Astrology - Popcorn Post வரும்... ஆனாலும் வரும்!
Popcorn Post No.24
பாப்கார்ன் பதிவுகள் - எண்.24
”செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள்”
என்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:
"கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ!"
என்னவொரு வர்ணனை பாருங்கள்.
அதே வர்ணனை ஜோதிடம் தெரிந்தவர்களுக்கும் பொருந்தும். நன்கு ஜோதிடம் தெரிந்தவர்களைப் பலரும் விரும்புவார்கள். ஜோதிடத்தின் கவர்ச்சி அது!
உங்களுக்கு ஜோதிடம் தெரியும் என்றால், நண்பர்களும், உறவினர்களும், மற்றவர்களும் உங்களை விடமாட்டார்கள். மொய்த்து விடுவார்கள். பிய்த்து விடுவார்கள்.
அந்தக் காலத்தில் ஜோதிடம் என்பது குடும்பத் தொழிலாக இருந்தது. இப்போது அப்படியில்லை. பழைய புராதண நூல்கள், ஏடுகள் எல்லாம் வடமொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பெற்று நூல்களாக வந்துவிட்டன. ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.
கற்றுக்கொள்வது முக்கியமில்லை. கற்றுக் கொண்டதை மனதில் தக்க வைப்பதுதான் முக்கியம். முயன்றால் அதுவும் சாத்தியமே! திரும்பத் திரும்பப் படித்தால் மனதில் தங்காதா என்ன?
தொழிலாகச் செய்யாவிட்டாலும், இன்று பலருக்கும் ஜோதிடம் தெரியும். பொழுதுபோக்காக அதைச் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சரி, ஜோதிடம் யாருக்கு சுலபமாக வரும்? அல்லது சுலபமாக மனதில் குடிகொள்ளும்? அதற்கான கிரக அமைப்பு என்ன?
அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------------------------------
1. குரு 5ஆம் வீடு அல்லது 9ஆம் வீட்டில் இருப்பதோடு, அவைகளில் ஒன்று அவருடைய சொந்த வீடாக இருக்கும் நிலைமை.
2. 5ஆம் வீட்டு அதிபதி அல்லது 9ஆம் வீட்டு அதிபதி என்னும் நிலையில், குரு பகவான் லக்கினத்தில் அமர்ந்திருக்கும் நிலைமை.
3. 5ஆம் வீடு அதன் அதிபதியின் பார்வையில் இருக்கும் நிலைமை.
4. 5ஆம் வீடு குருவின் நேர் பார்வையில் இருக்கும் நிலைமை.
5. 5ஆம் வீடு ஒரு உச்ச கிரகத்தின் பார்வையில் இருக்கும் நிலைமை.
6. 5ஆம் வீட்டிலிருந்து, அதன் பன்னிரெண்டாம் வீட்டில் சனி இருக்கும் நிலைமை.
7. ராகு அல்லது கேது கோணங்களில் அமர்ந்திருப்பதோடு, குருவின் பார்வையைப் பெற்றிருக்கும் நிலைமை
இந்த அமைப்புக்களில் ஒன்று இருப்பவர்களுக்கு ஜோதிடம் கைகொடுக்கும்.
குரு நுண்ணறிவிற்கு (keen intelligence) அதிபதி. 5ஆம் வீடு நுண்ணறிவிற்கான வீடு. அதை மனதில் வையுங்கள்!
அதே போல புத்திநாதன் புதனுக்கும் ஜோதிடத்தில் முக்கிய பங்கு உண்டு. அதை இன்னொரு நாளில் பார்ப்போம்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

நீங்கள் கூறியுள்ள 5ம் இடம், குரு விஷயம் எதுவும் எனக்கு இல்லை. ஆனாலும் சோதிடம் கூறுமளவு துணிச்சல் எப்படி என்று பார்த்தால் புத பகவாந்தான் காரணம் என்று தோன்றுகிறது.தெளிவான் எளிமையான நடையில் சுருக்கமான பாடங்கள் நன்றாக அமைந்து வருகின்றன. நன்றி ஐயா!
ReplyDeleteதாங்கள் கூறிய விதிகளில் இரண்டு பொருந்தி வருகிறது. ஆனாலும் கற்றுக் கொள்வது (என் வரையில்) சுலபமாக இல்லை. மிகுந்த பிரயாசைகளுக்குப்பிறகு, தங்கள் ஆசியுடன் கற்றுக் கொண்டு வருகிறேன். நல்ல பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஐயன்மீர், காலை வணக்கம்.
