேது 8ல் செவ்வாய். லக்னத்திலேயே ராகு. சந்திரன் 12ல் மறைவு. குரு 6ல் தன் வீட்டிலேயே மறைவு.பார்த்த சோதிடர்கள் அனைவரும் 30 வயதுகடந்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என்றனர். அவளுக்குப் பின்னர் இரண்டு பெண்கள். அவர்களுடைய திருமணமும் தள்ளிப் போகும் நிலை. எனவே துணிந்து ஜாதகத்தை எடுத்து தோஷ சாம்யம் உள்ள ஜாதகத்தை சேர்த்தோம். லக்ன ராகுவும், 5ல் சூரியனும் குழந்தை பாக்கியத்தைத் தரவில்லை இதுவரை. 15 வருடங்களாக தாம்பத்ய வாழ்க்கை ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.
    அப்போது செவ்வாய் எட்டில் இருக்கும் நிலையைப் பற்றி கேட்டபோது சோதிடம் நன்கு அறிந்த ஒரு பெரியவர், 'செவ்வாய் தசா சிறு வயதிலேயே முடிந்துவிட்டதால் 8ல் செவ்வாயைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்' என்று கூறினார்.அது சரிதான் என்று தோன்றுகிறது.
    பதிவுக்கு நன்றி ஐயா!/////

    30 வயதிற்குப் பிறகு எல்லா தோஷமும் காலாவதியாகிவிடும் / கேன்சலாகி விடும். அதுவும் பொதுப் பலனே!

    ReplyDelete
  26. /////Blogger Arul said...
    நல்ல பாடம் ஐயா...கிருக்ஷ்ணன் சாரின் கருத்துப்பதிவு பதிவிலே மற்றொரு பதிவு...இருவருக்கும் நன்றி.../////

    ஆமாம். அவரைப் போன்ற அனுபவமிக்கவர்கள், வயதில் மூத்தவர்கள் பலர் வருவதினால், பின்னூட்டமும் பல தகவல்களுடன் இருக்கும். சுவாரசியமாகவும் இருக்கும்!

    ReplyDelete
  27. /////Blogger yishun270 said...
    thank you for another iformation. If you can able to send me only the lessons on " பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் " which your going to post foe Seniors,it will be very useful we got only one daughter who is 25 years old not yet married. Your information will be useful for us.
    thank you/////

    இனிமேல்தான் எழுத உள்ளேன். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  28. ///Blogger Raj said...
    மதிப்பிற்குரிய அய்யா,
    கனமான சப்ஜெக்ட்.ஆனால் ஐந்தே வரிகளில் துல்லியமான,தெளிவான நடையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்.நன்றி அய்யா.
    சனி மற்றும் கேது ஏழில் இருந்து,குரு எட்டாம் இடமாகிய மாங்கல்ய ஸ்தானத்தை பார்த்தாலும் ஜாதகியை காப்பாற்றும் என்று எடுத்துக்கொள்ளலாமா?
    அன்புடன்
    s.k.Raj./////

    அதற்கு ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களும் துணை செய்ய வேண்டும்!

    ReplyDelete
  29. /////Blogger kmr.krishnan said...
    நன்றி அருள்.நான் என் பின்னூட்டங்களை மேல் அதிகத் தகவல்களாகவே அமைத்து வருகிறேன். பல சமயங்களில் அது உங்களைப் போன்றவர்களால் பாராட்டப்பட்டுள்ளது.மிகச் சில சமயங்களில் தவிர்த்து இருக்கக்கூடிய வாதப் பிரதிவாதத்தில் அறிந்தும் அறியாமலும் சிக்கிவிடுவேன். ஒரு போதும் என்னுடன் வாதம் செய்பவர்களை பகையாக நினைப்பதில்லை. ஆனால் அவர்களோ என்னுடன் நிரந்தரமாகப் பகைத்து விலகி விடுவார்கள்.சோதிடக் காரணம் மூன்றாம் இடத்தில் கேது. வாக்கில் சனீஸ்வரன்.////

    இரண்டில் சனி இருந்தால் ஆயுள் ஸ்தானம் அவனுடைய நேரடிப்பர்வையில் தீர்க்க ஆயுள். அது ஒரு நன்மைதானே? அதற்காகச் சந்தோஷப் படுங்கள் கிருஷ்ணரே!

    ReplyDelete
  30. /////Blogger ஜி ஆலாசியம் said...
    பாடத்திற்கு நன்றிகள் ஐயா!/////

    நல்லது. நன்றி ஆலாசியம்!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com