Astrology முதன்மை விதிகளும், உபவிதிகளும்!
Key Points - Part one
(Advanced Lessons)
எல்லா செயல்களுக்குமே சில அடிப்படை விதிகள் உண்டு.
நான்கு பேர்களுக்கு சமையல் செய்து பறிமாறுவதற்கு சில அடிப்படை விதிகள் உண்டு. முதலில் சமையல் செய்பவர் அதில் ஒரு முறையான அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். சமையல் செய்வதற்கு உரிய அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்கள், காய்கறிகள், முக்கியமாக அடுப்பு, எரிபொருள் போன்ற சாமான்கள் மற்றும் தேவையான உபகரணங்கள், சாதனங்கள் வேண்டும்.
ஒரு ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்வதற்கும் சில அடிப்படைவிதிகள் மற்றும் அடிப்படைத் தகுதிகள் உள்ளன!
ஒவ்வொரு ஜாதகமும், 12 ராசிகள், 12 வீடுகள், ஒன்பது கிரகங்கள், 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும் அவைகள் எண்ணற்றை ஜாதகங்களை உருவாக்கிக் கொடுப்பவை. பிறந்த இடம், பிறந்த நேரம் ஆகியவற்றை வைத்து அவைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. மாறுபட்ட அம்சங்களைக் கொண்டவை. மாறுபட்ட பலன்களைக் கொடுக்கக் கூடியவை.
ஒரு ஜாதகத்தில் உள்ள மேன்மைகளையும், சிக்கல்களையும் அறிந்து சொல்வதற்கு ஜோதிட அறிவும், பல ஜாதகங்களைப் பார்த்துப் பலன்சொல்லிய அனுபவமும் முக்கியமானதாகும். அது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ அல்லது ஒரு ஆண்டிலோ கிடைத்துவிடாது. பொறுமையாகத் தொடர்ந்து கற்றுக்கொள்வதன் மூலமே அது வசப்படும்.
எந்த ஒரு கலைக்குமே அது பொருந்தும். அதாவது அந்தத் தொடர் முயற்சியும், கற்றுத் தேரும் தன்மையும் அவசியமாகும்.
அந்த அடிப்படை விதிகளை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.
முதன்மை விதிகள். உபவிதிகள் என்று அவற்றைப் பிரித்துப் பார்க்க வேண்டும்.
ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி, காரகன் குரு ஆகிய மூவரும் கெட்டிருந்தால், ஜாதகனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது அடிப்படை விதி.
அதே நேரத்தில் ஐந்தாம் வீட்டில் சுபகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை, அத்துடன் ஐந்தாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட அஷ்டகவர்க்கப்பரல்கள் இருந்தால் ஜாதகனுக்குக் குழந்தை உண்டு, ஆகவே உப விதிகளையும் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும். ஜாதகம் பார்த்துப் பலன் சொல்வதில் உள்ள சிக்கல் அதுதான்.
உப விதிகளும் கை கொடுக்க வில்லை என்றால் மட்டுமே ஜாதகனுக்குக் குழந்தை இருக்காது.
வயிற்றில் வலி இருந்தால் அதை அப்பென்டிக்ஸ் என்று எப்படி நினைக்க முடியும்? அது சாதாரண வயிற்று உபாதையாகக்கூட இருக்கலாம். ஒரு ஸ்பூன் சீரகம் சாப்பிட்டால், நீங்கிவிடக்கூடிய சாதாரண gas trouble வலியாகக்கூட இருக்கலாம். ஒரு இடத்தில் ராகு இருப்பதை வைத்து மட்டும் எந்தவொரு முடிவிறகும் வரக்கூடாது. மற்ற கிரகங்களையும் அலச வேண்டும். அவற்றிற்கு ராகுவுடன் உள்ள தொடர்பையும் வைத்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இரண்டாம் வீட்டில் சனி இருந்தால், கையில் காசு தங்காது என்று எப்படிச் சொல்ல முடியும். சனி அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபதி நவாம்சத்தில் உச்சம் பெற்றிருந்தால் ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். உதாரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் ஜாதகம்.