ReplyDeleteஒன்றும் ஒத்து வரவில்லை எனக்கு.
திருவிளையாடல் படத்தில் பாணபத்திரரின் சீடர் என சொல்லிக்கொண்டு வரும் சிவன் மேகநாத பாகவதரிடம் சொல்லுவது போல "சீ, போடா ஞானசூன்யம், உனக்கு ஜோதிடமே வரல்ல" என்று ஐயா விரட்டாமல் இருந்தால் சரி :-)))))
ஒரு ஐயம்: நுண்ணறிவுக்கான இடம் ஐந்தாக இருக்கலாம். ஆனால் நுண்ணறிவுக்கான கிரகம் வியாழர். அதே சமயம் விதிகளை ஞாபகம் வைத்துக்கொள்வதற்கான சக்தியை புதன் கொடுக்கணுமே. அதே போல, ஐந்து கெட்டுப்போய் இருந்தாலும் குரு "நல்ல" நிலைமையில் இருந்தால். கூட யாரும் ஒத்துழைக்காவிட்டாலும் சச்சின் இந்தியாவை மீட்பது போல சரிக்கட்டி விடுவாரோ?
சோளப்பொறி பதிவு என சொல்லி தப்பிக்க பார்க்கிறீர்! நாங்கள் அதிலும் கொசுறு கேட்போம்! (எப்புடி???)
+++++
இங்ஙனம்
பெற்றோர் சொன்னால் பெட்ரோலையும் குடிக்கும் சங்க தலைவர்
அய்யா காலைவணக்கம் ,
ReplyDeleteஎனக்கு குரு 5 ம் வீட்டில் ,கன்னி லக்கனம்
ஜோதிடம் கற்றுக் கொள்வதற்கு House of occult studies எனப்படும் 8ம் வீடு, அதன் அதிபதி இவர்களும் முக்கியம். பாப்கார்ன் பதிவு என்பதால் வாத்தியார் எல்லா விதிமுறைகளையும் வெளியிடவில்லை.
ReplyDeleteநெருங்கிய உறவினர் தவிர வேறு யாருக்கும் எனக்கு ஜோதிட அறிவு உண்டு என்பது தெரியாது. யாருக்கும் தெரியப் படுத்த விரும்பவில்லை.
உங்களின் ஒரு பழைய பாடத்தில் புதன் லக்னத்தில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும், லக்னம் குருவின் பார்வை பெற்று இருந்து இரண்டில் புதன் இருந்தாலும்,பத்தாம் அதிபதி லக்னத்தில் இருந்து குரு பார்வை பெற்றாலும் ஜாதகம் கற்பது எளிது.அதுமட்டுமில்லாமல் மேற்கண்ட அமைப்பில் சுக்கிரன் இரண்டில் கெடாமல் இருந்தால் தெய்வ அருளுடன் வாக்கு பலிதமும் உண்டு என்றும் படித்ததாகவும் ஞாபகம். இது சரியா? நான் நான்கு வருடம் உங்கள் வகுப்பறையில் பெஞ்ச் தேய்க்க வில்லை என நம்புகிறேன்...
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteRule No. 3, 4 and 7 applies to me sir.
But, it is due to your concerted efforts, blessings and immense help in teaching astrology to others, I have been learning Astrology Sir. The way you make people understand Astrology in a simple and easy way is astonishing.
Thanks for everything sir.
arumayana paadam ayya
ReplyDelete////Blogger kmr.krishnan said...
ReplyDeleteநீங்கள் கூறியுள்ள 5ம் இடம், குரு விஷயம் எதுவும் எனக்கு இல்லை. ஆனாலும் சோதிடம் கூறுமளவு துணிச்சல் எப்படி என்று பார்த்தால் புத பகவான்தான் காரணம் என்று தோன்றுகிறது.தெளிவான் எளிமையான நடையில் சுருக்கமான பாடங்கள் நன்றாக அமைந்து வருகின்றன. நன்றி ஐயா!/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
///Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteதாங்கள் கூறிய விதிகளில் இரண்டு பொருந்தி வருகிறது. ஆனாலும் கற்றுக் கொள்வது (என் வரையில்) சுலபமாக இல்லை. மிகுந்த பிரயாசைகளுக்குப்பிறகு, தங்கள் ஆசியுடன் கற்றுக் கொண்டு வருகிறேன். நல்ல பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி./////
பிரயாசை இருக்கிறதல்லவா? அதுபோதும்!
