கவிதைச் சோலை: சோம்பேறியும் சொர்க்கமும்!
கவிதைச் சோலையும் பக்தி மலரும்!
--------------------------------------
1
பக்தி மலர்
முருகா நீ வரவேண்டும் - முருகா
நான் நினைத்தபோது நீ வரவேண்டும்
நினைத்தபோது நீ வரவேண்டும்
நீலஎழில் மயில் மேலமர் வேலா
(நினைத்தபோது)
உனையே நினைத்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே
(நினைத்தபோது)
கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கந்தா நீயே
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா என்றே
(நினைத்தபோது)
பாடலாக்கம்: கவிஞர். என்.எஸ்.சிதம்பரம்
பாடியவர்: டி.எம். செளந்தரராஜன்
------------------------------------------
2
துணிக!
நம்மால் முடியுமா என்றுநீ எண்ணினால்
நண்டுகூ டச்சி ரிக்கும்!
நாளை விடியுமா என்றுநீ வாடினால்
நாய கன்தான் சிரிப்பான்!
சும்மா இருப்பவன் சோம்பேறி அவனிடம்
சொர்க்கத்துக் கென்ன வேலை?
சுடுகின்ற கோடையில் வளைகின்ற ஏழையால்
அமைந்ததே இன்ப சோலை!
அம்மையும் அப்பனும் செய்ததோர் தவறினால்
அவனியில் வந்த மனமே!
அடியுலவ விடுபிறகு கடைவிரிய வருமுடிவு
ஆசிதரும் அந்தச் சிவமே!
- கவியரசர் கண்ணதாசன்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++=====
கவிதைச் சோலையும் பக்தி மலரும்!
--------------------------------------
1
பக்தி மலர்
முருகா நீ வரவேண்டும் - முருகா
நான் நினைத்தபோது நீ வரவேண்டும்
நினைத்தபோது நீ வரவேண்டும்
நீலஎழில் மயில் மேலமர் வேலா
(நினைத்தபோது)
உனையே நினைத்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே
(நினைத்தபோது)
கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கந்தா நீயே
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா என்றே
(நினைத்தபோது)
பாடலாக்கம்: கவிஞர். என்.எஸ்.சிதம்பரம்
பாடியவர்: டி.எம். செளந்தரராஜன்
------------------------------------------
2
துணிக!
நம்மால் முடியுமா என்றுநீ எண்ணினால்
நண்டுகூ டச்சி ரிக்கும்!
நாளை விடியுமா என்றுநீ வாடினால்
நாய கன்தான் சிரிப்பான்!
சும்மா இருப்பவன் சோம்பேறி அவனிடம்
சொர்க்கத்துக் கென்ன வேலை?
சுடுகின்ற கோடையில் வளைகின்ற ஏழையால்
அமைந்ததே இன்ப சோலை!
அம்மையும் அப்பனும் செய்ததோர் தவறினால்
அவனியில் வந்த மனமே!
அடியுலவ விடுபிறகு கடைவிரிய வருமுடிவு
ஆசிதரும் அந்தச் சிவமே!
- கவியரசர் கண்ணதாசன்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++=====
நினைத்த போது நீ வரவேண்டும் என்ற கவிஞர், நான் எப்போதும் உன்னையே நினைப்பேன் என்று சொல்லாமல் சொல்கிறார். 'தைல தாரை' போல (பிசிறு இல்லாமல், இடைவெளியில்லாமல் விழும் எண்ணையை போல)இறைச் சிந்தனை உள்ளவர்களுக்கே இறைவனின் காட்சி நிச்சயம்.இது டி எம் எஸ் பாடிய பக்திப் பாடல்களில் முக்கியமானது. மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteஇதுபோல ஆசிரிய விருத்தங்களை கவியரசர் நிறையப் பாடியுள்ளார் என்று தெரிய வருகிறது.நன்கு எளிமைப்படுத்தி, இலக்கண மரபையும் விடாமல்
பாடிய பாடல் அருமை. சோம்பலை 'மடி எனும் ஒரு பாவி'என்று சாடுவார் தெய்வப் புலவர்.கண்ணதாசன் சோம்பலை எதிர்த்து சிவனாரை துணைக்கு அழைத்தது அருமை.
'தாய் தந்தை செய்த தவறால் பிறந்த மனம்' என்பது, பெரும்பாலும் இக்கவிதை யேசுகாவியம் எழுதிய பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.
நம் நாட்டு சிந்தனை என்பது ஒவ்வொரு குழந்தையும் தெய்வாம்சத்துடனேயே பிறக்கிறது. அத் தெய்வத் தனமையை மறக்கச் செய்வதுதான் உலகப்பற்று.