ஆகவே முதன்மை விதிகளை வைத்து மட்டும் முடிவிற்கு வராதீர்கள். உப விதிகளையும் பாருங்கள். பிறகு பலன்களைப் பற்றி யோசியுங்கள்.
முதன்மை விதிகளையும், உபவிதிகளையும் பற்றித் தொடர்ந்து பார்ப்போம். பொறுத்திருந்து படியுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சில ஆண்டுகளுக்கு நாணயம் இதழில் ஒரு தொடர் கட்டுரையில் பத்தாயிரம் மணி நேரம் என்ற கணக்கு பற்றி படித்தேன். அதாவது ஒருவர் ஒரு துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்றால் முழு ஈடுபாட்டுடன் 10ஆயிரம் மணி நேரம் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்று.
ReplyDelete10ஆயிரம் மணி நேரம் பயிற்சி எடுத்தால் எல்லாம் தெரிந்துவிடும் என்று சொல்லவில்லை. கற்பதற்கு எத்தனை கோடி ஜென்மம் எடுத்தாலும் போதவே போதாது. ஆனால் குறைந்தது ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று வைத்துக்கொண்டால் ஆண்டுக்கு தோராயமாக 1100 மணி நேரம் என்ற கணக்கில் உத்தேசமாக 9 முதல் பத்து ஆண்டுகள் முழு ஈடுபாட்டுடன் ஒரு வேலையை செய்தால் அதில் உள்ள நெளிவு, சுளிவு, வரும் இடையூறுகள், எப்படி செய்தால் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும் என்ற நீக்கு போக்கு பிடிபட்டுவிடும்.
இதற்கு உதாரணமாக சிறு வயது முதலே ஒரு நாளைக்கு 15 மணி நேரம் கூட கீபோர்டு வாசிக்கும் சூழ் நிலையில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்களின் வாழ்க்கையை உதாரணத்தோடு விளக்கியிருந்தார்கள்.
Thanks for sharing.
Deleteகுளிர்ந்த காலை பொழுதில் நல்ல மற்றும் முக்கியமான பாடம், நன்றி
ReplyDeleteayya,
ReplyDeletepanivana vanakkangal. melum pala vidhi mumuraigalai karka aavalaha ullen. nanri.
thangal manavan,
renga
vannakam sir padam arumai.thanks
ReplyDeleteஅய்யா காலை வணக்கம் . இன்றைய பாடம் அருமை
ReplyDeleteIts very useful sir...Thanks...
ReplyDeleteஐயாவிற்கு வணக்கம்! தாங்கள் குறிப்பிட்டுள்ள படியே,விதிகளை படித்துத் தேர்ந்தால் மட்டும் போதாது..பொருத்திப் பார்க்கத் தெரிய வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை!
ReplyDeleteஅதனால் நெருங்கியவர்கள் அனைவரிடத்தும் குறிப்பு வாங்கி பார்த்து வருகிறேன். அவர்களைப் பற்றி ஓரளவு தெரியும் என்பதால்..விதிகளைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக உள்ளது! நல்ல பயிற்சியாக உள்ளது!
excellent tips
ReplyDeleteவணக்கம் ஐயா;
ReplyDeleteபாடம் நன்று;
அதே சமயம் ஒரு தாழ்மையான விண்ணப்பம்:
இப்போதெல்லாம் ரொம்ப சுருக்கமாக தான் எழுதுகிறீர்கள்.
ஒன்று பாப்கார்ன் பதிவாக உள்ளது. அல்லது சமாசாரம் கொஞ்சமாக உள்ள பதிவாகவே உள்ளது.
முன்பு போல விரிவானப்பாடங்களை நீங்கள் மீண்டும் தர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நன்றி,
புவனேஷ்
/////Blogger சரண் said...