//////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஐயன்மீர், காலை வணக்கம்.
ஒன்றும் ஒத்து வரவில்லை எனக்கு.
திருவிளையாடல் படத்தில் பாணபத்திரரின் சீடர் என சொல்லிக்கொண்டு வரும் சிவன் மேகநாத பாகவதரிடம் சொல்லுவது போல "சீ, போடா ஞானசூன்யம், உனக்கு ஜோதிடமே வரல்ல" என்று ஐயா விரட்டாமல் இருந்தால் சரி :-)))))
ஒரு ஐயம்: நுண்ணறிவுக்கான இடம் ஐந்தாக இருக்கலாம். ஆனால் நுண்ணறிவுக்கான கிரகம் வியாழர். அதே சமயம் விதிகளை ஞாபகம் வைத்துக்கொள்வதற்கான சக்தியை புதன் கொடுக்கணுமே. அதே போல, ஐந்து கெட்டுப்போய் இருந்தாலும் குரு "நல்ல" நிலைமையில் இருந்தால். கூட யாரும் ஒத்துழைக்காவிட்டாலும் சச்சின் இந்தியாவை மீட்பது போல சரிக்கட்டி விடுவாரோ?
சோளப்பொறி பதிவு என சொல்லி தப்பிக்க பார்க்கிறீர்! நாங்கள் அதிலும் கொசுறு கேட்போம்! (எப்புடி???)
+++++
இங்ஙனம்
பெற்றோர் சொன்னால் பெட்ரோலையும் குடிக்கும் சங்க தலைவர்/////
மனைவி ஸ்தானத்தில் ஒரு மங்கை நல்லாள் வரட்டும். அதற்குப் பிறகு பார்ப்போம். இந்தச் சங்கம், பதவி எல்லாம் நீடிக்கிறதா (இருக்கிறதா) என்று!!:-)))
////Blogger Gnanam Sekar said...
ReplyDeleteஅய்யா காலைவணக்கம் ,
எனக்கு குரு 5 ம் வீட்டில் ,கன்னி லக்கனம்////
நல்லது. தொடருங்கள் நண்பரே!
/////Blogger ananth said...
ReplyDeleteஜோதிடம் கற்றுக் கொள்வதற்கு House of occult studies எனப்படும் 8ம் வீடு, அதன் அதிபதி இவர்களும் முக்கியம். பாப்கார்ன் பதிவு என்பதால் வாத்தியார் எல்லா விதிமுறைகளையும் வெளியிடவில்லை.
நெருங்கிய உறவினர் தவிர வேறு யாருக்கும் எனக்கு ஜோதிட அறிவு உண்டு என்பது தெரியாது. யாருக்கும் தெரியப் படுத்த விரும்பவில்லை./////
இரண்டு பேருக்குத் தெரிந்தால் போதாதா? இரண்டு நான்காகி, நான்கு பதினாறாக எத்தனை நேரம் ஆகப் போகிறது! அப்படித்தான் (முன்பு) எனக்கு சிக்கல் ஏற்பட்டது. இப்போது இல்லை. யாராக இருந்தாலும் No personal consultation என்று சொல்லி விடுவேன்!
/////Blogger Arul said...
ReplyDeleteஉங்களின் ஒரு பழைய பாடத்தில் புதன் லக்னத்தில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும், லக்னம் குருவின் பார்வை பெற்று இருந்து இரண்டில் புதன் இருந்தாலும்,பத்தாம் அதிபதி லக்னத்தில் இருந்து குரு பார்வை பெற்றாலும் ஜாதகம் கற்பது எளிது.அதுமட்டுமில்லாமல் மேற்கண்ட அமைப்பில் சுக்கிரன் இரண்டில் கெடாமல் இருந்தால் தெய்வ அருளுடன் வாக்கு பலிதமும் உண்டு என்றும் படித்ததாகவும் ஞாபகம். இது சரியா? நான் நான்கு வருடம் உங்கள் வகுப்பறையில் பெஞ்ச் தேய்க்க வில்லை என நம்புகிறேன்.../////
இல்லை என்று யார் சொன்னது? புதனைப் பற்றி பின்னால் எழுதுவதாக இந்தப் பதிவில் சொல்லியுள்ளேனே நண்பரே!