அதில் தாய் தந்தையரின் வளர்ப்புக்குப் பங்கு உண்டு என்றாலும், தாமிரப் பாத்திரத்தில் சேர்ந்த களிம்பைப்போல, வேண்டாதவை விலக்க இங்கே வழியுண்டு.
''சும்மா இருப்பவன் சோம்பேறி அவனிடம்
ReplyDeleteசொர்க்கத்துக்கு என்ன வேலை''
வம்புக்கென்றே திரிபவன் படுபாவி அவனிடம்
பண்பைத் தேடுவது வீண்வேலை.
கம்பை ஊன்றி திரியும்காலை பக்தனிடம்
தெம்பைத்தருவது இறைவா நினதுலீலை.
அன்பைப்பெருக்கி அதிலுன் நினைவைஆழ அமுக்கி
நம்பியுனைத் தொழுவோம் நினதுதாளை
இன்னும் என்ன வேண்டிடுவாய் முருகா!
இன்னுயிரையே அளித்திடுவேன் இவ்வேளை...
கருணைக் கடலே முருகா!
எனைக்கரைச் சேர்ப்பாய் குமரா!
வினைகள் யாவும் விரைந்துபோக
உனையே நினைந்து போற்றும்
எனையே கரைச் சேர்ப்பாய்!!!
முருகா! முருகா!! முருகா!!!
கவியரசு கண்ணதாசனாரின் கவிதைகளின் வரிகளை முதலடியாக கொண்டு கவிகள் பல எழுத பரவசமாகிறேன் இக்காலை!
அருமையானப் பாடல்களைப் பகிர்ந்ததற்கு நன்றிகள் ஐயா!
அய்யா காலை வணக்கம் . எல்லாம் அந்த பழனியப்பன் அருள்
ReplyDeleteGuruvirkku vanakkam
ReplyDeletepresent
nandri
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteநினைத்த போது நீ வரவேண்டும் என்ற கவிஞர், நான் எப்போதும் உன்னையே நினைப்பேன் என்று சொல்லாமல் சொல்கிறார். 'தைல தாரை' போல (பிசிறு இல்லாமல், இடைவெளியில்லாமல் விழும் எண்ணையை போல)இறைச் சிந்தனை உள்ளவர்களுக்கே இறைவனின் காட்சி நிச்சயம்.இது டி எம் எஸ் பாடிய பக்திப் பாடல்களில் முக்கியமானது. மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி ஐயா.
இதுபோல ஆசிரிய விருத்தங்களை கவியரசர் நிறையப் பாடியுள்ளார் என்று தெரிய வருகிறது.நன்கு எளிமைப்படுத்தி, இலக்கண மரபையும் விடாமல் பாடிய பாடல் அருமை. சோம்பலை 'மடி எனும் ஒரு பாவி'என்று சாடுவார் தெய்வப் புலவர்.கண்ணதாசன் சோம்பலை எதிர்த்து சிவனாரை துணைக்கு அழைத்தது அருமை.
'தாய் தந்தை செய்த தவறால் பிறந்த மனம்' என்பது, பெரும்பாலும் இக்கவிதை யேசுகாவியம் எழுதிய பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.
நம் நாட்டு சிந்தனை என்பது ஒவ்வொரு குழந்தையும் தெய்வாம்சத்துடனேயே பிறக்கிறது. அத் தெய்வத் தனமையை மறக்கச் செய்வதுதான் உலகப்பற்று.
அதில் தாய் தந்தையரின் வளர்ப்புக்குப் பங்கு உண்டு என்றாலும், தாமிரப் பாத்திரத்தில் சேர்ந்த களிம்பைப்போல, வேண்டாதவை விலக்க இங்கே வழியுண்டு./////
இல்லை. இந்தப் பாடல்களை எல்லாம் அவர் முன்பே எழுதினார்! உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDelete''சும்மா இருப்பவன் சோம்பேறி அவனிடம்
சொர்க்கத்துக்கு என்ன வேலை''
வம்புக்கென்றே திரிபவன் படுபாவி அவனிடம்
பண்பைத் தேடுவது வீண்வேலை.
கம்பை ஊன்றி திரியும்காலை பக்தனிடம்
தெம்பைத்தருவது இறைவா நினதுலீலை.
அன்பைப்பெருக்கி அதிலுன் நினைவைஆழ அமுக்கி
நம்பியுனைத் தொழுவோம் நினதுதாளை
இன்னும் என்ன வேண்டிடுவாய் முருகா!
இன்னுயிரையே அளித்திடுவேன் இவ்வேளை...
கருணைக் கடலே முருகா!
எனைக்கரைச் சேர்ப்பாய் குமரா!