ReplyDeleteசில ஆண்டுகளுக்கு நாணயம் இதழில் ஒரு தொடர் கட்டுரையில் பத்தாயிரம் மணி நேரம் என்ற கணக்கு பற்றி படித்தேன். அதாவது ஒருவர் ஒரு துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்றால் முழு ஈடுபாட்டுடன் 10ஆயிரம் மணி நேரம் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்று.
10ஆயிரம் மணி நேரம் பயிற்சி எடுத்தால் எல்லாம் தெரிந்துவிடும் என்று சொல்லவில்லை. கற்பதற்கு எத்தனை கோடி ஜென்மம் எடுத்தாலும் போதவே போதாது. ஆனால் குறைந்தது ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று வைத்துக்கொண்டால் ஆண்டுக்கு தோராயமாக 1100 மணி நேரம் என்ற கணக்கில் உத்தேசமாக 9 முதல் பத்து ஆண்டுகள் முழு ஈடுபாட்டுடன் ஒரு வேலையை செய்தால் அதில் உள்ள நெளிவு, சுளிவு, வரும் இடையூறுகள், எப்படி செய்தால் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும் என்ற நீக்கு போக்கு பிடிபட்டுவிடும்.
இதற்கு உதாரணமாக சிறு வயது முதலே ஒரு நாளைக்கு 15 மணி நேரம் கூட கீபோர்டு வாசிக்கும் சூழ் நிலையில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்களின் வாழ்க்கையை உதாரணத்தோடு விளக்கியிருந்தார்கள்./////
கணினியும், ஜோதிடமும், வாசிப்பும், எழுத்தாற்றலும் எனக்கு அதுபோன்ற கடுமையான பயிற்சியால்தான், நேரம்,காலம் பார்க்காத பயிற்சியால்தான், சற்று வசப்பட்டது. நன்றி!
///Blogger Sanjai said...
ReplyDeleteகுளிர்ந்த காலை பொழுதில் நல்ல மற்றும் முக்கியமான பாடம், நன்றி////
எந்த தேசத்தில் தற்போது இருக்கிறீர்கள் சஞ்சை?
/////Blogger renga said...
ReplyDeleteayya,
panivana vanakkangal. melum pala vidhi mumuraigalai karka aavalaha ullen. nanri.
thangal manavan,
renga/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger eswari sekar said...
ReplyDeletevannakam sir padam arumai.thanks////
உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!
/////Blogger Gnanam Sekar said...
ReplyDeleteஅய்யா காலை வணக்கம் . இன்றைய பாடம் அருமை////
உங்களின் வணக்கத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி சகோதரி!!
////Blogger ravichandran said...
ReplyDeleteIts very useful sir...Thanks...////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஐயாவிற்கு வணக்கம்! தாங்கள் குறிப்பிட்டுள்ள படியே,விதிகளை படித்துத் தேர்ந்தால் மட்டும் போதாது..பொருத்திப் பார்க்கத் தெரிய வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை!
அதனால் நெருங்கியவர்கள் அனைவரிடத்தும் குறிப்பு வாங்கி பார்த்து வருகிறேன். அவர்களைப் பற்றி ஓரளவு தெரியும் என்பதால்..விதிகளைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக உள்ளது! நல்ல பயிற்சியாக உள்ளது!////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
////Blogger arul said...
ReplyDeleteexcellent tips/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteவணக்கம் ஐயா;
பாடம் நன்று;
அதே சமயம் ஒரு தாழ்மையான விண்ணப்பம்:
இப்போதெல்லாம் ரொம்ப சுருக்கமாக தான் எழுதுகிறீர்கள்.
ஒன்று பாப்கார்ன் பதிவாக உள்ளது. அல்லது சமாசாரம் கொஞ்சமாக உள்ள பதிவாகவே உள்ளது.
முன்பு போல விரிவானப்பாடங்களை நீங்கள் மீண்டும் தர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நன்றி,
புவனேஷ்//////
பதிவில் உள்ள 570 பாடங்களில் 400ற்கும் மேற்பட்ட பாடங்கள் விரிவான பாடங்களே! அவற்றை எல்லாம் படித்தீர்களா?