////Blogger Mahesh said...
ReplyDeleteRespected Sir,
Rule No. 3, 4 and 7 applies to me sir.
But, it is due to your concerted efforts, blessings and immense help in teaching astrology to others, I have been learning Astrology Sir. The way you make people understand Astrology in a simple and easy way is astonishing.
Thanks for everything sir./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger arul said...
ReplyDeletearumayana paadam ayya////
நல்லது. நன்றி நண்பரே!
//சோளப்பொறி பதிவு என சொல்லி தப்பிக்க பார்க்கிறீர்! நாங்கள் அதிலும் கொசுறு கேட்போம்! (எப்புடி???)
ReplyDelete+++++
இங்ஙனம்
பெற்றோர் சொன்னால் பெட்ரோலையும் குடிக்கும் சங்க தலைவர்//
சங்கத்தின் பொது குழுவை கூட்டி கொசுறு(ம்) வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை வாத்தியாருக்கு அனுப்பி வையுங்கள். ஒரு வேளை அதை அவர் பரிசீலிக்கக் கூடும்.
இது என்ன கைப்புள்ளயின் வருத்தப் படாத வாலிபர் சங்கத்துக்கு கிளைச் சங்கம் போன்று இருக்கிறது. (சும்மா கலாய்த்தல். நண்பர் உஷ்ணமாகி விடப் போகிறார்)
//மனைவி ஸ்தானத்தில் ஒரு மங்கை நல்லாள் வரட்டும். அதற்குப் பிறகு பார்ப்போம். இந்தச் சங்கம், பதவி எல்லாம் நீடிக்கிறதா (இருக்கிறதா) என்று!!:-)))//
ReplyDeleteயோசிக்க வைக்கறாரே ஐயா..... வண்டு முருகன் ஸ்டைல்ல கட்சி மாறி கூட்டத கலைச்சு "மனைவி சொன்னால் மண்ணையும் திங்கும் சங்கம்" நு மாற வேண்டி வருமோ?
....
இல்ல இல்ல.... புலி போல் ஊக்கம் உடைய எங்கள் போன்ற நவீன காளைகளுக்கு அதெல்லாம் நேராது (நம்பிக்கை).......
he he!
Dear Sir!
ReplyDeleteToday Lession Very Nice Sir! once more time thanks.
popcorn post is good. but people will forget easily since it is one word Q & A.
ReplyDeleteபுதன் சூரிய சம்பந்தம் பற்றி சொல்லலாமோ..?
ReplyDeleteஅடுத்த பாப்கார்ன் பொரியட்டும்..
காத்திருக்கின்றோம்
ஒரு சின்ன திருத்தம்
தோழர் புவனேஷ் குறிப்பிட்டவர்
மேகநாத பாகவதர் அல்ல
ஹேமநாத பாகவதர்..
மாற்றுக் கருத்து உள்ளவர் தோழமை கொண்டு விளக்கலாம்..
திருமலை சென்று வந்த
ReplyDeleteகண்ணனின் வருகை மகிழ்ச்சி தருகிறது
தோழர் கண்ணன் குறிப்பிட்ட படி அவர் குருநாதர் திரு திருமலை அவர்களுடன்
தொடர்பு கொண்டு சிறு தொகை தந்து மகிழ்ந்தோம்.. தற்போது அவர்
ரிஷிகேஷ் பத்ரி யாத்திரை சென்றுள்ளார் அடுத்த மாதம் வருவதாக சொன்னார்
அவர்களும் வகுப்பறைக்கு வந்து தோழர்களுக்கு நல்லாசி வழங்கவேண்டும்.. கண்ணன் முயற்சிப்பார் என நம்புகிறோம்..
தொடரட்டும். தொடருகிறோம்..
/////Blogger ananth said...
ReplyDelete//சோளப்பொறி பதிவு என சொல்லி தப்பிக்க பார்க்கிறீர்! நாங்கள் அதிலும் கொசுறு கேட்போம்! (எப்புடி???)
+++++
இங்ஙனம்
பெற்றோர் சொன்னால் பெட்ரோலையும் குடிக்கும் சங்க தலைவர்//
சங்கத்தின் பொது குழுவை கூட்டி கொசுறு(ம்) வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை வாத்தியாருக்கு அனுப்பி வையுங்கள். ஒரு வேளை அதை அவர் பரிசீலிக்கக் கூடும்.