வினைகள் யாவும் விரைந்துபோக
உனையே நினைந்து போற்றும்
எனையே கரைச் சேர்ப்பாய்!!!
முருகா! முருகா!! முருகா!!!
கவியரசு கண்ணதாசனாரின் கவிதைகளின் வரிகளை முதலடியாக கொண்டு கவிகள் பல எழுத பரவசமாகிறேன் இக்காலை!
அருமையானப் பாடல்களைப் பகிர்ந்ததற்கு நன்றிகள் ஐயா!////
உங்களுடைய பாடல் வரிகளுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ஆலாசியம்!
/////Blogger Gnanam Sekar said...
ReplyDeleteஅய்யா காலை வணக்கம் . எல்லாம் அந்த பழனியப்பன் அருள்/////
ஆமாம்.
கந்தா போற்றி!
கடம்பா போற்றி!
கதிர்வேலா போற்றி!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteGuruvirkku vanakkam
present
nandri/////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி உதயகுமார்!
முருகன் கோவில் திருவிழாக்களின் போது ஒலிபெருக்கியில் கேட்டுக் கேட்டே மனப்பாடம் ஆன பாடல். ஒரு பக்தனின் உள்ளார்ந்த பக்தி உணர்வின் மிகத் தெளிவான வெளிப்பாடு. உண்மையான பக்தர் நினைத்த போது இறைவன் வருவது உறுதி.
ReplyDeleteகவியரசரின் கவிதையில்,
அடியுலவ விடுபிறகு கடைவிரிய வருமுடிவு
ஆசிதரும் அந்தச் சிவமே!
மிக ஆழமான பொருள். கவியரசரின் கவிதைகளின் உள்ளார்ந்த பொருட்சிறப்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
மிக அருமையான கவிதைகளை படிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி.
அம்மையும் அப்பனும் செய்ததோர் தவறினால்
ReplyDeleteஅவனியில் வந்த மனமே!
இந்த கவிச்சக்கரவர்த்தியின் வரிகள் நவில்தொரும் நூல் நயம் போல் அவரவர் நிலைக்கு தக்க பொருள் தரும் ஒர்
அற்புதமான வரிகலாகும். இளைஞன், முதியோர், நல்லவன், கெட்டவன், படித்தவன், படிக்காதவன் என எல்லோரும்
அனுபவிக்கத்தக்கவாறு எழுதியுள்ள இவ்வரிகளுக்கு எனக்கு பொருந்தியதை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் . சரியாகத் தோன்றினால் தங்கள் மாணவர்களுக்கும் அவரவர் நிலைக்கு தக்கவாறு இவ்வரிகள் என்ன பொருளைத்தருகிறது என தெறிவிக்கட்டுமே ?
படித்தது மற்றும் பட்டதாகிய என் அறிவுக்கு தோன்றியது
முதலில் எனக்குத் தோன்றியது குழப்பமே 1) அம்மையும் அப்பனும் என்ன தவறு செய்தனர் 2) ஏன் அத்தவறைச் செய்தனர்
3) அவனியில் மனிதன் தானே பிறப்பான் இந்தக் குழப்பம் வேதாந்தத்தின் விளைவு . இது முடிந்த முடிவு அல்ல .
அம்மையையும் அப்பனையும் இறைவன் என பொருள் கொண்டாலும் இறைவன் எப்படித்தவறு செய்வான். அவன் அவள் அது என மூன்றால் ஆகிய இந்த பிரபஞ்சத்தை ஆள்பவன் ஐந்து தொழில்களையும் செய்விக்கிறான். அதில் ஒன்று மறைத்தல்
இதன் காரணமாகவே அம்மையும் அப்பனும் அவன் திருவிளையாடலுக்காக மனம் படைத்த மனிதனை பிறப்பித்து வேதாந்தத்தின் முடிந்த முடிவு என ஆசிதரும் சிவமே என உணர்த்துகிறார். கவிச்சக்கரவர்த்தி மற்றும் வாத்தியார் அவர்களுக்கும் என் நன்றி
'கே என் சிவமயம்' வலைப்பூ உயர்திரு நடராஜன் ஐயாவை மீண்டும் இங்கே நீண்ட வாரங்கள் சென்று காண்பதில் மகிழ்ச்சி.பழைய வகுப்பறை நண்பர்கள் பலரும் பின்னூட்டம் இடாவிட்டாலும் அமைதியாகப் பின்னூட்டம் உட்பட அனைத்தையும் வாசிக்கிறார்கள் என்பது இதனால் தெரிய வந்தது.