வாரம் இரண்டு பாடங்களை விரிவான பாடங்களாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். மேல்நிலை வகுப்பில் அவைகள் வந்து கொண்டிருக்கின்றன. இங்கே எழுதினால் திருட்டுப் போகிறது. திருட்டைத் தவர்க்க ஏதாவது வழியுண்டா சொல்லுங்கள்!
மேல் நிலைப் பாடங்கள் எல்லாம் ஒவ்வொரு தொகுதியாக அடுத்த ஆண்டு புத்தகமாக வரும். அப்போது அனைவரும் படிக்கலாம்!
ஐயா வணக்கம்,
ReplyDeleteமூன்று வருடங்களுக்கு முன்பு PDF FILEஆக எனக்கு ஜாதக பாடத்தை நீங்கள் என் MAIL லுக்கு அனுப்பி வைத்துருந்தீர்கள் PDF, OR BOOK இருந்தால் UPDATE பண்ண வசதியாய் இருக்கும்
MURUGAN BSNL
ஐயா வணக்கம்,
ReplyDeleteமூன்று வருடங்களுக்கு முன்பு PDF FILEஆக எனக்கு ஜாதக பாடத்தை நீங்கள் என் MAIL லுக்கு அனுப்பி வைத்துருந்தீர்கள் PDF, OR BOOK இருந்தால் UPDATE பண்ண வசதியாய் இருக்கும்
MURUGAN BSNL
எத்தனையோ ஜாதகத்தை பார்த்து தங்கள் பிள்ளைகளை ஆசிரியர் ஆகவோ, பொரியாலாராகவோ, மருத்துவர் ஆகவோ படிக்க வையுங்கள் என்று கூறும் ஜோதிடர்.
ReplyDelete( முன்னர் நான் கூறிய ஜோதிடர் தனது " ஒரே ஒரு ஆண் மகனை BA ஜோதிடம் படிக்க
வைக்கின்றார் !", என்றால் அவருக்கு ஜோதிடத்தில் மேலே எந்த அளவிற்கு அவருக்கு மெயின் ஆக காதல் , மோகம், ஒரே ஒரு வாக்கில் கூறுவது என்றால் அந்த பையனின் ஜாதக அமைப்பு இருக்கும் நிலையை பார்த்து ஐயன் கூறியது ஆகும் .
", திரு வள்ளுவன் கூறியது போல தந்தை மகனுக்கு தரும் ஒரே ஒரு சொத்து என்ன வென்றால் அது
" கல்வி செல்வம் ",
ஆகும் இல்லையா ஐயா.
தற்பொழுது மகன் தான் தந்தையாரின் வாக்கை காப்பாற்ற வேண்டும் இல்லையா ?
வாத்தியார் மொழியில் கூறுவது என்றால் வாங்கி வந்த
வரத்தை இந்த சமுகத்தில் மகன் தான் நிருபித்து காண்பிக்க வேண்டும் இல்லையா ஐயா?
எல்லோருடைய ஜாதகத்தை பார்த்து வழி கூறும் நபர் தனது ஒரே ஒரு மகனின் எதிர் காலத்தை பார்க்காமலா கூறி இருப்பார் ஐயா ?
--
ஆமாம்.. ஆமாம்..
ReplyDeleteசரியே.. சரி..
/எந்த தேசத்தில் தற்போது இருக்கிறீர்கள் சஞ்சை?/
ReplyDeleteBangalore :)
Blogger murugan said...