இது என்ன கைப்புள்ளயின் வருத்தப் படாத வாலிபர் சங்கத்துக்கு கிளைச் சங்கம் போன்று இருக்கிறது. (சும்மா கலாய்த்தல். நண்பர் உஷ்ணமாகி விடப் போகிறார்)//////
உஷ்ணத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லலாம்!:-)))
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDelete//மனைவி ஸ்தானத்தில் ஒரு மங்கை நல்லாள் வரட்டும். அதற்குப் பிறகு பார்ப்போம். இந்தச் சங்கம், பதவி எல்லாம் நீடிக்கிறதா (இருக்கிறதா) என்று!!:-)))//
யோசிக்க வைக்கறாரே ஐயா..... வண்டு முருகன் ஸ்டைல்ல கட்சி மாறி கூட்டத கலைச்சு "மனைவி சொன்னால் மண்ணையும் திங்கும் சங்கம்" நு மாற வேண்டி வருமோ?
....
இல்ல இல்ல.... புலி போல் ஊக்கம் உடைய எங்கள் போன்ற நவீன காளைகளுக்கு அதெல்லாம் நேராது (நம்பிக்கை).......
he he!/////
நம்பிக்கை வாழ்க!
நாளும் அது வளர்க!
//////Blogger Maaya kanna said...
ReplyDeleteDear Sir!
Today Lession Very Nice Sir! once more time thanks./////
நல்லது. நன்றி!
//////Blogger kannan said...
ReplyDeletepopcorn post is good. but people will forget easily since it is one word Q & A./////
பிரயாசையுடன் படிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மறக்கமாட்டார்கள்!
Blogger அய்யர் said...
ReplyDeleteபுதன் சூரிய சம்பந்தம் பற்றி சொல்லலாமோ..?
அடுத்த பாப்கார்ன் பொரியட்டும்..
காத்திருக்கின்றோம்
ஒரு சின்ன திருத்தம்
தோழர் புவனேஷ் குறிப்பிட்டவர்
மேகநாத பாகவதர் அல்ல
ஹேமநாத பாகவதர்..
மாற்றுக் கருத்து உள்ளவர் தோழமை கொண்டு விளக்கலாம்..//////
திருத்தம் சரிதான். நல்லது. நன்றி!
/////Blogger அய்யர் said...
ReplyDeleteதிருமலை சென்று வந்த
கண்ணனின் வருகை மகிழ்ச்சி தருகிறது
தோழர் கண்ணன் குறிப்பிட்ட படி அவர் குருநாதர் திரு திருமலை அவர்களுடன்
தொடர்பு கொண்டு சிறு தொகை தந்து மகிழ்ந்தோம்.. தற்போது அவர்
ரிஷிகேஷ் பத்ரி யாத்திரை சென்றுள்ளார் அடுத்த மாதம் வருவதாக சொன்னார்
அவர்களும் வகுப்பறைக்கு வந்து தோழர்களுக்கு நல்லாசி வழங்கவேண்டும்.. கண்ணன் முயற்சிப்பார் என நம்புகிறோம்..
தொடரட்டும். தொடருகிறோம்..//////
வரட்டும்.தரட்டும்.காத்திருக்கிறோம்!
//மேகநாத பாகவதர் அல்ல
ReplyDeleteஹேமநாத பாகவதர்..
மாற்றுக் கருத்து உள்ளவர் தோழமை கொண்டு விளக்கலாம்..//
Ya ya... true... Sorry for the mistake..... No issues..... Thanks for the correction, Ayyar.
எனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் இருந்தாலும் புதன் (9க்கு உடையவன்) 8ல் மற்றும் குரு (6க்கு உடையவன்) 12ல் இருப்பதால் எனக்கு ஜோதிடம் வராது என்று இது நாள் வரை நினத்திருந்தேன். ஆனால் தங்களீன் இன்றைய பதிவு மூலம் ராகுவும் கேதுவும் கோணங்களீல் அமர்ந்திருந்து (Diagonally opposite) குரு பார்வை பெற்றிருந்தால் ஜோதிடம் வரும் என்று தெரிந்து கொண்டேன். எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது. ஒரு சந்தேகம். ராகுவும் கேதுவும் கோணங்களீல் அமர்ந்திருந்து குரு மறைவு இடத்தில் அமர்ந்து பார்த்தாலும் ஜோதிடம் வருமா?
ReplyDelete