ReplyDeleteநடராஜன் ஐயா கூறியுள்ள கருத்து சிந்திக்கத் தூண்டுகிறது.இதையே இன்னும் சிறிது விரித்துரைக்க வேண்டுகிறேன். இங்கே இல்லாவிடினும் அவருடைய
'கே என் சிவமயம்' வலைப்பூவில் எழுதலாம்.
////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteமுருகன் கோவில் திருவிழாக்களின் போது ஒலிபெருக்கியில் கேட்டுக் கேட்டே மனப்பாடம் ஆன பாடல். ஒரு பக்தனின் உள்ளார்ந்த பக்தி உணர்வின் மிகத் தெளிவான வெளிப்பாடு. உண்மையான பக்தர் நினைத்த போது இறைவன் வருவது உறுதி.
கவியரசரின் கவிதையில்,
அடியுலவ விடுபிறகு கடைவிரிய வருமுடிவு
ஆசிதரும் அந்தச் சிவமே!
மிக ஆழமான பொருள். கவியரசரின் கவிதைகளின் உள்ளார்ந்த பொருட்சிறப்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
மிக அருமையான கவிதைகளை படிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி.////
பாராட்டுக்கள் கவியரசரையே சாரும்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
Blogger நடராஜன் said...
ReplyDeleteஅம்மையும் அப்பனும் செய்ததோர் தவறினால்
அவனியில் வந்த மனமே!
இந்த கவிச்சக்கரவர்த்தியின் வரிகள் நவில்தொரும் நூல் நயம் போல் அவரவர் நிலைக்கு தக்க பொருள் தரும் ஒர்
அற்புதமான வரிகளாகும். இளைஞன், முதியோர், நல்லவன், கெட்டவன், படித்தவன், படிக்காதவன் என எல்லோரும்
அனுபவிக்கத்தக்கவாறு எழுதியுள்ள இவ்வரிகளுக்கு எனக்கு பொருந்தியதை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் . சரியாகத் தோன்றினால் தங்கள் மாணவர்களுக்கும் அவரவர் நிலைக்கு தக்கவாறு இவ்வரிகள் என்ன பொருளைத்தருகிறது என தெறிவிக்கட்டுமே ?
படித்தது மற்றும் பட்டதாகிய என் அறிவுக்கு தோன்றியது
முதலில் எனக்குத் தோன்றியது குழப்பமே 1) அம்மையும் அப்பனும் என்ன தவறு செய்தனர் 2) ஏன் அத்தவறைச் செய்தனர்
3) அவனியில் மனிதன் தானே பிறப்பான் இந்தக் குழப்பம் வேதாந்தத்தின் விளைவு . இது முடிந்த முடிவு அல்ல .
அம்மையையும் அப்பனையும் இறைவன் என பொருள் கொண்டாலும் இறைவன் எப்படித்தவறு செய்வான். அவன் அவள் அது என மூன்றால் ஆகிய இந்த பிரபஞ்சத்தை ஆள்பவன் ஐந்து தொழில்களையும் செய்விக்கிறான். அதில் ஒன்று மறைத்தல்
இதன் காரணமாகவே அம்மையும் அப்பனும் அவன் திருவிளையாடலுக்காக மனம் படைத்த மனிதனை பிறப்பித்து வேதாந்தத்தின் முடிந்த முடிவு என ஆசிதரும் சிவமே என உணர்த்துகிறார். கவிச்சக்கரவர்த்தி மற்றும் வாத்தியார் அவர்களுக்கும் என் நன்றி////
இததனை ஆழமாகச் சிந்திப்பவர்கள் குறைவு. உங்களின் பின்னூட்டத்திற்கும் கருத்துப் பகிவிற்கும் நன்றி நண்பரே!
Blogger kmr.krishnan said...
ReplyDelete'கே என் சிவமயம்' வலைப்பூ உயர்திரு நடராஜன் ஐயாவை மீண்டும் இங்கே நீண்ட வாரங்கள் சென்று காண்பதில் மகிழ்ச்சி.பழைய வகுப்பறை நண்பர்கள் பலரும் பின்னூட்டம் இடாவிட்டாலும் அமைதியாகப் பின்னூட்டம் உட்பட அனைத்தையும் வாசிக்கிறார்கள் என்பது இதனால் தெரிய வந்தது.
நடராஜன் ஐயா கூறியுள்ள கருத்து சிந்திக்கத் தூண்டுகிறது.இதையே இன்னும் சிறிது விரித்துரைக்க வேண்டுகிறேன். இங்கே இல்லாவிடினும் அவருடைய
'கே என் சிவமயம்' வலைப்பூவில் எழுதலாம்.//////
ஆமாம். நடராஜன் அவர்களே! எழுதுங்கள். எழுதிய பிறகு எங்களுக்கு அறியத்தாருங்கள்!