ReplyDeleteஐயா வணக்கம்,
மூன்று வருடங்களுக்கு முன்பு PDF FILEஆக எனக்கு ஜாதக பாடத்தை நீங்கள் என் MAIL லுக்கு அனுப்பி வைத்துருந்தீர்கள் PDF, OR BOOK இருந்தால் UPDATE பண்ண வசதியாய் இருக்கும்
MURUGAN BSNL/////
இது கலியுகம். அத்துடன் கலியுகம் முற்றிக்கொண்டிருக்கிறது. மனிதர்களில் பாதி நல்லவர்கள். பாதிப்பேர்கள் தவறானவர்கள். கெட்டவர்கள். தீயவர்கள். உங்கள் மொழியில் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
அப்படி முன்பு PDF FILEஆக அனுப்பியதை ஒரு புண்ணிய ஆத்மா, கொண்டுபோய், பொது பங்கிடும் தளத்தில் வலை ஏற்றி சிரமத்தைக் கொடுத்துவிட்டது. என்ன சிரமம் என்கிறீர்களா? அதை எடுத்து தான் எழுதியதுபோல வேறு ஒரு அன்பர் தன் தளத்தில் வலை ஏற்றிவிட்டார். கேட்டால் பொதுப் பங்கீடு தளத்தில் இருந்து தான் எடுத்ததாகக் கூறுகிறார். இப்படி எல்லாம் பிரச்சினை வருகிறது. ஜோதிடம் எல்லோருக்கும் பொதுவானதுதான். பண்டைய நூல்களில் இருந்து தாங்கள் கற்றதை தங்கள் நடையில், மொழியில் எழுதி வெளியிடட்டும் - யார் வேண்டாமென்றது?
இதுபோன்ற காரணங்களுக்காக யாருக்கும் எதையும் அனுப்புவதில்லை. பொறுத்திருங்கள். எழுதியவை புத்தகமாக வரவுள்ளது. அப்போது உங்கள் நோக்கம் நிறைவேறும் முருகன்!
/////Blogger Maaya kanna said...
ReplyDeleteஎத்தனையோ ஜாதகத்தை பார்த்து தங்கள் பிள்ளைகளை ஆசிரியர் ஆகவோ, பொறியாளராகவோ, மருத்துவர் ஆகவோ படிக்க வையுங்கள் என்று கூறும் ஜோதிடர்.
( முன்னர் நான் கூறிய ஜோதிடர் தனது " ஒரே ஒரு ஆண் மகனை BA ஜோதிடம் படிக்க வைக்கின்றார் !", என்றால் அவருக்கு ஜோதிடத்தில் மேலே எந்த அளவிற்கு அவருக்கு மெயின் ஆக காதல் , மோகம், ஒரே ஒரு வாக்கில் கூறுவது என்றால் அந்த பையனின் ஜாதக அமைப்பு இருக்கும் நிலையை பார்த்து ஐயன் கூறியது ஆகும் .
", திரு வள்ளுவன் கூறியது போல தந்தை மகனுக்கு தரும் ஒரே ஒரு சொத்து என்ன வென்றால் அது
" கல்வி செல்வம் ",
ஆகும் இல்லையா ஐயா.
தற்பொழுது மகன் தான் தந்தையாரின் வாக்கை காப்பாற்ற வேண்டும் இல்லையா ?
வாத்தியார் மொழியில் கூறுவது என்றால் வாங்கி வந்த வரத்தை இந்த சமுகத்தில் மகன் தான் நிருபித்து காண்பிக்க வேண்டும் இல்லையா ஐயா?
எல்லோருடைய ஜாதகத்தை பார்த்து வழி கூறும் நபர் தனது ஒரே ஒரு மகனின் எதிர் காலத்தை பார்க்காமலா கூறி இருப்பார் ஐயா ?/////
சரி, நிருபித்துக் காட்டட்டும். நல்லது.உங்களின் பகிர்விற்கு நன்றி!
--
/////Blogger அய்யர் said...
ReplyDeleteஆமாம்.. ஆமாம்..
சரியே.. சரி../////
நல்லது. நல்லதே!
/////Blogger Sanjai said...
ReplyDelete/எந்த தேசத்தில் தற்போது இருக்கிறீர்கள் சஞ்சை?/
Bangalore :)/////
கடலை விட்டு எப்போது கரைக்கு வந்தீர்கள்?
//
ReplyDeleteகடலை விட்டு எப்போது கரைக்கு வந்தீர்கள்?//
கடலை விட்டு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது :)
Useful lesson today. Tq
ReplyDelete